Everything posted by goshan_che
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
100%👌
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
இது உங்களதும் உங்கள் தாத்தாவினதும் வழமையான பாணிதான். நான் சீமானை விமர்சித்தால் - ஏதோ நான் திமுகவை விமர்சிக்காதவன் போல உருட்டுவீர்கள். மகிந்தவை விமர்சித்தால் அப்போ நீ ரணில் ஆளா என கேட்பதை போன்ற திசை மாற்றும் உத்தி இது. திமுக, காங்கிரஸ், திருமா, அதிமுக அனைவரையும் நான் எவ்வளவு கடுமையாக யாழில் விம்ர்சித்துள்ளேன் என்பது அம்னீசியா இல்லாதோருக்கு தெரியும். பேராண்டி பாசத்தில் சீமானை ஆதரிக்கும் பெரியவர்களிடம் நடுநிலை பற்றி லெக்சர் கேட்க வேண்டிய நிலையில் நான் இல்லை என நம்புகிறேன்🤣.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
நான் சொன்ன தம்பி நீங்கள் அல்ல. உங்களிடம் இந்த கேள்வி கேட்ட அன்றே நீங்கள் இதே பதிலை சொல்லி விட்டீர்கள். நாதம் தான் பிஜேபி யை நேரடியாகவே ஆதரிக்கிறேன் என ஒத்து கொண்டார். கள்ள மெளனம் காப்பது வேறு ஒருவர். இந்த திரியிலும் எழுதுகிறார். ——————- 1. விஜை- மோடி உறவு பற்றி @ வாலி முன்னர் திண்ணையில் எழுதினார். அதே போல் @ரசோதரன் இதே திரியில் ஆனந்தின் பிஜேபி தொடர்பு பற்றி எழுதியுள்ளார். நிச்சயம் அவதானிக்க வேண்டிய விடயம். கூட்டணி வைக்க மாட்டார் என நினைக்கிறேன். 2. கூட்டணி வைத்தால் சீமானை எதிர்ப்பதை போலவே எதிர்ப்பேன் உங்கள் சிதறட்டும், சிறக்கட்டும் கோஷங்கள் கொஞ்சம் சிரிப்பை தருகிறது. 5 மொழி பேசும் நிலங்கள் இருந்த போது திராவிடமாக இருந்த கொள்கையின் தற்போதைய வடிவம்தாம் தமிழ் நாட்டின் தமிழ் தேசியம். காலத்துகேற்ப கூர்ப்படைந்த திராவிட கொள்கைதான் தமிழ் நாட்டின் தமிழ் தேசியம். ஒன்று வீழ்ந்து இன்னொன்று வாழும் என்பது மாயக்கணக்கு, செயற்கையான பிரிப்பு, false dichotomy.
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
சுமந்திரன், சிறிதரன்
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
தெளிவான குழப்பம்தான். என்பிபி க்கு போடும் தமிழர், மாகாணசபை இப்போ இருப்பதே போதும் அல்லது இதுவும் வேண்டாம், மேற்கு நாடுகள் போல் இனவாதம் குறைவான ஒரு ஒற்றையாட்சி இலங்கையே போதும் என நினைத்தே என்பிபி க்கு போடுகிறார்கள். அதாவது அடைய/கிடைக்க/தரமாட்டாத தீர்வை கேட்பதை விட, மும்மொழி கொள்கை செவ்வனே அமல்படும், இனவாதம் களையப்பட்ட, புதிய இலங்கையை நாமும் பங்காளிகாகி கட்டி எழும்புவோம் என்பதுதான் அவர்களின் நிலைப்பாடு. பட்டறிவு இது நடவாத காரியம் என எமக்கு உணர்தினாலும், அவர்கள் இதை முயற்சித்துத்தான் பார்ப்போமே என நினைக்கிறார்கள்.
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
நான் என்ன ரஜனிகாந்தா மகளுக்கு யாருக்கு வாக்கு போடுங்கள் என அட்வைஸ் பண்ண. நான் இப்போ ஒரு வாக்காளராக இருப்பின் டாக்டர் அர்ஜூனாவின் அணியில் பிரதான வாக்கை செலுத்தி, ஆனால் விருப்பு வாக்கை அர்ஜுனாவுக்கு போடாமல் விடுவேன். இதற்கு ஒரே காரணம் அவர்கள் தமிழ் தேசிய வழியில் வரும் புதியவர்கள் என்பதே. ஆனால் அர்ஜுனா மனநல தளம்பல் உள்ளவர், எனவே அவரை தவிர்ப்பேன். சிங்களத்துக்கு வாக்களித்தால் எதுவும் நடக்கும் என நான் கூறவில்லை. இதுவரை மக்கள் யாரும் பெரும் அளவில் சிங்கள கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை. அங்கயன், விஜயகலா, போன்றோரின் தனிப்பட்ட செல்வாக்கே அங்கே எடுபட்டது. ஆனால் NPP அப்படி அல்ல. முந்தைய கம்யூனிஸ்டுகளுக்கு பின், முதல் தடவை ஒரு சிங்கள கட்சிக்காக வாக்கு யாழில் விழுகிறது. செல்வாக்குக்கு காரணம் - தமிழ் தேசிய கட்சிகளினதும், புலம்பெயர் அமைப்பு தலைமைகளினதும் கையாலாகாத, அயோக்கிய, திருட்டுத்தனங்கள். மக்களை நான் எங்கும் எப்போதும் குறை கூறியதில்லை. மக்கள் தீப்பே மகேசன் தீர்ப்பு. எப்படி கழுவி ஊத்தியும் என்ன, இந்த இருவரும் மீண்டும் வரத்தான் போகிறார்கள். அங்கால கஜன்ஸ், சுரேஷ், சித்தர் எல்லாரும் இவர்களை ஒத்தவர்கள்தான். இவர்கள் கையில் தமிழ் தேசிய அரசியல் இருக்கும் வரை தேர்தலுக்கு தேர்தல் அது சிறுத்து, சிறுத்து போகும் என்றே நினைக்கிறேன். ஒட்டு மொத்தமாக தமிழ் தேசிய அரசியலை அரங்கில் இருந்து அகற்றும் வரை இவர்களும் அகல போவதில்லை.
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
என்னிடம் அப்படி கூறியவருக்கு நான் நீங்கள் மேலே எழுதியதையே பதிலாக கொடுத்தேன்🙏.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
🤣 ஓ…அப்ப தெரிஞ்சு கொண்டுதான் ஆதாரம் கேட்டீர்களா🤣. அதுவும் நல்லதுக்குத்தான் - மீண்டும் ஒரு தடவை சீமானின் இரெட்டை வேடத்தை எல்லோருக்கும் நினைவு படுத்த முடிந்தது. திமுக பிஜேபி யுடன் கள்ள உறவில் இருக்கிறதா, தகாத உறவில் இருக்கிறதா என்பதை நான் மறுக்கவில்லையே. திமுகவை போல் சீமானும் சுயநலனுக்காக பிஜேபி யுடன் சேர்ந்தவர், அயோக்கியர் என்பதே என்வாதம். அதுக்கு ஆதாரம் கேட்டீர்கள். ஆதாரத்தை வழங்கி உள்ளேன்.
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
நிச்சயமாக…. இலங்கையிலேயே நம்பகமான கருத்து கணிப்புகள் ஏதும் இல்லை எனும் போது எனது உரையாடல்கள் வெறும் அவதானிப்புகள் மட்டுமே. விஞ்ஞான முறைப்படியான கருத்து கணிப்புகள் கூட பிழைப்பதை நாம் மேனாடுகளிலேயே கூட காண்கிறோம். எனவே நான் சொல்வது ஒரு பார்வை மட்டுமே. அத்தோடு இதில் நீங்கள் சொல்வது போல நிச்சயம் confirmation bias உம் இருக்கும். சிங்கள மக்களின் இனவாதம் மீது உங்களை போலவே எனக்கும் அசராத நம்பிக்கை உண்டு. ஆனால் அண்மையில் ஒருவர் எனக்கு சொன்னது “நீங்கள் அறிந்த நாடு இல்லை இது இப்போ. அவர்களும் மாரி விட்டார்கள், நாங்களும் மாறி விட்டோம், இனி ஒரு பெரும் இன முறுகல் வர வாய்ப்பில்லை. நீங்கள் பழையதையே நினைத்து கொண்டிருக்கிறீர்கள்.” எனக்கு இது கொஞ்சம் மிகைப்பட்டதாகவே தோன்றியது. ஆனாலும் ஏனைய நாடுகளில் இப்படி பரம வைரிகளாக இருந்த இனங்கள் பின்னர் சேர்ந்து வாழ்ந்தமை நடந்துள்ளது என்பதையிம் மறுக்க முடியவில்லை. காலம் பதில் சொல்லும்.
-
கூமுட்டை.. சாலை நடுவே நின்னா லாரி அடிச்சி செத்துப்போவ.. விஜயை மறைமுகமாக விமர்சித்த சீமான்
தமிழ்நாட்டு மக்களின் சாபக்கேடு என்றால் அது சாதி அரசியல்தான். இதை தூண்டி விடுபவர்களில் முதன்மையானவர் சீமான். குறிப்பாக தான் நாடார் சாதி எனிலும், எளிதில் உணர்ச்சி வசப்படகூடிய தேவர் சாதி மக்களை குறிவைத்து சீமான் நகர்வுகள் இருக்கும். ஆனால் இன்று அந்த மக்களே விழித்து கொண்டு, தேவர் சமாதியில் அரசியல் பண்ண வந்த சீமானை எதிர்த்து கோசமிடும் காட்சி. தமிழக மக்களின் அரசியல் முதிர்ச்சிக்கு இன்னொரு எடுத்துக்காட்டு. https://x.com/Vinosh_Selvam/status/1851548926282973609
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
இல்லை இதுதான் உங்கள் போன்றோரின் பிழை. நடப்பதை சொன்னால், சொல்லுபவருக்கு வண்ணம் பூசுவதில் நேரத்தை கடத்தி விட்டு, சொன்ன விசயம் நடந்த பின் வானத்தை பார்ப்பது🤣. அனுரவுக்கு போடும் ஒவ்வொரு வாக்கும் தமிழர் சுய நிர்ணயத்தின் சவப்பெட்டியில் விழும் ஆணிகள் என்பதே என் நிலைப்பாடு. ஆனால் களயதார்த்தம் வேறு. நான் மேலே எழுதி இருப்பது களயதார்தத்தை, என் அரசியல் தெரிவை/ஆலோசனையை அல்ல.
-
கூமுட்டை.. சாலை நடுவே நின்னா லாரி அடிச்சி செத்துப்போவ.. விஜயை மறைமுகமாக விமர்சித்த சீமான்
கருத்து 👌
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
இது மும்பையில் பீஜேபி வேட்பாளர் தமிழ் செல்வனை தான் ஆதரித்து வாக்கு கேட்டதாக அண்ணனே கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம். பிகு இந்த இரு காணொளிகளும் இதே யாழில் பலதடவை முன்பே பதியப்பட்டவை. அந்த திரிகளில் நீங்களும் பன்கெடுத்திருந்தீர்கள். இப்போ அப்படி எதுவும் நடக்கவில்லை என ஆதாரம் கேட்கிறீர்கள். மறதியா? இல்லை வாசகர் மறதி மேல் அசரா நம்பிக்கையா🤣
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
அவதூறும் இல்லை, இவதூறும் இல்லை. இதோ அண்ணன் வாயை வாடகைக்கு விட்டு, மோடியை வாயாரப்புகழ்ந்த காணொளி.
-
கூமுட்டை.. சாலை நடுவே நின்னா லாரி அடிச்சி செத்துப்போவ.. விஜயை மறைமுகமாக விமர்சித்த சீமான்
மிக தெளிவான பார்வை. பாயாசம், தேவர் ஜெயந்தி பற்றிய உங்கள் கூற்றுடன் முழுவதும் உடன்பாடுதான். ஆனால் தமிழ் நாடு நாள் விடயத்தில் திமுகவுக்கு மாறான நிலைப்பாட்டை எடுத்தாலும், சங்கரலிங்கனார், அண்ணா இருவரின் முயற்சியையும் சுட்டி காட்டி, ஒரு கண்ணியமான அணுகுமுறையை கடைபிடிக்கிறார். சீமானை போல “அண்ணா தமிழருக்கு துரோகம் இழைத்தார்” என வரலாற்றை புரட்டவில்லை. சீமான், விஜை இருவரும் அரசியல் செய்யும் நோக்கம் வேறு. ஒரு தோல்வி பட இயக்குனராக - சிங்கிள் டீக்கு நடிகர்களுக்கு வசனம் சொல்லி கொடுக்கும் இணை இயக்குனராக போக வேண்டிய நிலையில், அரசியலுக்கு வந்து, பஜரோ, ஊட்டி எஸ்டேட், காளிமுத்து மகள் என செட்டிலாகிவிட்டவர் சீமான். அவரின் நோக்கம் ஒரு போதும் தேர்தலில் வெல்லுவதில்லை. அவரின் நோக்கம் எல்லாம் இதை வைத்து மேலும் எப்படி சம்பாதிப்பது என்பதே. ஆனால் விஜை அப்படி அல்ல, சும்மா பப்படம் எடுத்தாலே பெரிய ஹிட் ஆகும் நடிகர். அவர் வருவது - புகழுக்காக. முதலமைச்சர் ஆவதுதான் குறி. ஆகவே இருவரும் ஒன்றல்ல. ஆனால் விஜை இறங்கி வேலை செய்ய வேண்டும். இல்லாவிடின் தேறாத கேசுதான். இந்த கருத்தில் ஈழத்தமிழன் அரசியல் ஞானம் உடையவன், தமிழ் நாட்டு தமிழன் காட்டுமிராண்டி என்பதாக ஒரு தொனி தெரிகிறது. ஆனால் உண்மை எதிர்வளமானது. 75 வருடங்களில் வன்முறை இல்லா அரசியல் கலாச்சாரத்தை கைக்கொண்டு, சரியான தலைமைகளை தேர்ந்து, இந்தியாவின் 2ம் மாநிலமாக வளர்ந்து நிற்பவர்கள் அவர்கள். தமிழக மக்கள் அரசியல் தன்மையானது. வாழ்க்கை சுட்டி, கல்வியறி அதிகமாய் இருந்தும் ஒரு நியாயமான விடுதலை போராட்டத்தையே போட்டடித்த கூட்டம் நாம். ஒப்பீட்டளவில் அரசியல் காட்டுமிராண்டிகள் ஈழத்தமிழர்தான். தன்மையான தமிழக அரசியல் கலாச்சாரத்தில் ஈழத்தமிழர் பாணி காட்டு மிராண்டி அரசியல் செய்பவர் சீமான்.
-
கூமுட்டை.. சாலை நடுவே நின்னா லாரி அடிச்சி செத்துப்போவ.. விஜயை மறைமுகமாக விமர்சித்த சீமான்
நல்ல யோசிக்க வைத்த, நீண்ட கருத்து. நிறைய நேரம் எடுத்து எழுதியிருப்பியள் என்ன🤣. அண்ணன் ரொம்பவே அரண்டு போய் உள்ளார். திருமா ஏன் சும்மா துள்ளுறார்? திமுக காரனை விட. இத்தனைக்கும் விஜை சொன்னதை வைத்து திமுக கூட்டணியிலேயே விசிக அதிக சீட்டுக்கு நெருக்கலாம். திமுக தலைமையோடு தனிப்பட்ட நட்பு காரணமாக ராஜபக்சவை சந்தித்து மாபெரும் தவறை செய்தது போல, இப்போ வலுக்காண்டியாக விஜையை எதிர்கிறார். ஸ்டாலினுக்காக.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
மான ரோசம் கெட்ட திமுகதான் பிஜேபியுடன் கூட்டணி ஆட்சியில் பங்கு என இருந்தது உண்மைதான். இதே போலத்தான் மானம் கெட்ட சீமான் மஹராஸ்டிரா வரை போய் மோடியை ஆதரித்து பிஜேபி க்கு வாக்கு கேட்டார். அண்ணணின், மோடி குஜராத்தின் பொருளாதாரத்தை உயர்த்தி ஆறாயிரம் கோடியை வங்கியில் இட்டார் என்ற மோடி ஆதரவு பேச்சும் இலகுவில் மறக்க கூடியதல்ல. திமுக பதவிக்கக சங்கிளிடம் கூட்டு. அண்ணன் வாயை வாடகைக்கு விட்டு சம்பாதிப்பதக்காக பிஜேபி புகழ். இரெண்டும் ஒன்றேதான். இவ்வளவு ஏன் அண்ணனின் யாழ்கள தம்பி ஒருவர் “சீமான் பிஜேபி கூட்டணி வைத்தால் நீங்கள் சீமானை எதிர்பீர்களா” என்ற என் கேள்விக்கு 2 வருடமா பதில் சொல்லாமல் இருக்கிறார். இதில், திமுக, சீமான், யாழ்கள தம்பி எவரும் யோக்கியம் இல்லை.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
ரேபீஸ் ஊசி போட்டு கொள்ள வேண்டிய அளவுக்கு இருக்கும் தம்பிகளின் கடிப்பு. நீங்கள் சொன்னதை யாழில் எழுதப்போய்த்தான் என்னை கடித்து குதறினார்கள். வாங்கும் கடியை அப்படியே மனதில் நிறுத்தி - சீமானை துவைக்க தேவைப்படும் சக்தியாக மாற்றிக்கொண்டேன்🤣.
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
யார் சுத்துமாத்து சுமனை சொல்கிறீர்களா, அல்லது பெர்மிட் மன்னன் தரனை சொல்கிறீர்களா? இருவரையும் போது போதும் எனும் அளவுக்கு யாழில் கழுவி, கழுவி ஊத்தியுள்ளேனே?
-
கூமுட்டை.. சாலை நடுவே நின்னா லாரி அடிச்சி செத்துப்போவ.. விஜயை மறைமுகமாக விமர்சித்த சீமான்
கூமுட்டை.. சாலை நடுவே நின்னா லாரி அடிச்சி செத்துப்போவ.. விஜயை மறைமுகமாக விமர்சித்த சீமான் Nantha Kumar RUpdated: Saturday, November 2, 2024, 0:01 [IST] சென்னை: ‛‛அன்பு என்றால் அன்பு. வம்பு என்றால் வம்பு.. நீங்கள் வெட்ட நினைக்கும்போதே வெட்டி முடிக்கிற வீர மறவர்கள் நாங்கள். எங்கள் லட்சியத்துக்கு எதிராக பெற்றவர்களே வந்தாலும் எதிரி எதிரி தான். அதில் தம்பியும் கிடையாது. அண்ணனும் கிடையாது. உங்களிடம் இருப்பது கொள்கை இல்லை. கூமுட்டை. அழுகின கூமுட்டை.. ஒன்று ரோட்ல இந்த பக்கம் நில்லு. இல்லை அந்த பக்கம் நில்லு. நடுவுல நின்னா லாரில அடிபட்டு செத்துப்போவ'' என்று நடிகர் விஜயை மறைமுகமாக கடுமையாக சீமான் விமர்சனம் செய்தார். இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார். இந்த கூட்டத்தில் நடிகர் விஜயை, சீமான் நேரடியாக விமர்சனம் செய்தார். நடிகர் விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டில் திராவிடமும், தமிழ் தேசியமும் இரு கண்கள் என்று பேசியதை காட்டமாக சீமான் விமர்சனம் செய்தார். இதுதொடர்பாக சீமான் பேசியதாவது: அன்பு என்றால் அன்பு.. வம்பு என்றால் வம்பு.. சாதாரண வம்பு இல்லை உடன் பிறந்தார்களே.. கொடிய வம்பு.. நீங்கள் வெட்ட அரிவாளை எடுக்கும்போது விழுந்து கும்பிடுகிற ஈனப்பிறப்புகள் அல்ல நாங்கள். நீங்கள் வெட்ட நினைக்க எண்ணும்போதே வெட்டி முடிக்கிற வீர மறவர்கள் என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும். எங்கள் முன்னவர்கள் ஒன்றை தான் கற்று கொடுத்து உள்ளார்கள். உண்மையை பேசு. அதை உரக்க பேசு. உறுதியாக பேசு. இறுதி வரை பேசு என்பது தான். இதுதான் எங்கள் கோட்பாடு. மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டம் என்றும் சிறியோர்க்கு ஞாபகம் செய் முழங்கு சங்கே! என்று பாடியவனின் பேரன்டா நான். இது சினிமா பஞ்ச் டயலாக் இல்லை தம்பி. நெஞ்சு டயலாக் இது. நெஞ்சு டயலாக்... இதயத்தில் நெருப்பு எரிகிறபோது சில பொறிகள் வாய்வழியாக வந்து விழும். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் என் இனம் தூக்கி சுமந்து வருகிற வலியின் மொழிதான் எங்களின் மொழி. விடுதலை பெற்றவர் பேசுவதற்கும், அடிமை பேசுவதற்கும் வேறுபாடு உண்டு. வேறுபாடு உண்டு ப்ரோ. எங்கள் கோட்பாடு ஒன்று தான். எங்கள் லட்சியத்துக்கு எதிராக பெற்றவர்களே வந்தாலும் எதிரி எதிரி தான். அதில் தம்பியும் கிடையாது. அண்ணனும் கிடையாது. இது கொள்கை இல்லை. கூமுட்டை.. அதுவும் அழுகின கூமுட்டை. What bro.. Its very wrong bro. ஒன்று சாலையில் அந்த ஓரத்தில் நில்லு. இல்லைனா சாலையில் இந்த ஓரத்தில் நில்லு. நடுவில் நின்றால் சாலையில் லாரி அடிச்சி செத்துப்போவ பார்த்துக்கோ. தன் இன பாலகன். தன் மார்பிலேயே பால் குடித்தவர். தன் மடியிலேயே தவழ்ந்தவன் இறந்து விட்டானே என்று அழுது துடிப்பது தமிழ் தேசியம். என் தங்கை இசை பிரியா கொல்லப்பட்டு கிடந்தபோது துடித்தது தமிழ் தேசியம். தூர இருந்து சிரித்தது திராவிடம். இரண்டும் ஒன்றா. இரண்டும் ஒன்றா.. உடலில் நெருப்பு கொட்டி வெந்தது வீர தமிழன் முத்துகுமார். அது தமிழ் தேசிய பெரும் நெருப்பு. கடற்கரையில் தலைக்கு ஒரு குளிரூட்டி. காலுக்கு ஒரு குளிரூட்டி. தலைமாட்டில் மனைவி.. கால்மாட்டில் துணைவி என்று போலி உண்ணாவிரதம் நடத்துவது திராவிடம். இரண்டும் ஒன்று. '' என ஆக்ரோஷமாக விமர்சனம் செய்தார். அதனை கேட்டவுடன் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். சீமானின் இந்த பேச்சு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. https://tamil.oneindia.com/news/chennai/if-you-stand-on-center-of-the-road-lorry-will-hit-and-died-seeman-slams-tvk-leader-vijay-on-the-rem-651287.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
புலிகளின் முடிவுக்கு முன்னும், பின்னும் 1948-2020 வரை பல சிங்கள தலைவர்கள் விரும்பி, முயன்று முடியாமல் போனது, மக்களை தேசியத்தில் இருந்து விலக்குவது. ஆனால் NPP க்கு காலமும், தமிழ் கட்சிகளின், புலம்பெயர் தமிழர் தலைமைகளின் போக்கிலித்தனமும் கைகொடுக்கிறன. ஓ…கொழும்பு தமிழரசு காரார்.
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
யார் முன்னாள் ஈபிடிபி வடக்கு மாகாண சபை எதிர் கட்சி தலைவரா? இப்போது எந்த கட்சியில்? ஒரு பஸ் பிரயாணத்தில் கண்டேன். மிகவும் மெலிந்து போய் நோய் வாய்பட்டவர் போல தெரிந்தார். இந்த நிலையிலும் பதவி ஆசை.
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
எனது பயணகட்டுரையில் யாழில் ஜேவிபிக்கு பெருகும் ஆதரவு இட்டு எழுதி இருந்தேன். அதை பலர் நம்பாமலும் இன்னும் சிலர் ஜீரணிக்க முடியாமலும் கருத்து கூறினர் யாழ் களத்திலும், வெளியே புலம்பெயர் மக்களிடம் பேசிய போதும். அதன் பின் இரு தடவை போய் வந்தேன். ஆதரவு கூடியே உள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு பின் இன்னும் கூடி உள்ளது. எமது மக்களில் கணிசமானோர், குறிப்பாக இளையோர் பின் வருமாறு சிந்திக்கிறனர். NPP ஏனையோர் போல இல்லை. இவர்கள் மனப்பூர்வமாக இனவாதமற்ற, ஒரே இலங்கையர் என்ற அடிப்படையில் செயல்படுகிறார்கள். 48 இல் இருந்து தனித்துவத்தை காக்க போராடி நாம் அடைந்தது எதுவும் இல்லை. டக்லஸ் அங்கயன் வழி ஒத்தூதும் அரசியலும் வேண்டாம், மூன்று கட்சிகள் காட்டும் தேசியமும் வேண்டாம். புதிய வழியாக NPP யில் பங்காளர் ஆவோம். பெரும்பான்மை அல்ல, யாழ் மாவட்டத்தில் இப்போதும் தமிழ் தேசிய கொள்கைக்கே ஆதரவு அதிகம், ஆனால் யாழில் கணிசமனா பலர் இப்படி நினைப்பதாக எனக்குப்படுகிறது. மட்டகளப்பில் நிலமை அவ்வளவு மாறி இருப்பதாக படவில்லை. கொழும்பு வாழ் வடகிழக்கு தமிழர் கிட்டதட்ட பெரும்பான்மை NPP யுடன் என்றே நினைக்கிறேன். காலம் மாறுகிறது - அதற்கேற்ப யூடியூப்பர்ஸ்சும் மாறுகிறார்கள். விற்கும் பொருளைத்தான் அவர்கள் விற்பனை செய்வார்கள்.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
நான் இன்னும் டிரைவர் வைக்கும் அளவுக்கு உயரவில்லை ப்ரோ… அதுக்கு அப்பறம் வேலைக்காரி வேற வைக்கணும்🤣. சரி நேரம் கிடைக்கும் போது ஆதாரத்தை பாகிரவும்.🤣. பிகு நீங்கள் எனக்கு பதில் எழுதி செலவழித்த நேரத்துக்கு இரெண்டு ஆதாரத்தை தட்டி விட்டிருக்கலாம் என யாரும் நினைச்சால் நான் பொறுப்பல்ல👻
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
🤣 கிழக்கு மாகாண வாக்குகளை சிதறடித்து, அம்பாறையின் தமிழ் பிரதிநிதிதுவத்தை கேள்விக்குள்ளாக்கி, அதன் மூலம் கிடைத்த வாக்குகளை வைத்து தேசிய பட்டியல் ஆசனம் எடுத்த கஜனையா சொல்கிறீர்கள்🤣. அவரை பெரிய கஜே அம்பாறைக்கு நேர்ந்து விட்டார். தேர்தலின் பின் சில தடவை தலைகறுப்பை காட்டினாராம். வாக்காளர்கள் வலை விரித்து தேடுகிறார்கள்🤣