Everything posted by goshan_che
-
அமெரிக்காவில் இந்திய மாணவிகள் இருவர் கைது.
அப்போ ஏன் தமிழர்கள் கிழக்கு ஜேர்மனியில் இருந்து மேற்கு ஜேர்மனிக்கு பாய்ந்தோடி வந்தார்கள்?
-
அப்பா உடனே வாங்கோ.
வாழ்த்துக்கள் அண்ணா. அர்னாவ் நீடூழி வாழ வாழ்த்து. (அர்னாவ் என்ற பெயரில் ஒரு தமிழ் சீரியல் நடிகர் உள்ளார் என நினைக்கிறேன்).
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
இத்தனைக்கும் பிறகு சீமான் ஏன் தேர்தலை புறகணிக்கவில்லை? ஓட்டு குறைந்தால்? தே.ஆணையம் வோட்டை குறைத்து விட்டது ? ஆனால் அதே தே. ஆ நடத்தும் 2026 தேர்தலிலும் நாதக போட்டியிடும்? என்னையா இது? போட்ட வோட்டையே களவெடுக்கும் தேர்தல் முறையில் நீங்கள் எத்தனை தரம் போட்டி போட்டாலும், தோல்வி என்றே அறிவிப்பார்கள். பின்னர் ஏன் அந்த தேர்தலில் தொடர்ந்தும் போட்டி போடுகிறீர்கள்? அவரும் வெறும் வாய்சவாடல்தான் என்கிறீர்களா🤣
-
அதிக வட்டி வருமானத்திற்கு அறவிடப்படும் வரி! கேவலமான செயலென கொதித்தெழும் பொருளாதார நிபுணர்
ஏதேது….சும்மா புட்டு….புட்டு வைக்கிறீர்களே🤣. நட்பு வட்டமோ 🤣 (பகிடிக்குத்தான்). நீங்கள் சொல்வது சரியே என்றாலும் ஆடிய காலும் களவெடுத்த கையும் சும்மா இராது கண்டியளே🤣. இப்படியாகொத்த கள்ளர் பலர் இலங்கையில் இப்படி பணத்தை வைப்பில் இட்டு வைத்துள்ளார்கள். பின்னர் தேவைப்படும் போது உண்டியல் மூலம் எடுப்பது. கணக்கில் காட்டாமல் கலியாணம், சாமத்திய சடங்கில் கைக்காசாக செலவழிப்பது. வெளித்தோற்றத்துக்கு கனவான் வேசம் போட்டாலும் - தொழில் எப்போதும் களவுதான்🤣. அதேபோல் இப்போ மட்டும் அல்ல, எப்போதும் சோசல் களவு செய்வோர் காட்டில் மழைதான்🤣. ஆனால் இப்படி களவு செய்வோர் வாழ்க்கை வேற மாரி - என்னதான் பண வரவு இருந்தாலும் அது தரித்தரிரம் பிடிச்ச வாழ்க்கை. பிள்ளையள் கூட என்றால் நல்ல பெரிய வீடு கிடைக்கும் ஆனால் சொந்தமா வீடு வாங்கேலாது. அதிஸ்டம் என்றால் ரைட் டு பை மூலம் கிடைக்கலாம். கையில் காசுக்கு வேலையும் செய்து காசும் பார்க்கலாம்தான் ஆனால் வேலை தாறவன் யார்? நான் மேலே சொன்ன வரி ஏய்க்கும் கள்ள முதலாளிகள் - அவர்கள் இவர்களை தெரு நாயை போல நடத்துவார்கள். என்ன ஆபீஸ் வேலையா தரப்போகிறார்கள், பெட்டியை கிழித்து அடுக்கும் வேலைதான். சக்கையாக பிழிந்து விடுவார்கள். இப்படி வாழும் பலரை பார்த்தீர்களானல் அவர்கள் முகத்தில் ஒரு செந்தழிப்பு இருக்காது - வறுமை என நடித்தாலும் - அதுவும் ஒரு தரித்திரம்தான். இவர்கள் இலங்கை போனாலும் அங்கே இப்போ பலர் இவை பற்றி முழுவதுமாக தெரிந்து வைத்துள்ளார்கள் - சில கேள்விகளிலேயே பிடித்து விடுவார்கள். தவிரவும் அங்கேயும் போய், கால் முதல் தலைவரை டிசைனைர் உடுப்பு போட்டு கொண்டு, 80 ரூபாய் வடைக்கு எட்டு தரம் விலை பேசுவார்கள்🤣. முன்னர் நாம் கொழும்பில் இருக்கும் போது இப்படியானவர்களை “ஓமான்” என அழைப்பார்கள். இப்போ “இலண்டன்” என அழைக்கிறார்கள். இப்படி தினுசு…தினுசா…இருக்கிறார்கள் புலம்பெயர் தமிழர்கள். ஆனால் பொதுவெளியில் கதைக்க விட்டால், ரொமேனியன் கள்ளன், சிங்களவன் கள்ளன் என நீட்டி முழக்குவார்கள் - தங்கள் சீத்துவம் மற்றையவர்களுக்கு தெரியாது என நினைத்தபடி.
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே? கேள்வி கீழே
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
நான் அப்படி நினைக்கவில்லை. வன்மத்தில் போடுவதென்றால் நான் நாதக 1-5% என போட்டிருக்கலாம். எல்லாரும் தமது கணிப்பின் அடிப்படையில்தான் போடுவதாக நான் எண்ணுகிறேன். ஆனால் சீமான் பங்கு பற்றும் ஒரு விடயத்தை நீங்கள் “சூதாட்டம்” என புறகணிப்பது ஏன் என்பதுதான் புரியவில்லை. பரவாயில்லை. ஜூன் மாசம் சந்திப்போம்.
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
வீரப்பையா, ஏன் சும்மா ஏனைய கருத்தாளரை எல்லாம் இழுத்து கொண்டு. எனது கேள்வி மிக எளியது: நீங்கள் நேர்மையற்றது என புறக்கணிக்கும் தேர்தலில் சீமான் போட்டியிடுகிறார்? இதில் எவர் நிலைப்பாடு அறிவார்ந்தது? ஓம்….கெட்ட சைனடுகள்….🤣 ( பேட்ஸ்மேன் துரத்தி அடித்து அவுட் ஆவார் என்ற எதிர்பார்ப்பில் போடப்பட்ட வைட் பந்தை அவர் கீப்பருக்கு போக விட்டு விட்டார்🤣).
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
பாருங்கள்….இந்திய தேர்தல் அவ்வளவு மோசம் என்று தெரிந்து அது சம்பந்தமான போட்டியில் கூட கலந்து கொள்ளவது வேஸ்ட் என நீங்கள் ஒதுங்குகிறீர்கள்….. ஆனால் சீமான்? இதே வேஸ்ட் தேர்தலில் ஒவ்வொரு முறையும் போட்டியிடுகிறார்? நீங்கள் எடுத்த முடிவு அறிவார்ந்ததா? சீமான் எடுக்கும் முடிவு அறிவார்ந்ததா? ஆனால் நீங்கள் இந்த தேர்தல்களை விட இந்திய தேர்தல் பற்றி அல்லவா அதிகம் எழுதியுள்ளீர்கள்? நீங்கள் ஆகரிக்கும் கட்சியும் இந்திய தேர்தலில்தான் போட்டி போடுகிறது.
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
நெடுக்ஸ் தமிழக அரசியலில் அதிகம் கருத்து சொல்வதில்லை. அவரின் இந்தியா, இந்திய தேர்தல் தொடர்பான நிலைப்பாடு எப்போதும் ஒன்றே - ஆகவே அவர் சொன்ன காரணம் நியாயமானது. பெருமாளும் கூட தமிழக அரசியல் பற்றி அதிக ஆர்வம் காட்டுவதில்லை. ஆகவே இவர்கள் கலந்துகொள்ளாமை புரிந்து கொள்ள கூடியது. ஆனால் நாளும் பகலும் தமிழ் நாட்டு அரசியலை யாழில் எழுதி, சிலாகிப்பவர்கள் பின்னடிப்பதும் இதுவும் ஒன்றல்ல.
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
Chill ப்ரோ ….. எல்லாம் சும்மா பகிடிக்குத்தான். மேலே தோழர் பட்டியலிட்டுள்ளவை ரொம்பபே hanging fruits ஆக தெரிகிறது. இத்தனை வருட தேர்தல் அரசியலுக்கு பிறகு 4 பேர் ஓடும் ரேசில் 3வதாக வருவது எல்லாம் ஒரு இலக்கா? நல்லவேளை நோட்டாவை வெல்வது என்பதை இலக்காக கொள்ளவில்லை🤣. ஆனால் @புரட்சிகர தமிழ்தேசியன் ப்ரோவுக்கு ஒரு பெரிய சலூட். சும்மா வாயால் வடை சுடாமல் தன் எதிர்பார்ப்புக்களையும், கணிப்பையும் போட்டுள்ளார். அதேபோல் @புலவர் கூட போடுவதாக சொல்லி உள்ளார். நாதக ஆதரவாளர் என்ற வகையில் அவர்களோடு நான் மோதினாலும்….அவர்களின் தைரியத்தை மெச்சுகிறேன்.
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
மண் படும் என்பதால் முன்னெச்சரிக்கையாக மீசையை வழிக்கிறீர்கள் போல படுகிறது தோழர்🤣.
-
அமெரிக்க குடிமகனான இளவரசர் ஹாரி
எலி வளையானாலும், தனி வளை வேணும்.
-
அதிக வட்டி வருமானத்திற்கு அறவிடப்படும் வரி! கேவலமான செயலென கொதித்தெழும் பொருளாதார நிபுணர்
ஆமா நீங்கள்தான் உலக தமிழரின் பிரதிநிதி….உங்களிடம் வந்து எல்லாரும் ஒப்பு கொடுக்க வேண்டுமாக்கும்🤣. இலங்கை இனவாத அரசு இன்று நேற்றா தமிழரை ஏமாற்றுகிறது? 1948 க்கு பின்னான இலங்கை அரசியலே தமிழரை ஏமாற்றுவதுதானே. ஆனால் இந்த மாற்றங்கள் அனைவருக்குமானது, தனியே தமிழருக்கு மட்டும் என வரியை கூட்டவில்லை.
-
அதிக வட்டி வருமானத்திற்கு அறவிடப்படும் வரி! கேவலமான செயலென கொதித்தெழும் பொருளாதார நிபுணர்
1. இலண்டனிலும் ஏனைய புலம்பெயர் தேசங்களிலும் காசை கள்ள வழிகளில் உழைத்துவிட்டு, அதை இந்த அடைக்கலம் தந்த நாடுகளில் declare பண்ணாமல், மேலதிகமாக அடைக்கலம் தந்த நாட்டில் முதலிட்டால் அல்லது வைப்பில் இட்டால் வரி கட்ட வேண்டி வரும் என்பதால் - இலங்கையில் வைப்பில் இட்ட வரி ஏய்பாளருக்கு ஆப்பாமா? சந்தோசம் 🤣. உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தால் இப்படித்தான் நடக்கும். 2. ஓய்வூதியத்துக்கு, அல்லது ஓய்வூதியகாலத்தில் வரும் வருமானத்துக்கு வரி என்பது அப்படி ஒன்றும் கொடுமையான விடயமோ அல்லது புதிய் விடயமோ அல்ல. எல்லா நாடுகளிலும் வரி கட்ட கீழ் வரம்பு என்று உள்ளது. இதற்கு மேல் வரும் வருமானத்துக்கு வரி கட்டுவது இயல்பானதே. உதாரணமாக யூகேயில் பென்சன்+ஏனைய முதலீடுகள் தரும் ஆண்டு வருமானம் > வரிகட்டும் கீழ் வரம்பு எனில், வரம்புக்கு அதிகமாக வரும் வருமானத்திற்கு வரி அறவிடப்படும். https://www.unbiased.co.uk/discover/pensions-retirement/managing-a-pension/tax-on-pensions#:~:text=Do you pay tax on,tax of 40% kicks in. இலங்கை வங்குரோத்தானதுக்கு இப்படியான வரி ஏய்பும் ஒரு காரணம். இலங்கை இப்போ ஐ எம் எவ் கேட்டு கொண்டதன்படி தனது வரி விதிப்பில் உள்ள குறைகளை நீக்கி, வரி ஏய்ப்புக்கான வழிகளை அடைக்கிறது. வந்த நாள் முதல் கள்ள மட்டை போடுவது, கள்ள பியர் ஏத்துவது, கொவிட் உதவி பணத்தை கொள்ளை அடிப்பது. வருமானத்தை குறைத்து காட்டி வரி ஏற்பது என பணம் சேர்த்து, அதை இங்கே போட்டால் கேள்வி வரும் என்பதால் - இலங்கையில் பல மடங்கு கூடிய வட்டிக்கு ஆசைபட்டு - இப்போ குய்யோ, முறையோ என கத்துகிறார்கள் சிலர். # கொள்ளை அடித்ததாம் பெருமாளு, அதை புடிங்கி தின்னுதாம் அனுமாரு🤣
-
கல்லோயா குடியேற்றத்திட்டத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவு: இனிப்பும் கசப்பும் கலந்த நினைவுகள்!
இணைப்புக்கு நன்றி ஜி. சீனியர் கனகசுந்தரம் பிற்காலத்தில் செல்வநாயகம் அன்று ரயிலில் கூறியது எப்படிப்பட்ட தீர்க்கதரிசனம் என்பதை உணர்ந்திருக்க கூடும். நிச்சயம் 83 இல் ஓடும் போது அஜித் கனகசுந்தரம் அறிந்திருப்பார். இன்றும் இதே போல் “இலங்கையர்” என்ற அடையாளம் முந்தள்ளுப்படுவதையும், நாட்டில் தமிழ் இளையோர் பலர் அதன் பால் இழுவுண்டு போவதையும் காணும் போது - நாமும் செல்வநாயகம் போல “Young man (men and women) – Do you realize that you are driving a dagger into the hearts of the Tamil people?” என கேட்டு நகர்வதை விட வேறு எதுவும் செய்யவியாலாது. வரலாறு மீள் திரும்பி கொண்டே இருக்கிறது….கனக சுந்தரங்களின் விரல்களை கொண்டு அவர்களின் கண்களையே குத்து போக்கை இந்த தடவையாவது சேனநாயக்கள் கைவிடுவார்களா? எனக்கு நம்பிக்கை இல்லை.
-
சிறிலங்கன் ஏர்லைன்ஸ்சில் பங்குகளை வாங்க ஆறு கம்பெனிகள் ஆர்வம்
ஒப்பந்தம் சந்திரிக்கா காலத்தில் நடைமுறைக்கு வந்து 2008 இல் முறிந்தது என நினைக்கிறேன்.
-
சிறிலங்கன் ஏர்லைன்ஸ்சில் பங்குகளை வாங்க ஆறு கம்பெனிகள் ஆர்வம்
ஐரோப்பா, அவுஸ்(?) இருந்து இலங்கைக்கு நேரடி சேவை எனும் மொனோபொலியை கொண்டிருக்கும் வரை - ஒழுங்காக நடத்தினால் இலாபம் வரும் என்றே நினைக்கிறேன். ஆனால் இலங்கை அரசின் பிடியும் இருக்கும் எண்டால் சாண் ஏற முழம் சறுக்கும் நிலைதான். சந்திரிக்கா காலத்தில் எமிரேட்ஸ் அடைந்த மோசமான அனுபவம் பல முண்ணனி நிறுவனங்கள் இந்த முறை ஆர்வம் காட்டவில்லை என நினைக்கிறேன். ஏர் ஏசியா பெரும்பான்மை பங்கை வாங்கினால் - இலாபம் வரும் எனில் ஹீத்துரோ-பலாலி கூட ஓடுவார்கள். முன்னர் மன்செஸ்டர் - கோலாலம்பூர் ஓடினார்கள் .இலாபம் இல்லை என்பதால் இப்போ ஐரோப்பாவுக்கு வருவதில்லை.
-
சிறிலங்கன் ஏர்லைன்ஸ்சில் பங்குகளை வாங்க ஆறு கம்பெனிகள் ஆர்வம்
இலங்கையின் அரச நிறுவனமான சிறிலங்கன் ஏர்லைன்ஸ் பங்குகளை வாங்க தனியாரிடம் விண்ணபங்கள் கோரப்பட்ட நிலையில், ஆறு நிறுவனங்கள் ஆர்வம் காட்டியுள்ளன என கொழும்பு செய்திகள் சொல்கிறன. 1. AirAsia Consulting Sdn. Bhd. 2. Dharshaan Elite Investment Holding (Pvt) Ltd 3. FITS Aviation (Private) Limited 4. Sherisha Technologies Private Limited 5. Treasure Republic Guardians Limited 6. Hayleys PLC என்பனவே அவையாகும். செய்தி மூலம்: https://www.newswire.lk/2024/04/22/6-companies-submit-rfqs-to-buy-srilankan-airlines/ டிஸ்கி இதில் ஏர் ஏசியா ஏலவே இந்தியா+தென்கிழக்காசியாவில் மலிவு விலை சேவையாக அறியப்பட்டது. ஹேலீஸ் இலங்கையின் முண்ணனி கார்பரேட் நிறுவனங்களில் ஒன்று. ஏனையவை பற்றி தெரியவில்லை.
-
“இலங்கை வேடுவர்களுக்கு 5 இந்திய பழக்குடியினருடன் நெருங்கிய மரபணு தொடர்பு – ஆய்வில் தகவல்”
தகவலுக்கு நன்றி. ஜாவாவிற்கு அருகில் உள்ள சுமாத்திரா தீவில் உள்ள மெதான் நகரில் ஐரோப்பியர் காலத்துக்கு முன்பிருந்தே தமிழ் குடியிருப்புகளும் கோவில்களும் இருந்தனவாம். இப்போதும் உள்ளன. கடாரம் வரை தம் ஆளுகையின் கீழ் வைத்திருந்த தமிழ் பேரரசுகள் இந்த நாடுகளின் முக்கிய நகர்களில் எல்லாம், chamber of commerce போல ஒரு அமைப்பை, தமிழரை கொண்டு நிறுவி அதன் வழி, வரி மட்டும் வர்த்தகத்தை கட்டுப்படுத்தினார்களாம். அதேபோல் கோவில்களும், அதை சுற்றி தமிழ் குடியிருப்புக்களும் அமைத்துள்ளார்கள். வெள்ளையர் வெள்ளயருக்கென இலங்கை காலி கோட்டை, சென்னையில் அமைத்த நகர்கள் போல என நினைக்கிறேன். ஆகவே தமிழர்கள் அங்கே போனது போல ஜாவாகாரர் இங்கேயும் வந்திருப்பர் என்பது அத்தனை நடக்கவியலாத காரியம் அல்ல. https://en.m.wikipedia.org/wiki/Kampung_Madras
-
அயோத்தி ஸ்ரீ ராமர் கோவிலின் நிர்வாக முக்கியஸ்தர் கோவிந்த் தேவ் கிரி மகாராஜ் இலங்கைக்கு விஜயம்
கண்டியில் ஏது எமது அழிக்கப்பட்ட தலங்கள்? இவர் பண்டாரவள, சீதா-எலிய கோவிலுக்கு வந்துள்ளார் என நினைக்கிறேன். பிகு எமது கோவில்கள் முஸ்லிம் அல்லது கிறிஸ்தவரால் அழிக்கப்பட்டிருந்தால் இவர் தானாக போய் பாத்திருப்பார்.
-
“இலங்கை வேடுவர்களுக்கு 5 இந்திய பழக்குடியினருடன் நெருங்கிய மரபணு தொடர்பு – ஆய்வில் தகவல்”
Know the Etymology: 39 Place Name of the Day: Saturday, 03 June 2017 Cāvakac-cēri சாவகச்சேரி Cāvakac-cēri Cāvakar+cēri The Javanese settlement சொல்வது நானல்ல - சாட்சாத் தமிழ்நெற்.கொம் https://www.tamilnet.com/art.html?catid=98&artid=22810
-
“இலங்கை வேடுவர்களுக்கு 5 இந்திய பழக்குடியினருடன் நெருங்கிய மரபணு தொடர்பு – ஆய்வில் தகவல்”
நன்றி. இந்த மரபணு சுட்டிகளில் ஒன்று மதுரையிலும், அதேபோல் அபர்ஜினிகளிடமும் பரவலாக உள்ளது என 2000 ஆண்டுகளில் ஒரு ஆராய்சியும் நிறுவியுள்ளது. இனத்தூய்மை வாதம் இங்கே எவரும் பேச முடியாதது என்பதை இது காட்டுகிறது. சுத்தி சுத்தி பார்த்தால் எல்லாரும் ஆபிரிக்கரே. அதே போல் ஆபிரிக்காவின் ரிட் வெளியில் இருப்போரை தவிர மிகுதி இடங்களில் உள்ள மிச்சம் எல்லாரும், வந்தேறிகளே. இந்திய தீபகற்பகத்துள் முதலில் வந்த குழுக்கள் இரெண்டை திராவிட குடிகள் என வகைப்படுத்தின், அதன் பின் வந்தோரை ஆரியர் எனலாம் என நினைக்கிறேன். இதில் திராவிட குழுக்கள் கடைசி பனிக்காலம் முடியும் முன் தரை வழியாக இலங்கை வந்து அங்கே யக்கர், நாகர், வேடராக பரவி இருக்கலாம்.
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
#யாவரும் கேளிர்❤️
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
இந்த திரியை கட்சிசார்/எதிர் காணொளிகள் இணைக்கப்பாவிக்காமல் - போட்டி திரியாக மட்டும் பாவித்தால் நல்லம் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.
-
“இலங்கை வேடுவர்களுக்கு 5 இந்திய பழக்குடியினருடன் நெருங்கிய மரபணு தொடர்பு – ஆய்வில் தகவல்”
இதற்கு பொறுப்பான அமைச்சர் டயனா கமகேயா🤣 ம்ம்ம்…..அதுவும் உண்மையே.