Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. சிங்கப்பூர் ஏர்லைன்சில் போவாரே பெரியார் அஃதிலார் சீர்கெட்டு சிங்கியடிப்பார். கட்டாரை கற்றாரே காமுறுவர். எத்திக்கு போனாலும் கத்தே பசிபிக்கில் போ. ஏர்இந்தியா, சிறிலங்கன், பிஐஏ, பீமன் நான்கும் இழுக்கா இயன்றது நற்பயணம். குவைத் எர்வேஸ், சவுதியா “குடி” நாசம். பெயரை நம்பி, சுவிஸ் ஏர்வேசில் ஏறாதே. எதையும் நம்பி பிரிட்டிஸ் ஏர்வேசில் ஏறாதே. குவாண்டசில் போனால் குபேரனும் குசேலனாவான். #நம்முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை🤣
  2. அந்த நாய்க்கு என்ன நடந்தது ஐயா🤣 எனது பயண கட்டுரையில் எழுதி இருந்தேன் இந்த நாய்க்கடிக்கு பயந்து 500 மீட்டர் பயணங்களை கூட ஆட்டோவில் செய்யும் அவல நிலைக்கு ஆளாகினேன்🤣.
  3. இன்றைய குறுக்கெழுத்து போட்டி மேலிருந்து கீழ் இடமிருந்து வலம் ஒரே பதில்தான் 🤣 உ க் ரே ன் க் ரே ன் ஆனால் டிரம் மூலம் ஆளுவது புட்டினும் மஸ்கும்🤣
  4. இல்லை. Fact டு, செக்கிடு👇 https://www.reuters.com/fact-check/us-contributes-16-nato-annual-budget-not-two-thirds-2024-05-31/#:~:text=VERDICT,about our fact-checking work. நேட்டோவின் செலவில் 16% சதவீதம்தான் அமெரிக்காவினது. நீங்கள் சொல்லும் 60% - ஒட்டு மொத்த அமெரிக்க பாதுகாப்பு பஜெட்டையும் நேட்டோவிற்கான செலவு என பொய்யான கணக்கு காட்டும் - சோசல் மீடியா உருட்டு. —— நேட்டோ உடைந்தால் முதல் பாதிப்பு கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு. அடுத்த பாதிப்பு அமெரிக்காவுக்குத்தான். அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் உள்ளே ஒரே வித்தியாசம் - இராணுவ பலம். அமெரிக்காவின் இராணுவ பலமே அதன் பொருளாதார பலத்தின் அச்சாணி. நேட்டோவை உடைப்பது இந்த அச்சாணியை உடைப்பற்குச் சமன். 🤣 இனி எங்களை Dads Army என உள்ளூரில் சென்ரி பார்க்கும் வேலைக்குத்தான் எடுப்பார்கள். ஆனால் எமக்கு அடுத்த தலைமுறை பெரும் பாடு பட வேண்டி வரலாம்.
  5. புட்டின் சொன்னதை டிரெம்ப் செய்கிறார். போன முறை பைடன் வெல்லும் போதே யாழில் எழுதியதுதான். கிரீன்லாந்து - டென்மார்க்-ஈயூ, கனடா - நடப்பு அரசின் மீது குறைபாடு - பிரித்தானியா…. நேட்டோவை சல்லி சல்லியாக உடைப்பதே புட்டின் டிரம்புக்கு கொடுத்துள்ள அசைண்ட்மெண்ட். இந்த மூன்றையிம் செய்யா விடிலும் இதன் மூலம் நேட்டோவை ஆட்டம் காண வைப்பார்.
  6. அரசில் ஒரு பொழையும் இல்லை… பொலிசாரில் தான் முழு பிழையும்🤣 நான் சொல்லல🤣
  7. பால் காவடி புஷ்ப காவடி பன்னீர் காவடி மனமுருகி தூக்குகின்றோம் அனுர காவடி🤣
  8. ஆளுக்கு ஐயாயிரம் படி பொலிசாரின் பொக்கெட்டுக்குள் காசை தவற விட வேண்டும்🤣
  9. சும்மா போங்க அங்கால…உப்பிடித்தான் ஒரு தைபொங்கலுக்கு வெடி சுட, படுத்த பாய்க்கும் சொல்லாமல் மேற்குக்கு ஓடி வந்ததனான்… மறுபடியும் பொங்கலா…🤣🤣🤣 நிச்சயமாக. ஆனால் ஒரு வழியா பல இடங்களில் துரத்தி போட்டாங்கள். அண்மையில் சாகோஸ் தீவுகள். ஆனால் அவுஸ், நியூசி விழுங்கினது விழுங்கினதுதான்.
  10. நிச்சயமாக. ஐரோப்பாவில் நிலம் விழுங்கி ரஸ்யா போல் ஆசியாவில் நிலம் விழுங்கி சீனா. இந்தியா ஒரு பேப்பர்-புலி என்பதால் திபெத்தை சீனா லபக்கியது மட்டும் அல்லாமல் வளங்களை உறிஞ்சுகிறது. திபத்தினை சீன மயமாக்கலின் அடுத்த கட்டம் இது. எத்தனை தேசிய இனங்களை விழுங்கிய கட்டமைப்பு சீனா என்பதை இந்த மேப் விளக்கும்.
  11. யாழ்கள விண்ணர்களுக்கு மட்டும் அல்ல, தினக்குரலுக்கும் கூகிள் டிரான்சிலேட்டர்தான் துணை போல கிடக்கு…. Rich and highly diverse environment என்பதை தான் “பணக்கார மற்றும் மிகவும் வேறுபட்ட” என எழுதியுள்ளார்கள் என நினைக்கிறேன். செழிப்பானதும், மிகுந்த பன்முகதன்மை உடையதுமான என்பது பொருந்தும் என நினைக்கிறேன்.
  12. மிக முக்கியமான அறிவுப்புகள். தானும் தின்னான் நாய்க்கும் கொடான் என்பது ஈழத்தமிழரோடு பிறந்த குணம். தாமும் உருப்படியாக எதுவும் செய்யமாட்டார்கள். செய்பவர் மீதும் வசை பாடுவார்கள். இந்த அறிவிப்புகள் மூலம் சிந்துவெளியில் இருந்தது தொல் தமிழர் நாகரிகமே என்பதை குறிப்பாக அந்த எழுத்தை படிக்க முடிந்தால், தென்னிந்திய மொழிகளுக்கு தாய் மட்டும் அல்ல, இந்திய மொழிகளிலும் முந்தையது தொல்தமிழே என்பதை நிறுவ முடியும். ஒரு ஈழத்தமிழனான நன்றியும் வாழ்த்துக்களும் முதல்வர் ஸ்டாலினுக்கு.
  13. கொய்யால….உயிரோட இருந்த மனுசனை வெட்டி கொலை செய்யவில்லை எண்டு சந்தோசப்படுப்பா🤣
  14. 2025 இல் யாருக்கு ஏழரை ஆரம்பம்? கால்தடம் போடும் கண்டகச்சனி ! அடிக்கடி தொல்லைதரும் அர்ஷடாமத்த சனி ! அலைச்சல் தரப்போகும் அஷ்டமத்துச்சனி! இப்படி அநேக பகீர் தலையங்கள் இருந்தாலும்…. ஏழரை முடிவு - கூரையை பிய்ய்து கொண்டு கொடுக்கப்போகும் சனிபகவான் போன்றனவும் உள்ளன. Conditioning …. யாழில் சிலருக்கு சாதி….சிலருக்கு சனி🤣
  15. 👆👇 உங்களுக்கும் பச்சை இட்டவருக்கும் - பதில் முன்பே எழுதப்பட்டு விட்டது.
  16. ஆயிரம் ஆண்டுகாலமாக சாதியால் ஒதுக்கப்பட்டவன் - தனக்கென அடையாள அரசியல் செய்ய ஒரு கட்சியை ஸ்தாபிப்பது வேறு. தனக்கு ஒருவர் மீது தனிப்பட்ட பகை என்பதால் அவரின் சாதியை இழுத்து கதைப்பது வேறு. இரெண்டுக்குமான வித்தியாசம் ஒருவருக்கு புரியவில்லை என்றால் - unconscious bias அதாவது இச்சையின்றிய சார்பு-வாதம் போல, இச்சையின்றிய சாதியவாதத்தால் அவர்கள் அவதிபடுகிறார்களோ என நான் அஞ்சுவதுண்டு.
  17. நாறப்பயல்…. யார் மீதும் எப்படியும் விமர்சனம் வைக்கலாம்… ஆனா இப்படி சாதியை இழுத்து பேசுபவர்களுக்கு நாக்கிலேயே சூடு வைக்க வேண்டும்.
  18. ஒரு வழியா நாலு நாள் கழிச்சு அண்ணனும் போராட வந்திருக்கார்… வந்த கையோட பொலிஸ் வானில் ஏறி போய் விட்டார்🤣. நேற்றே ஆனந்து உட்பட விஜை கட்சியினர் பலர் போராடி கைதாகினர், இதை பார்த்து விட்டு எங்காத்து காரரும் கோர்ட்டுக்கு போறார் என போராட வந்துள்ளார் அண்ணன்🤣. இந்த விடயத்தில் விஜை கூட சுணக்கம்தான். அண்ணாமலை கோமாளித்தனம். எடப்பாடி தெளிவாக போராடுகிறார்.
  19. நான் எழுதியதை மீள வாசிக்கவும்😎. அண்ணாமலை என்ற பிராடை (பிஜேபி) நம்பிய விசுகு அண்ணைமேல் நம்பிக்கை போய்விட்டது என எழுதியுள்ளேன். பிகு ஆதி திராவிடர் என்பது ஒரு குறித்த தாழ்த்தப்பட்ட சாதியி குழுவின் பெயர். நீங்கள் திராவிட கட்சிகள் என்பதை இதனோடு போட்டு குழப்பி கொள்கிறீர்கள் என நினைக்கிறேன். நான் எந்த திராவிட கட்சியின் ஆதரவாளனும் இல்லை. ஆனால் பெரியார் முன்வைத்த கொள்கைகள் மீது ஆர்வம் உண்டு.
  20. ஆயிரம் கோடி இந்திய ரூபாய் என்றால் 93 மில்லியன் பவுன்ஸ் அல்லவா? அவ்வளவு பெரிய தொகையாக தெரியவில்லையே? அதாவது சராசரியாக 2 கோடியில் ஒரு சின்ன பட்ஜெட் படம் எடுக்கலாம்? அதாவது 186,000 பவுண்ஸ். நான் கணக்கு பிழை விடுகிறேனோ?
  21. ஏன்….முன்பு கொழும்பில் சப்பாத்து பொலிஷ் போடும் தொழில் இருந்தது… சாப்பாடு வீட்டில் கட்டி எடுத்து போய் வேலையிடத்தில் கொடுக்கும் தொழில் இருந்தது… இலண்டனில் பஸ் கண்டக்டர் தொழில் இருந்தது, கரிசுரங்கத்தொழில் இருந்தது… பின் இல்லாமல் போனது. ஊரில் இப்போ மாட்டு வண்டி ஓட்டும் தொழில் இல்லை. எல்லாமும் மாறும், அழியும். சிலது அழியாது….சிகை அலங்காரம் போன்றவை…ஆனால் அதை எல்லோரும் செய்யும் தொழில் ஆக்காவிடில் அதுவும் அழியும். இப்போ சவரம் நாமே செய்வது போல் ஆகும் அல்லது வெளிநாடு போல் அதை சகல சாதியினரும் கற்று தொழிலாக செய்யும் நிலை வரும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.