Everything posted by goshan_che
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
ஓம் நானேதான் எழுதியது. சிரியா விடுவிக்கபட முன்பே இதை எழுதினேன். ஆனால் இடையில் துருக்கி புகுந்தது எதிர்பாராத ட்விஸ்டு. உக்ரேன்-சிரியா டீல் தன்னை வெளியால் விட போகிறது என உணர்ந்த துருக்கி, முந்தி கொண்டது. நான் சொன்னபடி உக்ரேன்-சிரியா டீல் டிரம்ப்-புட்டின் இடையே நடந்து முடிந்திருப்பின், சிரியாவின் தலைமை வேறு ஆட்களிடம் போயிருக்கும்.
-
முதல்முறையாக களத்திற்கு சென்று மக்களை சந்திக்கும் விஜய்: எங்கு? எப்போது?
ஒருவர் ஆட்சி அமைக்க அரசியல் செய்கிறார். மற்றையவர் பேட்டாவுக்கு கூவுகிறார். இரெண்டும் வேறு வேறு தொழில்கள் 🤣
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
வைப்பு தொடர்ந்த வழக்கில் இருந்து தப்புவதற்க்காக வைவ்வை (wife) பொலிஸ் நிலைய படி ஏற வைத்த மானஸ்தந்தான் செக்ஸ் சைக்கோ சீமான்🤣.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
பெரிதாக இருக்கவில்லை. இது முழுக்க முழுக்க துருக்கி சார்பு அணிகள் ஆரம்பித்த விடயம். நீங்கள் மேலே படம் போட்டவரும் துருக்கியின் கைப்பாவைதான். மேற்கின் கைப்பாவைகளான ப்ரீ சிரியன் ஆமி காயடிக்கபட்ட நிலையிலேயே இருந்தது. சில பகுதிகளை மட்டும் கைப்பற்றியது. குர்தி பகுதிகள் ஏலவே அவர்கள் வசம்தான். அருகில் இருந்த ரஸ்ய முகாம்கள் காலியானபோது அமெரிக்க+குர்தி படைகள் அவற்றை எடுத்து கொண்டன. இதை தவிர மேற்கின் ஈடுபாடு அதிகம் இருக்கவில்லை.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
இது பைரவன்-விசுகு சண்டைக்கான பழி தீர்த்தல் இல்லைதானே அண்ணை. அந்தாள் போலி-துவாரகா நேரம் முதலில் திறந்த மனதுடன் அணுகுவோம் என சொன்னதுக்காக என்னையும் போட்டு வாங்கினவர். ஆனால் செக்ஸ் சைக்கோ சீமான் பற்றி அவர் எப்போதும் சரியான நிலைப்பாட்டையே எடுத்துள்ளார். இங்கே சீமான் பற்றி பல விடயங்களை இணைத்தும் உள்ளார். இதில் அவதானமாக இருக்க எதுவும் இருப்பதாக எனக்கு படவில்லை.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
விரட்டியது மேற்கல்ல. துருக்கி.
-
சீனாவை தொடர்ந்து அமெரிக்கா பறக்கிறார் ஜனாதிபதி அநுர
பார் போற்றும் என் டீலர்…சை…லீடரின் கெட்டித்தனம்தான் எல்லாம் 🤣. அதானிக்கே அமிர்தாஞ்சன் தடவினம்ல 🤣.
-
'நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்?' - ரசிகர்களுக்கு நடிகர் அஜித் கூறியது என்ன?
இதில் வெறிக்கதை ஏதும் இல்லை. நடக்ககூடியதைதான் எழுதுகிறேன். சில நேரம் சொறிக்கதை என்பதை வெறிக்கதை என பிழையாக எழுதி விட்டீர்களோ🤣. ——- நான் மட்டற்ற குடிவரவின் ஆதரவாளன் அல்ல. அதே போல் குற்ற செயல்களின் ஆதரவாளனும் அல்ல. ஆனால் குடியேறிகள் அதிகம் வராத காலத்தில் கூட இந்த அமைப்பின் முன்னோடிகள் இதே கொள்கையுடந்தான் இருந்தார்கள் இல்லையா? இவர்களுக்கு இனவாதம் ரத்தத்தில் ஊறியது. அண்மைய குடிவரவு அதிகரிப்பு ஒரு நல்ல ஊன்றுகோல். அவ்வளவே. ஏதோ நேற்று வரை ஜேசு, புத்தர் போல் இருந்தவர்கள், கடந்த 10 வருடத்தில் இனவாதிகளாகி இந்த கட்சி பலமானது என்பது போல் நீங்கள் எழுதுகிறீர்கள். அது மட்டும் அல்ல, புட்டினும், ஏர்டோகனும், அசாத்தும் குடிவரவை ஒரு ஆயுதமாக பாவித்தமை கூட நீங்கள் அறியாததல்லவே? குற்ற செயல்கள் எவர் செய்தாலும் தண்டிக்கபடவேண்டும். உள்ளூர்வாசி செய்தால் ஓக்கே, பழைய குடியேறி செய்தால் பாதி ஓக்கே, அண்மைய குடியேறி செய்தால் பிழை என்பதல்லவே. அப்படி நடந்தாலும் அது எம்போன்றோருக்கு ஒரு pyrrhic victory ஆகவே அமையும்.
-
சீனாவை தொடர்ந்து அமெரிக்கா பறக்கிறார் ஜனாதிபதி அநுர
இப்படி சட்டென்று கேள்வி கேட்கப்படாது…அப்படியே ஓடி போய்விடுவோம். உங்களுக்கு தெரியாதாக்கும், எமக்கு படியளக்கும் தெய்வம், பார் புகழும் சிறி இராஜதந்திரதில் அனுரவை செக்மேட், பண்ணி வைத்துள்ளார்.
-
சீனாவை தொடர்ந்து அமெரிக்கா பறக்கிறார் ஜனாதிபதி அநுர
அமெரிக்கா அம்பலாங்கொடையில் 1.3 பில்லியன் செலவில் சூரிய ஆலை திட்டத்தை ஆரம்பிப்பதாக அனுரவிடம் டிரம்ப் உறுதியளித்தார்! 1948 இல் இருந்து சக்கடத்தர் குதிரைகள் மாறி மாறி இலாவகமாக ஓடுகிறார். விழுந்தாலும் எழுந்து ஓடுகிறார். குதிரைகளும் கை கொடுக்கிறன. எங்களுக்குத்தான் ஒரு கழுதையில் ஏற கூட தெம்பில்லை🤣. அருமையான கருத்து. ஆனால் எமது மக்களில் 1% க்கு கூட இது விளங்காது. டிசை அப்படி.
-
'நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்?' - ரசிகர்களுக்கு நடிகர் அஜித் கூறியது என்ன?
எனக்கு ஒரு விபரீத ஆசை. இப்படி நடக்ககூடாது, ஆனால் ஒரு சிலருக்கு தாம் கொப்பில் இருந்து மரத்தை வெட்டியதன் பலனை பார்த்து…கோஷான் ராசா நீங்கள் சொன்னது சரிதான் அப்பு என ஏற்கும் ஒரு நிலை வரவேண்டும் என என் மனது சில சமயம் விபரீதமாக சிந்திப்பதுண்டு. அது இதுதான். AfD ஆட்சிக்கு வரவேண்டும். ஜேர்மனியை ஈயுவில், ஐரோப்பிய மனித உரிமை சாசனத்தில் இருந்து AfD விலக்க வேண்டும். AKD ஆட்சிமாற்றம் அத்தோடு இலங்கையில் ஜனநாயகம் திரும்பி விட்டது என அறிவித்து, ஜேர்மனியில் இருந்து மீள வருவோர் அனைவருக்கும் இலங்கையில் நிபந்தனை அற்ற பொதுமன்னிப்பு என AfD, AkD ஒப்பந்தம் போட வேண்டும். இந்த ஒப்பந்தத்தின் படி 1945 க்கு பின் ஜேர்மனி வந்த அனைவரும், அவர்களின் வம்சாவழியினரும், ஜேர்மன் பாஸ்போர்ட் இருப்பினும் இலங்கைக்கு திருப்பி அனுப்பபட வேண்டும். ஜேர்மன் கலப்பின பிள்ளைகள் மட்டும் தங்கலாம். இலண்டன் லூட்டன் ஏர்போட்டில் சனம் அலை மோதும். அப்போ நான் அங்கே போய் I told you so என சொல்ல வேண்டும். இந்த விபரீத ஆசை நடக்கவே கூடாது. ஆனால் சிலசமயம் நடந்தால் நல்லா இருக்கும் என்றும் தோன்றும். பிகு மேலே விபரித்த விடயம் அப்படி ஒண்டும் நடக்கவியலாத கற்பனை அல்ல. யூதருக்கு ஒரு final solution கொடுக்கபட்ட நாட்டில், அதே நிலை ஏனைய இனங்களுக்கு ஏற்படலாம். History doesn’t repeat itself but it often rhymes - Mark Twain -
-
'நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்?' - ரசிகர்களுக்கு நடிகர் அஜித் கூறியது என்ன?
உங்கள் ஆசி இருந்தால்….இமயம் கூட காலடியில்😎
-
'நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்?' - ரசிகர்களுக்கு நடிகர் அஜித் கூறியது என்ன?
நான் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவதில்லை 🤣. மேலும் ஜேர்மனி இன்னுமொரு ஐரோப்பிய நாடு, உலகின் 4 வது பொருளாதாரம். அதாவது பத்தோடு பதினொன்று அத்தோடு ஜேர்மனியும் ஒன்று 🤣. ஆனால் குடியேற்றம் என்பது உலகளாவிய பிரச்சனை அதை தனியே ஜேர்மனியை மட்டும் வைத்து அந்தகன் யசிகா ஆனந்தை பார்த்தது போல் பார்க்க முடியாது. அதே போல், கீழே உள்ள கருத்து தனியே குடியேற்றவாசிகள் என்றே இருந்தது. ஜேர்ம்னியில் அல்லது நான் ஜேர்மனியில் வாழும் ஸ்டட்டில் உள்ள குடியேற்றவாசிகள் என்று இருக்கவில்லை🤣.
-
'நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்?' - ரசிகர்களுக்கு நடிகர் அஜித் கூறியது என்ன?
ஐயா சாமி! மேலே சொன்ன உதாரணங்கள் எல்லாம் 80-2010 வரை புலம்பெயர் நாட்டில் பழைய தமிழ் குடியேற்றவாசிகள் செய்த குழப்படிகள். நீங்கள் இப்படி சொன்னதுக்கான👇பதில் அது.
-
'நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்?' - ரசிகர்களுக்கு நடிகர் அஜித் கூறியது என்ன?
🤣 80, 90, 2000 ம்களில் இலண்டனில் அரியாலை, மன்னார், கொட்டடி எனவும், கனடாவில் கண்ணன் குரூப் எனவும், பரிசில் இன்னும் பல பெயர்களில் எல்லாம் ரவுடித்தனம் பண்ணியது, வெள்ளைகளே… அதே போல் கள்ள மட்டையில் 90,2000-2024 வரை கரைகண்டதும் குடியேற்றவாசிகள் அல்ல. 70,80,90,2000 ம்களில் இலண்டன் போதை வியாபாரத்தை கையில் வைத்திருந்தது யாடி கேங்ஸ் எனப்படும் மேற்கிந்திய தீவினர் அல்ல. 90,2000-2020 வரை பிரிதானியாவில் பல சிறுமிகளை கூட்டு வன்புணர்வு செய்தது பாகிஸ்தானிகள் அல்ல. ஜேர்மன் தேர்தல் இன்னும் சில ஷாக்கிங் நீயூசை தரும் என நினைக்கிறேன்🤣 ஓம் சில வருடங்கள் முன் நற்பணி மன்றம் ஆக்கி. பின் சும்மா மினகெட முடியாது என அதையும் கலைத்து விட்டார்.
-
யாழ். நாகர் கோவில் கடற்கரையில் ஒதுங்கிய மிதவையில் 18 புத்தர் சிலைகள்!
சுனாமியால் களுத்தறை முதல் - கற்கோவளம் வரை பாதிக்கப்படவில்லை. ஆனால் கற்கோவளம் முதல் காலி வரை பாதிப்பு இருந்தது இதற்கு நீங்கள் சொல்லும் கண்டமேடை தான் காரணம். சமூககல்வியில் இதை பற்றி படித்துள்ளோம். இந்த பகுதியில் சீற்றம் குறைவு, சூரிய ஒளி ஊடுவல் அதிகம் என்பதால் கடல்வாழ் உயிரி வளமும் அதிகம். ஆனால் இது தனியே அலைகளுக்கு மட்டுமே பொருந்தும். காற்று அடிக்கும் போது கடல்சீற்றம் இந்த பகுதியையும் தாக்கும். தனுஸ்கோடி அழிவு இப்படித்தான் ஏற்பட்டது. விஜயன் நீரோட்டத்தின் வழியே அன்றி, காற்றின் தாக்கத்தினால்தான் இலங்கையின் வடமேற்கில் இறங்கியதாக நம்பபடுகிறது. ஒரிசாவில் இருந்து புறப்பட்ட ஒரு இயந்திரமற்ற படகு கூட்டத்துக்கு இப்படி நடக்க வாய்புண்டு என்றே நான் நினைக்கிறேன்.
-
மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் : உண்மைகளை உடன் வெளியிடுங்கள்; இல்லையேல், நீங்களும் ஊழல்வாதிகள்தான் - சுமந்திரன்
இவர் தன் சொந்த அரசியல் லாபத்துக்காக பலூன் ஊதுகிறார். அது வெள்ளிடமலை. ஆனால்…இது ஊதப்படவேண்டிய பலூன். 🤣 ஒரு குடிமகனுக்குரிய நியாயமான கவலை. அப்படி பூட்டினால் சட்டென்று பிளைட்டை பிடித்து டாஸ்மாக்கில் ஏத்தி கொண்டு வரவேண்டியதுதான்🤣
-
மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் : உண்மைகளை உடன் வெளியிடுங்கள்; இல்லையேல், நீங்களும் ஊழல்வாதிகள்தான் - சுமந்திரன்
ரணில் இப்போ ஆட்சியில் இல்லை. தவிர அவர் செய்த இலஞ்சத்தை வெளிகொணரும்படி அவரையே கேட்டு என்ன பயன். பாரும் தமிழ் மக்கள் பிரச்சனைதான். சுமந்திரன் மீதுள்ள கடுப்பில், எமது தலையில் நாமே மண்ணை வாரி கொட்ட கூடாது. யார் கேட்டாலும், டக்ளசே கேட்டாலும் -பார் உரிமை பற்றிய கேள்வி நியாயமானது, மிக தேவையானது.
-
'நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்?' - ரசிகர்களுக்கு நடிகர் அஜித் கூறியது என்ன?
ஏலே தல அசித்து…. இத நீங்க படம் நடிக்க வந்த ஆரம்பத்தில சொல்லி இருந்தா அது அக்கறை, நியாயம். அத்தனை ரசிககுஞ்சுகளையிம் உசுப்பேத்தி, மன்றம் வைத்து, பற்பல கோடிகள் சம்பாதித்து செட்டில் ஆகி, இனி ரிட்டையர் ஆகி கார் ரேஸ் ஓட்டும் நேரம் சொல்லுவதில் ஒரு பயனும் இல்லை. ரசிகனை மொக்கனாக்கி உழைக்கும் வரை உழைத்துவிட்டு, இப்ப கழட்டி விடப்பாக்கிறார்🤣
-
யாழ். நாகர் கோவில் கடற்கரையில் ஒதுங்கிய மிதவையில் 18 புத்தர் சிலைகள்!
அந்த தாமரை(?) இலை சாப்பாடு அமிர்தம்❤️. படகில் ஆளுக்கு ஒரு மிதவை கவசம் தந்தார்கள். இன்ப அதிர்சியாக இருந்தது. இதை விட மோசமான நெடுந்தீவு, மூதூர் பயணங்களில் முன்பு எதுவும் இருக்கவில்லை.
-
மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் : உண்மைகளை உடன் வெளியிடுங்கள்; இல்லையேல், நீங்களும் ஊழல்வாதிகள்தான் - சுமந்திரன்
மேலே சொன்னத்தில், சொன்னது சுமந்திரன் என்பதை தவிர வேறு எந்த பிழையும் இல்லை.🤣 தாம் உத்தமர்கள், ஊழல் கறை படியாதவர் என என் பி பி ஆட்சிக்கு வந்து இத்தனை மாதம் ஆகிறது - வெறுமனே பார் லைசன்ஸ் பெற்றவர் விபரம் மட்டுமே வெளிவந்துள்ளது. உடந்தையாக இருந்த சிபாரிசு செய்த அரசியல்வாதிகள் பெயரை வெளியிட ஏன் தயக்கம்? அண்டர் த டேபிள் டீலிங்? இங்கே சுமனை அடிப்பதாக போக்கு காட்டியபடி, சிறியும் அவரது அடிபொடிகளும், அனுரா காவடிகளும் ஒரே நேர்கோட்டில் வருவது புலனாகிறது. சிறியை காப்பாற்ற தமிழர் உரிமையை விலையாக கேட்கிறதா என் பி பி?
-
நீதிமன்றில் கோரிக்கை வைத்த அர்ச்சுனா
நீங்கள் எப்ப நீதிபதி ஆகினீர்கள்?🤣 கோர்ட் சொல்லும். சத்திக்கு முந்திய ஏவறை போல் அவசரம் வேண்டாம்🤣 🤣 முன்பு கூகிள் ஆண்ட்வர் மட்டுமே.. இப்பதான் சாட் ஜிபிடி, ஜெமினி, சிவாஜி, எம் ஜி ஆர் எண்டு கனக்க இஸ்டதெய்வங்கள் இருக்கே🤣
-
நீதிமன்றில் கோரிக்கை வைத்த அர்ச்சுனா
இதென்ன இதுக்கே இப்படி சொல்லுறியள். அருச்சுனா உடலுறுப்பு ஒன்றை சேவ் (shave) பண்ணி விட்டு வா…நீ ரெக்கோர்ட் பண்ணுவதும் தெரியும் என்று சொன்ன ஆடியோ எல்லாம் கூட இருக்கு 🤯. இதை எல்லாம் ஒதுக்கி விட்டுத்தான் மக்கள் தெரிவு செய்தார்கள். வேறு வழியில்லை என்பதால். அப்ப எங்கட பாரம்பரிய அரசியல்வாதிகளின் சீத்துவத்தை யோசிச்சு பாருங்கோ. நான் அருச்சுனாவுக்கு அல்ல, ஆனால் அந்த அணியில் இருக்கும் ஏனையோரின் ஆதரவாளன். தெய்வ கிருபையால் அருச்சுனாவுக்கு கிடைத்த வாய்ப்பு மயூரன் அல்லது அதே போல் இன்னொருவருக்கு கிடைத்தால் ஒரு புதிய அரசியல் மறுமலர்சியின் ஆரம்பமாக அது அமையும் என நினைக்கிறேன். அருச்சுனா ஈழத்து சுப்ரமணியசாமி, என்ன சாமி காரிய விசரன். அருச்சுனா இதுவரைக்கும் வெறும் விசரன் போல நடக்கிறார். கொஞ்சம் மாறினால் சு சாமி போல் ஆகலாம். உலகம் எங்கும். ஷ்ரோடர் போன்ற மலைவிழுங்கிகள் ஜேர்மன் சான்சிலராக கூட இருந்துள்ளனர் 🤣.
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
சிரிப்புகுறி இவராய் மாத்தையா 🤣. உங்கள் சவுதி நண்பர் நம்ம சிவப்பு தொப்பி மெளலவிதானே?🤣 “வக்ஃப்” என்பது இஸ்லாமிய சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட, மதம் அல்லது தொண்டு என அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு அசையும் அல்லது அசையாச் சொத்தையும் இஸ்லாமியர் ஒருவர் நிரந்தரமாக அர்ப்பணிப்பதாகும். இவ்வாறு ஷா, வக்ஃகப் செய்த சேரிதான் - ஷாவக்ஃகப் சேரி - சாவகச்சேரி ஆனது என்கிறார் உடாஸ்சாமியார்.
-
நீதிமன்றில் கோரிக்கை வைத்த அர்ச்சுனா
ஏதோ ஒரு அமைப்பின் தலைவர். இலங்கை சட்டத்தின் படி இவ்வாறன வழக்குகளில் சாதாரண குடிமக்களே மனுதாரார் ஆக வழக்கு போடலாம். நேர்மை இல்லாதவர்கள் எம் பி தேர்தலில் போட்டியிட கூடாது என்ற விதி இல்லை. பாராளுமன்றில் கூட 6ம் திருத்தத்தை மீறி நாட்டை பிரிப்பது பற்றி பேசினால் பதவி போகும் என நினைக்கிறேன். இதை நீதிமன்றம் அன்றி பாராளுமன்றமே நீதிமன்றாக மாறி நடத்தும் என வாசித்த நினைவு. வழக்கில் இது ஒரு கருதுபொருள் இல்லை. அருச்சுனா எம்பி தேர்தலில் போட்டியிட தகுதி இல்லாத போது போட்டியிட்டாரா என்பது மட்டுமே கேள்வி.