Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. பிக்குவின் ஆன்மா வந்த இடம்…. அடுத்ததென்ன? விகாரைதான். நாககோவில சுத்த பூமியட்ட சாதரேங் பிலிகமினு🙏
  2. அருமை. இப்படி கிடைக்கும் சந்தர்பத்தில் எல்லாம் கிறிஸ்தவ தமிழர்களை நோண்டுபவர்கள்தான், காலம் மாறி விட்டது, அனுரவின் வரவோடு நாம் பெளத்த-சிங்கள பேரினவாதத்தோடு இசைந்து வாழ வேண்டும் என்றும் புதிய ஸ்வரம் இசைக்கிறார்கள். கூடவே வாழ்ந்து, கொடுமைகளை அனுபவித்து, மத நிறுவனமாகவே போராட்டத்தில் பங்கெடுத்து, மாவீரர்களையும், தளபதிகளையும் தந்த சக தமிழரிடம் காட்டாத நெகிழ்வை - பெளத்தபேரினவாதிகளிடம் காட்டுகிறார்கள். வெட்கக்கேடு!
  3. 3ம் தடவையாக சொல்கிறேன். இப்படி தேர்வத்தாட்சி அதிகாரி செய்ய அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. படிவம் சொல்லப்பட்ட முறையில் பூர்த்தியாக்கபட்டிருப்பின் ஏற்பார். இல்லை என்றார் மறுப்பார். ஒவ்வொரு வேட்பாளரின் பின்புலத்தை, தகுதியை, தகுதியின்மையை சோதிப்பது அவர் வேலை அல்ல. அப்படி சோதித்தால் அவர் தன் அதிகார வரம்பை மீறியவராவார். டயனா கமகே, கீதா குமாரசிங்க இவ்வாறு இரெட்டை குடியுரிமை இருக்கும் போது போட்டியிட்டார்கள். ஆனால் பின்னர் நீதிமன்று அவர்களை பதவி நீக்கியது. எவரும் குற்றவாளி இல்லை. அருச்சுனாவின் தெரிவு முறையானதா இல்லையா என்பதே கேள்வி. அவர் விண்ணப்பத்தில் பிழை விட்டார். அருச்சுனா விண்ணப்பத்தில் பிழை விடவில்லை. ஆனால் போட்டியிட தகுதியில்லாத போது போட்டியிட்டு வென்றுள்ளார் (என்பதே வழக்கு).
  4. மன்னிக்கவும். இங்கே என்ன வழக்கு போடப்பட்டுள்ளது என்ற உங்கள் புரிதல்தான் மிக தவறானது. இங்கே அருச்சுனா சட்டத்தை மீறி குற்றம் இழைத்தார் - “குற்றவாளி” - என எந்த வழக்கும் பதிவாகவில்லை. அருச்சுனா தெரிவான முறை தேர்தல் சட்டங்களை மீறியதாக உள்ளது என்பது மட்டுமே வழக்கு. முடிவு? மீறி இருப்பின் - அவர் பதவி இழப்பார். இல்லை எனில் தொடர்வார்.
  5. நல்ல தகவல்களும், சரியான முடிவும் (conclusion). மேலே தமிழர் மட்டுமே சூரியனுக்கு படையல்/வணக்கம் செய்வது என்ற ஒரு கருத்தை @குமாரசாமி எழுதி இருந்தார். திரி திசை திரும்பகூடாது என்பதால் அதை பற்றி எழுதவில்லை. ஆனால் எகிப்தியர், ரோமர், கிரேக்கர்கள் சூரிய கடவுள்களை பெயர் சொல்லி அழைத்து, கோவில், விழா எல்லாம் எடுத்துள்ளார்கள். அதே போல் பேகன் என அழைக்கப்பட்ட வட, மேற்கு ஐரோப்பிய ஆதி குடிகள் winter solstice, summer equinox எனப்படும் சூரியன் மிக நீண்ட, மிக குறுகிய நேரம் தென்படும் நாளை புனிதமாக கருதி வழிபட்டுள்ளனர். பிரித்தானியாவின் மிக முக்கிய சுற்றுலாதலமான Stone Henge எனும் கற்களால் ஆன கட்டுமானம் - இப்படி ஒரு நிகழ்வு நடந்த இடமே. அதே போல் மாயன், அஸ்டெக் சமூகங்களும் சூரிய வணங்கிகளே. உருவமில்லாத ஒற்றை கடவுள் (monotheistic ) கொள்கை நோவாவோடு தொடங்க முன், உலகில் பல பாகங்களில் சூரிய வணக்கம் முதன்மையாய் இருந்துள்ளது.
  6. நான் தந்த லிங்கில் appendix A யில் உள்ள படிவத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கான விடையை மட்டுமே அதிகாரி சரி பார்ப்பார். இந்த தகவல்கள் சரியில்லை எண்டால் மட்டுமே அவரால் நிராகரிக்க முடியும். சிலவேளை அவரின் அரச தொழிலுக்கு ஆப்பு வைக்க ஒரு வழக்கை தாக்கல் செய்திருக்க கூடும். இது உங்கள் நிலைப்பாடு. ஆனால் சட்டதின் படி பிழை அருச்சுனாவில்தான் என்பதை மட்டுமே நான் எழுதுகிறேன். வழக்கு போட்டது ஊழல்வாதிகள் என்பதால், சட்டமோ, தேர்தல் அதிகாரியோ பிழை என கூற முடியாது. ஓம் நானும் கூட தெளிவில்லாத தகவல்களை வைத்தே எழுதுகிறேன். சட்டம் தன் கடமையை செய்யும் போது யார் சரி, பிழை என தெரியவரும். ஆனால் ஒன்று - இந்த வழக்குக்கு ஒரு முகாந்திரமும் இல்லை எனில், உடனடியாக தள்ளுபடி செய்யுமாறு அருச்சுனா கோரி இருக்கலாம். அப்படி கோராதது…யோசிக்க வேண்டிய விடயம்.
  7. செக்ஸ் சைக்கோ சீமான் நம்மை, கட்டுரையாளரை விட பெரியாரை பற்றி தெரிந்தவர். ஆனால் தனக்கு பேட்டா கிடைத்தால் தமிழ் சமூகத்துக்கு எந்த கெடுதலையும் செய்ய தயங்கமாட்டார்.
  8. இது தேர்தல் ஆணையாளரின் வேலை அல்ல. ஒவ்வொரு வேட்பாளரையும் அவர் துப்பு துலக்கி கொண்டிருக்க முடியாது. வேட்புமனு கொடுப்பது மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியிடம். கீழே உள்ள லிங்கில் appendix A யில் உள்ள படிவத்தை நிரப்பி அதோடு ஜேபி கையெழுத்து வைத்து கொடுக்க வேண்டும். தகவல்கள் சரியாயின் வேட்புமனு ஏற்கப்படும். ஒரு எம்பியாக நிற்க அடிப்படை தகுதிகள் என்ன, அவற்றை எப்படி தன்னளவில் பூர்த்தி செய்வதை உறுதி செய்வது என்பது வேட்பாளரின் வேலை. இந்த சின்ன விடயத்தை கூட கிரமமாக செய்யமுடியாதவர்கள் இப்படி வழக்குகளை சந்தித்து பதவி இழப்பார்கள். இதில் சட்டத்திலோ, நடைமுறையிலோ, தேர்தல் ஆணையத்திலோ எந்த தவறும் இல்லை. தவறு முழுக்க அருச்சுனாவில்தான். https://www.srilankalaw.lk/revised-statutes/alphabetical-list-of-statutes/862-parliamentary-elections-act.html தொழில் இருந்தால்தானே நிறுத்த🤣. ——— சட்டத்தில் ஒரு பாரபட்சமும் இல்லை. மிக சுருக்கமாக—- அரசாங்கத்திடம் சம்பளம் பெற்றால் தேர்தலில் நிற்க முடியாது. இடை விடுப்பு ஆவது எடுக்க வேண்டும். பல ரீச்சர்கள் இப்படி இடை-விடுப்பு எடுத்து விட்டு போட்டியிட்டனர் என நினைக்கிறேன்.
  9. இருவரையும் விலக்கி விட்டு மயூரன் வந்தால் நல்லா இருக்கும்.
  10. அரச ஊழியர் தேர்தலில் போட்டியிட்டால் அவர் போட்டியிடும் போதே அரச ஊழியராக இருப்பதால் அதன் மூலம் ஊழல் செய்து வென்றார் என்ற தோற்றப்பாட்டை தவிர்க்க இந்த சட்டம் உருவானது என நினைக்கிறேன். பிரித்தானியாவில் சிவில் சேவையில் இருப்போர் எம்பி தேர்தலில் நிற்கமுடியாது. பதவி விலக வேண்டும். அதன் பின்பே தேர்தலில் நிற்கலாம். பிரித்தானியாவில் NHS இல் டாக்டராக இருந்தபடியே எம்பி தேர்தலில் நிற்கலாம். பலர் நின்று, வென்று, அதன் பின்னும் பகுதி நேரமாக டாக்டர் வேலை செய்துள்ளனர். ஆனால் NHS நேரடி அரச திணைக்களம் அல்ல. Arms length body என அழைக்கப்படும் அரச கட்டுப்பாட்டில் ஆனால் சுயாதீனமாக இயங்கும் அமைப்பு. ஆனால் இது போல அன்றி இலங்கையில் அரச வைத்திய துறையும் நேரடியாக சுகாதார அமைச்சின் கீழ் வரும் பிரிவு என்பதால் - அரசிடம் சம்பளம் வாங்கும் டாக்டர்களும், அரச ஊழியர் ஆகிறார்கள் என நினைக்கிறேன். இப்படி என்றால் ஜனசக்தி கொடுப்பனவு எடுப்பவர்கள்+பிச்சைகாரர் மட்டும்தான் தேர்தலில் போட்டியிட முடியும். சட்டம் பிரிட்டிஷ் காலம் தொட்டு இருக்கிறதென நினைக்கிறேன். தற்காலிகமாக வேலை விடுப்பு எடுத்து விட்டு தேர்தலில் நிற்கவும் சட்டத்தில் இடமுள்ளதாக சொல்கிறார்கள். இவற்றை செய்யாமல் இரெண்டு தோணியில் கால் வைத்தது அருச்சுனாவின் பிழை. சட்டத்தினது அல்ல. அருச்சுனாவே தான் வெல்வார் என எதிர்பார்க்கவில்லை - ஆகவே ஏன் சும்மா வேலையை விடுவான் என நினைத்துள்ளார். இப்போ அதுவே ஆப்பாகி விட்டது.
  11. அந்தோணியார் கோவிலுக்கு நீங்கள் மட்டும் அல்ல, பல இந்துக்கள் போவார்கள். ஆனால் அந்தோனியாரை சைவக்காரன் தூக்கப்போறான் என கத்தோலிக்கர் பயப்படுவதில்லை. இங்கே யாரும் யாரிடமும் அனுமதி கேட்டு பொங்கல் வைக்க வேண்டியதில்லை. அது தமிழர் பண்டிகை. அதில் குமாரசாமி போலவே சூசைதாசனுக்கும் சம உரிமை உண்டு. கு.சா வீட்டில் பொங்கலாம், அல்லது கோவிலில் பொங்கலாம். சூ.தா வீட்டில் பொங்கலாம் அல்லது தேவாலயத்தில் பொங்கலாம். பொங்கல், தாலி கட்டுவதை, சேலை அணிவதை, பொட்டு வைப்பதை, வேட்டி உடுப்பதை போல ஒரு மதம் சாரா பண்பாட்டியல் கூறு. இது என்னுடையது நீ புதிதாக செய்கிறாய் அல்லது செய்யாதே, தேவாலயத்தில் செய்யாதே என்பது எல்லாம்…. சைவத்தின் கூறுகள் = தமிழின் கூறுகள் என்ற ஆறுமுகநாவலர் உருவாக்கிய யாழ்பாணிய, வெள்ளாள ஆதிக்கவாதத்தின் வெளிப்பாடுதான்.
  12. அது சாவகர் சேரி என்றும் சொல்கிறார்கள். சைவம் வர முதல் அங்கே சாவக மதத்தை பின்பற்றியே மக்கள் வாழ்ந்திருக்க கூடுமாம். சாவகர் ஒரு வகை சமணர் பிரிவு. வள்ளுவர் கூட சாவகராக இருக்கலாம் என்போருமுளர். https://www.tamilvu.org/courses/diploma/p202/p2023/html/p2023203.htm
  13. நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன? நாளைக்கே டெல்லியில் காங்கிரஸ் ஆட்சி என்றால் அண்ணன் அங்கும் நாக்கை தொங்க போட்டபடி போவார். #சின்ன கருணாநிதி
  14. பி…ஜே….பி…. மூன்றே எழுத்துத்தானே…இதை சொல்ல ஏன் நேற்று சமைந்த பொண்ணு மாரி வெக்கப்படுறியள் 🤣.
  15. இல்லை நான் சொன்ன அனைத்து புலம்பெயர் நிகழ்வுகளும் பொங்கல் விழாவாகவே நடைபெறுகிறன. பொங்கல் பொங்குவது கூட நடப்பதுண்டு. வசதி கருதி பொங்கல் வாரநாளில் வந்தால் - அதை வார இறுதியில் கொண்டாடுவார்கள். இதில் எனக்கு உடன்பாடில்லை. அதை தள்ளி வைத்த பொங்கல் என்று வேணுமானால் சொல்லலாம். பொங்கல் சம்பந்தமான விழா அல்ல. உப்பிடி உங்களை போன்றோர் அறளை கதையள் கதச்சதும் கூட முஸ்லிம்கள் தாம் தமிழர் அல்ல சோனகர் என்ற தனி இனம் என பிரிய காரணமாகியது. இப்போ தமிழனாக உணரும் கிறிஸதவரையும் துரத்தி அடியுங்கோ. இப்படியே எல்லாரையும் துரத்தி, துரத்தி, கடைசியா சாவச்சேரி வெள்ளாம் ஆட்கள் மட்டும்தான் தமிழன் எண்டு வந்து நிப்பியள் 🤣.
  16. எப்படி எந்த இந்து/சைவ நூலிலும் பொங்கல் ஒரு சைவ/இந்து விழாவாக சொல்லப்படவில்லையோ அப்படியே பைபிளிலும் பொங்கல் ஒரு கிறிஸ்தவ பண்டிகை என சொல்லப்படவில்லை. அப்படி கிறிஸ்தவர் உரிமை கோருவதும் இல்லை. ஆகவே இந்த பயம் அவசியமற்றது. பொங்கல் இந்து, கிறிஸ்தவ தமிழர்களால் அவர்கள் மத அனுஸ்டானங்களை மீறாமல் கொண்டாடப்படும் ஒரு பண்பாட்டு நிகழ்வு. இதை எந்த மதமும் சுவீகாரிக்க முடியாது. சில தெரிந்த, பல தெரியாத தகவல்களுக்கு நன்றி🙏.
  17. அனைவருக்கும் பொதுவான பண்பாட்டு நிகழ்வுதான் பொங்கல் எனும் போது அதை எங்கே கொண்டாடினால் என்ன? ஹரோவில் கவுன்சிலே மண்டபம் எடுத்து பொங்கல் விழா கொண்டாடுவார்களே? கட்டாயம் வீட்டில்தான் பொங்கல் வைக்க வேண்டும் என்பது விதி அல்லவே? தேவாலயத்தின் தொழுபவர்கள் தமிழர்கள். பொங்கல் தமிழ(ரும்)ர் பண்பாட்டின் அங்கமான harvest festival விளைச்சல் விழா. இதில் விளைச்சலுக்கு அத்தியாவசியமான சூரியனுக்கு நன்றி செலுத்தப்படும். பல கிறிஸ்தவர் தாலி கட்டுவது உங்களுக்கு தெரியாதா? சைவ உருவங்கள் இல்லாமல் குறிசு அல்லது பதக்கங்கள் போட்டு கட்டுவார்கள். அவர்களும் தமிழர்களே என நீங்கள் சொல்வது உண்மை எனில் - தாலி கட்டுவது, பொங்கல் வைப்பது போன்ற பண்பாட்டு விடயங்களை, தமது நம்பிக்கைக்கு ஏற்ப சிறிய மாறுதல்களுடன் கடைப்பிடிப்பது அவர்கள் உரிமை அல்லவா?
  18. 👆👇 அரசாங்க வேலையில் இருக்கும் வக்கீல் எனில் அவரும் அர்ஜுனா போலவே டீல் பண்ணபடுவார்.
  19. பொங்கல் என்பது….. Wait for it…..: தனியே தமிழருக்கு மட்டும் உரிய ஒன்றல்ல…. வடகிழக்கு பருவ மழையால் பயிர் செய்து பயன் பெறும் அனைத்து இந்திய துணைக்கண்டத்தின் மக்களும் கொண்டாடும் பண்டிகை. இதை பற்றி யாழில் முன்பே எழுதியுள்ளேன். ஜனவரி 13-16 க்கு இடையில் இந்திய துணை கண்டத்தின் கிழக்கு கரையில் இருப்போர் கொண்டாடும் பண்டிகை. அதில் மிகவும் ஸ்பெசலாக கொண்டாடும் கூட்டம் நாம். அவ்வளவுதான். அதில் கூட தமிழ் நாட்டில் பொங்கல் நான்கு நாள் கொண்டாட்டம். எமக்கு ஒருநாள். மாடு வைத்கிருப்போருக்கு 2 நாள். https://www.holidify.com/collections/harvest-festivals-in-india ———— பொங்கல் இயற்கையை வழிபட்டு நன்றி சொல்லும் நாள். சைவம், கிறிஸ்தவம், இஸ்லாம் இந்த புதிய பைத்தியங்கள் எம்மை பீடிக்க முதல் நாம் இயற்கை வணங்கிகள். கடவுளாக அன்றி எம்மை பாலிக்கும் சக்தியாக இயற்கையை வணக்கிய தத்துவ மார்க்கத்தினர். அணங்குகளும், பேய்களும், சூரனும், நில தெய்வங்களுமே எமது இறை. அதன் தொடர்சியே பொங்கல். இப்படி தனியே தமிழர் திருவிழாவும் இல்லாத, சைவத்துக்கு சம்பந்தமே இல்லாத பொங்கலை - தமிழ்-சைவர் கொண்டாட்டம் என நீங்கள் சுவீகாரம் செய்ய முனைவது அபத்தமானது. ————- எனக்கு தெரிய கிறிஸ்தவர்கள் என் அயலில் கொண்டாடியதில்லை. ஆனால் இங்கே பலர் தம் சொந்த அனுபவத்தை எழுதும் போது அதை நான் எப்படி மறுதலிக்க முடியும்? சில இடங்களில் முன்பே கொண்டாடி இருக்கலாம். சில இடங்களில் புதிதாக கொண்டாட தொடங்கி இருக்கலாம். இதெல்லாம் ஒரு பொருட்டா? எது முக்கியம்? நாம் எல்லோரும் தமிழராக உணர்ந்து கொண்டாடும் ஒரு போக்கு வலுப்பெறுகிறது. இன ஒற்றுமைக்கு இது மிக நன்மையானது. இதை வரவேற்கவேண்டியது மட்டுமே நம் கடமை. பெளத்த-சிங்களவன் ஏனைய சிங்களவரை இப்படித்தான் உள்வாங்குவான். என்ன செய்வது வட்டத்தை குறுக்கி, குறுக்கி அழிந்துபோவது இந்த இனத்தின் சாபக்கேடு.
  20. சீமான் கருத்தை சோ ராமசாமியும் சொன்னார்.. மன்னிப்பு கேட்க வைத்தது திக! பத்திரிகையாளர் மணி தகவல் Yogeshwaran MoorthiUpdated: Wednesday, January 15, 2025, 12:53 [IST] பெரியார் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்வைத்த கருத்துகள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரியாரிய இயக்கங்கள், அரசியல் கட்சியினர் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் சீமானுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையிலும், பெரியார் தொடர்பான விவாதத்திற்கு வரத் தயார் என்று தொடர்ந்து சர்ச்சையாக பேசி வருகிறார். Also Read இந்த விவகாரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் மணி பேசுகையில், பெரியார் குறித்து ஏன் இப்படியெல்லாம் பேசுகிறார் என்று புரியவில்லை. என்ன காரணம் இருந்தாலும், சீமான் பேசுவது தவறு. பேசுவதற்கான ஆதாரத்தை கேட்டால், நீங்கள் ஆதாரத்தை பூட்டி வைத்துள்ளீர்கள். நான் எப்படி கொடுப்பது என்று பதில் அளிப்பது ஏற்புடையதல்ல. இது தவறான, அராஜகமான பதில். Internet Blackout On January 16, 2025? The Simpsons 'Prediction' | Oneindia Tamil 52 ஆண்டுகளுக்கு முன் மறைந்த ஒரு தலைவரை பற்றி ஒரு கருத்து சொல்கிறீர்கள். அப்படி சொல்லும் போது, உங்களிடம் தகுந்த ஆதாரம் இருக்க வெண்டும். ஆதாரம் இல்லாததற்கு ஆயிரம் காரணங்களை அடுக்கினாலும் ஏற்புடையதல்ல. இது சட்டத்தின் பார்வையிலும் நிற்காது. சீமான் கூறிய கருத்தை மறைந்த பத்திரிகையாளர் சோ ராமசாமியும் கூறி இருக்கிறார். உனக்கு உடல் இச்சை வந்தால் பெற்ற தாயோ, மகளோ, சகோதரியோ.. அவர்களுடன் உறவு வைத்து கொண்டு சந்தோஷமாக இரு என்று பெரியார் கூறியதாக சீமான் பேசி இருக்கிறார். பெரியார் அப்படி எங்கேயும் சொல்லவில்லை என்பது தான் உண்மை. இதற்கான ஆதாரம் சீமானிடம் இருக்க வேண்டும். இதே தவறை 1973ல் சோ ராமசாமியும் செய்தார். Recommended For You அப்போது திராவிடர் கழகம் சோ ராமசாமி மீது வழக்கு போட்டது. அதன்பின் நீதிமன்றத்தில் சோ ராமசாமி மன்னிப்பு கேட்டார். இந்த மாதிரியான விஷயங்களை பேசும் போது ஆதாரம் இருக்க வேண்டும். பெரியாரின் அனைத்து எழுத்துகளையும் பொதுவெளியில் வைக்க மறுக்கிறார்கள் என்பது நியாயமான குற்றச்சாட்டு தான். ஆனால் சீமான் பேசுவது சட்டப்படியும் தவறு தான். சீமானுக்கு இது தெரியவில்லை. அவரின் கருத்துகள் தண்டனைக்குரிய குற்றம். இதனை ஏன் சீமான் செய்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால் இது ஒரு அரசியல் தற்கொலை. பெரியாரை வழிக்காட்டியாக ஏற்கிறோம் என்று பேசியவர் தான் சீமான். தற்போது பெரியார் சொல்லாத ஒன்றை சொல்லியதாக சீமான் பேசுவது தான் தவறு. பெரியாரை விமர்சிக்க வேண்டிய அவசியம் கிடையாது. தமிழக அரசியலில் அவரை விமர்சித்து ஒரு வாக்கும் யாருக்கு கிடைக்காது. 8 சதவிகித வாக்குகள் கிடைத்திருக்கும் நிலையில், அதனை கெடுத்து தலையில் மண்ணை போட்டுக் கொள்ளும் பணியை தான் சீமான் செய்கிறார். இதன் காரணமாக நாம் தமிழர் கட்சிக்குள்ளும் அதிருப்தி இருப்பதாக கருதுவதாக தெரிவித்துள்ளார். https://tamil.oneindia.com/news/chennai/cho-ramasamy-said-sorry-in-the-court-for-the-comments-against-periyar-which-is-also-spoken-by-seema-671313.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards
  21. உங்களுக்கு ஹெல்மெட் கோல் எழுதிய கடிதத்தின் தமிழாக்கத்தை வெளியிட உடான்ஸ்சாமி ஆசைப்படுகிறார். அனுமதி கிடைக்குமா🤣.
  22. கயவன், ஊழல் மன்னன், கருணாநிதி வைகோ விடயத்தில் தன் மகனுக்காக செய்தது மாதிரி…. பிகு நான் தலைவர் என ஏற்கும் தகுதி இந்த உலகில் ஒருவருக்கு மட்டுமே உண்டு. அது யார் என்று யாழுக்கு தெரியும். பெயிண்ட் வாளியை இறக்கி வைக்கவும்🤣.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.