Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. உண்மைதான். வதந்தியாம். மனிசன் சேர்பிக்கேட்டும் கையுமா வந்து சி ஐ டி யிடம் கம்பிளைண்ட் கொடுத்துள்ளார். https://www.newswire.lk/2024/12/16/energy-minister-shows-his-degree-certificate/
  2. தேவையில்லாத பென்ச்மார்க். பாராளுமன்றம் என்பதே சாதாரண குடிகளின் இல்லம்தான் (house of Commons, House of Representatives). அப்படி இருக்க பா . உ என்ற தகுதி மட்டுமே போதுமானது. தம்மை ஒரு technocratic அரசாங்கம் என பாவனை செய்யும் பில்டப் இது.
  3. அனுர வின் வலு எண்டு சொல்லவே மாட்டம். வாலு எண்டு சொல்லுவம்🤣 கலாநிதியா, மருத்துவரா (வைத்தியகலாநிதி). ஜெயக்கொடியும் படிச்சு முடிக்காமல் எஞ்சினியர் எண்டு போட்டவராம் எண்டு கதை ஓடுது. எஞ்சினியர் என்பதை பெயருக்கு முன்னால் போடும் எனக்கு தெரிந்த ஒரே நாடு இலங்கை😆 சபாநாயகர் கலாநிதி என்பதால் பாராளுமன்றத்துக்கு மதிப்பு கிடைக்காது அண்ணை. உறுப்பினர் நடக்கும் விதம்தான் அதை தீர்மானிக்கும்.
  4. “சில நேரம் தொழில் செய்யும் இடத்தில் கூட்டமாக வந்து நிண்டு, யோவ் வாய்யா வெளியே எண்டு சவுண்டு விடுவார்கள், அப்படியான சந்தர்பங்களில் எதுவும் செய்யாது மிக்சர் சாப்பிட வேண்டும்” -கோஷானின் நேற்று வெளியிடப்பட்ட தொழில் ரகசிய குறிப்பில் இருந்து - 🤣
  5. குறைந்த பட்சம் இரெண்டு யூனியன் பிரதேசமாவது வேணும் யுவர் ஆனர் 🤣. 🤣இது உண்மையான பட்டம் என நினைக்கிறேன். முன்பே சட்ட முதுகலை முடித்திருந்தார்….முனைவருக்கு படிக்கிறார் என வாசித்த நியாபகம். முடித்துவிட்டார் போலும்.
  6. இஸ்ரேல் தமிழன் அல்ல யூதன். யாரை எங்கே எப்படி டீல் பண்ணுவது என்பது அவனுக்கு தெரியும்.
  7. இதை யூட் அண்ணா @கற்பகதரு பத்து வருடத்துக்கு முன் எழுதிவிட்டார். அப்போ அவரோடு முரண்டு பிடித்த நீங்கள் இப்போ அதே வழிக்கு வந்துள்ளீர்கள். காலம் தாழ்தியாவது சரியான பஸ்சில் ஏறியுள்ளீர்கள். உங்கள் நிலைப்பாடு சரியானதுதான். ஆனால் வழித்தால் மொட்டை வைத்தாம் குடுமி என்பது போல் கண்ணை மூடி கொண்டு கயவர்களை நம்பினால் (சீமான், அனுர) மேலும் தீமையே விளையும்.
  8. மிக்க நன்றி. இதை வாசிக்க ஆங்கிலத்தில் லூஸ் கனன் என்பது போல் அருச்சுனாவும் ஒரு focus இல்லாமல் சுழட்டி அடிப்பதாக படுகிறது.
  9. நன்றி. அந்த உரையாடலை நினைத்து கொண்டு உறங்கசென்றிருப்பீர்கள் போலும். கல் நெஞ்சகாரன் நாதமுனியா அல்லது நான் சுகம் விசாரித்ததை சொல்லாத நீங்களா🤣. தனி மடலில் எப்படி பட்ட படத்தை அனுப்பி இருப்பீர்கள் என நினைத்து ஒரே குபீர்…🤣 இதுக்கேன் மன்னிப்பு. தவறுகளுத்தான் மன்னிப்பு 🤣. செல்லிய எல்லாம் செல்லிப்போட்டு, மன்னிப்பு கேக்கிய இல்லியா🤣
  10. 1. முருகன், ஜெய்சங்கர், நிர்மலா என தமிழ் பேசுவோரை வைத்து வரவேற்று ஒரு சின்ன ஜேர்க்கும் கொடுக்கப்பட்டுள்ளது. 2. தரை வழி பாலம், எண்ணை குழாய், காற்றாலை, புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் உட்பட்ட 5 ஐ நிறைவேற்றினால் - 13 ஐ வலியுறுத்த மாட்டோம் என சொல்லப்பட்டதாம். ஹபரண ல காந்தி… ஹரவபொத்தானயில மா வோ கேம் ஒவர்
  11. பிகு2 இங்கே புலிகள் மாற்று இயககங்களை தடை செய்தார்கள் என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் அசாத்தை போல ஒரு குடும்ப ஆட்சியை அல்லது தனிமனிதனை நிலை நிறுத்த அவர்கள் அப்படி செய்யவில்லை. ஏனையோர் துரோகம் இழைகிறார்கள், ஆகவே தடை செய்ய்ய வேண்டும் என்பதே எப்போதும் அவர்களின் நியாயமாக இருந்தது. இதோடு முரண்படலாம். நான் முரண்படுகிறேன். ஆனால் இதை வைத்து அசாத்துடன் ஒத்த கோடு கீற முடியாது.
  12. இந்த பாலசிங்கம் சொன்ன விடயம் - தலைவர் பற்றிய கட்டுரை ஒன்றில் பிரித்தானிய ஊடகமான இண்டிபெண்டெண்டிலும் வந்துள்ளது. To explain the Tiger's internecine massacres, the English-speaking Tamil Tiger ideologue Anton Balasingham once remarked: "Down the history of liberation struggles all over the world, the big fish swallows the smaller fish. In the end, only the big fish remains." Prabhakaran was determined to make sure that he was the only big fish around. ஆனால் இதுவும் இந்த கட்டுரையாளருக்கு சொன்னதாக இல்லை. இதிலும் எந்த பேட்டியில் சொல்லப்பட்டது என்ற தகவல் இல்லை. என்ன சூழமைவில் சொல்லப்பட்டது என்ற தகவலும் இல்லை. “உலக சுதந்திர போராட்ட வராலாறுகளின் நெடுகிலும் பெரிய மீன் சின்ன மீனை விழுங்கும், இறுதியில் பெரிய மீன் மட்டுமே மிஞ்சும்”. இதுதான் பாலசிங்கம் சொன்னதா சொல்லப்படும் வசனம். இதில் அவர் இயக்க முரணை குரிப்பிட்டார் என்பது கட்டுரையாளரின் வியாக்கியானம். இதன் சூழமைவு இவர்கள் சொல்வது போல் எனினும் இதில் இருந்து புலிகள் மாற்று இயக்கங்களை தடை செய்தமைக்கு தலைவரின் இருப்பு, பாதுகாப்பு பற்றிய மனபிராந்தியே காரணம் என கூற முடியாது. நேதாஜியும், காந்தியும் போராடினார்கள். காந்தி என்ற பெரிய மீன் நேதாஜியை விழுங்கி விட்டது. பட்டா வும் ஹமாசும், ஹமாஸ் என்ற பெரிய மீன் பட்டாவை விழுங்கியது. லெனினும் டிரோஸ்கியும் போராடினார்கள் ஆனால் ஸ்டாலின் என்ற திமிங்கிலம் டிரொஸ்கியை விழுங்கியது. இந்த அடிப்படையில்தான் புலிகள் பலரின் கைப்பொம்மைகளாக இருந்த அமைப்புக்களை தடை செய்து - தாம் ஏக பிரதிநிதிகள் ஆகினர். இதுதான் பாலசிங்கம் (சொல்லி இருந்தால்) சொன்னதன் சூழமைவு. https://www.independent.co.uk/news/obituaries/velupillai-prabhakaran-leader-of-the-tamil-tigers-1687239.html பிகு ஆதார சுட்டலுக்கு நன்றி 🙏
  13. தகமை உண்டு…திறமை….பார்ப்போம். அவையடக்கம் சுத்தமாக இல்லை.
  14. இங்கே இஸ்ரேலால் அழிக்கப்பட்டது ரஸ்யா கைவிட்டு சென்ற ஆயுதமா அல்லது அசாட்டின் ஆயுத கிட்டங்கியா என்பது பற்றி இருவேறு விதமாக கூறுகிறார்கள்.
  15. வாசகர் கவனத்துக்கு! இங்கே டைம் மகசீனில் வெளிவந்த கட்டுரை என லங்கவெப் வெளியிட்ட கட்டுரை ஒன்று ஆதாரம் போல் காட்டப்பட்டது. இந்த கட்டுரை தலையங்கத்தை வைத்து - டைம் மகசீனின் ஒரிஜினல் கட்டுரையை என்னால் காண முடியவில்லை. லங்காவெப் இலங்கை புலநாய்வாளர்களால் வழிநடத்தப்பட்ட புலிகள் மீது உண்மைக்கு புறம்பானதை, அல்லது நடந்ததை பெருப்பித்து காட்டும் பிரச்சர போரில் முக்கியமான ஒரு அங்கம் என்பது பலருக்கும் தெரிந்த விடயம்தான். மிக முக்கியமாக இந்த கட்டுரையிலும் பாலசிங்கம் சொன்ன பேட்டியின் நகலோ அல்லது பேட்டி வெளிவந்த இதழ் பற்றியோ தகவல் ஏதும் இல்லை: ஆகவே இன்னும் பாலசிங்கம் எந்த பேட்டியில் இப்படி சொன்னார் என்பதும், இப்படி சொன்னாரா என்பதுமே நிருபிக்கபடவில்லை. நான் இங்கே பாலசிங்கம் கொடுத்த பேட்டிக்கான ஆதாரம் கேட்க காரணம் உள்ளது. அவர் சொன்னதாக சொல்லப்பட்ட ஆங்கில சொலவடையை பலவாறு அதன் சூழமைவை வைத்து வியாக்கியானம் பண்ணலாம். இதை இங்கே முதலில் தூக்கி வந்தவர், முன்பே செனேட்டர் லிண்ட்சே கிரேம் உட்பட பலர் ஆங்கிலத்தில் சொன்ன விடயங்களை தலை கீழாக புரிந்து கொண்டு அதற்கு சதிகோட்பாட்டு விளக்கம் கொடுத்தவர். ஆகவே பேட்டியை தக்க ஆதாரத்தோடு காணும் வரை - இது ஆதராமாக கருதப்படவியலாது.
  16. இதே போல் சஜித்தும் நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டு வரும் கைஒப்பம் இட்டவர்…. அவர் London School of Economics இல் வெளிநாட்டு மாணவனாக காசு கட்டி சேர்ந்தும் படிக்க முடியாமல் ஓடி…பின்னர் அமெரிக்காவில் போய் ஏதோ உடான்ஸ் படிப்பு படித்தவர் என முன்பே ஒரு சர்ச்சை எழுந்தது. எப்படி இவர்கள் எல்லாரும் இனவாதிகள் என்பது உண்மையோ அப்படியே இவர்கள் எல்லோரும் கள்ளர்கள் என்பதும். இதில் ஜேவிபியும் அடக்கம். ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.
  17. இருந்தாலும் அனுர ஒண்டும் கிழிக்க மாட்டார். ஏன் என்றால் அவரும் ஒரு இனவாதிதான். நீங்கள் இன்னும் கொஞ்சகாலம் கழிய “சிங்களவன் ஏமாத்தி போட்டான்” எண்டு கையை பிசையத்தான் போறியள். உங்களுக்கும் சுமந்திரனுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. அவர் ரணில் காவடி. நீங்கள் அனுர காவடி. விமர்சிக்காவிட்டாலும் மாறாது. முன்பே சொன்னதுதான் இதெல்லாம் இலங்கை தேசியம் சார்ந்த விடயங்கள். எமது அடிப்படை பிரச்சனை இவை இல்லை. அதற்கு அனுரவிடம் இருப்பது ஒரே தீர்வுதான் - இனவாத அணுகுமுறை.
  18. மன்னிக்கவும் நீங்கள் கொஞ்சம் ஸ்லோ என்பதை மறந்து விட்டேன். அந்த மானசீக போட்டி வேட்பாளருக்கு அல்ல, கட்சிக்கே நடந்தது. அதில் அருச்சுனாவுக்கு போட்டேன் என சொன்னது அவர் கட்சியை. அந்த திரியிலேயே பதிந்துள்ளேன்.
  19. அப்ப அனுர இனவாதிகளை சாந்த படுத்த மட்டும் நாம் பெளத்த கோவில் விடயத்தை சும்மா எதிர்த்து விட்டு அடங்கி விட வேண்டும்? இவை எல்லாம் அனுர இனவாதி இல்லை என்ற உங்கள் கற்பனை நிலைப்பாட்டில் எழுத படுபவை. அனுரவும் ஜேவிபியும் பச்சை இனவாதிகள். அவர்கள் இதை ஒருப்போதும் தடுக்கப்போவதில்லை. மேலும் அனுர இனவாதத்தை எதிர்க்க வந்தாரா அல்லது சாந்தபடுத்த வந்தாரா ? 2/3 பெரும்பான்மை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என சகலதையும் கொண்டுள்ள இப்போதே ஒரு துரும்பை கூட இவர்கள் தூக்கி போடவில்லை. இனி போக போக இறங்குமுகம்தான். எந்த அரசுக்கும் honeymoon period என தொடக்க காலத்தில் எதிர்ப்பு குறைந்த்ஹ் இருக்கும். கடினமான வேலைகளை அப்போதான் செய்வார்கள். இவர்களால் இப்பவே இனவாதிகளை ஒண்டும் செய்ய முடியவில்லை, இன்னும் சில வருடத்தில் இதை விட வெறுப்பை சம்பாதித்த நிலையில் என்னத்தை செய்ய முடியும். நீங்களும் அப்போ வந்து அனுர பாவம் இனவாதிகள் எதையும் செய்ய விடவில்லை என சப்பை கட்டு கட்டுவீர்கள். இனவாதி, இனவாத கட்சியிடமே இனவாதத்தை கட்டுபடுத்த கோரும் மடமை போல் வேறில்லை.
  20. நாட்டின் தலைவரை எல்லாம் நீங்களோ நானோ தேர முடியாது. அது சிங்கள வாக்குகள் தீர்மானிக்கும் விடயம். நாம் எந்த தேர்தலிலும் எமது நலனுக்கு ஏற்றதை மட்டுமே செய்யலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.