Everything posted by goshan_che
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
தகவலுக்கு நன்றி.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
Expanding foam போல ஒரு புதிய ஆயுதத்தை இஸ்ரேல் பாவிக்கிறதாம். சுரங்க ஓட்டைகளை கண்டு பிடித்து முதலில் உள்ளே ஒட்சிசனை உறிஞ்சும் குண்டுகள் ஏவப்படுமாம். பின்னர் இந்த புதிய ஆயுதத்தை ஏவினால் அது விரிந்து கொண்டே போய் கிட்டதட்ட ஒரு கிமி நீள சுரங்கத்தை அப்படியே கல்லுப்போல இறுக்கி விடுமாம். ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. எழுதியவரின் கற்பனையோம் தெரியாது 🤣.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அண்மையில் எகிப்தின் பிரதமர் கூறி இருந்தார் - மில்லியன் கணக்கில் மக்கள் இழப்பு ஏற்பட்டாலும் காஸா அகதிகள் எமது எல்லையை கடப்பதை தடுப்போம் என. எல்லை தாண்டும் அகதிகள் பற்றி, டிரம்ப்போ, ஃபராஜோ, ஓபனோ கூட எடுக்காத கடும் போக்கு இது. இஸ்ரேலின் இனச் சுத்தீகரிப்பை ஊக்குவிக்க கூடாது என்பதை ஒரு காரானமாக கருதினாலும், அதை விட, தமது நாட்டில் 2 மில்லியன் பலஸ்தீனர்கள் வந்தால் ஏற்படும் அரசியல் குழப்பமே அவர்களுக்கு முக்கியமாக தெரிகிறது. அதே போலவே இப்போ ஹிஸ்புல்லாவும், ஈரானும் கூட. நேரடியாகவே நசருல்லா இஸ்ரேலை ஒரே அடியில் (நாக் அவுட்) பண்ணும் இயலுமை தம்மிடம் இல்லை என சொல்லி களத்தில் இறங்குவதில் இருந்து தவிர்ந்து கொண்டுள்ளார். ஹமாசை பப்பாவில் ஏற்றி விட்டு - இப்போ எல்லாரும் விலகுவது போலவே படுகிறது. அடி பாவம் அப்பாவி பலஸ்தீனருக்கே. இனியாவது இந்த “இஸ்ரேலை வழித்தொழிப்போம்” பேர்வழிகளை நம்பாமல் இரு நாடு முடிவுக்கு பலஸ்தீன மக்கள் ஃபட்டா மூலம் செல்ல வேண்டும். ———— நசருல்லாவுக்கு ஒரு ஹமாஸ் ஆதரவாளரின் எதிர்வினையாம் (தரவு/ஆதாரம் என்பதாக இல்லை just anecdotal). #சப்பல் ஷாட் #ஜார்ஜ் புஷ் 🤣
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
@Justin நசருல்லா பில்டப் கொடுத்து விட்டு - 8ம் திகதி முதல் செய்ததைதான் இனியும் செய்வோம் எண்டு சொல்லி விட்டு கிளம்பி விட்டார்? ஹாமாசை ஹிஸ்புல்லா ஈரானும் கை கழுவி விட்டனவா? ஹூத்திகள், ஈராக்கிய ஜிகாதிகள், ஹிஸ்புல்லா எல்லாரும் அவரவர் நாட்டில் இருந்த படி மட்டுபட்ட தாக்குதலை செய்ய மட்டுமே தயார், களத்தில் இறங்க தயாரில்லை போல கிடக்கு? உங்கள் கருத்து என்ன?
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
eBay யில் ஓடர் பண்ணிக்கலாம்🤣 https://www.ebay.co.uk/itm/125518778599
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
16. இஸ்ரேலின் கவனத்தை நாம் வடக்கு எல்லையில் இழுத்து வைத்திருப்பது, அதன் கைகளை காஸாவில் கட்டிப்போட்டுள்ளது. தனியே அரசியல் எதிர்ப்பை மட்டும் நாம் வெளியிட்டு இருப்பின். இஸ்ரேல் காஸாவை முழு மூச்சாக தாக்கி இருக்கும். 17. நாம் knock out வெற்றியை அல்லாமல், points அடிப்படையில் வெல்கிறோம் (பாக்ஸிங் ரசிகர் போல). டிஸ்கி நசருல்லா : நீ ஒழுங்கான ரவுடி எண்டா என் ஏரியாவுக்கு வந்து என்னை அடிடா பாப்பம்🤣. (எல்லையில் சொறிவதை தவிர வேறு எதையும் செய்வோம் என சொல்லவில்லை).
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
12. அமரிக்காவும், இஸ்ரேலும் விரிவான பிராந்திய யுத்தம் பற்றி கவலை கொள்ளவேண்டும். இது நடக்க கூடியதுதான். 13. இஸ்ரேல் லெபனான் எல்லையில் எல்லா தெரிவுகளையும் நாம் பரிசீலிப்போம். 14. நாம் அமரிக்க கப்பல்களை எதிர்கொள்ள தயாராய் உள்ளோம். அமெரிக்கா ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, லெபனானில் தனது தோல்வியை நினைவில் கொள்ள வேண்டும். 14. அக்8 இல் இருந்து நாம் இந்த யுத்தத்தில் ஒரு அங்கமாகி விட்டோம். 15. பிராந்தியத்தில் உள்ள எதிர்பியங்கள் மீது ஈரானுக்கு ஒரு கட்டுப்பாடும் இல்லை(அப்பனும் குதிருக்குள் இல்லை🤣).
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
10. அடுத்து ரவுண்டு கட்டப்படுவோர் -அரபு நாடுகள். அரபு நாடுகள் காஸாவில் நடப்பதை தடுக்க முடியாத அளவுக்கு ஆண்மையின்மையின் உச்சத்தில் உள்ளனவா? கேள்வி. (அட ஜவ்வு மாரி இழுக்காம கேமா, கேம் இல்லையா எண்டு சொல்லுங்க நசரல்லா பாய்🤣). 11. காஸாவில் நடப்பது ஏனைய (அரபு-இஸ்ரேலிய) யுத்தங்கள் போல அல்ல. இது ஒரு தீர்க்கமான முடிவை தரும் யுத்தம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
1. நசரல்லா இஸ்ரேலை விட அமேரிக்காவைத்தான் உரையில் ரவுண்டு கட்டி அடிக்கிறார். 2. அக் 7 தாக்குதல் தமக்கும் ஈரானுக்கும் கூட அதிர்ச்சியாம் (🤣) 3. அக் 7 இல் நடந்தது நியாயமான எதிர் நடவடடிக்கைதானாம். 4. இஸ்ரேல் மிக வலுவிழந்து உள்ளதாம் 5. அமெரிக்காவின் வழி நடத்தலில்தான் யுத்தம் நடக்கிறதாம் 6. அமெரிக்கா, இஸ்ரேல், பிரிட்டனின் மிலேச்சத்தனத்துக்கு எதிரான நீதி சார் நடவைக்கைதான் அக் 7 ஆம். 7. ஈராக், சிரியாவில் அமரிக்க தளங்களை தாக்குவதை வரவேற்கிறாராம் 8. உலகம் தம்மோடுதானாம். 9. ஹமாசின் ஆக் 7 நடவடிக்கையை ஆதரிக்க வேண்டியது மனிதாபிமானம் (🤣) உள்ள ஒவ்வொரு உலக மாந்தரினதும் கடமையாம். உரை தொடர்கிறது….. டிஸ்கி யாழ்கள புட்டின் பிரிகேட்டுக்கு இன்னொரு நாயகன் உருவாகியுள்ளார்
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நசரல்லா உரை நேரலை
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
1. அக் 7 இல் இஸ்ரேலில் பல விடயங்கள், வேலை நிமித்தம் வந்து, கைதாகி இருந்த ஆயிரக்கணக்கானோரை இஸ்ரேல் விடுவிக்கிறதாம். 2. பிளிங்கின் இஸ்ரேல் சென்றடைந்தார் 3. ஹிஸ்புலா இறங்குவதை தடுக்க இஸ்ரேல் தற்காலிக போர் ஓய்வை அறிவிக்க கூடும் என்கிறார்கள்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அருமை.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
மிகபெரும் கிரிப்டோ மோசடியில் ஈடுபட்ட SBF எனப்படும் நபர் அவர் மீதான 7 குற்றச்சாட்டிலும் குற்றவாளி என தீர்ப்பு!
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேலுடன் ஹிஸ்புலா போருக்கு போவது லெபானானிய மக்களுக்கு எதிரான குற்றம் எனவும், தெற்கு லெபனானில் இருந்து ஹிஸ்புலா பின்வாங்க வேண்டும் எனவும் லெபனானின் கிறிஸ்தவ சமூகத்கின் முக்கிய அரசியல்வாதி ஒருவர் தெரிவிப்பு. மீளவும் லெபனானில் முஸ்லிம் எதிர் கிறிஸ்தவ முறுகல்?
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
பைடனின் கோரிக்கைக்கு இணங்க, தற்காலிக போர் ஓய்வுக்கு தயார் என இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாகு தெரிவிப்பாம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ரஸ்யாவின் வாக்னர் குழு, ஹிஸ்புலாவுக்கு ரஸ்யாவின் அதி நவீன ஏவுகணை, விமான எதிர்ப்பு பீரங்கியை வழங்க இருப்பதாக வால் ஸ்டிரீட் ஜேனல் கூறுகிறது (இவர்களின் சில செய்திகள் முன்னர் தவறாகியுள்ளன). https://www.wsj.com/world/russias-wagner-group-may-provide-air-defense-weapon-to-hezbollah-u-s-intel-says-37dc8f45 ———— 1990 இற்கு பின் முதல்தடவையாக ஈராக்கில் இருந்து இஸ்ரேல் நோக்கி ஈராக்கின் இஸ்லாமிய எதிர்ப்பு குழு (ஈரான் ஆதரவு) தாக்குதல் நடத்தியதாம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
———- இஸ்ரேலிய தாங்கிகள் மீது ஹமாசின் தாக்குதலாம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
——- இஸ்ரேலின் காசா இரு-துண்டறுப்பு நடவடிக்கை நிறைவுற்றுள்ளதாம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
சிரியாவில் தங்கி இருந்த ஈரானின் இமாம் ஹொசேய்ன் ஆயுதகுழு லெபனான் வந்து ஹிஸ்புலாவுடன் சேர்ந்துள்ளதாம். ——— இதே தகவலை சொல்லும் இன்னொரு கணக்கு.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நாளை ஹிஸ்புல்லா தலைவர் பேச உள்ள கூட்டத்தின் ஏற்பாடுகள் இவையாம். அநேகமாக யுத்ததில் ஹிஸ்புலா இறங்கும் அறிவிப்பாய் இருக்கலாமாம். டிஸ்கி பேசி கொண்டிருக்கும் போதே இஸ்ரேல் நசரல்லாவை தூக்கினால் எப்படி இருக்கும்? ——— ஹிஸ்புலா எறிகணை வீச்சுக்குள்ளான வட இஸ்ரேலிய நகரம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேல் மீது வெளித்தரப்புகள் (யேமன் ஹூத்தி கிளர்சியாளர்) ஏவுகணை வீசுவதை தடுக்க, சவுதி அரேபியாவில் மேலதிக அமேரிக்க ஏவுகணைகளை நிறுத்த சவுதி இணக்கம். யேமனில் இருந்து ஹூத்தி கிளர்சியாளர்கள் ஏவும் ஏவுகணைகள், சவுதியை தாண்டியே இஸ்ரேலை அடைய முடியும்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஏன் என்றால் நீங்கள் இந்த ரெண்டு பக்கமும் ஜடாமுடி தொங்கவிட்ட யூத பழமைவாதிகள் ஏன் இப்படி எதிர்கிறார்கள் என்ற அடிப்படையை விளங்கி கொள்ளாமல் அல்லது விளங்கியும் மறைத்து எழுதுகிறீர்கள். இவர்கள் இப்படி எதிர்ப்பதன் அடிப்படைகாரணம் - இவர்கள் நம்பிக்கை படி (டோரா) ஆண்டவன் யூதருக்கு கொடுத்த சாபத்தினால் அவர்கள் நாடு அற்று அலைவார்கள். அப்படி அலையும் போது அவர்கள் வாழும் நாட்டுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பது அவர்கள் ஆண்டவனுக்கு கொடுத்த உறுதிமொழி. பின்னர் ஆண்டவனே இஸ்ரேலை உருவாக்கித்தருவார். இவர்கள் அது வரை பொறுக்கிறார்கள். தாம் வாழும் நாடு என கருதும் பலஸ்தீனுக்கு விசுவாசம் காட்டுகிறார்கள். இவர்களை பொறுத்தவரை யூதர் கூடி இஸ்ரேலை உருவாக்கியமை யூத மத நிந்தனை. இப்போ புரிகிறதா என் ஒப்பீடு ?
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில், இலங்கை ஆமிக்கு ஆதரவாக “சமாதான பிராசாரம்” செய்பவர்களை, இது சிங்களவர் நாடு, நாம் சோழ வதேறிகள் அடங்கித்தான் வாழவேண்டும் அதுதான் எமது உண்மை மார்க்கம் என ஒரு மொக்கு கூட்டம் கத்தி கொண்டு திரிந்தால், அவர்களை, அவர்கள் எப்படி கையாண்டிருப்பர்? அது பிழை என யாரும் எழுதினால் உங்கள் எதிர்வினை எப்படி இருக்கும். தக்காளி சோஸ் வடியுது, தொடைச்சிகோங்கோ🤣
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேலிய படைகளின் காஸாவை இரு கூறாக்கும் நடவடிக்கை கிட்டதட்ட முடிவை நெருங்கிவிட்டதாக தெரிகிறது.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஹமாசின் அக்7 நரவேட்டையின் தணிக்கையிடப்படாத வீடியோக்களை பார்வையிட்ட பின் இஸ்ரேலிய பாராளுமன்ற உறுப்பினர்களின் மனநிலையாம்.