Everything posted by goshan_che
-
மெய்தீண்டாக் காதல்........!
கருத்தான கவிதை அண்ணை. மெய்நிகர் காதல் மலிந்து விட்ட உலகில் மெய்தீண்டா காதல் கவிதையிலாவது வாழ்கிறதே. சிறப்பு🙏🏾.
-
காக்கா நரிக் கதை #I ain’t playin - ஒரு நிமிடக்கதை
காக்கா நரிக் கதை I ain’t playin பொறுப்பு துறப்பு கதைமாந்தர்கள், சம்பவங்கள் யாரையும் குறிப்பன அல்ல. கதை சொல்லி, தானே தன் வாழ்க்கையில் நரியாகவும், காக்காவாகவும் இருந்துள்ளார், இருக்கிறார், இருப்பார் என்பதை ஏற்று கொள்கிறார். ——————-//////————//////——————— நரிக்கு மனம் பக்…பக்… என்று அடித்துக்கொண்டது. இன்னும் ஒரு அரை வினாடி மட்டும்தான்…. பாடுகிறேன் பேர்வழி என்று இந்த அண்டங்காக்காய் மட்டும் வாயை திறக்கட்டும்… வடையை ஒரே லபக்கில் முழுங்கி விட வேண்டியதுதான். இந்த ஒரு வடைக்காக எத்தனை பாடு? எத்தனை பிரயத்தனம்? எத்தனை அவமானம்? காகத்தின் இந்த கர்ணகடூர ஓசையை கூட இசை என்று பொய்யாக புகழும் படி ஆயிற்றே…. அதுவெல்லாம் கூட பரவாயில்லை, என் சுயத்தை மறைத்து, நல்லவன் போல அல்லவா நடிக்கும் படி ஆயிற்று ? எத்தனை பெரிய ஒறுப்பு அது? பாட வாய் எடுத்தது போல் இருந்த காகத்தின் வாயில் நரியின் ஒட்டு மொத்த கவனமும் குவிந்திருந்தது. ஆனால் காகமோ பாடுவதாகக் காணோம். கால்களில் வடையை பற்றி கொண்டு, தலையை ஸ்லோமோசனில் இடமும், வலமுமாக திருப்பியது. இடையிடையே கண்களை திறந்து மூடிக்கொண்டது. பிறகு தலையை கீழே குனிந்து வடையை சில நிமிடங்கள் வெறித்துப் பார்த்து கொண்டிருந்தது. நரிக்கு இருப்பு கொள்ளவில்லை. வடை எல்லாம் பெரிய மேட்டரே இல்லை. சொல்லப்போனால் நரிக்கு வடை மேல் அதிக இஸ்டம் கூட இல்லை. இந்த காகத்தோடு வீணடித்த நேரத்தை, ஒரு ஆட்டு மந்தையில் செலவழித்திருந்தால் ஒரு கறி விருந்தேசாப்பிட்டு இருக்கலாம். ஆனால் அதுவல்ல முக்கியம். இது ஒரு விளையாட்டு, காகத்தின் வடையை கவர வேண்டும். அவ்வளவுதான். இந்த காகத்தை ஏமாற்றி விட்டேன் என என் சக நரிகளுக்கு நிரூபிக்க வேண்டும். அனைவர் முன்னிலையிலும் காகத்தை கேலிக்குள்ளாக்க வேண்டும். முக்கியமாக காகத்துக்கு ஒன்றும் தெரியாது என்று நிறுவ வேண்டும். அப்போதான் காகம் சொல்வது எதையும் இனி இந்த காடு நம்பாது. நரி சொல்லே மந்திரம் என இந்த காடு கட்டுப்படவேண்டும். அதற்கு என்ன தியாகமும் செய்யலாம். காகம் இப்போ பாடத்தயாராவது போல தெரிகிறது. ஆனால் வடையோ இன்னமும் காகத்தின்கால்களில்டையேதான் சிக்கிகொண்டுள்ளது. என்னது ஒரு அற்ப காகம் நம்மை விட குறுக்குப்புத்தி உடையதாக இருக்குமோ? நரிக்கு சந்தேம் சற்றே எட்டிப்பார்க்க தொடங்கியிருந்தது. காகம் மெதுவாக குனிந்து வடையை வாயில் கவ்வி…. தொப் … என்று நரியின் முகத்தில் விட்டெறிந்தது…. காகம் பாட மட்டும் இல்லை, நரியோடு பேசக்கூட செய்யவில்லை. பறந்தே போயிற்று.
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
https://pdf.tnrecruitment.in/2021/01/vandhargal-vendrargal-by-madhan.html?m=1 வந்தார்கள் வென்றார்கள் என்ற மொகாலயர் பற்றிய புத்தகம் இங்கே. எங்காவது புத்தக கடை போனால் ஹாய் மதன் கேள்வி பதில் வாங்கி வாசியுங்கள். மேலே சொன்ன பாணியில் நகைச்சுவை+தரவு+சமூக சிந்தனை சேர்த்து எழுதி இருப்பார்.
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
இதெல்லாம் எம்மாத்திரம் நான் சுற்றுலாவை ஒரு இராணுவ நடவடிக்கை போல் திட்டமிடுவேன் தெரியுமா🤣. வேலையை ரிலாக்ஸ்டாகவும், சுற்றுலாவை வேலை போல் ஸ்டிரிக்டாகவும் செய்வேன் என வீட்டில் அலுத்துக்கொள்வார்கள்🤣
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
அருமையான ஆக்கம் @தமிழ் சிறி அண்ணா. வாசிக்க எழுத்தாளர் மதனின் சாயல் அடித்தது. பெடியனிட்ட எனக்கு ஒரே கேள்விதான்….. ஜேர்மனியில் கிடைக்கும் அதே சம்பளம், உறவுகள், நட்புகள் எல்லாம் அப்படியே கிடைக்கும் என்றால், அவரின் தெரிவு ஜேர்மனியா? இலங்கையா?
- திரும்பும் வரலாறு!
- 4E9D387F-5E36-4DA1-BAE2-2ACEA5586A61.jpeg
- 46C059C1-E1ED-4471-9D83-D630538DCFE2.jpeg
- FD86CEF6-C189-4489-8D21-D03540D3185D.webp
- 4968154F-B038-4C7F-AA19-2D58CB9A409C.jpeg
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஆ எந்தா மோனே ஓணாண்டி சுகந்தன்னே… ஈ பெண்குட்டி முக்தி நன்னாயிட்டு இருக்குமோ ?🤣. பிகு சும்மா திண்ணையில்லாவது வந்து குதியன் போட்ட்டால் குறைஞ்சா போவியள்🤣
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கனகாலமாக யாழில் குதியன் குத்தும் எங்கள் குல கொழுந்து @பாலபத்ர ஓணாண்டியை காணவில்லை. இந்த வீடியோவாவது இழுத்து வரட்டும்🤣.
- 68310E6B-1245-4216-98E1-E6FE6E543465.jpeg
- B40E393B-3162-4AB0-B1CC-96D92EEB2C18.jpeg
- 67C1F1ED-A2F2-4DE1-8CD0-EDD8C6C4707B.jpeg
- 39B7BECB-AF43-4C38-8EB0-9401321273AF.jpeg
- 043D91E8-DA46-4D13-96E9-495FEA378087.jpeg
- B55426AD-4AEB-48F2-8EB5-E30D10F07358.jpeg
- 831BEECA-10E8-4680-8E15-8949AA69CCA3.jpeg
- 65226057-D7E7-4A11-9B10-195337EAF92F.jpeg
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
பார்க்க இந்தி நடிகர் மாரி இருந்தா அது சாத்ஸ்தான்🤣
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
நிச்சயமாக.
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
சிறி அண்ணாவை விட பாவம் பயந்தாங்கொள்ளி நான்🤣. பொலிஸ் வேணும் என்று ஒவ்வொரு திசையில் திருப்பி, கடைசியில் லெப்ட் சிக்னல் போட்டு, ரைட் டேர்ன் அடித்து இவர்தான் குற்றவாளி என ஒருவரை காட்டுவார்கள் என நான் நினைக்கிறேன். அவர் என் கணிப்பில் குற்றவாளியாக இருக்க் சந்தப்பம் குறைவு.
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
அந்த செய்தியை பரப்பியவருக்கு மட்டுமா விசாரணை அல்லது நம்பிய @satan க்கும் சேர்த்தா?
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
ஷாப்டரின் உதவியாளர் போய் மயான ஊழியர்களை அழைத்து அவர்கள் உதவியுடந்தான் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்களாம். ஆகவே இவர்கள் இருவரும் கிளியர் என நினைக்கிறேன். ஆதரவு இல்லை என்பதால் - பணத்துக்காக இவர்கள் செய்தார்கள் எண்டும் கேசை முடிக்க கூடும்.