Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Everything posted by goshan_che

  1. நாங்கள் இலங்கையில் வாழவே முடியாது. உயிராபத்து. இனவாத ஒடுக்கல். ஆமியும் கொடுமை. புலியும் ஆள்பிடிக்குது. என்று வெளிநாட்டில் வந்து கையை தூக்குவம். பிறகு ஒரு இருபது வருசம் வெளிநாட்டில் தும்படிச்சு காசை சேர்தபின், இரெட்டை குடியுரிமை யும் எடுத்து கொண்டு, அதே இனவாதம் கொஞ்சமும் மாறாத இலங்கையில் போய் நிண்டு… இதுவல்லவோ பூலோக சொர்க்கம் என்போம்.
  2. நன்றி பிரபா. உண்மையில் முதலில் அந்த முருகர்சாமி அண்ணை reference இல்லாமல்தான் எழுதினேன். ஆனால் வாசித்துப்பார்த்தால் ஒரே அழுகாச்சி காவியமாக இருந்தது. ஒரு இழையோடும் நகைச்சுவையும் வேண்டும், வாசகரை ஒரு கணம் திசை திருப்பி விட்டு மீண்டும் கதைக்கு இழுத்து வரவும் வேண்டும். என்ன செய்யலாம் என நினைத்த போது இந்த தேவையை பூர்த்தி செய்ய வாசகருக்கு பரிச்சயமான ஒரு நபரை உள்வாங்கலாம் என முடிவு செய்தேன். அப்படி உள்ளே வந்தவர்தான் முருகர்சாமி அண்ணை.
  3. நான் இதை பணம், மனம் என பார்க்கவில்லை. நிகழ்ந்த இழப்புக்கு ஈடு அவசியம். விபத்துக்களின் பின் விழைவுகள் நீண்ட நாளின் பின்பும் தெரிவது உண்டு. அப்போ யோசித்து பயனில்லை அல்லவா? வேலையிட முகசுழிப்பு வரும் என்பது உண்மைதான். ஆனால் முதலாளியாக நான் இருந்தால், இப்படி இழப்பீடு கேட்கும் தொழிலாளியை முகம் சுழிக்கமாட்டேன். நல்லவேளை காப்புறுதி இருக்கிறது, அவர்கள் கட்டட்டும், இந்த மனிதருக்கும் போதிய ஈடு கிடைக்கட்டும் என்றே இருப்பேன். 👆🏼இதுதான் நல்ல மனம் என நினைக்கிறேன். அடுத்த வருடம் எனது பிறிமியம் கூடும்தான். ஆனால் அதுதான் தொழில் முனைவதன் ரிஸ்க்.
  4. ஓ….அவருக்கு இப்படி ஒரு காரணப்பெயரும் இருக்கா🤣
  5. சிறி அண்ணாக்கு வெள்ளி கிழமை எண்டால், கந்தையா அண்ணைக்கு சனி கிழமை 🤣. கு.சா அண்ணை நாள் பார்க்கும் மூட நம்பிக்கைகள் இல்லாதவர்🤣.
  6. பின்னர் இருவரும் கண்ணைனை உலகை சுற்றி பார்க்க அனுபினார்களாம். கண்ணன் பார்த்து விட்டு வந்து சொன்னானாம்… “உலகம் பூரா செம பிகருகளாய் கிடக்குது ஓய்”🤣
  7. சிறி அண்ணா, எனக்கு ஜேர்மன் சட்டம் பற்றி அறவே தெரியாது. ஆனால் ஒரு தொழில் நிறுவனத்தின் employers liability, மற்றும் உழைப்பாளர் நலன் பேணும் health and safety regulations எல்லா மேற்கு நாடுகளிலும் ஓரளவு ஒத்த மாதிரியே இருக்கும். வெளிப்பார்வைக்கு தற்செயல்/விபத்து என தெரியும் ஒரு விடயம் ஒரு நிறுவனத்தின் அல்லது மனிதரின் கவன குறைவால் அல்லது செயல் குறைபட்டால் நிகழ்ந்துள்ளது என்பதை அதை தீர விசாரிக்கும் போதுதான் புலப்படும். உதாரணமாக ஒரு வாகன விபத்து. உங்கள் வாகனத்தை இன்னொரு நிறுவன வாகனம் முட்டி விட்டது. இருவரிலும் பிழை இல்லை அல்லது இருவரிலும் 50% பிழை. ஆனால் ஆழமாக ஆராயும் போது அந்த நிறுவனம் காசை மிச்சம் பிடிக்க ரயரை மாற்றவில்லை. புதிய ரயராக இருந்தால் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும் என தெரிய வருகிறது. இப்போ விபத்துக்கான பொறுப்புகூறல் (liability) கிட்டதட்ட முழுக்க நிறுவனத்திடம் போய்விடும். இப்படி பல உதாரணங்கள். கருவிகள் ஒழுங்காக பராமரித்தல், கையாள்பவருக்கு போதிய பயிற்ச்சி, பயிற்சியின் வருடாந்த தொடர்ச்சி, ரென்சன் பார்ட்டியை இந்த தொழிலில் தொடர்ந்து வைத்திருந்தது சரியா? இப்படி பலதை ஆராய்ந்த பின்னே, இது உங்கள் நிறுவனத்தின் கவன குறைவால் நடக்கவில்லை என அறுதியாக கூறமுடியும். ஆகவே குறைந்த பட்சம் ஒரு no win no fees சட்ட ஆலோசகரையாவது அல்லது union இருந்தால் அவர்களையாவது நாடலாம் என நான் நினைக்கிறேன். இதனால் உங்களுக்கு இழப்பீடு மட்டும் அல்ல, இதே பிழை தொடர்ந்து மேலும் விபத்து வருவதும் தடுக்கப்படலாம். இப்படியான வழக்குகளுக்கு ஒரு limitation period இருக்கும். செய்வதாயின் அதற்குள் செய்ய வேண்டும். யோசிக்கவும்🙏🏾.
  8. ஒண்டும் தப்பா எழுதவில்லை தெய்வமே…கதைக்கு கொஞ்சம் ஜனரஞ்சகத்தை கூட்ட ஒரு சுவாரஸ்யமான மனிதர் தேவைப்பட்டார்…அவ்வளவே….🙏🏾
  9. Slingshot என்பது சரியே. Catapult உம் ஆங்கில வார்த்தைதான்.
  10. 🤣 பாவம் எண்டு ஒரு கெளரவபாத்திரம் கொடுத்த என்னைதான் வையணும்🤣
  11. நன்றி அண்ணா. நீங்கள் சொல்வது போல் கஞ்சல்கள் வயிற்றில் சேர்ந்தாலும், மனதில் சேர்ந்தாலும் ஆபத்துத்தான். முதலில் கஞ்சலை உள் எடுப்பதை குறைக்க வேண்டும் அல்லது ஆபத்து நெருங்கும் அறிகுறி தெரிந்ததும் ஆவது உதவியை எடுக்க வேண்டும்.
  12. இதை விட வேறு என்ன அதிகமாக சொல்ல முடியும். கதையை வாசித்து இதை பகிர வேண்டும் என நினைத்ததையே கதையின் வெற்றியாக கொள்கிறேன்🙏🏾. நன்றி. சியாமளனின் இந்த படத்தை பார்த்துப்போட்டு இரெண்டு நாள் பேயறைந்தது போல் இருந்திருக்கிறேன். என்னை ஊக்க்கப்படுத்த சொல்லுகிறீர்கள் என புரிந்தாலும், மூன்றாம் பிறை, Sixth Sense என வித்யாசமான படக்கதைகளை இணைத்து கதைப்பதே சந்தோசமாக உள்ளது🙏🏾.
  13. பாகம் IV ஐ தவிர்த்து பாகம் III இருந்து நேரடியாக பாகம் V ஐ வாசிக்கவும். பாகம் V ஹைபோகிளைசீமியா ஒரு பொல்லாத விசயம். சாதாரணமாக இருப்பது போல் இருக்கும், ஆனால் உணவையும் மருந்தையும் கிரமமாக எடுக்காது போனால் குருதியில் குளுகோசின் அளவு திடீரென்று, ஹிடின்பேர்க்கின் அறிக்கைக்கு பின்னான அதானியின் நிகர மதிப்பு போல கிடுகிடு என இறங்க தொடங்கி விடும். உடல் வியர்க்கும், நடுங்கும், கடும் கோபம் வரும், ஏன் ஆக ரத்த குளுகோசின் அளவு குறைந்தால் கொலை வெறி கூட வரும். இன்னும் குறைந்தால் கோமாக்கு கொண்டுபோய் ஆளின் கதையையே முடித்து விடும். இதை எல்லாம் தவிர்க்கவேண்டும் என்றுதான் அவன் கோப்பி கடைக்குள் நுழைகிறான். ஆனால் அவனின் லக் அப்படி, கோப்பி கடையில் ஒரு கூட்டம் சனமாக இருந்தது. அந்த நெரிசலில் நிற்க தலையை சுத்தி கொண்டு வந்தது அவனுக்கு. பிரித்தானியரில் என்ன கெட்ட பழக்கம் இருந்தாலும் வரிசையில் நிற்கும் ஒரு நல்ல பழக்கம் இருக்கிறது. ஆனால் இப்போ அந்த நல்ல பழக்கமே அவனுக்கு எமனாக வந்து விடும் போல் இருந்தது. ஒரு வழியாக வரிசையில் முன்னுக்கு நின்றவனிடம் தன் நிலையை சொல்லி, அனுமதி பெற்று இரெண்டு சீனி தூவிய டோநட்களையும் ஒரு கோக் கானையும் வாங்கி கொண்டு மேசையில் போய் அமர்ந்தான் அவன். கோக் குடியாதேங்கோ எண்டு சொல்லுறது இதுக்குத்தான். குளுகோஸ் தண்ணிக்கு அடுத்து ரத்தத்தில் சீனியின் அளவை உடனடியாக கூட்ட கோக்கை விட்டால் வேறு பானம் இல்லை. ….இதைதான் வருத்தம் ஏதும் இல்லாத பிள்ளையள் கூட வாங்கி குடிக்குதுகள். பின்ன ஏன் டயபிடிஸ் வராது….. நினைத்தபடியே…கோக் கானை “டொப்” என மூடி உடைத்து பருக தொடங்கினான் அவன். கோப்பி கடையில் கல்லாவில் நின்றவனை நினைக்க நினைக்க அவனுக்கு கோவம் பற்றி கொண்டு வந்தது. என்ன அசிரத்தை இது? ஏதோ இலவசமாக தருவது போல் இருந்தது அவனின் பாவனையும் நடந்து கொண்ட முறையும். முந்தி எல்லாம் இந்த நாட்டில் இப்படி இல்லை. முன்பு யூகேயில் கஸ்டமர் சேர்விஸ் நன்றாக இருக்கும். இப்போ?…பச்…. அவனை பார்த்தால் உக்ரேன் காரன் போல இருந்ததது. உக்ரேன்காரர் உக்கல் சனம், நிறவெறி பிடித்தவர் என யாழ்களத்தில் முருகர்சாமி அண்ணை எழுதியது ஏனோ அவனுக்கு நியாபகம் வந்தது. கிட்டதட்ட ஒரு இருபது நிமிடம் ஆகி இருக்கும். கோக் கான் முக்கால்வாசி தீர்ந்து விட்டிருந்தது. ஆனாலும் ஓடர் பண்ணிய டோநட்டை இன்னும் காணவில்லை. “ஹலோ ஆம் ஐ கெட்டிங் மை டோ நட் டுடே, ஓர் டுமோரோ”? கொஞ்சம் சத்தமாகவே உக்ரேன்காரனை டோநட் இன்றா அல்லது நாளையா கிடைக்கும்? கேட்டான் அவன். ஆனால் அந்த உக்ரேனியனோ (முடிவே கட்டிவிட்டான்) கோப்பி மெசின் அருகில் எதையும் கேளாதவன் போல் நின்று எதையோ கழுவிக்கொண்டிருந்தான். திடீரென திரும்பி பார்த்தால் அந்த உக்ரேனியன் அவனை நோக்கி ஒரு பெரிய கத்தியோடு ஓடி வந்து கொண்டிருந்தான்…….. கண்களில் நிறவெறி ஜொலி ஜொலித்தது…….. ”என்ர பிள்ளையாரே, முருகர்சாமி அண்ணை உவங்களை உக்கல் எண்டு சொன்னது சரிதான்” என ஒரு கணம் அவன் திகைத்து நின்றாலும்……. மறுகணமே அவனின் உடலில் அதிரீனலீனின் “தப்பியோடு அல்லது சண்டையிடு” பொறிமுறை வேலை செய்ய தொடங்கி இருந்தது. உக்ரேனியன் கொண்டு வரும் கத்தியோ பெரிது…வேறு வழியில்லை, ஒரு நல்ல கனமான மரக்கதிரையை தூக்கி கொண்டு அந்த உக்ரேனியனை நோக்கி பாய்ந்தான் அவன். —————————————— அப்போதுதான் டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் பிலிப்ஸ், அவனின் பிரான்சில் இருந்து வருவிக்கபட்டிருந்த தம்பிக்கும், டாக்டர் பிரணவணுக்கும் சீசீடிவி படங்களை போட்டு காட்டி முடித்திருந்தார். தம்பிக்கு ஏதோ விளங்கியது போலவும் இருந்தது ஆனால் விளங்காதது போலவும் இருந்தது. கேள்வி குறியோடு டாக்டரின் முகத்தை பார்த்தான் தம்பி. மொழி பிரச்சனையை விளங்கி கொண்ட டாக்டர், ”ஐ வில் எக்ஸ்பிளைன் டு ஹிம் இன் ஹிஸ் ஓன் லாங்குவேஜ்”…….. என பிலிப்சுக்கு சொல்லியபடி தம்பியிடம் தனது புலம்பெயர் கொச்சை தமிழில் பேச தொடங்கினார். சீசீடிவி பார்தனிங்கள்தானே…சும்மா டோநட் எடுத்து கொண்டிருந்த அவர போட்டு நல்லா அடிச்சு வச்சிருக்கிறார். இதுக்கு ஒரு ரீசனும் இல்லை. பொலிஸ் அன் புரொவோக்ட் அட்டாக் எண்டு சொல்லினம்….. அதுக்கு முதல் மூண்டு அவர்ஸ் காரில இருந்து…போனில கதைச்சிருக்கிறார்…. ஆனால் போனை செக் பண்ணி பார்த்தா அந்த மூண்டு அவர்ஸ்சும் எந்த ஒரு கோலும் கூட வரலேல்ல உங்கட அண்ணாக்கு…. அதுமாரி….சில மாசமா…. ஒவ்வொரு நாள் காலமையிலும், பின்னேரமும் ஒப்பசிட்டா இருக்கிறா ஸ்கூல் வாசலில் வந்து நிண்டிருக்கிறார்….. ஆனா நாங்கள் செக் பண்ணி பார்த்தா உங்கட அண்ணாக்கு பிள்ளையோ, வைவ்வோ கூட இல்லை. எல்லாம் சேர்த்து பார்த்தா எனக்கு இது ஒரு மனசு சரியில்லாத வருத்தம் எண்டுதான் விளங்குது…. இத நான், தொடர்ந்து வெளிநாட்டில தனியாவே இருந்ததால வந்த ஒரு மெண்டல் ஹெல்த் பிரச்சனை என சஸ்பெட்க் பண்ணுறன்…. அதால… உங்கட அண்ணையை செக்சன் பண்ணுற முடிவை எடுக்கப்போறம்…. செக்சன் எண்டால்…? புரியாதவனாக கேட்டான் தம்பி. செக்சன் எண்டால்…. வந்த வருத்தம் மாறும் வரைக்கும் அவரை ஒரு சைகியாடிரிக் கொஸ்பிடலை தடுத்து வச்சிருப்பம். உங்களுக்கு விருப்பம் இல்லாட்டி நீங்கள் அப்பீல் பண்ணலாம். நாளைக்கு ஒரு இண்டர்பிரிட்டரை வச்சு எல்லாத்தையும் வடிவா சொல்லுறன். அவன் இப்போதைக்கு வெளியில் வர வாய்ப்பில்லை என்பதை முடிந்தளவு தன்மையாக சொன்னார் டாக்டர் பிரணவன். என்ன செய்தாலும்….. அண்ணையை பழையபடி மாத்தி தாங்கோ டொக்டர்…. எங்களை எல்லாம் வெளிநாட்டுக்கு எடுத்து ஆளாக்கினது அவர்தான்…. கண்ணீர் புரண்டோட…கை கூப்பினான் அவனின் தம்பி. அப்ப கூட்டத்தை முடிக்கலாம்…… என்ற தோரணையில்……. கையை திருப்பி….. மணிக்கூட்டை வெறித்துப்பார்த்தார் இன்ஸ்பெக்டர் பிலிப்ஸ். (யாவும் கற்பனை) முற்றும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரபா. ஐந்தாம் பாகம் பற்றிய பார்வையையும் எழுதுங்கள்.🙏🏾 நன்றி சுவை அண்ணா. இப்ப எழுதியதை வாசிதால் சேது விக்ரம் நியாபகம் வருவாரோ?😀
  14. நான் நம்புகிறேன். Stigma வை தவிர்ப்பதே அடிப்படைகாரணம் அதனால் அதை தெரிந்தோரை விலத்துகிறனர் என நினைக்கிறேன்.
  15. நன்றி அண்ணா. பாகம் V இன் முடிவு எப்படி இருக்கும் என அறிய நானும் ஆவலலாய்த்தான் உள்ளேன்🤣. நான் எட்டியதும் எழுதி விடுகிறேன். உங்கள் கருத்தை பார்த்த பின் ஒரு முரட்டு முடிவாககவே வைக்கலாம் என நினைக்கிறேன். ஐடியாவுக்கு நன்றி.
  16. நன்றி அண்ணா. இது நோயின் அறிகுறியா? தனக்கு நோய் இல்லை என்று நிறுவிவிட வேண்டும் என்ற அந்தரிப்பா? பச்சை நன்றியீனமா? முடிவு வாசகர் மனதில். நன்றி அண்ணா. கெத்தா இரெண்டு கிளைமாக்ஸ் என அறிவித்து விட்டேன். இப்ப இரெண்டாவது கொஞ்சம் சின்னபிள்ளைதனமான முடிவாக தெரியுது. பாப்பம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இருக்கலாம். 3ம் பாகத்தில் இருந்து கற்பனையே என்பதை கவனத்தில் கொள்க. நன்றி வருகைக்கும் கருத்துக்கும். ஓம்…இவ்வாறானதொரு மறதி பிரச்சனையாகவும் இருக்கலாம். கதையின் எல்லா சம்பவங்களும் நிஜம் அல்ல.
  17. முன் குறிப்பு பாகம் IV ம் V ம் இக்கதையின் இரு வேறுபட்ட முடிவுகள் (கிளைமாக்ஸ்). ———————————————— பாகம் IV இன்று ஒரு மிக முக்கியமான நாள். அவனுக்கும் இவனுக்குமான அந்த சம்பாசணை நிகழ்ந்து கிட்டத்தட்ட பதின்மூன்று மாதங்கள் உருண்டோடி விட்டிருந்தன. அதன் பின் வைத்திய நண்பனின் ஆலோசனையின் பெயரில் அவன் இவனுடன் தொடர்பு ஏற்படுத்துவதை அறவே தவிர்த்து விட்டிருந்தான். பதின்மூன்று மாதங்கள் முன்னதாக நடந்த அன்றைய சம்பாசணையின் போது இவனுக்கு… நீ கட்டாயம் ஒரு சைக்கியாடிரிஸ்டை பார்க்க வேண்டும் மச்சான்…. உடல் காயம் போலத்தான், மனக்காயமும். இரெண்டுக்கும் ஒரு அளவுக்கு மேல் மருந்து அவசியம்….. என தயங்கி, தயங்கி அவன் சொல்லி இருந்தான். இவனும் கூட சற்றே மனம் நிதானப்பட்ட ஒரு நிமிடத்தில்… நீ சொல்றது சரிதான் மச்சான்…. எனக்கு ஏதோ பிசகீட்டுது எண்டு விளங்குது…கெதியா காட்டோணும்…மருந்து எடுக்கோணும்…. இல்லாட்டில் முழு விசராக்கிப்போடும்… என சொல்லியும் இருந்தான். ஆனால் அடுத்த நொடியே, போரிஸ், ஏலியன், மனைவி என வேதாளம் மீண்டும் மரத்தில் ஏறிவிட்டது. இதை எல்லாம் கருத்தில் எடுத்த வைத்திய நண்பன் அவனுக்கும், இவனுக்கும் மட்டுமான உறவை மட்டும் அல்ல, இத்தனை மாதகாலமும் இவனுக்கும் அவனின் வட்டத்தில் மனைவியை தவிர மிகுதி அனைவருக்குமான தொடர்புகள் அனைத்தையும் துண்டித்தே சிகிச்சையை தொடர்ந்தான். இந்த ஏற்பாட்டின் பலனாக, தன்னையும், மனைவியையும், வைத்தியரையும் தவிர வேறு எவருக்கும் இந்த பிரச்சனையின் ஆழம் தெரியாது என்ற நம்பிக்கையோடு இத்தனை மாதகாலமாக இவனும் தொடர்ந்து சிகிச்சையை எடுத்து வந்தான். இவனோடு தொடர்பில் இல்லாதபோதும் வைத்திய நண்பனோடும், திருமதி இவனோடும் அவன் தொடர்பில் இருந்து, இவனுக்கு வழங்கப்படும் மருந்துகள், சிகிச்சைகள் பற்றி முழுவதுமாக அறிந்தே இருந்தான். நேற்று வைத்திய நண்பன் பேசும் போது இவன் கிட்டதட்ட முழுவதுமாக தேறி விட்டான் எனவும். அன்றைய சம்பாசணையை பற்றி இவனுக்கு அதிகம் நியாபகம் இல்லை எனவும். அதை பற்றி கதைப்பதை தவிர்த்து, வழமை போல் உரையாடலை தொடரும் படியும் அவனுக்கு கூறி இருந்தான். இதோ…நெஞ்சம் நிறைந்த படபடப்போடு அவன் மொபலை எடுத்து இவனின் வாட்சப் நம்பரை அழுத்த தயாராகி விட்டான்……. அழைப்பை எடுக்க முதல், வைத்திய நண்பன் கடைசியாக சொன்னதை மீண்டும் ஒரு முறை அவன் நினைவு படுத்தி கொண்டான். மச்சான்…மறந்தும் வாயை விட்டுடாதயடா…இவனுக்கு தனக்கு வந்த பிரச்சனை எவ்வளவு பெரிசு…தான் என்ன குழிசையள் எடுத்தது…இனியும் என்ன குழிசையள் எடுக்க வேணும்…எல்லாம் வடிவா தெரியுமடா. ஆனால் இவனை பொறுத்தவரை…இது எதுவும் உனக்கு தெரியாது…அதை நீ மறந்துடாத… ——————————— இவனுடனான தொலைபேசி அழைப்பு நினைத்தததை விட சகஜமாகவே போய் கொண்டிருந்தது. ஆனால் உறவு முன்னர் போல் அந்நியோனியமாக இல்லை என்பதாக அவனுக்கு தோன்றியது. தொடர்பு விட்டு போனமைக்கு பரஸ்பரம் மன்னிப்புகள், குடும்பத்தினர் நலம் விசாரிப்புகள் என வழமையான விடயங்கள் பேசித்தீர்ந்த பின் உருவான அந்த அசெளகரியமான நிசப்தத்தை கலைத்து கொண்டு…இவன் தானாகவே பேசினான். மச்சான்…அண்டைக்கு நான் கதைக்கேக்க கொஞ்சம் அப்செட்டா இருந்தனாண்டா… ஒரு சின்ன ஸ்டிரெஸ்…நித்திரை கொண்டு எழும்பினதும் அது சரியாப் போச்சு…. என்ன சொல்வது என தெரியாத அவன்…ம்ம்…என்று சொல்லி விட்டு இதை எப்படி கையாள்வது என யோசித்து கொண்டிருக்கும் போதே…இவன் தொடர்ந்தான்…. நல்ல காலம் மச்சான்…. உண்ட பேய் கதையை கேட்டு நான் டொக்டரிட்ட போய் இருந்தா என்னை பைத்தியம் எண்டே முடிவு கட்டி இருப்பாங்கள்…. இனிமேலாவது கண்டதையிம் வாசிச்சு போட்டு…அட்வைஸ் பண்ணுறன் பேர்வழி எண்டு மற்றவனுக்கு விசர்பட்டம் கட்டாத மச்சான்……. அதிர்ச்சியில் இருந்து இன்னமும் மீளாத அவன்…கதையை மேலும் வளர்க்க விரும்பாதவனாக…… ம்……ம்…ம் கொட்டினான். #stigma #கேடிசூழ் #கறை #வடு (யாவும் கற்பனை) பாகம் IV முற்றும்.
  18. நன்றி அண்ணாக்கள். மூன்றாம் பாகமும் அடுத்தனவவும் யாவும் கற்பனைதான். 🤣
  19. பாகம் III அவனின் காருக்குள் மூச்சுக்காற்று புகாராகி, கண்ணாடியிலும் பதிந்து ஒரு திரைச்சீலை போல் ஆகி இருந்தது. அநேகமாக மூன்று அல்லது மூன்றரை மணி நேரம் அவன் இப்படி காரில் இருந்தபடியே பேசி கொண்டிருந்திருக்க வேண்டும். எஞ்சினை ஆன்பண்ணி புகார் நீக்கியை தட்டி விடவோ, அல்லது கண்ணாடியை இறக்கி விடவோ கூட அவனுக்குத் தோணவில்லை. பேச்சின் பொருள் அத்தகையது. காரினை ஸ்டார் செய்தபோது வெளியே வெப்பநிலை -2 எனக்காட்டியது டாஷ்போர்ட். ஆனால் அவனின் உடலோ தெப்பமாக வியர்வையில் நனைந்திருந்தது. இவனுடன் போனில் கதைத்து கொண்டே வேலைக்கு இன்று அவசர லீவு என ஒரு இமெயிலை தட்டிவிட்டிருந்தான் அவன். இனி இந்த நாள் முழுவதும் அவனுக்கு ஓய்வுதான். வேலையில் இருந்து போனிலும், இமெயிலிலும் நொய் நொய் என்று யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள். இவன் போனில் சொன்னதை முதல் ஐந்து நிமிடம் வரை கூட அவன் பகிடி என்றே நினைத்தான். தன்னை ஏலியன்கள் பிந்தொடர்வதாயும். பெப்ரவரி 2023 இல் தன்னை கடத்திப் போக அவர்கள் திட்டமிட்டிருப்பதாயும். தனது மனைவியை பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் காதலிப்பதாயும். அவளை கவர திட்டமிடுவதாயும். பொரிசும் ஒரு ஏலியன் என்றும் இவன் சொல்ல, சொல்லத்தான், அவனுக்கு கொஞ்சம், கொஞ்சமாக இது வழமையான பிராங்க் இல்லை என்பது புரிய தொடங்கி இருந்தது. படி… பொரிஸ் வாண்ட்ஸ் டு டேக் ஹேர் ப்ரொம் மீ படி… பிளீஸ் ஹெல்ப் மீ… ஐ ஒன்லி ஹாவ் யூ… என தன் ஆருயிர் நண்பன் உடைந்து அழுத போது…..அவனுக்கு முள்ளம் தண்டில் உள்ளிருக்கும் முன்ணானின் அடியில் இருந்து, மூளை வரை, சில்லிட்டது போல ஒரு உணர்வு பரவியது. ஒரு வழியாக இவனை சமாதானப்படுத்தி போனை வைத்து விட்டு, கொழும்பில் பெயர் போன இன்னொரு மன நல வைத்தியர் நண்பனுக்கு போன் பண்ணி, விபரம் சொல்லி, அவனை உடனடியாக இவன் வீட்டுக்கே போய் வைத்தியம் பார்க்கும் ஏற்பாட்டை செய்து விட்டு அதை இவனின் மனைவிக்கும் எடுத்து சொல்லி ஒருவழியாக இந்த பிரச்சனையின் தீர்வை நோக்கி ஒரு அடியை எடுத்து வைத்தபோதுதான்…. சுகர் வருத்தகாரனான அவன் நேற்று முன்னிரவில் இருந்து எதையும் சாப்பிடவில்லை என்பதும்….ஹைபோ கிளைசீமியா எனும் ரத்தத்தில் குளுகோசின் அளவு குறையும் நிலைக்கான அறிகுறிகள் அவனில் தோன்ற ஆரம்பித்துள்ளமையையும் அவன் அவதானித்தான். ஆன் செய்த வாகனத்தை அப்படியே ஆப் செய்து விட்டு…டெஸ்கோவில் இருக்கும் கோஸ்டா கோப்பிக்கடை நோக்கி நடக்கத்தொடங்கினான் அவன். தொடரும்…. (யாவும் கற்பனை)
  20. 🤣 மூளாயோ? மந்திகையோ? நன்றி நுணா. நன்றி அண்ணா. இந்த டெக்னிக்கை வைத்துத்தானே மாதர் குலத்தையே மடக்கி வைத்துள்ளார்கள் டெலி டிராமா காரர்கள்🤣
  21. 🤣. வாசிச்சி முடிய நீங்கள் எங்கையோ🤣 அது மட்டும் செய்யவே மாட்டமே. வேணும் எண்டால், ஏலாக்கட்டம் எண்டால் air fryer சுவிட்சை போட்டு விடலாம் 🤣. சரி பாஸ் “முடிஞ்சதும் அறிவிக்கிறன்”🤣 நன்றி நிழலி
  22. ப்ரோ…நிண்டு வாசிச்சு கருத்து சொல்லுங்கோ ப்ரோ 😂
  23. பாகம் II அவனுக்கும் இவனுக்குமான நட்பு அலாதியானது. வாழ்க்கைமுறை, சமயம், பிரதேசம், தெரிவுப்பாடங்கள் என பலதிலும் வேறுபட்டிருந்தாலும் தமிழும், கவிதையும், நாடகமும், புத்தகங்களும் அந்த இடைவெளியை இட்டு நிரப்பி, மேலதிகமாகவும் ஒரு பிணைப்பை ஏற்படுத்த போதுமாயிருந்தன. இருவரும் கிண்டல் அடிப்பதில் ஆளை ஆள் சளைத்தவர்கள் இல்லை என்பது மேலும் அவர்கள் நட்பை எப்போதும் கலகலப்பான உறவாக வைத்திருந்தது. இவனின் மெசேஜை பார்த்ததில் இருந்து, அவனுக்கு கொஞ்சம் கலக்கலாமகவே இருந்தது. அவர்களுக்கு இடையில் இப்படியான pranks செய்வதும் வழமைதான். அதுபோல் இதுவும் இவனின் குழப்படிகளில் ஒன்றாக இருக்கலாம். போன கிழமை கூட வாட்சப்பில் மாவீரர் நாளுக்கு இவன் எழுதியதை வாசித்து விட்டு, அவன் ஒரு தெரியாத நம்பரில் இருந்து கோல் எடுத்து சிங்களத்தில் “மாத்தையா டக்சி ஓடர் பண்ணீர்கள், வீட்டுக்கு வெள்ளை வான் ஒன்று அனுப்பவா” என கேட்டு கலாய்திருந்தான். இதுவும் அதுக்கான இவனின் பதிலடியாக இருக்கலாம். ஆனால் அவனின் உள்ளுணர்வு இது ஏதோ வேறு பிசகு என கூறியது. பரவாயில்லை இன்றைக்கு வேர்க் புரொம் ஹோம்தான், நல்ல வேளையாக வேலை போனையும் கையோடு எடுத்து வந்தது வசதியாக போய்விட்டது. வேர்க் புரொம் ஹோம் என்றாலே வேலையை தவிர மிச்சம் எல்லாம் செய்யும் நாள் என்பது எழுதப்படாத சட்டம் ஆகி விட்ட நாட்டில் அவன் மட்டும் என்ன விதி விலக்கா? கார் கழுவுவது, உடுப்பு தோய்ப்பது, ஆருக்கும் சம்பளம் வாங்காமல் அட்வைஸ் கொடுப்பது, யாழிலும் வட்சாப்பிலும் உழட்டுவது, இடைக்கிடையே, முதலாளி பாவம் எண்டு கொஞ்சம் வேலையும் செய்வது. இதுதான் அவனின் இந்த வேர்க் புரொம் ஹோம் நாட்களின் ரூட்டின். ஆகவே அருகில் இருக்கும் டெஸ்கோவில் காரை விட்டு விட்டு என்ன எண்டு கேட்போம் என நினைத்தவாறே காரை டெஸ்கோ கார்பார்க்குக்குள் விரட்டினான் அவன். என்ன மச்சான் ஓகேயா? அவனின் கேள்விக்கு பதில் வர தாமதித்தது…. மச்சான்…டேய்…என்னடா மெசேஜ் போட்டிருந்தாய்…என்ன ஏர்ஜெண்ட் மட்டர்? தொண்டையை கனத்தபடி இவன் பேசத்தொடங்கினான்….. ஐ’ ம் குட் படி. ஐ டு ஹாவ் எ குவஸ்யன் போர் யூ…. டேய் லூஸ் விளையாட்டு விளாடாத…வேலை கடுப்பில நிக்கிறன் பிறகு அடிக்கிறன்…. நோ..நோ…லிசின் மேட்… ஐயம் சீரியஸ் எபவுட் திஸ்… அட்சரம் பிசகாத லண்டன் உழைக்கும் வர்க்க ஆங்கில உச்சரிப்பில்…. தன் பிரச்சனையை எடுத்து சொல்ல ஆரம்பித்து இருந்தான்…. வாழ்வில் என்றுமே இங்கிலாந்துக்கு வந்தே இராத, பிரித்தானியாவுடன் எந்தவித பரிச்சயமும் இல்லாத இவன். (தொடரும்) (யாவும் கற்பனை அல்ல) ——————————————-
  24. நன்றி அண்ணா. 🤣 அடுத்த ஆக்கத்துக்கு ஐடியா தந்தமைக்கு நன்றி. தலைப்பு கூட தயார்…. ஒரு முறிந்த பேனா முனகுகிறது🤣 மம்மி டாடி எல்லாம் லண்டனில்தானே லிவிங்ஸ்டன்🤣. மை பிரதர் மார்க் வா ஆல்சோ. இப்ப பாருங்கோ….. அடுத்த அத்தியாயத்தில் “அவன்” அசகாய சூரன் எண்டு பில்டப்ப கொடுத்து என் கெத்த காட்டுறன்🤣.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.