Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. ചട്ട എന്നെ എടുത്ത് പോകുക🤣 வாணம் வாப்பா, வாணம். ஷேய்க் மாருவல நம்ப ஏலாவா, பேசி கொண்டு ஈக்க போல கைய போடுற பழக்கம் ஒண்டு ஈக்கி அவனுவளுக்கு 🤣 நகீஸ் புடிச்சவனுவள். இனி ஒட்டக பால்ல போட்ட cappuccino எண்டா குடிச்சி ஈக்கன். ஆனா இறைச்சி தின்னதில்ல. எப்படி ரசையா ஈக்குமா?
  2. டுபாயில் அதுவும் பர்தாவோட வாறவையள்ர இடுப்பை கிள்ளினால் என்ன ஆகும் என மருதருக்கு வன்னியர் முதலிலேயே சொல்லி விடுவார் எனவே என் இடுப்பு சேப்வ். எதுக்கும் கைகாவலா நாட்டாமை படத்தில விஜயகுமார் கட்டிவரும் பெல்ட் மாரி ஒரு ஒன்றை இடுப்பில் கட்டி வருவதாக உத்தேசம்.
  3. மருதர் நோட் திஸ் பொயிண்ட். மருதர், பிளிஸ் நோட் திஸ் பொயிண்ட் ஓல்சோ🤣
  4. நாங்கள் மேடையில் எல்லாம் ஏறி ஆட என்ன பிரபுதேவாவா🤣. சிறி அண்ணர் சொன்னது போல நோட்டம் மட்டும்தான்🤣. நீங்கள் “கட் கட்” என்றது, ஆடலை நிறுத்தி விடுவார்கள் என்பதைதான் என நம்புகிறேன். துபாய் என்பதால் ஒரு பர்தாவில் கலந்து கொள்ளும் எண்ணம் உண்டு🤣
  5. 🤣 துபாயில் மணற் சவாரி (desert safari) செய்தபின் பாலைவனத்தின் நடுவில் இருக்கும் கூடாரத்தில் தேனீரும் வாட்டிய இறச்சிகளையும் சுவைத்தபடி இடுப்பு நடனத்தை ரசிக்கும் நிகழ்வுகள் நடக்கும். அங்கேயே நமது ஒன்று கூடலை வைக்கலாம். ஆனால் உங்கள் கவனம் முழுதும் இடுப்பிலும், நாதமுனியின் கவனம் முழுவதும் அடுப்பிலும் இருப்பதால் கதையில் சுவாரசியம் குறைந்து விடுமோ என யோசிக்கிறேன் 🤣.
  6. ரகு, நாம் எல்லோரும் செய்யும் அரசியல் தமிழ் தேசிய அதாவது "அடையாள அரசியல்" identity politics. இந்த "அடையாளத்தின்" அடிப்படையை பற்றி நாம் அனைவரும் இல்லாவிடிலும், அறுதி பெரும்பான்மையனோராவது ஒரு ஒருமை பட்ட நிலைப்பாட்டுக்கு வராது, நாம் எடுக்கும் எந்த முயற்சியும் ஒரு கட்டத்துக்கு மேல் பலந்தராது. எப்படி பெரிய மாடியை கட்டினாலும் அத்திவாரம் சரியில்லாவிடடால் கவிழ்ந்து கொட்டிவிடும். எமது ஒற்றுமையினம், சகோதர சண்டைகள், பிரதேசவாதம் இவை எல்லாமுமே தமிழ் தேசியம் பற்றிய, தமிழர் அடையாளம் பற்றிய சரியான புரிதல் இல்லாமையாலேயே விளைகின்றன. 50,000 பேர் அதி உச்ச தியாகம் புரிந்த, திலீபன் போன்றவர்களை கொண்டிருந்த ஒரு போராட்டம் ஏன்கடைசியில் ஆட்களை வலு கட்டாயமாக பிடிக்கும் நிலைக்குப் போனது? தியாகம், நேர்மை, அற்புதமான தலைமை சகலதும் இருந்தும் நோக்கை அடைய முடியாமல் போனமைக்கு ஒரு சிலரை தவிர ஏனையோருக்கு சித்தாந்த தெளிவின்மையும் ஒரு பெரிய காரணி. ரஸ்யா, சைனா, வியடனாம் எங்கினும், சித்தாந்த வாதங்களுக்கு நேரம் ஒதுக்கிய, அதே சமயம் தனியே சித்தாந்தம் மட்டும் பேசாமல் செயலிலும் காட்டிய போராட்டங்களே வென்றுள்ளன.
  7. I இந்த கேள்விகளை நான் இங்கே முன் வைத்தமைக்கு ஒரு காரணம் இருக்கிறது. நாம் ஒரு பெரும் போராட்டத்தை தேசியத்தின் பால் நடத்தி இருப்பினும் உண்மையில் 1977 வரை தமிழ் தேசிய சிந்த்தனை தமிழர் மத்தியில் எழுச்சி பெறவில்லை என்பதே உண்மை. இத்தாலிய, பிரெஞ்சு, அரபிக், சிங்கள, தேசியங்கள் எல்லாம் வீறு கொண்டு எழுந்த்து பல காலத்தின் பின்பே தமிழ் தேசியம் தமிழர் மத்தியில் அதுவும் இலங்கையில் மட்டும் தளிர் விட்டது. ஆகவேதான் ஜின்ன்னாவுடன் பொன் ராமநாதனை ஒப்பிடலில் எனக்கு பெரிதும் உடன் பாடில்லை. ஆயுத போராட்டம் கூட முதலில், வன்முறைக்கு எதிரான எதிர்வினை, வர்க்க புரட்சி என்ற பல படிகளை தாண்டியே, திம்புவில் தமிழ் தேசியத்தில் மையம் கொள்கிறது. இதனாலேயோ என்னமோ -பிரபாகரன், பாலசிங்கம், போன்ற மிக சிலரைத்தவிர எம் அரசியல் தலைவர்கள் பலருக்கும் தமிழ் தேசியம் என்றால் மேடை ஏறி இனப்பெருமை பேசுவது, உரிமைக்காக குரல் கொடுப்பது என்பதுக்கு அப்பால் நகர முடியாமல் இருக்கிறது. யாழ் களத்தில் கூட இப்படி எழுதினால்- "பாரேன் இவர் எமக்கே வகுப்பெடுக்கிறார், நாம் போராட்டட்துக்கு எவ்வளவு செய்தோம்" என்பதாக எழுதுவார்கள். ஆனால் உண்மையில் நம்மில் எத்தனை பேர் இந்த கேள்விகளை நம்மை நாமே கேட்டு தெளிவாகியுள்ளோம்? இது இப்படி இருக்க "கிழக்கு தேசியம்" "அபிவிருத்தி சேர் தேசியம்" என்ற பதங்களுக்குள் எம்மக்கள் சிக்குண்டு போவதை நொந்து பலனேதும் இல்லை. மக்கள் ஒவ்வொரு மட்டத்திலும் தேசிய அரசியலுக்குள் ஈர்க்கபடவேண்டும், மாணவர்களை ஈர்க்க வேன்டும் என்பததெல்லாம் சரியே, ஆனால் முதலில் அத்திவாரம் ஒழுங்காக இருக்க வேண்டும். இந்த அத்திவாரம்தான் தமிழ் தேசியம் பற்றிய தெளிவான புரிதலும், வராலாற்று பற்றிய விஞ்ஞான பூர்வமான அணுகுமுறையும். இவையின்றி நாம் ஒரு அரசியல் சித்தாந்ததை கட்டி எழுப்பினால் அது மூன்று வகையான மக்களையே பிரசவிக்கும். 1. வெற்று இனப் பெருமை பேசும் மூடர்கள் 2. சந்தர்பவாதிகள் 3. ஒரு கட்டட்டுக்கு மேல் இது "முழுதும் பொய்" என முடிவு கட்டி பாதை மாறுபவர்கள் ஆகவேதான் இந்த அடிப்படை சித்தாந்த கேள்விகளுக்கு விடை சொல்லாமல்- ஒரு ஜனரஞ்சக (populist) அரசியலாக தமிழ் தேசிய அரசியலை முன்னெடுக்க முடியாது. ஆயுத போராட்டம் இருந்த காலத்தில் தமிழ் தேசியத்தை ஜனரஞ்ச வழியில் எவ்வளோ தூரம் கடத்தி வந்த போதும், அடுத்த 10 வருடட்தில், அங்கயனும், வியாழேந்திரனும் வெல்லும் நிலை வந்து, தமிழ் தேசிய அரசியலின் எதிர்காலமே கேள்வி குறியாகி நிற்கிறதென்றால் அதன் காரணம் யாது? சித்தாந்த தெளிவின்மையே. ஆகவே இந்த திரியில் சில கேள்விகளை கேட்டு, நானும் வாசிப்பவர்களும் விளக்கம் அடைய முடியுமா என பரீட்சிக்க விழைகிறேன். இனம் என்றால் என்ன? ஆங்கில ரேஸ் (race), எத்தினிசிட்டி (ethnicity), நேசன் (nation) என்ற மூன்று பதங்களும் தமிழில் இனம் என்றே அழைக்கப்படுகிறன. ஆங்கிலத்திலும் கூட இவற்றுக்கு பல அர்தங்கள் உண்டு. இப்போதைக்கு நேசன்,எத்னிசிட்டி என்ற பதங்களை விடுவோம். ரேசை (race) மட்டும் பார்ப்போம். பொதுவாக ஒரு ஐரொப்பியரை அல்லது அமெரிக்கரை கேட்டால் தாம் காக்கேசியன் (Caucasian) ரேஸ், ஆங்கில/ஜேர்மன்/பிரென்சு எத்னிசிட்டி என்பார்கள். நாம் எப்படி? உலகளாவிய தமிழர்களின் ரேஸ் என்ன? ரேஸ் என்ற பகுப்பு ஒரு உயிரியல் பகுப்பு அல்ல. அது ஒரு சமூக படைப்பு (social construct). மனித மரபணுவில் வேறுபட்ட இனங்களை பகுத்தரிய முடியாது என்கிறது இக்கட்டுரை. https://www.nationalgeographic.co.uk/history/2019/02/race-and-ethnicity-explained சரி இந்த ரேஸ் எனும் பகுப்பு ஒரு சமூக கட்டமைவாகவே இருக்கட்டும். அப்படியானாலும் காக்கசோயிட், நீக்ரோயிட், மொங்கலோயிட், ஒஸ்ரலோயிட் இதில் நாம் யார்? அல்லது நாம் இன்னொரு தனி ரேஸ்சா? பிகு: என்னடா இதுக்கும் தமிழ் தேசியத்துக்கும் என்ன தொடர்பு? என மண்டையை பிய்க வேண்டாம். நாம் ஒரு கட்டிடத்தின் அத்திவார செங்கல்லை பற்றி கதைக்கிறோம். மேலே உள்ள விதானத்தை பற்றி அல்ல என்பதை மறக்க வேண்டாம்.
  8. மூவரின் கருத்துக்கும் நன்றி. விரைவில் எனது கேள்விகளின் அவசியம் பற்றியும் அவற்றிற்கான விடைகளிம் அத்தியாவசியம் பற்றியும் விரிவாக எழுதுகிறேன்.
  9. பார்திபன் கனவு எங்கள் பார்திபனுக்கும் ஒரு கனவிருந்தது, அவன் மனதில் அனல் குடி இருந்தது. உறையூரான் கனவு சோழத்தை ஒட்டியது, எங்கள் ஊரெழுவான் கனவு ஈழத்தை பற்றியது. சோழப் பார்தீபன் கனவு வளர்த்தது வம்சத்தை, எங்கள் ஈழப் பார்தீபன் நகர்வு, சிதைத்தது பாரத வஞ்சத்தை. பழுவேட்டையர்கள் உடம்பு பல தழும்புகள் கொண்டதாம். போங்கடா போங்கள், எங்கள் பார்தீபன் உடம்பே தழும்பில்தான் இருந்தது. அவனுக்கு பொருத்தப் பட்டது ஆட்டு ஈரலாம். இருக்கட்டும், அவன் இதயம் வேங்கையினது. அவன் ஒரு சாரம் கட்டிய பொடியன். ஆனால், பாரதத்துக்கே காந்திய சாரம் புகட்டிய வலியன். மருத்துவனாய் வந்திருக்கவேண்டியவன், இனத்தின் ரணத்திற்கு தானே மருந்தாய் வந்தான். முடிவில் மருத்துவகல்விக்கு உடலை விருந்தாயும் தந்தான். தடை போடலாம் அவன் நிகழ்வுகளுக்கு, எம் மனதில் தினம் ஏந்தும் நினைவுகளுக்கு? பார்திபன் இன்னும் பசியோடுதான் இருக்கிறான். அவன் கனவும் ..... —கோஷான்—
  10. என்னடாப்பா யாழில் ஆமான திரி இது ஒன்றுதான் ஆனால் இது காத்து வாங்குது. தேசிய இனம் என்றால் என்ன? இனத் தேசியம் என்றால் என்ன? அதன் ஏற்று கொள்ளபட்ட வரையறைகள் என்ன? இந்த வரையறைகளின் படி தமிழ் தேசியம் என்றால் என்ன? இவற்றை பற்றியும் இந்த திரியில் ஆராய்ந்தால் நல்லம். பிகு: யாழின் ஒரு பண்பட்ட கருத்தாளருக்கும் எனக்கும் இடையில் நடந்த உரையாடலின் விளைவாக, இந்த கேள்விகளுக்கான விடையை ஒரு சீரான வகையில், விஞ்ஞான பூர்வமாக அணுக விரும்புகிறேன். உங்கள் எண்ணங்களை பகிருங்கள். யார் தமிழர்? தமிழ் தேசியம் என்பதன் வரையறை யாது? என்ற தெளிவு எமக்கு இருந்தால் மட்டுமே அதை நாம் அடுத்த தலைமுறைக்கும் கடத்த முடியும், என்பது என் தாழ்வான கருத்து.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.