Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. நெடிய உயரமும், நகைச்சுவை பேச்சும், விளையாட்டில் ஆர்வமும் என பன்முகமுடைய அலாதியான நல்ல மனிதர். தொடர்பில் இருந்தால் ஒரு ஹாய் சொல்லி விடுங்கள். இப்போ 80 நெருங்கி இருப்பார்.
  2. எனக்கும் புரிகிறது. இதில் சுமந்திரனின் இன்னொரு வழுவான “தொனி” பிரதானப்படுகிறது. இதை நிறுவ நாம் கடுமையாக உழைக்க வேண்டும். ஆதாரங்கள் சேர்க்க வேண்டும். என கூறி ஒரு ஆதார சேர்ப்பு பொறிமுறை நோக்கி நகர்ந்திருக்கலாம். நீங்கள் சொன்னது போல் இனப்படுகொலை நடந்ததை நான் ஏற்றுக் கொள்கிறேன், ஆனால் அதை நிரூபிப்பதில் பாரிய சவால் இருக்கிறது என்று கூட சுமந்திரன் சொல்லவில்லை. அதெல்லாம் ஒண்டும் நிறுவ முடியாது என்பதே அவர் தொனியாக இருந்தது. அது மட்டும் அல்ல, தமிழ் மக்களின் உணர்சிகள் பற்றி சுமந்திரன் நீங்கள் அடிக்கடி பாவிக்கும் tone deaf ஆக இருந்த தருணம் இது. இதுவும் இவர் உண்மையிலேயே நம்ம ஆள்தானா என்ற சந்தேகத்தை உருவாக்கியது. கீத பொன்கலன் கொழும்பு யூனியில் இருந்தார் இப்போ மேரிலாண்ட் போயிருக்க கூடும்.
  3. எனது நிலைப்பாடும் இதுதான். யாழில் சாவச்சேரியில் ஆயுதம் பதுக்கினர், மண்டைதீவில் வோக்கியில் கதைத்தனர் என நியாயம் சொல்லும் ஆட்களுடன் வலுவாக முரண்பட்டும் உள்ளேன். ஆனால் ஜஸ்டினுக்கும், கோசானுக்கும் இல்லாத பொறுப்பு சுமந்திரனுக்கு உள்ளது. அது தன் இனத்தின் பிரதிநியாக செயல்படுவது. சில வேளை ஹக்கீமும், அதாவுல்லாவும் முஸ்லிம்களால் கிழக்குமாகாண தமிழருக்கு 1990 இல் பாரிய அநீதி இழைக்கப்பட்தை தம்மளவில் ஏற்றுகொண்டாலும் கூட அதை முஸ்லிம்களின் பிரதிநிதியாக பொதுவில் ஏற்க மாட்டார்கள். இப்படி மறுபகுதி தன் தவறை ஒத்துகொள்ளாமல் சுமந்திரன் ஒருதலைபட்சமாக சொன்னதால் 1. தமிழர் தரப்பு மட்டுமே அநியாயமாக நடந்தது என்ற கதையாடல் வலுப்பெற்றது 2. தமிழர் தரப்பிடையே ஒற்றுமை குன்றியது. 3. தமிழர் தரப்பை பலவீனமாக்கவே இவர் செயல்படுகிறார் என்ற சந்தேகம் வலுத்தது.
  4. பாலசிங்கம் ஒன்றும் பபா இல்லை. ஒரு பேட்டி என அமரும் போது கண்டபடி வாயை விட கூடியவர் அல்ல. இந்த கேள்வி (கேட்கப்பட்டிருந்தால்) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேள்விதான். ஆகவே இந்த பேட்டியை பார்க்காது, அதன் சூழமைவை பார்க்காது cherry picked quotes ஐ வைத்து எதையும் சொல்ல முடியாது. நீங்களே இப்போ உங்கள் காரணத்தை “சந்தேகம்” என்கிறீர்கள். என்னை பொறுத்தமட்டில் புலிகள் ஏனைய இயக்கங்களை தடை செய்தது அவர்கள் போராட்டத்தை பலமிழக்க செய்கிறார்கள் என கருதியே. அத்தோடு தாம் மட்டுமே விலை போகாதோர், கட்டுகோப்பானோர் எனவும் நம்பினர் (இது உண்மையும்). இது தவறான முடிவு. குறிப்பாக அடி மட்ட போராளிகளை கொலை செய்தது. ஆனால் இதுவும் அசாத் செய்ததும் ஒன்றல்ல. புலிகள் ஒரு உயரிய நோக்கிற்காக போராடும் போது அதனை உள்ளிருந்து பலவீனமாக்கும் என தாம் நினைத்ததை தடை செய்தார்கள். அசாத், தன் குடும்பத்தின் ஆட்சியை தக்க வைக்க - பலமடங்கு இல்லை பல ஆயிரம் மடங்கு வன்முறையை எதிர் தரப்புகள் மீது மட்டும் அல்ல, கூட்டம் கூட்டமாக அப்பாவி மக்கள் மீதும் பாவித்தார். இவை ஒரு போதும் ஒன்றாகாது. பிகு புலிகளின் தலைவரை இட்டு புலிகள் paranoia வில் இருந்தார்கள் என நீங்கள் கூறி இருந்தீர்கள். இந்த மாதிரியான வார்த்தை பிரயோகங்களும், புலிகளை விளங்கி கொள்ளலுமே எமக்கு சட்டென the Hindu, Asian Tribune, Frontline போன்றவற்றை நினைவுக்கு கொண்டு வந்து தொலைக்கிறன. புலிகள் தலைவரின் பாதுகாப்பை இட்டு மிக கவனமாக இருந்தார்கள். இது பரனோயாவால் அல்ல, அவரை முடித்தால் எல்லாம் முடிந்து விடும் என்பதை அவர்களும், எதிரிகளும் தெரிந்து இருந்தார்கள். இப்படி ஒரு Decapitation இல் இருந்து பாதுகாக்கும் முயற்சியே அது.
  5. இது விமர்சனம்தானே அண்ணா? https://www.mothersofmissingtamils.com/?p=1183 கட்டுரையில் சொன்னதை சொல்லவில்லை. அதில் உள்ள செய்திதாள்களில் உள்ளதை சொல்கிறேன். இப்படி சொல்வதால் அநேகர் சுமந்திரனை வெறுத்தார்கள் என நான் நினைக்கவில்லை. தவிரவும் ஆயுதபோராட்டம் பிழை என அவர் சொல்லவில்லை என நினைக்கிறேன். அப்போதைய சூழலில் ஆயுதம் எடுத்ததை இப்போ நாம் விமர்சிக்க முடியாது. ஆனால் ஆயுத போராட்ட கால அணுகுமுறை இப்போ சரிவராது என்பதே அவர் கூறியது என நினைக்கிறேன். ஓம்…நான் சொன்னதுடன் இதையும் சேர்க்க வேண்டும். இப்படி செய்யாமல் விடுவது அவரின் உரிமை - ஆனால் அவர் ரணில் ஆள் என்ற சந்தேகம் வலுக்க இதுவும் காரணமாகியது.
  6. இந்த திரியில் என்ன கருத்தை எழுதினீர்கள் அது எடுபடாமல் போக? நான் ஒரு ஐந்தாம்படை என எழுதினீர்கள். அதை விளக்கி நான் பதில் எழுதியுள்ளேன். இதில் எங்கே சாத்ஸ் கருத்து எழுதினீர்கள்?
  7. ஒன்றில் நீங்கள் மனதில் ஒன்றை நினைத்து, ஆனால் அதை எழுதாமல் எழுத்தில் வேறு எதையோ எழுதுகிறீர்கள்…. அல்லது…. You are moving the goal post as the game unfolds….. இதை முன்பும் நான் உட்பட பலர் அயர்சி தரும் தர்க்கம் என யாழில் குறிப்பிட்டுள்ளோம். மெளனம் சம்மதம்.
  8. 👆மாரடைப்பு கேஸ் இலக்கம் 1 🤣. நம்ம சாத்ஸ் முன்பு புலிகளின் அதி தீவிர அனுதாபி. இப்ப எப்படி அனுரவுக்கு முட்டு கொடுப்பாரோ அப்படி புலிகளுக்கு முட்டு கொடுப்பார் (வேறு ஐடி). எனது புலி விமர்சனம் அவரையும் என்னையும் முரண்பட வைத்தது. ஐடி மாறினாலும் மனிசன் என்மேல் வைத்த பார்வை மாறவில்லை. மாற வேண்டிய அவசியமும் இல்லை.
  9. வழவனுக்கு இன்னொரு திரியில் புலிகளின் கட்டாய ஆட்சேர்பு பற்றி எழுதிய பதிலை கண்டிருப்பீர்கள். அந்தளவுக்கு உறவினருக்கு நடந்தது வரைக்கும் போக தேவை இல்லை… என் தந்தைக்கு சொந்தமான மிக விலை உயர்ந்த வாகனத்தை எடுத்து போனார்கள். நாங்கள் பாஸ் எடுத்து வந்த பின்னும், குடும்பத்தில் ஒருவரும் தமது பகுதியில் இல்லை என கூறி மிக பெறுமதியான எமது வீட்டை எடுத்து கொண்டனர். இரண்டையும் மீட்க போன எனது பெற்றாரை அலைகழித்து, அவர்கள் முகாமில் இருக்கும் போது அது வான் தாக்குதலுக்கு உள்ளாகி கிட்டதட்ட இதனால் என் தாயார் உயிரை கூட இழக்கும் நிலை ஏற்பட்டது. இந்த இரு விடயங்களும் அதி உச்ச தலைமையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டும் பயனிருக்கவில்லை. இத்தனைக்கும் பின் சமாதான காலத்தில் ஊருக்கு போன போது, அலுவலகம் அழைக்கப்பட்டு, வெளிநாட்டு விலாசம் தமது பங்களிப்பு ரெஜிஸ்டரோடு சரிபார்க்கப்பட்டே விடப்பட்டேன். இப்படியான அனுபவங்கள் பலருக்கும் இருக்கும். ஆனால் இவற்றால் அவர்கள் மீது கோவம் வந்தாலும் வன்மம் வரவில்லை - பின்னாளில் சட்டத்துக்கு உட்பட்ட உதவிகள் கேட்டபோதும் மறுக்கவில்லை. ஏன் என்றால் அவர்கள் இதை என்ன குறிக்கோளுக்காக செய்கிறார்கள் என்ற தெளிவு இருந்தபடியால். இந்த நம்பிக்கைதான் அவர்களுக்கும் அசாத்துக்கும் உள்ள வித்தியாசம். அசாத் புலிகள் செய்ததை போல் நூறு மடங்கு அநியாயத்தை தன் குடும்ப நலனுக்காக செய்தார். புலிகள் செய்த அநியாயங்கள் அநேகம் இன நலனை நோக்கியே இருந்தது. இதை தவிர்த்து விட்டு ஒத்த கோடு கீற முடியாது. தலைவர் இறந்த போது உலகம் தமிழர் அத்தனை பேரும் (சிலர் நீங்கலாக) துக்கித்தானர். அசாத்? அவரது அலவி சமூகமே ஆர்பரித்து வரவேற்கிறது. இதுதான் வித்தியாசம்.
  10. நான் எதையும் போட்டியாக எடுப்பதில்லை. ஆனால் இங்கே நான் சொன்னது…ஆரம்பம் முதலே உங்கள் அசாத்-புலிகள் ஒத்த கோடு வரைதல் என்பது பிழையானது, விசமத்தனமானு என்பதை மட்டுமே. அதற்கு ஆதாரம் என பாலசிங்கம் கூறிய பேட்டி என second, third hand interpretation ஐ காட்டியவர் நீங்கள். அதற்கான ஆதாரத்தை கூட நானும் இன்னும் ஒருவரும்தான் பதிந்தோம். உங்கள் கோடு வரைதல் பிழை என பலர் எழுதிய பின் “எல்லாரும் என் கருத்தோடு ஒத்து போகிறார்கள் என்று எழுதினீர்கள்🤣”. உங்களுடனான தர்க்கங்கள் வழமையாகவே இப்படி என்ன கையை பிடிச்சு இழுத்தியா என்றே முடியும் என்பது என் அனுபவம். அதைத்தான் சொன்னேன். இவை பட்டங்கள் பெயர்கள் இல்லை. யாழில் உடைக்கப்பட்ட குட்டு. நான் மட்டும் இல்லை - பலரும் இதை அவதானித்தனர். மேலே நான் எழுதியதற்கு வந்த பின்னூட்டங்கள் இதை சொல்லும். ———- நான் புலிகளுக்கு கண் மூடித்தனமான ஆதரவை கொடுக்கிறேன் என நீங்கள் எழுதியதை வாசித்து பல பழைய காய்களுக்கு மாரடைப்பு வராத குறை🤣. கீழே விளக்கத்தை பார்க்கவும்.
  11. உண்மையில் எனக்கு ஐரோப்பா ஒரு நட்பு சக்தியாக இருக்கும் ரஸ்யாவையும் சேர்த்து கொண்டு அமெரிக்காவுக்கு நிகரான பொருளாதார சக்தியாக வளர்வதில் விருப்பம் உண்டு. 2008 ஆண்டு கிட்டதட்ட சமனாக இருந்த ஈயூ அமேரிக்க பொருளாதாரங்கள் இப்போ 1:3. ஆனால் புட்டின் இருக்கும் மட்டும் இது சரிவராது.
  12. காரணங்கள் பல 1. சுமந்திரனின் வாய். இனப்படுகொலை வரைவிலக்கணம் முதல், புலிகள் மீது அவர் பொதுவெளியில் முன் வைத்த பல விமர்சனங்கள். இதுதான் புலம்பெயர் தேசத்தில் பலர் சுமனை மூர்க்கமாக எதிர்க்க காரணம். இன்று வரை கோஷானை சிலருக்கு யாழ் களத்தில் கண்ணில் காட்ட ஏலாது. காரணம் புலிகளை விமர்சிப்பது. ஆனால் கோஷான் கருத்தாளர். சுமந்திரன் மக்கள் பிரதிநிதி. கோஷானை போல் சுமந்திரன் வாயை விட முடியாது, கூடாது. 2. சுமனின் ஈகோ, நடக்கும் பாங்கு - நீங்களே எழுதியதுதான். கூடவே மாறி மாறி ஆட்களை கவிழ்ப்பது. கட்சிக்குளே சில்லறை பொலிடிக்ஸ் செய்வது. 3. சுமன் ரணில் உள்ளே அனுப்பிய ஐந்தாம் படை என்ற சந்தேகம். மேலே சொன்ன சில்லறை பொலிடிக்ஸ் மூலம், தமிழர் ஒற்றுமையை ரணிலின் ஏஜெண்ட்டாக இவர் குலைக்கிறார் என்ற சந்தேகம். 4. மதம் - மிக சிலருக்கு இது ஒரு பிரச்சனை. கேட்டால் இல்லை என்பார்கள். ஆனால் இதே ஆட்கள் சாணாக்கியனையும் கட்டம் கட்டுவார்கள். சிலவேளை அவர்களே அறியா unconscious bias ஆக இருக்கலாம் 5. எம்மை போல் அல்லாதவர் - கோட் சூட், நல்ல ஆங்கிலம், கொழும்பு வளர்ப்பு, மீசை இல்லை - இதை ஒரு typical முதல் தலைமுறை புலம்பெயர் தமிழ் மனிதனோடு ஒப்பிட்டால் - பலத்த வித்தியாசம் இருக்கும். இந்த வேற்றுமை சந்தேகத்தை கொடுக்கிறது. 6. ஶ்ரீயின் அடிப்பொடிகள் - அவர் மீதான அட்டென்சனை திசை திருப்ப சுமனை அடிப்பது. 7.மேலே சொன்ன பலதில் ஶ்ரீ அமசடக்கியாக இருப்பதால், சுமன் அளவு மோசமானவராக இருப்பினும் அவர் வாங்குல் அடி குறைவு.
  13. அண்ணையான சொல்லுறன்… உந்த ஹோட்டல் காரன் ரூபவாகினியில மணிக்கொரு தரம் விளம்பரம் போட்டாலும் உங்கள் அளவுக்கு அவர்கள் வியாபாரத்தை பிரபல்ய படுத்தி இருக்க முடியாது🤣
  14. சில சுவாரசியமான தகவல்கள்: 1. அசாத் இலண்டனில் ஒரு கான்சர் டாக்டர் (ஒன்கோலொஜிஸ்ட்) வேலை பார்த்த சமயம் இங்கே பிறந்து வளர்ந்த சிரிய பெண்ணை மணம் முடித்தார். மாமனார் குடும்பமும் இங்கேதான். அப்போதெல்லாம் அதிர்ந்து பேசாத, தானுண்டு வேலை உண்டு என இருக்கும் மனிதனாம் அசாத். இவரின் சகோதரந்தான் அரசியல்வாரிசாக வளர்க்கப்பட்டார். அவர் கார் விபத்தில் இறக்க இவர் சிரியா போய் அவர் இடத்தை நிரவினார். 2. அசாத் ரஸ்யாவில் கிட்டதட்ட பணய கைதியாக இருக்கிறாரோ என நான் நினைக்கிறேன். சிரிய அதிபரின் டெலிகிராம் சேனலில் அசாத்தினது என ஒரு அறிக்கை வந்துள்ளதாம் -அதில், தான் எப்போதும் நாட்டை விட்டு ஓட முயலவில்லை, சிரியாவில் உள்ள ரஸ்ய தளத்தை மேற்பார்வை செய்ய சென்ற இடத்தில், ரஸ்யர்கள் எனது பாதுகாப்புக்கு இதுவே சரியான முடிவு என கருதி என்னை மஸ்கோ அனுப்பினர் என எழுதியுள்ளாராம்.
  15. அனுரவுக்கு நல்லாத்தெரியும் இது தனியே மொழிப்பிரச்சனை இல்லை என ஆனால் அப்படி சுருக்கி வைப்பதுதான் அவர்களின் பாணி இனவாதம். ரணிலை கேட்டால் இது பொருளாதாரம், அபிவிருத்தியின்மை பிரச்சனை என்பார். ஜேவிபி இது வெறும் மொழிபிரச்ச்னை என்று சொல்லும். ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்.
  16. 🤣 உப்பு அறவே கூடாது…ரோசம் கீசம் வந்து தொலைச்சால் கோஷ்சனால் யாழில் எழுதேலுமே🤣
  17. என்மேல் கடுப்பு எண்டால் நேரா எனது பிழைகளை எழுதி என்னை ஏசலாம்… பிழை எனில் மன்னிப்பு கேட்பேன். இல்லை எனில் மறுத்துரைப்பேன். பந்தி பந்தியா ரணிலை வச்சு செய்து போட்டு, கடைசில ஒருவரி கோசானை போல என எழுதாமல்🤣.
  18. தினேஷ் ஷாப்டர் வழக்கை துப்பு துலக்கிய இரெட்டை குழல் துப்பாக்கிகள் நீங்களும் சாத்ஸ்சும் @satan யாழ்கள ஜேம்ஸ்பாண்ட் + எம். நீங்களே எங்களை சுட்டினால்? அந்த ரக்பி பிளேயர் பெயர் வசீம் தாஜுடீன்.
  19. உண்மைதான்…2/3, மீதி எல்லோர் மீதும் வெறுப்பு ….இதை வைத்து, இவர்களை கொண்டே வேலையை முடிப்போம் என இந்தியா நினைப்பது போல் உள்ளது. மேற்கின் அரசியலில் only Nixon can go to China. என ஒரு விடயம் சிலாகிக்கப்படும். சீனப்புரட்சிக்கு பின் மேற்கின் குறிப்பாக அமெரிக்க ஒழுங்கில் இருந்து சீனா வெகு அந்நியப்பட்டு நின்றது. 1965 களில் பலரும் அமெரிக்கா சீனாவுடன் நேரடி உறவை ஆரம்பிக்க வேண்டும் என கருதினர். ஆனால் கம்யூனிச சீனாவை ஏற்பது முதலாளிதுவ, பனிப்போர் கால அமெரிக்காவில் உள்ளூர் அரசியலில் ரிஸ்க்கான விடயம். இடது சார்பு ஜனநாயக கட்சி இதை செய்தால் எதிரிக்கு விட்டு கொடுப்பதாக பிரச்சாரம் செய்யப்படும். ஆகவே கடும் கம்யூனிச எதிர்பாளரான நிக்சந்தான் இதை செய்யமுடியும் என்பதே இதன் பொருள். அப்படித்தான் நிக்சன் அமெரிக்க-சீன உறவை மீள ஸ்தாபித்தார். அதே போல் ஜேவிபி அளவுக்கு புலிகளை தவிர இலங்கையில் இந்தியாவை எதிர்தவர்கள் எவரும் இல்லை. ஆகவே தாம் கேட்பதை அதிக எதிர்பின்றி தர ஜேவிபியால் முடியும் என இந்தியா நினைக்கக்கூடும்.
  20. என்ன புலவர் இதெல்லாம் - குல தெய்வம் கோவிலில் எது ஐயர்? போனது ஆகம முறைப்படியான கோவிலுக்கு. அங்கே ஐயர் சமஸ்கிருத மொழியில்தான் முழுவதும் செய்தார். அண்ணை பவ்வியமாக நின்றார். யாழில் ஒரு திரியே ஓடியது. தேவையான வீடியோக்கள் முழுவதும் அதில் உண்டு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.