Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. நேற்று ஒரு விடயம் எழுதாமல் விடப்பட்டு விட்டது. வெளிவந்த தீர்ப்பை பலர் தவறாக விளங்கி கொண்டுள்ளார்கள். இதில் சில Fox News அறிவிப்பாளர்களும் அடக்கம். XRP is sometimes a security, sometimes it’s not (XRP சில நேரத்தில் பங்கு போலவும், சில நேரத்தில் பங்கு அல்ல எனவும் கருதப்படும்) - என தீர்ப்பு கூறுவதாக இவர்கள் எழுதுகிறார்கள். இது மிக தவறான புரிதல். இவர்களுக்கு சட்டம், தீர்ப்புகள் பற்றிய புரிதல் இல்லை என நான் அனுமானிக்கிறேன். ரிப்பிள் நேரடியாக institutional investors ற்கு விற்ற பங்குகள் மட்டுமே securities. மிகுதி எதுவுமே அல்ல. இனிமேலும் ரிப்பிள் நேரடியாக institutional investors ற்கு விற்றால் அதுவும் security (ஆனால் ரிப்பிள் அப்படி இனி செய்யாது).
  2. இனி என்ன நடக்கலாம்? அதற்கு முன் - கவனிக்க. இந்த XRP பங்கா, நாணயமா என்ற குழறுபடி அமெரிக்காவில் மட்டும்தான். யூகே, ஈயூ, சிங்கப்பூர் என பல நாடுகள் கிரிப்டோ கரன்சியை பங்கு அல்ல என ஏற்றுகொண்டு விட்டன. 1. ரிப்பிள் பெரு நிறுவனங்களுக்கு விற்றது பங்கு என தீர்ப்பு ஆனது என முன்னர் பார்த்தோம் அல்லவா? ஆகவே இனி ரிப்பிளால் அப்படி விற்பதும் முடியாது. ஆனால் பெரு நிறுவனங்கள் வாங்கினால்தானே XRP விலை கூடும் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் ரிப்பிளிடம் நேரடியா வாங்க முடியாவிடில் பெரு நிறுவனங்கள் எங்கே XRP ஐ வாங்கலாம்? 1. வெளிநாடுகளில் (பின்னர் தம் அமெரிக்க கணக்குக்கு மாற்றலாம்) 2. அல்லது அமெரிக்காவில் வாங்குவதாயின் எம்மை போல சாதாரண சில்லறை வர்தகர்களிடம், அமெரிக்க கிரிப்டோ எக்ஸ்சேஞ்களில். உண்மையில் இப்படி நடந்தால் - சில்லறை XRP வைத்திருப்போர் காட்டில்- பண மழை கொட்ட வாய்பிருக்கிறது. 2. பெரு நிறுவனங்கள் programic sales இல் வாங்கலாம். 3. Escrow என்று மாதாதந்தம் தானியங்கியாக XRP பெருந்தொகை சந்தைக்கு திறந்து விடப்பட்டு, சிறிது நேரத்தில் மீண்டும் உபரி XRP பூட்டப்படும். இந்த முறை தொடரலாமா இல்லையா என்பதில் யாருக்கும் தெளிவில்லை. ரிப்பிளின் முதன்மை தொழிநுட்ப அதிகாரி கூட - இதை நாம் இன்னும் ஆராய்ந்து கொண்டே இருக்கிறோம் என்கிறார். இந்த முறை தடைப்பட்டாலும், XRP விலை சடுதியாக கூட வாய்ப்புண்டு. ஆனால் போதிய அளவு XRP circulation இல் இல்லாவிடில் அது பரிவர்த்தனையை கடுமையாக்கும், நேரம் எடுக்கும் இது XRP யின் விலையை குறைக்கும். 4. வழக்குக்கு என்ன நடக்கும். 785 மில்லியன் வித்த வழக்கு - தன்பாட்டில் நடக்கும். இரு பகுதியும் சமரசமாய் போகவும் கூடும். ஆனால் அது ரிப்பிளின் முந்தைய நடவடிக்கை பற்றியது. இதனால் XRP விலை அதிகம் பாதிக்கப்படாது. 5. XRP பங்கு இல்லை, மற்றும் ஏனைய 3 முகாந்திரங்களில் - கிடைத்த தீர்ப்பை எதிர்த்து SEC அடுத்த appellate court, அதன் பின் Supreme Court போகலாம். ஆனால் பல சட்ட வல்லுனர் கருத்துப்படி அப்பீல் வெல்வது கடினம் என்கிறார்கள். நீதிபதியின் காரணங்கள் காற்றுபுகாத அளவுக்கு இறுக்கமாகவே எனக்கும் படுகிறது. அப்படியே அப்பீல் செய்தாலும் அதில் முடிவு வர 2025 க்கு மேல் ஆகும். அதற்குள் ஆட்சி மாறலாம். பல விடயங்கள் நடக்கலாம். காங்கிரஸே சட்டம் மூலம் - கிரிப்டோவை கட்டுப்படுத்தலாம். ஆனால் அதுவரை பிட்காயினும், XRP யும் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட கிரிப்டோ சொத்துக்களாய் இருக்கும்(ஏனைய பல காயின்கள் மீது SEC கண் வைத்துள்ளது) . 6. அதே போல் இந்த தீர்ப்பு எதூரம் தவிர்ந்த ஏனைய கிரிப்டோக்களுக்கு ஒரு நல்ல செய்தியே. அதேபோல் அங்கீகரிக்கப்படாத பங்கு விற்பனையில் ஈடுபட்டதாக SEC வழக்கு போட்டுள்ள Coinbase போன்ற எக்ஸ்ச்செஞ்சுகளுக்கும் இது நல்ல செய்தியே. 7. மிக முக்கியமாக இப்போ இருக்கும் சட்ட ஆசீர்வாதத்தை (regulatory clarity) பயன்படுத்தி பெரு நிறுவனங்களிடையான உலக நிதி பரிவர்தனை வியாபாரத்தை XRP கைப்பற்றினால் ! இதற்கு கணிசமான வாய்ப்பு உள்ளது.
  3. XRP வழக்கு - ஒரு பின்னோட்டம் கலைச்சொற்கள்: 1. பாதுகாப்பு-முதலீடு -security - இலகுவாக விளங்கி கொள்ள ஒரு வியாபாரத்தின் பங்குகள் - பாதுகாப்பு-முதலீடுகள். 2. நாணயம் - currency வழக்கின் பின்புலம் நிதி வர்த்தகம் பொதுவாக மூவகைப்படும். 1. பாதுகாப்பு முதலீடுகள் shares, security tradings - உதாரணம் ஒரு நிறுவனத்தின் பங்குகள். 2. நாணய வர்த்தகம் currency trading - உதாரணம் டாலர் வர்த்தகம், பிட்காயின் வர்த்தகம். 3. நுகர்பொருள் வர்த்தகம் - commodity trading - உதாரணம் - பெற்றோல், கோதுமை. கடைசி இரண்டையும் விட பாதுகாப்பு-முதலீடு வர்த்தகம், பங்கு விற்பனை என்பன அதிகம் அரசால் கண்காணிக்கப்படுவன. அதற்கு பல விதிமுறைகள் உண்டு. இதை கண்காணிக்கும் அமெரிக்க அரச நிறுவனம் Securities & Exchanges Commission. சுருக்கமாக SEC. என்ன வழக்கு? XRP என்பது ஒரு கிரிப்டோ சொத்து crypto asset. Ripple என்பது ஒரு நிறுவனம். இதன் உலகளாவிய, மிக விரைவான நாணய பரிவர்த்தன வலையமைப்பு - Ripple net. இந்த பரிவர்தனையில் பயன்படுத்த ரிப்பிள் உருவாக்கிய கிரிப்டோ குற்றி (crypto coin) தான் XRP. XRP யை ரிப்பிள் விற்பனை செய்தது ஒரு வகை - பங்கு/பாதுகாப்பு/security வர்தகம் என்று கூறி SEC ரிப்பிள் நிறுவனம், அதன் நிர்வாகிகள் இருவர் மீது வழக்கு போட்டது. XRP வழக்கில் XRP யின் விற்பனை ஒரு பங்கு விற்பனையா? இல்லையா என்பதையே நியூயார்க் சேர்கிட் நீதிபதி டொரேஸ் முடிவு செய்ய வேண்டி இருந்தது வழக்கின் முகாந்திரம் என்ன? SEC பின் வரும் முகாந்திரங்களில் வழக்கு தொடர்ந்தது 1. XRP காயினை, institutional investors எனப்படும் பெரிய நிதி நிறுவனங்களுக்கு ரிப்பிள் 785 மில்லியன் அளவில் விற்பனை செய்தத்து- இது ஒரு பங்கு வர்த்தகம். 2. XRP யை programic sales எனப்படும், தானியங்கி முறையில் ரிப்பிள் விற்றது. இதுவும் ஒரு பங்கு வர்த்தகம். 3. XRP ஐ - ரிப்பிள் ஊழியர்கள் வாங்கி விற்றனர். இதுவும் ஒரு பங்கு வர்த்தகம். 4. XRP ஐ, கிரிப்டோ எக்ஸ்சேஞ்சில், சில்லறை வர்தகர்கள் வாங்கி விற்றனர். இதுவும் ஒரு பங்கு வர்த்தகம் (secondary sales). தீர்ப்பு என்ன? மேலே குறிப்பிட்ட 4 முகாந்திரங்களில் கடைசி 3 இல் XRP ஒரு பங்கு/பாதுகாப்பு இல்லை என தீர்ப்பு வந்துள்ளது. முதலாவது முகாந்திரமான ரிப்பிள், நிறுவனமயபட்ட முதலீட்டாளருக்கு விற்ற 785 மில்லியன் பெறுமதியான XRP பரிவர்த்தனை மட்டுமே பங்கு வர்த்தகம் என நீதிபதி கூறியுள்ளார். தீர்ப்பின் அடிப்படை என்ன? Howey என்ற ஒரு வழக்கே, எது பங்கு வர்த்தகம், எது பங்கு வர்தகம் இல்லை, என்ற வரையறையை தருகிறது. அதிகம் சட்ட நுணுக்கத்துள் போகாமல் சொல்லுவதாயின் - ஒரு விடயம் பங்கு வியாபாரமாக கருதப்பட - அதை வாங்குபவர், அதை விற்பவர் அல்லது அவரின் முகவர் இந்த பொருளை லாபமீட்ட வைக்க உழைப்பார் என்ற உறுதி மொழி அடிப்படையில் அந்த பொருளை வாங்கி இருக்க வேண்டும். அதாவது நான் இன்று ஒரு XRP ஐ. 1 பவுனுக்கு வாக்கினால், ரிப்பிளின் முயற்சியால் நாளை அது 10 பவுனாகும் என நம்பி நான் வாங்கினால், எனக்கும் ரிப்பிளிக்கும் இடையில் ஒரு முதலீட்டு ஒப்பந்தம் உருவாகி விடும் (investment contract). அது பங்கு வர்த்தகம் ஆகும். XRP வழக்கில் ஒரே ஒரு விடயத்தை தவிர மிகுதி 3 விடயங்களில் ripple நிறுவனம், அதன் இரு நிர்வாகிகள் சார்பாகவே தீர்பு வந்துள்ளது. அந்த ஒரு விடயம் யாதெனில்: ரிப்பில், நிறுவனமயப்பட்ட பெரு நிதி நிறுவனங்களுக்கு XRP விற்ற போது அவர்கள் ரிப்பிளின் முயற்சியை நம்பியே அதை வாங்கினர். ஆகவே இது மட்டுமே - பங்கு வர்த்தகம். இதில் ஈடுபட்டமைக்காக, ரிப்பிள் அபராதம் கட்ட வேண்டி வரும். இரு நிர்வாகிகள் தமது பங்கு பற்றி ஜுரிகள் முன் சிவில் வழக்கை அடுத்த வருடம் சந்திப்பர்கள். ஆனால்…. மிக தெளிவாக அதன் தனிபட்ட நிலையில் XRP ஒரு பங்கு அல்ல என நீதிபதி கூறியுள்ளார். அதேபோல் விற்பது ரிப்பில்தான் என தெரியாமல் வாங்கும் வர்தகங்களான, ஊழியர்களிடையான XRP வர்த்தகம், தானியங்கி வர்த்தகம் programic sales, சில்லறை வர்த்தகம் என்பன பங்கு வர்த்தகம் இல்லை எனவும் கூறியுள்ளது. ஆகவே, XRP ஒரு பங்கு இல்லை (ரிப்பிள் தானான தேடி போய் விற்ற (promote) XRP மட்டுமே பங்கு என கூறியதன் மூலம் வழக்கின் அடிப்படை புள்ளியில் SEC இற்கு எதிராகவே இந்த தீர்ப்பு வந்துள்ளது. ஆகவே SEC இற்கு தோல்வி. ரிப்பிள், சில்லரையாக XRP வைத்திருப்போருக்கு பெரிய, கொண்டாடவேண்டிய வெற்றிதான். XRP/டாலர் விலை 0.47 இல் இருந்து 0.80 க்குமேல் போய் இப்போ 0.72 இல் நிற்பதே இதற்கான சாட்சி எனலாம். (அடுத்த பதிவில் இனி என்ன நடக்கும் என்பதை கொஞ்சம் ஜோசியம் போல ஆராய்ந்து பார்க்கலாம்).
  4. நிச்சயமாக. மேற்கு காசு வாங்கி கொண்டு ( கடனாக கொடுத்து) இலவசமாக பரீட்சித்துப்பார்கிறது. இரஸ்யா காசு கொடுத்து வாங்கி (ஈரான்), உற்பத்தி செய்து பாவிக்கிறது கூடவே பரீட்சித்தும்.
  5. உக்ரேனின் அண்மைய முறியடிப்புத்தாக்குதல் (counter offensive) பலத்த எதிர்ப்பை சந்தித்ததாயும்.அதனால் 20% வரையான டாங்கிகளை உக்ரேன் இழந்ததாயும். இதன் பின் தாக்குதலை தாமதித்து/இடைநிறுத்தி - தன் தந்திரோபாயங்களை உக்ரேன் மீளாய்வு செய்ததாயும் நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. https://www.nytimes.com/2023/07/15/us/politics/ukraine-leopards-bradleys-counteroffensive.html?action=click&module=Well&pgtype=Homepage&section=US News முன்னைய உக்ரேனிய/சோவியத் தாங்கிகளை போல அல்லாது மேற்கின் தாங்கிகள் தாக்குதலுக்கு உள்ளாகினாலும் உயிர் சேதத்தை குறைத்ததாய் இந்த செய்தி கூறுகிறது. ரஸ்யா அமைந்துள்ள அரணை தகர்க்க உக்ரேனிய படை கடும் பிரயத்தனம் எடுக்க வேண்டி உள்ளதாயும், முதல் 15 கிமி முன்னேற்றம் மிக கடுமையாக இருக்கும் என ஆய்வாளர்கள் கருதுவதாயும் கூறப்பட்டுள்ளது.
  6. வாக்னரின் பெலரூஸ் நகர்வு பற்றி ரஸ்ய அரச ஊடகங்கள் சொல்வதென்ன? https://twitter.com/TheKremlinYap/status/1680198869806620673/mediaViewer?currentTweet=1680198869806620673&currentTweetUser=TheKremlinYap (மாற்று கருத்து என்ன என்பதை அறிய). டிஸ்கி இது உண்மையாக இருந்தால் போலந்தின் சுவால்கி கொரிடோரை கைப்பற்றும் நோக்கில் வாக்னர் படை நகர்ந்தால் - பெலரூஸும், வாக்னரும் நேட்டோவால் வெளுக்கப்படும் என்பதே உண்மை. அத்துடன் இப்படி ஒரு திட்டம் இருந்தால் அதை டிவியில் சொல்லவும் மாட்டார்கள். எதை சொல்லியாவது - புட்டின் ஒரு கெட்டிக்காரன் என நிறுவும் முயற்சியாகவே படுகிறது. பிரித்தானியாவில் பிரபலமான டிவி காமெடி ஒன்றில், ஒரு முட்டாள் - குழறுபடிகளை செய்யும் போது I have a cunning plan என சொல்லுவார். அதுதான் நினைவுக்கு வருகிறது.
  7. எதிர்வரும் இலையுதிர்கால அமைச்சரவை மறு அமைப்பில், பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் பென் வலஸ் பதவி விலகலாம் என ஸ்கை நியூஸ் கூறுகிறது. வலஸ் - நேட்டோ தலைவர் பதவிக்கு முயற்சிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் பைடன் அதிக ஆர்வம் காட்டவில்லையாம். அதே போல் மேலே எழுதிய, செலன்ஸ்கியுடனான இராஜதந்திர முட்டலும் இந்த வாய்ப்பை குறைத்தததாக சொல்லப்படுகிறது. வலஸ் அரசியலில் இருந்து ஓய்வா? அல்லது சுனாக் தேர்தலில் தோற்ற பின் கட்சி தலைமையை கைப்பற்றும் எண்ணமா? தெரியவில்லை.
  8. டிஸ்கி ரஸ்யாவில் இயங்கும் ஒரு குழு, புட்டின் சொல்லியும் கேட்காமல் சுயாதீனமாக முடிவு எடுக்கிறது, அதை புட்டின் பொதுவெளியில் சொல்லுகிறார் என்பது சில மாதங்கள் முன் கூட கற்பனை செய்தும் பார்கவியலாத விடயம். இதே பேட்டியில் ரஸ்யாவில் தனியார் இராணுவம் இருப்பது சட்டவிரோதம் என்ற சட்டத்தை சுட்டிகாட்டி - வாக்னர் குழுவின் இருப்பு என்பதே இல்லை எனவும் (does not exist) என்றும் கூறியுள்ளார். இல்லாத ஒரு அமைப்பையா இரு கிழமைக்கு முன் ரஸ்யாவை பாதுகாத்த வீரர்கள் என நாட்டு மக்களுக்கான உரையில் புகழ்ந்தார்? இத்தனை காலமும் அது தனியார் படை என ஒறுப்பு துறந்து விட்டு, அண்மையில் அரசு கூலி கொடுக்கிறது என ஓப்பு கொண்டார். வாக்னர்பி/ரிகோசன் விடயத்தில் புட்டின் ரொம்பவே குழம்பியுள்ளார். அதிகாரமும், strongman விம்பமும் கையை விட்டு, பகிரங்கமாகவே நழுவத்தொடங்கி விட்டதோ? https://amp.theguardian.com/world/2023/jul/14/putin-says-he-tried-but-failed-to-oust-prigozhin-after-wagner-mutiny-figters-ukarine-war
  9. ரஸ்ய ஊடகமான Kommersantற்கு புட்டின் ஒரு பேட்டி வழங்கியுள்ளார். இதில் கலகத்தின் பின் பிரிகோசினையும், 35 வாக்னர் தளபதிகளையும்தான் கிரெம்ளினில் சந்தித்தை ஒத்து கொண்ட புட்டின், தான் வாக்னர் தலைமையை மட்டும் மாற்றி விட்டு, தற்போது அவர்களை வழிநடத்தும் போர்கள தளபதியின் கீழேயே, கலகத்துக்கு முந்திய நிலையில் தொடரலாம் என ஒரு தெரிவை அவர்களுக்கு கொடுத்ததாக கூறியுள்ளார். இந்த தெரிவை பலவக்னர் தளபதிகள் (தலையாட்டி) ஏற்பது போல் சைகை செய்தாலும், பிரிகோசின் இதை ஏற்க மறுத்துவிட்டார் என புட்டின் கூறியுள்ளார்.
  10. இந்த திரியில் நானும், @Kadancha @vasee @Elugnajiru இன்னும் பலர் பலவாறு சிலாகித்த, XRP வழக்கில் முடிவு வந்து விட்டது. கிட்டதட்ட 80% XRP/Ripple க்கு வெற்றி. ஒரே மூச்சில் 0.47$ இல் இருந்து 0.79$ ஆகி விட்டது. இன்னும் நிறைய ஏறும் என எதிர்பார்க்கிறார்கள் (நிதி ஆலோசனை அல்ல).
  11. ———— பிரிகோசின் ஒருநாள் புரட்சி நேரம் அது சம்பந்தமாயும், அதற்கும் தமக்கும் சம்பந்தம் இல்லை என்ற வகையிலும், உக்ரேன் பற்றியும் தானும் சி ஐ ஏ தலைவரும் கலந்துரையாடியதாக ரஸ்ய புலனாய்வமைப்பின் தலைவர் Sergei Naryshkin தெரிவித்துள்ளார் . -கார்டியன்- இது ஒரு 24 மணி நேரம் முன்பே டிவிட்டரில் செய்தியாக உடைந்து விட்டது. ஆனால் உ.ப.ப.செ என போடும் அளவில் அரை நம்பகமான கணக்குகள் எதுவும் இதை உறுதிபடுத்தாமையால் இங்கே பதியவில்லை.
  12. ——- அண்மைய சுற்று பயணங்களில், நேற்று டிவிட்டரில், நேட்டோவில் உக்ரேனை சேர்க்க ஆகும் தாமதம், ஆயுத உதவி பற்றி செலன்ஸ்கி கடும் தொனியில் பேசி இருந்தார். இன்று பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் பென் வலஸ் - உக்ரேன் கொஞ்சம் நன்றியுணர்வு காட்ட வேண்டும் எனவும், முன்னரேதான் பிரிதானியா ஆயுத சப்ளை அமேசன் நிறுவனம் அல்ல என உக்ரேன் அதிகாரிகளுக்கு சொல்லி உள்ளதாயும் கூறினார். பதிலுக்கு செலன்ஸ்கி, நாம் மிகுந்த நன்றியாகவே இருக்கிறோம். இதை விட எப்படி நன்றியை காட்ட முடியும்? ஒவ்வொரு நாளும் காலையில் நன்றியை பறைசாற்றியா? என்ற தொனியில் பதில் கூறியுள்ளார். ஆனால் அதே மேடையில் சுனாக் - உக்ரேன் நன்றியுடந்தான் உள்ளது என கூறியுள்ளார். செலன்ஸ்கி-வலஸ் இடையான முறுகல் ஒரு இராஜதந்திர முட்டல் diplomatic spat என்பதாக நோக்கப்படுகிறது. பென் வலஸ் அடுத்த நேட்டோ தலைமை பதவிக்கு போட்டியிட கூடுமாம். இப்படி சேம் சைட் கோல் அடிப்பது - பதவி தட்டிப்போக வழிசமைக்கக்கூடும். மன்னிக்கவும், இப்போ உ.ப.ப. செய்தி என தலையங்கம் போட்டுள்ளேன். ஆதாரம் இல்லாத செய்திகளை - இணைக்கப்போகிறேன் என சொல்லித்தான் இணைத்து வருகிறேன். ஆனாலும் நான் இணைக்கும் செய்திகள் அடுத்த 24/48 மணியில் ஆதாரபூர்வ இணையங்களில் இருந்து இணைக்கப்படுகிறது என்பது திரியை அவதானிப்பின் - கண்கூடு. நிர்வாகம் வேண்டாம் என்றால் நிப்பாட்டி விடுவேன். பிரச்சனை இல்லை.
  13. உ.ப.ப.செய்தி இன்று வழமைக்கு மாறாக உக்ரேனில், கியவ்வில் குண்டு மழையாம். ஒரு தொகை டிரோன்கள் தாக்கினவாம்.
  14. போரில் பிரான்சின் இந்த முடிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஆனால் இதனால் கியவ் ஆட்சியாளர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகி உள்ளது. -பெஸ்கொ-
  15. உக்ரேனுக்கு நெடுந்தூர ஏவுகணகளை வழங்க பிரான்ஸ் முடிவு ! மக்ரோன் அறிவிப்பு உ.ப.ப. செய்தி Oleg Tsokov எனப்படும் ரஸ்ய லெப்டினன்ட் ஜெனெரல் உக்ரேனில் பலியாம். இவர் மேற்கின் தடை பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டவர் ஆவார். சுவீடன் அடிச்ச மணி ஆண்டவனுக்கு கேட்டுதோ இல்லையோ…அங்காராவுக்கு கேட்டிருக்கு🤣
  16. பிந்திய செய்தி சுவீடனை நேட்டோவில் சேர்க்கும் தீர்மானத்தை ஆதரித்து தமது பாராளுமன்றத்துக்கு அனுப்ப, துருக்கி அதிபர் முடிவு.
  17. இங்கே வடை தன்னை சுடுவதற்கு தானே ஸ்கெட்ச் போட்டு கொடுத்துள்ளது என்கிறனர். சுட்டு கொல்லப்பட்டவர் - தான் காலையில் ஓடும் ரூட்டை ஒரு அப்பில் தினமும் வெளியிடுவாராம். சில நாட்களுக்கு முன் இப்படி வெளியிட்ட ரூட்டை - உக்ரேனிய புலனாய்வு அமைப்பின் தலைவர் புடுனொவ் லைக் பண்ணினாராம். உ.ப.ப செய்திதான்.
  18. உக்ரேனியர் மீது கலிபர் ஏவுகணைகளை ஏவிய நீர்மூழ்கியின் அப்போதைய தளபதியும், இப்போ ஆட்சேர்ப்பு பிரிவில் பிரதி தகைவராகவும் இருந்த Stanislav Rzhitsky, என்ற ரஸ்ய தளபதி காலை ஓட்ட பயிற்சியில் இனம் தெரியாத நபரால் சுட்டுக்கொலை.
  19. ஜூன் 29ம் திகதி, பிரிகோசனையும் ஏனைய வாக்னர் கூலிப்படை தளபதிகளையும் புட்டின் மூன்றரை மணி நேரம் சந்தித்து பேசினார் என கிரெம்ளின் பேச்சாளர் பெஸ்கோ கூறியுள்ளார்.
  20. துருக்கி மத்யஸ்தத்தில் உருவான உக்ரேன்-ரஸ்யா தானிய ஏற்றுமதி ஒப்பந்தம் ஜூலை 17 இல் முடிவுக்கு வருகிறது. ரஸ்யா விலகி கொண்டாலும் துருக்கிய கடற்படை பாதுகாப்போடு உக்ரேனில் இருந்து தானிய ஏற்றுமதி கருங்கடலினூடு தொடரும் என எர்டோகன் அறிவித்துள்ளாராம். 1. அசோவ் தளபதிகளை ரஸ்யாவை கேட்காமல் உக்ரேனிடம் கொடுத்தது 2. உக்ரேனை நேட்டோ சீக்கிரமாக சேர்க்க வேண்டும் என நேற்று வலியுறுத்தியது 3. இன்று இது நேட்டோவில் ஓரளவு ரஸ்ய நல்லுறவு நாடு என்ற நிலையில் இருந்து, மிக விரைவாக உக்ரேனின் அதி ஆதரவு நாடுகளில் ஒன்று என்ற நிலைக்கு துருக்கி வந்துள்ளது. ஏன் இந்த திடீர் மாற்றம்? இத்தனைக்கும் அண்மையில் நடந்த தேர்தலில் எனைய இருவரும் எர்டோகனை விட ரஸ்ய எதிர்ப்பாளர் என்பதால் - எர்டகோன் வெற்றிக்கு ரஸ்யா மறைமுகமாக உழைத்தது என்று எதிரணி வேட்பாளர் பொது வெளியில் குற்றம் சாட்டி உள்ளார். திடீரென எர்டோகன் நிலை மாறியதன் மர்மம்தான் என்ன?
  21. பைடன்: உக்ரேன் இன்னும் நேட்டோ உறுப்புரிமைக்கு தயார் நிலைக்கு வரவில்லை. ரஸ்யாவோடு உக்ரேன் போரிடும் நிலையில் அதை நேட்டோவில் சேர்ப்பது, ரஸ்யா மீது நேட்ட்டோ போர் தொடுப்பதற்குச் சமன். எனவே ரஸ்ய-உக்ரேன் யுத்தம் முடியும் வரை உக்ரேன் நேட்டோவில் இணைவது சாத்தியமில்லை.
  22. உக்ரேனில் உள்ள ரஸ்ய இராணுவத்தின் பிரதானி கேரிஸ்மோவ் அகற்றப்பட்டு அவர் இடத்துக்கு Teplinskiy நியமிக்கப்பட்டுள்ளாராம் என்கிறது டெய்லி மெயில். கேரிஸ்மோவ் அகற்றம், பிரிகோசனின் கோரிக்கையில் ஒன்று என்பது கவனிக்கத்தக்கது. உ.ப.ப.செ இன்று மதியம் கிரைமியாவை, ரஸ்யாவோடு இணைக்கும் கேர்ச் பாலம் நோக்கி உக்ரேன் ஏவிய உள்ளூர் தயாரிப்பு ஏவுகணைகளை தாம் சுட்டு வீழ்த்தியதாக ரஸ்ய கணக்குகள் கோருகிறன. முன்னதாக இந்த பாலத்தில் போக்குவரத்தை ரஸ்யா தற்காலிகமாக இடை நிறுத்தியதாக உக்ரேன் கணக்குகள் கூறின.
  23. அண்ணை ஆங்கிலத்தில் இது பற்றி செய்தி எழுதப்பட்டுகொண்டுதான் இருக்கிறது. https://www.tamilguardian.com/content/human-remains-found-mullaitivu https://www.tamilguardian.com/content/13-bodies-uncovered-mullaitivu-mass-grave இதை உறவுகள், அவரவர் நாடுகளில் உள்ள அமைப்புகள், அரசியல்வாதிகளுக்கு அந்தந்த மொழிகளில் அனுப்பி கவனத்தில் எடுக்குமாறு கோரலாம். ஆங்கிலம் பேசும் நாட்டில் வசிப்பவர்கள், அல்லது அவர்களின் பிள்ளைகளை கேட்டால் 5 நிமிடத்தில் ஒரு covering letter அடித்து தருவார்கள். இல்லை என்றால் இங்கே சொன்னால் - ஒரு template letter அடித்துத்துதரலாம். பிரச்சனை இல்லை. ஆனால் முன்னர் நெடுக்ஸ் இன்னொரு முயற்சியில் சொன்னது போல, எல்லாரும் ஒரே மாரி அடித்து அனுப்பினால் அது ஒருங்கிணைக்கப்பட்ட பிரச்சாரம் போல தெரியும். ஆகவே அவரவர் பாணியில் எழுதினால் நல்லது. பிகு யாழில் வந்து விட்டது என்றால் அது இந்தியன் உளவு அமைப்புக்கு கார் கதவு திறக்கும் ஆட்கள் பார்வையிலும் பட்டிருக்கும். ஆகவே இந்திய அதிகாரிகளுக்கு யாரும் கடிதம் அனுப்பி மினகெடவேண்டாம்🤣.
  24. https://twitter.com/ivan_8848/status/1677798756228505602?s=20 உக்ரேன் நேட்டோவில் சேர்க்கப்பட வேண்டும். - துருக்கி அதிபர் எர்டோகன்-
  25. ரஸ்யா ஏலவே உக்ரேனில் கொத்து குண்டுகளை பாவித்தே வருகிறது. இனி சில வேளை லிவிவ் போல மேற்கு உக்ரேன் நகரங்கள் மீதும் பாவிக்க கூடும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.