Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. ஆயிரம் கோடி இந்திய ரூபாய் என்றால் 93 மில்லியன் பவுன்ஸ் அல்லவா? அவ்வளவு பெரிய தொகையாக தெரியவில்லையே? அதாவது சராசரியாக 2 கோடியில் ஒரு சின்ன பட்ஜெட் படம் எடுக்கலாம்? அதாவது 186,000 பவுண்ஸ். நான் கணக்கு பிழை விடுகிறேனோ?
  2. ஏன்….முன்பு கொழும்பில் சப்பாத்து பொலிஷ் போடும் தொழில் இருந்தது… சாப்பாடு வீட்டில் கட்டி எடுத்து போய் வேலையிடத்தில் கொடுக்கும் தொழில் இருந்தது… இலண்டனில் பஸ் கண்டக்டர் தொழில் இருந்தது, கரிசுரங்கத்தொழில் இருந்தது… பின் இல்லாமல் போனது. ஊரில் இப்போ மாட்டு வண்டி ஓட்டும் தொழில் இல்லை. எல்லாமும் மாறும், அழியும். சிலது அழியாது….சிகை அலங்காரம் போன்றவை…ஆனால் அதை எல்லோரும் செய்யும் தொழில் ஆக்காவிடில் அதுவும் அழியும். இப்போ சவரம் நாமே செய்வது போல் ஆகும் அல்லது வெளிநாடு போல் அதை சகல சாதியினரும் கற்று தொழிலாக செய்யும் நிலை வரும்.
  3. அண்ணாமலையை கொஞ்சம் நம்பினேன் என்றதன் மூலம் உங்கள் மேலானா என் நம்பிக்கை டெமேஜ் ஆகிவிட்டது🤣
  4. ப்ரோ…. கைய குடு ப்ரோ….இந்த கருத்தை எழுதின கைக்கு @Nathamuni மோதிரம் போடுவார் நான் ஒரு முத்தம் கொடுத்துகிறேன். இப்ப வெளி நாட்டில் பறை அவையவை தானே அடிக்கிறம்… வெள்ளை அவையவை தானே கட்டுறம் செலவு படையலை அவையவைதானே தூக்கி போய் முன் சந்தியில் வைக்கிறம். அதே நிலை ஏனைய தொழிகளுக்கும் ஊரில் வர வேண்டும். வந்து கொண்டுள்ளது. வந்து விடும். பிகு ஆரும் யாழில் ஆசாரவாதிகள் போர்வையில் மறைந்திருக்கும் சாதியவாதிகள் பாரம்பரிய தொழில் அழிவதாக கவலைப்பட்டால் - அவர்கள் பிள்ளைகளை ஊருக்கு அனுப்பி இந்த தொழில்களை நடத்த சொல்லலாம். ஏறுபட்டி, தளைநார் எண்ட செலவு.
  5. நீங்கள் பிலாஸ்டிக்கில் செய்த மீன், இறைச்சி எங்கே வாங்கிகொள்வீர்கள்? முன்பு தமிழ் நண்டு …இப்போ தமிழ் குரங்கு…. இப்படித்தான் இன்னொரு குரங்கு போய் இறங்க….இங்கே இருந்து வேறொரு குரங்கு போட்டு கொடுத்து நாலாம் மாடிக்கு ஏர்போர்ர்ட்டில் இருந்து அள்ளிப்போனார்கள். எஜமானர்கள் மாறும் போது, கூ, கா கொடுக்கும் கூட்டமும் மாறுவது வழமைதானே🤣.
  6. மட்டகளப்பில் புத்தர் சிலை விகாரையாக பெருப்பிக்கப்பட்ளது. இது சாம்பிள் போதாதா? தையிட்டி விகாரையை கட்டி முடித்து காட்டினால் ஏற்பீர்களா? அதே
  7. சூப்பர் அண்ணா. நான் இப்போதும் தலைக்கு வைப்பது நல்லெண்ணைதான். தொண்டை கரகரப்புக்கு கொஞ்சமாய் எடுத்து தடவினால் பறந்து விடும். முன்பு ஊரில் இருக்கும் போது சனிக்கிழமை தோறும் அரையில் ஒரு துண்டை கட்டியபடி நல்லெண்ணையில் மலையாள பட போஸ்டர் மாதிரி நானும் அப்பாவும் மின்னுவோம்🤣. கொழும்பு, வெளிநாடு வந்தாலும் முழுகும் போது நேரம் இருப்பின் ஒரு அரைமணி நேரம் எண்ணை வைத்து ஊறவிட்டே முழுகுவேன். ஒருமுறை இப்படித்தான் மகனுக்கு காது வலி - கொஞ்சம் நல்லெண்ணையை விட்டு சில நிமிடத்தில் கவிழ்த்தால் என்ன என நான் ஐடியா சொன்னேன். குழந்தையாக வெளிநாடு வந்து விட்ட மனைவி என்னை what a country brut என்பதாக லுக்கு விட்டு விட்டு, ஆஸ்பத்திரிக்கு போவோம் என்றார். அங்கே ஒரு வயதான ஆங்கில வைத்தியர் சோதித்து விட்டு, ஒரு சின்ன இன்பெக்சன் அதனால் வந்த வலிதான் மருத்து ஏதும் தேவையில்லை, வலியை குறைக்க உங்கள் வீடுகளில் பாவிக்கும் seed oil எதையாவது விடலாம் என்றால்… மனைவியின் முகத்தில் வழிந்தது ஒரு போத்தல் எண்ணை அல்ல, அசடு🤣
  8. சீதையின் முதுகில் கோடுகள் இல்லையா? அல்லது சீதையை ஶ்ரீராமன் தொடவே இல்லையா? -பெரியார் திரைப்படப்பாடல்- நெஞ்சு கூடு கட்டும். தொய்வு வரும். கண்பார்வை மங்கும். இதெல்லாம் கூட ஓக்கே… கைரேகை அழிந்து விடும் எண்டு ஒருத்தன் மிரட்டிட்டான் பாஸ்….🤣
  9. இன்றும் நம்பாமல் ஆனால் கடைப்பிடிக்கும் சனி பயம்கள் 1. நல்லெண்ணையை கையில் வாங்கினால் அவர்களின் சனியன் எமக்கு தொத்தி விடும் 🤣 2. காலை கழுவும் போது குதி மேற்பகுதியை கழுவாவிட்டால், நளன் போல எம்மையும் சனியன் பிடிக்கும் 3. ஏழரை, அஷ்டமாத்து காலங்களில் சனிகிழமையில் மச்சம் சாப்பிட்டால் சனி கேமை கேப்பார் 4. பிரட்டாசி மாசம் சனி விரதம் பிடிச்சு எள்ளெண்ணை ஏரிக்காட்டில் சனி கேமை கேப்பார் 5. விரத சோற்றை சனிக்கு படைத்து அதை காகம் தின்ன முதல் நாம் தின்றால் சனி கேமை கேப்பார்
  10. திமுகவின் மீது ஏற்பட்ட அதிருப்தியை இந்த கோமாளி சர்க்கஸ் காட்டி நீர்த்துபோக செய்கிறார்.
  11. ஒரிசாவுக்கு அண்மையில் கடலில் தொலைந்து இங்கே நீரோட்டம் கொண்டு வந்து விட்டிருக்கலாம். விஜயனும் தோழர்களும் வந்தது போல.
  12. 1. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும்🤣 2. கருணாநிதி தமிழ் உணர்வாளர் 3. இந்திரா காந்தி எமக்கு “அன்னை” 4. மேற்கு நாடுகள் ஜனநாகத்தை மதிக்கும் 5. கம்யூனிச நாடுகள் பொதுவுடமை கொள்கையை மதிக்கும் 6. பாலா அண்ணை யதார்தத்தை எடுத்து சொன்னால் தலைவர் கேட்ப்பார் 7. ஓரளவுக்கு மேல் தமிழ் மக்களை இலங்கை அழிக்க உலகநாடுகள் விடாது 8. தலைவர் இல்லாமல் போனாலும் அவர் வழிநின்ற புலம்பெயர் செயல்பாட்டாளர் வழி தவற மாட்டார்கள் 9. சம், சும், விக்கி இதயசுத்த்தியோடு இன நலனுக்கு பாடுபடுவர்
  13. இந்தியா, ரஸ்யா, யூகே, ஜேர்மனி, முதல் 4 நாடுகளாக வருவதே வழமை. உக்ரேன் அநேகம் 10 வதுக்கு பின்புதான்.
  14. ஒரு திமுக ரெளடி வசமாக சிக்கி உள்ளார். எல்லாரும் திமுக வை வச்சி செய்கிறார்கள். ஆனால் இந்த வாயை வாடகைக்கு விடும் ப்ரோ மட்டும் அமைதிகாக்கிறார்?
  15. 👆👍 இதுதான் உண்மை. நாளைக்கு சுமன் இவருக்கு பதவி தர ஒத்து கொண்டால் இந்த மனிசன் வாலை ஆட்டி கொண்டு அவர் பின்னால் ஓடும். —————————————- @island 1987 புலிகளும் ஜே ஆரும் இடைக்கால மாகாணசபை நிறுவலில் பிடுங்குபட்டார்கள். இந்த இடைக்கால சபையின் தலைவராக புலிகள் மூன்று ஆட்களை பிரேரிக்க அதில் ஒருவரை ஜே ஆர் தேர்வார் என உடன்பாடு காணப்பட்டது. மூன்று பெயர் களை புலிகள் பிரேரித்து அதில் ஒன்றை ஜே ஆர் தெரிய, அதன் பின் இல்லை தாம் கொடுத்த மூன்றில் இன்னொரு பெயர்தான் இந்த சபையின் தலைவர் என புலிகள் அடம்பிடிக்க அது அப்படியே ஸ்தம்பித்து நின்றது. பின் இந்தியன் ஆமியுடன் போர் வந்து விட்டது. இதில் புலிகள் வேண்டும் என அடம்பிடித்த ஆளின் பெயரும் சிவஞானம்தான். இவருவரும் ஒரே ஆளா?
  16. 2,000,000/365=5,479.452 நாளொன்றுக்கு 5,479.5/24=228.313 மணத்தியாலம் ஒன்றுக்கு 228/60=3.8 நிமிடத்துக்கு ——————- கட்டுநாயக்காவில் நாளொன்றுக்கு சராசரியாக 85 விமானங்கள் வருகை/செல்கை. 5480/85=64.471 ஒரு விமானத்தில் சராசரியாக 64 ஆட்கள் வந்தாலே வருடத்துக்கு 2 மில்லியனை எட்டி விடலாம். நாளுக்கு 6479 பேர் வந்தால் - 6479/85=76.224 ஒரு விமானத்தில் 76 பேர் வந்தால் போதும்.
  17. Bringing the police service in to disrepute. உடனடியாக சேவை விடுப்பில் அனுப்பி, விசாரணையின் பின் சீட்டை கிழித்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
  18. அப்படி இருப்பின் அவர் இதை ஒரு எழுத்து உத்தரவாக போட்டிருந்தால் அதை அதிகாரி தட்டி கழித்திருக்க முடியாது. ஏன் வாய்மூலம் சிபாரிசு? ரெக்கோர்ர்ட்டில் இல்லாமல் அலுவல் பாக்கும் கள்ளத்தனம்? மாகாணசபை தேர்தலை நடத்தாமல், மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரத்தை, பின்கதவால் அனுபவிக்கும், பிரயோகிக்கும் ஒருவர்தான் இந்த ஆளுனரும் ஏனையோரும். இன்னும் ஒரு விடயம் தனக்கு கீழே வேலை செய்யும் ஒரு அதிகாரியை பொதுவெளியில் யார் என தெரியும் படி விபரம் சொல்லி விமர்சிக்கிறார்? இதெல்லாம் தலைமைதுவ பண்பு. இவர் எல்லாம் ஓய்வு பெற்ற மூத்த அதிகாரி. அந்த அதிகாரியை பற்றி எனக்கு தெரியாது - ஆனால் இவர் அனுப்பி விட்டார் என்பதால் கூட்டத்தை விட்டு விட்டு அவர்களை சந்திக்க முடியாதே? வந்தவர்கள் நேராக அவரிடம் வராமல், ஆளுனர் மூலம் வந்த சிபாரிசு பேர்வழிகள் அவர்களுக்கு வெத்திலை வைக்க வேண்டும் என ஆளுனர் எதிர்பார்ப்பது அவரின் மமதையையே காட்டுகிறது. மிக முக்கியமாக - அதிகாரி நடந்தது தவறு எனில் ஏன் அவர் மீது துறைசார் நடவடிக்கை எடுக்க வில்லை? எடுத்தால் இவரின் அதிகார துஸ்பிரயோகம் - employment tribunal இல் நாறும் என்ற பயம்? எனவே தன் இயலாமையை மேடையில் கூறி உள்ளார்.
  19. அது டாக்டர் சத்தியன் உயிர் வாழ்வதற்காக கொடுத்த விலை. என நீங்கள் நினைக்க இல்லையா? இமெல்டா சுகுமாருக்கும் இதுவே நடந்தது. அவர்கள் 2009 மேயிற்கு பின் அவர்களை பாதுகாத்தவர் எவரோ அவருக்கு தம் விசுவாசத்தை நிருபிக்க சிலதை செய்யவேண்டி ஆகியது. பின் அதுவே வாழ்க்கை என்றாகி விட்டது. பழத்தை கடித்த பின் ஆத ஏவாளுக்கே மீட்சியில்லை. ஆளுனர் இப்படி ஒரு அதிகாரிக்குபோன் எடுத்து தனக்கு விரும்பியோருக்கு சலுகை காட்டுமாறு சொல்வது அதிகாரதுஸ்பிரயோகம் இல்லையா ஆளுனர் சார்?
  20. நீங்கள் ஊகித்ததுதான் சரி. முதலில் இந்த Auxiliary என்பதை தொண்டர் என மொழிபெயர்ப்பவர்களை பிடித்து உதைக்க வேண்டும். எல்லா Auxiliary யும் volunteer Auxiliary இல்லை. இங்கே இவர்களுக்கு வேதனம் கொடுக்கப்படுகிறது என நினைக்கிறேன். ஆகவே இவர்களை துணை-ஊழியர் என அழைப்பதே பொருத்தமாய் இருக்கும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.