Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. 2005க்கு பின்னான வன்னி நிலமைகள் (கல்யாணம் செய்து வைத்தல்) நீங்கள் சொல்வதை போல இருந்தாலும் அதை மட்டும் வைத்து 30 வருட கால போராட்டத்தை எடை போட முடியாது. ஆனால் போராட்டம் மக்கள் மயப்படவில்லை என்பதை நான் ஏற்கிறேன். 83-86 இல் போராட தயராக ஆயிரகணக்கில் ஆட்கள் இருந்தார்கள். புலிகள் கடும் கேள்விகளுக்கு பின்பே ஆட்களை தேர்ந்து இயக்கத்தில் சேர்த்தார்கள். ஆனால் பின்னாட்களில் அது அவர்களே பாஸ் நடைமுறை கொண்டு வரும் அளவுக்கு, அதன் பின் இன்னும் கட்டாய ஆட் சேர்புக்கு போகும் அளவுக்கு மாறி விட்டிருந்தது. இங்கே என்ன பிரச்சனை என்றால் ஒரு இலட்சிய வேட்கை கொண்ட தலைமை, அதே அளவு வேட்கை இல்லாத மக்களை வழி நடத்தியதுதான். அதற்காக மக்களை முழுதாக பிழை சொல்ல முடியாது. 30 வருடமாக பல இன்னல்களை தாண்டி போராட்டம் மக்கள் ஆதரவு இன்றி நிலைக்கவில்லை. போருக்கு பின்னும் கூட தேர்தல்களில் மக்கள் மாற்றி யோசிக்க 10 வருடம் எடுத்தது. ஆனால் மக்களால் ஒரு அளவுக்கு மேல் முடியவில்லை. எமது மக்கள் ஆப்கானிகள் அல்ல. முடிவில்லாமல் நீளும் யுத்தம், நிச்சயம் இதில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்றே யோசிக்க வைத்தது. நிச்சயமாக இதை கணிக்க தவறியது பிழைதான். இனி நாம் யாரும் படை திரட்ட போவது இல்லை. போராடவும் போவது இல்லை. ஆனால் இதில் ஒரு பெரிய பாடம் இருக்கிறது. முன்பு யாழில் சிலர் எழுதினார்கள், பலஸ்தீனம் போல் ஊரில் ஒரு இண்டிபாடா கிளர்சியை செய்யலாம் என. நிச்சயம் அதற்கு மக்கள் ஆதரவு தரப்போவதில்லை. போராடுவதற்குரிய சுந்தந்திர சூழல் ஒரு போதும் தமிழருக்கு இலங்கையில் இருந்ததில்லை. ஆனால் அதற்கும் மேலாக இப்போ மக்கள் ஆக கூடியது P2P, தூபி இடிப்பை எதிர்த்தல், காணாமல் போனோர் போராட்டம் இந்தளவு போராடத்தான் தயார். ஆகவே எமது மக்களிடம் அதிகம் தியாகங்களை இனியும் எதிர்பார்க்காமல், உரிமைக்கான அரசியலை எப்படி முன்னெடுப்பது என்பதையே சிந்திக்க வேண்டும்.
  2. இதை ஏற்று கொள்கிறேன். இதை மேலே சொல்லி உள்ளேன். ஆகவேதான் எல்லாரையும் ஒரு அணியில், ஒரு தலைமையின் கீழ் திரட்டுவது சாத்தியமில்லை என உணர்ந்து ஒரு பொது கூட்டை அமைத்தல் நாம் கற்கும் பாடமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். இப்போ பாருங்கள் - எந்த கட்சியில் இருந்தாலும் முஸ்லிம் அரசியல்வாதிகள், தம் இனத்தின் நலன், வளப்பகிர்வு சார்ந்து ஒத்த நிலைப்பாட்டுக்கு வருவார்கள். கல்முனை விசயம் நல்ல உதாரணம். அங்கே முஸ்லிம்கள் ஒரு தரப்புத்தான். அத்தனை பேரும் ஒருவரை ஒருவர் தாக்காமல் தமது கூட்டு நிலைப்பாட்டை முந்தள்ளுவர். ஆனால் தமிழரில் சந்திரகாந்தன், வியாழேந்திரன், முரளிதரன், விக்னேஸ்வரன், கூட்டமைப்பு, சைக்கிள்…ஆளை ஆள் பழி போடுவது, ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு அணுகுமுறை. ஆகவே எந்த அணியில் இருந்தாலும் சில அடிப்படை கொள்கைகளில் சமரசம் இல்லை என்ற ஒரு பொது கூட்டு நிலையை நாம் அடைவது அவசியம். யுத்தகாலத்தில் இருந்தது போல் இப்போ இல்லை. உதாரணமாக அப்போ புலிகள் தனிநாட்டு கோரிக்கையிலும், ஈபிடிபி அதற்கு நேரெதிர் கோரிக்கையிலும் இருந்தார்கள். ஆகவே பொதுவில் உடன்படுவது விட்டு கொடுப்புகள் இல்லாமல் கடினம். ஆனால் இப்போ எல்லாரும் இலங்கைக்குள்தான் தீர்வு கேட்கிறார்கள். எனவே இது இப்போ இலகுவாக இருக்க வேண்டும்.
  3. ஆரம்பகாலத்தில் இயக்கங்களை தடை செய்ததில், கையாண்ட முறையில் புலிகள் தவறு செய்தார்கள் என்பது உண்மையே. ஆனால் அந்த பிழைகளில் இருந்து அவர்கள் பாடம் படித்தார்கள் என்றும் படுகிறது. அவர்கள் கூட்டமைப்பு என்ற ஒற்றை புள்ளியில் பல முன்னாள் எதிரிகளை உள்வாங்கியது - அவர்கள் பாடம் படித்தார்கள் என்பதை காட்டுவதாகவே நான் கருதுகிறேன். தமிழர்கள் ஓரளவுக்கேனும் ஒரு கூட்டு பிரக்ஞையுடன் செயல்பட்ட காலம் என்றால் கூட்டமைப்பு புலிகளின் வழிகாட்டலுக்கு போனதில் இருந்து 2009 வரைதான். ஆனால் ஒரு கை மட்டும் தட்டி ஓசை எழாது. கடைசி வரை அவர்களால் புளொட்டையோ, ஈபிடிபியையோ, தமவிபுவையோ ஓரணியில் முடியாவிட்டாலும், ஒத்த அரசியல் கோரிக்கையின் கீழாவது கொண்டு வர இயலவில்லை. இது இயலாமல் போனதுக்கு புலிகள் ஒரு காரணம்தான். ஆனால் அதே அளவு காரணம் இந்த இயக்கங்களின் தலைமைகள் மீதும் உண்டு. இவர்களுக்கு தமிழ் இனத்துக்கு ஒரு தீர்வு வர வேண்டும் என்பதை விட, புலிகள் அழிந்தொழிய வேண்டும் என்பதே முக்கியமாக இருந்தது. இதில் கற்க கூடிய பாடங்கள் என்ன? புலிகள் காலத்தில் தமிழர் பொதுக் கூட்டு 75% தான் சாத்தியமானது. மிகுதி 25% சாத்தியம் ஆகாமல் ஏன் போனது? முஸ்லீம் அரசியல்வாதிகள், சிங்கள அரசியல்வாதிகள் எந்த கட்சியாயினும் இனம் சம்பந்த பட்டு ஓரணியில் திரள்வது போல் நம்மால் ஏன் திரள முடியவில்லை? தனியே சுயநலம் மட்டும் இதன் காரணம் இல்லை. எல்லா இனத்திலும் அரசியல்வாதிகள் சுய நலமிகள்தான். இந்த கேள்விகளுக்கு விடை காணும் போது 100% க்கு அண்மித்த ஒரு தமிழ் பொது கூட்டை கொள்கை அளவில் ஸ்தாபிக்க கூடியதாக வரக்கூடும்.
  4. தரப்படுத்தல் - என் பார்வை தரப்படுத்தல் ஒரு சிக்கலான விடயம். ஆனால் இதை தமிழர் தரப்பு கையாண்ட முறையில் பல பாடங்களை படிக்க முடியும். தரப்படுத்தல் மட்டும் அல்ல, நிர்வாக சேவையில், இராணுவத்தில், பொலிசில் இப்படி பல இடங்களில் தமிழர்கள் அளவு குறைக்கப்பட வேண்டும் என்ற நீண்ட கால உள்நோக்கம் சிங்கள பொது கூட்டுக்கு இருந்தது. அநகாரிக தர்மபால போன்றோர் ஆங்கிலேய ஆட்சி காலத்திலேயே இதை பற்றி பேச தொடங்கி விட்டார்கள். ஒரு காலத்தில் இருந்த தரப்படுத்தலுக்கும் இப்போ இருக்கும் தரப்படுத்தலுக்கும் பல வேறுபாடுகள் இருப்பினும் அடிப்படை ஒன்றுதான். இந்தியாவில் தரப்படுத்தல் சாதிவாரி இட ஒதுக்கீடு என்று உள்ளது. அது பிராமணர்கள் காலாகாலமாக பெற்ற அவர்கள் எண்ணிக்கைக்கு அதிகமான இடங்களை சுதந்திரத்தின் பின் ஏனைய சாதிகளுக்கு பிரித்து கொடுக்கிறது. இலங்கையில் அதுவே மாவட்ட ரீதியாக இருக்கிறது. இதில் இந்தியாவில் ஏழை பிராமணன் பாதிக்கபடுகிறான். அதே போல் யாழ் மாவட்டத்தில் வருவதால், யாழ்-வன்னியின் எல்லையில் செம்பியன்பற்றில் வாழும் ஒரு ஏழை மாணவனும் பாதிக்க படுகிறான். ஆனால் தரப்படுத்தலை உதவி அரசாங்க அதிபர் மட்டத்தில் செய்தால் - அது மேலும் குளறுபடி, களவுகளுக்கே வழி கோலும் (வாழ் நாள் முழுவதும் யாழில் படித்து விட்டு, ஓ எல், ஏ எல் சோதனையை மட்டும் மன்னாரில் எடுப்பது போல்). நாம் யாரும் இந்திய பிராமணர்கள் இல்லை. எனவே 1947 இல் இருந்த பிராமண ஆதிக்கத்தை சமன் செய்ய ஏற்படுத்தபட்ட இட ஒதுக்கீட்டை நாம் பக்க சார்பின்றி அணுகுவதால் - அதன் நியாயம் எமக்கு இலகுவில் புரிகிறது. ஆனால் இதே போல குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும் மிக அதிகமான வளமான பதவிகளில், இடங்களில்தான் 1948இல் நாம் இருந்தோம். இங்கே தமிழர் என்று பொதுவாக கூறினாலும் அது யாழ் தமிழரையே சேரும். சிறுபான்மை ஒன்று, தனது எண்ணிக்கைக்கு பலமடக்கு விகிதாசரத்தில் கூடிய பெரும்பான்மை இடங்களை, பதவிகளை, வளங்களை அனுபவிப்பது என்பது ஒரு நியாயமான நிலை அல்ல. இதை சமன் செய்ய இந்தியாவில், தென்னாபிரிக்காவில் எங்கும் இந்த கோட்டா முறை நடைமுறையில் உள்ளது. 1948 இல் இலங்கை ஒரு ஒற்றையாட்சி நாடு என்ற தத்துவத்தை எமது அரசியல் தலைமைகள் ஏற்று கொண்ட பின் (அதன் காரணங்களை பின்பு ஆராயலாம்) ஒன்று பட்ட இலங்கைக்குள் யாழ் தமிழர் தொடர்ந்தும் தம் எண்ணிக்கைக்கு அதிகமான அளவில் கல்வியில், ஏனையவற்றில் தொடர்ந்தும் கோலோச்ச முடியும் என எதிர்பார்த்தது நடைமுறை சாத்தியம் இல்லாதது. இதை நிச்சயமாக சிங்கள பொதுக்கூட்டு இனவாத கண்ணோட்டத்தில்தான் முன்னெடுத்தது. ஆனால் இதன் பின்னால் உள்ள நியாயத்தையும், இதை தடுக்க முடியாது என்பதையும் எமது தலைமைகள் கண்டு கொள்ள தவறி விட்டன. தமிழ் தலைமகள் எப்போதும் proactive ஆக எதையும் செய்வது அரிது. ஒரு விடயத்தில் நாம் proactive ஆக செயல்படும் போது, அந்த விடயத்தின் agenda setting ஐ நாம் ஓரளவுக்கு கட்டுப்படுத்தலாம். ஆனால் நாம் எப்போதும் சிங்கள பொதுகூட்டு ஒரு விடயத்தை செய்த பின் react பண்ணுவதே வழமை. அப்போ அவர்கள் போட்ட அஜெண்டாவில்தான் விடயம் நகரும். தரப்படுத்தலில் பல நல்ல விடயங்கள் யாழ் அல்லாத தமிழருக்கு நடந்தது. இப்போ ஒவ்வொரு வருடமும் மட்டகளப்பில் ஓ எல் சோதனை செய்த 10 மாணவர்கள் டொக்டர் ஆகிறார்கள். இதை தரப்படுத்தலுக்கு முன்னான நிலையுடன் ஒப்பிடுங்கள். அது மட்டும் அல்ல மருத்துவராக தேவைப்படும் புள்ளிகள் அடிப்படையில் ஒரு காலத்தில் மிக இலகு என்ற நிலையில் இருந்த மட்டகளப்பு இப்போ, யாழ், கொழும்பு, காலிக்கு நிகராக வந்து விட்டது. உலகெங்கும் கோட்டா சிஸ்டம் அடைய விழைவது இந்த பெறுபேறைத்தான். கொழும்பின் நிலைக்கு மட்டகளப்பை உயர்த்துவது அல்லது உயர்த்த முனைவது. இந்த யதார்தத்தை புரிந்து கொண்டு, முடிந்தளவு எமது பங்கை உறுதி செய்யும் திரை மறைவு நகர்வுகள் எதையும் எம் தலைவர்கள் செய்யவில்லை. இந்த தவிர்க முடியாத யதார்த்தை எமது மக்களுக்கு புரியவைக்கவில்லை. அதிலும் கொஞ்சம் நியாயம் இருக்கிறது என்று பேசவே இல்லை. சரி இந்த வாய்புகளை இழந்தால், வேறு வகையில் இவற்றை ஈடு செய்ய முடியுமா என சிந்திக்கவில்லை. சரி இதை எப்படி அணுகி இருக்கலாம்? இப்போ இருப்பதை போல், 30 ஆண்டுகால போரின் பிந்திய நிலை அல்ல அன்று. போர்கால சமநிலையும் அன்று இல்லை. அன்றைய தமிழ் தலைவர்கள் அரசோடு டீல் போட பெரிய தடைகள் ஏதும் இருக்கவில்லை. தேவைபடும் போது போட்டார்கள். ஆனால் பண்டா-செல்வா, டட்லி-செல்வா என்று பெரும் எடுப்பில் ஒப்பந்தம் போட்டால் அதை இனவாதிகள் கிழிக்க வைப்பார்கள் என்பதை ஊகித்து, திரைமறைவில் சில டீல்களை போட்டிருக்கலாம். பின்னாளில் தொண்டைமானும், அஷ்ரப்பும் இதைதான் செய்து காட்டினார்கள். ஆனால் நாம் செய்தது முழுக்க முழுக்க வோட்டரசியல். உணர்சிப் பேச்சு. இரத்தப்பொட்டு, வட்டுக்கோட்டை தீர்மானம். இதை கூட உண்மையாக செய்யவில்லை என்பதுதான் ஆக பெரிய கொடுமை. தனி நாடு சாத்தியமோ இல்லையோ தலைவர் அதற்கு முழு மனதோடு தன்னை அர்பணித்து போராடினார். ஆனால் இவர்களுக்கு தனிநாட்டை எப்படி அடைவது என்ற ஐடியாவே இல்லை. வெறும் வாயால் வடை மட்டுமே சுட்டார்கள். தனிநாட்டுக்கு ஒரு துரும்பைதானும் தூக்கி போடவும் இல்லை. முழுக்க முழுக்க வோட்டு அரசியல் மட்டுமே குறி. கற்ற பாடங்கள் என நான் காண்பன 1. சிங்களவர்கள், முஸ்லீம்கள் போல் எமக்கும் ஒரு பொதுகூட்டு தேவை (இப்போ இது இல்லை). 2. நாம் proactive அரசியல் செய்யவில்லை. இனி செய்ய வேண்டும். 3. வரலாற்றின் போக்குக்கு குறுக்கே நின்று ஒரு சிறுபான்மை அணை கட்ட முடியாது. 4. எமது அரசியல் மக்கள் நலன் சார்ந்து, எடுக்கும் கொள்கை முடிவுகளுக்கு உண்மையாக இருக்க வேண்டும். மக்களுக்கு உள்ளதை உள்ளபடி கூறல் வேண்டும். உணர்சி வசப்படுத்தல் அறவே ஆகாது. 5. சிங்கள தலைவர்களோடு டீல் பேசும் போது இரெண்டு விடயங்களை கருத வேண்டும். அ. நாம் அவர்களுக்கு எதையாவது கொடுக்க வேண்டும் - வாக்குகள், மாலை மரியாதை -எதுவாகிலும். ஆ. பெரிய எடுப்பில் ஒப்பந்தம் போட்டால் அதை சிங்களவர்கள் குழப்பி அடிப்பது நிச்சயம். ஆகவே தொண்டா பிரஜா உரிமை விடயத்தில் சாதித்தது போல, அஷ்ரப் ஒலுவில் துறைமுகம் இதர திட்டங்களில் சாதித்தது போல ஒரு அணுகுமுறை தேவை. 6. இந்த அணுகுமுறையை தமிழ் தேசிய அரசியல்வாதிகள், அரசாங்கத்தில் சேராமலே செய்ய வேண்டும். பொறுப்பான எதிர்கட்சியாக எல்லாம் அவர்கள் செயல்பட தேவை இல்லை. தமிழ் தேசிய அரசியலை நீர்த்து விடாமல் பேணுவது அதே சமயம் மக்கள் நலனின் பால்பட்டு சில டீல் களை செய்வது. இவர்கள் இந்த அணுகுமுறையை எடுக்க தவறினால் அந்த வெற்றிடத்தை இன்னும் பல அங்கஜன்கள் நிரப்புவார்கள். பிகு: இந்த பாடங்கள் போருக்கு பிந்தியவர்களுக்கே, போர்காலத்தில் இருந்த சமநிலை வேறு.
  5. அண்மையில் இருட்டிய பின் வீட்டுக்கு வெளியால ஒரு 10 நிமிசம் சாறத்தோட வாக் போனான். திண்ணையிலும் எழுதினேன். ஒரு மாதிரி அசூசையாகதான் இருந்தது. எப்படா வீட்ட போவம் எண்டமாரி. இனி போவதாக இல்லை. ஆனால் குமாரசாமி அண்ணை போல் எனக்கு இதை ஏன் நாம் இப்படி பார்கிறோம் என புரியவில்லை. எமக்குத்தான் இது வீட்டுடுப்பு - ஊரில் பலருக்கு இது நிரந்தர உடைதானே?
  6. 🤣. இந்த புளித்த மாவு ஜெயமோகன் போன்ற சு. சாமி, மன்னிகவும் ஆசாமிகளை கொண்டாடதவர் எல்லாம் உங்கள் பார்வையில் ஆசாரவாதிகள்தானே🤣. ஆகவே அதை நான் மனமாற ஏற்கிறேன் 👨‍🎓. ஆனால் எனக்கு மீனாவோ, குறைந்தபட்சம் ஐஸ்வர்யாவோ கூட கிடைக்க கூடாது என்பதால் நீங்கள் என்னை பெரிய எஜமானாக ஏற்க தயங்குவது நியாயம் இல்லை. இன்னுமொரு சக பெரிய எஜமான் என்றவகையில் நாம் ஒற்றுமையாக ஒண்ணுக்கு இருப்பது அவசியம். அது சரி இந்த கார்டியன் படிக்கும் கரவெட்டி கால்மாக்ஸ் இனத்தூய்மைவாதிகளோடு சேர்ந்து பிரெக்சிற்றுக்கு போட்டாரமே? அவர் ஆசாட பூபதி இல்லையா🤣.
  7. நான் கிராண்ட் மாஸ்டர் என்பதால் என்னை நானே பெரிய எஜமான் என்றே அழைத்து கொள்கிறேன்🤣. சாதா எஜமானுக்கே காலடி மண்ணை எடுத்து பொட்டு வைப்பார்கள், பெரிய எஜமானுக்கு எந்த அடியில் எடுப்பார்கள் என்பதை யோசிக்க கொஞ்சம் கலக்கமாக இருப்பதும் உண்மை🤣.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.