Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. இல்லை தரையிறங்கிய இடம் குடாரப்பு. களப்பு கடலினூடாக பெரும்தளத்தின் முன்னரங்கை தகர்த்து இத்தாவில் வரை முன்னேறி அங்கே ஒரு பெரும் சமர் நடந்தது என்பதே என் நினைவு. 2ம் குடாரப்பு தரையிறக்கத்தை 2ம் உலக போரின் நோமாண்டி தரையிறக்கத்துடன் ஒப்பிடுவர்.
  2. சொல்லிவிடுங்கோ…அடுத்த படத்தில் அடுத்தோருக்கு சந்தர்பம் வரும். இப்போ வீட்டை உடைத்து விட்டார்கள். என் ஊகம் சரியா?
  3. முல்லைத்தீவு. ஊகத்துக்கான காரணங்கள். 1. வீதியின் இரு மருங்கிலும் உள்ள மண் கடற்பாங்காக இருக்கிறது. 2. தென்னை மரங்கள் இருக்கிறது ஆனால் பனை இல்லை. 3. வீதியின் ஒரு பக்கத்தில் கிளுவை மரங்கள் நிற்கிறது. வேலியில் கிளுவை நிற்பது யாழில் விட முல்லைதீவில் அதிகம். 4. இரு வகையான மின்சார வயர்கள் ஓடுகின்றன. லக்சபான முல்லைதீவுக்கு வர முன்னர் உள்ளூர் மின்விநியோகம் வேறு ஒரு தடத்தில் நடந்தது. பின்னர் லக்சபானவும் வர இப்படி இரெண்டு மின் தடங்கள் ஓடியது. ஆனால் இது 80 களின் நிலை. யுத்த அழிவில் இவை எதுவும் தப்பியிருக்கவும் இல்லை. 5. Just a gut feeling
  4. கு சா அண்ணை இந்த வயதில் நீங்கள் சொன்னாலும், இல்லாட்டியும் உத்துத்தான் பாக்கவேணும். பியர் வேற அடிச்சிட்டார்🤣
  5. இந்த தேர்தலில் நான் அடையாளம் கண்டு கொண்ட இரெண்டு நட்சத்திர அரசியல்வாதிகள் 1. உதயநிதி - ஆரம்பத்தில் சவுக்கு சங்கர் போல நானும் இவரை அதிகம் கனம் பண்ணவில்லை - ஆனால் தேர்தல் தேதி அறிவித்த பின் - இவரின் பிரச்சாரம் கணிசமாக கைகொடுத்தது. ஸ்டாலினிடம் இல்லாத கருணாநிதியின் சில அம்சங்கள் இவரிடம் இருப்பதாக படுகிறது. அந்த எய்ம்ஸ் செங்கல் எல்லாம் அப்படியே கருணாநிதி டச். ஸ்டாலினுக்கு சுட்டு போட்டாலும் வராது. 2. பி டி ஆர் தியாகராஜன் - லேமென், ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கி மேலதிகாரியாக இருந்தவர். பாட்டன் முன்னாள் முதல்வர். தந்தை முன்னாள் சபாநாயகர். வெள்ளை இன பெண்ணை முடித்த அமெரிக்க தமிழர். இப்போ நிதி அமைச்சர். தேர்தலுக்கு பின் செயல்பாடுகள் நன்றாக இருக்கிறன. என்னையா இது, திடீரெண்டு பிரைமறி ஸ்கூல் பிள்ளையள் மாரி “ நானும்தான், எனக்கும்தான்” எண்டு இறங்கீட்டியள் 🤣. சிரித்தபடி கடந்து போகிறேன். ஓ… இது சிரிப்பு திரிதானே🤣 மறந்து விட்டேன். சந்திப்போம்.
  6. நான் எனது கருத்து அல்லது கணிப்பு அல்லது நான் காணும் கள யதார்தத்தை மட்டுமே, என் அறிவிற்கு ஏற்ப எழுத முடியும். தி மு க விம் நிலைக்கு அது ஒன்றி வரலாம் அல்லது விலகி போகலாம் - அதற்கு நான் ஒன்றும் செய்யவியலாது.
  7. இந்த தேர்தலில் நாம் தமிழர் முன்னேறவில்லையே ஒழிய பின்னடையவில்லை. மாநில அங்கிகாரம் கிடைக்கவில்லை என்பது ஒரு சறுக்கல். அதிமுகவின் வாக்கு வங்கியை சரித்து, திமுக வெற்றிக்கு உதவியது யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட். இதை அமித்ஷாவே எதிர்பார்க்கவில்லை. இதனால்தான் 2026 இல் பாஜக மத்தியில் இருந்தால் ( இந்தி பெல்ட்டில் கொரோனா எபெக்ட் என்ன என்பது தெரியவில்லை) - சீமான் தனித்து நிற்க வாய்பில்லை என நினைக்கிறேன். பார்க்கலாம். ஆனால் சீமான் என்ற தனிமனிதர் தனக்கு கொடுக்க பட்டதை திறம்பட செய்துள்ளார்.
  8. எனக்கு குண்டு,சித்திரவதை, போராட அழைத்து விடுவார்களோ? இப்படியானவற்றிக்குத்தான் பயம். யாழில் நோண்டி ஆவதெல்லாம் நாம் டெய்லி செய்யும் மேட்டர்🤣
  9. அப்படி எடுப்பது உங்கள் இஸ்டம் - ஆனால் நான் நாம் தமிழரை பற்றி கணித்தது சிலது பொய்த்துதான் போயிருக்கும். ஒரு சீட்டும் எடுப்பார்கள் என நினைக்கவில்லை ஆனால் 9-12% வாக்குகளை எதிர்பார்த்தேன். இதையும் முன்பே ஒரு திரியில் கணித்து விட்டு ( கடந்த தேர்த்தலை விட இரு மடங்கு ஆக கூடும் என) தான் போனேன். ஆனால் 6.5 % மட்டுமே எடுத்தார்கள். ஏன் தேர்தல் நேரம் வரவில்லை? வாக்குரிமை அற்றவர்களிடம் பேசுவதை விட தேர்தலுக்கு வாக்களிக்க கூடியவர்களிடம் பேசுவது பயனளிக்கும் என கருதி கவனத்தை வேறு தளத்துக்கு திருப்பினேன். தேர்தல் முடிந்த கையோடு வந்து என் கணிப்பை எழுதலாம் என்று நினைத்தால்- முக புத்தகம் மூலம் உள்ளே வரமுடியாமல் போய்விட்டது. 5 க்கு மேல் தகவல் அனுப்பியும் 2 மாதமாக சரிவரவில்லை. அதற்குள் முடிவுகளும் வந்து விட்டது.
  10. பாஸ், 2021 இல் எது நடந்ததோ அது நான் சொன்னபடியே நடந்தது. வேணும் எண்டா 2020இல் நான் எழுதியதை போய் பாருங்கள்: கோசான் பெரிய தீர்கதரிசி மாரி பேசுறார் எண்டு நினைக்க கூடாது but I told you so! 2026லும் இதுவே நடக்கும். நான் என்னை விட சீமானை நம்புகிறேன். அதனால்தான் இப்போ கொஞ்சம் தள்ளி இருந்து இதை பார்க்க விழைகிறேன். இப்ப கூட நீங்கள் கேட்டபடியால்தான் எழுதும் படி ஆயிற்று. 2021-2026 சீமான் உங்களுக்கு பல இன்ப அதிர்சியை தர காத்திருக்கிறார். அதன் முத்தாய்ப்பாய் 2026 தேர்தல் அமையும். 👆🏼இதையும் குறித்து வைத்து கொள்ளுங்கள். சம்பத் சும்பத் விடயத்தில் என் கணிப்பு தவறியதை ஒத்து கொண்டது போல் சீமான் விடயத்தில் தவறினாலும் ஒத்து கொள்வேன்.
  11. எது எப்படியோ விளையாட்டு சுவாரசியமா இருக்கோணும்🤣 பிளான் B இல்லை. B டீம். அதான் சொன்னமாரி 5 தாமரை மலர்ந்திட்டெல்லோ🤣. 2026 இல புல்லா விளங்கும்.
  12. 🤣 நாங்கள் வஞ்சகம் இல்லாமல் எல்லாரையும் வச்சு செய்வோம் அண்ணை.
  13. நுணா, நான் மேலே மோடியை பற்றி சொன்னது மோடி மீதும் சீமான் மீதானுமான நக்கல். முன்பு மோடி குஜராத் முதல்வராக இருந்த போது, சீமான் மஹராஸ்டிராவில் ஒரு பாஜக வேட்பாளரை ஆதரித்து வாக்கு கேட்டார். அதே போல் ஒரு கூட்டத்தில் பேசும் போது, “ஐயா நரேந்திர மோடி, ஒரு லட்சம் கோடி குஜராத்தின் கடனை அடைத்து விட்டு மேலும் ஒரு லட்சம் கோடியை குஜராத் சார்பில் வங்கியில் வைப்பிட்டர்” என கூறினார். மோடி தடையற்ற மின்சாரம் வழங்கினார் என்றும் புகழ்ந்தார். காணொளியில் கீழே காணலாம். தம்பி தங்கைகள் 00.56 நிமிடத்தில் இருந்து காணொளியை நுட்பமாக பார்கவும்🤣
  14. டிவிட்டரில் நான் கேள்விபட்ட நல்ல செய்தி உண்மை என்றால் அவர் இப்போதைக்கு இஞ்ச வரார்🤣. சொல்லி அடிக்கிறீங்க👏🏾. தொடருங்கள்.
  15. அப்பனுக்கு வாழ்த்து. இண்டைக்கு சனிக்கிழமை என்பதால் பஸ் வர பிந்திப்போச்சு 🤣 மாங்குளம் சந்தில நிண்டு புதுகுடியிருப்பு ரோட் ஏடுப்பமோ, கிளிநொச்சி ரோட்டோ எண்டு யோசிக்க அப்பன் முந்தீட்டார். அப்படி எண்டாலும் wild guess தான், இந்த கோயிலுக்கு நான் போனதில்லை.
  16. இணுவில் கந்தசாமி க்ளூ ஏதும் பிளீஸ்?
  17. அண்ணை, sure ஓ? ஓம் முருகா எண்டு போட்டுருக்கு. (இப்படி கேள்வியள கேட்டால் பஸ் ஓடத்தொடங்கும் - பிறகு நான் ஈசியா விடையை கண்டு பிடிச்சிடலாம்🤣).
  18. உண்மைதான். அத்தோட அவரின் நெருங்கிய சிநேகிதர் ஒருத்தர் குடத்தனைதான். பேர் சுமந்திரன் 🤣.
  19. உங்கட பஸ்ச பிடிச்செல்லே வந்தனான் 🤣.
  20. பரிசுக்கு உரியவர் @குமாரசாமி அண்ணைதான். அவர் நாகர்கோவில் எண்டு சொல்லி இராவிட்டால் நான் திருநெல்வேலியில் சுத்தி கொண்டு நிண்டிருப்பன்🤣. கட்டாயம் கேள்விபதிலை தொடருங்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.