Everything posted by goshan_che
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
பதிலுக்கு நன்றி வசி. சுணங்கியமைக்கு மன்னிக்கவும். உங்கள் இணைபுக்களையும் பார்த்து விட்டு எழுத நினைத்தேன். பெரிதாக எதையும் திட்டமிடவில்லை. Remote working tech portfolio ஒன்றில் சிறியளவு முதலை போட்டு வைத்துள்ளேன். வைரஸ் பரவல் அதிகமாகி ஏர் லைன், குரூஸ் சேவைகள் முடங்கினால் - இந்த பங்குகள் உயரும் என்ற எண்ணத்தில். அதேபோல் அஸ்ராசெனக்கா, பைசர் பங்குகள் - நோய் தாக்கம் கூடினால் இவை கூடக்கூடும். ஒரு pharma portfolio விலும் போடலாம் என யோசிக்கிறேன். ஹோட்டல் பங்குகள் - யூகே ஹோட்டல்கள்தான் - ஆகவே, பிரயாண தடை வந்தாலும் உள்நாட்டு staycation மூலம் அவை மேல் எழக்கூடும். ஏலவே உள்ள கிரிப்டோ முதலீடும் (தங்கம் போல்) - லாக்டவுன் வந்தால் மேலே செல்ல வாய்ப்பு உள்ளது என நினைக்கிறேன். இவைதான் எனது attempts to hedge the risk. அத்தோடு அண்மைகாலத்தில் கிரிப்டோவில் கொஞ்சம் அதிகமாகவே மினகெட்டு விட்டேன் - ஆகவே இப்படி செய்தது diversification ஐ கூட்டும் எனவும் நம்புகிறேன். இதை flag பண்ணியதற்கு நன்றி. நீங்கள் சொன்ன பின் தான் நானும் அவதானித்தேன். கிரிப்டோபில் கூட என் பெரும்பாலன holdings இருப்பது XRP யில். கிரிப்டோவில் அதையும் counter trend எனலாம் என நினைக்கிறேன். இதை பலன்ஸ் பண்ண வேண்டும். Trend க்கு இசைய அப்பிள், கூகிள் என கொஞ்சம் வாங்கலாமோ? எனது இயற்கையான ஆர்வம், கல்வி பின்புலம் காரணமாக தரவுகளை ஆராய்வது, நிகழ்வுகளின் அடிப்படையில் forecast பண்ணுவது ஓரளவு ஈசியாக உள்ளது. வரைபுகளை வைத்து டெக்னிக்கலாக செய்வது மிக கடினமாக உள்ளது. முயற்சி செய்யாமல் இல்லை. உங்களுக்கும் கடஞ்சாவுக்கும் யாழுக்கு வெளியான நண்பர்களுக்கும் நன்றி. ஆனால் ஏனையோரின் கருத்தில் தங்கி இருக்கும் இந்த நிலை - எனது அப்ரோச்சின் மிக பெரும் ரிஸ்க். கணிப்பு தவறினால்? என் அணுகுமுறை 1. முற்றிலும் இழக்க கூடியதை மட்டுமே முதலிடுவது 2. பச்சையில் இருக்கும் போது மட்டுமே வெளியேறுவது 3. CFD அறவே செய்வதில்லை (கையை சுட்ட அனுபவம் உண்டு) கொஞ்ச முதலீடு, மிக கொஞ்ச லாபம்/நட்டம், அதிக டென்சன் இல்லை. ஆனால் கிரிப்டோவில் முழுவதையும் இழக்க வாய்ப்பு உண்டு. நிச்சயமாக ஒரு தொழிலாக செய்ய இந்த அணுகுமுறை உதவாது. பைசர் நீண்ட கால நோக்கில் நிச்சயம் நல்ல தேர்வு. ஆனால் இப்போதைக்கு நல்ல செய்தி எல்லாம் வந்து முடிந்து விட்டதாக தெரிகிறது (famous last words🤣). ஆலோசனையை பார்த்தால் sell 0% hold 61% buy 39%. தவிரவும் மிக பெரிய நிறுவனம் (market cap) ஆகவே மெதுவாகவே அசையும். போனவருடம் ஒரு புதிய கம்பெனியை உருவாக்கி - சில பழைய மருந்து patents ஐ அதற்கு கொடுத்தார்கள். அதேபோல் mRNA ஆராய்சி மூலம் கான்சர் மருந்து போன்றவறை உருவாக்க அதிக வாய்ப்புள்ளது. இவை பைசருக்கான நல்ல காரணங்கள். Long term hold என்றால் நிச்சயம் வாங்கியது நல்ல நகர்வே. Short term trade என்றால் சொல்ல தெரியவில்லை (டெக்னிக்கலாக நன்று என்றால் வாங்கலாம் என நினைக்கிறேன்).
-
86001AF2-757B-497A-84FE-6462AC1CACCB.jpeg
From the album: பலதும் பத்தும்
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
1. இதில் சொல்லபட்ட எனது கருத்தின் அடிப்படையில் சில விமான, குரூஸ், கொட்டல் பங்குகளை 2 கிழமைக்கு முன் வாங்கினேன். அப்போ 52week low விற்கு அண்மையாக விலைகள் இருந்தன. இப்போ கொஞ்சம் கூடி உள்ளது. இப்போதும் வாங்கும் வாய்ப்பு என்றே நினைகிறேன். ஏனையோர் என்ன நினைகிறீர்கள்? 2. BTC 46K இல் bottom அடைந்து விட்டது என்கிறார்கள் ? உங்கள் கணிப்பு என்ன சொல்கிறது? கடஞ்சா, இது நம்பகமான லிங்கா? இந்த bot தரும் tasks ஐ நீங்கள் செய்து விட்டீர்களா?
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நம்மள எல்லாம் வச்சிகிட்டு விடுமுறையா, வாய்ப்பில்ல ராஜ, வாய்ப்பில்ல🤣.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இப்போ சரியாக உள்ளது நன்றி அண்ணா.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
🤣 ஆனால் நானும் எங்கட அமெரிக்கன் ஐயா மாரி தடவல் தொழில்நுட்பம்தான். எலிகள் இல்லை. ஆகவே இது வேற ஏதோ சிக்கல். மோகன் அண்ணை சிக்கலை கண்டு பிடிச்சிட்டாராம். ஆனால் தீர்வுதான் இன்னும் இல்லையாம். நன்றி அண்ணா. 🤣 கொடுமை கொடுமை எண்டு கோயிலுக்கு போனால்……🤣
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
மோகன் அண்ணா, நான் மேலே படங்கள் இணைத்துள்ளேன். இவை இன்று யாழின் முகப்பை எடுத்த screen shots. ஆனால் தகவல்கள் எல்லாம் 23 டிசம்பர் திகதியிலேயே நிக்கிறது. நான் கடந்த ஆறு மாதமாக ஒரு மாற்றமும் செய்யவில்லை. யாயினியும் இதே போல் விடயம் என்றே சொல்கிறா. பிகு எனது வேலை போன் VPN மூலம் இணையத்தை அணுகும். அதில் போய் (லொக் இன் இல்லாமல்) - பார்த்தாலும் இப்படித்தான் காட்டுகிறது.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இப்போ எப்படி காட்டுகிறது என்பதை விளக்கும் ஸ்கீரீன் ஷாட்ஸ். கோசானின் ஆவியை இறக்கத்தான் வேணும் போல🤣
-
A7A418F5-6050-4335-BB7F-603841D09515.jpeg
From the album: பலதும் பத்தும்
-
C2D31CFF-E0C1-4860-9DF0-A0E5022ED60C.jpeg
From the album: பலதும் பத்தும்
-
33A21B1E-964D-4F60-BE59-275E3F5CC8F4.jpeg
From the album: பலதும் பத்தும்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
மோகன் அண்ணா/ நிர்வாகம், யாயினி, ரதி அக்காவிற்கு உள்ள பிரச்சனையின் தொடரச்சியோ இல்லையோ தெரியவில்லை, கடந்த இரு நாட்களாக யாழின் முகப்பு (yarl.com) - வந்தால் இரு நாட்களுக்கு முந்திய செய்திகளையே காட்டுகிறது. புதிய பதிவுகள், இதர பகுதிகள் எல்லாம் (முகப்பில் மட்டும்) இப்படி பழைய பதிவுகளையே காட்டுகிறன. புதிய பதிவுகளை கிளிக் பண்ணி aggregator க்கு போனாலும் அதே நிலைதான். ஆனால் forum home ற்கு போய் ஒவ்வொரு பகுதியாக (ஊர்புதினம் etc) பார்க்க முடிகிறது.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
நன்றி
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
நன்றி கடஞ்சா. EToro கள்ளர் air drop ஒண்டும் தாரேல்ல. சோங் பேர்ட்டும் தரவில்லை. சொலஜெனிக் தருவார்கள் போல் இல்லை. அங்கே இருக்கும் என் XRP பைனான்சுக்கு மாத்த யோசிச்சேன். ஆனால் இது FCA approved, 1 மில்லியன் பவுண்ஸ் வரை காப்பீடு உண்டு (அந்தளவு இல்லை என் இருப்பு). மாற்றும் போது fees, wallet க்கு மாற்றும் பிக்கல் பிடுங்கல் என்பதால் மாற்றாமல் விட யோசிக்கிறேன். இலவச டோக்கன்களை மிஸ் பண்ணுவது கடுப்பாகுது.
-
தொங்குடா.. தொங்கு..!
எல்லாரும் கைய விட்டா பிறகு ஏன் பிசின்போட்டு ஒட்டின மாரி பிடிச்சு கொண்டு நிண்டவர் எண்டு தான் விளங்கேல்ல. ஒரு 3 அடி கிளம்பினோனயைவது விட்டிருக்கலாம். எல்லாரும் கைய விடுறா எண்டு வேற கத்திறாங்கள்.
-
தொங்குடா.. தொங்கு..!
சர்க்கஸ் கம்பெனில இருந்தேன் ஐயா🤣
-
தொங்குடா.. தொங்கு..!
பிறகென்ன…. வண்டிய ஹரோ ஹில் பக்கமா விடத்தான் இருக்கு😁.
-
தொங்குடா.. தொங்கு..!
முன்னம் ஊரில் இருக்கும் போது எமது கோவில் வயலில் பட்டம் விடப்போவோம். அறுவடை முடிந்து அதன் பின் நைட்றஜனை மண்ணுக்கு இறக்க சணல் பயிரிட்டு அதுவும் வெட்டி ஒதுக்கப்ட்ட நாட்களில்தான் காற்று வீசும் (சோளக்காத்து?). நமது சைசுக்கு ஏற்ப வீட்டிலேயே ஈக்கில், சணல், டிசு பேப்பர், கோதம்பமா பசை கொண்டு நாமே வீடு, முகோணம், இப்படி எளிய வடிவில் பட்டம் செய்து கொண்டு போவோம். நைலோன் மெல்லிய இழையால் பட்டம் பறக்க விடப்படும். பெரிய அண்ணாமார் ஆளை விட பெரிய பட்டம் கொண்டு வருவார்கள். மூங்கிலால் கட்டுவது. முகட்டில் “விண்” கட்டி இருப்பார்கள். அது மேலே ஏற் ஏற கூ..கூ என ஒலி எழுப்பும். விண் கூவுது என்போம். “பெரிய ஆக்களிண்ட பட்டங்களை ஆசைக்கும் வேண்டி ஏத்த வேண்டாம். காத்து தூக்கி போடும்” என்பார்கள் வீட்டில். ஆனாலும் ஆசை கேட்காமல் ஏற்கனவே ஏறி ஆடிக்கொண்டிருக்கும், மரத்தில் கட்டப்பட்ட பட்டங்களை கெஞ்சி கூத்தாடி ஒரு நிமிடம் வரையில் “கொன்ரோல்” பண்ணியதுண்டு. ஓனர் அண்ணா பக்கத்திலயே பார்த்து கொண்டு நிப்பார் 🤣. அப்போதெல்லாம் இப்படி ஒரு வளர்ந்த மனிதனை 40 அடி தூக்கும் என தெரியாது. தெரிந்திருந்தால் வயல் பக்கமே தலைவைத்தும் படுத்திருக்க மாட்டேன்🤣. ஊரை விட்டு வந்த பின் பட்டம் விடுவதை மறந்து பட்டம் எடுக்கும் முயற்சியில் காலம் வீணாகியதுதான் மிச்சம். கொழும்பில் கோல்பேசில் வகை வகையாக நாகரீக பட்டங்கள் காற்றில் அலையும். பார்த்ததோடு சரி. கொவிட்டுக்கு முதல் சுப்பர் மார்கெட்டில் கண்டு ஒன்றை வாங்கி வந்தேன். பழைய கதை எல்லாம் சொல்லி அடுத்த காற்று காலம் ஏத்துவோம் எண்டு மகனுக்கும் சொல்ல அவருக்கும் ஒரே குதூகலம். இப்ப எங்க கிடக்கோ தெரியாது. தேட வேணும். தேடவைத்த @ராசவன்னியன் சாருக்கு நன்றி🙏🏾. #ஒரு பட்டதாரியின் சுயசரிதை🤣
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
1. நேற்றைய FED கூட்டத்தில் வட்டி வீதம் கூட்டவில்லை. 2. அதே போல் இப்போ இலங்கையில் இருக்கும் நிலை போல நாட்டின் கடனை service பண்ண, பில் கட்ட முடியாத ஒரு நிலை அமெரிக்காவுக்கு வர இருந்தது, ஆனால் அரசின் செலவீன கூரையை (spending ceiling) 2.5 டிரிலியனால் கூட்டி உள்ளது காங்கிரஸ். 3. கடந்த காலம் முழுவதிலும் உருவாக்கியதிலும் பார்க்க, கடந்த 2 வருடத்தில் அமெரிக்கா அதிக பணத்தை உருவாக்கி (அச்சடித்து) உள்ளதாக சொல்கிறார்கள். 4. இப்போ ஒப்பீட்டளவில் ஏனைய காசுடன் டொலர் பலமாக இருந்தாலும், ஏனைய நாட்டு மத்திய வங்கிகள் வட்டி வீதத்தை அதிகம் கூட்ட அமெரிக்கா பின் தங்கினால் ( பொருளாதார காரணங்களினால்). இந்த நாலு காரணங்களினால் அடுத்த காலாண்டில் டொலர் மதிப்பு குறையவே வாய்ப்பு என்கிறார்கள். ஆனால் ஒரு சிறுபான்மையினர் - அடுத்த காலாண்டில் பங்கு, கிரிப்டோ ஒரு crash ஐ சந்திக்கும் அப்போ டொலர் தங்கம் ஏறும் என்கிறனர். நான் முதலாமதையே அதிக வாய்புள்ளதாக கருதுகிறேன். ஏனையோர் என்ன கருதுகிறீர்கள்? https://www.nytimes.com/2021/12/14/us/politics/debt-limit.html
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
இங்கிலாந்து வங்கி (பிரித்தானியாவின் மத்திய வங்கி) வட்டி வீதத்தை 0.1 இல் இருந்து 0.25 ஆக கூட்டி உள்ளது.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
வசி, உங்களுக்கு இது தெரிந்திருந்தால் மன்னிக்கவும். உங்களுக்கு how to suck eggs என்று சொல்லவில்லை🤣. Tether போன்ற stable coins, பிட்காயின் போன்றவற்றை வாங்க பயன்படும். ஒரு டெதர் ஒரு டொலருக்கு சமானம் (எப்போதும்). https://www.grantbartel.com/blog/what-is-the-point-of-a-stablecoin/ இந்த லிங்கில் இதை பற்றி விரிவாக உள்ளது. இங்கே பிரச்சனை என்னவென்றால் அவர்கள் issue பண்ணும் ஒரு Tether க்கு ஒரு USD அவர்கள் கையில் வைத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்வது வீண் விரயம் (அந்த USD அப்படியே இருக்கும் - பணவீக்கம் அதிகரிக்க பெறுமதி குறையும்). அல்லது அந்த USD ஐ முதலிட்டால் - that’s subject to market risks. ஆகவே issue பண்ணபடும் ஒவ்வொரு Tether க்கும் நிகரான மதிப்பு உள்ள USD அந்த கம்பெனியில் உள்ளதா? என்பது கேள்வி குறி. இல்லை என்றால் Tether மதிப்பிழக்கும். அப்படி இழந்தால். 1. Tether ஆக வைத்திருப்பவருக்கு நட்டம் 2. Tether : WiNk போல paring வைதிருப்பவர் மீள டெதர் ஆகத்தான் மாற்ற முடியும் எனவே அந்த டெதர் USD க்கு சமன் இல்லை எனில் அதிலும் நட்டம். 3. மேற்சொன்னவற்றால் Tether மதிப்பிழந்தால் - அது முழு கிரிப்டோவையும் பாதிக்கலாம் - அப்படி என்றால் பிட்கொயின் போன்றவற்றின் விலை இறங்கினால் - மேற் சொன்ன 2 வழியில் tether பாவிக்காதவருக்கும் நட்டம் வரும். இதுவே எனது விளக்கம்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
கருத்தாளருக்கு ஒரு கேள்வி. இப்போ ஈசிஜெட், ரயன் ஏர், ஐஏஜி போன்ற பங்குகளை நீண்ட கால நோக்கில் வாங்குவது நல்லம் என நினைக்கிறேன். தென்னாபிரிக்காவின் தரவுகளை வைத்து அநேகமாக Omicron ஆனது beginning of the end game என நினைக்கிறேன். உங்கள் அபிப்பிராயங்கள் என்ன?
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
ஓம் நானும் மிக அரிதாகவே tether பாவிப்பேன். ஆனால் கிரிப்டோ உலகின் பெரும் தளங்களில் ஒன்று இதுவல்லவா. ஆகவே இது ஆட்டம் கண்டால் விலை குறைய வாய்பிருப்பதாக கருதுகிறேன்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
கிரிப்டோவில் கொஞ்சம் கவனம் வையுங்கள் Tether அதை ஒத்த stable currency கள் மீது எனக்கு எப்போதும் ஒரு சந்தேகம் இருந்தே வந்தது. சந்தேகமில்லை - இவை ஒரு சுத்துமாத்து என்பதே என் கருத்து. நேற்று NY Southern District கோர்டில் டெதர் ஒரு களவு என தனியார் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதே போல் யு எஸ் காங்கிரசும் இவை பற்றி விசாரிக்கிறது (இன்றும் ஒரு கூட்டம் நடக்கிறது). முடிந்தளவு tether parings இல் இருந்து வெளிவருவது நல்லம் என நினைகிறேன். ஆனால் கிரிப்டோ சந்தையை பெரும்பாலும் underpin பண்ணுவது stable currency கள்தான். ஆகவே தனியாக USD போன்ற fiat ஐ பாவித்து க்ரிப்டோ வாங்கியவர்கள் கூட விலை குறைவால் பாதிக்க படலாம். இது கிரிப்டோ மார்கெட்டில் ஒரு அணுகுண்டு வெடிப்பாக மாறலாம். இப்போதான் இது தொடங்குகிறது ஆகவே கொஞ்சம் நேரம் இருக்கிறது, அவதானித்து செயல்பட. 👆🏼இது என் கருத்து. ஏனையோர் கருத்தை எதிர்பார்க்கிறேன்.
-
"தமிழ்நாடு" சின்னத்துக்கு பின்னால இவ்வளவு இருக்கா..?
ஓம் அதே போல் நிலாவெளியிலும் ஒரு கோவில் கட்டினனவை.