Everything posted by goshan_che
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
ஏன் சிறிதரன் கொமிசன் தரேல்லையோ, திடீரென நாராயண புராணம்🤣.
-
ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் தீக்குளிப்பு
எனக்கு யாழில் இரெண்டு பேர் பத்த வச்சிடுவினமோ எண்டு பயமா கிடக்கு🤣
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
சீமான் உட்பட எவருமே தங்கம் இல்லை. ஆகவே இவரும் மாற்று இல்லை. ஒரு கள்ளனை இன்னொரு கள்ளனால் பிரதியிடுவது அல்ல மாற்று. ஓம். ஏன் எண்டால் அவர் சின்ன கருணாநிதி என நான் எப்போதோ அடையாளம் கண்டு கொண்டதால். இப்ப GOAT ல பிசி🤣. பிகு நான் விஜை ஆதரவாளனோ பிரச்சாரகரோ இல்லை. ஒரு போதும் ஆக போவதில்லை. ஆனால் நம்ம மருமகன். சினிமாவில் பிழைக்க முடியாமல் போனபின் கட்சி தொடங்காமல் - நினைத்து பார்க்க முடியாத பணம் கொட்டும் வியாபாரத்தை விட்டு விட்டு வருகிறார். திரிசாவோ, நயனோ நாசம் பண்ணி விட்டார் என பொதுவெளிக்கு வரவில்லை🤣. இன்னும் கள்ளன் என நினைக்கும்படி எதுவும் மாட்டவில்லை. ஆகவே இப்போதைக்கு இவருக்கு benefit of the doubt ஐ கொடுக்கலாம்.
-
ஈரான் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல்
இராக்கில் உள்ள ஈரானிய புரொக்சி படைகள் மீதும் விமானத்தாக்குதலாம். அமெரிக்கன் சென்ரல் கொம்மாண்ட் தாம் இல்லை என மறுப்பு. இஸ்ரேல் லெப்ட் சிக்க்னல் போட்டு ரைட் கட் பண்ணி இருக்குமோ? விமானங்கள் ஜோர்தான் பக்கம் இருந்தே வந்தனவாம்.
-
இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்
ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும். உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
எழுதுங்கள்…எதோ நான் பானுமதி, விஜி, பாத்திமாவோடு டீலில் இருந்தமாரி போகுது கதை🤣. நான் எப்போதும் சீமானை என்ன சொல்வேன்? சின்ன கருணாநிதி….. சின்ன கருணாநிதியே இவ்வளவு கேலவலமானவர் என எழுதும் எனக்கு பெரிய கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்டாலின், ஜெ., சசி, உதய் எல்லாரும் அதை ஒத்த கள்ளர்கள் என்பது தெரியாமலா இருக்கும். உங்களையும் சகாக்களையும் போல சீமான் மட்டும் தங்கம், ஏனையோர் பித்தளை என பசப்புபவன் நான் இல்லை. இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள் என்பது நான் 1ம் நாளில் இருந்து எழுதி வருவதே. பிகு நல்ல சுவாரசியமாக படத்தோடு எழுதுங்கள். சும்மா “சரோஜா தேவி” பலான கதைகள் போல தெறிக்க விடுங்கள்🤣. ஆவலோடு காத்திருக்கிறேன்🤣 ஆருக்கு தெரியும். ஆம் என்கிறனர் விஜி. இல்லை என்கிறார் அண்ணன்.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
என்ன அண்ணை இது…..ஏதோ என்ர தனிப்பட்ட விசயம் போல என்னை கேட்டு கொண்டு நிக்கிறியள் 🤣… நான் ஒரு நேர்மையான திராவிட கொள்கையை நடைமுறை செய்த ஆட்சி எப்படி இருக்கும் என்ற உங்கள் கேள்விக்கு அண்ணா ஆட்சி போல இருக்கும் என கூறினேன். அவருக்கும் நடிகைக்கும் தொடர்பு என்றீர்கள். அதுக்கும் ஆட்சி செய்யும் விதத்துக்கும் என்ன தொடர்பு? எதுவுமில்லை. இருப்பினும் அவர் பானுமதியை பாலியல் இம்சை செய்ததாயோ, அல்லது நம்ப வைத்து கைவிட்டதாயோ நான் அறியவில்லை. பானுமதி கடைசிவரை அண்ணா மீது அப்படி ஏதும் சொல்லவில்லை. நான் அறிந்த வரை தீராகாதலிலேயே இருந்தார். ஆனால் சீமான் பற்றி விஜி அண்ணி சொல்வது நாம் அறிந்ததே. முடிவாக உண்மையான திராவிட கொள்கை உள்ள ஆட்சி இப்போதைய ஆட்சியா? என்ற உங்கள் கேள்விக்கு பதில் இல்லை. இது கொள்ளையர் ஆட்சி. உண்மையான திராவிட கொள்கை ஆட்சி அப்பாவி ஆட்சி போல இருக்கும் என்பதே என் பதில். இதில் நீங்கள் கனிமொழியை பற்றி என்ன, யாரை பற்றியும், படம், நீலப்படம் எதுவும் போடலாம் - என்னிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமே இல்லை🤣.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
அட்லீஸ்ட் விஜயலக்சுமிக்கு செய்தது போல் அநியாயம் செய்யாமல் தன்னை நம்பி வந்த பெண்ணை கண்ணியத்தோடு நடத்தினார் என நினைக்கிறேன்🤣. பதில் விளக்கம் போதும் என நினைக்கிறேன்🤣 ஐயகோ….இரு மாநில ஆளுனர்….ஆட்டுகுட்டி கதையை கேட்டு…
-
இந்திய குடியுரிமை பெற்று வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் பெண்
மிக்ஸர், ரிவி, வேலை எல்லாம் வாக்குக்கு பணத்தோடு ஒப்பிட முடியாதவை. அவை மேற்கில் நாம் welfare state, safety net, state benefit என பலவாறு விதந்துரைக்கும் ஏழைகள் நலத்திட்டங்களின் ஒரு வடிவமே. எல்லாராலும் காளி முத்து சொத்தை ஆட்டைய போட்டு, வாக்கை பிரிக்க கமிசன் வாங்கி வாழ முடியாது. பலருக்கு அரசின் உதவி தேவை. அவை இலவசங்களோ, வாக்குக்கு இலஞ்சமோ அல்ல. நலத்திடங்கள். யாழ்கள பாசையில் சொன்னால் - சோசல்🤣.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
ஓம். ஒவ்வொரு எலக்சனிலும் சீட் பூஜ்ஜியம், டெபாசிட் காலி என் சொன்னேன். அப்படியே நடந்தது. போன தடவை இதையே சொல்லி 10% என்றேன். 7.9% எடுத்தார்கள். யூன் 4 துரியில் சந்திப்போம். இந்தாங்கோ கையோட ஒரு கணிப்பு சீட்: பூஜ்யம் டெபாசிட்: ஒவ்வொரு தொகுதியிலும் காலி இல்லை அண்ணாவின் ஆட்சிகாலம் போல இருக்கும். ம்ம்ம்….விஜைக்கு அனுதாப வாக்கும் இருக்கு. தமிழிசை அக்கா தேறுவாரா?
-
இந்திய குடியுரிமை பெற்று வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் பெண்
சராசரியாக ஒரு லோக்சபா தொகுதியில் 15 இலட்சம் வாக்குகள். வாக்குக்கு 25,000 கொடுத்தால் 🤣🤣🤣
- IMG_7407.jpeg
-
இந்திய குடியுரிமை பெற்று வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் பெண்
நான் அறிந்த வரை காளியம்மாள் கிட்டதட்ட வெல்லும் நிலையாம்…. பயந்து போன தீம்கா….ஒரு வாக்குக்கு ஒரு கோடி வரை கொடுத்ததாம்🤣 🤣
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
இந்தியாவில் லோக்சபா தேர்தல் கட்டம் கட்டமாக நடப்ப்துதான் வழமை. பெரிய மாநிலங்களில் பிரிப்பார்கள். ஆனால் வெறும் 39 தொகுதிகள் உடைய மத்திய அளவு மாநிலமான தமிழ் நாட்டில் ஒரே நாளில்தான் வைப்பார்கள். கை காட்டலும் தொடரும்🤣
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
பதில் 9 புள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
தனிப்பட்ட செல்வாக்கு? அதே போல் கன்யாகுமரியில் பொன் ராதா வுக்கும் வாய்பிருப்பதாக தெரிகிறது.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
உங்கள் எடிட் ரீசனை பார்த்தேன், சிரித்தேன். வீடியோவ பார்க்காமல் இணைத்தால் இப்படித்தான். நாம் தமிழர் தம்பியின் காணொளியில் தூசணம் இல்லாவிட்டால்தான் அது செய்தி🤣. நீங்களும், பையனும், புலவரும் எழுதியவை 6 கண்களால் அதே தமிழ் நாட்டில், நேரடியாக சேகரிக்கப்பட்டது🤣
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
நீங்கள் மீள மீள பொய்யை சொல்வதால் உண்மை ஆகாது. 1.தேசிய அல்லது குறைந்தது மாநில கட்சி அந்தஸ்து இருந்தால் மட்டுமே நிரந்தர சின்னம். 2. மாநில கட்சி அந்தஸ்துக்கு ஒன்றில் 10% வாக்கு அல்லது 2% வாக்கும் இரு லோக்சபா சீட்டில் வெற்றியும் அடைந்திருக்க வேண்டும். 3. இது இரெண்டும் நாதக வுக்கு இல்லை. 4. மாநில கட்சி அந்தஸ்து இல்லாவிடின் - தேர்தல் அறிவிக்கப்பட்டு யார் முதலில் கோருகிறார்களோ அவர்களுக்கே சின்னம் கொடுக்கப்படும். 5. சீமான் அசட்டையாக தூங்கி கொண்டிருக்க ஏனையோர் (திமுக) தந்திரமாக சுயேட்சை மூலம் அந்த சின்னத்தை கோரி விட்டது. 6. வாசனுக்கு இப்படி யாரும் செய்யவில்லை. 7. திருமாவின் சின்னத்தையும், வைகோவின் சின்னத்தையும் இன்னொரு தக்க காரணம் சொல்லி மடக்கினாலும், திருமா போராடி வென்றார். வைகோ விட்டு விட்டார். 8. சீமானும் சுப்ரீம் கோர்ட் வரை போனார். முடியவில்லை. 9. தேர்தல் ஆணையம் களவு செய்கிறதெனில் சுப்ரீம் கோர்ட்டும் அதை ஆமோதித்ததா? உண்மையில் இதில் ஆணையத்தின் எந்த பாரபட்சமும் இல்லை, சீமானின் சோம்பேறித்தனத்தை பாவித்து திமுக சின்னத்தை சுயேட்சை மூலம் தந்திரமாக முடக்கி விட்டது. இதை பற்றி யாழில் பல்வேறு திரிகளில் பல பக்கம் எழுதியுள்ளேன். தங்களை அப்பக்கங்கள் நோக்கி பணிவுடன் திசை காட்டி அமைகிறேன்.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
யார் து…துரைமுருகன் சொல்வதையா…நோ சான்ஸ்🤣. ஜூன் 4 தெரியும்தானே ஏன் அவசரம். எனது ஒரே கவலை பிஜேபி எவ்வளவு சீட் எடுக்கப்போகிறது என்பது மட்டுமே. பூஜ்ஜியம் என்றால் சந்தோசம். பூஜ்ஜியத்துக்கு மேல் கூடும் ஒவ்வொரு சீட்டுக்கும் ஏற்ப கவலை கூடும். தேர்தல் கட்டம் கட்டமாக தானே நடக்குது? இன்று முழு உபிக்கும் நடக்கவில்லை. நடந்த இடங்களில் 67% மாம். ஆனால் மேற்கு வங்கத்தில் நடந்த இடங்களில் 77 சதவீதமாம். இன்று நடந்த மொத்த தொகுதிகளில் 62% பதிவு. ஆனால் தமிழ் நாட்டு தொகுதிகளில் 72.09% நான் யாழ்கள திமுக ஆதரவாளன் இல்லை. ஆனால் சீமான், பிஜேபியை எதிர்ப்பவன். பழனிச்சாமி எதிர்கட்சி தலைவர், குறைந்ததது 29% வாக்கு வங்கி உள்ள கட்சியின் தலைவர். அவர் எப்படி வாக்கை பிரிப்பவர் ஆவார்? விட்டால் திமுக வும் வாக்கை பிரிக்கும் கட்சி என்பீர்கள் போலுள்ளது. 10% கீழே வாக்கு வங்கி, தனியே ஒரு தொகுதியிலும் வெல்ல வாய்ப்பு இல்லை என தெளிவாக தெரிந்தும், 39 தொகுதியிலும் நிற்பவர்கள்தான் வாக்கை பிரிப்போர்.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
எப்போதும் 100 விழுக்காடு எந்த நாட்டிலும் இல்லை. 80% கூட மிக அரிது. இந்திய தேர்தல்களில் 70+ என்பது அதிகம்தான். 2019 ஒட்டுமொத்த இந்திய அளவு 67% அதுவும் கூட முன்னைய தேர்தல்களை விட அதிகம். இன்றும் கூட தமிழ்நாடு தவிர்ந்த ஏனைய இடங்களில் 62% ஆம்.
-
இந்திய குடியுரிமை பெற்று வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் பெண்
இல்லை - சென்னையில் இருக்கும் பிபிசி தமிழில் புதிதாக கண்டுபிடித்துள்ளார்கள்🤣. 5 வருடம் சட்டபூர்வமாக வாழ்ந்தால் நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
இல்லை 2019 உடன் ஒப்பிடுகையில் 2024 இல் 69%-71% ஆக கூடி உள்ளதாம். சென்னையில் 1980 க்கு பின் அதிக அளவு வாக்குபதிவாம்.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
ஓம். இது மாநிலத்துக்கான anti incumbency factor ஆக இருக்க வாய்ப்புக்குறைவு என்றெ நினைக்கிறேன்.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP?