Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. ஜனாதிபதி சிங்களத்தில் பேசியதை இடை மறித்து நான் மொழிபெயர்கட்டுமா என கேட்டுவிட்டு, சிங்களத்தை சிங்களத்தில் மொழிபெயர்த்த அதிகாரி 🤣🤣🤣
  2. ஓ…உங்கள் வயதை வைத்து நீங்கள் இலங்கையில் வேலை செய்திருக்க கூடும் என நினைத்தேன். நானும் இலங்கையில் வேலை செய்யவில்லை, ஆனால் பெற்றாரின் விடயங்களை கையாளும் போது இது பற்றிய தகவல்களை அறிய முடிந்தது.
  3. மேலே உள்ள திரியில் இலங்கையில் உள்ள பென்சன் பற்றிய சில தரவுகள் உள்ளன. இலங்கை ஒன்றும் G7 நாடு அல்ல. ஆனால் அங்கும் வேலையில் இருப்போருக்கு EPF இருக்கிறது. இலங்கையில் வேலை செய்த உங்களுக்கும் அநேகமாக இது இருக்கும். இந்த EPF சேமலாபம் ஓய்வுதியத்தின் போது ஒரு lump sum ஆக கொடுக்கப்படும். அதை வங்கியில் இட்டு, அதில் வரும் வட்டி, கீழ் வரம்புக்கு மேலே போவோருக்கு வரி என்பது எனக்கு நியாயமாகவே படுகிறது. இதை விட அரச ஊழியருக்கு மாதாந்த பென்சன். இத்தோடு 70+ வயதினர், மாதம் 3,000 கீழ் வருமானம் எனில், 2000 கொடுக்கப்படுகிறது. அதே போலவே மருத்துவமும் இலவசம். அமெரிக்காவில் தனியார் காப்புறுதி இல்லாவிடில் - கான்சர் வந்தால் சாவுதான் என கேள்வி பட்டுள்ளேன். ஆனால் இலங்கையில் முடிந்தளவு அரசு செலவில் வைத்தியம் பார்ப்பார்கள். எனக்கு தெரியும் பல புலம்பெயர் தமிழர் பெற்றாரின் கணக்கில் பணத்தை வைப்பிட்டு, வயது முதிர்வால் அவர்களுக்கு கிடைக்கும் வரி சலுகை, வட்டி வீதங்களை அனுபவித்தனர். நான் மேலே எழுதியது போல் - நாடு வங்குரோத்தானமைக்கு இப்படியான loopholes உம் காரணம். அதை இப்போ அடைக்கிறார்கள். கிரிஸ் வங்குரோத்தான போதும் இது நடந்தது. https://www.oecd-ilibrary.org/sites/51b9c616-en/index.html?itemId=/content/component/51b9c616-en#:~:text=For comparison with other countries,on sex-specific mortality rates.&text=Senior Citizens over 70 years,payment of LKR 2 000.
  4. நான் யாழை தவிர வேறு எங்கும் எழுதுவதில்லை. பராக்கு பார்ப்பதோடு சரி. வேறு எங்கும் எழுத வேண்டிய தேவையும் எனக்கில்லை. என்னை பொறுத்து ஈழதமிழரின் அபிப்பிராயம் எனபதை அறிய யாழை தவிர வேறு திறமான இடம் இல்லை. பேச்சோடு பேச்சாக உங்களை சின்னப்பொடியள் லிஸ்டில் சேர்துள்ளதை கண்டிக்கிறேன்🤣. ஈழத்தமிழர் பெரும்பான்மையானோர் இன்றும் தமிழக அரசியலில் நடு நிலமைதான். சோசல் மீடியாவில் நாதக ஆதரவு உள்ளது ஆனால் தமிழ் நாட்டு தேர்தலில் 10% தாண்ட முக்கும். அதே போலதான் ஈழதமிழரில் உரக்க கத்துதும் சிறுபான்மை நாதக விசுவாசிகள். ஆனால் பெரும்பான்மை கட்சி சாராதோர்.
  5. அப்படி யாரும் சொல்லவில்லை. ஆனால் ஈழத்தமிழர் தளங்களில் எல்லாம், நாதக அபிமானம், திக,திமுக, அதிமுக, விசிக, மதிமுக மீதான விமர்சனம் மட்டுமே முன்வைக்கப்படின் - அப்படி ஒரு மாயத்தோற்றம் எழுவது தவிர்க்கவியலாலது.
  6. எனக்கு ஒரு புரட்சியும் நடத்தும் எண்ணமில்லை. ஒட்டுமொத்த ஈழதமிழரும் சீமான் பின்னால் என்ற மாயையை உடைக்க என்னால் எது முடியுமோ அதை மட்டுமே செய்கிறேன். மற்றும்படி சோசல் மீடியாவில் தேர்தல் வைத்தால் நாம் தமிழர் அமரிக்க காங்கிரசையே கைப்பற்றும் என்பதை நானும் ஏற்கிறேன்.
  7. இதை 2004 க்கு பிறகு இலங்கை போகாதவர் எழுதக்கூடாது. அங்கே இருப்பவர் என்ன நிலாந்தனே எழுதியுள்ளாரே? பார்க்கவில்லையா அல்லது selective blindness ஆ?
  8. எனது கேள்வி காளியம்மாள் பற்றிய தற்போதைய கருத்துக்கள் சர்சைகள் பற்றியதல்ல.
  9. வேட்டியை மட்டும்தான் உருவலாம்…. இப்படி ஜொக்காவையும் சேர்த்து உருவக்கூடாது….அனுமதியில்லை🤣 என்னிடம் இரெண்டு சாறம் மட்டுமே உள்ளது. மற்றும்படி வீட்டில் வேட்டிதான். சமர் எண்டால் ஐயப்பன் வேட்டி கட்டி பீச்சுக்கு போகலாம், வெள்ளைகாரிகள் எல்லாம் very trendy என பார்ப்பார்கள்🤣.
  10. எல்லா புகழும் கம்பன் ஒருவனுக்கே🤣
  11. பகிடி, நீங்கள் கேட்ட கேள்வியை நான் சரியாக விளங்கி கொண்டுள்ளேன் எனில், இலங்கை பிரஜாஉரிமை இல்லாமல் எப்படி ஒரு கனேடியன் சிட்டிசனாக இந்த காணியை உங்க பெயருக்கு மாற்ற முடியும் என்பதா? அப்படி எனில், short answer is முடியாது. இலங்கையில் வெளிநாட்டு பிரசைகள் காணியின் freehold ஐ வாங்க முடியாது. இதைத்தான் உங்கள் இலங்கை வக்கீலும் கூறியுள்ளார். ஆனால் பின்வரும் நடைமுறைகள் மூலம் இதை வளைய வரலாம் (circumvent). 1. காணியின் freehold ஐ அம்மா, அப்பாவிடமே விட்டு விட்டு, அதற்கு ஒரு 99 வருட லீஸ் ஹோல்டை எடுத்தல். அவர்களிற்கு பின் freehold ற்கு என்ன நடக்கும் ? புள்ளி 3 ஐ பார்க்கவும். 2. ஒரு கம்பெனியை தாபித்து அதன் பெயரில் freehold ஐ மாற்றி விட்டு, கம்பெனியிடம் இருந்து நீங்கள் லீஸ் ஹோல்டை பெறல் - வெளி நாட்டினராக நீங்கள் 49% கம்பெனி பங்குகளை மட்டுமே வைத்திருக்கலாம். ஆனால் கம்பெனி உருவாக்கும் போது, உங்கள் அனுமதியின்றி சொத்துக்களை எதுவும் செய்ய முடியாது என சரத்துகளை உருவாக்கி உங்கள் உரிமையை பாதுகாக்கலாம். 3. இதை உங்கள் வக்கீலிடம் கதைத்து பாருங்கள். இலங்கை சட்டத்தில் ஒரு loophole உள்ளதாக சொல்லப்படுகிறது. வெளி நாட்டினர் காணியை வாங்க முடியாது, ஆனால் பெற்றாரின் சொத்து அவர்களின் வாரிசுகளுக்குத்தான் செல்லும். இங்கே வாரிசுகள் வெளி நாட்டு பிரசைகள் என்றால் சொத்துக்கு என்னாகும்? என்ற கேள்வி தெளிவில்லாமல் உள்ளதாம். ஆகவே பெற்றாரின் காலத்தின் பின் - “வாங்குதல்” என இல்லாமல் சொத்து சந்ததி மாறல் என்ற வகையில் நீங்கள் இதை அடையக்கூடும். ஆனால் இது தெளிவில்லாததும், ரிஸ்க் அதி கூடியதுமாகும். 4. மிக பாதுகாப்பானது- சிக்கல் அறவே இல்லாதது - நீங்கள் மீள இலங்கை இரட்டை குடியுரிமையை எடுப்பது. பிள்ளைகளிற்கும் எடுத்து வைக்கலாம். சொத்துரிமை சந்ததிகளிற்கு பாதுகாக்கப்படும். ஒரே சிக்கல் - சில வேலைகள் வெளிநாட்டில் அந்த நாட்டு பிரசை/இரெட்டை குடியுரிமை இருந்தால் தரமாட்டார்கள். இது பிள்ளைகளை பின்னாளில் பாதிக்கலாம். ஆனால் அப்படி ஒரு நிலை வந்தால் - அவர்கள் காணியை விற்று விட்டு, இலங்கை குடியுரிமையை உதறலாம். பிகு 3வது ஆப்சன் பற்றி மேலதிகமாக அறிந்தால் இங்கே பகிரவும். ஒரு condominium அடுக்கு மடியில் 4ம் மாடி அல்லது அதற்கு மேல், அல்லது எந்த சொத்திலும் லீஸ் ஹோல்ட் மட்டுமே வைத்திருக்கலாம். 4ம் மாடிக்கு குறைந்த அல்லது காணியாக freehold ஐ வெளிநாட்டினர் வைத்திருக்க சட்டம் அனுமதிக்கவில்லை.
  12. பொய்யோ, மெய்யோ, பழசோ, புதிசோ…. யாழ்களத்தில், புலம்பெயர் மக்கள் மத்தியில், இலங்கை சோமாலியா ஆகிவிட்டது என்பது போல ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி வைக்க வேணும். பழைய காணொளி, புதிய செய்தி என மாறி, மாறி போட்டு அடித்து வாசகர்களை குழப்பி விட வேண்டும். அதுதான் சிறிதரன் அரசியலுக்கு உவப்பானது. அப்போதுதான் அவரின் தகிடுதத்தங்களை யாரும் கேள்வி கேட்க மாட்டர்கள். அதற்குமாறா யாரும் போய் உண்மையை கண்டு வந்து எழுதினால் - அவர்கள் மீது வடை, பாயாசம், வடை சுட்ட சட்டி ஈறாக எறியப்படும். இவ்வண், #சிறிதரன் ஆமி - இலண்டன் கிளை🤣
  13. வித்தவனும், வாங்கியவனும் மறந்தாலும், மன்னித்தாலும் - யாழ் களம் மறவாது🤣.
  14. 🤣 ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த பூளை ஆயின கண்டனை; இன்று போய், போர்க்கு நாளை வா' என நல்கினன்--நாகு இளங் கமுகின் வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல். (நாங்களும் கெட்டவார்த்தைல திட்டுவம்ல🤣)
  15. பாவம் அந்த பொடியும்….தாத்தா…தாத்தா எண்டு பின்னால திரியுது🤣
  16. ஆனால் இந்த முன்னேற்றம் கி ஜேர்மன் சமதர்மத்தை கைவிடும் வரை ஏற்படவில்லை என்பதும் சரிதானே?
  17. கஞ்சா கடத்தும் ஆட்களிடம் காசு வாங்கும் கள்ளர் கூட்டம் திமுக. சரிதானே? இந்த கள்ளர்களோடு யோக்கியருக்கு இரவில் என்ன போன் பேசும் தேவை? எதை என்றாலும் நேரடியாக மேடையில் சொல்லலாம். பிகு திரி தலைப்புக்கு சம்பந்தமில்லாமல் நீள்கிறது. இத்தோடு விடுவோம். ஒரே ஒரு கேள்வி : மேலே தோழர் சொன்ன low hanging fruits ஐ தன்னும் நாதக அடையாவிட்டால், அது ஒரு பின்னடைவு என்பதை ஏற்பீர்களா? இன்னொரு கேள்வி: நாதகவில் சீமானை கழட்டி விட்டு காளியம்மாள் போன்றோரை விஜை சேர்த்தால் உங்கள் ஆதரவு யாருக்கு?
  18. கிழக்கு ஜேர்மனிக்கு வரும் போதல்ல. அங்கிருந்து மேற்குக்கு அனுமதியின்றி வரும் போது உயிராபத்தை தாம் எதிர்கொண்டதாக சிலர் என்னிடம் கூறினர். அது ஒரு சிலராக இருக்கலாம். ஆனால் சட்டப்படியோ, விரோதமாகவோ, ஏன் சமதர்ம கி-ஜே யில் தங்காமல், முதலாளிதுவ மே-ஜே வந்தார்கள்? ஏதோ ஒரு வகையில் முதலாளிதுவ அமைப்பு விரும்பதக்கது என்பதால்தானே? முதலாளிதுவ சட்ட அமைப்பிலும் இதற்கு வழி உண்டு. குற்றம் தீர்த்த பின் (conviction), தண்டனை (sentencing) இன்னொரு தீர்ப்பாக தீமானிக்கபடும். தண்டனையின் அளவை தீர்மானிக்கும் போது, அளவை கூட்டும், குறைக்கும் காரணிகள் ஆராயப்பட்டு (aggravating and mitigating factors) அதன் படியே தண்டனை வழங்கப்படும். உதராணமாக ஒரு கடையில் களவு எடுத்தவர் சாதாரண ஆள் எனில் கிடைக்கும் தண்டனையை விட அவர் நம்பிக்கைக்கு பாத்திரமான காவலாளி எனில் தண்டனை கூடும். 2 மடங்கு இல்லை. ஆனால் குறித்த சதவீததால்.
  19. பொதுவாக கேட்டேன். முந்தைய கம்யூனிச கிழக்கு ஜேர்மனிக்கு இலங்கையில் இருந்து வீசா இல்லாமல் வரலாம். அப்படி கம்யூனிச கிழக்கு ஜேர்மன் வந்த தமிழரில் பெருவாரியானோர், உயிராபத்தை எதிர் கொண்டு, முதாளிதுவ மேற்கு ஜேர்மனுக்கு”போர்டர் பாய்ந்து” வந்தார்கள். சரிதானே நான் சொல்லும் தரவு? ஏன் சமதர்ம நாட்டை விட்டு முதலாளிதுவ நாட்டுக்கு உயிர் ஆபத்தையும் எதிர் கொண்டு வந்தார்கள்?
  20. பிரமிட் திட்டம் என்றால்…. தமிழில் எழுத பஞ்சியாக உள்ளது. இந்த விக்கி இணைப்பில் விளக்கம் உள்ளது. சுருக்கமாக: ஒரு போலியான முதலீட்டு கூம்பகம் (பிரமிட்). இதில் ஒவ்வொருவரும் மேலும் மேலும் ஆட்களை முதலிட வைத்து அதன் மூலம் தாம் பிரமிட்டின் முதல் படிக்கு போய் பெருந்தொகை பணத்தை ஈட்டல். நிகழ்தகவின் படி இந்த பிரமிட்டில் ஆரம்பத்தில் இருப்போர் மட்டுமே இலாபம் ஈட்டுவர். பெரும்பாலான முதலீட்டாளர் மேலே போகும் அளவுக்கு புதிய முதலீட்டாளர்கள் சேர மாட்டார்கள். ஆகவே ஆரம்பித்த சிலரை தவிர மீதம் ஆட்கள் நட்டம் அடைவர். https://en.m.wikipedia.org/wiki/Pyramid_scheme முன்னர் இலங்கையில் பல வகைகளில் இந்த களவு நடந்தது. இப்போ கிரிப்டோ புது டிரெண்ட் என்பதால் அதையும் வைத்து கிளம்பியுள்ளார்கள்.
  21. 🤣 பாண்டே மட்டும் அல்ல, உதய் கூட நள்ளிரவில் பேசும் அளவுக்கு சீமானுக்கு நட்பு உண்டு. உணர்ச்சி பேச்செல்லாம் தெருவில் நிற்கும் தம்பிகளுக்கத்தான். அண்ணன் எல்லாருடனும் நல்ல “அண்டர்ஸ்டாடிங்கில்” தான் உள்ளார். விஜையை முதலமைச்சராக ஏற்றால் அவரும் இதற்கு தயார் என நினைக்கிறேன். ஆனால் யாரோடு நின்றாலும் நாதக வாக்கைத்தான் தே.ஆ திருடி விடுமே? அப்ப ஏன் தேர்தலில் நிற்பான்?
  22. அப்போ ஏன் தமிழர்கள் கிழக்கு ஜேர்மனியில் இருந்து மேற்கு ஜேர்மனிக்கு பாய்ந்தோடி வந்தார்கள்?
  23. வாழ்த்துக்கள் அண்ணா. அர்னாவ் நீடூழி வாழ வாழ்த்து. (அர்னாவ் என்ற பெயரில் ஒரு தமிழ் சீரியல் நடிகர் உள்ளார் என நினைக்கிறேன்).
  24. இத்தனைக்கும் பிறகு சீமான் ஏன் தேர்தலை புறகணிக்கவில்லை? ஓட்டு குறைந்தால்? தே.ஆணையம் வோட்டை குறைத்து விட்டது ? ஆனால் அதே தே. ஆ நடத்தும் 2026 தேர்தலிலும் நாதக போட்டியிடும்? என்னையா இது? போட்ட வோட்டையே களவெடுக்கும் தேர்தல் முறையில் நீங்கள் எத்தனை தரம் போட்டி போட்டாலும், தோல்வி என்றே அறிவிப்பார்கள். பின்னர் ஏன் அந்த தேர்தலில் தொடர்ந்தும் போட்டி போடுகிறீர்கள்? அவரும் வெறும் வாய்சவாடல்தான் என்கிறீர்களா🤣
  25. ஏதேது….சும்மா புட்டு….புட்டு வைக்கிறீர்களே🤣. நட்பு வட்டமோ 🤣 (பகிடிக்குத்தான்). நீங்கள் சொல்வது சரியே என்றாலும் ஆடிய காலும் களவெடுத்த கையும் சும்மா இராது கண்டியளே🤣. இப்படியாகொத்த கள்ளர் பலர் இலங்கையில் இப்படி பணத்தை வைப்பில் இட்டு வைத்துள்ளார்கள். பின்னர் தேவைப்படும் போது உண்டியல் மூலம் எடுப்பது. கணக்கில் காட்டாமல் கலியாணம், சாமத்திய சடங்கில் கைக்காசாக செலவழிப்பது. வெளித்தோற்றத்துக்கு கனவான் வேசம் போட்டாலும் - தொழில் எப்போதும் களவுதான்🤣. அதேபோல் இப்போ மட்டும் அல்ல, எப்போதும் சோசல் களவு செய்வோர் காட்டில் மழைதான்🤣. ஆனால் இப்படி களவு செய்வோர் வாழ்க்கை வேற மாரி - என்னதான் பண வரவு இருந்தாலும் அது தரித்தரிரம் பிடிச்ச வாழ்க்கை. பிள்ளையள் கூட என்றால் நல்ல பெரிய வீடு கிடைக்கும் ஆனால் சொந்தமா வீடு வாங்கேலாது. அதிஸ்டம் என்றால் ரைட் டு பை மூலம் கிடைக்கலாம். கையில் காசுக்கு வேலையும் செய்து காசும் பார்க்கலாம்தான் ஆனால் வேலை தாறவன் யார்? நான் மேலே சொன்ன வரி ஏய்க்கும் கள்ள முதலாளிகள் - அவர்கள் இவர்களை தெரு நாயை போல நடத்துவார்கள். என்ன ஆபீஸ் வேலையா தரப்போகிறார்கள், பெட்டியை கிழித்து அடுக்கும் வேலைதான். சக்கையாக பிழிந்து விடுவார்கள். இப்படி வாழும் பலரை பார்த்தீர்களானல் அவர்கள் முகத்தில் ஒரு செந்தழிப்பு இருக்காது - வறுமை என நடித்தாலும் - அதுவும் ஒரு தரித்திரம்தான். இவர்கள் இலங்கை போனாலும் அங்கே இப்போ பலர் இவை பற்றி முழுவதுமாக தெரிந்து வைத்துள்ளார்கள் - சில கேள்விகளிலேயே பிடித்து விடுவார்கள். தவிரவும் அங்கேயும் போய், கால் முதல் தலைவரை டிசைனைர் உடுப்பு போட்டு கொண்டு, 80 ரூபாய் வடைக்கு எட்டு தரம் விலை பேசுவார்கள்🤣. முன்னர் நாம் கொழும்பில் இருக்கும் போது இப்படியானவர்களை “ஓமான்” என அழைப்பார்கள். இப்போ “இலண்டன்” என அழைக்கிறார்கள். இப்படி தினுசு…தினுசா…இருக்கிறார்கள் புலம்பெயர் தமிழர்கள். ஆனால் பொதுவெளியில் கதைக்க விட்டால், ரொமேனியன் கள்ளன், சிங்களவன் கள்ளன் என நீட்டி முழக்குவார்கள் - தங்கள் சீத்துவம் மற்றையவர்களுக்கு தெரியாது என நினைத்தபடி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.