Everything posted by goshan_che
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
நன்றி நிழலி. இதில் இப்போதைக்கு என்பது முக்கியமான சொல். யாழ்பாணம் பொருளாதாரத்தில் முன்னேற நேரடியான வெளி நாட்டு காசு, என்பதை விட வெளிநாட்டு தமிழர் சந்தை என்பது கொஞ்சம் முன்னுக்கு வர தொடங்கியுள்ளது. பனை அபிவிருத்திச் சபை மிக நேர்த்தியாக கற்கண்டு, பனங்கட்டி, இன்னும் பல பொருட்களை பொதி செய்து விற்கிறார்கள். பண்டதரிப்பில் அவர்கள் அலுவலக கட்டிடம் உள்ள கடையில் பலதையும் வாங்க முடிந்தது. சாவகச்சேரியில் ஜப்னா அராக் என பனஞ்சாராயம் அழகிய போத்தலில் 800 ருபாயில் கிடைக்கிறது. மூலைக்கு மூலை மிக்சர் கடைகள். சுண்டல் வண்டிகள் கூட நேர்தியாகவே உள்ளன. ஆனைக்கோட்டை பக்கம் நல்லெண்ணை, எள்ளு பாகு குடும்ப கைத்தொழிலாக பரவலாக நடக்கிறது. குடும்பங்கள் வறுமையிலும் மானத்தோடு வாழ புலம் பெயர் மக்கள் போய், அல்லது இங்கே இருந்தபடி வாங்கும் பொருட்கள் உதவுகிறன. இது அடி மட்டதில் என்றால் மேல் மட்டத்தில் பல கொழும்பு வாழ் யாழ் மக்கள் மீள வந்து முதலீடுகள் செய்துள்ளார்கள். இவ்வளவு ஏன், புறக்கோட்டையில் ஒரு சுண்டல் வியாபாரி பனங்கிழங்கு விற்றார். யார் என பார்த்தால் யாழ்ப்பாணத்தவர். ஒரு காலத்தில் ஆளை சிஐடி அப்படியே அமுக்கி இருக்கும். காலம் மாறி விட்டது.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
கடன் - அது வடிவேலு வாடகை சைக்கிள் எடுத்த கதைதான். சைக்கிளை விடும் போது வாடகை கட்டினால் போதும்🤣. உண்மையில் வெளியில் இருந்து நாம் குத்தி முறியும் அளவுக்கு இலங்கை அரசோ, மக்களோ கடனை பற்றி அக்கறை காட்டுவதே இல்லை. அவர்களின் ஒரே நோக்கு - அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் சீராக இருக்க வேண்டும். பெளத்த விகாரைகள் - இருப்பன இன்னும் புதுப்பிக்கப்படுகிறன. அனுராதபுரத்தில் அத்தனை விகாரைகளிலும் ஏதோ ஒரு மராமத்து பணி நடந்தபடியே இருக்கிறது. சம்பந்தமே இல்லாமல் சிங்கள பகுதிகளில் கூட கத்தோலிக்கர் இடங்களில் புத்தர் முளைத்துள்ளார். தமிழர் பகுதிகள் பற்றி சொல்லவா வேண்டும். புத்தருக்கு பின்பக்கம் காட்டி படம் எடுக்க கூடாது, புத்தரை பச்சை குத்த கூடாது, டி சேர்ட் அணிய கூடாது இந்த மொக்குதனங்களும் அப்படியே உள்ளன. மக்கள் நிலங்கள் இன்னும் கொஞ்சம் விடுவிக்கபட்டுள்ளன. ஆனால் சுதந்திரம்? அது எதை நீங்கள் சுதந்திரம் என்கிறீர்கள் என்பதை பொறுத்து உள்ளது. வேலை, வியாபாரம் செய்ய, படிக்க, ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து அரசியல் செய்ய சுதந்திரம் உள்ளது. ஆனால் உண்மையான ஒரு மக்கள் எழுச்சியை ஏற்படுத்த முனைந்தால் - ஆப்பு நிச்சயம். தமிழர் சிங்களவர் முஸ்லிம் எல்லாருக்கும் இதுவே நிலமை. தமிழரும்கும் முஸ்லீமுக்கும் இன ஒதுக்கல் ஒரு கூடிய பரிமாணம். அறகலவுக்கு சமைத்துக்கொடுத்தோர், மாலுப்பாண் வாங்கி தந்தோர், கோட்டாவின் நீச்சல்ன்குளத்தில் குளித்தோர் என சிலரிடம் பேசினேன். எல்லாரும் ஏதோ ஒரு வகையில் பழி வாங்கப்பட்டுள்ளனர், அல்லது மிரட்டவாவது பட்டுள்ளனர். 🤣 நற்சான்றிதழ் இல்லை….மனதில் பட்டதை எழுதியுள்ளேன். நன்றி❤️ என்ன வா செய்ய…எனக்கும் ஆசதான்வா…ஆனா மூஞ்சிய காட்ட ஏலா சுட்டி செட் ஆக முடியலவா. ஆனா புது கடை பெயித்து நல்லா திண்டே தான். ராவுல பெயித்து, அந்த பிட்டுவத்தில் ஈந்து கொண்டு நெய்பரோட்டாவும், குலுக்கி சர்பத்தும் அடிச்சா….செல்லி வேல இல்ல வாப்போ…❤️ இது சும்மா…டிரெயிலர்தான்🤣
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
நன்றி அண்ணா. பலர் இதைத்தான் சொல்கிறனர். கூடவே ரணிலை வெல்ல வைக்க சில வெளிச்சக்திகள் நாட்டை தேர்தல் வரையாவது ஓரளவு சுமுகமாக வைத்திருக்க முனைவதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் போகும் போக்கில் இலங்கையில் எதுவுமே அரசின் உரிமையாக இருக்காது போலவே தெரிகிறது. விமான சேவை, விரைவு நெடுஞ்சாலை சேவை, என இலாபம் தரும் சகலதும் விற்க ஏற்பாடாகியுள்ளது. இலங்கை அரசு என்பது வரியை வசூலித்து, கடனை கட்டும் வேலையை மட்டும் செய்வதாக இருக்க கூடும். எரிபொருளில் இருந்து சகல இறக்குமதியும் தனியார் வசம் இருக்கும். இப்படி நாடு முதலாளிகள்/முதலீட்டாளர்கள் கைக்கு போவது - சிறுபான்மையினருக்கு நல்லது என்றே நான் நினைக்கிறேன்.
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
எதுவும் கதைப்பதாக தெரியவில்லை. சொல்லப்போனால் தமிழர்களே இதை பற்றி அதிகம் அலட்டி கொள்ளவில்லை. கேள்வி கேட்ட என்னை பைத்தியக்காரர் போல தமிழர்கள் சிலர் பார்க்கிறார்கள். சம் சும், கஜே, விக்கி வகையறாக்களின் பைத்தியக்காரத்தனம் = தமிழ் தேசியமே பைத்தியக்காரத்தனம் என நினைக்கும் போக்கு பல தமிழரிடம் கண்டேன். முன்னர் பெரும்பான்மையான தமிழர் அரசியல் உணர்வோடும், ஒரு 25% நழுவும் மனநிலையில் இருந்திருப்பின், இப்போ பத்துக்கு எட்டு பேர் நழுவல் மனநிலையில்தான் உள்ளனர். ஆனால் சிங்கள பெளத்தத்தை மீறி ஒரு அடி நகரவில்லை நாடு. முன்னர் போல சிங்கலே…அடிதடி, வெருட்டு, வெளிப்படையாக இல்லை - ஆனால் பிக்குகளின் சிங்கள மக்கள் மீதான பிடி அப்படியேதான் இருக்கிறது. நான் கதைத்த மட்டில், போர் வெற்றி இறுமாப்பை பொருளாதார அழிவு கொஞ்சம் குறைத்துள்ளது, ஆனால் இன்றும் தமிழர் நிலத்தை பறிப்பது, அரசியல் உரிமையை மறுப்பது, சிங்கள மயமாக்கலை நியாயப்படுத்துவது இப்படியானவற்றில் சிங்கள சமூகம் பழைய மனநிலையில்தான் உள்ளது. நான் நினைக்கிறேன்…. பிரித்தானிய காலத்தில் இருந்தது போல சிங்கள இனவாதம் முகிழ்த்துக் கிடக்கிறது. இப்போ இருக்கும் பிரச்சனைகள் தீர, முஸ்லிம், தமிழர்களின் நல்வாழ்வு கண்ணை குத்தும் போது - இன்னொரு அநகாரிக தம்மபால, அல்லது பண்டா வந்து அதை இலகுவாக கிண்டி கிளப்பலாம். தமிழர்களும், முஸ்லிம்களும் மனசார தாம் இரண்டாம் பட்சமாக நடத்தப்படுவதாக உணர்கிறனர். அதுவே உண்மையும் கூட.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
பாகம் II ஒருவருக்கு நீண்ட கால்கள் இருப்பது சில அனுகூலங்களையும், சில பிரதிகூலங்களையும் தரவல்லது. விமானப்பயணத்தில் பிரதிகூலம் என்னவெனில், எக்கானாமி இருக்கைகள் இடையேயான இடைவெளி போதாமையால், மடக்கி கொண்டிருக்கும் கால்கள் வலிக்கும். அதே விமானப்பயணத்தில் அனுகூலம் யாதெனில், இந்த கால் வலிக்கும் பிரச்சனயை சாட்டி, சிப்பந்திகள் பகுதியில் போய் நின்றபடி, அவர்களிடம் கோப்பி வாங்கி குடித்துக்கொண்டே கடலை போடலாம். இப்படியாக இந்த பயணத்தில் அமைந்த கடலைக்காரிதான் தமாரா. பெயருக்கேற்ற தாமரை இலை போன்ற அகன்ற முகம், அதில் சிங்கள வெட்டோடு அழகிய கண்கள். கொஞ்சம் உதட்டாலும், அதிகம் கண்களாலும் பேசிக் கொண்டாள். சீனி மட்டும் இல்லை, பால் இல்லாமல் குடித்தும், அன்று அந்த கோப்பி கசக்கவே இல்லை. மத்திய கிழக்கு விமானங்களில் இலங்கையர்கள் பணிப்பெண்களாக பொதுவாக வேலை செய்வதில்லை. இதை தமாராவிடம் கேட்ட போது, தானும் சிறிலங்கனில்தான் முன்பு வேலை செய்ததாயும், நிச்சயமற்ற நிலை காரணமாக இங்கே மாறி வந்ததாயும் கூறிக்கொண்டாள். அப்படியே பேச்சு வாக்கில், சிறிலங்கனில் டிக்கெட் போடாதே, செலவை மிச்சம் பிடிக்க they are cutting corners in maintenance (விமானப் பராமரிப்பில் கைவைக்கிறார்கள்) என்பதாயும் ஒரு எச்சரிக்கையை தந்து வைத்தாள் தமாரா. நீ இங்கே இருக்க நான் ஏன் சிறிலங்கனில் புக் பண்ண வேணும் என ஒரு அசட்டு ஜோக்கை அடித்தாலும், தமாரா தந்த அறிவுரையும், இதுவரை வாசித்து அறிந்த விடயங்களும் இலங்கையில் இந்த முறை நிலைமை மிக மோசமாக இருக்கும் என்பதையே கட்டியம் கூறுவதாக மனது நினைத்துகொண்டது. தமாராவை தவிர அதிகம் அலட்டி கொள்ள ஏதுமற்ற விமானப்பயணம் ஒருவழியாக முடிந்து, கட்டு நாயக்க நோக்கி விமானம் கீழிறங்கி, தென்னை மர உச்சிகள் கண்ணில் புலப்படத்தொடங்க, அத்தனை கிலேசங்களையும் தாண்டி மனதில் ஒரு நேச உணர்வு படர ஆரம்பித்தது. கட்டுநாயக்காவில் அதிக மாற்றம் ஏதும் இல்லை. பேப்பர் தட்டுப்பாட்டால் உள் நுழையும் சீட்டு முன்னர் தருவதில்லை என்றனர், ஆனால் இப்போ அது தாராளமாக சிதறி கிடந்தது. ஏலவே நுழைவு அனுமதி எடுத்தபடியால், அதிக அலுப்பின்றி குடிவரவை கடந்து, பொதிகளை எடுத்து கொண்டு, முப்பத்தியொரு டொலருக்கு இரெண்டு வாட் 69 போத்தல்களையும் வாங்கி கொண்டு, அழைக்க வந்திருந்த நண்பனின் வாகனத்தில் ஏறினால்….கண்களின் முன்னே காட்சியாக விரிந்தது இலங்கை. முதலில், முகத்தில் அறைந்தது போல் ஒரு நல்ல மாற்றம்…விமான நிலையத்தில், வழமையாக ஜனாதிபதிகளின் படம் இருக்கும் இடத்தில் ரணிலின் படத்தை காணவில்லை. அதேபோல, முன்னர் போல் வீதிகளிலும் தலைவர்களின் ஆளை விட பெரிய பதாதைகளை காணவில்லை. ஒரே ஒரு இடத்தில் மட்டும் அதுவும் சிரச டீவி தனது விளம்பரத்துக்காக “பசில் திரும்பி வந்து விட்டார்” என்பதாக ஒரு பாரிய படத்துடன் கூடிய பதாதையை வைத்ததை கண்டேன். களனிப் புதியபாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதன் வழியே நேரடியாக ஏர்போர்ட் ஹைவேயில் இருந்து பேஸ்லைன் வீதிக்கு வாகன நெரிசலை ஓரளவு தவிர்த்து இறங்க கூடியதாக உள்ளது. இங்கே இருந்து பொரளை வழியாக, தமிழர் தலைநகரமாகிய வெள்ளவத்தைக்கு போகும் வழியில், 2010களுக்கு முந்திய காலம் போல அன்றி, கடைகள், வீடுகள் என பலதில் வெளிப்படையான தமிழர் அடையாளங்களினை பார்க்க முடிகிறது. நரெஹேன்பிட்ட, கிருலப்பன, திம்பிரிகசாய, ராஜகிரிய வரையும், மறுபுறம் பம்பலபிட்டிய தொடங்கி, கிட்டதட்ட இரத்மலான தாண்டி, மொரட்டுவ ஆரம்பம் வரையும் காலி வீதியின் இருமருங்கிலும் தமிழர் “ஆக்கிரமிப்பு”🤣, நடந்துள்ளமையை தெளிவாக காணமுடிகிறது. களனிப் பாலமும், அதன் நேர் எதிர் திசையில் இருக்கும் தாமரை கோபுரமும் இரவில் அலங்கார விளக்குகளால் ஜொலி, ஜொலிக்கிறது. மின்சார தட்டுப்பாடு உள்ள நாட்டில் இது ஏன்? யாரும் கவலை கொள்வதாக தெரியவில்லை. போன மாதம் மக்களுக்கான மின்சார கட்டணத்தை 25% ஆல் குறைத்ததாக ஒரு செய்தியையும் படித்தேன். இந்த முறை யாழ்பாணம் போனால் எப்படியும் ஒரு டிஜே நைட்டில் கலந்து கொள்ளவேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் யாழில் இப்படி எதுவும் நானிருந்த காலத்தில் ஏற்பாடாகவில்லை. ஆனால் ஒரு கலை நிகழ்ச்சிக்கு விஐபி வரிசையில் டிக்கெட் இனாமாக வந்தது என போய், பெரும்பாடாகி போய்விட்டது 🤣. இனாமாக டிக்கெட் தந்தவருக்காக மேலதிக தகவல்களை தவிர்கிறேன். ஆனால் கொழும்பில் சில தமிழ் டிஜே நைட்டுகளில் கலந்து கொள்ள முடிந்தது. ஆண்களும், பெண்களும் வரம்பை மீறியும் மீறாமலும் மகிழ்ந்திருந்தார்கள். வெளிப்படையாக அதீத போதை பொருட்கள் பாவிப்பதை இந்த இடங்களில் நான் காணவில்லை. ஆனால் எங்கும் பரவலாக சிவ மூலிகைப்பாவனை இருக்கிறது. மது, தண்ணீராக ஓடுகிறது. யாழிலும் எல்லாரும் போதை பொருளை இட்டு கதைக்கிறார்கள். ஆனால் ஐரோப்பிய நகர்களில் வெள்ளி இரவுகளில் தெரிவதை போல் அப்பட்டமாக இது தெரியவில்லை. ஆனால் ஒவ்வொருவரும் அவர்கள் நட்பு வட்டத்தில் இப்படி நாசமாகிய ஒரு இளையோரை பற்றி சொல்லும் அளவுக்கு நிலமை மோசமாகவே உள்ளது. கொழும்பில் மூலைக்கு மூலை பெட்டிங் (சூது) கடைகள், ஸ்பா எனப்படும் மசாஜ் மையங்கள் உள்ளன. வடக்கு, கிழக்கில் இதை நான் காணவில்லை. ஆனால், யாழிலும், மட்டகளப்பிலும் சில பிரபல விடுதிகளை சொல்லி, அங்கே பள்ளிகூட வயது பெண் பிள்ளைகள் வந்து போவார்கள் என சிலர் சொன்னார்கள். எந்தளவு உண்மை என தெரியவில்லை. ஆனால் வடக்கு, கிழக்கில் ஒவ்வொரு முறை போகும் போதும், சில விடயங்கள் மேலும் மேலும் தளர்வதை உணர முடிந்தது. ஆனால் புலம்பெயர் நாட்டில் சிலர் சித்தரிப்பதை போல், எல்லாமும் நாசாமாகி விட்டது என்பதும் இல்லை. கொழும்பு, மேல் மாகாணத்தை தாண்டியும் சில சிங்கள பகுதிகளில் இந்த முறை நேரம் செலவிட்டேன். அம்பலாங்கொட போன்ற 99% சிங்கள மக்கள் வசிக்கும் இடங்களில் அடுக்கடுக்காக தமிழர் நகைக்கடைகள் இருந்தன. அதே போல் அனுராதபுரத்தில், பொலநறுவையில், கெக்கிராவ போன்ற இடங்களில் முஸ்லிம் மக்கள், வியாபாரங்கள், மசூதிகள் என பரவலாக வெளிப்படையாக காண முடிந்தது. சிலாபம் போன்ற இடங்களில் தமிழ், முஸ்லிம் பெயர்களில் கடைகளை கண்டேன். பெளத்த மதத்தின் மீதான பற்று, சிங்கள மக்கள் மத்தியில் இன்னும் அப்படியே உள்ளதை மத அனுஸ்டானங்களும், ஞாயிறு பள்ளிகளும் காட்டி நிற்கிறன. கொழும்பின் மதச்சார்பற்ற பிரபல பாடசாலைகளில் கூட, மாதாந்த பிரித் உட்பட பல வகையில் மதம் புகுத்தபடுவதாக பலர் விசனப்பட்டனர். மேல்மாகாண, மலையகத்தில் இருந்து மேல்மாகாணம் வந்த தமிழர்கள் ஒவ்வொரு மட்டத்திலும் ஒரு படி மேலே போயுள்ளனர். அதே போல் முஸ்லிம் சமூகம், வியாபாரத்தில் பல படி உயர்ந்து நிற்கிறது. வட கிழக்கு தமிழ்ச் சமூகமும் அவ்வளவு மோசமில்லை. ஆனால் ஓட்டு மொத்த இலங்கையும் வெளி நாட்டு மோகத்தில் தவிக்கிறது. நிற்க, நாட்டில் வறுமை தலைவிரித்தாடும், வீதி எங்கும் பிச்சைகாரர் இருப்பர், 80 களில் சென்னை தி. நகர் போனால் கிடைக்கும் அனுபவம் கிடைக்கும் என நினைத்துப்போன எனக்கு, அப்படி எந்த அனுபவமும் கிடைக்கவில்லை. பிச்சைகாரர் எண்ணிக்கை முன்னர் போலவே உள்ளது. இலண்டனில் வீதி விளக்கில் நிற்போர் அளவுக்குத்தான் இருப்பதாக படுகிறது. அடிக்கடி வேலை நிறுத்தங்கள் வருகிறது. ஆனால் ஓடும் போது ரயில் பஸ்சுகள் ஓரளவு நேரத்துக்கு ஓடுகிறன. யாழ், கல்முனை/அக்கரைபற்றுக்கு நல்ல பஸ்சுகள் ஓடுகிறன. அதுவும் அக்கரைபற்றுக்கு, தெற்கு விரைவு சாலை வழியாக, விரைவாக, சுகமாக போக முடிகிறது. குருநாகலவில் ஒரு கொஞ்ச தூரம் கண்டி விரைவுச்சாலையின் ஒரு பகுதி மட்டும் பாவனைக்கு வந்து, தொங்கி கொண்டிருக்கிறது. ஆனால் யாழ் பஸ் புத்தளம் வழியேதான் போகிறது. புத்தளம், அனுராதபுரம் இடையே உள்ள சேர்வீஸ் நிலையம், நல்ல தரமாயும், சுத்தமான கழிவறையுடனும் உள்ளது. அதேபோல் மாத்தறை விரைவுச்சாலையில் மேநாட்டு பாணியில் மிக திறமான சேர்விஸ் நிலையங்கள் இரு பக்கமும் உள்ளன. மருந்துகள் உட்பட எந்த பொருளும் இல்லை என்று இல்லை. ஆனால் எல்லாமுமே 2019 உடன் ஒப்பிடின் குறைந்த பட்சம் மூன்று மடங்கால் அதிகரித்துள்ளது. மேநாடுகளில் சாமான்யர்களின் பொருளாதாரத்தை பாணின் விலையை கொண்டு மதிப்பீடு செய்யும் ஒரு அடிப்படையான முறை உள்ளது. இலங்கையில் அதை மாட்டிறைச்சி கொத்து ரொட்டியின் விலையை கொண்டு அணுகலாம் என நினைக்கிறேன். முன்னர் 250-350 என இருந்த விலை இப்போ, 850-1000 ஆகி உள்ளது. அதே போல் 100க்கு கீழே இருந்த லீட்டர் பெற்றோல், இப்போ 400க்கு அருகே. ஆனால் மாதச்சம்பளம் இந்த அளவால் அதிகரிக்கவில்லை. ஆனாலும் பட்டினிசாவு, பிச்சை எடுக்கும் நிலை என்று பரவலாக இல்லை. அப்படியாயின் எப்படி சமாளிக்கிறார்கள்? பலரிடம் நயமாக கேட்ட போது, ரோலிங், கடன் அட்டை, சிலதை குறைத்துள்ளோம் என்பது பதிலாக வருகிறது. இதில் முதல் இரெண்டையும் அதிக காலம் செய்ய முடியாது. உண்மையில் மாத சம்பள ஆட்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை. ஆனால் சமாளிக்கிறார்கள். சகல கடைகளிலும், நாடெங்கிலும் சனம். பொருட்கள் வாங்குதலில், உணவு கடைகளில், விழாக்களில், திருவிழாக்களில், திருமணங்களில்….ஒரு குறையும் தெரியவில்லை. ஒரு எள்ளுபாகு 50 ரூபாய் என்றதும் ஒரு கணம் ஜேர்க் ஆகவே செய்தது. ஆனால் கல்கிசை-வெள்ளவத்த பஸ் கட்டணம் 70 ரூபா என்றால் கணக்கு சரியாகவே தெரிந்தது. அம்மாச்சியில் மட்டும் எல்லாமுமே கொள்ளை மலிவு. வெளியே குறைந்தது 400 விற்கும் பப்பாசி பழ ஜூஸ், இங்கே 100! எப்படி முடிகிறதோ தெரியவில்லை. பொரித்த கச்சான் 100 கிராம் 100 ரூபாய், மஞ்சள் கடலை 100 கிராம் 150 ரூபாய், அவித்த சுண்டல் குறைந்த அளவு விலை 100 - என முன்னர் 20 ரூபாய் இருந்த இடத்தில் இப்போ 100 ரூபாய் இருக்கிறது. வாகனங்கள் இறக்குமதி இல்லை என்பதால் இன்னும் அதிகமாக விலை ஏறி உள்ளன. தகவல் தொழில் நுட்ப disruptive technologies ஆகிய ஊபர், ஊபர் உணவு, பிக் மி என்பன யாழ் உட்பட எங்கும் கிடைக்கிறது. ஓரளவு பெயர் உள்ள கடைகளில் எல்லாம் contactless அட்டைகள் நாடெங்கும் பாவிக்க முடிகிறது ( தனியே பூட்சிட்டி, கீள்ஸ் மட்டும் அல்ல, உள்ளூர் ஆட்களின் சுப்பர் மார்கெட்டுகளிலும், பேக்கரிகளிலும் கூட). யாழில் காங்கேசந்துறை கடற்கரையை நேவி பராமரிப்பில் மக்கள் பாவனைக்கு விட்டுள்ளார்கள். ஒரு இராணுவ நகரின் (cantonment) நெடி இருக்கத்தான் செய்கிறது. உள்ளூர்வாசிகளும், இராணுவத்தினரை காண வரும் சிங்கள குடும்பத்தினரும் என ஒரு கலவையாக இருக்கிறது அந்த இடம். நேவியே கோப்பி, சோர்ட் ஈட்ஸ் விற்கிறது. பண்ணை கடற்கரை பூங்கா அதே போல் தொடர்கிறது. நான் கண்டவரை முன்னிரவில் ஜோடிகள் சுதந்திரமாக கைகோர்த்தபடி ஆபாசம் இல்லாமல் மகிழ்ந்திருக்கிறார்கள். அருகேயே உணவு கடைகளும், சிறுவர் பூங்காவும், நடை பயிலும் பாதையும், அங்காடி பெட்டி கடைகளும் என சந்தோசமாக மக்கள் இருப்பதை காண சந்தோசமாக இருந்தது. ஆரிய குளமும் நன்றாக உள்ளது. நடைபாதை அருகே பெஞ்சுகள், மின் விளக்குகள், உணவு வண்டிகள் என நன்றாக உள்ளது. எமிரோன் என்ற ஒரு யாழ் நொறுக்குதீனி கடை மேற்கத்திய பாணியில் பல கடைகளை திறந்துள்ளார்கள். கொழும்பில் கூட. அதே போல் தினேஸ் பேக்கவுசும் ஒரு பாரிய தொகுதியை கொக்குவிலில் திறந்துள்ளனர், மேலும் மூன்று கிளைகள் உள்ளன. யாழுக்கு பீட்சா ஹட் இரெண்டு வந்துள்ளது. இலங்கையில் தன் முகவரான அபான்ஸ் உடன் முறுகிகொண்டு மக்டொனால்ஸ் தன் கடைகளை மூடியுள்ளது. யாழின் பொருளாதாரம் அசுர பாய்ச்சல் பாய்வதாகவே நான் உணர்கிறேன். வலிகாமத்தில் யாழ் நகரை அண்டிய சிறு நகர்களில், பிரதான வீதியோர காணிகள், கண்ணை மூடி கொண்டு பரப்புக்கு ஒரு கோடி என்கிறார்கள். மட்டு நகரை அண்டிய வீதியோர காணிகளிலும் பேர்சுக்கு இதே விலைதான். யாழ் தனியார் பேரூந்து நிலையம் இயங்குகிறது. ஆனால் ஒருமாதம் முன்பும், பொது பேரூந்து நிலையத்தை அடைத்து, தனியார் ஆட்கள் போராட்டம் நடத்தி கலைந்து சென்றார்கள். தனியார் மருத்துவமனை வியாபாரமும் நாடெங்கும், குறிப்பாக யாழில், மட்டக்களப்பில் கொடி கட்டி பறக்கிறது. அதே போல் மேல் மாகாணத்தில் இருக்கு சில திருமண மண்டபங்கள்….இலண்டனில் கூட அந்த வகை ஆடம்பரமாக இல்லை. நீர்கொழும்பு பெரிய முல்ல பகுதி கிரீஸ், சைப்பிரஸ் போல ஒரு இரவு வாழ்க்கை மையம் போல மாறியுள்ளது. தென்னிலங்கையில், களுத்தற முதல் காலி, மிரிச, வெலிகம வரை ரஸ்யர்களால் நிரம்பி வழிகிறது. கடைகளில் சிங்களம், ஆங்கிலம், ரஸ்யனில் போர்டு வைப்பது சாதாரணமாக உள்ளது. ரஸ்யர்கள் தாமே வியாபாரங்களில் ஈடுபட்டு தமது வருவாயை குறைப்பதாக சுதேசிகள் முறையிட்டு இப்போ அரசு விசாரிக்கிறது. சகலதும் விலை கூடினாலும் வேகமாக ஓடி பொலிசிடம் மாட்டுப்பட்டால் கொடுக்கும் விலை மட்டும் இன்னும் 1000 ரூபாயாகவே உள்ளது. பொலிஸ் நிலையம், ஓய்வூதிய அலுவலகம், பட்டினசபை - மூன்றுக்கும் போன அனுபவத்தில் அலட்சிய போக்கு முன்பை விட குறைந்துள்ளதாக பட்டது (எனது அதிஸ்டமாகவும் இருக்கலாம்). அண்மையில் கொழும்பு, யாழ், கண்டி, காலியில் பெரும் கிரிகெட் போர்கள் (பிக் மேட்ச்) நடந்தன. நான் போனவற்றில் மது ஆறாக ஓடியது. ஆனால் ரகளை குறைவு, இல்லை என்றே சொல்லலாம். எல்லாரும் ரணில் அல்லது ஏகேடி என்றே சொல்கிறார்கள். சொந்த வீடு உள்ள, வாடகைக்கு அடுத்த வீட்டை விடும் ஆட்கள் கூட ஏகேடி ஆதரவாய் இருப்பது முரண்நகையாக படுகிறது. ஆனால் மேல்தட்டு வர்க்கம் ரணிலின் பின்னால் நிற்பது கண்கூடு. முடிவுரை வெளியில் இருந்து நினைத்தை போல் நாட்டின் நிலை அவ்வளவு மோசம் இல்லை. அல்லது மோசமாய் இருந்து, ரணில் வந்த பின் முன்னேறியுள்ளது. நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது. (முற்றும்) 🙏 சுக்ரியா மேரே (b) பையா🙏. பிளேன் எடுக்க முன்னம் நிறையை மீண்டும் அளந்து, போதிய எரிபொருளோடுதான் எடுப்பினம் என நினைக்கிறன். அத்தோட எல்லாரும் முழு அளவுக்கு வெயிட்டோட வாறேல்ல தானே. கூடவே சின்ன பிள்ளையள், குழந்தையள் எல்லாம் சேர்த்தா…நோ பிராப்ளம்.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
நன்றி. யாழில் நீங்க நீடித்து எழுத வாழ்த்து. இணைந்திருங்கள்🙏. நன்றி அக்கா. நெஞ்சை நிமித்தினால், கு…. குப்பிற போட்டு முதுகில் மிதிப்பார்கள் என்பதால் அப்படி போகவில்லை🤣. லேட் ஆகிறது என்ற பாவனையில் இருந்து 5 கிலோவை அனுப்பினேன். முதுகில் தூக்கும் பை அவசியம். இடம் எடாத, சாகிலேட் சிலாப் போன்ற கனமான சாமான்களை செங்கல் அடுக்குமாப்போல் அடுக்கி, பாக்கின் புறத்தோற்றம் “பொம்மாது” பார்ர்துகொள்ளவேண்டும். நிறை அளக்கும் இடத்தில் இந்த பாக்கை கொண்டு போககூடாது, வழி அனுப்ப வந்தவரிடம் கொடுத்து விட்டு போக வேண்டும். ஆனால் hand luggage tag கொடுப்பாதாகின் ஒன்றை வாங்கி வந்து கட்டிவிட வேண்டும். பின்னர் 11 கிலோவை எதோ பஞ்சை சுமக்கும் பாவனையில் முதுகில் சுமந்த படி விமானம் ஏற வேண்டும். மறந்தும் பையை விமான ஊழியர்கள் கையில் கொடுக்க கூடாது🤣. வாவ்…நன்றி ஐயா. 🤣…ஆ…:நல்ல கதை….நான் ஏற்கனவே 4 கொண்டு போனான் (Cadburys fruit and nut ஐ சொல்லுறன் 🤣). நன்றி அண்ணை. பக்கம் பக்கமாகவா🤣. அதுக்கு @Nathamuni வரணுமே🤣 வரணும்🙏 நன்றி நீர்வேலியான். நீருக்கு வேலி போட்டால் வரட்ச்சியாய்தானே இருக்கும்🤣? மடை திறந்து எழுதுவோம்🙏
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
வணக்கம் பாஸ். அதான் வந்தாச்சில்ல, வச்சு செய்துட்டா போச்சு🤣. வருகை, வரவேற்புக்கு நன்றி நுணா. பனம்பாலும் உண்டு🤣. வருகை, வரவேற்புக்கு நன்றி விளங்க நினைப்பவன். நன்றி அண்ணா. புட்போர்டில் தொத்தி ஏறினாலும், ஒரே இடத்துக்குத்தானே பஸ் போகும்🤣. நன்றி அண்ணா. முடியமுன்னம் பதியும் அவசரத்தில்தான் ஓடி வந்தேன். ஓம்….பார்த்தேன். ஆளில்லா கடை என்றாலும் ஆத்தினாத்தான் கூலி வரும் 🤣. #வாழப்-பாடி
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு…. இலங்கைப் பயணகட்டுரை ஹீத்துரோவில் விமானம் ஏறும் போது ஏதோ இனம்புரியாத ஒரு உணர்வு மனதில் ஓடிக்கொண்டிருந்தது. இலங்கையும் புதிதில்லை, விமானப்பயணமும் புதிதில்லை. ஆனாலும் கொவிட் பெருந்தொற்றுக்கு பின்னான முதல் இலங்கைப்பயணம். ஒதுங்கி வாழ்வதே வாழ்க்கை என ஆகி விட்ட அந்த இரு வருடங்களில் இப்படி ஒரு பயணம் இனி ஒரு முறை அமையுமா என்பதே நம்பிக்கை இல்லாமல் இருந்தது. அந்த நிலை கடந்து, கொஞ்சம் கொஞ்சமாக குட்டி போட்ட பூனை போல் ஐரோப்பாவையே சுற்றி வந்த நிலையும் கடந்து….இதோ இலங்கைக்கான நெடு-நாள் பயணம் ஆரம்பமாக போகிறது. கடந்த முறை கட்டுநாயக்காவில் இருந்து வெளியேறும் போது சுவரில் மைத்திரிப்பால சிரிசேன சிரித்து கொண்டிருந்தார். அப்போ, மீண்டும் இலங்கை மீள, இப்படி ஒரு நீண்ட இடைவெளி விழும் என எதிர்பார்த்திருக்கவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில்தான் நாட்டில் எத்தனை மாற்றங்கள். ஒரு தொடர் குண்டு வெடிப்பு, ஒரு ஆட்சி மாற்றம், பெருந்தொற்று, பொருளாதர நெருக்கடி, ஒரு அற(ம்)(ர)களை, இன்னொரு ஆட்சி மாற்றம்…. நாட்டில் மட்டும் அல்ல, இந்த இடைவெளியில் என் மனதில் கூட பல போபியாஃக்கள் வந்து குடியேறி, ஆட்சி அமைக்கவும் உரிமை கோரிக்கொண்டிருக்கிறன. தெனாலி கமல் போல, வைரஸ் எண்டால் பயம், டெங்கு எண்டாலும் பயம், ரேபீஸ் நாய்க்கடி என்றால் மெத்த பயம் எனக்கு என்பதாக இந்த போபியா லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. என்னதான் ஒரு காலத்தில் அந்த நாட்டில் நுளம்புகளோடு தாம்பத்தியமே நடத்தி இருந்தாலும், போரின், இடப்பெயர்வின், சாவின் வடுக்களை அனுபவித்திருந்தாலும், சில தசாப்த புலம்பெயர் வாழ்வின் ஒப்பீட்டளவிலான பாதுகாப்பு, மனதை மென்மையாக்கியே விட்டுள்ளது. உண்மையில் இந்த பயணம் பல மட்டங்களில் எனக்கு ஒரு மீள் வருகைதான். நான் பிறந்த நாட்டுக்கான சில வருடங்களின் பின்னான பெளதீக மீள் வருகை மட்டும் அல்ல, உள ரீதியில் ஒரு தென்னாசியனாக என் இயற்கை வாழ்விடத்துக்கும், முன்னர் எனக்கு பழகி இருந்த அந்த வாழ்விடத்தின் அசெளகரியங்களுக்கும் கூட, இது ஒரு மீள் வருகைதான். இந்தத்தடவை தமிழ் நாடு போய், கப்பல் அல்லது விமானம் மூலம் யாழை சென்றடைய முயற்சித்தாலும் அது கை கூடவில்லை. புலம் பெயர் நாட்டில் இருந்து இந்த பயணங்களை இந்த தடத்தில் ஒழுங்கு செய்வது கொஞ்சம் கடினமாக, மிகவும் அயர்ச்சி தருவதாக இருந்தது. கப்பல் போக்குவரத்து இந்திய அரச கப்பல் நிறுவனம் செய்வதாக சொல்லி இருந்தாலும் அதன் இணைய தளத்தில் அந்தமான் சேவை பற்றி மட்டுமே அறிய கிடைத்தது. ஒரு வாட்சப் நம்பரை தேடி எடுத்து தொடர்பை ஏற்படுத்த முனைந்தும் பதில் ஏதும் இல்லை. அதே போல் விமான சேவை செய்யும் அலையன்ஸ் ஏர் டிக்கெட் விற்கும் இணையதளம் செயல்பட்ட வேகமும், முறையும் நம்பிக்கை தருவதாக இருக்கவில்லை. மேலும் எத்தனை கிலோ எடுத்து போகலாம் என்பது பற்றிய நிச்சயமின்மை, சென்னையில் இடைத்தரிக்கும் நேர அளவு, self transfer என்பதால் ஏற்பட கூடிய அனுகூல இழப்புகள், யாழிற்கு நேரே போனாலும் எப்படியும் கொழும்புக்கு வர வேண்டி இருந்தமை, இந்தியன் வீசா கட்டணம் இப்படி பலதை கருத்தில் எடுத்தபோது, இந்த முறையும் நேரே கொழும்புக்கு போவதே உசிதமான தெரிவாக இருந்தது. ஹீத்துரோவில் தானியங்கி செக்கின் முறையில் ஏதோ குளறுபடி என ஒரு முப்பது நிமிடம் அளவில் தாலியை அறுத்தாலும், இந்த குளறுபடியில் நாற்பது கிலோவுக்கு பதிலாக நாற்பத்தைந்து கிலோவை லெகேஜில் தள்ளி விட முடியுமாக இருந்தது ஒரு சின்ன வெற்றியே. அதுவும் அந்த ஒயிலான இந்திய வம்சாவழிப் பெண் ஊழியை உதவிக்கு வந்தமை, இன்னொரு முப்பது நிமிடம் தாமதித்தாலும் பரவாயில்லை என்றே எண்ண வைத்தது. ஒரு வழியாக போர்டிங் வெட்டி, ஏழு கிலோவுக்கு பதில் பதினொரு கிலோ ஹாண்ட்லெகேஜுடன் விமான இருக்கையை வெற்றிகரமாக அடைந்து, முதல் ஆளாக போய் துப்பராவான கழிவறையை பாவித்து விட்டு, இருக்கை பட்டியை அணிந்து, விமான இருக்கை முன் உள்ள சின்ன திரையை நோண்ட ஆரம்பிக்க, விமானத்தின் சக்கரங்கள் ஓடுபாதையில் மெதுவாக உருள ஆரம்பித்தன. (தொடரும்)
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கேப்டன் …..விஜயகாந்த் பற்றி…..சாக முன்னம் நாற வாய்….செத்த பின்னர் வேற வாய்….🤣
-
தேசிய வருமான வரி : வருடத்திற்கு 12 இலட்சத்துக்கும் அதிக வருமானம் பெறுபவர்கள் உட்பட 14 தொழிற்துறைகளை சார்ந்தவர்கள் பதிவு செய்தல் கட்டாயம்
பிளீஸ் மீரா….நீங்களே ஐடியா போட்டு கொடுக்க வேண்டாம்🤣….நேற்று ஒராள் சாமம் 3 மணிக்கு கோல் எடுத்திருக்கு….
-
19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து பயிற்சி குழாத்தில் தமிழ் யுவதி அமுருதா
வாழ்த்துக்கள். இவர் யாழ் செஞ் ஜோன்ஸ் கல்லூரி அணி வீரரும் 90ஆம் ஆண்டு சென்ரல்- சென் ஜோன்ஸ் போட்டியில் சதம் அடித்தவருமான சுரேன்குமாரின் மகளாவார்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
Novocherkassk என்ற கிரைமியாவில் தரித்து நின்ற ரஸ்யாவின் பெரிய தரையிறங்கு கப்பல் (landing craft) உக்ரேனால் தாக்கி அழிப்பு என உக்ரேனும், சேதம் என ரஸ்யாவும் அறிவிப்பு.
-
உடுமலை சங்கர் கொலை: நீதிப் போராட்டத்தை திமுக அலட்சியப்படுத்துவதாக கௌசல்யா குற்றச்சாட்டு
இந்த துயரம் நடந்து இத்தனை ஆண்டுகள் பின்னும் நீதி இழுத்தடிக்கப்படுகிறது. அதிமுக, திமுக….உதிரிகட்சிகள் எல்லாம் இதில் சாதி அரசியலையே செய்கிறன. இந்த வழக்கை தாமா முன் வந்து விசாரிப்பாரே நீதிபதி ஆனந்த வெங்கடேசன்?
-
துவாரகா உரையாற்றியதாக...
உழைப்புக்கு நன்றி🙏. உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்.
-
துவாரகா உரையாற்றியதாக...
இதை நானும் வழிமொழிகிறேன்.
-
துவாரகா உரையாற்றியதாக...
இந்த பேட்டியில் அதை (pray for Sri Lanka) தான் போட்டதாக ஒத்து கொள்கிறார். ஆனால் தானாக அதை உருவாக்கவில்லை, பேஸ்புக் போட்டதை போட்டேன் என்கிறார். இராவணனோ இன்னொரு படி மேலே போய் இலங்கை கொடியை போடவில்லை என கவர் எடுக்கிறார். கார்த்தி இலங்கை கொடியை போட்டு, pray for Sri Lanka என போட்டது உறுதியாகியுள்ளது. முடிவு இதை வைத்து மட்டும் அவரை முத்திரை குத்த முடியாது. ஆனால் நம்பவும் முடியாது. சாதராண மக்கள் நாமே இலங்கை மீது அனுதாபம் வரினும் கொடியை அதன் வரலாற்றை உணர்ந்து தவிர்க்கும் போது- இப்படி ஒரு குடும்பத்தில் இருந்து வந்தவர் - பேஸ்புக் போட்டது நானும் போட்டேன், இத்தாலிக்கும் போட்டேன் என சொல்வது - யோசிக்க வேண்டிய விடயம்.
-
துவாரகா உரையாற்றியதாக...
நன்றி முதல்வன். பார்க்கிறேன்🙏
-
துவாரகா உரையாற்றியதாக...
https://www.facebook.com/100077415585753/posts/pfbid02GZ4T6uNq4KtxvWVwP3xxNo7uKy4MadXBUny5PBJNBZXJ1kwQupJwibJxQhzjmKel/?app=fbl நன்றி
-
துவாரகா உரையாற்றியதாக...
நன்னி, முடிந்தால் ஒரு fact check உதவி. இந்த கார்திக் pray for Sri Lanka, என்ற செய்தியுடன், இலங்கை கொடி போட்ட அவரின் முந்தைய முகபுத்தக புரோபைல் என சில படங்கள் கண்ணில் பட்டது. இவை உண்மையா? போட்டோஷாப்ப்பா?
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
3 நாளில் கியவ்… ரஸ்யா டாங்கிகள் மீது உக்ரேனியர் பூங்கொத்து எறிவார்கள்…. ஒட்டுமொத்த உக்ரேனும் ரஸ்யவசமாகும்…. இப்படி பலதை சொன்னதையும் நினைவூட்டுகிறேன்🤣. அமெரிக்காவில் ரிபளிக்கன்ஸ் கை ஓங்கினால் உக்ரேன் பாடு கஸ்டம், டிரம்ப் வந்தால் (அவர் புட்டினிடம் பிடி கொடுத்துள்ளவர்) ஐரோப்பவின் நிலையே கஸ்டம் என்பதை உக்ரேன் போருக்கு முதலே இங்கே பலர் எழுதிய படிதான் இருந்தார்கள். உங்களுக்கு பதிலாகவே இவற்றை நான் எழுதியதும் உண்டு. உங்களைத் தீர்கதரிசி, மற்றவர்களை விடு பேயன் என் நிறுவி விடும் மேட்டுகுடி அந்தரிப்பில் இவற்றை செலக்டிவ் அம்னீசியாவில் விட்டு விட்டீர்கள் போலும்🤣.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ஓம்…ஜனநாயக நாடுகளில் இது ஒரு பிரசிச்சினை. அதிகாரம் கட்சிக்கு கட்சி மாறுவதால் சில விடயங்களில் கொள்கை தளம்பல் இருக்கும். பொதுவாக இது அமெரிக்க வெளியுறவு கொள்கையில் இருப்பதில்லை. ஆனால் உக்ரேன் விடயத்தில் இருக்கிறது. காங்கிரஸ் மட்டும் அல்லாது பிரெசிடென்சியும் ரிப்பளிக்கன் வசமானானால் செலன்ஸ்கி தலைமையிலான உக்ரேனுக்கு சங்குதான். இது புட்டினுக்கும் தெரியும் - ஆகவேதான் he is playing the long game. விடுதலைபுலிகள் பற்றி முன்னர் எழுதும் போது ஒரு தடவை எழுதினேன். Perfect should never be the enemy of the good. அதாவது நாம் விரும்பும் இலட்சிய தீர்வை அடைவதற்க்காக, கிடைக்க கூடிய நல்ல தீர்வை கைவிடக்கூடாது. செலன்ஸிக்கும் அதுதான். அடுத்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரைக்கும்தான் நேரம். அதற்குள் ஒன்றில் இழந்த 20% உக்ரேனை மீட்கவேண்டும், அல்லது மிகுதியையாவது தக்கவைக்கும் ஒரு உடன்படிக்கைக்கு போகவேண்டும். ஆனால் இது ஒன்றும் புதிய விடயம் அல்ல. புட்டின் உக்ரேனில் இறங்கிய தருணமே, டிரம்ப் இதர தீவிர வலது ரிபப்ளிகன் ஆட்கள் சொன்னதை வைத்து, பைடன் தோற்றால் இப்படி ஆகும் என நான், ஜஸ்டின் போன்றோர் முன்பே எழுதியுள்ளோம். பிகு ஆனால் அரசியலில் எதுவும் விரைவில் மாறலாம். தீவிர வலதுசாரிகளின் டார்லிங் தற்போதைய அர்ஜெண்டீனா அதிபர். அவரின் பதவி ஏற்பில் அவர் செலென்ஸ்கியை கொஞ்சாத குறை அவ்வளவு அரவணைப்பு. செலன்ஸ்கியின் தென், வட அமெரிக்க பயணங்கள் தனியே ஊடகங்களை வாசித்துவிட்டு வாந்தி எடுப்போர் சொல்வது போல் “பிச்சை பயணமாக” மட்டும் இல்லாமல், ஆர்ஜெண்டினா வழியாக, American Right இடம் தன்னை/உக்ரேனை re position பண்ணும் முயற்சியாயும் இருக்கலாம்.