Everything posted by goshan_che
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
ஆனால் ஒரு சம்பவம் நடந்தது. நானும் என் நண்பர் குழாமும் மாத்தறையில் ஒரு கடலோர ரிசார்ட்டில் போய் அமர எத்தனித்த போது - மன்னிக்க வேண்டும், இங்கே கிச்சனில் பழுது, உணவுகள் இல்லை, இன்னும் ஏதோ நொண்டி சாட்டுகள் கூறி மிக தன்மையாக எம்மை வேறு இடம் பார்க்க சொல்லி கேட்டுக்கொண்டார்கள். கேட்டு கொண்டவர்கள் உள்ளூர்வாசிகள். என் குழுவில் மூவினத்தவரும் இருந்தோம். அந்த இடம் முழுவதும் வெள்ளையர்களாகவே இருந்தது. மருத்துக்கும் ஒரு சுதேசியையும் காணவில்லை. என்ன நடக்கிறது என்பது விளங்கினாலும், பிரச்சனை வேண்டாம், மிகவும் தன்மையாக கேட்கிறார்கள் வெளியேறுவோம் என்பதே எம் குழுவில் அநேகரின் எண்ணமாக இருந்தது. இங்கிலாந்தில் இதுவே எமக்கு நடந்தால் “சேறாடி” இருப்போம் என நாம் சிலர் சொன்னபோது, உள்ளூர்வாசிகள் நடந்து கொள்ளும் முறை, வாடிக்கையாளருக்கு அசெளகரியங்களை தருவதால் - வியாபார நிறுவனமாக அவர்களில் தாம் அதிகம் பிழை காணவில்லை என்றனர் - இலங்கை வாசிகள். கடல்கரை வழியாக நடந்து வந்து அடுத்ததாக இருந்த இன்னொரு இடத்தில் கேட்ட போது மிக வரவேற்புடன் எம்மை உள்ளே எடுத்தார்கள். தென்னிலங்கை கடற்கரை நகர்களில் சில இடங்களில் இப்படியான ஒரு அறிவிக்கபடாத அப்பாதயிட் நடை முறை இருப்பதாகவே தெரிகிறது. இதே போல் வெள்ளையருக்கு மட்டும் என ஒரு பார்ட்டி ஏற்பாடாகி, சர்ச்சை ஆகி நிறுத்தப்பட்டது. செய்தி இணைப்பு கீழே. https://www.bbc.co.uk/news/world-asia-68421131.amp
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
கொசுறு @தமிழ் சிறி இன்னொரு திரியில் ரஸ்யர்கள் இலங்கையில் வியாபாரம் செய்வது பற்றி சிலாகித்து இருந்தார். அதை பற்றி இந்த திரியில் முன்னரும் எழுதி இருந்தேன். இப்படியான இடங்களுக்கு நான் போகவில்லை, ஆனால் தென்னிலங்கையில் கீழே படத்தில் இருப்பது போலான அறிவிப்புகளை கன இடங்களில் கண்டேன். மும்மொழி கொள்கையை ஒருவழியாக அமல்படுத்திய கண்கொள்ளா காட்சி🤣👇.
- IMG_7419.jpeg
-
“இலங்கை வேடுவர்களுக்கு 5 இந்திய பழக்குடியினருடன் நெருங்கிய மரபணு தொடர்பு – ஆய்வில் தகவல்”
நானும் அறிந்ததில்லை. ஆனால் சமணத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்துவிட்ட படியால் - இருந்து சுவடழிந்து போயிருக்கலாம். ஊகம்தான்.
-
“இலங்கை வேடுவர்களுக்கு 5 இந்திய பழக்குடியினருடன் நெருங்கிய மரபணு தொடர்பு – ஆய்வில் தகவல்”
@நன்னிச் சோழன் @kandiah Thillaivinayagalingam வேறு ஒரு விடயத்தை பற்றி தேடும் போது இந்த சாவகர் என்பதற்கு இன்னொரு அர்த்தம் கிடைத்தது. பண்டைய தமிழ் நம்பிக்கைகளில் ஒன்றான சமணத்தின் உட்பிரிவுகளில் ஒன்றுக்கு பெயர் சாவகம்/உலகாயதம். இதன்வழி ஒழுகியோரும் சாவகர் என அழைக்கப்பட்டுள்ளனராம். இது இறை நம்பிக்கை மறுப்பு, ஆசார மறுப்பு, பகுத்தறிவுவாதம் என கிட்டதட்ட இன்றைய பகுத்தறிவு/சுயமரியாதை/பெரியார் கொள்கைகளை சிலதை ஒத்து இருந்துள்ளது போல் தெரிகிறது. சிலசமயம் இவர்கள் கூடி வாழ்ந்த இடமே சாவகர்-சேரி ஆமியும் இருக்கலாம். https://ta.m.wikipedia.org/wiki/உலகாயதம் இந்த இணைப்பு - சாவக நம்பிக்கையின் சாரம் என கீழ் கண்டவாறு உள்ளது. வானுலகு, மோட்சம், நரகம், மறு உலகில் உயிர், வினைக் கோட்பாடு என்பன ஒன்றும் இல்லை. நால்வகை வருணப்பாகுபாடு, அவர்களுக்குரிய தொழில்கள், நியதிகள் என்பன ஒருவித உண்மை விளைவினையும் பயனையும் உண்டாக்கா. ஆண்மைத்திறமும் அறிவாற்றலும் இல்லாதவர்களின் பிழைப்பின்பொருட்டுத்தான் வேதங்கள், வேள்விகள், முத்தீ வளர்த்தல் உடம்பில் நீறுபூசுதல் என்பன உண்டாகி உள்ளன....உயிர் உள்ளவரைக்கும் மனிதன் மகிழ்ச்சியாக வாழட்டும். கடன்பட்டாவது நெய்யுணவு கொள்ளட்டும். ஒருமுறை உடம்பு சாம்பாலான பின்னர், மீண்டும் அது எப்படி எப்பொழுது இங்குத் திரும்பும்? சடங்குகள் எல்லாம் பிராமணர்களின் பிழைப்புக்காக உண்டாக்கப்பட்டவை. @கிருபன் @பாலபத்ர ஓணாண்டி உங்கள் பார்வைக்கும்.
-
தாய் கழகத்தில் மீண்டும் இணைகிறேன்!'- காங்கிரஸில் இணைவதாக மன்சூர் அலிகான் அறிவிப்பு
நாங்கள் சோசல் காசு இல்லாத காலத்திலேயே ஊருலாப் தான்🤣.
-
மசாலா: புற்றுநோய் உண்டாக்கும் என எம்டிஎச், எவரெஸ்ட் தயாரிப்புகளுக்கு சிங்கப்பூர், ஹாங்காங் தடை - என்ன நடந்தது?
முன்பும் ஒரு தடவை உங்கள் உணவு பற்றிய தேடலை மெச்சியுள்ளேன். இன்றைய பதிவுகளும் அதே ரகமே @Kadancha👍. ————— நேற்று கோஷான் எழுதியதை, இன்று உடான்ஸ்சாமியார் ஒளவையார் ஸ்டைலில் அருளியுள்ளார்…..👇 உறைப்புயர உப்புயரும்… உப்புயர அளுத்தமுயரும்…. அளுத்தமுயர உயிர் உயரும்… உயிர் உயர்ந்தால் மனுசி அழுவாள்🤣
-
ரஷ்யா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு இலவச விசா
இதில் மூன்று விடயம். Small businesses are the engine of the economy என்பது யூகே அரசியலில் தாரக மந்திரம். பொருளாதாரம் முன்னேற சிறு வியாபாரம் உயர்வது அவசியம். அடி மட்டத்தில் பணம் புழங்கினால்தான், மக்கள் காசை செலவிடுவர், மக்கள் காசை செலவிட்டால்தான் பொருளாதாரம் வளரும். இந்த 50 டொலர் காரர் நேரடியாக ஹோஸ்டல் நடத்துபவர், கொத்து ரொட்டிகாரார், இளனி விற்பவருக்கு நேரடியாக 50 டொலரை கொடுப்பார்கள், ஆனால் 300 டொலர் காரர் 5 நட்சத்திர ஓட்டலில் செலவழித்து அது கீழ் மட்டத்துக்கு ஒழுகி வரும் போது (trickle down economy) 30 டொலர் வருவதே பெரிய விடயமாக இருக்கும். அடுத்தது எண்ணிக்கை. 4x250 = 20x50. நாட்டின் பொருளாதாரத்துக்கு 4 நட்டத்திர விடுதி இலாபம் பார்பதை விட 20 ஹொஸ்டல் லாபம் பார்ப்பது நல்ல பலனை தரும். மூன்றாவது Trail Blazers. எப்போதுமே ஒரு இடத்துக்கு முதலில் போவது backpackers, shoe-string budgeters எனப்படும் 30 டொலர் பேர்வழிகள்தான். அவர்கள் போய் ஒரு vibe ஐ உருவாக்க, பின் tour operators 300 டொலர் பார்ட்டிகளை கூட்டி வருவார்கள். இன்றைய insta உலகில் - இந்த 30 டொலர் பார்ட்டிகள் கிட்டதட்ட ஒரு நாட்டுக்கு brand ambassadors போல. ஆகவே எல்லாரையும் கவரும் விதமாகவும், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாகவும் சுற்றுலா துறையை கட்டி எழுப்பலாம் என நான் நினைக்கிறேன். #அதிதி தேவோ பவ🤣 இதில் உண்மை இல்லாமல் இல்லை. இந்தியாவும், சீனாவும், ரஸ்யாவும் சராசரி மனிதருக்கு ஏழை நாடுகள்தான், அதே சமயம் பெரும் பணக்காரரின் நாடுகள் கூட.
-
புலத்தில் இருந்துகொண்டு ஊரில் வாங்கிய காணியை பெயர் மாற்றம் செய்வது எப்படி?
மேலதிக தகவல் - 2021 இல் இலங்கை காணிப்பதிவுகளை digital மயமாக்கல் ஆரம்பித்து விட்டது. இப்போதைக்கு மட்டுபட்ட அளவில் இருந்தாலும், இது முழுமையாகும் நாள் வெகு தொலைவில் இல்லை. https://www.icta.lk/projects/digitalizing-government/e-land-registry-system-elr-for-land-registries https://www.icta.lk/media/news/land-registry கவனிக்க: இப்போ காணி உங்கள் பெயரில் பதிய பட்டிருந்தால் -அப்படியானவர்கள் - உங்கள் பதிவை டிஜிட்டல் ரெக்கோர்ட்டில் இப்போதே சேர்ப்பதை பற்றி வக்கீல் ஆலோசனையை எடுக்கவும். இது பின்னாளில் வரும் மாற்றங்களில் இருந்து ஓரளவு பாதுகாப்பு தருவதோடு - கள்ள உறுதி முடிப்பதை கணிசமாக குறைக்கும்.
-
ரஷ்யா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு இலவச விசா
எங்கேயோ இல்லை அண்ணை - எனது பயணக்கட்டுரையில்தான் இதை எழுதி இருந்தேன்🤣. வரும் போது லக்கேஜில் பிளாஸ்டிக் சாமனை கொண்டு வந்து வித்து, உள்ள செலாவணியையும் அள்ளி கொண்டு போவார்கள்🤣. ஆனால் இப்போ இதில் ஒரு சின்ன மாற்றம் -மாலைதீவுடன் லடாய் என்பதால் செலவழிக்கும் கோஷ்டிகள் இலங்கை வருவது கூடியுள்ளது.
-
புலத்தில் இருந்துகொண்டு ஊரில் வாங்கிய காணியை பெயர் மாற்றம் செய்வது எப்படி?
எனக்கும் இந்த 3வது ஆப்சன் அதிக ரிஸ்கியாகவே தெரிகிறது. வெளிநாட்டினர் காணி வாங்க முடியாது, ஆனால் அவர்களுக்கு பெற்றார் காணியை கிரயம் பண்ணலாம் என இருப்பது நிச்சயம் ஒரு சட்ட-ஓட்டை (loophole) தான். இதை ஒரு சட்ட திருத்தம் மூலம் அடைக்கலாம். அதன் பின் இந்த திருத்தம் பின்னோக்கி பாயுமா இல்லையா (does it have retrospective effect) என பார்க்க வேண்டும். பொதுவாக காணி சட்டங்கள் பின்னோக்கி பாய்வதில்லை. அது நியாயமும் இல்லை. ஆனால் சொல்ல முடியாது அதுவும் இலங்கையில் எதுவும் நடக்கலாம். பிறகு வழக்கு எண்டு ஏறி இறங்க வேண்டி வந்தால் - கனடாவில் இருந்து இதை கொண்டு நடத்த வேண்டும். உள்ளதில் ரிஸ்க் குறைவு என்றால் இரெட்டை பிரஜா உரிமைதான் - என்பேன் நான். பலருக்கு 72 சிறிமா ஆட்சியும், நில உச்ச வரம்பு சட்டமும் மறந்து விட்டது அல்லது தெரியாது என நினைக்கிறேன். இப்போ JVP ஆனது NPP என ஒரு மிதவாத முகமூடியோடு வருகிறது. ஆட்சிக்கு வந்தால் முகமூடி களரலாம். முடிவாக. பாட்டியின் காணியை பேரனாக பொறுப்பெடுத்தமைக்கு வாழ்த்துக்கள். ஏதாவது புதிய தகவல்கள் வரும் போது தெரியப்படுத்துங்கள்🙏. குட் லக்.
-
ரஷ்யா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு இலவச விசா
ஓம்….மேற்கை சாந்தபடுத்த சொல்வது.
-
தாய் கழகத்தில் மீண்டும் இணைகிறேன்!'- காங்கிரஸில் இணைவதாக மன்சூர் அலிகான் அறிவிப்பு
ஏன் இந்த முறை பொது வேட்பாளரை போடலாம் என நினைக்கிறேன்? இந்த தேர்தலில் போட்டி ரணில், அனுர, சஜித் இடையேதான். இதில் மகிந்த/கோட்ட போல ஒரு அதி தீவிர நேரடியான இனவாதி போட்டியில் இல்லை. ஆகவே அவர்கள் வென்றால் வரக்கூடிய அடக்கு முறை அராஜகங்கள் எம் மக்களை பாதிக்க கூடிய வாய்ப்பு குறைவு. ரணில்/சஜித் வந்தால் இப்போதைய நிலை தொடரும். அனுரவும் நேரடியான அராஜகத்தை தமிழர் மீது கட்டவிழ்க்க வாய்ப்பு குறைவு. இப்படியான சந்தர்பத்தில் யாரையும் தோற்கடிக்க வேண்டிய தேவை எமக்கு இல்லை. எனவே மறைமுகமாக இனவாதமாக செயல்படகூடிய ரணில்/சஜித்/அனுரவை எதிர்த்து நம் நேரடியாக பொது வேட்பாளரை இறக்கி அரசியல் செய்யலாம். அனைவரும் ஓம்பட்டால்.
-
தாய் கழகத்தில் மீண்டும் இணைகிறேன்!'- காங்கிரஸில் இணைவதாக மன்சூர் அலிகான் அறிவிப்பு
இதுவரை நான் பொது வேட்பாளரை ஆதரித்தது இல்லை. ஆனால் இந்த முறை முயற்சிபதில் தவறில்லை என நினைக்கிறேன். ஆனால் எல்லாரும் உடன்பட வேண்டும். பகிஸ்கரிப்பால் ஒரு பலனுமில்லை. தமிழரில் 10% கூட இந்த முடிவை ஆதரிப்பது சந்தேகமே. ஆனால் யாழில் ஒரு எம்பி சீட்டை தக்க வைக்க இது போதுமாயிருக்கும்.
-
ரஷ்யா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு இலவச விசா
60 நாடுகள் எனில் அதில் கட்டாயம் சில மேற்கு நாடுகள் அடங்கும் என நினைக்கிறேன். ஆனால் இதை கிடப்பில் போட்டு விடுவார்கள். ஏன் ரஸ்யா, சீனா வுக்கு மட்டும் விசேட சலுகை என கேட்டால் - உங்களையும் பரிசீலிக்கிறோம் என சொல்லும் உத்தி. இலங்கைக்கு, சீனா, ரஸ்யா, இந்தியா எண்டால் எப்பவும் ஸ்பெசல்தான். இதுவரை reciprocal நீங்கள் எப்படியோ நாங்களும் அப்படி) முறையில்தான் இலங்கையின் வீசா நடைமுறை, கட்டணங்கள் இருந்தது. இப்போ 7 நாடுகளை இலவசமாக விடப்போவதாக சொல்கிறார்கள். இதில், ரஸ்யா, சீனா, இந்தியா இலங்கை வருவோரில் முதல் 5 க்குள் வரும். இதனால் வரும் வீசா வருவாய் அரசுக்கு கணிசமான நட்டத்தை தரும். சிலவேளை அதிக அளவில் வந்தால் - வரும் இலாபம் இதை ஈடு செய்கல்ய கூடும்.
-
தாய் கழகத்தில் மீண்டும் இணைகிறேன்!'- காங்கிரஸில் இணைவதாக மன்சூர் அலிகான் அறிவிப்பு
ஆனால் மகிந்தவை தோற்கடிக்க முடியுமாயின் அதை செய்ய, குறைந்த பட்சம் மகிந்தவின் அணுகுமுறையை நிராகாரிக்கிறோம் என்பதை மக்கள் சொல்ல அந்த தேர்தலை பயன்படுத்தி கொண்டார்கள். 2009 ற்கு பின், சத்தியாகிரகம், பகிஸ்கரிப்பு, பொது வேட்பாளர் போல வெல்ல முடியாத குதிரைகளில் பணம் கட்டுவதில்லை என் தமிழ் மக்கள் முடிவு செய்திருப்பதாக நான் கருதுகிறேன். இந்த முறையும் எல்லா தமிழ் தேசிய கட்சியினரும் ஒருமித்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்த மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.
-
தாய் கழகத்தில் மீண்டும் இணைகிறேன்!'- காங்கிரஸில் இணைவதாக மன்சூர் அலிகான் அறிவிப்பு
எல்லா தமிழர்களும் ஒரே தமிழ் வேட்பாளருக்கு முதல் தெரிவை போட்டு விட்டு, அடுத்த தெரிவை போடாமல் விடலாம்? இது நடக்க வாய்புள்ளது.
-
தாய் கழகத்தில் மீண்டும் இணைகிறேன்!'- காங்கிரஸில் இணைவதாக மன்சூர் அலிகான் அறிவிப்பு
நன்றி. வேளங்கன்னி ஆலயம், மீன் சந்தை இருக்கும் வீதி என்றால் MG road எனப்படும் மகாத்மா காந்தி வீதி? எங்கே என நினைவில்லை, ஆனால் தோராயமாக இந்த ஏரியாதான் - 1998 இல் வைகோவின் கூட்டத்துக்கு போய் இருந்தேன் - அப்படியே கட்டிப்போடும் மேடைப்பேச்சு.
-
தாய் கழகத்தில் மீண்டும் இணைகிறேன்!'- காங்கிரஸில் இணைவதாக மன்சூர் அலிகான் அறிவிப்பு
மற்றைய தொகுதி பெருந்துறை? மதிமுக ஆரம்பித்து களம் கண்ட முதலாவது தேர்தல். நீங்கள் சொல்லும் கூட்டங்கள் நடந்த இடம் மயிலை மாங்கொல்லையா?
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
பிற்சேர்க்கை III வெஸ்டேர்ன் மெடிசின் Vs வெதமாத்தையா அடுத்த பாகத்தை கொடுக்க பிந்தியமைக்கு மன்னிக்கவும். படங்களை போட்டது திரியை எழுத்தில் இருந்து படங்கள் நோக்கி திருப்பி விட்டது. ————— இலங்கை போவதில் ஒரு வசதி - கொஞ்சம் காசை செலவழித்து ஒரு புல் மெடிக்கல் செக்கப் செய்துகொண்டு வரலாம். அதுவும் நவலோக்க, டேர்டன்ஸ், ஆசிரி, லங்கா ஹொஸ்பிட்டல் போன்ற முதல் தர வைத்தியசாலைகளிலேயே £230 க்குள் ஒரு டோட்டல் மெடிக்கல் செக்கப்பை செய்துகொள்ளலாம்.. முன்னர் ஒரு காலம் இருந்தது யூகே NHS என்றால் உலகிற்கே முன்மாதிரி, ஆனால் இப்போ அப்படி இல்லை. எல்லாம் 14 வருட வலதுசாரி மகாராசாக்களின் ஆட்சி தந்த “முன்னேற்றம்”. இப்போதெல்லாம் ஜீ பி யிடம் அப்பாயின்மெண்ட் வாங்குவதை விட நோயில் சாகலாம் என்ற நிலை. அப்படியே ஜி பி யை சந்திக்க முடிந்தாலும், அவர் refer பண்ணி ஒரு ஸ்கான் எடுப்பதற்குள் சித்திரகுப்தன் சீட்டை கிழிக்க ரெடியாகி விடுவார். அத்தோடு இலவசம் என்பதால் கண்ட மாதிரி speculative டெஸ்டுகளும் எடுக்க refer பண்ண மாட்டார்கள். முதலில் தண்ணீர் குடியுங்கள், ரெஸ்ட் எடுங்கள் என்றே சொல்லி அனுப்புவார்கள். ஆகவே உடனடி கவனிப்பு தேவை எனில், ஒன்றில் கணிசமான அளவு பணத்தை கட்டி யூகேயில் தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்து வைக்க வேண்டும். அல்லது….இலங்கை அல்லது இந்தியா (பல்லு கட்ட போலந்து, துருக்கி) போன்ற நாடுகளுக்கு போய் இப்படி ஒரு செக்கப்பை செய்து வரலாம். இந்த ரிப்போர்ட்டுகள் எல்லாம் எடுக்க ஒரு நாள் செலவாகும். பின்னர் இதை வைத்து ஒரு கன்சல்டண்டுடன் உங்களுக்கு அப்பாயின்மெண்ட்டும் தருவார்கள். இதில் நன்மை என்னவென்றால் - இந்த டெஸ்டுகளில் ஏதாவது கோளாறாக கட்டினால் - அதை நேரடியாக இங்கே ஜி பி யிடம் காட்டும் போது - நோயின் தார்பரியம் அறிந்து வேலை கட…. கட…. என நடக்கும். எனக்கு தெரிந்த சிலர் முன்பே இவ்வாறு செய்திருந்தாலும், இதுவரை நான் செய்ததில்லை. இந்த முறை வயதும் 45 இன் அடுத்த பக்கத்துக்கு போய் விட்டதாலும், கடந்த 3 வருடத்தில் ஜி பி க்கள் தந்த அனுபவத்தினாலும் - ஒரு டெஸ்டை செய்ய முடிவு செய்தேன். இந்தியா போல் அல்லாது, இலங்கையில் health tourism த்தின் பெறுமதி இன்னும் வடிவாக அறியப்படவில்லை. விலைகளும் உள்ளூர் ஆட்களை குறிவைத்தே உள்ளன (வடை, கொத்து, சிகிரியா டிரிக்ஸ் இன்னும் இங்கே வரவில்லை). ஒவ்வொரு ஆஸ்பத்திரியும், பல வகை வகையான packages வைத்திருக்கிறார்கள். ஒன்றிற்கு மூன்றாக தெரிந்த வைத்தியர்களிடம் கதைத்து - ஒரு package ஐ நானும் ஒரு முண்ணனி வைத்தியசாலையில் தெரிந்து கொண்டேன். டெஸ்ட் எடுக்கும் நாள் அதிக நிகழ்வுகள் இன்றி கழிந்தது. ஒவ்வொரு உடல் பகுதிக்குமுரிய இடத்துக்கு அந்த டெஸ்டுக்காக போகும் போது, அவை உள்ளூர் வாசிகளால் நிரம்பியே இருந்தது. எந்த நாட்டிலும், எந்த நிலையிலும் உணவுக்கு அடுத்து நல்ல பிஸினஸ் மருத்துவம் என்பது புரிந்தது. எல்லாம் முடிந்து கன்சல்டேசன் போனால் -கன்சல்டன் - எடுத்த எடுப்பிலேயே எந்த நாடு என்று கேட்டார் - டாக்டரிடம் பொய் சொல்ல கூடாதாமே? ஆகவே எனது “யாழ்பாணம்/மாடகளப்பு/வன்னி/இந்தியா” உத்தியை கைவிட்டு யூகே என உண்மையை சொன்னேன். கண்ணாடிக்கு மேலால் ஒரு பார்வை பார்த்து விட்டு, நான் அங்கேதான் மேற்படிப்பு படித்தேன், “இப்படி ஒரு முழுமையான டெஸ்டை அங்கே உன்னால் செய்யவே முடியாது அல்லவா”, என அவருக்கு ஏலவே தெரிந்த விடயத்தை என்னிடம் உறுதி செய்தார். என்ன இருந்தாலும் என் குஞ்சல்லவா? விட்டு கொடுக்க முடியாதே? ஆம், ஆனால் இங்கும் அரச வைத்தியசாலையில் இப்படி ஒரு முழுமையான டெஸ்டை செய்யமாட்டீர்கள்தானே என்றேன். உனக்கு வாயில் கொலஸ்டிரோல் கூட என்பதை போல் ஒரு பார்வை பார்த்து விட்டு, ரிப்போர்ட்டுக்கான வியாக்கியானத்தை ஆரம்பித்த வைத்தியர். 40 நிமிட கன்சல்டேசனின் பின், ஏலவே தெரிந்த விடயங்களை தவிர வேறு ஏதும் கோளாறு இல்லை என்பது நிம்மதியாக இருந்தாலும்…. இவ்வளவு செலவழித்துள்ளேனே…ஒன்றும் இல்லையா என இன்னொரு மனம் மொக்குத்தனமாய் ஒரு கணம் சிந்திக்கவும் செய்தது🤣. கடைசியாக…எனி அதர் குவெஸ்சன்ஸ் க்கு வைத்தியர் வர, என் நெடுநாள் உபாதையான சயாடிக்கா கால் வலியை பற்றி சொன்னேன். அக்கம் பக்கம் பார்த்த வைத்தியர், மெல்லிய குரலில் “இதுக்கு இங்கே உள்ள வெதமாத்தையாதான் சரி” என கூற, யாரையாவது ரெக்கெமெண்ட் பண்ண முடியுமா என நான் அவரை விட மெல்லிய குரலில் கேட்டேன். கன்சல்டேசன் அறையை விட்டு கிளம்பும் போது எனது போனில் ஒரு பிரபல வெதமாத்தையாவின் தொடர்பிலக்கமும், விலாசமும் சேமிக்கப்பட்டிருந்தது. ———————- ஆவலோடு காத்திருங்கள்! பிற்சேர்க்கை IV வெதமாத்தையாவும் ஆவா குரூப்பும்
-
புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களிடம் சுமந்திரன் விடுத்துள்ள பகிரங்க கோரிக்கை
இல்லை….இலங்கை அரசு விரும்புவது, சிறிதரனும், சுமந்திரனும், விக்கியரும், கஜேயும் பலவாறாக பிரிந்து - தமிழ் தேசிய அரசியலை நம்பினால் - அம்போ! என மக்களை நினைக்க வைக்கும் நிலையை. தமிழ் மக்களை கொண்டே, ஜனநாயக தேர்தல் முறையில், தமிழ் தேசிய அரசியலை அரங்கை விட்டு அகற்றுவதே இலங்கை இனவாத அரசின் end game. தமது கதிரை ஆசையால், ஈகோவால் அதை செவ்வனே செய்துகொண்டிருக்கிறார்கள் யாழ்பாணத்தின் தமிழ் எம்பிக்கள்.
-
புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களிடம் சுமந்திரன் விடுத்துள்ள பகிரங்க கோரிக்கை
ம்ம்ம்…அப்போ சும் முட்டாள்-கள்ளன், ஶ்ரீ - கெட்டிகார கள்ளன்? இருவரும் எமது இனத்துக்கு கேடு எனில், நாம் கெட்டிகார-கள்ளனை அல்லவா மூர்கமாக எதிர்க்க வேண்டும்? ஏன் முட்டாள்-கள்ளனை எதிர்ப்பதில் 1/10 கூட கெட்டிகார கள்ளனை எதிர்ப்பதில் செலவிடுவதில்லை?
-
தாய் கழகத்தில் மீண்டும் இணைகிறேன்!'- காங்கிரஸில் இணைவதாக மன்சூர் அலிகான் அறிவிப்பு
யார் என்பது தெளிவில்லாமல் உள்ளது. ஆனால் வழமை போல் முதல் சந்தேகம் ரோவின் மீதே விழுகிறது. ஆனால் நெடுமாறன் தெரிந்து கொண்டு, தன் நலத்தின் பால் பொய் சொல்வதாக நான் நினைக்கவில்லை.
-
புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களிடம் சுமந்திரன் விடுத்துள்ள பகிரங்க கோரிக்கை
அவர்கள் முயலாமலே உடைக்க கூடியவர்கள் இவர்கள். மேலே குசா அண்ணை சொன்னது போல - இவர்கள் மீதானா நம்பிக்கை மிக வேகமாக அற்று வருகிறது. ஒரு தேர்தலுக்கு அப்பாற்பட்ட அமைப்பாவது உண்மையாக தமிழ் தேசிய அரசியலை முன்னெடுக்க தேவை. இல்லாவிடின் சுமந்திரன்/ சிறிதரன் மீதான நம்பிக்கை இழப்பு = தமிழ் தேசியத்தின் மீதான நம்பிக்கை இழப்பு என மாற வெகுநாட்கள் ஆகாது. அதை தெற்கு கட்சிகள் நிச்சயம் பயன்படுத்தி கொள்ளும்.
-
புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களிடம் சுமந்திரன் விடுத்துள்ள பகிரங்க கோரிக்கை
👇 இதை எழுத அவையடக்கம் விடவில்லையாக்கும்🤣 எனக்கும் இதில் உடன்பாடே. அதுவும் சரிதான்.