Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. காசா நோக்கி நகரும் இஸ்ரேலிய படைகள்👇 இதை போல மேலும் பல வீடியோக்கள், விபரங்களை சுடச், சுட வாசிக்க இன்றே யாழ்கள உறுப்பினராகி, திண்ணை அனுமதியை பெறுங்கள்! https://x.com/TreasChest/status/1710745992436318389?s=20
  2. ஆ…ஊ….அப்டீக்கா…இப்டீக்கா….என்று இந்த திரியில் எழுதபட்டுள்ள இத்து போன பழைய குழாயடி சண்டையை விட, இதை பற்றிய அண்மை செய்திகள், வீடியோக்களும் காத்திரமான, இரு தரப்பு நியாயத்தையும் பேசும் நாகரீகமான கருத்தாடலும் யாழ் களத்தின் திண்ணையில் இடம் பெறுகிறது. நீங்கள் யாழின் உறுப்பினர் அல்லாத வெறும் வாசகரா? அரிய சந்தர்ப்பம்!!! இன்றே யாழ்கள உறுப்பினராகி, திண்ணை அனுமதி பெற்று, ஒரு elevated discussion இல் கலந்து கொள்ளுங்கள்!
  3. மிக அருமையாக எனக்கு கூட புரியும் படி எழுதியுள்ளீர்கள் நன்றி. வழக்கின் தீர்ப்பு சாதகமாக வந்த போதுதான் ஜூலை 2023 விலை ஏற்றம் நடந்தது. பின்னர் profit taking ஆல் பழையபடி .52க்கு வந்ததாக நான் எண்ணுகிறேன். அதே போல் இந்த வாரமும் 6% கூடி பின் இறங்கி விட்டது (இன்னொரு சாதக தீர்ப்பு). எலோன் மஸ்க் தும்மினாலே ஷிபா ஏறுகிறது. எத்தனை பொசீடிவ் செய்தி வந்தாலும் இது கூடுவதில்லை. கூடினாலும் உடனே இறங்கி விடும். கொஞ்சம் கான்ஸ்பிரசி தியரிதான் - ஆனால் வேணும் எண்டே price suppression செய்கிறார்களோ எனவும் எண்ணுவேன்.
  4. ரஞ்சித், 1. தலைவரோ, புலிகளோ ஒரு போதும் சோசலிசவாதிகள் இல்லை. பொருளாதார சார்ப்பை புலிகள் வெளிக்காட்டா விடினும், அவர்கள் முதலாளிதுவ கட்டமைப்பிலேயே நம்பிக்கை கொண்டார்கள் என்பதை அவர்களின் நடைமுறை அரசு கால நடவடிக்கைகள் எடுத்து சொல்கிறன. 2. இறை நம்பிக்கை, மத நம்பிக்கை இல்லாத எல்லாரும் சோசலிஸ்டுக்கள் இல்லை. 3. தலைவர் ஒரு சைவர், திருமதி மதிவதனியும் சைவர், இருந்தது தமிழ்நாடு. அவர்கள் மிக இலகுவாக திருமணம் செய்ய கூடிய வழி ஒரு இந்து கோவிலில் மாலை மாற்றுவதுதான் - இதனை வைத்து மட்டும் - தலைவர் முருக பக்தர் என சொல்ல முடியாது. 5. தகப்பன் பக்தர் என்பதால் தனயனும் பக்தர் ஆக இருக்க தேவையில்லை. 4. மேலே சபாரட்ணம் ஆங்கிலத்தில் தந்த Pirapaharan is a devotee of the Hindu deity Murugan, a God of Action and Destroyer of Evil என்ற கூற்றுக்கு அவரின் வாழ்வில் எங்கும் ஒரு குண்டு மணியளவு கூட ஆதாரம் இல்லை என்பதே நான் அறிந்தது. அவரின் அருகில் எங்கும், உடலில், பேச்சில் எதிலுமே முருக சின்னங்கள் இருந்ததும் இல்லை. 5. சபாரட்ணம் கூறியதை நீங்கள் கொஞ்சம் ஓவராகவே மொழி பெயர்த்து விட்டீர்கள். சபாரட்ணம் சொன்னதை “பிரபாகரன் ஒரு முருக பக்தர்” என்று அல்லாவா மொழி பெயர்திருக்க வேண்டும்? முருகன் மீது “அளவு கடந்த பக்தி” உடையவர் என கூறுவது, சபாரட்ணம் கூட கூறாத ஒன்றல்லவா? 6. எல்லாவற்றுக்கும் மேலாக ஜெகத் காஸ்பர் ர்ஒவ்வொரு முறை நீங்கள் சாவின் விளிம்பில் இருந்தும் மீண்டது, கடவுள் அருளாலா? என கேட்க, ஒரு அர்தபுஸ்டியான சிரிப்போடு “இயற்கை அருளால் என வைத்துகொள்ளுங்கள்” என பதில் கொடுத்துள்ளார். ஒரு முருக பக்தர் என்ன சொல்லி இருப்பார்? ஆமாம் கந்தன் அருளாலேதான் நான் இப்படி தப்பிதேன் என்று அல்லவா. ஜகத் கஸ்பருக்கு கொடுத்த பதிலை விட ஒரு மனிதன் தெளிவாக கடவுள் பற்றிய தன் நிலைப்பாட்டை சொல்லி இருக்க முடியாது. நான் அவரை அருகில் இருந்து பார்த்தவன் அல்ல. ஆனால் அவர் மிக தெளிவாக பொது வெளியில் புலிகள் இயக்கமும், நடைமுறை அரசும் மதச்சார்பற்றன என்பதை செயலிலும் சொல்லிலும் காட்டி உள்ளார். தன் தனிப்பட்ட நம்பிக்கை, நம்பிக்கையீனங்கள் பற்றி அதிகம் கதைக்கவில்லை. ஆனால் அரிதாக மேலே சொன்ன பேட்டி போன்றவற்றில் தன் தனிப்பட்ட நிலைப்பாட்டை கோடிகாட்டியே சென்றுள்ளார். அத்துடன் இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி என்றுதான் சொன்னாரே ஒழிய, முருகன் என் வழிகாட்டி என எங்கும் சொன்னதில்லை. 🙏.
  5. நன்றி. பலர் utility அதிகரிக்கும் போது விலை கூடும் என்கிறார்கள். சர்வதேச பணப் பரிவர்த்தனையில் கணிசமான பங்கை XRP எடுக்கும் பட்சத்தில் - விலை 1,2,5 டாலர் ஆக இருக்க முடியாது என்றே நானும் எண்ணுகிறேன். இதன் அடிப்படையில்தான் $15-20 என்கிறேன்.
  6. நாணயத்தை நிறுவனங்கள் வங்கிகள் பலரும் adopt பண்ணினால் $15-20 என நினைக்கிறேன். ஆனால் பாக்யராஜ் காமெடி போல் பலர் 100, 586, 1000 எண்டு அடிச்சு விடுகிறார்கள்🤣. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
  7. உண்மைதான். ஏலவே இறங்கி விட்டது. ஓம். பைசரின் வக்சீன் அங்கீகரிக்கபட்ட சமயம் அதன் CEO இப்படி விற்றார். XRP இத்தனை சாதக செய்திக்கும் பின்னும் .50 இல் நிற்பது கடுப்பாக இருப்பினும், விலை artificially suppressed ஆக இருக்க கூடுமோ எனவும் யோசிக்க வைக்கிறது.
  8. XRP வழக்கில் ஏலவே மூல்குடைபட்ட SEC முந்தைய தீர்ப்பை எதிர்த்து செய்த interlocutory appeal request ஐ சில நிமிடங்களுக்கு முன் நீதிபதி டொரெஸ் நிராகரித்தார். தீர்ப்பின் பின் 10 நிமிடத்தில் 4% வீதமளவில் விலை கூடியுள்ளது. (நிதி ஆலோசனை அல்ல) இதன் அர்த்தம் SEC வழக்கில் அறுதியான தோல்வியை சந்தித்து விட்டது என்பதல்ல. தொடர்ந்தும் appellate courts க்கு நேரடியாக அப்பீலை எடுத்து போகலாம். ஆனால் அப்படி செய்ய ரிப்பிள் நிர்வாகிகள் மீதான வழக்கின் trial முடியும் வரை பொறுக்க வேண்டும்( குறைந்தது ஒரு வருடம்). அல்லது நிர்வாகிகள் மீதான வழக்கை, trial ஐ கைவிட்டு - அப்பீலுக்கு போதல் வேண்டும். எப்படி பார்த்தாலும் SEC க்கு இன்னுமொரு பின்னடைவு ஆனால் (இன்னும்) மரண அடி இல்லை.
  9. காந்திக்கு பாடம் எடுத்ததால்… அவன் எங்கள் தகப்பன் சுவாமி… இந்தியாவின் அகிம்சா முகத்தை சூரசம்ஹாரம் செய்ததால் ….. அவன் எங்கள் முருகன்….. உடலை தானமாக கொடுத்ததால்… அவன் எங்கள் கர்ணன்….. தண்ணீரும் இன்றி பன்னிரு நாட்கள் படுக்கை எனும் சிலுவையில் தொங்கியாதால்…… அவன் எங்கள் யேசு பிரான்….. ஒரு பாரதம் பார்தீபனின் வில்லாண்மை பற்றிப் பாடியது…. இன்னொரு பாரதம் எங்கள் பார்தீபனின் செயலாண்மை முன் விக்கித்து நின்றது…. ஊரெழுவில் பிறந்தவன்…. அவன் போகும் போது ஊரெழுந்து மரியாதை செய்தது. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும். வீர வணக்கம்.
  10. இதில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட ஒரே ஒரு ரஸ்ய வீரர், கட்டளை தளபதி என்கிறார்கள். உண்மை பொய் தெரியவில்லை
  11. தெளிவாகிக் கொண்டிருக்கும் செய்தி கிரைமியாவின் செவஸ்டபோலில் உள்ள ரஸ்யாவின் கருங்கடல் கடற்படை தலைமையகம் மீது உக்ரேன் தாக்குதல். தாக்குதலுக்கு உரிமையும் கோரியது.
  12. நான் ஐபோன் வாங்குவதே அட்லீஸ்ட் போனாவது பெறுமதியானதாக இருக்கட்டும் என்பதாலேயே🤣 சம் என்பார் சும் என்பார், ஐ போன் user friendliness அறியாதார்🤣 பிகு நான் ஒரு சம் சுங் துரோகி 🤣. ஒரு காலத்தில் ஐபோன், சம் சுங் இரண்டினதும் flagships இடையே கணிசமான விலை வித்தியாசம் இருக்கும் வரை சம் சுங் கை விரும்பினேன்.
  13. வருது அண்ணை…wearable phones with augmented reality. ஒரு கண்ணாடி போல போட்டு கொள்ள வேண்டியது. திரையில் ஒவ்வொரு அப்ஸ்சும் தெரியும். கூகிள் மேப் அப்சை பார்த்து கண் சிமிட்டினால் - அது ஓப்பன் ஆகும். நீங்கள் போஸ்ட் கோர்ட்டை மனதில் நினத்து “navigate” என்ற validating சிந்தனையை நினைக்க- உங்கள் கண்முன்னே நீங்கள் நிற்கும் தெருவின் மேல் super impose பண்ணி navigation வழி காட்டல் விரியும்.
  14. இதை பற்றி திண்ணையில் சுமார் 2 வருடங்கள் முன் உரையாடி இருந்தோம் @விசுகு. நான் அவதானித்ததில் போன வருட மாடலோடு ஒப்பிடின் அதிக புதிய சிறப்பம்சம் ஏதும் இல்லாமல் வந்த முதல் ஐபோன் இது. #Time for Tesla phone
  15. ரஸ்யவை உக்ரேனில் இருந்து வெளித்தள்ள முயலும் உக்ரேனின் எதிர்ச்சமர் நடவடிக்கை இந்த வருட கோடை காலத்தில் வெற்றி பெறுவதாயின் இன்னும் 35-45 நாட்களில் சமர் முக்கிய கட்டத்தை அடைய வேண்டும் எனவும், இந்த வருடத்த்துக்கான எதிர்சமர் நடவடிக்கைகள் முடிந்து விட்டதாக அறிவிக்க இன்னமும் காலமிருப்பதாக அமெரிக்க படைகளின் தளபதி ஜெனரல் மார்க் மைலி கூறியுள்ளர். https://www.theguardian.com/world/live/2023/sep/10/russia-ukraine-war-live-russian-drones-attack-kyiv-moscow-praises-g20-declaration
  16. தான் போய் வினையை வாங்கினதும் இன்றி இந்த குழந்தைக்கும் அதை கடத்தி இருக்கிறது இந்த மிருகம். இப்போ முன்பை போல எச் ஐ வி தொற்று ஒன்றும் மரண சாசனம் அல்ல. தகுந்த மருந்து மூலம் கிட்டதட்ட பூரண ஆயுளை நோய்தாக்கம் அதிகமின்றி கழிக்க முடியும். இதற்குரிய மருந்து இந்த மாணவிக்கு இலங்கையில் கிடைக்குமா தெரியவில்லை. ஆசிரியரின் ஒட்டு மொத்த சொத்தையும் விற்று அதில் வரும் பணத்தை மாணவியின் மருந்து செலவுக்கு பயன்படுத்தலாம்.
  17. புதுக்கவிதை நன்றாக உள்ளது அண்ணை. அதிகம் கவிதையில் பேசாத விடயங்களை பேசுகிறீர்கள்👍.
  18. வீரகேசரி கிரைமியாவில் உக்ரேன் நிரந்தர தரையிறக்கம் (invasion) செய்துள்ளது போல எழுதியுள்ளது. அப்படி அல்ல இது ஒரு விசேட நகர்வு (special operations) எனப்படும் கரந்தடி தாக்குதலாகவே தெரிகிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.