Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. நீங்கள் முன்னர் சொன்னதை நான் சரியாக விளங்கவில்லை. நீங்கள் டிஸெம்பார்கேசன் கார்டை ஏலவே ஒன்லைனில் பதிந்து விட்டு போயுள்ளீர்கள். ஈழப்பிரியன் அண்ணை போல. அப்படியானோருக்கு பிரச்சனை இராது என நினைக்கிறேன். நான் இந்த கார்ட்டையே மறந்து போனேன். அங்கே போனதும் கார்ட்டை பார்த்ததும்தான் நினைவு வந்தது. பேனா - எப்போதும் பயணத்தில் பேனா எடுத்து செல்வது அவசியம். குறிப்பாக 3ம் உலக நாடுகளுக்கு போகும் போது.
  2. உங்களுக்கு, முன்னர் விமான நிலையத்துள் படையினர் சோதனைகளை மேற்கொள்ளும் சமயம் (சென்னை விமானத்தில், போர்ட்டிங் பாஸ் எடுத்த பின் பொதி, உடல் சோதனை செய்வார்கள்) மொழி தெரியாத தமிழர்கள் இதே சர்வதேச விமான நிலையத்தில் வைத்து எப்படி நடத்தப்பட்டார்கள் என்பது ஒன்றில் தெரியவில்லை அல்லது மறந்து விட்டீர்கள். அதேபோல் திரும்பி செல்லும் சமயம் அங்கே தமக்கு நிகழ்ந்த அலுப்புகள் பற்றியும் இங்கே பலர் எழுதியுள்ளனர். இராணுவத்தின் அளவை குறைக்க கேட்பதுதான் நாம் செய்ய வேண்டியது. மேலும் மேலும் இராணுவ மயப்படுத்துவதை அல்ல.
  3. ம்ம்ம்…ஏதோ நான் சொன்னது போலவே சிருஸ்டிக்க பார்கிறீர்கள். இலங்கை முதல் 5 சுற்றுலா நாடுகளில் உள்ளது என்பது ஒரு நம்பகமான இணையதளத்தின் செய்தி. அது மட்டும் அல்ல, இணையத்தில் trip advisor போன்ற இடங்களில் போய் வாசித்தாலும் - அதில் எழுதுபவர்கள் கூட seasoned travelers. இந்த அளவு இல்லாவிடிலும் நானும் கணிசமான அளவு பிரயாணித்துள்ளேன். இத்தனை பேரும் பொய் சொல்கிறார்கள் நீங்கள்தான் உண்மை சொல்கிறீர்கள். Numbers don’t lie. இலங்கைக்கு போகும் வெளிநாட்டவரின் அளவே போதும் உண்மை எது என விளங்க. இங்கே முதலிலேயே சொல்லி உள்ளேன். நான் இலங்கையில் நிலமை எதிர்பார்த்ததை போல மோசம் இல்லை. என்றே எழுதினேன். அதை இலங்கை சொர்கபுரி என நான் சொல்லியதாக பலர் தாமாகவே கற்பனை செய்து கொண்டனர். அதை போலவே நீங்களும் டுபாய், சிங்கப்பூர் போல் இலங்கை மாறிவிட்டது என நினைத்துப்போனால் உங்கள் தப்பான விளக்கத்துக்கு நான் பொறுப்பில்லை. இலங்கை ஒரு 3ம் உலக நாடு - அது சுவிஸ் ஆகி விட்டது என நான் எங்கும் எழுதவில்லை. அப்படி விளங்கி இருந்தால் அது வாசிப்பவரின் பிழை. பிகு. உண்மையில் இலங்கையில் உங்களுக்கு அதிர்ச்சி வைத்திய தந்தவை எவை - என்பது பற்றி போட்டோ ஆதாரத்தோடு நீங்கள் எழுத போவதை ஆவலாக எதிர்பார்த்திருக்கிறேன்.
  4. 🤣திரியினை அப்படி உயிர்பித்து…சந்தையில் அதை விற்கவா முடியும்🤣. நான் எனது திரியில் சிறிலங்கனில் பண வரத்து இல்லை என்பதால் - பராமரிப்பை சரிவர செய்வதில்லை எனவே அதில் போக வேண்டாம் என்றே எழுதினேன். இங்கே வியன்னாவில் மெடிக்கல் எமெர்ஜென்சியில் இறங்கிய விமானம், அதன் பின் தொழில்நுட்ப கோளாறுக்கு ஆளாகி, ஹீத்துரு மூடும் நேரத்தை தவற விட்டு, மறுநாள் வந்துள்ளது. இது எதை காட்டுகிறது? கொஞ்சம் விலகி போனாலே தாக்கு பிடிக்க முடியாதளவு “மட்டு மட்டாக” விமானத்தை ஒப்பேத்தி ஓட்டுகிறது சிறிலங்கன். இதைதான் என் கட்டுரை எச்சரித்தது. உங்கள் அதிர்சிக்கான காரணங்களை, நான் எழுதியது போல் படங்கள் சகிதம் ஒரு திரி திறந்து எழுதுங்கள் - ஆராய்வோம். பயப்படாதீர்கள், இன்னொருவரின் திரி நீள்கிறதே என நான் வயித்தில் குத்தி, கிணத்தில் விழ மாட்டேன்🤣. இங்கே பலரின் திரிகளை நீட்டுபவனே நான் தான்🤣.
  5. கவலை வேண்டாம் ப்ரோஸ். பக்க விழைவு அரிதானது. Rare. சில வேளை ஊசி போட்டிருக்காவிட்டால், இப்ப நாங்கள் எவராவது ஒருவரை நினைவு திரியில்…நல்லவர்…வல்லவர் என எழுதிகொண்டிருப்பம். அதிகம் நியூரொபின் எடுத்தாலும் பக்க விழைவு வரும். எல்லா மருந்து பக்கெட்டிலும் எழுதி இருக்கும். நாமிருக்கும் நாடுகளில்தான் எத்தனை இறப்புகள் - இருப்பினும் யாழ்களத்தில் அத்தனை உறவுகளும் பத்திரமாக கொவிட்டை தாண்டி வந்துள்ளோம் எண்டால் அதன் மிக பெரிய காரணி, தக்க பாதுகாப்பை எடுத்தது + ஊசி போட்டது. #Just chill
  6. இல்லை சார்….அங்கே இதே கொள்கையை முயற்சித்தும் முடியாமல் போய்விட்டது சார்….இப்போதைக்கு முயற்சிக்கும் வாய்ப்புகளும் இல்லை சார். ஆனால் தமிழ்நாட்டில் அப்படி இல்லையே சார்? முன்னர் இன்னொரு திரியில் எழுதி இருந்தேன் விபரமாக, வட கிழக்கு மாநிலங்கள் தவிர இந்தியாவில் வேறு எங்கும் யாரும் போய் வாழலாம். கிட்டதட்ட ஈயுவில் இருக்கும் freedom of movement போல், இந்தியாவில் மாநிலங்கள் இடையே உள்ளது. இந்த freedom of movement பெரும்பான்மை பிரித்தானியருக்கு (எனக்கல்ல) பிடிக்காத படியால் பிரிட்டன் பிரெக்சிற் கேட்டு வெளியே வந்தது. இப்போ இங்கே ஐரோப்பிய எழுந்த மானமாக வந்து குடியேற முடியாது. அதேபோல் இந்திய ஒன்றியத்தில் தமிழ் நாடு இருக்கும் வரை இதை தடுக்க முடியாது. ஆக, TN-exit தான் ஒரே வழி. எந்த தமிழ் நாட்டு அரசியல் கட்சி இதற்கு தயார்?
  7. மெய்தான்… விஜயகாந்த்துக்கு இந்த நாட்டை ஆளும் ஆசை வந்தது தமிழராகிய எமக்கு அவமானம் என்று மேடையில் தொண்டை புடைக்க பேசியவர் கூட….அவர் இறந்ததும் அப்படியே பிளேட்டை மாத்தி போட்டு, பாட்டெல்லாம் படிச்சு சீன் போட்டார் எண்டால் பாருங்கோவன்😎.
  8. 2009 க்கு பின், முன்னர் ஒரு காலம் இருந்தது - ஓமந்தைக்கு வடக்கே போக வெளிநாட்டுக்காரர் கொழும்பில் போய் ஆமி கிளியரன்ஸ் எடுக்க வேணும். பாவனையாளர் 100% புலம்பெயர் தமிழர்தான். அப்போ ஆங்கிலம்/ சிங்களம் தெரிந்தோருக்கும், தெரியாதோருக்கும் இடையில் கிடைத்த சேவை வேறுபாட்டுக்கும், இப்போதும் மொழி தெரியாதோர், மாபிள் பீச், புறாத்தீவு, காங்கேசந்துறை பீச் போனால் கிடைக்கும் அரச படையினரின் உபசரிப்பையும் மனதில் வைத்து சொல்கிறேன். வீசா டெஸ்கில் ஆமிக்காரனை இருத்தினால்….கோவிந்தா….கோவிந்தா தான். உண்மையில் விமான நிலைய பாதுகாப்பில் கூட விமானப்படையை நீக்கி விட்டு தனியார் துறையை ஈடுபடுத்த போவதாக அண்மையில் வாசித்தேன். யுத்தம் இல்லாத நாட்டில் இராணுவம் முகாமுக்குள் மட்டுமே இருக்க வேண்டும். இராணுவ பிரசன்னத்தை சிவில் வாழ்க்கையில் குறைக்க கோரும் நாமே - மேலும் இராணுவ பிரசன்னத்தை அதிகரித்து, அதை “வழமை” என ஆக்குவதை ஊக்குவிக்க கூடாது. காரணம் அட்டையை நிரப்பாமல் போய் வரிசையில் நிண்டால் - கவுண்டருக்கு போய் பாஸ்போர்ட்+ETA ஐ கட்டினால், அட்டை எங்கே என கேட்டு, மீள போய் நிரப்பி வாருங்கள் என கியூவில் பின்னுக்கு அனுப்புவார்கள். எனக்கு முன் நின்ற தம்பதிக்கு இந்த முறை இப்படி நடந்தது.
  9. ஓம். முன்னர் ஏனைய நாடுகளிலும் இருந்தது ஆனால் இப்போ வழக்கொழிந்து போய்விட்டது. கம்போடியாவில் 2017 இல் நிரப்பிய நியாபகம். அதுதான் ETA அப்ளிகேசனில் எல்லா தகவலும் கேட்கிறார்களே, மீண்டும் ஏன் இந்த கார்ட் என்பது தெரியவில்லை. Red tape தான். அதே போல் விமானம் இறங்க முன்னர் ஸ்பிரே அடிப்பதும் இலங்கையில் மட்டும்தான். ஏதோ ஒரு பழைய சட்டம் இதை கட்டாயம் ஆக்கியுள்ளதாம்.
  10. மிகச் சரியான கூற்று அண்ணை. இப்பவும் அவர்களில் பலர். இந்தியா=இந்து= தமிழ் என்றே பார்க்கிறார்கள். உண்மையில் இப்போதும் விசா கொடுப்பதா இல்லையா என்ற முடிவை எடுப்பது இலங்கை இமிகிரேசன் அதிகாரிகள்தான். கவுண்டரில் இருந்து தரும் விண்ணப்பத்தை வாங்கி processing செய்வது மட்டுமே VFS. ஆனால் இதற்கே இந்த குறி குதிக்கிறார்கள். எனது கட்டுரையில் இனவாதம் எப்படி உள்ளது என கேட்ட கேள்விக்கு, அப்படியே உள்ளது, கொஞ்சம் உறங்கு நிலையில் உள்ளது என பதில் எழுதினேன். அதற்கான சாட்சி இதுதான்.
  11. நானும் account creation page வரைக்கும் போய்விட்டு, விட்டு விட்டேன். விரைவில் ஒரு குடும்ப உறவு போவார். அப்போ சொல்கிறேன்.
  12. 🤣 இந்த குற்றம் மட்டும் அல்ல. இலங்கை தமிழர், யேசு, புத்தர் இம்மூவரும் எந்த குற்றமும் எப்போதும் செய்யாதவர்கள் என்பது பிரபஞ்ச உண்மை🤣
  13. ஒ…சரியான லுச்சா கூட்டம்🤣. போவோரில் பெரும்பாலானோர் ஒன்லனில் எடுத்து விட்டே போவார்கள். அவ்வளவு பேரையும் ஒன் அரைவல் எடுக்க வைத்தால் - அமளி வந்தே தீரும்🤦‍♂️. தகவலுக்கு நன்றி.
  14. கோசானின் பயண கட்டுரையில் தாமிரா சொன்ன அட்வைஸை கேட்டிருந்தால் இந்த அவலம் வந்திராது🤣.
  15. எப்போதும் பஞ்சி பிடிச்ச கூட்டம் சிலது ஒன்லைனில் எடுக்காமல், அதே விசாவை on arrival எடுக்கும். ETS ஒன்லைனில் எடுத்தோர் நேரே இமிகிரேசன் கவுண்டருக்கு போய், உங்கள் பாஸ்போர்ட், நிரப்பிய disembarkation card, ETS email ஐ காட்டினால் - பாஸ்போர்டில் ஸ்டாம் பண்ணி வெளியே விடுவார்கள். இதில் ஒன்லைனில் ETS எடுக்காமல் வருவோர் - இமிகிரேசன் கவுண்டர் போக முன், அதன் அருகில் இருக்கும் on arrival கவுண்டருக்கு போய் ETS ஐ எடுத்து கொண்டு பின் இமிகிரேசன் கவுண்டர் போக வேண்டும். இந்த on arrival counter இல் தான், VFS வந்த பின் தாமதம் ஏற்படுகிறது. நான் நினைக்கிறேன் முன்பு இந்த கவுண்டரில் இருப்பதும் இலங்கை இமிமிரேசன் அதிகாரிகள் என்பதால் அவர்கள் அந்த இடத்தில் வைத்தே ETS ஐ issue பண்ணினார்கள். இப்போ VFS பணியாளர் form ஐ எடுத்து போய் இலங்கை அதிகாரிகளிடம் கொடுத்து, அவர்கள் ETS ஐ issue பண்ணி, திரும்பி VFS இடம் கொடுத்து, அதை மீள பயணிகளிடம் கொடுக்க நேரம் எடுக்கிறது. ஒன்லைனில் எடுத்து போனால் இந்த கால தாமதத்தை தவிர்க்கலாம்.
  16. வள்ளலார் போற்றத்தக்கவர். போற்றப்பட வேண்டியவர். ஆனால் சர்வதேசமையத்தை அதே மாவட்டத்தில் வேறு இடத்தில் அரசு அமைக்கலாம். பிகு ஒரு காலத்தில் யாழ்பாணத்தில் ஆறுமுக நாவலர் vs வள்ளலார் பாரிய தத்துவார்த்த மோதலாக அமைந்துள்ளது. முற்போக்குவாதிகள் வள்ளலார் வழியிலும், பிற்போக்குவாதிகள் நாவலர் வழியிலும் நின்றுள்ளனர். ஆர்வம் இருப்போர் தேடிப்படிக்கவும்.
  17. இதற்கு ஒரே பரிகாரம் - இந்திய ஒன்றியத்தில் இருந்து தமிழ் நாட்டை பிரித்து தனித்தமிழ் நாடு ஆக்குவதே… ப் பூ ஹா…ஹா.ஹா…🤣
  18. செத்தும் கொடுக்கும் சீதக்காதி கேப்டன் விஜயக்காந்த்❤️. #தெலுங்கண்டா என யார் கூறினாலும் #தமிழண்டா ❤️ என செயலால் நிருபிக்கிறார். இறந்த பின்பும்.
  19. என்னப்பா இது…திரிக்கையே படுத்து கிடக்கிற “சோஷலிஸ்ட்” - என்னை போய் திரியை வாசிக்க சொல்லிறியள்🤣. புதிய VFS நடைமுறைக்கு எந்த கருத்தாளராவது முட்டு கொடுத்த உதாராணத்தை போடுங்களேன்?
  20. ஆங்கிலம்/சிங்களம் தெரியாத புலம் பெயர் தமிழருக்கு ஏர் போர்ட்டில் இருக்கும் பிரச்சனைகளை இது பத்து மடங்கால் கூட்டும்.
  21. கங்கை காங்கேசந்துறை வந்தாலும், சிவகங்கை வாறது சந்தேகம்தான்🤣 உவயண்ட கப்பலில் போகவேணும் எண்டால் டயட்டில் இருக்க வேணும் போல கிடக்கு🤣
  22. பொதுவாக தரசான்றிதழ்களை அரச அமைப்பு, அல்லது தொழில்சார் கூட்டமைப்பு (industry body) வழங்குவதுதானே வழக்கம்? இவர்கள் தரத்தை உறுதி செய்ய இவர்களின் தராதரம் என்ன? பார்க்க ஒரு தனியார் கம்பெனி போல இருக்கிறது.
  23. எனக்கு ஒன்று விளங்கவில்லை. யாராவது தரவு பூர்வமாக தெரிந்தால் விளக்கவும். இலங்கையில் 16 வயது வரை கல்வி கட்டாயம். ஓ லெவல் வரை படித்து விட்டு ஏன் இவ்வளவு தொகையாக கொழுந்து பறிக்க போகிறார்கள்? கொழும்பு உட்பட நாட்டின் ஏனைய இடங்களில் உடல் உழைக்கும் வேலை செய்தாலே இதை விட அதிகம் சம்பாதிக்கலாம். தொழிலாளருக்கு கேள்வி இருந்தால் சம்பளம் தானாக கூடும். இவர்கள் வேறு துறைகள் (ஆடை தொழில்சாலை, உணவகங்கள், கட்டுமானம்) என நகரின் - கொழுந்து பறிக்க ஆள் இல்லாமல் போகும். உயிரே போனாலும் வடகிழக்கு தமிழர், சிங்களவர், சோனகர் கொழுந்து பறிக்க போவதில்லை. பிகு 1700 என்பது மிக சொற்பமான ஊதியம். இதையே போராடி பெறும் நிலையில் இந்த மக்கள். போராடியோருக்கு வாழ்த்து.
  24. உங்கள் பார்வையில் - மக்கள் என்ன செய்ய வேண்டும்? சிரிப்பு குறி கடைசி வசனத்துக்கு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.