Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. இங்கே நான் ஏமாற்றை நியாப்படுத்தவில்லை. அதை களவு என்று மிக தெளிவாக கூறியுள்ளேன். ஏழைகள் எல்லாம் களவு செய்து வாழ வேண்டும் எனவும் சொல்லவில்லை. ஆனால் இந்தளவுக்கு ஊதி பெருபிக்க வேண்டிய விடயங்கள் அல்ல. நாம் எல்லாரும் அங்கே இருந்தவர்கள்தான் - அங்கே உள்ள சுத்துமாத்துகள் எல்லாரும் அனுபவித்ததுதான் - பலர் இங்கே வந்தும் அதையே செய்கிறார்கள் - நிலமை இப்படி இருக்க - தாம் ஏதோ யேசு வீட்டின் கடைசிபிள்ளை போல் எழுதுவது - நகைப்புக்குரியது. உண்மைதான் மீரா - நல்லூர் ஆதீனம் அருகில் ஒரு அம்மாவிடம் சிறுவயதில் வாங்கி சாப்பிடுவேன். அன்று முதல் விருப்ப உணவு. கெடுதல் அதிகம் இல்லை. கொண்டு வந்ததை 3 கிழமையில் அரைத்து முடித்தாயிற்று. இங்கே இலக்கியா அவனில் வறுப்பது, கடிக்க மா போல் வரும். ஊரில் வறுத்தது பதமாக கடிபடும். கடலை போல் இருக்கும்.
  2. அண்ணை கொஞ்சம் யோசிக்கவும் 1000 க்கு பதிலாக, 1800 க்கு வித்தது சப்பை மேட்டர்தானே? ஆனால் இது நீதிமன்று போவது - பிரச்சாரம். பார்தீர்களா நாம் எப்படி சட் சட் என கள்ளனை பிடித்து, நடவடிக்கை எடுத்தோம்? அதிதிகளை காத்தோம்! இவர்களைதான் நாம் மோடயர் என்கிறோம்.
  3. இல்லை. ஆனால் ஒரு கொடிய யுத்தம், இனவொதுக்கல் நடக்கிறது என தெரிந்தும், தெற்கு கரை பாதுகாப்பானது, மலிவானது என்பாதால், இதை எல்லாம் சட்டை செய்யாமல் வந்து போனார்கள். ஆகவே 2 வருடமாய் ஊசிப்போன பெருமாள்/தமிழ்வின் சுட்ட வடை இவர்கள் மனதில் அதிக பாதிப்பை தராது. வரும்போது கொஞ்சம் அதிக கவனம் எடுப்பார்கள்.
  4. நன்றி அண்ணை. எனது அறிவும் அப்படியே. களுத்தறை கடை ஒரு சைவக்கடையாம். எதுக்கும் கொஞ்சம் அடக்கி வாசிப்பம்🤣.
  5. அது திருடன் கையில் திறப்பை கொடுத்த கதை. காணாமல் போகாவிட்டால்தான் ஆச்சரியம். அதிகாரவர்கம் திருடர்களே என்பதில் மாற்று கருத்தில்லை. இது மிகையல்ல. எந்தந்தை எனக்கு கற்றுத்தந்த முதல் பாடம் - being frugal. கடைசி வரை மாறாது.
  6. ஓம் மீரா கணக்கில் பிழை விட்டுள்ளேன். விசிட் வீசாவை தவிர மீதி எல்லாம் கொஞ்சம் ஓவராய்தான் தெரியுது.
  7. மன்னிக்கவும்….ஆமா லொல் என்பது எந்த சங்க இலக்கிய கையாடல்?🤣
  8. இணைப்பு முதல் பதிவில் போட்டுள்ளீர்கள். என் கேள்வி அதுவல்ல. இந்த பழைய செய்தியை, அண்மைய செய்தி என ஏன் தமிழ்வின்னும் நீங்களும் பரப்புகிறீர்கள்?
  9. எக்ஸ் கியூஸ் மீ…. வாட் இஸ் த பிரோசீஜர் டு சேஞ் ரூம்ஸ்🤣
  10. தினக்குரல் குழப்புகிறது. பிரதமர் மீதல்ல அவர் கட்சி பாஉக்கள் இருவர் மீதே 2003 ஆரம்பத்தில் ஊழல் புகார் வைக்கப்பட்டது. 2003 இறுதியில் ஏலவே முடிவு செய்த பதவிக்கால நிர்ணய நிரல்படி, அடுத்த தேர்தலுக்கு புதிய தலைமையை கொடுக்கும் வண்ணம், 2024 இல் தான் பதவி விலகுவதாக பிரதமர் அறிவித்தார். வேணும் எண்டால், இதை தன் கட்சியினரின் மீதான குற்றச்சாட்டுக்கான தார்மீக பொறுபேற்றல் என கொள்ளலாம்.
  11. இது வெறும் சந்தேகமே….தனியே இது மட்டும் அல்ல….மேலும் சில சந்தர்ப சாட்சியங்களும், circumstantial evidence இருக்கிறது….இது நீண்ட நாளாக அவதானித்து வந்த ஒரு விடயம்தான். ஆனால் குற்றசாட்டு இல்லை. சந்தேகம் மட்டுமே. பார்ப்போம்….பெருமாள் என்ன சொல்கிறார் என.
  12. இந்த செய்தியில் ஆரம்பம் முதலே என்னை யோசிக்க வைத்த விடயம் இது. அந்த வீடியோ வாட்சப்பில் உள்ளது. தோற்றத்தை பார்த்தால் சைவக் கடைதான் சந்தேகமே இல்லை. பரிமாறும் பெண்ணை பார்த்தால் சிங்களவராக தெரிகிறது. ஒரு ஆளும், உரிமையாளரும் சேர்ந்து ஏமாற்றுகிறனர். இருவரை பார்த்து இனம் அறிய கடினமாக இருக்கிறது. ஆனால் ஏமாற்று ஆள் தன்னை பெளத்தர் என்கிறார். ஆனால் சைவக்கடை சிங்களவர் நடத்தி நான் கேள்விபட்டதில்லை. வேறு யாரும் கேள்விபட்டதுண்டா? @நிழலி @விசுகு @colomban பெருமாள் பிள்ளையார் பிடித்தால், அது குரங்காகியே தீரும் என்பது விதி. இங்கேயும் கள்ளர்கள் இருவரும் அல்லது ஒருவராவது தமிழர் என முடியப்போது போல இருக்கே ? அப்புறம்…. # அசிங்கப்பட்டான் ஆட்டோகாரன் என்றாகிவிடும்.
  13. பதிலுக்கு நன்றி. இது பழைய மேட்டரா? சிறிதரன் எம்பி ட மச்சாண்ட தானே பதிவு? அவர்ட பொட்டுகேட்ட மறைக்க பழைய செய்தியை எல்லாம் மீள் சுழற்சி செய்யினம் போல? ———— என்ன @பெருமாள் நித்திரைபாயால எழும்பி “இலங்கை பற்றிய மோசமான செய்திகள்” என கூகிள் பண்ணி, அவற்றை இங்கே வெட்டி ஒட்டி போட்டுத்தான் - பல்லு தீட்டுறனியள் தெரியும். ஆனால் இப்படி அதர பழைய நியூசையுமா, ரிசைக்கிள் பண்ணுவீங்க? (நீங்கள் சுமந்திரனை எதிர்ப்பது, சிறிததரனுக்கு ஆதரவாகவா? சந்தேகம் மட்டுமே.).
  14. விசிட் வீசா கட்டணம் $50 இல் இருந்து - 75 ஆகியுள்ளது. ஆனால் முன்னர் 1 மாதம். இப்போ 3 மாதம், 60 நாளைக்கு ஒரு தரம் வெளியே போய் வர வேண்டும்.
  15. புலிமுக சிலந்தியோ? யாழில் ஆளை கொல்லும் அளவு விசமுள்ள பூச்சிகள் உண்டா?
  16. அஞ்சலிகள். மிக வித்தியாசமான, மானிட நேயம் காட்டிய அரசியல்வாதி. ————— இது தான் உயிருடன் இருக்கும் போதே இவர் தனக்கென கட்டிய கல்லறை. மொழிபெயர்காமைக்கு வருந்துகிறேன். நிலையாமையை பொட்டில் அடித்த மாதிரி சொல்கிறார்.
  17. முடிந்தளவு யாழில் இம்முறை எடுத்து வரும் தின்பண்டங்களை உற்பத்தியாளர்களிடமே வாங்கினேன். வெளிநாட்டுக்கு, எனக்கு என சொல்லியே வாங்கினேன். ஒருவர் கூட ஏய்க்கவில்லை. அதுவும் அந்த எள்ளுபாகு வித்த அம்மா, “சாப்பிட்டு பாருங்கோ, சாப்பிட்டு பாருங்கோ” என எனக்கும் ஆட்டோ ஓட்டியவருக்கும் சேர்த்து ஒரு பக்கெட்டையே இனாமாக தந்து விட்டார். நான் வங்கியதோ வெறும் 10 பக்கெட். இதில் இவர் இனி எங்கே இலாபம் பார்பது?(11க்கு விலை கொடுத்தேன்). போர் பலதை பறித்து கொண்டாலும் என் மக்களின் என் மக்களின் தன்மானத்தை, நாணயத்தை பறிக்கவில்லை என்பதுதான் உண்மை. எல்லா சமூகத்திலும் கறுபாடுகள் உண்டே. நாம் மட்டும் விதிவிலக்கா என்ன. இதை இங்கே தூக்கி பிடிக்கும் புலம்பெயர் சமூகம் மட்டும் என்ன திறமா? இலண்டன் கடைகளில் விலை அடிக்காமல், நான் போனால் ஒரு விலையும், என் இளவயது மகன் போனால் கூடிய விலையும் பல தரம் அடித்துள்ளார்கள். எனது திரியில் கூட பதிந்தேன், எப்படி 80ரூபாய்க்கு ஊரில் மஞ்சள் கடலை வாங்கி அதை இங்கே 500 ரூபாய்க்கு விற்கிறார்கள் என.
  18. ————-————— ————— போதை சுற்றுலா வரும் புலம்பெயர் தமிழரிடம், யாழில் யாசகர் காசு வாங்கி கஞ்சா அடிக்கிறார்கள் என்பது எந்தளவு தூரம் உண்மை என தெரியவில்லை. நீங்கள் இங்கே இருந்து அனுப்பும் பணம் அங்கே உங்கள் இளவயது உறவினர்களால் தப்பாக பயன்படுத்தபடக்கூடும். கஞ்சா பாவனை மாணவர், பல்கலை, வேலை செய்யும் இள வயதினர் மத்தியில்தான் அதிகம் என கேள்விப்பட்டேன். யாசகம் கேட்பவர்கள் மிக பெரும்பாலோனோர் 40+ தனி ஆண்/பெண்கள். நம்மிடம் யாசகம் கேட்பதால் அவர்களை சகட்டு மேனிக்கு கஞ்சா கேசில் பிடித்து போட கூடாது. அதே போல் யாழ் மக்களும், ஏனைய இலங்கை வாசிகளும் அறுதி பெரும்பான்மையானோர் நாணயமானோரே. திரி எல்லாரும் கொள்ளைகாரர் என்ற ரீதியில் போக தலைபடுவதாக தெரிகிறது.
  19. நக்கலாக இல்லை….தகவலுக்காகவே கேட்கிறேன். நீங்கள் கடைசியாக ஊர் போனது எப்போ? நீங்கள் விபரிக்கும் உதாரணம் தமிழ்நாட்டுக்கு 100% சரி. ஆனால் சென்னைக்கும், யாழுக்கும்கொ/ழும்புக்கும் பாரிய வேறுபாடு உண்டு. இந்த வேறுபாடு இன்றும் உள்ளது.
  20. அண்மையில் என் நண்பர் ஒருவர் எனக்கு ஒரு 1900 ஆண்டு பதிப்பித்த தமிழ் புத்தகம் ஒன்றின் சில பக்கங்களை அனுப்பி - இந்த புத்தகம் எதை பற்றியது என கேட்டிருந்தார். நான் சும்மா தமிழ் இலக்கியம் அது, இது என உடான்ஸ் விட்டு திரிவதால் - என்னை விசயகாரர் என தப்பு கணக்கு போட்டுள்ளார் என்பது புரிந்தாலும், மானத்தை விட்டு கொடுக்க முடியாதல்லவா? சரி அப்படி என்னதான் இருக்கு என பார்ப்போம் என முயற்சித்தேன். எழுத்து சீர்திருத்தம் வர முந்திய பதிப்பு. அது பெரிய பாதிப்பாக இருக்கவில்லை. ஆனால் சொன்னால் நம்ப மாட்டீர்கள்…. 6 பக்கம்…. 95% எமக்கு தெரிந்த தமிழ் எழுத்துருக்கள்தான். ஒவ்வொரு வார்த்தையாக வாசிக்கும் போது ஏதோ ஒரு அர்த்தம் விளங்கினாலும்…. ஒரு வசனமாக சேர்த்து வாசித்தால் ஒரு அறுப்பும் விளங்கவில்லை. பந்தி? சான்சே இல்லை… பக்கம்? ஒவ்வொரு பக்கத்தையும் வாசித்து முடிக்க மூளை மூக்கால் வடியாத குறை. இதற்கு மேல் வாசித்து அர்த்தம் காண விளைந்தால் - மூளைகாய்ச்சல் நிச்சயம் என தோன்ற - என் தோல்வியை ஒப்பு கொண்டு நண்பரிடம் சரண்டர் ஆகி விட்டேன். # deja vu
  21. 13ம் பக்கத்துக்கு இழுத்து வந்தமைக்கு நன்றி🤣. இந்தளவு வெள்ளையா என்ர கால் வந்தால்- ஆள் அப்பீட் எண்டு அர்த்தம்🤣
  22. காரா? ஹெலிகொப்டர் அண்ணை. ஹெலிகொப்டர்🤣. உண்மையில் இப்படி யாரும் என் கையை பிடித்து கடைகளில் கெஞ்சவில்லை. அதுவும் யாழில் - பஸ் நிலையத்தில் யாசகர்கள் கொஞ்சம் அலுப்புத்தந்தார்கள். யாழ்பாண கடைகாரர்கள் - window shopping செய்பவர்களையே விரட்டுவார்கள். அவ்வளவு இறுக்கமானவர்கள். தமது கடையில் நிற்கும் கஸ்டமரை இப்படி அலுப்பு கொடுக்க விடுவார்களா? சில சமயம் முதிர்ந்த வெளிநாட்டு மனிதர் என்பதால் எல்லாரும் சேர்ந்து பாஞ்ச் ஐயாவை மொய்த்தார்களோ என்னமோ? அதே போல் நான் இந்த அனுபவத்தை பெறாமைக்கும் வேறு காரணங்கள் இருக்கலாம். அதில் முக்கியமானது வேட்டி கட்டுவது என நினைக்கிறேன். என் அன்பையும் சொல்லவும். மணந்துதான்….. Oil of Olay, Gucci, Tom Ford, DKNY, Versace, Armani, CK, Tommy…… வெளிநாட்டு வாசம் என்று ஒரு விசயம் நிச்சயம் உள்ளது.
  23. ரைட்டு, சாத்ஸ் கொச்சிக்காயை கடித்தே விட்டார்🤣. பிகு 1. ஒரு மனிதன் ஒரு நாட்டுக்கு போய் தன் பார்வையில் எழுதிய ஒரு பயணகட்டுரைக்கு (அதில் சொல்லப்பட்டவை கொஸ்பெல் உண்மைகள் என நான் சொல்லவில்லை, நான் கண்டதன் அடிப்படையில் என் கருத்துக்கள் மட்டுமே) - ஒரு மாதமாக சம்பந்தமே இல்லாத பல திரிகளில் குய்யோ….முறையோ என கதறி திரியும், உங்களையும் உங்கள் சகாக்களை நினைக்க பரிதாபமாகவே உள்ளது. 2. சேவல் கூவாமல் விட்டாலும் பொழுது விடியும். நீங்கள் யாழில் எப்படி கதறினாலும் இலங்கையில் வாழ்க்கை ஓடிக்கொண்டுதான் இருக்கும் - நான் கண்டு வந்து எழுதியது - இப்போ இலங்கையில் உள்ள நிலைமை என நான் காண்பதை. யாழில் எழுதும் பல இலங்கை வாசிகள் உளர். எவரும் நான் சொன்னதை மறுக்கவில்லை. நான் எழுதுவது பிழை என்றால் என்னை திருத்துங்கள் என நானே சொன்ன பின்னும். சிலர் வரவேற்று கருத்திட்டுள்ளனர். எதிர்மறையாக எழுதியோர் பலர் 20+ வருடங்களா இலங்கை போகாதோர். @MEERA @nedukkalapoovan சில கேள்விகளை எழுப்பினர் பதில் கூறினேன். அவர்கள் நிலை இலங்கையில் அப்படி ஒரு முன்னேற்றமும் இல்லை என்பதாக படுகிறது. இருக்கட்டும். என்னது போலவே அவர்கள் அனுபவத்தையும் மறுக்கும் தகுதி எனக்கில்லையே. 3. இலங்கை “சொர்க்காபுரி” என எங்கும் நான் எழுதவில்லை. இலங்கை சொர்க்கம் எண்டால் நான் ஏன் இந்த குளிருக்குள் கிடந்து மாரடிக்கப்போகிறேன். “நிலமை எதிர்பார்த்தளவு மோசமில்லை” என்பதற்கும் “நாடு சொர்க்கம்” என்பதற்கும் உள்ள வேறுபாடு புரியாத அளவுக்கு மூளை சிலருக்கு சக்கு பிடித்திருப்பது வருத்தமளிக்கிறது. பிகு:பிகு: மேலே “சொர்கம்யா” என எழுதியது நையாண்டி. கூடவே எலி பிடிக்க சீஸ் தூவது போல், இப்படி எழுதினால் யாருக்கு அதிகம் பத்தும் என ஒரு பரிசோதனையும். காங்கிராட்ஸ் - போட்டியின் வெற்றியாளர் நீங்கள்தான்.
  24. தமிழர் உரிமை பெற்றால் ரத்த ஆறு ஓடும் என்பதை நான் எங்கே மறுத்தேன்? நான் சொல்லாத ஒன்றை சொல்லி ஏன் பூசணிக்காயை என் தலையில் கட்டுகிறீர்கள்?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.