Everything posted by goshan_che
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இன்னொரு முள்ளிவாய்க்காலை இஸ்ரேல் நடத்தப்போகிறது. இதை இஸ்ரேல் நடத்தும் போது வாயை திறக்காமல் மேற்கு+இந்தியா, சீனா, தென்னமரிக்க நாடுகள், ஏன் ரஸ்யா கூட இருக்க தேவையான தரவை கமாஸ் ஏலவே வழங்கி விட்டது. ஈரானும், ஹிஸ்புல்லாவும் ஏதாவது முனைய கூடும். துருக்கி+ அரபு நாடுகள் அறிக்கைக்கு அப்பால் நகர்வது சந்தேகமே. ராக்கெட் தீரும் வரை கமாஸ் சுடும். ஹமாசின், உள்ளே போன காடையர்களின் அட்டூழியத்துக்கான முழுப் பலனை அடையப்போவது காஸா வாசிகளே. Uncle Sam நேரடியாக இறங்கும் வரை வாய்ப்பில்லை. இறங்க மாட்டார் என்றே நினைக்கிறேன் (ஹமாசை அடிக்க அவர் தேவையில்லை, இஸ்ரேல் போதும், தவிர இது சவுதி, ஜோர்டானை சங்கடப்படுத்தும்).
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
மிக தவறான புரிதல். 1. ஆபிரகாம் யூதர்தான். முஸ்லீம்கள் அவரின் மகனான இஷ்மேல் (இஸ்மாயில்) ஐ, அரபிகளின் (முஸ்லிம் அல்ல, இஸ்லாம் என்ற மதமே அப்போ இல்லை) தந்தையாக கருதுகிறனர். நீங்கள் தந்த இணைப்பிலேயே இது சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இது அரபிகளின் நம்பிக்கை மட்டுமே. 2. ஆனால் அரபிகள் இப்படி கோரினாலும் கூட - இப்போ இஸ்ரேல் என அறியப்படும் நிலப்பரப்பில் யூத அரசுகளே ஆதி காலத்தில் இருந்தன. அங்கே அரபிகள் என இப்போ அடையாளம் காணப்படுவோரின் மூதாதைகளும், சமேரியர்களும் இன்னும் பல குழுக்களும் வாழ்ந்தன. ஆனால் நாடு யூத நாடாகவே இருந்தது. அவர்களின் கோவில்கள் இருந்தன. அப்போ அரபுலகம் என்பது இல்லை. ஜெருசலேமில் Temple Mount இல் கி மு சில நூற்றாண்ட்டுக்கு முன்பே யூதக்கோவில் இருந்தது. அதன் பிந்தான் ஜேசு பிறப்பு, அதன் பின் தான் கிறிஸ்தவ தேவாலயங்கள், அதன் பிந்தான் அரேபியாவில் முகமது பிறந்து - இஸ்லாம். அதன் பின் கிபி 650 இன் பின் அங்கு கட்டபட்டது தான் இப்போ எமது 3வது புனித ஸ்தலம் என முஸ்லிம்கள் கூறும் அல் அக்சா மசூதி. 3. இவ்வளவு ஏன் எகிப்து கூட கிபி 639 வரை அரபுதேசம் கிடையாது. பிரமிட்டை கட்டியவர்கள் அரபிகள் அல்ல. கிளியோ பட்டிரா அரபி அல்ல. எகிப்தை அரேபியாவில் இருந்து வந்து, கைப்பற்றி அரபு தேசமாக மாற்றினர். 4. இஸ்லாத்தின் பின் வாழ்முனையில் அரபு நாடுகளில் இருந்து வந்த தொடர் படை எடுப்புகளால் பல அரபல்லாத தேசங்கள், குழுக்கள் இஸ்லாமிய மயமாகின, அரபுமயமாகின. இப்படித்தான் ஒரு குழுவாக முன்னர் இஸ்ரேலில் இருந்த அரபிகள், பல்கி பெருகினர். பலஸ்தீனம் என்ற நிலப்பரப்பையும் உரிமை கோரத்தொடங்கினர். 5. வரலாறு சிக்கலானது அதை திரும்ப அமைக்கும் முயற்சி ஆபத்தானது. ஆனால் தனியே கிபி 2000-1942 வரையான காலம் மட்டும் வரலாறு இல்லை. நினைவில்லா காலம் தொட்டு - கி பி 2000 உம் வரலாறுதான். 1942-2023 உம் வரலாறுதான். அந்த நிலத்தில் ஒரு யூத தேசமும், ஒரு அரபு-இஸ்லாமிய தேசமும் அமைவதே நியாயமான தீர்வாக இருக்கும். இஸ்ரேல் தனக்கென தன் மூதாதையர் நிலத்தில் ஒரு நாட்டை அமைத்து விட்டது. நாடில்லாமல் இருப்பவர்கள் பலஸ்தீனர்கள். பலஸ்தீனர்கள் (ஹமாஸ்) இஸ்ரேலை மறுதலித்து, அதை வரைபடத்தில் இருந்து தூக்குவோம் எனும் வரை இந்த சிக்கல் தீராது. இதை உணர்ந்துதான் அரபாத் two state solution ஐ ஏற்றார். இட்சாக் ராபின் கொல்லப்படாமல் இருந்திருந்து, ஈரான் ஹமாசை உசுப்பேத்தி விடாமல் இருந்திருந்தால் அது நடந்தும் இருக்கலாம். 2.1 மில்லியன் அரபிகள் இஸ்ரேல் பாஸ்போர்ட், சிற்றிசன்ஷிப் எடுத்து இஸ்ரேல் பிரஜைகளாக வாழ்கிறனர் என்பதையும் கவனத்தில் கொள்ளவும். நன்றி அண்ணா🙏
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
🤣 உங்களுக்கு இன்றுதான் யூதர்கள் 2ம் உலக யுத்தத்தின் பின் இஸ்ரேலுக்கு வந்தவர் அல்ல என்ற விடயமே தெரியவந்துள்ளது….இதற்குள் நீங்கள் வரலாறு, யூதருக்கு முஸ்லீம் அடைக்கலம் கொடுத்தார் என அடித்து விடுகிறீர்கள். நீங்கள் சொன்னாலும், சொல்லாவிட்டாலும், 2000 ஆண்டுகளாக ரோமர், பின் இஸ்லாமியர் பறித்த தன் சொந்த நிலத்தை மீள உருவாக்கும் முயற்சியே இஸ்ரேல் என்ற தேசம். 2ம் உலக போரில், இஸ்ரேலை ஐரோப்பாவில் வளமான ஒரு பகுதியில் ஸ்தாபிக்க வாய்ப்பு இருந்தும், இல்ல என வெறும் பாலவனமாக கிடந்த இஸ்ரேலுக்கு போனார்கள் யூதர்கள். என்ன காரணம்? அங்கேதான் அவர்களின் இனமூலம் இருக்கிறது. அங்கேதான் அவர்களின் வரலாறு இருக்கிறது. அதுதான் அவர்களின் மண். அந்த மண் அவர்களினதுதான். யூத தேசிய இனத்தின் மண் மீட்பு போரின் வெற்றியும், தொடர்ச்சியுமே இன்றைய இஸ்ரேல்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
சொன்னேந்தானே எப்போ…இது நமக்கான சிந்தனை அல்ல. @Maruthankerny இது உங்களுக்கு. இவர் ஜேர்மன் மொழி பேசுகிறார் என நினைக்கிறேன். யாராவது கள உறவுகள் சாராம்சத்தை மொழி பெயர்த்தால் நல்லம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
@நன்னிச் சோழன். சொந்த நிலத்தை மீட்கப்போராடும் யூதருக்கும் எமக்கும் நிறைய ஒற்றுமை உண்டு. இவர்கள் இப்போ பலஸ்தீனம் என்று அழைப்பது….எமது மண்ணில் புத்தளம் மாவட்டம், பதவிக்குளம், கந்தளாய் போல ஒரு காலத்தில் யூதர்களின் பாரம்பரிய பூமியாக இருந்து பறிக்கப்பட்ட நிலங்களையே. அதே போல் எதிரிகளையும், நண்பர்களையும் நினைவில் வைத்திருப்பவர்கள் யூதர்கள். உயர் மட்டத்தில் யூத-தமிழ் ஒன்றிணைப்பு ஏற்படுமாயின் நாம் பெரிய அனுகூலங்களை அடையலாம். இதை நீங்கள் செய்வது grassroots மட்டத்தில் ஆரம்பிப்பதாக இருக்கலாம். இந்த வகையில் உங்கள் சிந்தனை, அற்புதமானது. Strategic masterstroke. ஆனால் strategy யா? கிலோ என்ன விலை என கேட்கும் நிலையில்தான் ஈழத்தமிழர் இருக்கிறோம். இப்படி நீங்கள் செய்வதற்கு பாரிய எதிர்ப்பு எம்மத்தியிலேயே இருக்கும். இப்பவே உங்களை வெள்ளைகார-கைக்கூலி என எழுத ஆரம்பித்துவிட்டார்கள். உங்கள் யோசனை ஒரு புத்திசாலி இனக்கூட்டத்துக்குரியது. எமக்கானது அல்ல.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
மருதர் நான் மேலே தெளிவாக கூறியுள்ளேன். இருவரும் ஒருவர் இல்லாமல் இருக்கலாம் என. இந்த இசை நிகழ்ச்சியில் இருந்து ஒன்றுக்கு மேற்பட்ட இளம் பெண்களை கமாஸ் கடத்தி போயுள்ளது. ஆனால் ஒரு கால்கள் முறிக்கப்பட்ட பெண்ணின் சடலத்தை ஹாமாஸ் காசாவில் ஊர்வலமாமக டபிள் கப்பில் எடுத்து போனது உண்மை. அவர் இராணுவ சிப்பாயாக இருந்தாலும் அது கொடுமையே. இசைபிரியாவும், புலிச்சீருடை அணிந்த பெண்புலியாகவே இருந்தாலும் (இலங்கை சொன்னது) அவரை அப்படி இலங்கை கொடுமை செய்திருக்கக்கூடாது. சரிதானே? இங்கேதான் ஒப்பீடு வந்தது. இதை விளங்கிகொள்ள முடியாத ஆள் இல்லை நீங்கள். நிச்சயமாக. இதை யாரும் மறுத்து எழுதியதாக தெரியவில்லை. இஸ்ரேலின் மிலேச்சத்தனத்தை நானே பலமுறை யாழில் விமர்சித்து எழுதியுள்ளேன். ஆனால் பலஸ்தீன விடுதலை வீரர்கள் என ஹமாசை கூறும் போதுதான் அவர்கள் இஸ்ரேலுக்கு துளியும் சளைக்காத மிலேச்சர் என்பதை எழுதவேண்டியதாகிறது.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
யூதர்களுக்கு. இதில் மாற்று கருத்தே இல்லை. கீழே பார்க்கவும்👇
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
The mother of the German woman Shani Luk, who was caught on video by Hamas militants, recorded an appeal, BILD reports. Ricarda Luke from Ravensburg believes that the girl who was caught in the militant video is her 22-year-old daughter. In despair, the mother, who lives with her family in Israel, published a video message. A woman holds a photo of her daughter on her cell phone and says: “This morning my daughter was kidnapped along with a group of tourists in southern Israel. They sent us a video in which I clearly recognized our daughter. Unconscious, in a car with Palestinians as they entered the Gaza Strip. I ask for any help, any information." Shani Luk, a German citizen, came to the Nature Party festival in Israel. It passed near the border with the Gaza Strip. Her uncle Winfried Gehr told BILD that the girl came to the festival with a friend from Mexico. The German Embassy got involved in the case. The fate of Shani Luk remains unknown. @berezoview. https://x.com/GoldenR_Fella/status/1710980493351461142?s=20
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
1. ஹமாஸ் தம்வசமுள்ள இஸ்ரேலியர்களை கழுத்தை வெட்டும் வீடியோக்களை வெளியிட்டுள்ளதாம். 2. ஹிஸ்புல்லா இறங்கினால் - ஈரானின் 4 எண்ணை ஆலைகளையும் தாக்கி, ஈரான் எண்ணை ஏற்றுமதியை இல்லாமல் ஆக்குவோம் என செனேட்டர் லிண்ட்சே கிராம் கூற்றாம். 3. யூ எஸ் எஸ் ஜெரால்ட் போர்ட் மத்திய தரைக்கடலை அடைந்துள்ளதாம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
விட்டால் இராஜ இராஜ சோழனுக்கு பலஸ்தீனியர் பாயாசம் ஊற்றினார்கள் எண்டும் எழுதுவார்கள் 🤣. Time immemorial எனப்படும் மனித குலத்தின் கூட்டு நினைவுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து இஸ்ரேல் யூத மண். இஸ்லாத்தின் முதல் நபி என மொகமட் ஏற்று கொண்ட ஆபிரகாம் ஒரு யூதன். இவர்கள் அவர்களை வந்தேறிகள் என்கிறார்கள்🤣.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அது மட்டும் அல்ல, 2ம் உலக போரின் பின் புலம் திரும்பிய யூதரை அரபிகள் அப்படி ஒன்றும் வரவேற்கவில்லை. யூதர் அமெரிக்கா, யூகே யோடு போட்ட டீலின் அடிப்படையில் கெட்டித்தனாமாக தம் பூர்வீக நிலத்தை படிப்படியாக மீட்டு எடுத்தார்கள். யாராவது கூட வேலை செய்யும் ரஸ்ய தோழர் சொல்லி இருப்பார். அண்ணை அதை அப்படியே வந்து அடிச்சு விடுகிறார். பாஸ் - இஸ்ரேலில் ஒவ்வொரு பிரஜைக்கும் இராணுவ சேவை கட்டாயம். இது உங்களுக்கும் தெரியும். ஆனால் ஒரு இராணுவ உடையில் சண்டையில் மாட்டுபட்ட சிப்பாயை கூட இப்படி நடத்த கூடாது. சுற்றி எல்லா வளைக்கவில்லை. இசை பிரியா இறந்து கிடந்த போட்டோவை பரப்பி நியாயம் கேட்ட போதெல்லாம் - இனவாதிகள் அவர் புலிச்சீருடையில் நிற்கும் போட்டோவை பதிலாக போட்டார்கள். உங்கள் பதிவும் அதே வழியையே பின்பற்றுகிறது.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
மத்திய கிழக்க்கின் மக்களாகிய யூததர்கள் ஐரோப்பாவில் எப்படி வந்தார்கள்? அவர்கள் மண்ணில் (இஸ்ரேல்) இருந்து சிலுவை யுத்தம், ஒட்டமான் பேராரசு என மாறி மாறி முஸ்லிம் ஆட்சிகள் அவர்களை ஐரோப்பா நோக்கி அடித்து திரத்தியதால். அப்படி அவர்களை திரத்தி இராவிட்டால், ஆபிரகாம், டேவிட் காலத்தில் இருந்து தாம் வாழ்ந்த மண்ணில் அவர்கள் தொடர்ந்தும் இருந்து இருப்பார்கள்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இருவரும் ஒருவரில்லை என நினைக்கிறேன். இருந்தாலும்… ஒரு இன்ரேலிய பெண் சிப்பாயை, யுத்த முனை அல்லாத இசை நிகழ்சியில் சிவிலியன் உடையில் பிடித்து…காலை முறித்து, மண்டையை பிளந்து, கொலை செய்து, பின் டபிள் கேப்பில் நிர்வாணமாக ஊர்வலம் போவதும், அதை கூடி நிற்கும் ஆண் சிங்கங்கள் இறந்த உடல் மீது துப்புவதும், இறை கோசம் எழுப்புவதும்….. ஏற்புடையதுதான் என்கிறீர்களா மருதர்… அந்த தமிழ் சகோதரியின் பெயர்…. எமது தொலைக்காட்சியில் வேலை செய்தவர்…. எனக்கு இப்போ பெயர் நியாபகம் இல்லை…. இ…என்று தொடங்கும் என நினைக்கிறேன். உங்களுக்கு அவர் பெயர் நியாபகம் இருக்கிறதா மருதர் ? Muhammad Abu Ghali ற்கு எப்படியும் நட்டை இப்போ கழட்டி இருப்பார்கள். திருப்பி பூட்டுவார்களா இல்லையா என்பதுதான் தெரியவில்லை. அண்மையில் வந்த வீடியோக்களின் பின் - ஹமாஸ் போராளிகளுக்கு உயிருடன் பிடிபடுவதை விட சாவது மேலான தெரிவாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஹமாசின் பிடியில் இருக்கும் இஸ்ரேலிய பெண்களும், குழந்தைகளுமாம்….
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அப்படி இருக்க முடியாது. ஈழத்தமிழர் நாம் கொலம்பியாவை கொலை வெறியோடு எதிர்க்க வேண்டும்? ஏன் ப்ரோ? உங்களுக்கு தெரியாதா? கொலம்பியாவில் விளைந்த சாக்கிலேட்டைத்தான் சண்டைகாலத்தில் சவேந்திர சில்வா சாப்பிட்டவர். ஆகவே கொலம்பியா எமக்கு எதிரி. அப்ப வெனிசுலா? கெட்ட சாமான்கள் - அவங்கள் சண்டை நேரம் வித்த பெற்றோலில்தான் இலங்கை ஆமி வாகனம் எல்லாம் ஓடியது. அவங்களும் எமக்கு எதிரிதான். பிரேசில் ஓக்கே என நினைக்கிறேன்? என்ன விளையாரீங்களா? சண்டை நேரம் மட்டும் பிரேசில் பருத்தியை இலங்கைக்கு கொடுத்திராவிட்டில், ஆமிக்காரர் எல்லாரும் ஜட்டி கூட இல்லாமல் நிண்டிருப்பாங்கள். பிறப்பேழு பிறப்ப்புக்கும் பிரேசில் எமது எதிரிதான். அப்ப யார்தான் ப்ரோ ஈழத்தமிழனுக்கு நண்பன்? சும்மா உலகம், உலகம் எண்டு நாம் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டக்கூடாது. செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி….இப்படி நாம் எமது நட்பு வட்டத்தை பெருக்க வேண்டும். % பித்துவாசிரியர்
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
தகவலுக்கு நன்றி. துருக்கியில் பலஸ்தீனருக்கு பலத்த ஆதரவு உள்ளது. ஒரு குறை ஜனநாயக நாடான துருக்கியின் அதிபர் இப்படித்தான் பேசவேண்டும். ஆனா செயலில் மிக கொஞ்சமே இருக்கும். காலம் காலமாக எகிப்து, ஜோர்தான், லிபியா, ஈராக், சிரியா இப்படித்தான் செய்வார்கள்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நான் நினைக்கவில்லை. ரஸ்ய-உக்ரேன் யுத்தம் போல் துருக்கி அங்கேயும் இங்கேயும் பாடும்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
சும்மா வெறுமனே ஹமாஸ் என எழுதக்கூடாது - பலஸ்தீன விடுதலை வீரர்கள் ஹமாஸ் என அழுத்தி எழுத வேண்டும்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
கடைசி கொஞ்ச நஞ்ச பச்சை பொட்டையும் இத்தோடு வழித்து துடைத்து விடுவார்கள்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
Iron Dome ஐ ஒட்டு மொத்தமாக ரஸ்யா, சீனா, அல்லது ஈரான் hack பண்ணி 2 மணி நேரம் off பண்ணியதால் வந்த பின்னடைவு என்கிறனர். இதில் இந்திய ஊடகங்கள் சீனாவையும், உக்ரேனிய சார்பினர் ரஸ்யாவையும் கோர்த்து விடுகிறார்கள் என நினைக்கிறேன். இது இஸ்ரேலின் திட்டமிட்ட நாடகம் என்பதும் மறுப்பதற்கில்லை. செய்யகூடியவர்கள்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காஸாவுக்கான மின், நீர், எண்ணை, மருந்து, உணவு எல்லாமுமே இப்போதே முழுக்க முழுக்க இஸ்ரேலின் கட்டுப்பாட்டில்தான். மின்சாரத்தை நேற்றோடு வெட்டி விட்டார்கள். இனி ஆயுதம் கடத்துவது போல் கோதுமையையும் கடத்த வேண்டிய நிலையை ஹமாசுக்கு ஏற்படுத்தி, ஒட்டு மொத்த காசாவைவும் வாழும் நரகமாக்கினாலும் வியப்பில்லை.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஒவ்வொரு தமிழ் போராளியை பலஸ்தீனில் பயிற்றுவிக்க அப்போதே பெருந்தொகை fees அறவிடப்பட்டது.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இதைத்தான் இஸ்ரேலில் உள்ள அடிப்படைவாத சயோனிஸ்டுகளும் விரும்பினார்கள். ஈரானின் நலனுக்காக பலஸ்தீனத்தை பலியிடும், இஸ்ரேலை வரைபடத்தில் இருந்தே அகற்றுவோம் என எக்காளமிடும் ஹாமாஸ்சுடன் பேச வேண்டும், பலஸ்தீனியர்களுக்கு ஒரு சமாந்திரமான நாட்டை கொடுக்க வேண்டும் என பேசும் மிதவாத இஸ்ரேலிய குரல்கள் இனி பல வருடம் எடுபடாது. காசாவை விட்டு இஸ்ரேல் தன்னிச்சையாக வெளியேறியது - அங்கே ஆயுதம் பதுக்க, திட்டமிட, தாக்க ஏதுநிலையை உருவாக்கியது என்பது இப்போ கண்கூடு ஆகியுள்ளது. அதேபோல் உக்ரேன்-ரஸ்யா போரில் நடுநிலை எடுத்த இஸ்ரேல் ரஸ்யா பற்றி நல்ல பாடம் படித்துள்ளது. மேற்கு நாடுகள் எல்லாம் உடனடியாக கண்டிக்க, லெவரோவ் பட்டும் படாமல் இருதரப்பும் மோதலை தவிர்க்க வேண்டும் என ஒரு அறிக்கை விட்டு, கிழக்கு ஜெருசலேம் உடன் கூடிய பலஸ்தீனிய தனியரசு அமைய வேண்டும் என கூறியுள்ளார். இது நியாயமான கோரிக்கைதான். ஆனா இந்த நேரத்தில், இஸ்ரேலின் நட்பு சக்தி இப்படி சொல்ல கூடாது. உக்ரேன் போரில் புட்டினை கோவப்படுத்தாமல் நடந்த, முன்னாள் பிரதமரை மொஸ்கோ வரை அனுப்பிய இஸ்ரேலுக்கு நல்ல படிப்பினை.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
70,80 களில், அரபாத் இருக்கும் வரை மேற்கு கரையிலும் இருந்த மதச்சார்பற்ற பலஸ்தீன தேசிய விடுதலை அமைப்பும், ஈரானின் போஷணையில் உருவாகிய, காசாவை விட்டு அரபாத்தின் படைகளையே வன்முறையால் அகற்றிய ஹமாசும் ஒன்றல்ல. தான் ஐஎஸ், தலிபானுக்கு சற்றும் குறையாத ஒரு அடிப்படைவாத அமைப்பு என்பதை நேற்று ஹமாஸ் ஐயம் திரிபற நிறுவியுள்ளது. 70 களின் பலஸ்தீன போராளிகளையும், ஹமாசையும் ஒன்று என கூறுவது, புலிகளையும், ஈ என் டி எல் எவ் வையும் ஒன்று என கூறுவது போன்றது.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அல்லது ஈரான் விரல் சூப்பிகொண்டிருக்கிறதா?