Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்

Everything posted by goshan_che

  1. அப்ப இதை உங்கள் முந்திய கருத்தில் சொல்லவில்லை? சிலை வைத்தற்காக அல்ல, விகாரை கட்டியதற்கு எதிராகவே கருணாகரம் குரல் எழுப்புகிறார் என்று சொல்லாமல்… சிலை எப்பவோ வைத்தாயிற்றாம் எண்டதோடு மீதி உண்மையை முழுங்கியது நீங்கள். இப்போ என்னை விதண்டாவாதி என்கிறீர்கள். பிகு சிலையோ, அதைசுற்றி சின்ன கோவிலோ இரெண்டும் எதிர்க்கப்பட வேண்டியதே. முன்பு சிலை வைத்துவிட்டார்கள் என்பதால் இப்போ கோவில் கட்டுவதை எதிர்க்காமல் விட முடியாது. இங்கே மீதி உண்மையை (இப்போ கட்டப்படுவது கோவில்) நீங்கள் எழுதாமல்….ஏதோ இரு வருடம் முதல் நடந்த விடயத்தை இப்போ எதிர்க்கிறார்கள் என்பது போல் எழுதியது கபடத்தனமானதில்லையா?
  2. இந்த முறை ஆற்றை கலியாணவீட்டு பலகாரமோ…🤣 @Paanch @குமாரசாமி @தமிழ் சிறி சுப்பர் லூப் தொழில் நுட்பத்தில் சாத்தியமாம். மனித உடல் தாங்குமா?
  3. பிறென்ன @Nathamuni யையும் கூட்டி வந்தாயிற்று. இனி டீம் பிரிச்சு விளையாட வேண்டியதுதான்😂.
  4. 😀 ஓம் நான் சந்தித்த போதும் இதைதான் சொல்லி ஒரே கொம்பிளைண்ட்😂 அது சரி உங்க இன்னொரு ஆள் நீங்களும் நானும் ஒரே ஆள் இரெண்டு வேற ஐடியில வாறம் எண்டு கம்பு சுத்தினவர் கண்டனியளே😂. ஒரு மனிசன் நம்பி போன் நம்பரை தந்தா இப்படியா கயித்தை விழுங்க வைப்பியள் நாதம்😂.
  5. சரி சரி அலுவலை வடிவா முடிச்சுக்கொண்டு கெதியா வாங்கோ. வந்து ரெண்டு சுஜ ஆக்கம் போட்டால்தான் சரி வரும். நிர்வாகத்துக்கும் குளிர் விட்டுப்போச்சு😂
  6. கண்டது சந்தோசம் நாதம்ஸ். ஓம் உண்மை எண்டு தெரியும். கு சா அண்ணை படம் அனுப்பினவர். பார்க்க அப்படியே எம்ஜிஆர் மாரி தக தக எண்டு மின்னுறியள் போங்கோ. பிகு எப்படி யூகே எலெக்சன் நான் சொன்ன மாரியே ரிசல்ட் வந்துச்சு? கன்சேவேடிவின் தோல்வியின் அளவு உங்களை அதிர்ச்சிக்கு ஆக்கி இருக்கும்?
  7. தவறான செய்தி. சித்திக் ஹாம்ஸ்டெட் தொகுதி லேபர் எம்பி. 2010 இல் ஆட்சியை இழந்த லேபர் மீள 2024 இல்தான் ஆட்சிக்கு வந்தது. அதன் பின்தான் சித்திக் திறைசேரியில் ஜூனியர் மினிஸ்டர் ஆகினார். ஆகவே 2013 இல் அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு ஊழல் செய்திருக்க முடியாது. —— ஹசீனாவும், சித்திக்கின் தாயும் சகோதரிகள். ஹசீனானாவின் பினாமியின் விலைமிகு இலண்டன் வீட்டில் சித்திகின் தாய் வாடகை இன்றி வாழ்ந்தார், மற்றும் ஹசினாவுக்காக புட்டினை போய் சந்தித்து ஹசீனா-புட்டின் டீல்களுக்கு சித்திக்கின் தாய் ஏஜெண்டாக இருந்தார் என கதை சிலகாலமாகவே அடிபடுகிறது. சித்திக் பலகாலம் எம்பி எனவே எம்பியாக இருந்த போது ஏதும் தவறுகள் நடந்திருப்பினும் பதவி இறக்காமல் விடமாட்டார்கள். ஆனால் தாயார் செய்ததவறுக்கு அவரை தண்டிக்க முடியாது.
  8. யாரும் வாந்தி எடுக்கவில்லை என்றால் - அந்த வாந்தியை induce பண்ணி வரவழைக்க மாத்திரைகள் இருக்கிறது. இந்த திரியில் பாவிக்கப்பட்ட மாத்திரை… விடுதலை புலிகள் - மாற்று இயக்க போராளிகளின் குடும்பங்களை கைது செய்தார்கள்….அவர்களது தலைவரின் இருப்பு பற்றிய paranoia வால் அவதிபட்டார்கள்….இவற்றால் அவர்களும் அசாத் போல நடந்து கொண்டார்கள்…. இது பொய் என எப்பவோ இந்த திரியில் நிறுவபட்டு விட்டது. ஆனால் இந்த மாத்திரை தனது induce பண்ணும் வேலையை செவ்வனே செய்துள்ளது. நீங்கள் காட்டிய படம் பிளாக்பாஸ்டர் ரேஞ்சில் இருந்தது. மதிவதனி உங்கள் உறவின் சகோதரி என்றால்…. அருணா அன்ரியும் உங்கள் உறவின் சகோதரிதான்….சரிதானே? ஒரு ஜெனரல் நாலேஜுக்காக கேட்டேன்.
  9. பேசுவதில் பயனிருந்த ஒரு காலம் இருந்தது. கந்தன் கருணை முதல், அருணா, நாவாலி கண் நோய் டெலோ போராளிகள், மாத்தையா குரூப் போராளிகள் என பலதை இதே யாழில் எழுதி, வாதிட்டு பத்து வருடத்துக்கும் மேல் ஆகிறது. இதற்கான தேவையும், காலமும் இப்போ முடிந்தே விட்டது. இல்லை என்றால் சங்கிலியன் 600 பேரை கொண்டது தவறா இல்லையா என வாதடலாம். பிரித்தானியாவில் 30 வருடம் கழிய பெரும்பாலான அரச ரகசியங்களையே வெளியிடுவார்கள். 2024-1986 =38 வருடங்கள்.
  10. யாரை கோட் பண்ணி பத்தி பத்தியாக எழுதினேன்? அக்னிக்கு. 👆 இது உங்களுக்கு.
  11. ரொஹிங்கா முஸ்லிம் அகதிகள் என நினைக்கிறேன். ஒரு காலத்தில் கடலால் வெளியேற முடியாது எமது மக்கள் வல்வளைக்கப்பட்ட இடம். இன்று அதே இடத்தில், அதே மக்கள் இன்னொரு பாவப்பட்ட இனத்தை கடலில் இருந்து மீட்டு உதவி செய்கிறார்கள்.
  12. நீங்கள் நினைப்பது போல் நானோ ரசோ அண்ணாவோ சும்முக்கு இதை அனுப்பி வைக்கும் அளவுக்கு அவரை தெரின்வர்கள் அல்ல🤣. அதே போல் சுமந்திரன் மீதான அதிருப்தி ஏன் என்பது பற்றி @ரசோதரன் எழுப்பிய கேள்விகள் மிக நியமானது. அதற்க்கான உங்கள் பதிலும்.
  13. சரி இனி என் நிலைப்பாட்டை சொல்கிறேன். அதற்கு முன் இரெண்டு பொறுப்பு துறப்புகள். 1. சும்மா எழுதுகிறேன் என்பதால் என்னை போராட எல்லாம் கூப்பிட கூடாது. பிறகு எழுதுவதையும் நிப்பாட்டி போடுவன். முன்னர் இன்னொரு திரியில் எழுதியது போல கூட்டாக புலம்பெயர்தேசத்தில் போராடும் போது ஒரு தலை என்பதுதான் என உச்ச எல்லை. 2. கீழே நான் சொல்லும் நிலைப்பாடு - வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக தமிழ் தேசிய கட்சிகளை தேர்தலில் ஆதரிக்கும் மட்டும்தான். அவர்கள் கைவிடாமல் இவற்றை கைவிடும் அல்லது கைவிட கோரும் அதிகாரம் எமக்கு இல்லை என்பது என் நிலைப்பாடு. அதே போல் அவர்கள் கைவிட்டால் நானும் அக்னி, ஐலண்ட் போல உஜாலாவுக்கு மாறி விடுவேன். ஆனால் அந்த நிலைப்பாட்டை பற்றி பத்தி எழுதி மினகெடமாட்டேன், தேவையும் இல்லை. என நிலைப்பாடு 1. காணாமல் போனோர் போராட்டத்தை கைவிட வேண்டும். இல்லை. இப்போ காணாமல் போனோர் என எவரும் இல்லை அனைவரும் கொல்லப்பட்டார்கள் என நான் நம்புகிறேன். ஆனால் - கேள்வி 4க்கு இது முக்கியம். 2. நிலம் மீளளிப்பு கோரிக்கையை கைவிட வேண்டும்? இல்லை. இதை தனியார் சட்ட, போராட்ட வழிகளில் போராடி பெற வேண்டும். இது அந்த மக்களின் தனியார் காணிகள். இதை அவர்கள் மீட்க மிகுதி அனைவரும் உதவ வேண்டும். 3. யுத்த குற்ற விசாரணையை கைவிட வேண்டும்? இல்லை - மேலே குசா அண்ணை சொன்னது போல் - இதில் இந்தியாவை மீறி இலங்கை தண்டிக்கபட வாய்ப்புகள் அரிது. ஆனால் இதுவும் கேள்வி 4 க்கு முக்கியம். 4. காணி அதிகாரம் கோரலை கைவிட வேண்டும்? இல்லை - இந்த கோரிக்கைதான் சகலதுக்கும் அச்சாணி. இதை கைவிட்டால் - குறைந்த பட்ச அதிகாரபரவலாக்கலை கூட கைவிட்டதற்கு சமன். காணாமல் ஆக்கப்பட்டோர், யுத்த குற்ற விசாரணை, புலம்பெயர் மென்வலு இவை அனைத்தையும் leverage பண்ணி இந்த அதிகாரத்தை பெறுவதே நமக்கான குறைந்த பட்ச தீர்வாக இருக்க முடியும். 5. பொலிஸ் அதிகாரம் கோரலை கைவிட வேண்டும்? ஆம் - ஒரு கடைசி பேரம் பேசலில் காத்திரமன, மீள பெற முடியாத காணி அதிகாரத்தை பெறும் போது, ஒரு காம்ப்ரமைசாக, இனவாதிகளை சாந்தபடுத்த. இதை விட்டு கொடுக்கலாம் (வேறு வழியில்லை - தமிழர் பொலிசை எந்த சிங்களவனும் ஏற்க போவதில்லை). ஆனால் இதன் போது ஒரு பொறுப்பு கூறல் மிக்க, சேவை பிராந்தியங்களின் இன பரம்பலை ஒத்த பொலிஸார்ரை கொண்ட தேசிய பொலிஸ் சேவை அமைவதை வலியுறுத்தலாம்.
  14. பதிலுக்கு நன்றி. உங்கள் நக்கலில் உள்ள கேள்விக்கு நானே பதில் சொல்லி விடுகிறேன். இந்த நக்கல் நானே யாழில் பலதடவை அடித்ததுதான்🤣. புலம்பெயர் தமிழர் அப்படி எல்லாம் வரமாட்டார்கள். போராட்டம் நடக்கும் போதே எஸ் ஆனவர்கள் (வன்), இப்போ வருவார்களா (வேனா). அப்படி வந்தாலும் மனிசிமாரை டிவோஸ் எடுத்து போட்டுத்தான் வரவேண்டும் - பிள்ளயள் சொல்லவே வேண்டாம். உங்களுக்கு ஒன்று விளங்க வேண்டும் புலம்பெயர் தமிழர் ஊரின் அரசியலில் ஈடுபாடு காட்டுவது என்பது மிக வேகமாக அருகி வரும் ஒன்று. யாழில் எழுதுவோரை பார்த்து நீங்கள் முழு சமூகமும் இப்படி என எண்ணக்கூடாது. முதல் புலம்பெயர் தலைமுறை கொஞ்சம் கொஞ்சமாக விடை பெறுகிறது. ஆகவே ஊரில் உள்ள உங்களுக்கு இந்த புலம்பெயர் சமூகத்தின் வெளிநாட்டு இருப்பின் மூலமாக ஒரு அரசியல் அளுத்தம் கொடுத்து ஏதேனும் நல்லது நடப்பதற்கான காலச்சாளரம் (window of opportunity) மூடிக்கொண்டே வருகிறது. யூதர்கள் போல் இந்த உணர்வை, இருப்பின்பால் வரும் மென்வலுவை, அடுத்த சந்ததிகளில் நாம் கட்டிகாப்போமா, பயன்படுத்துவோமா என்பது பலத்த கேள்விக்குரியதே. புலம்பெயர் தமிழர் நாமும் அப்படி ஓர்மமாக இருக்க வாய்ப்பில்லை, நாம் அப்படி இருந்தாலும் புலத்தில் இருக்கும் நீங்கள் உங்கள் வாயால் போட்டடிப்பீர்கள், இதை இனவாதிகள் மேலும் தூண்டி விடுவார்கள். இதுதான் இந்த புலம்பெயர் தமிழர் மென்வலுவின் போக்குவழி (trajectory). நிற்க, ஆனால் மேலே கேட்ட கேள்வி இப்போதும் புலம்பெயர் தேசத்தில் ஊர் அரசியலில் ஆர்வமாக இருப்போரிடம் + ஊரில் இருந்து எழுதுவோரிடம். ஊரில் உள்ள மக்களில் இன்று வரை (கிழக்கில் அறுதி பெரும்பான்மை) தமிழ் தேசிய அரசியலை தேர்ந்து எடுத்துள்ள நிலையில் - அவரவர் நிலைப்பாடு என்ன என்பதையே. உண்மையில் சாத்தான் சொன்னது போல இது பொறி வைக்கும் கேள்வி அல்ல. நீங்கள் நக்கலாக இல்லை என சொன்னாலுக், மேலே உள்ள அனைத்தையும் ஆம் என்றே பதில் அளிப்பீர்கள் என தெரிந்ததே. அதுதான் யதார்தம். என்றைக்கு நீங்கள் கருணா/பிள்ளையான் வாக்காளராக மாறினீர்களோ அன்றே நீங்கள் இந்த நிலைப்பாட்டுக்கு வந்து விட்டீர்கள். ஆனால் உங்களிடம் வெளிப்படைத்தன்மை உள்ளது. அதே போல் வட கிழக்கு தமிழ் வாக்காளர் பெரும்பான்மை இந்த கேள்விகளுக்கு இல்லை என்றே வாக்களிக்கும் என கடந்த தேர்தல் முடிவை வைத்து ஒரு எடுகோளை எடுக்கலாம் என நினைக்கிறேன். இந்த சூழ்நிலையில் புதிதாக சிந்திப்போம் என கூறும் கு.சா அண்ணை, சாத்ஸ் போன்றோரை நோக்கியே எனது கேள்வி. நீங்கள் புத்தர் சிலை முளைத்தால், இனி என்ன செய்வது என கடந்து போக அல்லது அனுகூலம் வரின் நிண்டு கும்பிட தயாரான ஆள்…. ஆனால் உங்களை போல அல்ல இவர்கள். புத்தர் சிலை முளைத்தாலும் கெம்புகிறார்கள், அனுர இனவாதியாக செயல்பட்டார் என்பதையும் ஏற்கிறார்கள். ஆனால் புதிதாக முயல்வோம் என்கிறார்கள். அவகாசம் கொடுப்போம் என்கிறார்கள். ரணில், மைத்திரி காலத்தில் சுமந்திரன் எடுத்த நிலைப்பாட்டை எடுக்கும் இவர்களுக்குத்தான் என் கேள்விகள். உங்களுக்கோ, (எனது பார்வையில்) @islandக்கோ அல்ல. தமிழ்தேசியத்தை பொறுத்த மட்டில் நீங்கள் இருவரும் பூட்ட கேசுகள். ரதி அன்ரியையும், யாழ், வன்னி, மட்டகளப்பில் என் பி பிக்கு போட்டவர்களையும் இந்த பூட்ட கேசு லிஸ்டில் சேர்க்கலாம். எனது கேள்வி இப்போதும் தமிழ் தேசிய அரசியல் நிலைப்பாட்டில் இருந்த படி அனுர ஆதரவு நிலையிலும் இருப்போருக்க்கே. ஊரில் தமிழ்தேசிய கட்சிகளுக்கு வாக்கு போட்டோருக்கும் என் கேள்விகள் அல்ல. அவர்கள் நிலைப்பாடும் உங்களை போலவே தெளிவானது. ஆனால் உங்களினற்கு நேர் எதிரானது. எனக்கு எழும்பி பல்லு தீட்டவே சோம்பலா கிடக்கு…🤣
  15. 🤣 இதே கேள்விகளுக்கு 2009 க்கு முன் டக்கு, டக்கு எண்டு எவரை பற்றியும் நினைக்காமல் பதில் சொல்லி இருப்பியள். இப்ப யோசிக்க வேண்டி கிடக்கு. நான் எந்த முத்திரை குத்தலுக்கும் பயப்படாமல் என் பதிலை நாளை எழுதுகிறேன்.
  16. யாராவது சுமந்திரனிடம் தொடர்பில் இருந்தால் சாத்ஸ்சின் இந்த பதிவை அவர் கண்ணில் காட்டி விடுங்கள். யாழில் பலர் சுமனை எதிர்க்க பல மறைமுக காரணங்கள் இருப்பது வெளிப்படை. ஆனால் சாத்ஸ் மேலே எழுதி இருப்பது ஒரு சராசரி தமிழனின் மனக்குமுறல்.
  17. ஏன் பதில் சொன்னால் உங்கள் அரசியல் வங்குரோத்து தனம் வெட்ட வெளிச்சமாயிடும் எண்டு பயமா சாத்ஸ்🤣.
  18. ஒரு போனை போட்டு…சார் நீங்க சும்மா தாஸா இல்ல லார்ட் லபக்கதாஸா எண்டு கேளுங்கோ🤣
  19. என்ன அண்ணை சுமந்திரன் மாரி கதைக்கிறியள்🤣. இப்போ நீங்கள் எமது மக்களுக்கு பரிதுரைக்கும் “நடக்க வேண்டியது வேலை” என்ன? 1. காணாமல் போனோர் போராட்டத்தை கைவிட வேண்டும். ஆம்? இல்லை? 2. நிலம் மீளளிப்பு கோரிக்கையை கைவிட வேண்டும்? ஆம்? இல்லை? 3. யுத்த குற்ற விசாரணையை கைவிட வேண்டும்? ஆம்? இல்லை? 4. காணி அதிகாரம் கோரலை கைவிட வேண்டும்? ஆம்? இல்லை? 5. பொலிஸ் அதிகாரம் கோரலை கைவிட வேண்டும்? ஆம்? இல்லை? இது உங்களுக்கு மட்டும் அல்ல. புதுசா எதுவும் பண்ணுவோம் எண்டு சொல்லும் சகலரும் விடையளிக்கலாம்.
  20. சந்திரிக்கா காலத்தில் criminal defamation சட்டம் கொண்டு வந்தார்கள். ஆனால் அது இப்போதும் உள்ளதா தெரியவில்லை. சிவில் வழக்கில் பணத்தை செலுத்தாவிட்டால் கோர்ட் enforcement action எடுக்கும். இது சொத்ததை பறிமுதல் செய்வது, வருவாயில் பிடிப்பது என பலவகை படலாம். வந்தவரை இலாபம் என எடுப்பார்கள். கேட்க்கும் தொகையை நியாயப்படுத்த வேண்டும். ஆகவே ஒரு மன்னிப்புடன் பலர் சமாதானம் அடைவர். பலதும் out of court settlement. ஆனால் தக்க ஆதாரம் காட்டினால் பணமாக நஷ்ட ஈடு வழங்கப்படும். கேட்கும் தொகை அல்ல. கோர்ட் நிர்ணையிக்கும் தொகை.
  21. புலவர் ப்ரோ, கருணாநிதி குடும்பமே பக்கா பிராடு. ஆனால் நாங்கள் இன்று பேச எடுத்து கொண்ட விடயம் - சீமான். ஆகவே அதை பற்றி மட்டும் பேசுவோம். சீமான் ஒரு காலத்தில் கடவுள் மறுப்பாளர் பின்னர் மாறிவிட்டார். அதுவும் ஓக்கே. ஆனால் தமிழ் தமிழ் என காட்டு கத்தல் கத்தும் யோக்கியனுக்கு மகனுக்கு மட்டும் சமஸ்கிருதத்தில் பூசை, ஆங்கிலத்தில் கல்வி எண்டால் இவர் கருணாநிதி போல் இன்னொரு பிராடுதானே? பிகு கருணாநிதி கள்ளன் எனவே சீமான் மாற்று என்கிறார்கள். கருணாநிதி செய்த அதே தில்லாடங்கடி வேலையை சீமானும் செய்கிறாரே என ஒரு டவுட் கேட்டால்… கருணாநிதி செய்யலாம் சீமான் செய்ய கூடாதா என்கிறார்கள்🤣. அப்ப மாற்று எல்லாம் ஏமாற்றுத்தானா கோப்பால்.
  22. ஏன் அந்த கோவிலுக்கு போனார்? ஏன் சமஸ்கிருதத்தில் பூசை செய்ய அனுமதித்தார்? ஏன் இடை நிறுத்தவில்லை? மறுத்தால் ஏன் வெளியேறவில்லை? அண்ணனுக்கு வீரம் வாயில் மட்டும்தானா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.