Everything posted by goshan_che
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ஓம் மாளிகை, தங்கம், பல மல்டி மில்லியன் டாலர் ரொக்கம், பிரி கோசனின் விக் (டோப்பா) கலெக்சன் என பலதை காட்டியுள்ளார்கள். நடப்பவற்றை பார்க்க, ரஸ்யாவில் ஒன்றுக்கு மேற்பட்ட அதிகார மையங்கள் உள்ளன, புட்டினிடம் முழு அதிகாரமும் இல்லை என யோசிக்க வைக்கிறது. ஷிகோ நிச்சயம் பிரிகோசனின் எதிர் முகாம்தான். ஆனால் புட்டின்? இத்தனைக்கும் பிறகு பிரிகோசனை மன்னிக்க - லூக்கா சொல்லும் புட்டின் கருணையாளர் என்ற விளக்கம் நம்பும்படி இல்லை. ஒன்றில் உண்மையில் பிரிகோசனை புட்டின் ஒரு சகோதரமாக பாவித்து மன்னிக்க தயாராகிறார். அல்லது ரஸ்யாவில் கொம்பிரமாட் என்பார்கள். ஆங்கிலத்தில் compromising evidence. புட்டின் பற்றிய ஏதோ கொம்பிரமார்ட் பிரிகோசனிடம் மாட்டி உள்ளாதாக இருக்கலாம். ஏதோ ஒன்று பிரிகோசனை பாதுகாக்கிறது என்பது மட்டும் தெளிவாகிறது. ஆனால் இந்த சக்தியால் - வாக்னரை கலைப்பதை, அவர்களின் டிவி சாம்ராஜ்யத்தை குலைப்பதை, வீட்டு சோதனையை - நிறுத்த முடியவில்லை. FSB யில் இருந்து இயங்கும் winds of change எனும் மாற்றம் விரும்பும் அமைப்பு பிரிகோசனை புட்டினை மீறி இந்தளவு எதிர்க்க முடியாது. எப்படி பார்த்தாலும் - முடிவு ரஸ்யாவில் ஒன்றுக்கு மேற்பட்ட அதிகார மையங்கள் உள்ளன, புட்டினிடம் முழு அதிகாரமும் இல்லை என்பதை நோக்கியே மீள மீள வருகிறது (என் மனதில்).
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
1. செலென்ஸ்கி துருக்கி அதிபர் எர்டோகனை விரைவில், அநேகமாக நாளை சந்திக்கிராராம். 2. பிரிகோசன் பெலரூசில் இல்லை - ரஸ்யா திரும்பிவிட்டார் என்கிறார், பெலரூஸ் அதிபர்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
உ.ப.ப.செ 1. உக்ரேனுக்கு கொத்து குண்டுகளை கொடுக்கும் முடிவை அமரிக்கா எடுத்துள்ளதாம். 2. பிரிகோசனின் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட பெருந்தொகை பணத்தை ராஸ்யா மீளவும் அவரிடமே கொடுத்துள்ளதாம்
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
How it started : 3 நாளில் கியவ் How it’s going : டிரோன் தாக்குதலால் மாஸ்கோ விமானநிலையம் மூடல்
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
வெறும் ஊகம் டினிப்ரோ நதி கரையில் காற்றில் இனம் தெரியாத தொற்று கண்டறியபட்டதாக ஒரு உக்ரேனிய சார்ப்பு கணக்கு சொல்கிறது. வெறும் ஒற்றை வரி செய்தியாக. ஆதாரம் எதுவும் இல்லாமல்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ரம்சான் காடிரோவ் வெளியிட்ட சாவு மறுப்பு வீடியோ
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
1. அண்மையில் ஒரு பீட்சா ரெஸ்டோரெண்டில் நடத்த பட்ட தாக்குதல் - வெளிநாட்டு போராளிகளை இலக்கு வைத்த தாக்குதலாய் இருக்கும் என சொல்லி இருந்தேன் - அந்த தாக்குதலில் ஒரு நடப்பு அமெரிக்க மரைன் கொல்லப்பட்டது உறுதியாகியிள்ளது. அமெரிக படையில் இருந்து விடுப்பில் போய் உக்ரேனில் இண்டர் நேசனல் லீஜன் எனும் வெளிநாட்டினருக்கான படையில் சேர்ந்து போராடினாராம். 2. ஆனால் இதை வைத்து - அமெரிக்க படைகள் உத்தியோக பூர்வமாக இறங்கின, இறந்தன, பிளக்ஹாக் போய் உடலை மீட்டது என ரஸ்ய கணக்குகள் சொல்வதை நம்ப கடினமாகவே உள்ளது.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
நீங்களும் புடுனோவ் அம்மானின் ரசிகரா🤣?
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
பி.உ.ப.ப. செய்திகள் 1. அன்ரன்வோஸ்கி பாலத்தடியில் இருந்து உக்ரேன் படைகள் அகற்றப்பட்டதா இல்லையா என்பது குறித்த எதிரெதிர் கருத்துகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. Humenyuk என்ற ஆயுதபடையினன் - உக்ரேன் ரஸ்யா இடையே இன்னும் இந்த இடத்தில் சண்டை நடப்பதாக கூறியதாக - உக்ரேனிய கணக்கு ஒன்று சொல்கிறது. ரஸ்ய கணக்குகளோ - இஸ்கண்டர் தாக்குதலோடு உக்ரேனிய பிரசன்னம் அற்றுப்போனதாக கூறுகிறன. 2. ஒரு காலத்தில் செச்சினிய விடுதலைக்கு போராடி பின்னர் அணிமாறி புட்டினுடன் சேர்ந்து கொண்ட காடிரோவின் மகனும், இப்போ செச்சினியாவை ஆள்பவருமான ரம்ஸான் காடிரோவ் கல்லீரல் பாதிப்பால் உயிருக்கு போராடுவதாக ஒரு வதந்தி உலாவுகிறது. இது இப்போதைக்கு ஆதாரமற்ற வதந்தியாவே தெரிகிறது. 3. கலகத்துக்கு பல நாட்களின் பின் மெட்வெடேவ் ட்விட்டரில் மெளனம் கலைதுள்ளார். ஆகவே புட்டின் (இன்னும்) ஆளை முடிக்கவில்லை போலப்படுகிறது.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ஆண்டி எதையோ தட்டினால், பறப்பது புழுதி மட்டுமே ரஞ்சித். நின்று களமாடுங்கள்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
1. Antonivskyi பாலத்தின் அருகில், ரஸ்ய கட்டுப்பாட்டு கெசோன் பகுதியில், நதியின் மறுகரையில் நிலை கொண்ட உக்ரேனிய படைகள் இஸ்கண்டர் ஏவுகணை மூலம் அழிக்கப்பட்டு - அவர்கள் பிரசன்னம் அகற்றப்பட்டதக சொல்கிறது ரஸ்ய ஆதரவு கணக்குகள் 2. கிர்கின் தொடர்ந்து, பிரிகோசின் மீது நடவடிக்கை எடுக்ககாத புட்டினை தாக்கி அறிக்கை வெளியிடுகிறார். இன்று மேலதிகமாக, மொஸ்கோவை விட்டு ஓடிய மெட்வெடேவ் வை ஒரு பிடி பிடித்துள்ளார். 3. பக்மூட் நகரின் வடக்காக, மற்றும் மெலிட்டோபோல்/ மரியுபோல் நோக்கிய திசையில் தெற்காயும் கணிசமான முன்னேற்றத்தை உக்ரேனிய படை அடைந்ததால சொல்கிறன உக்ரேனிய சார்பு கணக்குகள்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ரஸ்ய-உக்ரேன் போர் செய்திகள் திரியில் - அநாவசியமான செய்தி அல்லாத யுடியூப் வீடியாக்களை இணைத்து சில்லறைதனம் செய்வோருக்கு ஒரு வினயமான வேண்டுகோள். நான் இந்த திரியில் செய்திகள் இணைக்க தொடங்கும் வரை நீங்கள் இந்த திரியை சீண்டவும் இல்லை என்பது தெரிகிறது 🤣. உங்கள் ஆர்வத்தை மெச்சும் அதே வேளை - ஆதாரம் அற்றது என்றாலும் - நடப்பு செய்திகளை இணைக்க முயற்சியுங்கள். உதாரணமாக wargonzo போன்ற ரஸ்ய ஆதரவு ஆட்களின் “செய்திகளை” நீங்கள் இணைக்கலாம். தமிழ் ஊடக பரப்பில் இந்த யுத்தம் பற்றிய செய்திகள் மிக தாமதமாக வருவதை நிவர்த்தி செய்யும் ஒரு முயற்சியாகவே இதை முன்னெடுத்தேன். முடிந்தளவு இரு பக்க செய்திகளையும் இணைக்கிறேன். பிரச்சார வீடியோ, லுச்சா வீடியோல்களுக்குத்தான், ஏலவே பேஸ்புக் வேஸ்ட் புக் போன்ற திரிகள் உள்ளனவே. நன்றி பிந்திய உ.ப.ப செய்திகள் 1. Zaporizhzhia அணு உலையில் இருந்து ரஸ்யாவின் ரொஸ்டோம் அணு நிறுவனத்தின் ஆட்கள் வெளியேறுகிறார்களாம். அங்கே இருக்கும் உக்ரேனிய வேலையாட்களுக்கும் வெளியேறும் ஆலோசனை கொடுக்கப்பட்டுள்ளது. என்கிறன உக்ரேன் ஆதரவு கணக்குகள். இவர்கள் ரஸ்யா ஒரு அணு விபத்தை தூண்டி, உக்ரேன் தலையில் போடவிருக்கிறது என்கிறனர். 2. ஆனால் ரஸ்யா - இப்படி ஒரு விபத்தை ரஸ்யா ஏற்படுத்தாது என நேற்று கடிதம் மூலம் ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு அறிவித்துள்ளது.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
பிந்திய உ. ப. ப செய்திகள் 1. ஜெனெரல் சுரோவிகின் பற்றிய கேள்விக்கு - பதில் அளிக்காமல், இது பற்றி பாதுகாப்பு அமைச்சிடம் வினவுங்கள் என்றார் கிரெம்ளின் பேச்சாளர் பெஸ்கொ. பாதுகாப்பு அமைச்சு பதில் தரவில்லை என கூறியதும், இது பற்றி சொல்ல மேலும் எதுவும் இல்லை, என கேள்வியை தவிர்த்து கொண்டார். 2. ஒரு வருடமாக வாக்னர் குழு போரிட்டு வெற்றி கொண்டபின் பக்மூட் நகரை ரஸ்ய இராணுவத்திடம் கையளித்தது. இந்த நகரின் அருகில் உள்ள உயரமான நிலபகுதிகள் இரெண்டை உக்ரேன் கையகப்படுத்தும் நிலையில் இருப்பதாயும், நகரையும் மீள கைப்பற்றும் நோக்கில் முன்னேறுவதாயும் கூறப்படுகிறது.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
அண்ணையவ, சும்மா பகிடி விட்டனான். நோ டென்சன் பிளிஸ் 🙏🏾 கு சா அண்ணை - இப்ப மட்டும் என்ன வாழுதாம் என எழுதுவார் எண்டு நினச்சே பதிந்தேன். பதில் எதிர் பார்த்த மாரியே…🤣 # உன்னை நானறிவேன் என்னை அன்றி யாரறிவார்
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
பிந்திய உ. ப. ப செய்திகள் 1. ஜெனெரல் சுரோவிகின் அவரின் அடுத்த நிலை அதிகாரி இருவரும் Lefortovo detention center சிறைக்கு அனுப்பபட்டுள்ளனராம் 2. யுத்த முனையில் 4 இடங்களில் ரஸ்ய - இதுவரை சண்டையில் ஈடுபடுத்தபடாத அணிகளை கொண்டு - புதிய எதிர் தாக்குதலை தொடங்கி உள்ளதாம்
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
இந்த மனுசன் மரியாதையாய் ஒரு தரத்தோட விட்டு விட்டு போகலாம். பதவி ஆசை. பிகு வயது போக போக அறளை கூடி - தன்னிலை தாழ்வதை, என்னை சுற்றி இப்போ அதிகம் காண்கிறேன். எனக்கும் இப்படி ஒரு நிலை வந்து, ஏறுக்கு மாறாக, குதர்க்கமாக எழுதும் நிலை வரமுதல், யாழ்களத்தில் எழுதுவதை நிப்பாட்டி விட வேணும்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ஜெனரல் சுரோவிகின் பற்றிய ஒரு மேலதிக தகவல் - கலகம் ஆரம்பித்ததும், வாக்னர் படைகளை பின்வாங்குமாறு சுரோவிகினும் இன்னொரு அதிகாரியும் வீடியோ செய்தி வெளியிட்டனர். அப்போதே அந்த வீடியோக்கள் ஒரே இடத்தில் எடுக்கப்பட்ட, வற்புறுத்தலின் கீழ் கொடுக்கப்பட்ட வீடியோக்கள் என சிலர் கூறினர். அடுத்து இவருக்கு என்ன நடக்கிறது என்பதை பொறுத்து உண்மையை ஊகிக்கலாம். இவர் ரஸ்ய இராணுவத்தில் வீரர்கள் விரும்பும் ஒரு அதிகாரியாவார்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
மேலதிக உ-ப- ப செய்திகள் 1. உணவு விடுதி சாவு 9 ஆக அதிகரிப்பு. பல ஆங்கிலத்தில் எழுதும், வெளிநாட்டு ஆட்களின் ட்விட்டர் கணக்குகள் தாமும் அந்த இடத்தில் இருந்ததாக சொல்கிறன. இதனால்தான் இலக்கு வைக்கபட்டிருக்கலாம். 2. நியுயோர்க் டைம்ஸ் - பிரிகோசினின் கலக திட்டம் - முதலில் உக்ரேன் யுத்தத்தை வழி நடத்தி பின் மாற்றப்பட்ட ஜெனெரல் சேர்கி சுரோவிகின் க்கு தெரிந்தே நடந்தது என்கிறது. இது அமெரிக்காவின் கிண்டி விடும் உத்தியாகவும் இருக்கலாம். 3. கெச்சோனின் டினிப்ரோ ஆற்றின் மறுகரையில் ரஸ்ய கட்டுப்பாட்டு பகுதியில், முன்பு உடைக்கப்பட அண்டொனொஸ்விகி பாலத்தின் அருகில் டாச்சி என்ற இடத்தில் உக்ரேன் படையினர் சிலர் தரை இறங்கி ஒரு தரையிறக்க முனையை (bridge head) உருவாக்கிள்ளாகளாம்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
🤣. சமையல்காரர் என்ன இருந்தாலும், ஆள் கொஞ்சம் சைக்கோ என்றாலும் - கெட்டிக்காரர். தைரியசாலியும் கூட. டொலர் பில்லியனர், பிறைவேட் ஜெட், சென் பீட்டர்ஸ்பர்க்கில் அரண்மனை வீடு (இதே நகரில்தான் ஹாட் டாக் வியாபாரியாக சிறையில் இருந்து வந்து வாழ்வை ஆரம்பித்தார்) என என்ன இருந்தாலும் - சண்டை என வந்து விட்டால், யூனிபோர்மை போட்டு கொண்டு பக்மூட் வரை வந்து விடுவார். இப்போ புட்டினை சூழ உள்ள ஷைகோ ஏனையோர் அப்படி அல்ல. புட்டினும் கூட பழைய உளவாளியே தவிர - களமுனையில் போய் S class ஓடத்தான் லாயக்கு. உண்மையில் சமையல்காரார் இல்லாதது பெரிய இழப்புத்தான்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
1991 இன் எல்லைகளுக்கு உக்ரேன் திரும்பலாமா (கிரைமியா மீள உக்ரேன் வசம்) என்ற கேள்விக்கு, ஏன் முடியாது? என பதிலளித்துள்ளார் சீனாவின், ஐரோப்பிய ஒன்றியத்துக்கான தூதர். கூடவே நாடுகளின் நில ஒருமைப்பாட்டை சீனா எப்போதும் வலியுறுத்துவதாயும், இந்த பிணக்கை ரஸ்யா-உக்ரேன் பேசி தீர்க்க வேண்டும் என்பதே தம் நிலைப்பாடு எனவும் கூறினார் சீனத் தூதர். https://www.aljazeera.com/news/2023/6/27/dont-see-why-not-china-envoy-on-backing-ukraines-91-borders ———— உறுதிப்படுத்த படாத தகவல். ரஸ்ய உள்நாட்டு பாதுகாப்பில் பொறுப்பில் இருந்த ஜெனெரல் General Alexander Travnikov என்பவர் கடுமையான விபத்தொன்றை சந்தித்து வைத்தியசாலையில் அனுமதிப்பு என்கிறார்கள். டிஸ்கி தேதிலைக்கு தட்டுப்பாடோ?🤣
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
இப்போ பலி எண்ணிக்கை 5 எனவும் அதில் 3 பேர் 18 வயதுக்குட்பட்டோர் எனவும் அறிய வருகிறது. ரஸ்ய ஆதரவு தளங்களின் கருத்துப்படி - இந்த உணவு விடுதியில் வெளி நாட்டை சேர்ந்த, உக்ரேனுடன் இணைந்து போரிடும் துணைப்படையினர் அடிக்கடி சஞ்சரிப்பதால் - இலக்கு வைக்கப்பட்டதாம்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
இங்கே லூக்கா மிக வெளிப்படையாக கதைப்பதாக எனக்கு படுகிறது. லூக்காவை ஈயூவுக்குள் இழுக்க முன்னர் ஒரு சந்தர்ப்பம் வந்தது. லூக்கா ஈயுவுடன் நெருங்கி வருவதை அறிந்து, புட்டின்-லூக்கா இடையே முறுகல் ஏற்பட்டது. இதை பால்-சண்டை என்பார்கள். அந்த நேரம் லூக்காவை ஈயூ இன்னம் கொஞ்சம் இறுக்கமாக அரவணைத்து இருந்தால் லூக்கா இப்போ இந்த பக்கம் இருந்திருப்பார். புட்டினை கோப படுத்த கூடாது என்ற அப்போதைய ஜேர்மனியின்/ பிரான்சின் முடிவால் - லூக்கா வேறு வழி இன்றி மீண்டும் புட்டினிடம் சமரசம் ஆனார். இது ஈயு தவற விட்ட சந்தர்ப்பம்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
பிரிகோசன், புட்டின் இடையே தான் தூது போனதை லூக்கா விபரிக்கிறார். ஆங்கில சப்டைட்டில் உடன்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
குறிப்பு நான் வெளியில் இருந்து அவதானித்தது, உக்ரேன் போர் சம்பந்தமாக தமிழ் செய்தி உலகில் செய்திகள் மிக தாமதமாகவே பகிரப்படுகிறது. உள்ளவற்றில் யாழ் திறம். ஆனாலும் இங்கும் கூட அநேக செய்திகள் வர 24 மணி நேரம் பிடிக்கிறது. ஒரு பொழுது போக்காக இந்த திரியில் டிவிட்டரில் வரும் உறுதிப்படுத்த படாத தகவல்களை போடலாமா என நினைக்கிறேன். அண்மையில் நடந்த ரஸ்ய கலகம் ஒரு நல்ல உதாரணம். கருத்துகளத்தில் செய்திகள் ஓரளவு உடனடியாக பகிரப்பட்டன. ஆனால் முறை சார் செய்தியை ஏராளன் இணைக்க நேரம் எடுத்தது. எனது நிலைப்பாட்டை வலியுறுத்தும் நோக்கம் என அன்றி. செய்தி காவல் என்பதாக மட்டும் இதை செய்யமுடியுமா என்பது தெரியவில்லை. ஒரு சுய பரிசோதனையாக செய்து பார்க்கலாம் என நினைக்கிறேன். பார்ப்போம்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
உருட்டோ…உருட்டு…🤣 நல்ல காலம் சர்வதேச தலைவர்களின் காண்டத்தை கையில் வைத்திருக்கிறார் என சொல்லாமல் விட்டீர்கள்🤣