goshan_che
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!
Everything posted by goshan_che
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
துருக்கி மத்யஸ்தத்தில் உருவான உக்ரேன்-ரஸ்யா தானிய ஏற்றுமதி ஒப்பந்தம் ஜூலை 17 இல் முடிவுக்கு வருகிறது. ரஸ்யா விலகி கொண்டாலும் துருக்கிய கடற்படை பாதுகாப்போடு உக்ரேனில் இருந்து தானிய ஏற்றுமதி கருங்கடலினூடு தொடரும் என எர்டோகன் அறிவித்துள்ளாராம். 1. அசோவ் தளபதிகளை ரஸ்யாவை கேட்காமல் உக்ரேனிடம் கொடுத்தது 2. உக்ரேனை நேட்டோ சீக்கிரமாக சேர்க்க வேண்டும் என நேற்று வலியுறுத்தியது 3. இன்று இது நேட்டோவில் ஓரளவு ரஸ்ய நல்லுறவு நாடு என்ற நிலையில் இருந்து, மிக விரைவாக உக்ரேனின் அதி ஆதரவு நாடுகளில் ஒன்று என்ற நிலைக்கு துருக்கி வந்துள்ளது. ஏன் இந்த திடீர் மாற்றம்? இத்தனைக்கும் அண்மையில் நடந்த தேர்தலில் எனைய இருவரும் எர்டோகனை விட ரஸ்ய எதிர்ப்பாளர் என்பதால் - எர்டகோன் வெற்றிக்கு ரஸ்யா மறைமுகமாக உழைத்தது என்று எதிரணி வேட்பாளர் பொது வெளியில் குற்றம் சாட்டி உள்ளார். திடீரென எர்டோகன் நிலை மாறியதன் மர்மம்தான் என்ன?
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
பைடன்: உக்ரேன் இன்னும் நேட்டோ உறுப்புரிமைக்கு தயார் நிலைக்கு வரவில்லை. ரஸ்யாவோடு உக்ரேன் போரிடும் நிலையில் அதை நேட்டோவில் சேர்ப்பது, ரஸ்யா மீது நேட்ட்டோ போர் தொடுப்பதற்குச் சமன். எனவே ரஸ்ய-உக்ரேன் யுத்தம் முடியும் வரை உக்ரேன் நேட்டோவில் இணைவது சாத்தியமில்லை.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
உக்ரேனில் உள்ள ரஸ்ய இராணுவத்தின் பிரதானி கேரிஸ்மோவ் அகற்றப்பட்டு அவர் இடத்துக்கு Teplinskiy நியமிக்கப்பட்டுள்ளாராம் என்கிறது டெய்லி மெயில். கேரிஸ்மோவ் அகற்றம், பிரிகோசனின் கோரிக்கையில் ஒன்று என்பது கவனிக்கத்தக்கது. உ.ப.ப.செ இன்று மதியம் கிரைமியாவை, ரஸ்யாவோடு இணைக்கும் கேர்ச் பாலம் நோக்கி உக்ரேன் ஏவிய உள்ளூர் தயாரிப்பு ஏவுகணைகளை தாம் சுட்டு வீழ்த்தியதாக ரஸ்ய கணக்குகள் கோருகிறன. முன்னதாக இந்த பாலத்தில் போக்குவரத்தை ரஸ்யா தற்காலிகமாக இடை நிறுத்தியதாக உக்ரேன் கணக்குகள் கூறின.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
அண்ணை ஆங்கிலத்தில் இது பற்றி செய்தி எழுதப்பட்டுகொண்டுதான் இருக்கிறது. https://www.tamilguardian.com/content/human-remains-found-mullaitivu https://www.tamilguardian.com/content/13-bodies-uncovered-mullaitivu-mass-grave இதை உறவுகள், அவரவர் நாடுகளில் உள்ள அமைப்புகள், அரசியல்வாதிகளுக்கு அந்தந்த மொழிகளில் அனுப்பி கவனத்தில் எடுக்குமாறு கோரலாம். ஆங்கிலம் பேசும் நாட்டில் வசிப்பவர்கள், அல்லது அவர்களின் பிள்ளைகளை கேட்டால் 5 நிமிடத்தில் ஒரு covering letter அடித்து தருவார்கள். இல்லை என்றால் இங்கே சொன்னால் - ஒரு template letter அடித்துத்துதரலாம். பிரச்சனை இல்லை. ஆனால் முன்னர் நெடுக்ஸ் இன்னொரு முயற்சியில் சொன்னது போல, எல்லாரும் ஒரே மாரி அடித்து அனுப்பினால் அது ஒருங்கிணைக்கப்பட்ட பிரச்சாரம் போல தெரியும். ஆகவே அவரவர் பாணியில் எழுதினால் நல்லது. பிகு யாழில் வந்து விட்டது என்றால் அது இந்தியன் உளவு அமைப்புக்கு கார் கதவு திறக்கும் ஆட்கள் பார்வையிலும் பட்டிருக்கும். ஆகவே இந்திய அதிகாரிகளுக்கு யாரும் கடிதம் அனுப்பி மினகெடவேண்டாம்🤣.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
https://twitter.com/ivan_8848/status/1677798756228505602?s=20 உக்ரேன் நேட்டோவில் சேர்க்கப்பட வேண்டும். - துருக்கி அதிபர் எர்டோகன்-
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ரஸ்யா ஏலவே உக்ரேனில் கொத்து குண்டுகளை பாவித்தே வருகிறது. இனி சில வேளை லிவிவ் போல மேற்கு உக்ரேன் நகரங்கள் மீதும் பாவிக்க கூடும்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ரஸ்யாவுடன் செய்த உடன்படிக்கையை மீறி, ரஸ்யாவிடம் ஒரு தகவலும் சொல்லாமல், துருக்கி, அசோவ் போராளிகளை உக்ரேன் அதிபரிடம் கையளித்தமைக்கு பெஸ்கோ கண்டனம்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
https://twitter.com/Gerashchenko_en/status/1677754477959430145/mediaViewer?currentTweet=1677754477959430145¤tTweetUser=Gerashchenko_en ஒரு தொகுதி வாக்னர் கூலிப்படையினர் பெலரூசில் வந்திறங்கி உள்ளனராம்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
எல்லாம் ஒரு வகை cost -benefit analysis அடிப்படையில்தான் செய்யப்படுகிறன என நினைக்கிறேன். அமெரிக்காவை அதன் சகாக்களை நோக்கி இந்த ஆயுதங்கள் திரும்பாதாவரை - இதனால் வரும் பெனிபிட் கூட என கணித்து கொடுக்கிறார்கள். அண்மையில் கூட தலிபான் ஆப்கான் ஆமியிடம் கைப்பற்றிய ஆயுதங்களை வைத்து, ஈரானை அடித்தது. தனது வீரர்கள் இழப்பை குறைக்க, இரு நகரங்கள் மீது அணுகுண்டை போட்ட நாடு அல்லவா? எல்லாமுமே cold calculations தான். பிரித்தானியாவின் ஸ்டோம் ஷடோ குரூஸ் ஏவுகணை ஒன்றை அதிகம் சேதம் இல்லாமல் ரஸ்யா சுட்டு வீழ்த்தி, கைப்பற்றியுள்ளதாம்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ரஸ்ய-உக்ரேன் யுத்தம் தொடங்கி 500 நாள் நிறைவை ஒட்டி, செலன்ஸ்கி கருங்கடலில் உள்ள பாம்பு தீவுக்கு விஜயம் செய்துள்ளாராம்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
கொத்து/கொத்தணி குண்டுகளை உக்ரேனுக்கு கொடுப்போம் என பைடன், வெள்ளை மாளிகை அறிவிப்பு.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
தனியே தரவுகளை மட்டும் வைத்து பார்த்தால் இது சரியே. ஆனால், ஹிட்லரின் ஜேர்மனியின் கொடுமைகளுக்காக….. மேர்கலின் ஜேர்மனி மீது கறுவியம் வைப்பது சரிதானா? நன்றி. இதுதான் என் நிலைப்பாடும். உக்ரேனும் இப்படி ஒரு நிலையில் (தன் நிலத்தில் பதுங்குகுழி அமைத்து இருக்கும்) ஆக்கிரமிப்பு படையை அழிக்கவே இதை கோருவதாகவே நான் விளங்கி கொள்கிறேன். ஆனால் இதை மேற்கு குறிப்பாக அமெரிக்கா கொடுக்ககூடாது, மாறாக பதுங்கு குழிகளை தாக்கும் வேறு ஆயுதங்களை கொடுக்கலாம் என்பதே என் நிலைப்பாடு.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ஓம். ஆனால் - அப்போ இருந்தது செலன்ஸ்கியின் உக்ரேன் அல்ல. ஆனால் அப்போதும், இப்போதும் இருப்பது புட்டினின் ரஸ்யா.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ரஸ்யா ஏலவே உக்ரேனில் கொத்து குண்டுகளையும், நெருப்பு குண்டுகளையும் (தேர்மோபாரிக்) பாவித்துள்ளது என்கிறது. சாட்சாத் - தமிழ் கார்டியன். https://www.tamilguardian.com/content/what-are-thermobaric-and-cluster-bombs-look-their-use-sri-lankan-army ஆனந்தபுர சண்டையில் புலிகளுக்கு அதிஸ்டவசமாக ஒரு தொகை கொத்தணி குண்டுகள் கிடைத்திருந்தால் - அதை இலங்கை படை மீது பாவித்திருப்பார்களா இல்லையா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பாவித்து இருப்பார்கள் அதுதான் சரி என நான் கருதுகிறேன். மேலே உள்ள தமிழ் கார்டியன் கட்டுரையில் இருந்து. Photographs obtained by the Guardian show demining teams excavating cluster munitions from Kilinochchi and Chalai in Mullaitivu, sites of heavy bombardment by Sri Lankan forces during the armed conflict. Leaked by a former employee of the Halo Trust to non-governmental organisation Together Against Genocide, the munitions in the photographs were identified by a senior weapons researcher at Human Rights Watch as “Russian-made cluster bombs and unexploded cluster submunitions”. The former MAG official told the Guardian that cluster bombs had been found in a “densely civilian-populated area” in one of the ‘No Fire Zones’ near Puthukudiyiruppu. His testimony adds to the large number of witness accounts that confirm the Sri Lankan government used cluster bombs during the final phase of its large-scale military offensive. இலங்கைக்கு யார் கொத்து குண்டுகளை கொடுத்தார்கள்? அப்போ அந்த நாட்டின் அதிபர்/அதிகாரம் மிக்கவராக யார் இருந்தார்? யோசிக்க வேண்டிய விடயங்கள்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
கொத்தணி குண்டுகளை இலங்கை அரசு போல, குடிமனைகள் மீது நேரடியாக உக்ரேனோ, ரஸ்யாவோ பாவிக்காது என்றே நான் நம்புகிறேன். குறிப்பாக உக்ரேன் இதை ரஸ்ய மண்ணில் பாவிக்காது. ஆனால் இந்த போரில் ரஸ்யா மரியோபோலில் நடத்திய கொடூரங்கள் - இரு பக்கமும் எதுவும் சாத்தியமே என்பதை சொல்லி நிற்கிறது. ரஸ்யா அமைத்துள்ள பதுங்குகுழிகளை கிளியர் பண்ண இது தேவை (clearing the trenches) என்கிறது உக்ரேன். இதற்கு பதிலாக F16 ஐ கொடுக்கலாம். இது யுத்தம். உக்ரேனை ஒரு கையை கட்டி கொண்டு அடிபடு என சொல்ல முடியாது. உக்ரேனிய மண்ணில் பதுங்குகுழிள் இருக்கும் ரஸ்யபடைகள் மரணம் அல்லது சரணடைதல் மூலம் அகற்ப்படவேண்டும். அதை கொத்தணி குண்டு அல்லாத இன்னொரு முறையில் அடைய முயன்றால் நல்லது. புட்டின் விரும்பினால் இன்றைக்கே பின்வாங்கியும் போகலாம்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
இதுதான் அந்த வீடியோ👇
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ஓம் மாளிகை, தங்கம், பல மல்டி மில்லியன் டாலர் ரொக்கம், பிரி கோசனின் விக் (டோப்பா) கலெக்சன் என பலதை காட்டியுள்ளார்கள். நடப்பவற்றை பார்க்க, ரஸ்யாவில் ஒன்றுக்கு மேற்பட்ட அதிகார மையங்கள் உள்ளன, புட்டினிடம் முழு அதிகாரமும் இல்லை என யோசிக்க வைக்கிறது. ஷிகோ நிச்சயம் பிரிகோசனின் எதிர் முகாம்தான். ஆனால் புட்டின்? இத்தனைக்கும் பிறகு பிரிகோசனை மன்னிக்க - லூக்கா சொல்லும் புட்டின் கருணையாளர் என்ற விளக்கம் நம்பும்படி இல்லை. ஒன்றில் உண்மையில் பிரிகோசனை புட்டின் ஒரு சகோதரமாக பாவித்து மன்னிக்க தயாராகிறார். அல்லது ரஸ்யாவில் கொம்பிரமாட் என்பார்கள். ஆங்கிலத்தில் compromising evidence. புட்டின் பற்றிய ஏதோ கொம்பிரமார்ட் பிரிகோசனிடம் மாட்டி உள்ளாதாக இருக்கலாம். ஏதோ ஒன்று பிரிகோசனை பாதுகாக்கிறது என்பது மட்டும் தெளிவாகிறது. ஆனால் இந்த சக்தியால் - வாக்னரை கலைப்பதை, அவர்களின் டிவி சாம்ராஜ்யத்தை குலைப்பதை, வீட்டு சோதனையை - நிறுத்த முடியவில்லை. FSB யில் இருந்து இயங்கும் winds of change எனும் மாற்றம் விரும்பும் அமைப்பு பிரிகோசனை புட்டினை மீறி இந்தளவு எதிர்க்க முடியாது. எப்படி பார்த்தாலும் - முடிவு ரஸ்யாவில் ஒன்றுக்கு மேற்பட்ட அதிகார மையங்கள் உள்ளன, புட்டினிடம் முழு அதிகாரமும் இல்லை என்பதை நோக்கியே மீள மீள வருகிறது (என் மனதில்).
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
1. செலென்ஸ்கி துருக்கி அதிபர் எர்டோகனை விரைவில், அநேகமாக நாளை சந்திக்கிராராம். 2. பிரிகோசன் பெலரூசில் இல்லை - ரஸ்யா திரும்பிவிட்டார் என்கிறார், பெலரூஸ் அதிபர்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
உ.ப.ப.செ 1. உக்ரேனுக்கு கொத்து குண்டுகளை கொடுக்கும் முடிவை அமரிக்கா எடுத்துள்ளதாம். 2. பிரிகோசனின் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட பெருந்தொகை பணத்தை ராஸ்யா மீளவும் அவரிடமே கொடுத்துள்ளதாம்
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
How it started : 3 நாளில் கியவ் How it’s going : டிரோன் தாக்குதலால் மாஸ்கோ விமானநிலையம் மூடல்
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
வெறும் ஊகம் டினிப்ரோ நதி கரையில் காற்றில் இனம் தெரியாத தொற்று கண்டறியபட்டதாக ஒரு உக்ரேனிய சார்ப்பு கணக்கு சொல்கிறது. வெறும் ஒற்றை வரி செய்தியாக. ஆதாரம் எதுவும் இல்லாமல்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ரம்சான் காடிரோவ் வெளியிட்ட சாவு மறுப்பு வீடியோ
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
1. அண்மையில் ஒரு பீட்சா ரெஸ்டோரெண்டில் நடத்த பட்ட தாக்குதல் - வெளிநாட்டு போராளிகளை இலக்கு வைத்த தாக்குதலாய் இருக்கும் என சொல்லி இருந்தேன் - அந்த தாக்குதலில் ஒரு நடப்பு அமெரிக்க மரைன் கொல்லப்பட்டது உறுதியாகியிள்ளது. அமெரிக படையில் இருந்து விடுப்பில் போய் உக்ரேனில் இண்டர் நேசனல் லீஜன் எனும் வெளிநாட்டினருக்கான படையில் சேர்ந்து போராடினாராம். 2. ஆனால் இதை வைத்து - அமெரிக்க படைகள் உத்தியோக பூர்வமாக இறங்கின, இறந்தன, பிளக்ஹாக் போய் உடலை மீட்டது என ரஸ்ய கணக்குகள் சொல்வதை நம்ப கடினமாகவே உள்ளது.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
நீங்களும் புடுனோவ் அம்மானின் ரசிகரா🤣?
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
பி.உ.ப.ப. செய்திகள் 1. அன்ரன்வோஸ்கி பாலத்தடியில் இருந்து உக்ரேன் படைகள் அகற்றப்பட்டதா இல்லையா என்பது குறித்த எதிரெதிர் கருத்துகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. Humenyuk என்ற ஆயுதபடையினன் - உக்ரேன் ரஸ்யா இடையே இன்னும் இந்த இடத்தில் சண்டை நடப்பதாக கூறியதாக - உக்ரேனிய கணக்கு ஒன்று சொல்கிறது. ரஸ்ய கணக்குகளோ - இஸ்கண்டர் தாக்குதலோடு உக்ரேனிய பிரசன்னம் அற்றுப்போனதாக கூறுகிறன. 2. ஒரு காலத்தில் செச்சினிய விடுதலைக்கு போராடி பின்னர் அணிமாறி புட்டினுடன் சேர்ந்து கொண்ட காடிரோவின் மகனும், இப்போ செச்சினியாவை ஆள்பவருமான ரம்ஸான் காடிரோவ் கல்லீரல் பாதிப்பால் உயிருக்கு போராடுவதாக ஒரு வதந்தி உலாவுகிறது. இது இப்போதைக்கு ஆதாரமற்ற வதந்தியாவே தெரிகிறது. 3. கலகத்துக்கு பல நாட்களின் பின் மெட்வெடேவ் ட்விட்டரில் மெளனம் கலைதுள்ளார். ஆகவே புட்டின் (இன்னும்) ஆளை முடிக்கவில்லை போலப்படுகிறது.