Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. அதென்னமோ தெரியவில்லை…. புலிகளின் ரகசியம்…. வீரப்பன் ரகசியம்…… டெல்லி உளவுத்துறை ரகசியம்…. எல்லாம் உங்களிடம் மட்டும் சிக்குது.
  2. 1ம், 3ம் விதிகளை தளர்த்தலாமே? எப்படியோ ஜூன் 4 வரை இனி எது நடந்தாலும் முடிவுகள் மாறப்போவதில்லை. எனவே இறுதி நாளை ஜுன்3 எனவும், அதுவரை விடைகளை மாற்றலாம் எனவும் வைக்கலாம் என நினைக்கிறேன். நிச்சயமாக.
  3. மேலதிக இணைப்புக்களுக்கு நன்றி அண்ணா🙏.
  4. தம்பி ஆவது ஒரு ப்ரோசஸ். தம்பி ஆக முதல் zombie ஆக வேண்டும். பின்னர் படி படியாக brain transplant பண்ணி தம்பி ஆகி விடலாம். சிறுவயதில் தலைக் காயமோ அல்லது பிடரி அடிபட விழுந்திருந்தாலோ இந்த ப்ரோசசை ஈசியாக கடந்து விடலாம். எப்போ நீங்கள் கொள்ளைகாரன் வீரப்பனை உங்கள் தந்தை அல்லது கடவுள் நிலைக்கு இணை வைக்கிறீர்களோ அன்றைக்கு நீங்கள் ஒரு fully certified தம்பி ஆகி விட்டீர்கள் என அர்த்தம்.
  5. வீரப்பன் சாவுக்கோ அல்லது அவரை கெளரவித்தோ புலிகள் ஒரு பஸ் டிக்கேட் அளவு பிரசுரம் தன்னும் அடித்ததாய் ஆதாரம் காட்டுங்கோ. மிச்சத்தை பிறகு கதைப்பம். இப்படி உங்கள் சொந்த இனப்போராட்டம் பற்றி உங்கள் போன்றோருக்கு பிழையாக மண்டையை கழுவி வைத்திருப்பதுதான் நான் சீமானை எதிர்க்க முதல் காரணம்.
  6. @பையன்26 @கிருபன் @island @kandiah @ஈழப்பிரியன் @ராசவன்னியன் @குமாரசாமி @Justin @வாலி @தமிழ் சிறி @இணையவன் @ஏராளன் @புரட்சிகர தமிழ்தேசியன் @நிழலி
  7. 1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2ம் இடம் 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 4ம் இடம் 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 3ம் இடம் 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன் 2ம் இடம் 5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 2ம் இடம் 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 2ம் இடம் 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 3ம் இடம் 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 1ம் இடம் 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 1ம் இடம் 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 1ம் இடம் 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 1ம் இடம் 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 4ம் இடம் 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 1ம் இடம் 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 2ம் இடம் 15) தயாநிதிமாறன் திமுக) 1ம் இடம் 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 2ம் இடம் 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 1ம் இடம் 18)ரி ஆர் பாலு ( திமுக) 1ம் இடம் 19)எல் முருகன் (பிஜேபி) 2ம் இடம் 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 1ம் இடம் 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக விஜயகாந்தின் மகன்) 1ம் இடம் 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 1ம் இடம் 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 1ம் இடம் 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்? 1) 5% க்கு குறைய 2) 5% - 6% 3) 6% - 7% 4) 7% - 8% 5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? கூட 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? சுழியம் 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 1 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? சுழியம் 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 1 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? சுழியம் 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? சுழியம் 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? 3 35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? சுழியம் 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) இரெண்டு (விழுப்புரம், விருதுநகர்) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) மூன்று (குமரி, தர்மபுரி, திருநெல்வேலி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 34 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 22 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 1 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 7 (குமரி, விருதுநகர், திருநெல்வேலியில் தோல்வி) 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 1 (தர்மபுரியில் செளம்யா வெற்றி) 43) 23 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 2 - குமரி, திருநெல்வேலி
  8. இந்தியாவோடு இருந்த பிரசானையள் போதாதென்று, ஜெயின் பரம எதிரியான, இந்திய அரசு தேடும் வீரப்பனை, ஜெ ஆட்சியில் வன்னிக்கு தலைவர் எடுத்திருப்பார் என விசயம் தெரியாதோர் நம்பலாம். உண்மையில் இதற்கும் புலிகளுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை. எளிதில் உணர்சிவசபட கூடிய வீரப்பனின் மொக்குதனத்தை பயன்படுத்தி, புலிகள் போல வேடமிட்டு, அவரை வன்னிக்கு போகலாம் என ஏமாத்தி, தமது கட்டுப்பாட்டில் எடுத்து பின் போட்டு தள்ளியது தமிழக உளவுத்துறை. ”ஈழத்தாய்” ஜெ உத்தரவில் இது நடந்தது. புலிகள் வீரப்பனை பற்றி அலட்டி கொள்ளவே இல்லை. ஒரு அஞ்சலி போஸ்டர் கூட இல்லை. ஒரு விடுதலை இயக்கம் - அவர்களுக்கு ஒரு கொள்ளையன் பற்றி ஒரு அக்கறையும் இல்லை என்பது ஏற்புடையதே.
  9. முன்னர் ஒரு திரியில் இப்படி இல்லை. அது முழுக்க முழுக்க இந்திய மக்களால் நடத்தப்படும் கட்சி, ஈழத்தமிழர் காசே கொடுக்க முடியாது என கம்பு சுத்தினீர்களே? பரவாயில்லை - சந்தர்பத்துக்கு ஏற்ப நாக்கை பிரட்டுவது எப்படி என சீமானை பார்த்து கற்று கொண்டீர்களாக்கும். ஆனால், நீங்கள் சொன்னது உண்மை எனில் - என் குரலுல்கான தேவை மேலும், மேலும் உள்ளது என்பதே அர்த்தம். ஆகவே சாம, பேத, தான, தண்டம் எவ்வகையில் அணுகினாலும் - சீமான் பர்னிச்சர் உடைப்பு தொடரும். எனது கூவ கேட்பதை பற்றி எனக்கு கவலை இல்லை. யாழ் களத்தில் ஒரு காலத்தில் சீமான் பிரச்சார திரிகளே ஓடியது. ஒரு அளவுக்கு பிறகு அநேகர் உண்மை விளங்கி விட ஒதுங்கி கொண்டார்கள். சிலர்ருக்கு இன்னும் விளங்கவில்லை. ஆனால் என்போறவர்களின் எழுத்துக்கள் நிச்சயம் ஒரு தாக்கத்தை கொடுத்துள்ளன. சீமான் அரசியலை விட்டு ஓடும் வரை எமது எழுத்துக்கான தேவை இருக்கிறது.
  10. நான் நின்று முக்குவது சீமானை எதிர்க்க. அதன் மூலம் ஈழத்தமிழர் தமிழ் நாட்டு அரசியலில் பக்கம் சாராதவர்கள் என்பதை நிலை நிறுத்த. திமுக வுக்கு கவர் எடுக்க அல்ல. அதை நான் செய்வதும் இல்லை. இரெண்டுமே அதிமுக. அடித்தும் திருத்த முடியாத கழுதைகள். இப்போ தலைவரும் இல்லை….வீரப்பனும் இல்லை….வீரப்பன் மகள் அப்போ பால்குடி….. ஆமை ஓட்டில் படகு பயணம் போனதாக சொன்ன அண்ணன் - இப்படி ஒரு சுப்பர் ஸ்டோரிலைனை விட்டு வைப்பாரா என்ன🤣. 2008 கிழக்கு முற்றாக இழக்கப்பட்டு, வன்னி படிபடியாக இழக்கப்பட்ட நேரம் - புலிகள் வாழ்வா சாவா என போராடிய நேரம் - தலைவர் வீரப்பனை பற்றி புத்தகம் வாங்கிப்படித்தாராமா🤣. இதை 2008 இல் குட்டி பையனாக இருந்தவர் நம்பலாம். எனக்கெல்லாம் 2008 ஏழு கழுதை வயசு - நான் எப்படி நம்புவேன். உங்கள் குலசாமி வீரப்பனை ஜெயலலிதா போட்டு தள்ளிய போது, அண்ணியின் அப்பா காளிமுத்து என்னவாய் இருந்தார்?
  11. அவரும் வரம்பு மீறவில்லை. நானும் மீறவில்லை. சீமானை எதிர்த்து எழுதுவோர் பயத்தில் எழுதுவதாக எழுதினார் - அதை மறுத்து நான் கருத்து எழுதியுள்ளேன். அதே போல் யாழில் நாம் குத்தி முறிவது வீண் வேலை என்றார் - ஆம் இரு பக்கத்திலும் அது வீண்வேலையே என அவருடன் உடன்பட்டேன். ஏன் எண்டால் நான் திமுக அனுதாபியோ அல்லது கருணாநிதி குடும்ப வக்கீலோ அல்ல. ஆகவே அவர்களை defend பண்ணி மினெக்கெட நான் தயாரில்லை. சீமானை எதிர்ப்பவர் = திமுக ஆதவாளர் என்பது நீங்கள் போட்ட தவறான சமன்பாடு. நான் சீமானை எதிர்க்க ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் உண்டு, திமுக ஆதரவு அதில் ஒன்றல்ல.
  12. தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.
  13. இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்? ——————————————————— வாக்கு பதிவு சதவீதம் பற்றிய இரு வேறுபட்ட தலவல்கள் வந்ததன் பிண்ணனி. 👇 ———————————— 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம் VigneshkumarPublished: Saturday, April 20, 2024, 20:16 [IST] சென்னை: தமிழ்நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், சுமார் 24 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு இன்று மாலை தான் இறுதி வாக்கு சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம். வாக்குப்பதிவு: அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பதிவான வாக்குகள் எத்தனை என்பதில் குழப்பமே நிலவி வந்தது. நேற்று மாலை முதலில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாநிலத்தில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். ஆனால், நள்ளிரவில் வெளியான மற்றொரு டேட்டாவில் வாக்கு சதவிகிதம் 69.46% என்று கூறப்பட்டு இருந்தது. இதுவே பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இரண்டு முறை இது குறித்த செய்தியாளர் சந்திப்பு தள்ளிப்போனது. 12, 3 இரண்டு முறை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். இது பல வித கேள்விகளை எழுப்பியது. தாமதம்: எப்போதும் தேர்தல் முடிந்து மறுநாள் காலையே இறுதி நம்பர் வந்துவிடும். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு முடிந்து 24 மணி நேரம் கழித்து இன்று மாலை தான் இறுதி டேட்டா வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 69.45% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாகத் தருமபுரியில்81.48% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. மாவட்ட ரீதியான தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஆனதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த தேர்தல்களில் நள்ளிரவில் ஒரு டேட்டா வரும். தொடர்ந்து காலை இறுதி நம்பர் வரும். தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் இருந்து இறுதி டேட்டா வர தாமதம் ஆகும். அதுவே இறுதி வாக்கு சதவிகிதம் மறுநாள் வரக் காரணமாக இருக்கும். அதுவும் கூட ஓரிரு சதவிகிதம் மட்டும் மாறுபடும்.. அதுவும் இறுதி நம்பர் அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்துள்ளது. என்ன காரணம்: இந்த இறுதி நம்பர் என்பது நள்ளிரவில் வெளியான டேட்டாவுடன் கிட்டதட்ட ஒத்துப் போய் தான் இருந்தது. ஆனால், மாலை வெளியான டேட்டா உடன் ஒப்பிடும் போது தான் பெரியளவில் முரண்பாடு இருந்தது. காரணம் projecton எனப்படும் அனுமானத்தை வைத்து மாலையில் இறுதி நம்பரை கொடுத்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. தாமதம் ஏன்: வாக்குப்பதிவுக்கு புதிய செயலியை அவர்கள் பயன்படுத்திய நிலையில், அதில் இருந்த டேட்டாவை வைத்து புரோஜக்ஷன் அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கொடுத்ததே டேட்டா தவறாகக் காரணமாக இருந்துள்ளது. ஏற்கனவே இப்படி ஒரு முறை தவறு நடந்துவிட்டதால்.. மீண்டும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகவே மாவட்ட வாரியாக பெற்ற தகவல்களை ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்துவிட்டு இறுதி செய்துவிட்டு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ளனர். இதுவே தாமதத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-behind-delay-in-final-polling-percentage-number-in-tamilnadu-599947.html
  14. 100% உண்மை. இந்த குத்தி முறிதலில் - சக யாழ் கள கருதாளர்கள் சீமானை இட்டு பயப்படுகிறார்கள் என்ற கற்பனையும் அடங்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
  15. தீப்பொறி ஆறுமுகம்….. நாஞ்சில் சம்பந்த்…….. தூசண துரை முருகன்…. சிவாஜி கிருஸ்ணமூர்த்தி….. சீமான்….. இப்படி ஆபாசம் தூக்கலான மேடை பேச்சால் கொஞ்சம் இரசிகர்களை சேர்கும் தலைமை கழக பேச்சாளர். தமிழ் நாட்டு அரசியலில் இதுதான் இவருக்கான இடம், வரிசை. சிறந்த தலைவர் எல்லாம் - வாய்பில்ல ராஜா, வாய்ப்பில்ல.
  16. இந்த திரியில் சரியாக ஒரு கிழமைக்கு பின் வந்து கருத்து எழுதுகிறேன்.
  17. நான் எழுதுவது அல்லது எழுத போவதாக சொல்வது 4ம் தர சரோஜாதேவி கதைகளோ, படங்களோ அல்லவே அண்ணை? ஆகவே அனுமதி தேவையில்லை. ஊக்குவிப்புக்கு நன்றி🤣 ஓம்….இன்னும் கனக்க இருக்கு….அண்ணனின் டகால்டி வேலைகளை …… விடிய விடிய பேசிக்கொண்டே இருக்கலாம்🤣
  18. பதவிக்கு வரும் முன்னே இவ்வளவு தில்லாலங்கிடி - இவரை நம்பி ஆற்றையும், மலையையும் கொடுத்தால்? போன தடவை தேர்தல் பத்திரத்தில் எத்தனை குளறுபடி? பதவிக்கு வர முன்னம் கருணாநிதி கூட இப்படித்தான் இருந்தார். இதை மக்கள் புரிந்தபடியால்தான் 2016 இல் இருந்து சத்துணவு முட்டையை மட்டும் கொடுக்கிறார்கள். நீங்கள் இவரை லிஸ்டில் சேர்கிறீர்களோ இல்லையோ அதில் ஒரு பலனுமில்லை. தமிழக மக்கள் இவரை அந்த லிஸ்டில் சேர்த்து கனகாலம். அடுத்த தேர்தலில் விஜை முதுகில் சவாரி செய்ய ஆசைபடுகிறார். பார்ப்போம். வட்டுக்கோட்டை!🤣
  19. 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். # பயம் #தான் #கொள்ளி🔥🔥🔥🤣
  20. மனசை தளரவிட வேண்டாம் என அவருக்கு சொல்லவும்🤣
  21. இல்லை இங்கே யாழ் களத்தில் நீங்கள் முதுகு சொறியும், உள்ளடிவேலைகள் பார்க்கும், உங்களுக்கு கொமிசன் இரக்கும் - இலங்கை தமிழ் அரசியல்வாதி. என்னைய்யா இது…. இப்டீக்கா திருப்பினா புதுசு… அப்டீக்கா திருப்பினா பழசு…. என மாறி…மாறி….இரெண்டு “தரவுச் சிங்கங்கள்” உருட்டினா ….. எதையிம் வெள்ளந்தியாக நம்பும் ஒரு அப்பாவி…அதை நம்பும்தானே🤣 🤣 சீதை தீக்குளித்து தன்னை நிரூபித்தால்…. நான் ஒரு டி குடித்தாவது என்னை நிருபிக்கலாம்…. எங்க பில் 800 ரூபாய்க்கு வருமோ என அஞ்சுகிறேன்🤣
  22. சென்ரல் கொமாண்டின் மறுப்பு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.