Everything posted by goshan_che
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
20 ரூபாய்க்கு வடையில் எண்ணை ஒத்திய பேப்பரும் கிடைக்காது🤣
-
கோட்டாவின் அதிசொகுசு வாகனம் தொடர்பில் சர்ச்சை!
கணிதத்தில் மட்டும் 🤣
-
கோட்டாவின் அதிசொகுசு வாகனம் தொடர்பில் சர்ச்சை!
எதையும் கணித ரீதியில் சொன்னால் இலகுவாய் புரியும்🤣
-
கோட்டாவின் அதிசொகுசு வாகனம் தொடர்பில் சர்ச்சை!
சிறி அண்ணா 50% சரி. ரணில் தன் மினியை பார்க் பண்ணுவது, உதவியாளராக இருக்கும் ஒரு பையனின் வீட்டு கொல்லை புறத்தில்🤣.
-
கோட்டாவின் அதிசொகுசு வாகனம் தொடர்பில் சர்ச்சை!
இதுக்கே இந்த குதி…குதிக்கிறீங்களே… ரணில் தனது Austin Mini ஐ எங்கே பார்க் பண்ணுவார் என அறிந்தால் என்ன குதி குதிப்பீர்களோ🤣.
-
இலங்கையில் இன்று முதல் புதிய விசா முறை அமுல்
இப்போதும் இதை ஒத்த பிரிவு அட்டவணை 3 இல் அமெரிக்கர்களுக்கு மட்டும் உள்ளது - ஆனால் சாதா சுற்றுலா வீசா, வியாபார மற்றும் ஜனரஞ்சக காரணங்களுக்காக என உள்ளது. 5 வருடம் செல்லும். ஒரு சேர 6 மாதம் நிற்கலாம் வெறும் 100 டொலர் மட்டுமே. SL embassyயில் விசாரித்துப்பாருங்கள். Business and entertainment க்குத்தான் போகிறீர்கள் என எந்த மாதிரியான ஆதாரங்கள் தேவை என. பெரிதாக தேவைப்படாது என நினைக்கிறேன். நாடக குழு, வில்லுப்பாட்டு குழு, இசைக்குழு ஒன்றில் உறுப்பினர் என ஒரு கடிதம் எடுத்து கொடுத்தால் போதுமாய் இருக்கும் என நினைக்கிறேன். (உலக தனி பெரும் வல்லரசல்லவா - தனியுரிமை - என் ஜாய்!) ————— இலங்கையர் ஒருவரை மணந்து கொண்டால் - ஒரு சிக்கலும் இல்லாதா வதிவிட வீசா கிடைக்கும். எல்லா விதத்திலும் செளகரியமாக இருக்கும். எந்த கேள்வியும் இல்லாமல் இலங்கைக்கு போகலாம், திருப்பி வீட்டுக்குள் வருவது அவரவர் சாமர்த்தியம்🤣.
-
இலங்கையில் இன்று முதல் புதிய விசா முறை அமுல்
ஓம்….இலங்கை டுயல் நேஷ்னாலிட்டி எடுத்தால் ஒரே செலவுடன் சமாளிக்கலாம். இல்லாட்டில் இந்த புதிய நடைமுறையின் கீழ் 9 மாதம் நிற்க இரு தடவையும், 6 மாதம் நிற்க ஒரு தரமும் வெளியே போய் வர வேண்டும் (ஒருதரம் சென்னை ரிட்டர்ண் மட்டும் £180).
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
குளிப்பா? கிலோ என்ன விலை எனும் சப்பையள் நாளுக்கு நாலு தரம் குளிக்கும் எம்மை பார்த்து மூக்கை பொத்துகிறார்களா? ஜோக்தான். எனக்கும் இதில் கொஞ்சம் நாட்டம் அதிகம்தான். Paco Rabanne 1Million பாவித்துள்ளீர்களா? எனக்கு பிடிக்கும். முன்னர் Gucci Envy for men பிடிக்கும். ஒரு பத்து வருடம் முன் நிறுத்தி விட்டார்கள். இப்போ வெறும் போத்தல் நல்ல விலை போகிறது. கடைசியாக பாவித்தது ஒரு 10 மில்லியோடு பாதுகாப்பாக வைத்திருக்கிறேன்.
-
இலங்கையில் இன்று முதல் புதிய விசா முறை அமுல்
விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன். ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை. பிகு 50 நாடுகளுக்கு இலவச டூரிஸ்ட் விசா விரைவில் இலங்கை அறிவிக்கும் என ஒரு வதந்தி உலவுகிறது. வாய்ப்பில்லை என நினைக்கிறேன். நடந்தாலும் இந்த 50 இல் மேற்கு நாடுகள் இராது.
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
எனக்கு பெரேரா அண்ட் சன்ஸ் களில் நடந்ததில்லை. ஆனால் புதுக்கடையில் இரு பெண்கள், ஒருவர் மத்திய வயது இன்னொருவர் வயசாளி, சாப்பிட்டு கொண்டிருக்கும் போது வந்து கையை நீட்டுவார்கள். அசெளகரியம்தான் ஆனால் aggressive begging என சொல்லமுடியாது. அதே போல் ரோயல் பேக்கரி அடியிலும் ஒரு ஐயா நிரந்தர டியூட்டி. நிற்க, இது 90,2000,2010 களிலும் இருந்தது. எனது கேள்வி - இப்போ கூடியுள்ளதாக உணர்கிறீர்களா? எத்தனை சதவீதத்தால்? பிகு என்னுடன் இலண்டன் - இலங்கை வந்த நண்பரை இன்று காலை கேட்டேன். 10% அளவில் கூடி உள்ளதாக அவர் நினைக்கிறார். ப் பா….பெரிய ஆள்தான் வாப்போ😀. சும்மா ஊட் போடும் ஷெய்க் கணக்கா கம கமப்பிங்க போல🤣 எத்தனை வருடம் கழித்து போகிறீர்கள் ? யாழ் களத்தில் ஒரு சிட்சுவேஷன் ரிப்போர்ட் போட்டு விடவும்🙏. இனிய பயணமாகட்டும்.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல, சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை. நன்றி🙏
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது. ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
அப்படி இல்லை. இனத்தின், போரின் இழப்பையும், வடைக்கு இரு மடங்கு விலை கொடுப்பதையும் வேறு படுத்தி பார்க்க முடியாவிடின் - பிழை எம்மில்தான்.
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
சதவீதம் தெரியவில்லை. ஆனால் பல தனி சிங்கள மாவட்ட தலை நகர்களிலும் இப்படி கடைகள் இருந்தன. அவர்களுக்கு வெளிநாட்டு பணம் வராது என நினைக்கிறேன். அங்கே ஓடும் கார்கள் எல்லாம் பல மில்லியன் ரூபாய்கள்தானே? கொழும்பில் ஒரு 20 ஆண், பெண் பிரபல பாடசாலைகள் இருக்குமா? கிட்டதட்ட அரைவாசி பிள்ளைகள் பெற்றாரின் காரில்தான் வருவது போல் தெரிகிறது. பள்ளி முடியும் நேரம் அருகில் உள்ள வீதிகள் எங்கும் கார்பார்க் போல இருக்கிறது. யாழ்பாணத்தில் தடக்கி விழுந்தால் இண்டர்நேசனல் ஸ்கூல். மானிப்பாயில் மட்டும் 3 இருப்பதாக சொன்னார்கள். எப்படி ஸ்கூல் பீஸ் கட்டுகிறார்களோ நானறியேன்.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
இங்கே நான் ஏமாற்றை நியாப்படுத்தவில்லை. அதை களவு என்று மிக தெளிவாக கூறியுள்ளேன். ஏழைகள் எல்லாம் களவு செய்து வாழ வேண்டும் எனவும் சொல்லவில்லை. ஆனால் இந்தளவுக்கு ஊதி பெருபிக்க வேண்டிய விடயங்கள் அல்ல. நாம் எல்லாரும் அங்கே இருந்தவர்கள்தான் - அங்கே உள்ள சுத்துமாத்துகள் எல்லாரும் அனுபவித்ததுதான் - பலர் இங்கே வந்தும் அதையே செய்கிறார்கள் - நிலமை இப்படி இருக்க - தாம் ஏதோ யேசு வீட்டின் கடைசிபிள்ளை போல் எழுதுவது - நகைப்புக்குரியது. உண்மைதான் மீரா - நல்லூர் ஆதீனம் அருகில் ஒரு அம்மாவிடம் சிறுவயதில் வாங்கி சாப்பிடுவேன். அன்று முதல் விருப்ப உணவு. கெடுதல் அதிகம் இல்லை. கொண்டு வந்ததை 3 கிழமையில் அரைத்து முடித்தாயிற்று. இங்கே இலக்கியா அவனில் வறுப்பது, கடிக்க மா போல் வரும். ஊரில் வறுத்தது பதமாக கடிபடும். கடலை போல் இருக்கும்.
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
அண்ணை கொஞ்சம் யோசிக்கவும் 1000 க்கு பதிலாக, 1800 க்கு வித்தது சப்பை மேட்டர்தானே? ஆனால் இது நீதிமன்று போவது - பிரச்சாரம். பார்தீர்களா நாம் எப்படி சட் சட் என கள்ளனை பிடித்து, நடவடிக்கை எடுத்தோம்? அதிதிகளை காத்தோம்! இவர்களைதான் நாம் மோடயர் என்கிறோம்.
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
இல்லை. ஆனால் ஒரு கொடிய யுத்தம், இனவொதுக்கல் நடக்கிறது என தெரிந்தும், தெற்கு கரை பாதுகாப்பானது, மலிவானது என்பாதால், இதை எல்லாம் சட்டை செய்யாமல் வந்து போனார்கள். ஆகவே 2 வருடமாய் ஊசிப்போன பெருமாள்/தமிழ்வின் சுட்ட வடை இவர்கள் மனதில் அதிக பாதிப்பை தராது. வரும்போது கொஞ்சம் அதிக கவனம் எடுப்பார்கள்.
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
நன்றி அண்ணை. எனது அறிவும் அப்படியே. களுத்தறை கடை ஒரு சைவக்கடையாம். எதுக்கும் கொஞ்சம் அடக்கி வாசிப்பம்🤣.
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
அது திருடன் கையில் திறப்பை கொடுத்த கதை. காணாமல் போகாவிட்டால்தான் ஆச்சரியம். அதிகாரவர்கம் திருடர்களே என்பதில் மாற்று கருத்தில்லை. இது மிகையல்ல. எந்தந்தை எனக்கு கற்றுத்தந்த முதல் பாடம் - being frugal. கடைசி வரை மாறாது.
-
இலங்கையில் இன்று முதல் புதிய விசா முறை அமுல்
ஓம் மீரா கணக்கில் பிழை விட்டுள்ளேன். விசிட் வீசாவை தவிர மீதி எல்லாம் கொஞ்சம் ஓவராய்தான் தெரியுது.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
மன்னிக்கவும்….ஆமா லொல் என்பது எந்த சங்க இலக்கிய கையாடல்?🤣
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
இணைப்பு முதல் பதிவில் போட்டுள்ளீர்கள். என் கேள்வி அதுவல்ல. இந்த பழைய செய்தியை, அண்மைய செய்தி என ஏன் தமிழ்வின்னும் நீங்களும் பரப்புகிறீர்கள்?
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
எக்ஸ் கியூஸ் மீ…. வாட் இஸ் த பிரோசீஜர் டு சேஞ் ரூம்ஸ்🤣