Everything posted by goshan_che
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
வேலை வாய்புக்காக இஸ்ரேல் போன தாய்லாந்து நாட்டவரை இறை கோசங்களை எழுப்பியபடி தோட்டம் வெட்டும் கத்தியால் கழுத்தை வெட்ட முயன்ற ஹமாஸ் ஆயுததாரி. 18 தாய்லாந்தினர் கொல்லப்பட்டுள்ளனராம். இன்னும் 11 தாய்லாந்து நாட்டவர் பணயகைதிகளாய் உள்ளனராம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
***** 👆🏼 அண்மையில் வீசப்பட்ட ராக்கெட்டுகள் இங்கேதன் தயாரிக்கபட்டன என கூறி காஸா பல்கலைகழகத்தை தரைமட்டம் ஆக்கும் இஸ்ரேல்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
உண்மையில் இந்த வெள்ளை பொஸ்பரஸ் விடயத்தில் யாழ்கள கருத்தாளர் சிலரின் இரெட்டை வேடம் மெய்சிலிர்க்க வைக்கிறது. ஒரு சாதாரண கருத்துக்களத்தில் கூட காஸாவில் நடந்தால் ரத்தம் உக்ரேனுக்கு வந்தால் தக்காளி சோஸ் என இரெட்டை நாக்கால் எழுதும் ஆட்களுக்கு - உலக நாடுகள் இரெட்டை வேடம் போடுகிறன என எழுத எந்த அருகதையும் இல்லை.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
——————— வெள்ளை பொஸ்பரசை வீசும் இஸ்ரேலின் செயல் மனிதகுல விரோதமானது. ஆனால் இலங்கை வீசியதையே கண்டுக்காத நாடுகள் இஸ்ரேலை கண்டிக்கும் என்பது அப்பாவித்தனமா எதிர்பார்ப்பு. பிகு இதை சாட்டாக வைத்து ரஸ்யாவை வெள்ளை அடிக்க ஒரு சாரார் கிளம்பி உள்ளனர். உக்ரேனில் ரஸ்யாவும் வெள்ளை பொஸ்பரசை பாவித்தது. பாவிக்கிறது. இதை இங்கே நானும் ரஞ்சித்தும் முன்பே வீடியோ ஆதாரத்தோடு எழுதி உள்ளோம். அப்போ கள்ள மெளனம் சாதித்த யாழ்கள ஊறவுகள் இப்போ எகிறி குதிக்கிறார்கள். வல்லரசுகள் மட்டும் அல்ல, சாதாரண யாழ்கள உறவுகள் கூட மனித உரிமை கோசத்தை தமக்கு ஏற்ற தருணத்துக்கேற்பவே பாவிக்கிறார்கள். காஸாவில் மட்டும் அல்ல உக்ரேனிலும் சாவது மனிதர்கள்தான். இந்த நூற்றாண்டின் மிக குரூரமான நகைச்சுவை இந்த டுவீட்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
பிந்திய செய்தி Ashkelon எனும் காசாவுக்கு அண்மித்த இஸ்ரேலிய ஊரில் - ஊடுருவல் அச்சம் காரணமாக ஊர் வாசிகளை வீட்டில் உள்ள பாதுகாப்பு அறைகளில் பூட்டி கொள்ளுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளது. ரொக்கெட் தாக்குதலின் பின், கமாஸ் ஆயுததாரிகள் ஊடுருவியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
🤣 அவர் எழுதியதை வைத்து - நன்னி முள்ளிவாய்க்கால் வரை போய் மீண்டவர் என நினைக்கிறேன். அதற்கும் மேல் நேரடி அனுபவம் தேவை என்றால் - ஒரு மனித எறிகணையாக மாறினால்தான் முடியுமாய் இருக்கும். இந்த அனுபவமே சில இனத்தினர்/மதத்தினர் மீது அவர் கடும் சினம் கொள்ளவும் காரணமாய் அமைகிறது என நினைக்கிறேன் (அந்த கோபத்தின் நியாப்பாடுகள் வேறுவிடயம்). எனக்கும் போர் ஓய்வுக்கு முன்னான காலத்தில் (துரதிஸ்டவசமாக) போர் அனுபவம் போதியளவு உண்டு. உங்களை போல் மூன்றாம் தரப்பாக போரை அனுபவித்தோர் அல்ல நாம். நாமே எமது வீடுகளிலும், பள்ளிகளிலும் எமக்கான பதுங்கு குழிகளை கிண்டி வாழ்ந்தவர்கள். நாமே எமது உறவுகளை குண்டு வீச்சில் தொலைத்து விட்டு நின்றவர்கள். நாமே உணவு, மருந்து தடைகளை எதிர்கொண்டு வாழ்ந்தவர்கள். நாமே கொழும்பில் மிருகங்கள் போல் நடத்தப்பட்டவர்கள். நாமே கொழும்புக்கும் ஊருக்கு உயிரை கையில் பிடித்து கொண்டு பயணித்தவர்கள். நீங்கள் சொல்கிறீர்கள் எமக்கு யுத்த அனுபவம் இல்லை என்று🤣. நியாயத்தை கதைப்போம் + எப்போதும் தமிழன் - politics makes strange bedfellows என்பது சரியாகத்தான் இருக்கிறது.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஈரானின் அல் கெமய்னிக்கு நேரடியாக பதில் சொன்ன இஸ்ரேலின் உத்தியோக பூர்வ கணக்கு.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
முன்னர் இங்கே பிரஸ்தாபிக்கபட்ட ஜேர்மன் பெண், உயிருடன் அல்லது உயிருக்கு போராடும் நிலையில் ஹமாஸ் பிடியில் இருப்பதாக அவரின் தாயார் தெரிவிப்பு. (தலை கொத்தப்பட்டு, கால்கள் முறிக்கப்பட்டு குறை உயிரோடு இருக்கும் போதுதான் அவரை ஊர்வலமாக எடுத்து சென்றுள்ளார்கள் போல் தெரிகிறது). https://twitter.com/ShaykhSulaiman/status/1711833167944954161/mediaViewer?currentTweet=1711833167944954161¤tTweetUser=ShaykhSulaiman&mode=profile யுத்த சட்டங்களை நாம் மதியோம் என இஸ்ரேல் தளபதி கூறினாராம். https://x.com/TreasChest/status/1711818623952564668?s=20 சிரியா இஸ்ரேல் மீது மோட்டார்களை ஏவியதாக தெரிகிறது.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
பரவாயில்லை🙏
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேலிய வான் தாக்குதலில் இறந்த குழந்தை ஒன்று மீட்க்கப்படும் காட்சியாம். நீங்கள் ஹமாசுக்கு ஆதரவு எண்டு நான் எங்க சொன்னேன். யாழ்களம் பதிவுகளை auto merge பண்ணுவது கூட தெரியாமல் இருக்கிறீர்கள். உங்கள் அறியாமையில் என்னை கேள்வி வேறு கேட்கிறீகள். இரெண்டு பதிவுகளுக்கு இடையே ———— என ஒரு வேலி போட்டுள்ளேன் பாருங்கள். வேலிக்கு அந்த பக்கம் இருப்பது மட்டுமே உங்களுக்கான பதில்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
உங்களை விட அவர்கள் விட்ட பிழைகளை எல்லாம் அதற்குரிய திரிகளில் பலதடவை நான் இதே யாழ்களத்தில் கதைத்து விட்டேன். ஆனால் சம்பந்தமில்லாத திரிகளில் தமது தரப்பு வாதத்தை வலுவாக்க அவர்களை இழுத்து விமர்சிக்கும் போக்கை நான் எதிர்க்கிறேன். ————— ஹமாஸ் உயிருடன் எரித்த இஸ்ரேலிய குழந்தைகள் என்கிறார்கள்.👇
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அக்க 1985 இல் கப்டன் அன்பரசிக்கு கிரெனைட் கிளிப் எப்படி கழட்டுவது என்று பாடம் எடுத்து கொண்டிருந்தவா🤣. அவ எடுக்கும் புலிவாந்தியை வேதவாக்காக எடுக்கட்டாம். —————- காஸாவில் பணைய கைதிகளாக இருக்கும் அமெரிக்கரை விடுவிக்கும் நோக்கில் இஸ்ரேல் வந்து சேர்ந்த அமெரிக்க சிறப்பு படையணி.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
பின்லாந்துக்கும் லிதுவேனியாவுக்கும் இடையான எரிவாயு குழாயை ரஸ்ய கப்பல் ஒன்று உடைத்துள்ளதாம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
வடிவாக பார்த்துகொள்ளுங்கள் மக்களே - நான் இஸ்ரேலுக்கும், மேற்குக்கும் வெள்ளை அடித்த தருணம். 🤡 என நன்னி திண்ணையில் சொன்னது சரிதான்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நன்றி
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
மீண்டும் மீண்டும் இலங்கைக்கு வெள்ளை அடிக்கிறீர்கள். போராளிகள் உருவாக முன்பே, தார்பீப்பாக்குள் தமிழர்களை போட்டவர்கள் அவர்கள். அதே போல் எந்த போராளி குழுவும் இல்லாத கொழும்பில், பொலிசுக்கு விடுமுறை கொடுத்து விட்டு, அப்பட்டமாக பொதுமக்களை குறி வைத்தவர்கள் அவர்கள். இஸ்ரேல் சொல்லி கொடுத்துத்தான் இலங்கை தமிழ் பொதுமக்களை தாக்கியது என்பது நகைபுக்கிடமானது.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஒவ்வொரு முறை போரிடும் போதும் எப்படி பலஸ்தீன நலன்கள், நிலங்கள் பறிபோய் கொண்டே இருக்கிறன என்பதை கண்டும், ஜோர்டானும், எகிப்தும் எல்லையை இறுக்க மூடிய பின்னும்….ஹாமசை விரட்டி விட்டு, மேற்கு கரையில் இருக்கும் பலஸ்தீனர்கள் போல பெட்டாவை மீள அழைக்கும் வரை - காசாவிற்கு மீட்சியில்லை. இனகலவரங்கள், அகதிமுகாம்கள் இல்லாத போது - அப்பாவிகளை அவர்கள் வீடுகளில் வைத்து தாக்கினார்கள். போர் முற்றி அப்பாவிகள் அகதி முகாம்களுக்கு போக தொடங்க அதையும் தாக்கினார்கள். அப்பாவிகளை, போரிடா தரப்புகளை, சிவிலியன்களை தாக்குவது என்ற முடிவு ஒன்றுதான், அது கலவரமாக இருப்பினும், அகதிமுகாம் மீதான தாக்குதலாக இருப்பினும். இஸ்ரேல் இலங்கைக்கு ஆயுதம் வித்தது, இராணுவ நகர்வுகளை சொல்லி கொடுத்தது உண்மை. பலஸ்தீனர்கள் எம்மிடம் காசு வாங்கி கொண்டு சொல்லி தந்தார்கள். அதையே இஸ்ரேல் இலங்கைக்கு செய்தது. ஆனால் அப்பாவிகளை தாக்கும் கொலைவெறியை இலங்கைக்கு யாரும் சொல்லி கொடுக்கத்தேவையில்லை. அது அவர்களுக்கு ரத்தத்தில் ஊறியது. இல்லை இஸ்ரேல் சொல்லி கொடுத்தது என நீங்கள் எழுதுவது - இலங்கக்கு வெள்ளை அடிக்கும் செயல்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இலங்கை அரசு வாயில் விரலை வைத்தால் கடிக்க கூட தெரியாத பபா. கெட்ட இஸ்ரேல்தான் அதை கெடுத்து விட்டது🤣. விட்டால்1952-83 கலவரங்கள் கூட இஸ்ரேல் சொல்லித்தான் நடந்தது என எழுதுவார்கள் போல உள்ளது விளக்க வீரர்கள்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
உங்கள் அளவுக்கு விளக்கம் இல்லைத்தான். இத்தனை அழிவுக்கு பிறகும் “புலிகள் மக்களை குறிவைத்தது தவறு” என்பதை காலம் எமக்கு உணர்த்தியது போல், இப்போ ஹமாஸ் மக்களை இலக்கு வைப்பதும் தவறு என எழுதாமல், “புலிகளுக்கு கூட இப்படி ஒரு தாக்குதல் தேவைப்பட்டது”, “ஆகவே ஹமாசுக்கும் தேவைபட்டுள்ளது” என்று எழுதும் அளவுக்கு என்னிடம் விளக்கம் இல்லைத்தான்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஒரு நிலப்பரப்பில் ஒரு இனத்தின் தொன்மை பற்றிய உண்மையை எடுத்து சொல்ல அந்த இனமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதை பற்றிய அறிவு இருந்தாலே போதுமானது. நான் வக்காலத்து வாங்கித்தான் யூதர்கள் வாழவேண்டிய நிலையில் அவர்கள் இல்லை. ஆனால் - ஈழத்தமிழர் மத்தியில் நெடுங்காலமாகவே யூதர்கள் இன்னொருவன் நிலத்தை அபகரித்து வாழ்கிறார்கள் என்ற பொய், மீண்டும் மீண்டும் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இந்த பொய்யை - பொய் என்று சுட்டுவது மட்டுமே நான் செய்வது. தவிர என்னிடம் இஸ்லாமிய விரோதம் துளியும் இல்லை. யூதரின் நில உரிமையை நான் எடுத்து சொல்வது எனது இஸ்லாமிய வெறுப்பாலும் அல்ல. இலங்கை முஸ்லிம்கள் - 1948 இல் அவர்கள் எத்தனை வீதமாக இருந்தாலும், 2023 இல் அவர்கள் கிழக்கின் 1/3 மக்கள் - ஆகவே அவர்களுக்கு எமக்கு நிகரான நிலத்தொடர்பற்ற நிர்வாக அலகை கொடுக்க நாம் முன்வரவேண்டும் என யாழில் எழுதும் ஒரே கருத்தாளர் நான் என நினைக்கிறேன். இதே அணுகுமுறையைத்தான் நான் இஸ்ரேல்- பலஸ்தீன முரணிலும் எடுக்கிறேன். ஆபிரகாம் கால வரலாறையும் விடுங்கள், 2000-1942 ஐயும் விடுங்கள், 1942-2022 ஐ விட்டு விடுங்கள். 2023 இல் அங்கே இரு இனக்குழுக்கள் வாழ்கிறன - ஆகவே சமனான இரு நாடுகளை உருவாக்க வேண்டும் என்பதே என் நிலைப்பாடு. பிகு காசாவில் நடப்பவை உங்களை பாதித்துள்ளமை புரிந்துகொள்ள கூடியதே…. ஆனால் அதற்காக நீங்கள் இலங்கையில் ஒரு அப்பாவி இஸ்லாமிய பெண்ணின் அபாயாவை வலுகட்டாயமாக காடையர்கள் நீக்கியதை ஆதரித்து வரவேற்ற ஆட்களிடம் எல்லாம் நீதி கேட்டு எழுதுவது - கோவம் உங்கள் கண்களை மறைத்து விட்டதோ என எண்ண வைக்கிறது.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
1. இஸ்ரேலுக்குள் தாக்குதல்கள் கட்டுப்படுத்தப்பட்டு - காசா-இஸ்ரேல் எல்லை மீள பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவிப்பு. 2. காசாவில் கண்மூடித்தனமாக இஸ்ரேல் குண்டு வீசுகிறது. சில இடங்களில் அப்பட்டமாக குடியிருப்பு என தெரியும் கட்டிடங்கள் அப்படியே நொருக்கப்படுகிறன. இவை நிச்சயம் போர்குற்றங்கள்தான். ஆனால் மேற்கோ, ரஸ்யாவோ, சீனாவோ, இந்தியாவோ வாய் திறாவா. 3. தண்ணீரை மூடி விட்டதாக வீடியோக்கள் வருகிறது. 4. எகிப்து தன் காசா எல்லையை இறுக மூடிவைத்துள்ளது.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இது ஒரு நம்பிக்கை என முன்பே கூறியுள்ளேன். சுருக்கமாக இந்த நம்பிக்கை யாதெனில் ஆபிரகாமுக்கும் அடிமை பெண்ணுக்கும் இஷ்மாயில் பிறந்த பின் எதிர்பாராத வயதில் ஆபிரகாமுக்கும் மனைவி சாராவுக்கும் மகனாக ஐசாக் பிறக்கிறார். அதன் பின் சாரா ஈஷ்மாயில்லையும் அவர் தாயையும் ஆபிரகாமின் தேசத்தில் இருந்து விலக்கி வைக்க கோரி, ஆபிரகாம் சஞ்சலபட, கடவுள் ஆபிரகாமை அவ்வாறே செய்யும் படி கூறி, இஷ்மாயிலும் ஆபிரகாமின் ஒரு மகன் என்பதால் அவர் ஒரு பெரும் இனக்குழிவின் தலைவர் ஆவார் எனவும். அந்த இனகுழு செல்வம் படைத்து இருக்கும் எனவும் ஆபிரகாமுக்கு கடவுள் வாக்களிக்கிறார். இவ்வாறு இஸ்ரேலில் இருந்து விரட்டப்பட்ட இஸ்மாயிலின் வழி வந்தவர்கள்களே அரபு மக்கள். இவர்களும் பல உட்பிரிவாக இருந்தனர். அதில் ஒரு பிரிவான குரோசி யில் பிறந்தவரே மொகமட். இது மகாபாரதம், இராமாயணம் போல ஒரு இதிகாசம். இதை வைத்து இஸ்ரேலில் அரபு மக்களுக்கு ஆட்சி உரிமை உள்ளது என வாதாட முடியாது. ஆனால் அப்படியே வாதாடினாலும் கூட - இஸ்மாயிலின் வழி வந்த அரபுகள் இஸ்ரேலில் இருந்து விரட்டப்பட்டோர். எனவே அவர்களுக்கு அங்கே ஆட்சி உரிமை இல்லை. அனால் இந்த கதைகள் எதுவும் தேவையில்லை. 2023 இல் அங்கே யூதரும், அரபிகளும் உள்ளார்கள். ஆளை ஆள் அழிக்க முனையாத இரண்டு நாடுகளை உருவாக்குவதே செய்ய வேண்டியது.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இதை விளங்க, நீங்கள் முதலில் மதங்கள் உருவாகிய டைம்லைனையும், பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு, குரான் ஆகியவற்றுக்கிடையான வித்தியாசத்தையும் விளங்கி கொள்ள வேண்டும். அதற்கு உங்களுக்கும் நேரம் இல்லை. எனக்கும் இல்லை. ஆகவே ஒரு சின்ன நன்கு தெரிந்த உதாரணம் மூலம் முயற்சிக்கிறேன். 1. பெரியார் திராவிடர் கழகத்தை ஸ்தாபித்தார். 2. அண்ணா திமுகவை திகவில் இருந்து சில வேறுபாடுகளுடன் ஸ்தாபித்தார். ஆனால் பெரியார்தான் எமது தலைவர். திராவிடம்தான் எமது கொள்கை என்றார். 3. எம் ஜி ஆர் அதிமுகவை ஸ்தாபித்தார். அவரும் பெரியார்தான் எமது தலைவர். திராவிடம்தான் எமது கொள்கை என்றார். 4. வைகோ மதிமுகவை ஸ்தாபித்தார். அவரும் பெரியார்தான் எமது தலைவர். திராவிடம்தான் எமது கொள்கை என்றார். இப்போ பெரியார் தி.கவா? திமுகவா? அதிமுகவா? மதிமுகவா? பெரியார் திக மட்டும்தான். அப்படித்தான் ஆபிரஹாமும். அவர் யூதர் மட்டுமே. அவரின் வழியை ஒட்டி பின்பு சில மாற்றங்களோடு வந்த மதங்களே கிறிஸ்தவமும் இஸ்லாமும். ஆபிரஹாமுக்கும் முன்பே நான் இருந்தேன் before Abraham was I am என யேசு சொல்கிறார் என்கிறது வேதாகமம். அதே போல் ஆபிரஹாம், மோசஸ், யேசு அனைவரையும் நபிகளாக ஏற்கிறது இஸ்லாம். அது மட்டும் அல்ல, ஆபிரகாமுக்கும் முன்பே இஸ்லாம் இருந்தது, அது மொகமட்டுக்கு மீள் உரைக்கப்பட்டது என்பதே அவர்களின் நம்பிக்கை. அதாவது இஸ்லாம் மொகட்டுக்கும் முந்தியதாம். ஆனால் இவை எல்லாம் தரவுகள் சார் விடயங்கள் அல்ல. பெரும்பாலானவை நம்பிக்கை அடிப்படையிலானவை. ஆனால் யூத நாடு அங்கே இருந்தது என்பது மறுக்கவியலாத உண்மை. Temple Mount இல் தேவாலயம், மசூதியை வர பல நூற்றாண்டுகள் முன்பே அங்கு யூத கோவில் இருந்ததும் உண்மை. அங்கே Semitic tribes பல வாழ்ந்துள்ளன. அதில் இன்நாளைய அரபிகளின் மூதாதையரும் அடங்குவர்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இதென்ன பிரமாதம்….இன்னும் ஸ்பெசல் உருட்டு எல்லாம் கைவசம் வைத்திருக்கிறேன் 🤣. இணைந்திருங்கள்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஆனால் நான் ஹிஸ்புல்லாவை நம்பமாட்டேன். அவர்கள் இல்லை என சொல்லி விட்டு வரக்கூடும்.