Everything posted by goshan_che
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
நேற்று மதியம் கேர்ச் பாலம் உட்பட கிரைமியாவின் சில இடங்களை உக்ரேன் தாக்கியது. கேர்ச் பாலத்தில் தாக்குதலை திசை திருப்பும் புகையை ரஸ்யா பாவித்துள்ளது.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
நீண்ட கால நோக்கில் தரலாம் என நினைக்கிறேன். ஆனால் எங்கே வாங்குவது? நான் பாவிக்கும் platform மூன்றிலும் USD/RUB இணையை வாங்க முடியாது. ————————- XRP வழக்கில் programmatic sales பற்றிய நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய அனுமதி கோரும் கடிதத்தை (அதே நீதிபதியிடம்) SEC நேற்று கையளித்துள்ளது. Securities Laws ஐ மீறினர் என்ற இரு ரிப்பிள் அதிகாரிகள் மீதான வழக்கின், யூரி வழக்குக்கான தேதியை நீதிபதி தோராயமாக அறிவித்துள்ளார்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
மிகவும் உ.ப.ப.செய்தி மஸ்கோவின் பிரதான விமானநிலையமான Domodedovoவில் வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன, என்கிறன உக்ரேனிய கணக்குகள்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
உ.ப.ப செய்தி 1. மொஸ்கோ புறநகரில் உள்ள ஒரு தொழில்சாலையில் பாரிய வெடிப்பு (explosion). 50 பேர் வரை பலி என அஞ்சப்படுகிறது. 2. போராயுதங்கள் உள்ள தொழில்சாலை என உக்ரேன் ஆதரவு கணக்குகள் ஊகம். 3. அண்மையில் மொஸ்கோ மீதான தானியங்கி விமான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது.
- ஓயாத நிழல் யுத்தங்கள் – 1
- IMG_3237.jpeg
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
உ.ப.ப செய்தி 1. கிரைமியாவின் கேர்ச் பாலத்தில் 3 குண்டு வெடிப்புகள் 2. SIG எனும் ரஸ்ய எண்ணை கப்பல் மீது ஆளில்லா, தற்கொலை சிறு விமானங்கள் தாக்குதல்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
லாபம்தான். ஆனால் எதிர்பார்த்த அளவு இன்னமும் எட்டப்படவில்லை. முன்னரே திட்டமிட்ட 5% கையிருப்பை விற்கும் லாப நிலையை எட்டாமையால் - விற்கவிக்கவில்லை. Dollar average படி பார்த்தால் பேப்பரில் லாபம் என கருதலாம். ஆனால் வீட்டில் உள்ள equity போலத்தான் இப்போ - வெறும் பேப்பரில் மட்டும்தான் லாபம். விலை ஒரு டாலருக்கு கீழே இருக்கும் வரை கொஞ்சம் கொஞ்சமாக வாங்குவது என்ற முடிவின்படி இப்போதும் மேலும் வாங்கும் நிலையில்தான் நிற்கிறேன். பார்க்லாம் - ஆளாளுக்கு 586, 120, என்றெல்லாம் புழுகுகிறார்கள். 20$ ஐ அடைந்தாலே அதை எடுத்து வேறு ரிஸ்க் குறைவாம முதலீட்டில் போட்டு விட்டு இருக்கலாம். ஆனால் எப்போதும் 20% கையில் வைத்திருப்பதே எண்ணம்.
- IMG_2915.jpeg
- IMG_2830.jpeg
- IMG_2831.webp
- IMG_2829.webp
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
இரஸ்ய பாதுகாப்பு மந்திரி ஷைகோ வட கொரியாவுக்கு விஜயம் செய்துள்ளார்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
மிகவும் உறுதிப் படுத்தப்படாத செய்தி Svatove-Karmazynivka பகுதியில் முன்னரங்கில் இருந்து கார்கிவ் ஒப்லாஸ்ட் நோக்கிய திக்கில் ரஸ்ய படைகள் முன்னேறியுள்ளதாய் - ரஸ்ய சார்பு கணக்குகள் கூறுகிறன.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
17 ஆபிரிக்க நாட்டு தலைவர்களை ரஸ்யா-ஆபிரிக்கா உச்சி மாநாட்டில் சென் பீட்டர்ஸ்பேர்கில் வைத்து நாளை மறுநாள் சந்திப்பாராம்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
மிகவும் உறுதிப் படுத்தப்படாத செய்தி பஹ்மூத் நகரின் மத்திக்கு அருகான Klishchiivka எனும் இடத்தை ஒரு தொகுதி உக்ரேனிய படைகள் அடைந்துள்ளதாக, அல்லது நெருங்கி விட்டதாக உக்ரேன் சார்பு கணக்குகள் சொல்கிறன.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
கொத்து குண்டுகளின் தாக்கம் போர்முனையில் தெரிய ஆரம்பித்துள்ளதாக அமெரிக்கா கூறுகிறது. அண்மையில் ஒரு உக்ரேனிய தளபதியின் பேட்டி கேட்டேன் - ஒரு போதும் சனநடமாட்டம் உள்ள இடங்களில் இவை பாவிக்கப்பட மாட்டாது - ஏன்றால் அந்த சனங்கள் உக்ரேனிய குடிகள் என கூறுகிறார். காலம்தான் உண்மை எதுவென காட்டும்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
இதெல்லாம் இராஜதந்திர கணக்கு, உங்களை போன்ற சாமன்யர்களுக்கு விளங்காது🤣. பிகு இந்த மாதிரி கட்டுரைகளை எல்லாம் வரிக்கு வரி படிக்கும் உங்கள் பொறுமைக்கு ஒரு சபாஷ். ஜோதி மீனா, சை…குமார்… போல பல, ஸ்மிதாக்கள், சாந்திகள், குயிலிகள் தான் தமிழ்கூறு நல்லுலகில் இதை பற்றி எழுதுகிறார்கள். யாழ் களத்துக்கு அப்பால், வேறு எங்கும் தரவு அடிப்படையில் இந்த விடயத்தை அணுகி, தமிழில் நான் காணவில்லை.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
XRP வழக்கின் தீர்ப்பின் பின் escrow வில் இருக்கும் பெருந்தொகை XRPயின் சட்டப்படியான நிலைப்பாடு என்ன என்பதை விபரம் அறிந்தோர் பின் வருமாறு விளக்குகிறனர். 1. இந்த XRP ஐ எரிக்க வேண்டிய தேவை இல்லை (burn). 2. இந்த XRP ஐ அமெரிக்காவில் வைத்து, பெரு நிறுவனங்களுக்கு விற்க முடியாது. 3. ஆனால் அமெரிக்காவுக்கு அப்பால், ரிப்பிள், நிறுவனங்கள் இடையே உருவாகும் ஒப்பந்தங்களை இந்த தீர்ப்பு கட்டுப்படுத்தாது. ——— அநேகமாக escrow வில் உள்ள XRP - புழக்கத்தில் வர, அதை பிறிதொரு வழியால் அமெரிக்க பெரு நிறுவனங்களும், நேரடியாக ஏனைய நாட்டு நிறுவனங்களும் வாங்க தடை இல்லை. சில்லறை வியாபாரம் - அநேகமாக அனைத்து அமெரிக்க கிரிப்டோ எக்ஸ்சேஞ்சுகளும் XRP ஐ மீள விற்க தொடங்கி விட்டன. இந்த வழக்கில் முன்னர் விட்ட பிழைக்கு ரிப்பிள் கட்ட வேண்டிய அபராதம், இந்த பிழையில் உதவியில் ஈடுபட்டனரா (aiding & abetting securities law breach) என இரு ரிப்பிளின் இரு அதிகாரிகள் மீது ஜூரி விசாரணை - இவைதான் இதில் ரிப்பிளிக்கு பாதகமாக வந்துள்ளது. ஆனால் இது கடந்தகாலம் பற்றியது. தவிரவும் அபராதம் கட்டும் படி ஆனாலும் அது ரிப்பிள் நிறுவனம், இரு அதிகாரிகளின் பிரச்சனை மட்டுமே. XRP ஐ பொறுத்த மட்டில் - அடுத்து SEC அப்பீல் செய்தால், அதன் பின் 2025 அளவில் அந்த அப்பீல் முடிவு வரும் வரை - XRP ஒரு security அல்ல.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
- ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
145ஆவது குந்தருகே (pillar) பாலம் உடைவாம்.- ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
மிகவும் உறுதிப்படுத்தப்படாத, விருத்தி அடைந்து கொண்டிருக்கும் செய்தி. கிரைமியா பாலத்தில் மீண்டும் வெடிப்பாம். சிலர் இது மாஸ்கோவில் ஒரு பாலம் எனவும் சொல்கிறனர்.- பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
நேற்று ஒரு விடயம் எழுதாமல் விடப்பட்டு விட்டது. வெளிவந்த தீர்ப்பை பலர் தவறாக விளங்கி கொண்டுள்ளார்கள். இதில் சில Fox News அறிவிப்பாளர்களும் அடக்கம். XRP is sometimes a security, sometimes it’s not (XRP சில நேரத்தில் பங்கு போலவும், சில நேரத்தில் பங்கு அல்ல எனவும் கருதப்படும்) - என தீர்ப்பு கூறுவதாக இவர்கள் எழுதுகிறார்கள். இது மிக தவறான புரிதல். இவர்களுக்கு சட்டம், தீர்ப்புகள் பற்றிய புரிதல் இல்லை என நான் அனுமானிக்கிறேன். ரிப்பிள் நேரடியாக institutional investors ற்கு விற்ற பங்குகள் மட்டுமே securities. மிகுதி எதுவுமே அல்ல. இனிமேலும் ரிப்பிள் நேரடியாக institutional investors ற்கு விற்றால் அதுவும் security (ஆனால் ரிப்பிள் அப்படி இனி செய்யாது).- பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
இனி என்ன நடக்கலாம்? அதற்கு முன் - கவனிக்க. இந்த XRP பங்கா, நாணயமா என்ற குழறுபடி அமெரிக்காவில் மட்டும்தான். யூகே, ஈயூ, சிங்கப்பூர் என பல நாடுகள் கிரிப்டோ கரன்சியை பங்கு அல்ல என ஏற்றுகொண்டு விட்டன. 1. ரிப்பிள் பெரு நிறுவனங்களுக்கு விற்றது பங்கு என தீர்ப்பு ஆனது என முன்னர் பார்த்தோம் அல்லவா? ஆகவே இனி ரிப்பிளால் அப்படி விற்பதும் முடியாது. ஆனால் பெரு நிறுவனங்கள் வாங்கினால்தானே XRP விலை கூடும் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் ரிப்பிளிடம் நேரடியா வாங்க முடியாவிடில் பெரு நிறுவனங்கள் எங்கே XRP ஐ வாங்கலாம்? 1. வெளிநாடுகளில் (பின்னர் தம் அமெரிக்க கணக்குக்கு மாற்றலாம்) 2. அல்லது அமெரிக்காவில் வாங்குவதாயின் எம்மை போல சாதாரண சில்லறை வர்தகர்களிடம், அமெரிக்க கிரிப்டோ எக்ஸ்சேஞ்களில். உண்மையில் இப்படி நடந்தால் - சில்லறை XRP வைத்திருப்போர் காட்டில்- பண மழை கொட்ட வாய்பிருக்கிறது. 2. பெரு நிறுவனங்கள் programic sales இல் வாங்கலாம். 3. Escrow என்று மாதாதந்தம் தானியங்கியாக XRP பெருந்தொகை சந்தைக்கு திறந்து விடப்பட்டு, சிறிது நேரத்தில் மீண்டும் உபரி XRP பூட்டப்படும். இந்த முறை தொடரலாமா இல்லையா என்பதில் யாருக்கும் தெளிவில்லை. ரிப்பிளின் முதன்மை தொழிநுட்ப அதிகாரி கூட - இதை நாம் இன்னும் ஆராய்ந்து கொண்டே இருக்கிறோம் என்கிறார். இந்த முறை தடைப்பட்டாலும், XRP விலை சடுதியாக கூட வாய்ப்புண்டு. ஆனால் போதிய அளவு XRP circulation இல் இல்லாவிடில் அது பரிவர்த்தனையை கடுமையாக்கும், நேரம் எடுக்கும் இது XRP யின் விலையை குறைக்கும். 4. வழக்குக்கு என்ன நடக்கும். 785 மில்லியன் வித்த வழக்கு - தன்பாட்டில் நடக்கும். இரு பகுதியும் சமரசமாய் போகவும் கூடும். ஆனால் அது ரிப்பிளின் முந்தைய நடவடிக்கை பற்றியது. இதனால் XRP விலை அதிகம் பாதிக்கப்படாது. 5. XRP பங்கு இல்லை, மற்றும் ஏனைய 3 முகாந்திரங்களில் - கிடைத்த தீர்ப்பை எதிர்த்து SEC அடுத்த appellate court, அதன் பின் Supreme Court போகலாம். ஆனால் பல சட்ட வல்லுனர் கருத்துப்படி அப்பீல் வெல்வது கடினம் என்கிறார்கள். நீதிபதியின் காரணங்கள் காற்றுபுகாத அளவுக்கு இறுக்கமாகவே எனக்கும் படுகிறது. அப்படியே அப்பீல் செய்தாலும் அதில் முடிவு வர 2025 க்கு மேல் ஆகும். அதற்குள் ஆட்சி மாறலாம். பல விடயங்கள் நடக்கலாம். காங்கிரஸே சட்டம் மூலம் - கிரிப்டோவை கட்டுப்படுத்தலாம். ஆனால் அதுவரை பிட்காயினும், XRP யும் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட கிரிப்டோ சொத்துக்களாய் இருக்கும்(ஏனைய பல காயின்கள் மீது SEC கண் வைத்துள்ளது) . 6. அதே போல் இந்த தீர்ப்பு எதூரம் தவிர்ந்த ஏனைய கிரிப்டோக்களுக்கு ஒரு நல்ல செய்தியே. அதேபோல் அங்கீகரிக்கப்படாத பங்கு விற்பனையில் ஈடுபட்டதாக SEC வழக்கு போட்டுள்ள Coinbase போன்ற எக்ஸ்ச்செஞ்சுகளுக்கும் இது நல்ல செய்தியே. 7. மிக முக்கியமாக இப்போ இருக்கும் சட்ட ஆசீர்வாதத்தை (regulatory clarity) பயன்படுத்தி பெரு நிறுவனங்களிடையான உலக நிதி பரிவர்தனை வியாபாரத்தை XRP கைப்பற்றினால் ! இதற்கு கணிசமான வாய்ப்பு உள்ளது.- பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
XRP வழக்கு - ஒரு பின்னோட்டம் கலைச்சொற்கள்: 1. பாதுகாப்பு-முதலீடு -security - இலகுவாக விளங்கி கொள்ள ஒரு வியாபாரத்தின் பங்குகள் - பாதுகாப்பு-முதலீடுகள். 2. நாணயம் - currency வழக்கின் பின்புலம் நிதி வர்த்தகம் பொதுவாக மூவகைப்படும். 1. பாதுகாப்பு முதலீடுகள் shares, security tradings - உதாரணம் ஒரு நிறுவனத்தின் பங்குகள். 2. நாணய வர்த்தகம் currency trading - உதாரணம் டாலர் வர்த்தகம், பிட்காயின் வர்த்தகம். 3. நுகர்பொருள் வர்த்தகம் - commodity trading - உதாரணம் - பெற்றோல், கோதுமை. கடைசி இரண்டையும் விட பாதுகாப்பு-முதலீடு வர்த்தகம், பங்கு விற்பனை என்பன அதிகம் அரசால் கண்காணிக்கப்படுவன. அதற்கு பல விதிமுறைகள் உண்டு. இதை கண்காணிக்கும் அமெரிக்க அரச நிறுவனம் Securities & Exchanges Commission. சுருக்கமாக SEC. என்ன வழக்கு? XRP என்பது ஒரு கிரிப்டோ சொத்து crypto asset. Ripple என்பது ஒரு நிறுவனம். இதன் உலகளாவிய, மிக விரைவான நாணய பரிவர்த்தன வலையமைப்பு - Ripple net. இந்த பரிவர்தனையில் பயன்படுத்த ரிப்பிள் உருவாக்கிய கிரிப்டோ குற்றி (crypto coin) தான் XRP. XRP யை ரிப்பிள் விற்பனை செய்தது ஒரு வகை - பங்கு/பாதுகாப்பு/security வர்தகம் என்று கூறி SEC ரிப்பிள் நிறுவனம், அதன் நிர்வாகிகள் இருவர் மீது வழக்கு போட்டது. XRP வழக்கில் XRP யின் விற்பனை ஒரு பங்கு விற்பனையா? இல்லையா என்பதையே நியூயார்க் சேர்கிட் நீதிபதி டொரேஸ் முடிவு செய்ய வேண்டி இருந்தது வழக்கின் முகாந்திரம் என்ன? SEC பின் வரும் முகாந்திரங்களில் வழக்கு தொடர்ந்தது 1. XRP காயினை, institutional investors எனப்படும் பெரிய நிதி நிறுவனங்களுக்கு ரிப்பிள் 785 மில்லியன் அளவில் விற்பனை செய்தத்து- இது ஒரு பங்கு வர்த்தகம். 2. XRP யை programic sales எனப்படும், தானியங்கி முறையில் ரிப்பிள் விற்றது. இதுவும் ஒரு பங்கு வர்த்தகம். 3. XRP ஐ - ரிப்பிள் ஊழியர்கள் வாங்கி விற்றனர். இதுவும் ஒரு பங்கு வர்த்தகம். 4. XRP ஐ, கிரிப்டோ எக்ஸ்சேஞ்சில், சில்லறை வர்தகர்கள் வாங்கி விற்றனர். இதுவும் ஒரு பங்கு வர்த்தகம் (secondary sales). தீர்ப்பு என்ன? மேலே குறிப்பிட்ட 4 முகாந்திரங்களில் கடைசி 3 இல் XRP ஒரு பங்கு/பாதுகாப்பு இல்லை என தீர்ப்பு வந்துள்ளது. முதலாவது முகாந்திரமான ரிப்பிள், நிறுவனமயபட்ட முதலீட்டாளருக்கு விற்ற 785 மில்லியன் பெறுமதியான XRP பரிவர்த்தனை மட்டுமே பங்கு வர்த்தகம் என நீதிபதி கூறியுள்ளார். தீர்ப்பின் அடிப்படை என்ன? Howey என்ற ஒரு வழக்கே, எது பங்கு வர்த்தகம், எது பங்கு வர்தகம் இல்லை, என்ற வரையறையை தருகிறது. அதிகம் சட்ட நுணுக்கத்துள் போகாமல் சொல்லுவதாயின் - ஒரு விடயம் பங்கு வியாபாரமாக கருதப்பட - அதை வாங்குபவர், அதை விற்பவர் அல்லது அவரின் முகவர் இந்த பொருளை லாபமீட்ட வைக்க உழைப்பார் என்ற உறுதி மொழி அடிப்படையில் அந்த பொருளை வாங்கி இருக்க வேண்டும். அதாவது நான் இன்று ஒரு XRP ஐ. 1 பவுனுக்கு வாக்கினால், ரிப்பிளின் முயற்சியால் நாளை அது 10 பவுனாகும் என நம்பி நான் வாங்கினால், எனக்கும் ரிப்பிளிக்கும் இடையில் ஒரு முதலீட்டு ஒப்பந்தம் உருவாகி விடும் (investment contract). அது பங்கு வர்த்தகம் ஆகும். XRP வழக்கில் ஒரே ஒரு விடயத்தை தவிர மிகுதி 3 விடயங்களில் ripple நிறுவனம், அதன் இரு நிர்வாகிகள் சார்பாகவே தீர்பு வந்துள்ளது. அந்த ஒரு விடயம் யாதெனில்: ரிப்பில், நிறுவனமயப்பட்ட பெரு நிதி நிறுவனங்களுக்கு XRP விற்ற போது அவர்கள் ரிப்பிளின் முயற்சியை நம்பியே அதை வாங்கினர். ஆகவே இது மட்டுமே - பங்கு வர்த்தகம். இதில் ஈடுபட்டமைக்காக, ரிப்பிள் அபராதம் கட்ட வேண்டி வரும். இரு நிர்வாகிகள் தமது பங்கு பற்றி ஜுரிகள் முன் சிவில் வழக்கை அடுத்த வருடம் சந்திப்பர்கள். ஆனால்…. மிக தெளிவாக அதன் தனிபட்ட நிலையில் XRP ஒரு பங்கு அல்ல என நீதிபதி கூறியுள்ளார். அதேபோல் விற்பது ரிப்பில்தான் என தெரியாமல் வாங்கும் வர்தகங்களான, ஊழியர்களிடையான XRP வர்த்தகம், தானியங்கி வர்த்தகம் programic sales, சில்லறை வர்த்தகம் என்பன பங்கு வர்த்தகம் இல்லை எனவும் கூறியுள்ளது. ஆகவே, XRP ஒரு பங்கு இல்லை (ரிப்பிள் தானான தேடி போய் விற்ற (promote) XRP மட்டுமே பங்கு என கூறியதன் மூலம் வழக்கின் அடிப்படை புள்ளியில் SEC இற்கு எதிராகவே இந்த தீர்ப்பு வந்துள்ளது. ஆகவே SEC இற்கு தோல்வி. ரிப்பிள், சில்லரையாக XRP வைத்திருப்போருக்கு பெரிய, கொண்டாடவேண்டிய வெற்றிதான். XRP/டாலர் விலை 0.47 இல் இருந்து 0.80 க்குமேல் போய் இப்போ 0.72 இல் நிற்பதே இதற்கான சாட்சி எனலாம். (அடுத்த பதிவில் இனி என்ன நடக்கும் என்பதை கொஞ்சம் ஜோசியம் போல ஆராய்ந்து பார்க்கலாம்). - ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.