Jump to content

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    15603
  • Joined

  • Last visited

  • Days Won

    175

Everything posted by goshan_che

  1. பிரான்சில் இருப்பவர்கள் விசுகு அண்ணா போல, தரவுகளை, அரசின் அறிவிறுத்தலை பார்த்து, சுயமாக முடிவெடுத்து ஆபத்தை தவிர்ப்பவர்கள். அமெரிக்காவில் —— RT, Fox நியூசை, டிரம்பை, சதி கோட்பாடுகளை நம்பும் சில யாழ்கள உறவுகளை போன்றவர்கள். ஊசி வரமுன்னரும், வந்த பின்னும் சாகிறேன் பார் என கொவிட்டோடு பந்தயம் கட்டியவர்கள் அமெரிக்காவில் அதிகம் 🤣. அந்த தண்ணியில் ஏதோ பிழை என நினைக்கிறேன். 50,000 ஐ மறைத்து போட்டார்கள். 500 பற்றி செய்தி வந்ததே - ஆகவே 50,000 ஐயும் மறைக்கவில்லை.
  2. மாவை, சும்மை நம்பி போனமுறை எம் பி சீட்டை இழந்ததுதான் மிச்சம். அதை தொடர்ந்து கட்சியிலும் ஓரம் கட்ட பார்த்தார்கள் - சுதாரித்து கொண்டார். அடுத்த முறையும் எம்பி ஆக வில்லை என்றால், அவரினதும் மகனினதும் அரசியல் வாழ்க்கை அவ்வளவுதான். தமிழரசு கட்சியை சம்+சும் பிடியில் இருந்து மீட்பது தமிழர்களை விட மாவைக்கு அத்தியாவசியமானது.
  3. யார் யாழை வாசிக்கிறார்களோ இல்லையோ, சீமான் அல்லது அவருக்கு சொல்லும் நிலையில் இருப்பவர்கள் வாசிக்கிறார்கள்😀. நல்ல மாற்றம்….மிக தாமதமான மாற்றமா? தெரியவில்லை (விஜை இறங்கும் காலம் நெருங்கி விட்டது என நினைக்கிறேன் - அவர் இறங்கும் போதே இந்த அரசியல் நிலைப்பாட்டில்தான் இறங்குவார் என நினைக்கிறேன்).
  4. இவர்கள் இருவரையும் போல இன்னும் இருவர் தான் கஜன் & கஜன். இந்த நால்வரையும் ஓரம் கட்டி, ஏனைய தலைவர்கள், கட்சிகள் எல்லாம் சீவி யின் கீழ் ஒன்றிணைந்தால் - இவர்களை ஆக கூடியது 2/3 எம்பி சீட்டோடு முடக்கலாம்.
  5. பகிர்வுக்கு நன்றி ஏராளன். இப்போதும் ரஸ்ய, உக்ரேனிய பழமைவாத சர்சுகள் (orthodox church) ஜூலியன் காலண்டரைதான் பின்பற்றுகிறார்கள். அவர்களின் கிறிஸ்மஸ் ஜனவரி மாதத்தில் வரும். அதேபோல் ஆரம்ப ரோமானிய கலண்டரில் 10 மாதங்கள்தான். 8வது மாதம் அக்டோபர் (octo-8), பத்தாவது மாதம் டிசெம்பர் என கேள்விப்பட்டுள்ளேன். பின்னர் ஜூலியஸ் சீசர், அகஸ்டொஸ் சீசர் நினைவாக ஜூலையும், ஆகஸ்டும் சேர்க்கப்பட்டதாம்.
  6. தெய்வமே…நீங்க எங்கயே போய்டீங்க தெய்வமே.. உண்மையிலேயே மிக நுணுக்கமாக ஆராய்ந்துள்ளீர்கள் 👏🏾.
  7. பிரான்சை விடுங்கள். ஈரானில் நீங்கள் யாருக்கு ஆதரவு. முல்லாக்களுக்கா? இல்லை மாற்றம் கேட்டு போராடுபவர்களுக்கா?
  8. 1. தாமும் வல்லரசு என காட்ட, வினைதிறன் குறைந்த வக்சீன்களை மட்டும் நம்பி, ஏனைய நாட்டின் வக்சீன்களை புறம் தள்ளியது தவறு. 2. ஒரு அளவுக்கு மேல் உலக நாடுகள் எல்லாம் வக்சீன்+ படிப்படியாக வெளி வரல், கூட்டு நோயெதிர்ப்பை வளர்த்தல் என்ற நடைமுறையை கைக்கொள்ள, சீனா மட்டும் சீரோ-கொவிட் என்ற அணுகுமுறையை எடுத்தது தவறு. 3. மக்களை நகரம் நகரமாக மந்தைகள் போல், அடைத்து வைத்து - உலக கால்பந்து போட்டியில் மக்கள் மாஸ்க் இல்லாமல் வழமையாக திரள்வதை கூட சென்சார் பண்ணி காட்டி மக்களை மடையர் ஆக்கியது தவறு. 4. வருட கணக்கில் லொல்டவுண்ட் என்ற முடக்கத்தை எந்த மக்கள் கூட்டமும் சகிக்காது. அதை செய்தது தவறு. 5. மக்கள் புரட்சி வெடித்த பின் பயத்தில் ஒரேயடியாக எல்லா கட்டுப்பாட்டையும் உடனடியாக தளர்தியதும் தவறு. இப்படி தவறுகள் முழுவதும் சீன அரசில்தான். இல்லை ஒன்று அநியாயமான இனவாதத்தை எதிர்த்த மக்கள் போராட்டம். மற்றையது அநியாயமான பொது முடக்கத்தை எதிர்த்த மக்கள் போராட்டம். ஒப்பீடு சரிதான்.
  9. இலங்கையில் உள்ள தமிழ் கட்சிகள் எல்லாம் ஒன்றாகி, ஒரு தீர்வு திட்டத்தை முன்வைத்த மறுகணமே மேலே சொன்னதும் நடக்கும்.
  10. சீனாவில் நல்லாட்சி அல்லவா நடக்கிறது? பாலும், தேனும், பட்டரும், ஜாமும் அல்லவா ஓடுகிறது. நாம் எல்லாம் 1.5 வருடம் முதல் வெளியே வந்த கொரோனா அடைப்புக்குள் ஏன் போன மாதம் வரை சீன மக்களை வைத்திருந்தது அரசு? மக்கள் ஏன் போராடுகிறார்கள்? இலங்கை அரசின் தமிழ் சனம் மீதான அடக்குமுறையை இப்படித்தான் நியாயப்படுத்துவார்கள் - பல இனவாதிகள்.
  11. இந்த நிகழ்வுகள் எதிர் விளைவை (counter productive) தரக்கூடியன. தேவையற்ற வன்முறை. ஆனால் முன்னர் குடியேறிகள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய ஒருவரை பெயிலில் விட்டு, அவர் கோல்ட் துப்பாக்கி, பெருமளவு ரவைகள் சேர்த்து, குடியேறிகள் பகுதிக்கு வந்து மூவரை சுடும் வரை வாளாவிருந்த பிரெஞ் போலீஸ் மீதான மக்களின் கோபம் நியாமானதே.
  12. @குமாரசாமிஅண்ணை Karma is a b#%^ch 🤣 ”ப்” இட்டு வாழ்வாரே வாழ்வார்.
  13. அப்படி மசோதா கொண்டு வந்து நிறைவேறிய வரவு செலவு திட்டத்தை மாற்ற முடியாது என்றே நினைக்கிறேன். காங்கிரஸ் குழுக்கள் செலவை மேற்பார்வை செய்யும் ஆனால் மாற்றாது. பண வீக்கம் எல்லா நாட்டுக்கும்தான் ஆனால் 2023 இல் குறையும் என நினைக்கிறேன்.
  14. உண்மையில் நான் இந்த கெட்டிகாரன், முட்டாள் கேள்விகளில், பரிட்சைகளில் அதிகம் மினக்கெடுவதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிறப்பு தேர்ச்சி இருக்கும். அதே போல் ஒவ்வொரு தனி திறமையும். இந்த வீடியோவில் பிழையாக கணித்த பட்டதாரிகளில் ஒருவர் - மிக திறமையான சட்ட வல்லுனராக இருக்க கூடும். அவரால் எந்த கஸ்டமான தீர்ப்பையும் 5 நிமிடத்தில் வாசித்து விளங்க கூடியதாய் இருக்கும். அதேபோல் இதை சரியாக கணித்த ஒருவர் அதே தீர்ப்பின் முதல் பக்கத்தை படித்து முடிக்க ஒரு நாளை எடுக்க கூடும். அதே போல் ஒரு கணக்கை கொடுத்தால் சட்ட வல்லுனர் மூர்ச்சையாகி விழக்கூடும். சின்ன வயதில் கொக்குக்கு தட்டையான தட்டிலும், நரிக்கு ஒடுங்கிய குவளையிலும் சூப் கொடுத்த கதை படித்தோம் அல்லவா? அது போலத்தான் “கெட்டித்தனம்” மும்.
  15. இப்போதுதான் இந்த வீடியோவை பார்க்க நேரம் கிடைத்தது. இதில் நான் கொரில்லா வந்து போனதையும், ஒருவர் விலகியதையும் கவனித்தேன் ஆனால் திரைசீலை நிறத்தை கவனிக்கவில்லை. ஆனால் என்னால் ஒரு போதும் வெள்ளை சேட் போட்டோர் எத்தனை தரம் பந்தை கைமாற்றினர் என சொல்ல முடியாது. கொரில்லா வர முன்னமும், பின்னும். ஏன் ….ஏனென்றால் இந்த வீடியோ எனது கிரகிக்கும் , அவதானிக்கும் திறனை விட வேகமாக போகிறது. இதை சிலோமோசனில் பார்த்தால் மட்டுமே எனக்கு எண்ணிக்கை கணக்கிட முடியும். இப்போ நான் கெட்டிகாரனா? முட்டாளா?🤣
  16. அமெரிக்காவின் 2023 ம் ஆண்டுக்கான 1.66 டிரிலியன் வரவுசெலவு திட்டம் செனேட், காங்கிரஸ் இரு சபைகளிலும் நிறைவேறியுள்ளது. இதில் உக்ரேனிற்கான யுத்த நிதி உதவியாக 45 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்பு செலவீனம் கடந்த வருடத்தின் 740 பில்லியனில் இருந்து, 858 பில்லியனாக உயர்ந்துள்ளது. இரு சபைகளிலும் இந்த திட்டமானது சகல ஜனநாயக கட்சி உறுப்பினர்கள், மற்றும் சில குடியரசு கட்சி உறுப்பினர் ஆதரவோடு நிறைவேறியுள்ளது. https://www.reuters.com/world/us/us-house-vote-166-trillion-funding-bill-shutdown-deadline-nears-2022-12-23/ டிஸ்கி @ஈழப்பிரியன்அண்ணா நீங்கள் @Justinஅண்ணாவிடம் வேறு ஒரு திரியில் வினவியதற்கான பதில் கிடைதுள்ளது என நினைக்கிறேன். 2023 டிசம்பர் வரையாவது அமெரிக்காவின் உக்ரேன் உதவி தொடரும்.
  17. தாக்குதலை நடத்தியவர் நீங்கள் ஆதரிக்கும் AfD போன்ற கட்சிகளின் நிலைப்பாட்டில் உள்ள பிரென்ஞ் வெள்ளை தோலர். முன்பும் குடியேறிகள் மீது தாக்கி சிறை போய் வந்து சில நாளில் இதை செய்துள்ளார். அப்படி ஒன்று இப்போதைக்கு இல்லை. ஆனால் இருக்கும் நாடுகளை நாம் இன வாத சகதியில் விழாமல் தடுத்து எம்மை நாமே தற்காத்து கொள்ளலாம். ஆனால் நாம் இப்படியான கட்சிகளையும், கொள்கைகளையும், பிரெக்சிற் போன்றவற்றையும் ஆதரிக்கும் “ ஆசிய குருவிகள்” ஆக அல்லவா இருக்க தலைப்படுகிறோம்.
  18. இந்த perception blindness உண்மைதான். நான் உங்கள கருத்தை வாசிக்கவில்லை. நீங்களும் என் டைம்லைனை வாசிக்கவில்லை. ஒரே காரணம்தான் - இருவருமே சொல்வதையே திரும்பி, திரும்பி சொல்வதால்.
  19. இலங்கையில் கலந்து போடப்பட்டது. இப்படி போடுவது ஒரு வகையையே போடுவதை காட்டிலும் வினைதிறனானது எனும் ஒரு கருதுகோள் உண்டு. அடுத்து இலங்கையில் சனதொகை குறைவு, வெளிதொடர்பு இல்லை என்பதால் விரைவாக நிரம்பல் நிலை (ஹெர்ட் இம்முனிட்டி) அடைந்திருக்கலாம்.
  20. இன்னும் இல்லை. ரதி அக்கா மனசு வைத்தால் சாத்தியமே🤣 இந்த திரியை இப்பதான் பாக்கிறன். கொஞ்சம் அசந்தா எல்லாத்தையிம் மாத்தி போடுவியள் போல🤣 அந்தபுரத்தில் அலுப்புதாங்காது போனால் யாழுக்கு வந்து @குமாரசாமிஅண்ணையிடம் உறண்டை இழுப்பேன்🤣 அதுக்காக ஆள் வைத்தா செய்யமுடியும்? நாங்கள்தான் நம்ம வேலைய செய்யவேணும்🤣
  21. மாண்புமிகு கிம் எதை செய்தாலும் அது சரியாகத்தான் இருக்கும். எமகு தலைவரின் சகபாடி, மாண்புமிகு புட்டின் அவர்கள் சகல வள நிறை ரஸ்ய நல் நாட்டில், பின்பக்கத்தால் சிரிக்கவும் தடை விதித்துள்ளார் என்பதை கவனத்தில் எடுக்கவும்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.