Everything posted by goshan_che
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலைமை: இந்தியா வெளியிட்ட அவசர அறிக்கை
தகவலுக்கு நன்றி. இவர்களை பற்றி கொஞ்சம் ஆராய்ந்ததில் ஆரம்பத்தில் இதை இந்தியர் ஒருவர் தொடக்கி இருந்தாலும் 2021 அமெரிக்க கம்பெனியான Blackstone Inc இதன் 75% பங்குகளை சுமார் 1.1 பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளது. Kuoni எனும் லக்சறி சுற்றுலா முகவர்களை பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள். அதில் சீஈஓ சாக இருந்த இந்தியர் ஒரு side project ஆக ஆரம்பித்த விடயம், இன்று சுமார் 2 பில்லியன் டாலர் நிறுவனம். https://en.m.wikipedia.org/wiki/VFS_Global#:~:text=In October 2021%2C Blackstone acquired a majority stake in VFS Global.
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலைமை: இந்தியா வெளியிட்ட அவசர அறிக்கை
யாழில் இதை எதிர்க்க யாழ் என்ன இலங்கை பாராளுமன்றமா🤣. ஏன் இந்தியன், யூகே உதாரணம் கொடுக்கவில்லை? ஏன் என்றால் அப்போ இது ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை. இப்போ செய்தியாகியபடியால் விபரங்கள் அலசப்படுகிறது. மேலே திரியில் யாருமே சிறிலங்காவுக்குகோ, VFS ஐ உள்ளே கொண்டு வந்தமைக்கோ முட்டு கொடுக்கவில்லை. மாறாக எல்லாருமே முன்னர் இருந்த முறை சீராகவே இயங்கியது, அரசியல்வாதிகள் கொமிசனுக்காக VFS ஐ கொண்டு வந்து கொள்ளை அடிக்கிறார்கள் என்றே எழுதியுள்ளார்கள். நீங்களா முட்டு கொடுப்பதாக கற்பனை செய்து காற்றில் கம்பு சுத்துகிறீர்கள் சகோ. இன்னும் இந்த கேள்விக்கு பதில் வரவில்லை @MEERA
-
மக்கள் தீர்ப்பை பெறுவதற்கு ஆவன செய்யவே பொதுவேட்பாளர் நிறுத்தப்படுகிறார்: சி.வி.விக்னேஸ்வரன்
அருமை ஐயா. தமிழ் நண்டு, தமிழ் நத்தை ஆகி விட்டது🤣
- கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலைமை: இந்தியா வெளியிட்ட அவசர அறிக்கை
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலைமை: இந்தியா வெளியிட்ட அவசர அறிக்கை
இப்போ சற்று முன், பழைய வீசா வழங்கும் IT சிஸ்டத்தை மேற்பார்வை செய்த ஒரு மேலதிகாரியிடம் பேசினேன். இது முழுக்க முழுக்க அரச பணத்தை கொள்ளை அடிக்கும் செயல் என்கிறார். தாம், இதுவரை எந்த பெரிய பிரச்சனையும் இல்லாமல் 1 டாலருக்கு வழங்கிய, தொடர்ந்தும் வழங்க முன் வந்த சேவையை, புதிய கம்பெனி 18 டாலருக்கு செய்கிறதாம். நிச்சயமாக இது கொள்ளைதான். இப்போ நான் போனபோது மொத்த வீசா செலவு ஐம்பது டாலர். இனிமேல் வீசா கட்டணம் 75 அத்துடன் மேலதிகமாக VFS க்கு 25. நாட்டிடம்/ பயணிகளிடம் கொள்ளை அடித்து - இந்திய தனியார் கம்பெனிக்கு கொடுக்கிறார்கள். சுளையாக கொமிசன் வரும். புலிகளை தோற்கடித்த பின், இலங்கையில் இந்தியா தனது வகிபாகத்தை இழந்து விட்டது. இலங்கையில் இந்தியா ஒரு செல்லாக்காசு. இப்படி எல்லாம் யாழில் எழுதியவர்கள் இந்தியாவை குறை மதிப்பீடு செய்துவிட்டார்கள் என்கிறீர்களா?
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
படங்கள் அருமை. சுண்டிகுளம் போனால் பல சைபீரியன் கொக்குகளும் நாரைகளும் நிக்குமே? படம் எடுக்கவில்லையா?
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலைமை: இந்தியா வெளியிட்ட அவசர அறிக்கை
$50 க்கு கொடுத்த வீசாவை, இப்ப $75 மற்றும் $25 (கம்பனியின் அட்மின் பீஸ்) ஆக மாற்றியுள்ளனர். கொள்ளைதான் வேறு என்ன. இந்த VFS கம்பெனிதான் இலங்கையில் இருந்து யூகே விசா, யூகேயில் இருந்து இந்தியன் வீசா போன்ற பலதை கையாள்கிறது. ஆனால் இவர்கள் முடிவு எடுப்பதில்லை, அதை அந்த நாட்டு குடிவரவுத்துறையே மேற்கொள்ளும். தொடர்பான திரி
-
கனடாவில் வயதானோர்களை ஏமாற்றி பண மோசடி: இரு தமிழர்கள் கைது
தலைப்பில் இலங்கையர் என்பதற்கு பதிலாக தமிழர் என “தவறாக” எழுதிவிட்டார்கள்🤣
-
வாழ்நாளில் நீங்கள் பயணம் செய்ய விரும்பும் நாடு எது..? இலங்கைக்கு 5 ஆவது இடம்
முன்பும் எழுதி இருந்தேன் என நினைக்கிறேன். நிச்சயமாக என் பின் பதின்ம வயதுகளில், நான் இலங்கையில் இருக்கும் போதே, தனி நாடு கிடைக்கும் என நான் நம்பவில்லை. புலிகளை ஒரு போதும் சலித்ததில்லை. ஆனால் தலைவர் இருக்கும் போது இது முடிந்து விடவேண்டும் என அங்கலாய்தேன். அவர் இருக்கும் போது ஒரு பாதி தீர்வு கிடைத்து அதை அவர் 20 வருடம் அமல் படுத்துவது, அவர் இல்லாத போது தனி நாடே கிடைப்பதை விட மேலானது என நம்பினேன். எல்லோரை போலவும் தலைவரின் இயங்கு-காலமும் மட்டுப்பட்டது, இயற்கை இனவாதிகளுக்கு சார்பாக இருக்கிறது. அவர்களும் இதை உணர்ந்து playing for time. என்பதை உணர்ந்திருந்தேன். தனி நாடு கிடைத்திருந்தாலும் நான் 100% திரும்பி போய் இருக்க மாட்டன் என்றே நினைக்கிறேன். ஏனையோரை பற்றி தெரியவில்லை, என்னதான் வெளிநாடு என சொன்னாலும், எனக்கு இங்கேயும் வேர் கொஞ்சம் ஆழமாகவே ஓடி விட்டது. அடுத்தது சுதந்திரம் ஒரு பொல்லாத சாமன் - அதற்கு பழக்கப்பட்டு விட்டால் கஸ்டம். அதை இங்கே போல், கொழும்பிலோ அல்லது புலிகளின் ஆளுகையின் கீழோ என்னால் அனுபவித்திருக்க முடியும் என நான் நம்பவில்லை. குரு அள்ளி கொட்டுதாம்… கொட்டினதை அப்படியே சனி வழிச்சு எடுக்குதாம்… இதுதான் நம்ம லைப் ஸ்டோரி ஆச்சே🤣
-
வாழ்நாளில் நீங்கள் பயணம் செய்ய விரும்பும் நாடு எது..? இலங்கைக்கு 5 ஆவது இடம்
துருக்கியர் மட்டும் அல்ல, புலம்பெயர் இந்தியரும் இப்படித்தான். ஆனால் புலம்பெயர் பங்களாதேசிகள், சிங்களவர் பெரிதாக அப்படி இல்லை. அப்போ அப்படி நடந்திருந்தால் இனி எப்படி நடந்திருக்கும் என்பது கொஞ்சம் அல்ல ரொம்பவே மூக்கு சாத்திரம்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இங்கே நான் வேறு எதையும் பேச விரும்பவில்லை. ஒரு பொழுது போக்கு திரியில் ஒரு நடிகர் நல்லா வசனம் பேசிய காட்சி ஒன்று ஓடியது. அதே நடிகர் நிஜவாழ்வில் என்ன பேசினார் என்பதை இன்னொரு காணொளியில் இணைதேன். மற்றும் படி த.நா அரசியலில் எல்லாரும் சாதி அரசியல் செய்யும் அயோக்கியர்தான் என்பதே என் நிலைப்பாடும்.
-
வாழ்நாளில் நீங்கள் பயணம் செய்ய விரும்பும் நாடு எது..? இலங்கைக்கு 5 ஆவது இடம்
Man proposes, god disposes. நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும். ஒரு 25, 20 வருடம் முதல் இதே பிளானை என்னிடம் சொல்லிய ஆட்களில் எண்ணி இருவர் மட்டுமே நிஜமாகவே ஊரோடு போய் உள்ளார்கள். எதுவும் சொல்லிகொண்டு இல்லை. நடந்தால் சந்தோசம், இல்லை என்றாலும் no regrets.
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
ஓம்….. நான் சிறுவயதில் வாசித்ததில் என் மனதில் பதிந்தவற்றில் ஒன்று மஹாத்மா காந்தியின் மூத்த மகன் அவரை பற்றி கூறியது. காந்தி தென்னாபிரிகாவில் ஒரு ஆச்சிரமம் அமைத்து அதில் பண்ணை செய்து ஒரு வகையான அடிப்படை வாழ்வை தன் குடும்பம், சகாக்கள் சகிதம் மேற்கொண்டுள்ளார். இதை அவரின் மூத்த மகன் தன் மீது திணிக்கப்பட்ட வன்முறை. தன் வாழ்வின் சூறையாட்டம் என்கிறார். என்னை பொறுத்தவரை ஒரு 18 வயதுக்கு கீழானவரை, அவரின் பிறப்புரிமையுள்ள, வளர்ந்த நாட்டில் இருந்து - இன்னொரு வளரும் நாட்டுக்கு இட்டு போவதை - அடிப்படை மனித உரிமை மீறல் என்றே சொல்வேன். ஆகவே இதை ஒரு போதும் ஆதரிக்கபோவதில்லை.
-
லண்டனில் வாள்வெட்டு தாக்குதல் - ஐவர் காயம்
நீங்கள் மட்டும் இல்லை வாதவூரான், புலம்பெயர்ந்த ஆட்கள் எல்லாரும் இந்த விசயத்தில் உஷார்தான்🤣
-
வாழ்நாளில் நீங்கள் பயணம் செய்ய விரும்பும் நாடு எது..? இலங்கைக்கு 5 ஆவது இடம்
நோ…நோ பிக் ப்ரோ நீங்கள் என்னை தப்பாக புரிந்து கொண்டு விட்டீர்கள். இதுவரை எனது வாழ்க்கையை எடுத்தால் நான் அதில் அண்ணளவாக 59% ஐ யூகேயில் தான் கழித்துள்ளேன். 41%தான் இலங்கையில். ஆகவே நான் ஒரு பாதி இங்கிலீஸ்காரன்யா🤣. யாழ்கள வழக்கப்படி மரியாதையாக சொன்னால் மேற்கின் அடிமை. ஆகவே எனக்கு அதுவும் இதுவும் இரெண்டு கண்கள் போல. ஒன்றை விட்டு விட்டு இன்னொன்றோடு வாழவே முடியாது. எனக்கு இலண்டனில் இருந்து உதயன் வாசிக்கவும் பிடிக்கும், யாழ்பாணத்தில் இருந்து கார்டியன் வாசிக்கவும் வேண்டும். ஆறுமாதம் இங்கே நின்றால் நெய் பரோட்டா கேட்கும். ஆறு மாதம் அங்கே நின்றால் ஒரு ஷீஷ் கெபாப் விடாய்க்கும். ஆகவே அங்கே, இங்கே என வாழ்வதுதான் என் குறிக்கோள். ஆனால் - பெறக்கூடாது, பெற்றால் எம்மால் முடிந்தளவு வாய்ப்புக்களை கொடுக்க வேண்டும் என்பது என் நிலைப்பாடு. அந்த வாய்புக்கள் ஒரு 3ம் உலக நாட்டை விட, உலகின் 4/5 வது பெரிய பொருளாதாரத்தில் அதிகம் என நான் நம்புகிறேன். ஆகவே என் இன்பத்துக்காக இப்போதைக்கு அங்கே, இங்கே என போகப்போவதில்லை. தந்தை இல்லாத ஆண் பிள்ளைகளின் சீரழிவை நேரிலேயே கண்டுள்ளேன். ஆகவே அந்த புரொஜெக்ட் முடியும் மட்டும் அரக்க முடியாது. அடுத்தது - அங்கே, இங்கே வாழ்வது என்றால் - காசு வேணும். ஆகவே சில ஏற்பாடுகளை இப்பவே செய்ய தொடங்கினால் காலம் கனியும் போது செய்யலாம். கற்ற கல்வி கடைசி வடக்கும் சோறு போடுமாமே? முயற்சித்து பார்க்கலாம். ஆனால் நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைத்து இது நிறைவேறாமலே போகலாம். போகட்டுமே….போகும் போது நினைவுகள் மட்டுமே எஞ்சியிருக்கும். முடிந்தளவு அவற்றை இன்பமானதாக சேர்க்க முனைந்தோம் என்ற நிம்மதியில் கண் மூடலாம். #ஆண்டி ***யை தட்டினால் பறப்பது புழுதி🤣
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஈரோடு இடைத்தேர்தலில் தொகுதியில் பெரும்பான்மையான செங்குந்த முதலியார் வேட்பாளரை நிறுத்தி விட்டு, அவர்களின் சாதி உணர்வை தூண்ட, தொகுதியில் 6% இருக்கும் கழிவு தொழில் செய்யும் அருந்ததியினரை வந்தேறிகள் என பேசி, சாதிய வன் கொடுமைக்காக வழக்கை சந்தித்த பெருமகன். திரைப்படத்தில் மட்டும் மூச்சு விடாமல் சாதி ஒழிப்பு வசனம் பேசுவார். கருணாநிதி கூடத்தான் பராசக்தியில் ஊழலை எதிர்த்து பக்கா வசனம் எழுதி இருப்பார்🤣. # சின்ன கருணாநிதி
-
மக்கள் தீர்ப்பை பெறுவதற்கு ஆவன செய்யவே பொதுவேட்பாளர் நிறுத்தப்படுகிறார்: சி.வி.விக்னேஸ்வரன்
மும்மொழி வித்தகர் முதலமைச்சராக, எம்பி யாக இருந்து சொன்னதை கேட்காத உலகம் - வெறும் கட்டுக்காசை இழக்கபோகும் ஜனாதிபதி வேட்பளராக இருந்து சொன்னால் மட்டும் கேட்குமா? லாஜிக் இடிக்குதே?
-
வாழ்நாளில் நீங்கள் பயணம் செய்ய விரும்பும் நாடு எது..? இலங்கைக்கு 5 ஆவது இடம்
நீங்கள் சொன்னது மூன்று வகையில் சரி. 1. இலங்கையில் சிங்கள இனவாதம் தீராது. இது மிக சரி. அதே போல் 2. இனவாதம் தீரும் மட்டும் (அதாவது ஒரு போதும் இல்லை) எல்லாராலும் காத்திருக்க முடியாது. 3. அதே போல் மிக மோசமான இனவாதம், இன ஒதுக்கல் இருக்கிறது ஆனால்….. @பாலபத்ர ஓணாண்டி @சுவைப்பிரியன் போன்றோர் கூனி குறுகி அடிமை வாழ்வு வாழ்வதாக நான் நினைக்கவில்லை. அப்படி என்றால் அவர்கள் எப்போதோ டிக்கெட்டை எடுத்து சுவிஸ், யூகே திரும்பி இருப்பார்கள்.
-
வாழ்நாளில் நீங்கள் பயணம் செய்ய விரும்பும் நாடு எது..? இலங்கைக்கு 5 ஆவது இடம்
போறவை இப்ப ஒரு எட்டு போட்டு வாறது நல்லம். தேர்தலுக்கு பிறகு நிலைமை மோசமாகலாம்.
-
லண்டனில் வாள்வெட்டு தாக்குதல் - ஐவர் காயம்
@வாதவூரான் என்னை போட்டு தள்ளிய போது (முதலாவது வீடியோ)
-
வாழ்நாளில் நீங்கள் பயணம் செய்ய விரும்பும் நாடு எது..? இலங்கைக்கு 5 ஆவது இடம்
ஏனையோருக்கு எப்படியோ தெரியவில்லை ஆனால் - கொப்பேகடுவ சந்தி/மன்னம்பிட்டியை தாண்டும் போது என் பீலிங் “சின்ராசுவை இனி கையில் பிடிக்க முடியாது” என்பதே😎.
-
வாழ்நாளில் நீங்கள் பயணம் செய்ய விரும்பும் நாடு எது..? இலங்கைக்கு 5 ஆவது இடம்
நான் இன்னுமும் துனிசியா போகவில்லை. ஆனால் போய் வந்தோர் பலர் ஆகா..ஓகோ எண்டுதான் புகழ்கிறார்கள். உங்கள் படங்களை பார்க்க போகும் ஆசை வருகிறது. வடையை பற்றி கவலை வேண்டாம் அண்ணை, உங்கள் வீட்டில் இருந்து அருகில்தானே அம்மாச்சி - மலிவு என்றால் மலிவு, தரம் என்றால் தரம். அதையும் தாண்டி புனிதமானது. ——- எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே - அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே - அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே - இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்தருள் ஈந்ததும் இந்நாடே - எங்கள் அன்னையர் தோன்றி மழலைகள் கூறி அறிந்ததும் இந்நாடே - அவர் கன்னியராகி நிலவினிலாடிக் களித்ததும் இந்நாடே - தங்கள் பொன்னுடல் இன்புற நீர் விளையாடி இல் போந்ததும் இந்நாடே மங்கையராயவர் இல்லறம் நன்கு வளர்த்ததும் இந்நாடே - அவர் தங்க மதலைகள் ஈன்றமுதூட்டித் தழுவியதிந்நாடே - மக்கள் துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள் சூழ்ந்ததும் இந்நாடே - பின்னர் அங்கவர் மாய அவருடல் பூந்துகள் ஆர்ந்ததும் இந்நாடே -
-
இலங்கையில் ரணில் அரசியல் அதிசயத்தை நிகழ்த்தியுள்ளார் - எரிக்சொல்ஹெய்ம்
வரும் தேர்தலில் சொல்லுங்கோ என மக்களுக்கு இவர் சொல்கிறார். ————- சொல்கேயிம் உடன் யாராவது தமிழர் தரப்பு தொடர்பில் உள்ளதா? நல்லவர், கெட்டவர், நம்பமுடியாதவர், ஏஜெண்ட், சுயநலவாதி என்பவை சகலதுக்கும் அப்பால் - எமது கோரிக்கைகளின் நியாயம் இவருக்கு பாலா அண்ணையால் நன்கு உணர்த்தப்பட்டது என நினைக்கிறேன். இப்போ எமக்கு இவர் பரிந்துரைப்பது என்ன? யாருக்காவது தெரியுமா?
-
அவுஸ்திரேலியாவில் தொலைபேசி மூலம் பெண்களுடன் ஆபாச உரையாடல் - இரண்டு வருட சிறைத்தண்டனை
உண்மையான பெயர் அப்புஹாமிகே உடவளவே ஜெரால்ட் சிசில் வாமதேவ என்பதாம்🤣. செய்தியில் இவரை “இலங்கையர்” என எழுதிய போதே இவர் தமிழர் இல்லை என்பது தெரிந்திருக்க வேண்டும். தமிழர் என்றால், யாழ்பாணத்தில், சுன்னாம், சின்னதம்பி வீதியை பூர்வீகமாக கொண்ட எண்டு நீட்டி முழக்கி இருப்பம் எல்லோ🤣
-
ரஷ்யா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு இலவச விசா
பிகு ஒருத்தர் என் இக்னோர் லிஸ்டில் 3 வது நபராக சேர்ந்து விட் ரொம்பவே துடிக்கிறார்🤣.