1. பலான விடயத்தை ஓரளவு மட்டுமட்டாக புரிந்து, அது பற்றிய ஆங்கில சொல்வளம் (vocabulary) அதிகம் இல்லாதபடியால் இவர்கள் அதை செக்ஸ் என்ற ஒரு பதத்தை வைத்து தேடுவதாக இருக்க கூடும். ஏனைய நாடுகள் போர்ன், X, இன்னும் பல பிரத்யோக வார்த்தைகளை பாவிப்பார்கள்.
2. இது ஒட்டு மொத்த மாக தேடிய எண்ணிக்கையா அல்லது சனத்தொகை வீதப்படியா?
3. உண்மையில் கூகிளில் இப்படி தேடும் சமூகங்கள் - வெளியில் பலான விடய வடிகால்கள் அற்ற சமுதாயமாகவே இருக்க கூடும். வெளியில் இதை நிஜ உலகில் தேட முடியாதபடியால், போனில் தேடுகிறார்கள் ?
4. ஒரு விடயத்தை அதற்குரிய தளத்துக்கு நேரடியாக போய் பார்க்காமல் கூகிளில் தேடுவது, அந்த விடயம் சார்பான பரிச்சயமின்மையின் வெளிப்பாடே. உதாரணமாக விடயம் தெரிந்தவர் நேராக யாழ் டொட் கொம் என தட்டுவார். விடயம் தெரியாதவர் இலங்கை செய்தி என கூகிளில் தேடுவார்.
5. இலங்கையில் பாலியல் விடயங்கள் சர்வசாதாரணமாக இருக்கும், கிடைக்கும் மேல்மாகாணத்தை விட, இன்றும் இது ஒரு மூடிய விடயமாக இருக்கும் வட, ஊவா, வடமத்தி பெற்றிருப்பது நான் சொல்வதை ஆமோதிக்கிறது. அதேபோல்தான் சர்வதேசரீதியில் தாய்லாந்தை விட இலங்கை முன்னுக்கு நிற்பதுவும்.