-
Posts
15620 -
Joined
-
Last visited
-
Days Won
175
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by goshan_che
-
இது ஒரு முக்கியமான பொயிண்ட். ஒரு தவறு வெளிவரும் போது அது எப்படி கையாளப்படுகிறது அந்த சமூகத்தால், அதன் கட்டமைபுக்களால் என்பது முக்கியம். ஆங்கிலத்தில் impunity என்பார்கள். சில நாடுகளில் அரசியல்வாதி தவறு செய்தால் - so what ? அதுதான் அரசியல் என சமூகம் சகித்து கொள்ளும். அங்கே ஊழல் என்பது அரசியல் கலாச்சாரத்தின் அங்கமாகிவிட்டது. ஆனால் இது தனியே மேற்கு-கிழக்கு வேறுபாடு அல்ல. இந்த விடயத்தில் ஜேர்மனி-இத்தாலி க்கு இடையான வேறுபாட்டை நாம் எல்லோரும் அறிவோம்.
-
🤣. அட நீங்கள் லண்டன் வந்து தேம்ச எட்டி பார்த்த ஆள்தானே? எப்படி இருக்கும் கலர். கங்கை, காவிரி, மகாவலி இன்னும் நான் பார்த்த எல்லா ஆறும் இப்படித்தான் மண்நிறமாய் இருக்கும் (வைகையில் வெறும் மண் மட்டும்தான்🤣). விவரண படங்களில்தான் இப்படி பளிங்கு போல் ஓடும் ஆறுகளை இமாலய பகுதியில் இருப்பதாக பார்த்துள்ளேன். நேரில் பார்த்தது சுவிசில்தான். பார்த்து கொண்டே இருக்கலாம்.
-
இருக்கும். ஆனால் பெரும்பாலும் அந்த பேரம் பேசல்கள் நேரடியாக தனிப்பட்டு ஒருவருக்கு ஒரு நலன் என அமையாது. இப்போ மகார்த்தி இந்த 20 பேருக்கு சில விட்டுகொடுப்புகளை செய்தே அவர்கள் வாக்கை பெற்றுள்ளார். ஆனால் இவர்களை வண்டியில் ஏற்றி, வர்ஜினியாவில் ஒரு ஹொட்டலில் அடைத்து வைத்து, பெட்டிகளை பரிமாறவில்லை. பேரம் பேசலுக்கும், குதிரை பேரரத்துக்கும் வித்தியாசம் இருக்கு. ———— ஊழல், லஞ்சம் இல்லாத மனித சமூகம் இல்லை. பிரார்தனையை வைத்து விட்டு, மெழுகுதிரி கொளுத்துவதில், தேங்காய் உடைப்பதில் லஞ்சம் தொடங்குகிறது. ஆகவே நான் கைக்கொள்ளும் வியாக்கியானம் இது👇 ஒரு நாட்டில்/சமூகத்தில் 1. சட்டத்தை மீற லஞ்சம் கொடுக்கிறீர்களா (விதிக்கு புறம்பாக வீடு கட்ட அனுமதி) அல்லது 2.விதியை மீற லஞ்சம் கொடுப்பதோடு, விதிக்கு அமைய நடக்கவே லஞ்சம் கொடுக்க வேண்டுமா (பிறப்பு சான்றிதழ் பெறல்) பொதுவாக 1க்குள் வரும் நாடுகளை ஊழல் குறைந்த நாடுகள் எனவும் 2க்குள் வரும் நாடுகளை ஊழல் மிகுந்த நாடுகள் எனவும் கருதுவேன். இந்த நாடுகளின் அரசியல் உட்பட அத்தனை மட்டத்திலும் இது பிரதிபலிக்கும் ஊழல் இல்லாத நாடு என்று எங்கும், எதுவும் இல்லை.
-
எனது பார்வையில் இது ஒரு முதிர் ஜனநாயகமாக ஜேர்மனி இருக்கிறது என்பதையே காட்டி நிற்கிறது. பிரெக்சிற்றை தொடர்ந்து யூகே பாராளுமன்றில் நடந்தவையும் அப்படியே (செங்கோலை ஒரு எம்பி தூக்கிய நிகழ்வை தவிர). அதேபோல்தான் சொந்த கட்சியினர் 20 பேர் முரண்டுபிடித்ததால் (டிரம்ப் உட்பட்ட கட்சி தலைவர்கள் கேட்டும் இந்த 20 பேர் மசியவில்லை) மக்கார்த்தி சபாநாயகர் ஆவது தள்ளிப்போனதும். எது அவமானகரமானது? 1. ஜனவரி 6 இல் டிரம்ப்பால் நடத்தி வைக்க முயலபட்ட கலகம் 2. பிரெக்சிற் நேரம் பச்சை பொய்யை சொல்லி விட்டு - இப்போ அவை பொய் என்று தெரிந்த பின்னும், பொய்யர்கள் தொடர்ந்தும் பொது வாழ்வில் இருப்பது 3. ஷ்ரோடர் போன்றவர்கள் காசுக்காக, ஜேர்மனியின் பொருளாதாரத்தை ரஸ்ய எரிவாயு சப்ளையில் அடமானம் வைத்த போது, அதை மேக்கல் சரியே கையாளாமல் - ஜேர்மனியை கடும் நெருக்கடியில் தள்ளி இருக்க கூடிய ஆபத்தை ஏற்படுத்தியது. இது பற்றி ஷ்ரோடர், மேர்க்கல் போன்றோர் மீது ஒரு வெளிப்படையான விசாரணை நடக்காமல் இருப்பது.
-
இளவரசர் வில்லியம் என்னை உடல்ரீதியாக தாக்கினார்: இளவரசர் ஹரி தெரிவிப்பு
goshan_che replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
மரியாதை இருந்தது கிழவிக்கு மட்டும். சூழ இருந்த குடும்பம் அப்பவே “கண்டமனூர் ஜமீன் எதார்த்தமா கேட்டார், நானும் பதார்த்தமா கொடுத்திட்டேன்” ரகம்தான் 🤣. தாயை போல் இல்லாவிடிலும் ஓரளவு மான, ஈனம் உள்ளவர் என்றால், மகள், 3ம் மகன் அவர் மனைவியை சொல்லலாம். -
ரஸ்யாவில் என்றால் ஒருவர் யன்னலால் தவறி விழுந்திருப்பார் - உடனே சபாநாயகர் ஏகமனதாக தேர்வாகி இருப்பார். பிகு அமேரிக்காவை விடுங்கோ குப்பை நாடு. பூலோக சொர்க்கமாம் ஜேர்மனி (அப்படித்தானே?) யில் அண்மைய எலக்சனுக்கு பிறகு, சபாநாயகர் அல்ல - அரச்சாங்கம் அமைய எத்தனை மாதம் எடுத்தது? எனக்கு எழுதும் நேரம் மிச்சம்👍🏿
-
இளவரசர் வில்லியம் என்னை உடல்ரீதியாக தாக்கினார்: இளவரசர் ஹரி தெரிவிப்பு
goshan_che replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
இதென்ன புது கதையா கிடக்கு…..🤣 -
✅ ❌ இன்னும் பார்க்கவில்லை ✅ ரைன் நதியை பாசலில் பார்க்கவில்லை ஆனால் அல்ப்ஸ் அடிவாரத்திற்கு சற்று கீழே Chur நகருக்கு அருகில் பார்த்தேன். பளிங்கு போல் இருக்கும் நதி நீர். அவ்வளவு சுத்தம். ❌ ஆக்கத்துக்கு நன்றி. நான் பார்த்த இடங்கள். பார்க்க விரும்பும் இடங்கள் உங்கள் லிஸ்டில் வருகிறதா? வேறு இடங்கள் பற்றி அறிய ஆவலாய் உள்ளேன்.
-
இளவரசர் வில்லியம் என்னை உடல்ரீதியாக தாக்கினார்: இளவரசர் ஹரி தெரிவிப்பு
goshan_che replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
வட்டுக் கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவ கட்டெறும்பு மொய்ச்சுதுன்னு சொன்னாங்க உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி பச்ச மலப் பக்கத்துல மேயுதுன்னு சொன்னாங்க பொங்கலுக்குச் செங்கரும்பு பூவான பூங்கரும்பு சங்கரய்யா தின்னதுன்னு சொன்னாங்க -
இட்டறுதி - தனியே அந்திம காலம் மட்டும் இல்லை? எகா: இட்டறுதியா சொல்லுறன் இந்த சைக்கிளுக்கு 10000 ரூபாதான் விலை. கம்மாலை - இதுவும் கூட வடக்கிலும் புழக்கத்தில் உள்ளது. ஆனால் மட்டகளப்பில் இதை ஒரு ஆச்சரிய குறியீடாக பயன்படுத்துவார். இது “அம்மாளே” அல்லது இதை ஒத்த ஒரு தூசண வார்த்தையிம் திரிபாக இருக்குமோ?
-
நன்றி தனி. இந்த புத்தகம் சில வருடங்களுக்கு முன் ஒருவர் இந்த புத்தகத்தை எனக்கு பரிசளித்தார். இது பாலினம் மாறியோர் என்பதை விட - எதிர்பால் குணங்களை வெளிப்படுத்துவோர் என்பதே சரி? அடக்க ஒடுக்கமாக இல்லாமல் dominant ஆக இருக்கும் பெண் - ஆண்மாரி. இதுவும் வடக்கிலும் பாவனையில் உள்ள சொல்.
-
இதைதான் நானும் ஜஸ்டின் அண்ணாவும் சதிக்கோட்ட்பாட்டை கட்டி எழுப்புதல் என்கிறோம். புட்டின் “அமெரிக்கா ரஸ்யன் பெடரேசனை துண்டாட நினைக்கிறது என சொன்னதும்”, அதை மனதில் பதித்து கொண்டு நீங்கள், நீங்கள் ஏலவே எடுத்த இந்த முடிவுக்கு ஆதாரத்தை தேடுகிறீர்கள். ஆதாரங்கள் முடிவுகளுக்கு இட்டு செல்லவேண்டும். ஆனால் நீங்கள் முடிவை, ஏலவே முடிவு செய்து விட்டு - ஆதாரத்தை தேடும் போது, மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாக தெரிவது போல, லின்சே க்ரேம் ஏதோ அர்த்தத்தில் சொன்னதை, பிழையாக விளங்கி கொண்டு அது உங்கள் முடிவை நிறுவுவதாக நம்புகிறீர்கள். இதை நீங்கள் வேணும் என்று செய்வதாக இல்லாமல் இருக்ககூடும். பல சதி கோட்பாட்டாளர்கள் தாம் சதிகோட்பாட்டாளர் என்பதை உணருவதே இல்லை என்பது வழமைதான். ஆனால் சதிகோட்பாடுகள் உருவாகும் முறை இதுதான். அடுத்து, தரவுகளை விஞ்ஞான ரீதியாக ஆராய்வது, முடிவுக்கு வருவது என்பது எல்லா துறைகளிலும் ஒரேமாதிரியாக இருக்கும். இதில் உயிரியல் விஞ்ஞானம், சமூக விஞ்ஞானம், அரசியல் விஞ்ஞானம் என்ற வேறுபாடுகள் இல்லை.
-
1951 - கொழும்பில் நடந்த கொலை - பொன்னம்பலம் குலேந்திரன்
goshan_che replied to goshan_che's topic in கதை கதையாம்
ஓம்… கீழே பிறிதொரு திரியில் யாழ்கள உறவுகள் கோகிலாம்பாள் கணவர் கொலை வழக்கை அலசி ஆராய்ந்துள்ளனர். -
ஒரு நாட்டின் தலைநகரின் மேயர் வெளிநாட்டு தூதர்களுக்கு கொடுத்த விருந்து என பார்த்தால் இது கொஞ்சம் பவிசு குறைவாகவே இருக்கிறது. மெயின் மீல்ஸ் எதுவும் இல்லாமல். வெறும் finger food ஆக உள்ளது. டீ பார்ட்டியாக இருக்கும் போல. வழமையான தூதர்களுக்கான விருந்துகளுடன் ஒப்பிடும் போது இது பஞ்ச பார்ட்டியாகவே தெரிகிறது.
-
பராவாயில்லை அரசோடு இருக்கும் தமிழ் தலைவர்களில் முதன்மையானவராக தெரிபவரே 13 முழுமையாக அமல் படுத்த வேண்டும் என கேட்பது நல்ல விசயம்தான். ஆகவே தமிழரின் ஆக குறைந்த நிலை (lowest possible position) இது என எடுத்தால் - தமிழ் தேசிய கட்சிகளுடன் பேரம் படிய 13 க்கு மேல்தான் போக வேண்டும். இந்த விடயத்தில் டக்கா இது வரைக்க்கும் தன் வகிபாகத்தை ஓரளவு பாத்திரம் அறிந்து செய்கிறார். இதை ஒரு உந்து நிலையாக கொண்டு 13 க்கு மேல் வேண்டும் என தமிழ் தேசிய கட்சிகள் அழுத்த வேண்டும்.
-
கடந்த ஆண்டு மது விற்பனை 50 சதவீதம் குறைந்துள்ளது
goshan_che replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
கசிப்பு விற்பனை 50% ஆல் கூடியது ? -
Sad-guru உடான்ஸ்சாமியார் அருளுரை கள்ள சாமியாருக்கும், சாமியாருக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். மறைத்து வைத்த CCTV கமராவ கண்டுபிடிக்கத்தெரிந்தவன் சாமியார் கண்டுபிடிக்க தெரியாதவன் கள்ளச் சாமியார்.