Jump to content

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    15592
  • Joined

  • Last visited

  • Days Won

    174

Everything posted by goshan_che

  1. 👍🏿 / 1986இல் நாவற்குழி இராணுவ முகாம் மீதான தாக்குதல் முயற்சியில் இவரது சகோதரன் சித்தாத்தன், லெப். கேணல் பொன்னம்மான் அவர்களுடன் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். இவரே சங்கர் அவர்களை தமிழீழத் தேசியத் தலைவருடன் தொடர்புபடுத்தியவர். இவரின் இன்னொரு சகோதரன் கப்டன் கரன் இந்திய-சிறீலங்கா கூட்டுச் சதியால் லெப். கேணல் குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிருவேங்கைகளில் ஒருவராக ‘சயனைட்’ அருந்தி வீரச்சாவை அணைத்துக்கொண்டார். 2000ஆம் ஆண்டில் ஓயாத அலைகள் நடவடிக்கையின்போது சிறீலங்கா இராணுவத்தின் எறிகணைவீச்சில் மேலும் இரு சகோதரர்கள் யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட, மற்றொரு சகோதரன் கொழும்பில் தமிழ்த் துரோகக் கும்பல் ஒன்றினால் அழிக்கப்பட்டார். / http://www.errimalai.com/?p=15100
  2. வீரவணக்கங்கள்! எனக்கும் இது போல சிலர் இருக்கிறார்கள். (நம்மில் பலருக்கும் இருப்பார்கள்). உங்கள் எழுத்து அந்த நினைவுகளையும் கிளரிவிட்டது.
  3. இந்த தண்டின் அடிபாகம் இனிக்கும். எனக்கும் நல்ல விருப்பம். ஆனா இதை சாப்பிட்டா வயித்தில சீனி புழு வரும், சூரியன் படாதா இடத்தில கடிக்கும் எண்டு அம்மம்மா கிழவி பயங்காட்டியதால், அளவோடு சாப்பிடுவேன்.
  4. அஜித் படமெண்டா செங்கலடி ல கட் அவுட், அபிசேகம் எல்லாம் நடக்கும்.
  5. இலங்கையிலும் இப்ப இந்த விளையாட்டுகள் படு பிரபலம்.
  6. 3 தான் விடை. 3 வது கிளாசுக்கும் 7 வது கிளாசுக்கும் இடையே போகும் குழாய், 3வது கிளாசில் சேரும் இடத்தில் மூடி இருக்கு. 3 இல் இருந்து 7 க்கு திரவம் போகாது. 5வது கிளாசுக்கும் இதே காரணம்தாம். 5, 6, 7ம் கிளாசுகளுக்கு ஒரு போதும் திரவம் செல்லவே முடியாது. பின்னர் எப்படி நிரம்பும்?
  7. ஒரு சர்ஜிகல் ஸ்டிரைக் செய்ய வக்கில்லாத ஆளா ராம்?
  8. நிச்சயமாக. முதலில் மலையாளப் பாடலை கேடதாலோ என்னமோ எனக்கு அதுவே பிடிக்கிறது. இன்னொரு திரியில் உங்கள் பிள்ளைகள் பற்றிய செய்தி கண்டேன். வாழ்துகள். ஈன்ற பொழுதிற்பெருதுவப்பாள் தன்மகவை சான்றோன் எனக் கேட்ட தாய்.
  9. இதன் ஒரிஜினல் மலையாள வேர்ஷன் இன்னும் நல்லாயிருக்கும்.
  10. சத்தியமா தெரியாதக்கோய். கருணா இல்லை என்பது தெரிகிறது. ஆனால் ஆள் ஆரெண்டு தெரியேல்ல. முன்பு புலிகள் தம் பிரசுரங்களில் வீடியோ எல்லாத்திலும் மாத்தையா, கருணா வகையறக்கள் வரும் காட்சிகளை நீக்கி விட்டே வெளிவிடுவார்கள். ஓயாத அலைகள் சண்டை கொப்பியை கூட, எடிட் செய்து தரவேர்றினார்கள். ஆனா இப்போ அவர்கள் இல்லை என்ற மிதப்பில், அவர்களின் ஆதரவாளர்களே சர்வ சாதாரணமாய், ஆமி முள்ளிவாய்க்காலில் எடுத்து வந்த படங்களை பகிர்வது, முரண்நகையாக உள்ளது.
  11. இப்படியான உத்தமர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தோம் என்பதை தவிர, கொழும்பிலும், அவுஸ்ரேலியாவிலும், இன்னும் உலகெங்கிலும் நாம், கொம்படியூடாக கடத்தி வந்து வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த அற்ப வாழ்க்கைக்கு ஒரு பெருமை இருக்கப் போவதில்லை. 4 ஏ எடுத்தாலும், வாழ்க்கையில் பல சிகரங்களை தொட்டாலும் ஜூட் பிரகாசாலோ, எம்போன்றவர்களாலோ நாம் தெரிந்தே வராலாற்றுகடமையை தவற விட்டோம் என்ற குற்ற உணர்ச்சியை மறக்கவியலாது. விபிசணா கடுப்பாகக்கூடும், ஆனால் அந்த உதாரணம் எம் போராட்டத்தின் மாபெரும் உண்மையை பட்டவர்தனமாய் வெளிப்படுத்தி நிக்கிறது என்பதே உண்மை. இதை எழுதிய ஜூட் பிரகாசுக்கு ஒரு ரோயல் சல்யூட்.
  12. வாழ்த்துக்கள் கொழும்பார். அவரையும் மாற்று கருத்து மாணிக்கம் எண்டு நினைச்சிட்டாங்கள் போல, அதுதான் ஒருத்தரும் வாழ்தேல்லப் போல.
  13. நான் மாத்தாமலே என் அவதார் முன்னைய அவதாருக்கு (சேகுவாரா) மாறி விட்டது! துளசி கேட்டதனால் மணிவாசகனுக்காக சேகுவாராவில் இருந்து பிளேட்டோவுக்கு மாத்தினேன். இப்போ மறுபடியும் காம்ரேட் சுருட்டுப்பிடிக்கிறார் :)
  14. சமர்களநாயகா, உன்னை உருவகித்து வாங்கிய பச்சைத்தொப்பி இன்னும் அப்படியே இருக்கிறது. கொக்குத்தொடுவாயோ கிட்டத்தட்ட பறிபோயே விட்டது. வீரவணக்கம்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.