Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. கோஷானுக்கு ஏட்டிக்கு போட்டியாக எழுதவா இங்கே வருகிறீர்கள்? ?? போன பஸ்சுக்காக கைகாட்டி பிரயோசனமில்லை, அது திரும்பி வராது. வருகிற பஸ்ஸில் ஏறினால் ஊர் போய்ச்சேரலாம்.
  2. யாரை முன்னாள் ஜனாதிபதிகளாக நியமிக்க வேண்டுமென மக்களை மக்களை கொண்டு முடிவு செய்தவர்கள் அவர்களின் பிரதிநிதிகள். இம்முறை அவர்களின் கோரிக்கையை மக்கள் செவிமடுக்கவில்லை, அவர்கள் தாங்களாகவே அனுரா மீது நம்பிக்கை வைத்து சுயமாக தெரிந்தெடுத்துள்ளார்கள். இவர்கள் சுட்டிக்காட்டியவர்களுக்கு குத்தி கஸ்ரப்பட்டதும் ஏமாற்றப்பட்டதும் மக்களே. அவர்கள் தன் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டியது அனுராவின் கடமை. அவரை தெரித்தெடுத்த மக்களுக்கும் அவருக்குமுள்ள பிரச்சனை. அனுராவை விட வேறு யாரை தெரிந்தெடுத்திருக்க வேண்டுமென நீங்கள் நினைக்கிறீர்கள்? அவர்களால் பட்டது காணாதா? சூடு கண்ட பூனை அடுப்பங்கரையை நாடாது. முடிந்தால் உங்களுக்கு விரும்பியவரை தேர்ந்தெடுத்து காட்டுங்கள், அதற்காக அடுத்த தேர்தல்வரை நீங்கள் காத்திருக்க வேண்டும். தேவையில்லாமல் என்னோடு பொருதுவதே உங்கள் வேலை என்பது வாசிப்போருக்கு தெரியும். இலங்கையை ஒரு இனவாதி மதவாதி ஆளவேண்டுமென்பதே சிங்களத்தின் கொள்கை. நல்லாட்சி என்று கூறிகொண்டோரை ஈஸ்ரர் குண்டுத்தாக்குதல் மூலம் கலைத்து ஆட்சியை கைப்பற்றினர், இப்போதும் தமது ஊழல் வெளிவருவதற்குமுன் ஒரு தாக்குதல் நடத்த ஏற்பாடு நடத்தப்படுகிறது போல் தெரிகிறது. அப்படியொன்று நடந்தால்; அனுரா கொல்லப்படுவார் இல்லை சிறைபிடிக்கப்படுவார், இல்லையேல் நாமல், ராஜபக்ச குடும்பம் வாழ்நாள் சிறை செல்வார்.
  3. இவர் யாருடன் கருது மோதல் இல்லாமல் இருந்திருக்கிறார்? இவரை கட்சிக்குள் நுழைத்த சம்பந்தருடனேயே முரண்பட்டிருக்கிறார்.
  4. நான் சொல்லவந்ததை சொல்லியே தீருவேன், அது எனது சுதந்திரம், அதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை. உங்களைபோன்றவர்கள் உங்களை தொடர்வர். என்னை நீங்கள் அனுரா காவடி என்று கூறலாம் விடலாம் அது உங்களைப்பொறுத்தது. உங்களின் குணம் இங்கு எல்லோருக்கும் தெரியும். ஆனால் அனுராவிற்கு பெருகும் ஆதரவை யாராலும் தடுக்க முடியாது. அனுரா இன்னும் தனது அரசியல் பதவிக்காலத்தை முடிக்கவில்லை, அவரது அரசியல் பதவிக்காலம் முடியும்போது அவர் யார் என்பது புரியும். எத்தனையோ இனவாதம் தலைக்கேறிய ஜனாதிபதிகள் ஆட்சி செய்த போது இல்லாத வெறுப்பு ஏன் அனுராமீது என்றுதான் எனக்குப்புரியவில்லை, அப்படியெனில் அவர் கடந்த ஜனாதிபதிகளை விட மாற்றி யோசிக்கிறார் என்பது மட்டும் தெளிவு. ஒருவேளை டக்கிளஸ், சிவநேசதுரை சந்திரகாந்தனை விசாரணைக்கு அழைத்தது நம் யாழ் போராளிகளுக்கு பிடிக்கவில்லைபோலும்.
  5. அரசியல் தீர்வு தருவதாக யார் யாரிடம் சொன்னது? புலிகளை அழித்த பின் இனப்பிரச்சனைக்கு தீர்வு என சர்வதேசத்திடம் கொடுத்த வாக்கையே நிறைவேற்ற முடியவில்லை. இலங்கையில் இனப்பிரச்சனையே இல்லை இருப்பதெல்லாம் பொருளாதாரப்பிரச்சனை என்று சொல்லுகிறார்கள் அதே சர்வதேசத்திடம். புலிகளை அழித்தாயிற்று தமிழருக்கு அரசியல் அதிகாரம் என்பது இல்லை, அவர்கள் வந்தேறுகுடிகள், இங்கு வாழ விரும்பினால் வாழலாம் அரசியல் உரிமை எல்லாம் கோர முடியாது என்று கூறியது சிலரின் காதில் விழவில்லையா அல்லது நடிக்கிறார்களா புலிகளை குற்றம் சொல்வதற்காக.
  6. ம்... இதை நான் சொன்னால் ஏளனம். வெட்கமில்லையா என்று கேள்வி. புத்தன் சொன்னால் நொட்டை. குரு செய்தால் குற்றமில்லை, சிஷ்யன் செய்தால் குற்றம்.
  7. ஹ்ஹஹ்ஹா.... உங்களின் இந்தக்கண்டுபிடிப்புபோற்தான் எல்லாமும். திருடன் நினைப்பு தன்னைப்போலத்தான் எல்லாரும் என்று. நான் கருத்து வைக்கத்தொடங்கிய காலத்திலிருந்து இப்போதுவரை ஒரே பெயரில்த்தான் எழுதிவருகிறேன், வேறொரு பெயரில் அல்லது இரு பெயரில் எழுத வேண்டிய தேவை எனக்கில்லை, இனியும் வராது. எதுவாக இருந்தாலும் நேரடியாக எழுதுவேன் அந்த துணிச்சல் எனக்குண்டு. இப்போது மடை மாற்றுவது யார்? மாவீரர் மீதான அபிமானம் எனக்கு எப்போதுமுண்டு. அனுரா ஆட்சிக்கு வந்த முதல், மாவீரர் நினைவு அமைதியாக நடந்தேறியது. நீதிமன்றம் அதற்கெதிராக தடையேதும் பிறப்பிக்கவில்லை, போலீசார் தடையுத்தரவு கோரி நீதிமன்றத்தை நாடவில்லை, எடுபிடியில்லை. நான் யாருக்கும் போட்டியாக எழுதவேண்டிய தேவையில்லை. என்னை வம்புக்கிழுப்பது நீங்கள் நான். தவறுகளை சுட்டிக்காட்டும்போது நீங்கள் நித்திரைக்கு போய்விடுவீர்கள், சாதகமாக எழுதினால் வரிஞ்சு கட்டிக்கொண்டு ஓடி வருவீர்கள். நான் ஒன்று எழுதினால் நீங்கள் அதற்கு புறம்பான வேறொன்றை எழுதி நான் மடைமாற்றுகிறேன் என்று கதறுவீர்கள். யார் மடை மாற்றுவது, யார் மற்றவர்களை சீண்டுவது என்பது வாசகருக்கு தெரியும். தன் குற்றத்தை மற்றவர் மேல் திணித்து அவர்களை குற்றவாளியாக்குவது சிலருக்கு கைவந்த கலை. ஹிஹி.....☝நான் யாருக்கும் போட்டியில்லை. எழுத வேண்டியதை வேண்டிய நேரத்தில் எழுதுகிறேன். எனக்குப் பிடித்தவர் என்பதற்காக அவர்கள் செய்யும் தவறை அடக்கி வாசிப்பதுமில்லை, பிடிக்காதவர் என்பதற்காக அவர்கள் செய்யும் நல்லதை கடிந்து கொள்வதுமில்லை. 👇 நான் உங்களுக்கு போட்டியாக எழுதவே வருகிறேனென நீங்கள் கற்பனை பண்ணினால் அது எனது தவறல்ல.
  8. அன்றே நடவடிக்கை எடுத்திருந்தால் இன்றைய சம்பவம் தடுக்கப்பட்டிருக்கும். மாணவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்குகின்றனர். பெற்றோரை பிள்ளைகள் முன் திட்டுவது ஒரு பொறுப்புள்ள ஆசிரியரின் கடமையா?
  9. அனுராவை பாராட்ட வேண்டிய இடத்தில பாராட்டுவதும் தவறு செய்யும் போது சுட்டிக்காட்டி எதிர்ப்பை வெளியிடுகிறேன். இதற்கு ஏன் நான் வெட்கப்படவேண்டும்? நீங்கள் ஒருபக்க சார்பாக என்னை அனுரா காவடி என்று விமர்ச்சிக்கும்போதே, நான் உங்களுக்கு வெறுப்பேற்ற எழுதுகிறேன். சிங்கள கட்சிகளுக்கு தமிழ் மக்களின் முழு வாக்கையும் வாங்கி கொடுத்து, தங்கள் சுயநலனை பார்த்து மக்களுக்கு நடக்கும் கொடுமைகளை தட்டிகேட்காத, நிஞாயப்படுத்திய காவடிகளை விடவா நான் காவடி ஆடுகிறேன்? அப்போ யாரும் இப்படி எதிர்ப்போ, ஏளனமோ செய்யவில்லையே, ஏன்? அவர்களுக்கு வக்காலத்து வேறு வாங்கினார்களே அது மட்டும் ஏன் என அறிய ஆவல்! அவர்களை விட நான் ஏதும் செய்யவில்லையே, எதற்காக இவ்வளவு வக்கிரம் என்மேல்? ஒருவர் என்னை இங்கிருந்து துரத்த இவ்வாறான வசைவுகளை பாடினால், எல்லோரும் சேர்ந்தே நான் கருத்து வைத்தவுடன் என்னை துரத்துவதேன்? மற்றைய ஜனாதிபதிகள் செய்தபோது முனகியவர்கள், மௌனம் காத்தவர்கள் அனுராவின் மீதும் அவரை ஏசாதவரை கண்டு பதறுவது ஏன்? இனி வருங்காலத்தில் தமிழர் பிரதேசங்களில் அனுராவுக்கு ஆதரவு பெருகிக்கொண்டே போகும், அதற்கு காரணம் இந்த காழ்ப்புணர்ச்சி, தமிழ் அரசியற்தலைவர்களின் எசேச்சாதிகாரமுமே. வடக்கு மக்களே அனுராவை அழைத்து பொங்கல் கொண்டாடினார்களே அவர்களை ஏன் அனுரா காவடி என வர்ணிக்கவில்லை? ஆக, சாத்தான் கருத்து வைக்கக்கூடாது ஒழிய வேண்டும், தாங்கள் புகழாதவரை சாத்தான் ஏதும் சொல்லக்கூடாது. அன்பிற்கும் மரியாதைக்குமுரிய ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்க என்று மேலே ஒருவர் குறிப்பிட்டபடி நான் கருத்து வைத்தது தப்பா? அவர் ஏளனமாக வைத்திருந்தால்; நானும் ஏளனமாகவே கருத்து வைத்தேன். இதுதான் சமயம் என்று வந்து விடுவார்கள் விரிந்து கட்டிக்கொண்டு.
  10. இராணுவத்தினருக்கு வரவேற்பு அளித்த இந்தப்பாடசாலைக்கு அண்மையிற்தான் பறாளை முருகன் ஆலயம் உள்ளது, வசதியாக போய்விட்டது. பாடசாலைக்கு அருகில் விகாரை!
  11. பெரும் பகிடி. இவர்களால் முடிந்ததா அவர்களின் மனங்களை வெல்ல? அப்படியிருக்கும்போது இந்த விமர்சனம் அபத்தமானது. சரி சிங்களவரே உங்களை இனி தமது அரசியல் தலைவராக தெரிந்தெடுக்க மாட்டார்கள். அது நமது மக்களின் சாபம். முடிந்தால் முயன்று பாருங்கள்! உங்களை தவறை மற்றவர் மேல் சுமத்தி உங்களை புனிதர்களாக காட்ட முயல்கிறீர்கள், உங்கள் தவறு மக்கள் முன் வெளிப்படுத்தப்படும்வரை. அதற்காகவே சில பொய்களை பரப்பி அரசாங்கத்தின்மீது உளவியல் போராட்டம் நடத்துகிறீர்கள், உங்களை பிடித்து உள்ளுக்குள் போடும்வரை துடிப்பீர்கள். ஒன்று, அனுரா அழிவு இல்லை நீங்கள் அழிவு. அதோடு முடியும் இந்தப்போர். மல்லி! நீங்கள் ஜனாதிபதியாகவே வரமுடியாது, வீணாக கனவு கண்டு அழிந்து போகாதீர்கள். தமிழரை அழித்து ஒழித்தீர்கள், இன்னொரு சந்தர்ப்பம் உங்களுக்கு கிடைத்தால், சிங்கள இனமே அழியும்!
  12. ஆமாம் அப்படி ஒரு காலகட்டத்திலேயே தேசியத்தலைவரும் ஆயுதம் தூக்கி போராடினார். நாம் போராட முடியாத நிலை ஆனால் அவர்களை தவிர்த்திருக்கலாம். தட்டு வைத்து, ஆரத்தி எடுத்து அழைக்கத்தேவையில்லை என்பதே எங்களின் தவிப்பு. எங்களுக்காக போராடியவர்களை அவமதிக்கும் செயல் இது. இராணுவத்தை மரியாதைப்படுத்தும் போதெல்லாம் நம் வீரர்களை குற்றவாளிகளாக்குகிறோம். அன்பிற்கும் மரியாதைக்குமுரிய ஜனாதிபதி சுதந்திர தினத்தில் இராணுவத்தினரை மரியாதை செய்யவில்லை என்கிற குற்றச்சாட்டு வைக்கப்படும்போது, நமது மக்கள் அவர்களுக்கு தட்டு வைத்து, மாலை போட்டு, ஆரத்தி எடுத்து மரியாதை அளித்துள்ளனர். இப்போ அனுராவுக்கு எதிராக தெற்கில் என்ன விமர்சனம் எழும்? அதுதான் எனது கவலையெல்லாம். யுத்த குற்றத்தில் ஈடுபட்ட இராணுவத்தினர் தண்டிக்கப்படுவர் என்று வேறு அறிவித்திருக்கிறார், அவருக்கு நாம் சொல்லும் செய்தியென்ன? அனுரா காவடி என்று ஏளனம் வேறு. தவறை தவறு என சுட்டிக்காட்ட வேண்டிய நேரத்தில் சுட்டிக்காட்டும்போது எனக்கு எதிராக காவடி தூக்குகிறார்கள். இவர்களின் பிரச்சனைதான் என்ன? சாத்தான் எது கூறினாலும் குற்றம் கண்டுபிடித்து விரட்டுவோம் என்பதா?
  13. தம் மக்களை பாதுகாப்பதற்காகவே அவர்கள் ஆயுதம் தூக்கினர். தமிழருக்கெதிரான அடக்குமுறைகளை மறைப்பதற்காக அவர்களை பயங்கரவாதிகளாக்கினீர்கள். இங்கு அடக்குமுறை நடந்தது என்பதை பல அரசியல்வாதிகளும் நீங்களுமே ஏற்றுக்கொண்டே, புலிகளை அழித்த பின் இனப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படுமென்று சர்வதேசத்துக்கு வாக்குக்கொடுத்துள்ளீர்கள். அதிகாரங்களை பகிர்ந்து வாழ மறுத்தினாலேயே நாடு இந்த அழிவை சந்தித்தது என்றும், நிரந்தர பகிர்வு பொறிமுறையை நடைமுறைப்படுத்த இலங்கை தவறிவிட்டது என்றும்.அரசியல்வாதிகள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர். தமிழீழ விடுதலைப்புலிகள் பலவீனமாகக் காரணம் அந்த அமைப்பில் இருந்து பிரிந்து சென்றோர் அரசுக்கு அவர்களைப்பற்றிய தகவல் வழங்கியதே என்று ஒரு சிங்கள அமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளார். சிவநேசதுரை சந்திரகாந்தனும் விநாயக மூர்த்தி முரளிதரனும் விடுதலைப்புலிகளை காட்டிக்கொடுத்தே பிழைத்தனர். கோவணத்துடன் இருந்த அவர்களை வெள்ளை ஆடை அணிவித்து அழகு படுத்தியது திரிபோலி எனும் இராணுவப்பிரிவிலுள்ள ஒரு தனிக்குழு திரிபோலி என்பது 2009 கு பின் அரசியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக அமைக்கப்பட்டது என ஒரு இராணுவப்புலனாய்வு அதிகாரியே ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் இவரும் இவரை சார்ந்தவர்களும் நமது சில நேர்மைவாதிகள் எனும் பெயரில் புலிகளை சாடுவோரும் இன்னும் புலிகளை சாடுகின்றனர். புலிகள் அழிக்கப்பட்ட பின் தமிழர் நாதியற்றவர்கள் ஆனார்கள். ஒரு நல்ல தலைவனே இல்லை அவர்களை தொடர்ந்து வழிநடத்த, அவர்களை வைத்து குறை கூறி தாம் பிழைப்பு நடத்துகின்றனர். சுதந்திரத்தை வென்றவர்கள் இராணுவத்தினரா? பாவம் நாமலும் சில இனவாதிகளும். அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் இனவாதம் மதவாதம் இதைத்தவிர அரசியல் செய்வதற்கு தெரியவுமில்லை, விடயங்களுமில்லை. அவர்கள் என்னதான் செய்வார்கள்? அவர்களிடம் அந்த அறிவு இருந்தாற்தானே வெளிப்படுத்துவதற்கு. அவர்களிடம் என்ன இருக்கிறதோ அதைத்தானே கொடுக்க முடியும். இராணுவத்திற்கு சுதந்திர தினத்தில் முன்னுரிமை அளிக்கப்படவேண்டுமென்றால்; அவர்கள் செய்த மனித உரிமை மீறல்களையும் வெளிப்படுத்த வேண்டும் அதற்கு நாமல் தயாரா? இந்த இராணுவத்தளபதிகளை சில நாடுகள் தடை செய்திருக்கின்றனவே அதை நீக்க இவர் என்னஉறுதியான நடவடிக்கை எடுத்தார் சுதந்திர தினத்தில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டுமென்று அடம்பிடிப்பவர். இவர் இராணுவத்தினருக்காகவா அழுகிறார்? தங்களை ஓரங்கட்டி விட்டார்களேயென புலம்புகிறார், நல்லிணக்கம் மலர்ந்து விடுமோவென அஞ்சுகிறார். மதத்தலைவர்கள் மதத்தைப்பற்றி அதன் கொள்கைகளைப்பற்றி போதிக்காமல் அரசியல், வன்முறைகளைப்பற்றி கதைப்பது கேலிக்கூத்தே, அவர்களை யாரும் அவமதிக்கவே செய்வர். மதத்தலைவர் என்று சொல்லிக்கொள்பவர்கள் மதக்கோட்பாட்டின்படி நடக்க வேண்டும், இல்லையேல் காவியை கழற்றிவிட்டு போராடவேண்டும். விகாரைக்குள் பதுக்கியிருந்துகொண்டு வசதி வாய்ப்புகளை அனுபவித்துக்கொண்டு வன்முறை இரத்தம் பற்றி பேசக்கூடாது, யாரையும் அச்சுறுத்தக்கூடாது, நாட்டை அழிக்கக்கூடாது, அது மதத்துக்கே இழுக்கு. அட இது வேற பெருமை பேச வேண்டுமா? ஆமாம் அவர்கள் நிலத்தில் அவர்களுக்கு சுதந்திரமில்லை இராணுவம் இருக்கிறது. அவர்கள் ஆலயத்தில் சுதந்திரமாக வழிபாடு நடத்தமுடியவில்லை ஆலயங்கள் தரைமட்டமாக்கப்பட்டு விகாரைகள் எழுந்து நிற்கின்றன, அவர்கள் தொழில் வளம் அவர்களிடமில்லை, உறவுகள் இல்லை அதற்கு காரணம் இந்த சுதந்திரம். அந்நியர் நாட்டில் காலடி எடுத்து வைக்காமல் இருந்திருந்தால் நமக்கு இந்த நிலை வந்திருக்குமா? சுதந்திர நாள் நம் மக்களை அடிமையாக்கிய நாள், அதை நாங்கள் அவ்வாறுதான் அனுஷ்டிப்போம். அதை எதிர்க்கும் நீங்கள், நாங்கள் ஏன் சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் அதனால் நமக்கு எங்கே சுதந்திரமுண்டு என்பதை நிரூபியுங்கள். முதலில் சுதந்திரம் என்றால் என்ன வென்று தெரிந்து கொள்ளுங்கள் அதைப்பற்றி கருத்து சொல்வதற்குமுன். சுதந்திரம் என்றால் என்னவென்று தெரியாத ஒரு சட்டத்தரணி.
  14. இராணுவம் இந்த மக்களை அழித்து, பொருளாதாரத்தில் நசுக்கி, உறவுகளை கொன்று, அவர்களின் தொழில் வளங்களை அபகரித்து வாழ விடாமல் செய்து ஏதிலிகளாக்கியது, அதையே சுட்டிக்காட்டுகிறோம். செலவு செய்தது தமிழன், அதை யாரும் நொட்டை சொல்லவில்லை. இராணுவத்தின் அடாவடிகளை, அவர்களால் காணாமல் செய்யப்பட்ட உறவுகளை தேடி அவர்களின் குடும்பத்தினர் தெருவில் அலைகின்றனர் நிஞாயம் தேடி. இன்னொருபுறம் அவர்களுக்கு மாலை, மரியாதை, ஆரத்தி, தமிழரின் நிலங்களில் இராணுவம். நேற்று ஒரு செய்தி படித்தேன், இராணுவம் வெளியேறுவதை வடக்கு கிழக்கு மக்கள் விரும்பவில்லையாம். அதற்கு ஆதாரமாக இந்தச்செய்தி இன்று. ஏழை மக்களின் நிலங்கள் விடுவிக்க சந்தர்ப்பமே இல்லைப்போலுள்ளது.
  15. எதிலும் இராணுவத்தை பொதுச்சேவைகளில் வலிந்து புகுத்தி அவர்கள் மக்களுக்கு சேவை செய்கின்றனர் என மக்களாலும் சர்வதேசத்தாலும் புகழப்படவேண்டும், அவர்கள் செய்த கொலைகள், குற்றங்கள் மறக்கப்பட, மறைக்கப்பட வைக்கவேண்டும், அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை, விசாரணை நடத்தப்படக்கூடாது. பாருங்கள்! சரத் வீரசேகர, விமல் வீரவன்ச, நாமல், பிக்குகள் இனி மேல் பிரச்சாரம் எப்படியிருக்குமென்று. நமது மக்களுக்கெல்லாம் இப்படியான கட்டிடங்கள் கட்டத்தெரியாது. இதற்கு முன் தமிழர் பிரதேசங்களில் எத்தனையோ பாடசாலைகள், கோயில்கள் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டனவே, அப்போதெல்லாம் இல்லாத ஆரவாரங்களும் பாராட்டுகளும் இப்போது ஏன்? ஒன்றை மறைக்க இன்னொன்று. பாடசாலைகளையும் கோவில்களையும் வீடுகளையும் வைத்தியசாலைகளையும் இடித்து தரை மட்டமாக்கியவர்கள், மக்களை அழித்து ஏதிலியாக்கியவர்கள், காணாமல் ஆக்கியவர்கள் இப்போ முன்னிலையில். நாளைக்கு இதற்கு பக்கத்தில் ஒரு விகாரையும் கட்டுவார்கள். முன்பே இங்கு விகாரை கட்ட திட்டமிட்டு சலசலப்பு ஏற்பட்டது, இப்போ தானாகவே சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கிறார்கள் தட்டு வைத்தழைத்து.
  16. ஆமா ..... புலிகள் தடுத்து வைத்திருந்தபடியினாற்தான் சிங்கள இராணுவம் மக்களை அழித்தது. அதுவரை இராணுவம் சிங்கள அரசு தமிழ் மக்களை பாதுகாத்தே வைத்திருந்தனர். அவர்கள் அதிகாரத்தில் கட்டுபாட்டிலிருந்த சிறைச்சாலையில் தமிழ்க்கைதிகளுக்கு என்ன நடந்தது? புலிகளை வெற்றி கொண்ட பின் இராணுவத்தையும் அரசையும் நம்பி கையளிக்கப்பட்ட பொதுமக்களுக்கு என்ன நடந்தது? இனக்கலவரங்கள் யாரால் அவ்வப்போது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது, ஏன் அவ்வாறு நடந்தது? ஆலயங்கள், வைத்தியசாலைகள்மேல் ஏன் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது? யாழ் நூலகம் ஏன் எரிக்கப்பட்டது? கொழும்பு சென்ற தமிழர்கள் இடையில் வாகனத்திலிருந்து இறக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்கள், ரயர் போட்டு எரிக்கப்பட்டனர். அதற்கும் புலிகள்தான் காரணம் என்று சொல்லவேண்டியது. தன் தாய் இனம் செய்த குற்றங்களை மறைக்க புலிகளை இழுத்து மூட வேண்டியுள்ளது.
  17. அன்று எந்த சிங்கள கட்சி ஆட்சிக்கு வந்திருந்தாலும் தமிழ் மக்களை அழித்தே தான் முடித்திருப்பார்கள், அதுதான் நிர்சனம். சர்வதேசமும் நம்மை கைவிட்டிருந்தது. அதிகாரம் படைத்தோருக்கு எதிராக யாரும் எழுந்துவிடக்கூடாது என்பது எழுதாத விதி. ஏன், மஹிந்தா அப்போது பதவிக்கு வருவதற்கு முன், நான் காட்டுக்குச்சென்று பிரபாகரனுடன் பேச்சு நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காண்பேன் என்றார். ஆட்சியேறிய பின் ஊடகவியலாளர் ஒருவர் அதை சுட்டிக்காட்டி கேள்வி கேட்டபோது, காட்டுக்குப்போய் என்னை புலிகள் கொல்லவேண்டுமென எதிர்பார்கிறீர்களா என்று அவர்களையே திருப்பி கேட்டார் மஹிந்த. உண்மைக்கும் சிங்களத்திற்கும் வெகு தூரம், அதனாலேயே புலிகள் ஆயுதம் ஏந்தினர். எவரையும் ஆதரித்து அவர்கையால் அழிவதை விட, நாம் யாரையும் ஆதரித்து பதவியில் வைத்து அழியவில்லை. எம்மை அழிக்காமல் சிங்களம் உறங்காது. புலிகள் உருவாக முதலும் அதுதான் நடந்தது, புலிகளை அழித்த பின்னும் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. புலிகளின் காலத்திலேயே அது தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது. பெட்டிக்கடை அத்தியாயம் முடிந்து இப்போ கஞ்சாக்கடை. இப்படி ஒவ்வொன்றாக தங்கள் இஷ்டத்திற்கு உருவாக்கவேண்டியது. உள்ளத்தில் இருப்பது எதுவோ அதுவே வார்த்தையாக வெளிவரும்.
  18. அந்த தேர்தலில் ரணிலுக்கே ஆதரவு தெரிவிப்பதாக தமிழ் மக்கள் மத்தியில் உத்தேசிக்கப்பட்டிருந்தது. ஆனால் ரணில் என்கிற நரி புலிகளோடு ஓரளவு நட்பு பாராட்டிக்கொண்டு புலிகளுக்கெதிராக ஒரு சர்வதேச வலைப்பின்னலையே ஏற்படுத்தியிருந்தார். தேர்தல் பிரச்சார மேடையில் மிலிந்த மொரகொடவும், நவீன் திஸாநாயக்காவும் தங்கள்கட்சி தேர்தலில் வெல்லும் அதன்பின் இலங்கை இராணுவம் புலிகளுடன் போரிடாது, அமெரிக்க இந்திய இராணுவமே நேரடியாக போரிடும் என்கிற ரகசியத்தை போட்டுடைத்தனர். அதனாலேயே மக்கள் ரணிலுக்கு வாக்குபோடுவதில் இருந்து பின்வாங்க வைக்கப்பட்டனர். அது மஹிந்தவுக்கு சாதகமானது. ரணில், புலிகள் மீது வன்மம் கொண்டார். அந்த தேர்தலில் ரணில் வென்றிருந்தாலும் தமிழ் மக்கள் அழிவு என்பது தடுக்க முடியாது. மஹிந்தரும் அதையே செய்தார். மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு அவர்மேல் உள்ளது. ரணில் வந்திருந்தால் அந்த குற்றச்சாட்டு இலங்கை அரசு மீது வந்திருக்காது தந்திரமாக தவிர்க்கப்பட்டிருக்கும்.
  19. நாடு அந்நியரிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காக பாடுபட்ட இனத்தை ஓரங்கட்டி அடக்கி ஒடுக்கி அந்நியப்படுத்திய நாள் சுதந்திர நாளாம். சுதந்திரத்திற்காக இன்றைய இராணுவம் ஆயுதம் ஏந்தி போராடியதா? சுதந்திர தினத்தை சொந்த குடி மக்களை அடிமையாக்கிய நாளாக கொண்டாட வேண்டுமாம். இவர்களுக்கு இப்போ என்னதான் பிரச்சனை? எதற்கெடுத்தாலும் புலம்பெயர்ந்தோரையும் புலிகளையும் வைத்து பிழைப்பு நடத்துவதே வேலையாகிப்போய்விட்டது. தமிழரும் இல்லையெனில் இவர்களுக்கு அரசியலும் இல்லை, பிழைப்புமில்லை. அதையே எல்லா வேளைகளில் வெளிப்படுத்துகிறார்கள். அனுரா இவர்களை பிடித்து உள்ளுக்கை போடாதவரை ஓரடிதானும் முன்னேற முடியாது.
  20. நான் இங்கு தமிழரசுக்கட்சியே மக்களிடம் இருந்து அகற்றப்படவேண்டுமென குறிப்பிட்டிருந்தேன். யாரையும் பெயர் சொல்லி குறிப்பிடவில்லை. தமிழரசுக்கட்சி என்றால் சுமந்திரன் மட்டுந்தான் என நினைக்கும் சுமந்திரனின் அபிமானிகள், அனுதாபிகள் அதை விளங்கிக்கொள்ளவேண்டும். 2005ல் தேர்தல் புறக்கணிப்பே நடந்தது. எந்த சிங்கள கட்சிக்கும் வாக்களிக்கவில்லை. யாருக்கும் வாக்களிக்கச்சொல்லி மக்களுக்கு வேண்டுகோள் வைக்கப்படவுமில்லை, பிரச்சாரம் செய்யவுமில்லை.
  21. ஆமா ..... சுமந்திரன் வெளியிடும் கருத்துக்கள், எடுக்கும் முடிவுகள், கொடுக்கும் முண்டுகள், சந்திப்புகள் எல்லாம் தமிழ் மக்களின் நிலைப்பாடா? அல்லது தமிழ் மக்களுக்கு சாதகமானதா? எதற்கு உங்கள் சுயநல பதவியாசைக்கு மக்களை இழுக்கிறீர்கள்? ஜனாதிபதி தேர்தலின்போது மற்றைய கட்சிகளை கொலைகாரர், கொள்ளைக்காரர் என்று விமர்ச்சித்தவர், இன்று பதவிக்காக வேறொரு கருத்தை சொல்லி கைகோர்க்கிறார். அன்று சங்குச்சின்னத்திற்கு வாக்குப்போடும்படி மக்களை கேட்க மாட்டோம் என்றவர், இப்போ அவர்களோடு பேசுகிறார் எதற்காக? தனக்கொரு நிஞாயம், அடுத்தவருக்கு வேறொரு நிஞாயமா? இதுதான் சட்டப்புலமையா? அப்போ, சரத் பொன்சேகாவுக்கு வாக்கு போடும்படி மக்களை கேட்டுக்கொண்டது எப்படி நிஞாயமாகும்? தமிழரசுக்கட்சியையே மக்கள் மத்தியிலிருந்து அகற்ற வேண்டும்.
  22. தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சியும் நாங்கள், பேரம்பேசும் சக்தியும் நாங்களே என்று தெனாவெட்டாக எழுபத்தாறு ஆண்டுகள் வீணானதே. அதுதான் தென்னிலங்கை கட்சிகள் தமிழரிடம் காட்சிகள் அரங்கேற்ற காரணம். மக்களை பொன்சேகாவிற்கு வாக்களியுங்கள், மைத்திரிக்கு வாக்களியுங்கள் என்று வழி காட்டியவர்களும் இவர்களே. அதன்மூலம் ஜனநாயகத்தை கட்டியெழுப்ப முடிந்ததா இவர்களால்? சும்மா மக்களை குற்றம் சொல்வது இவர்களின் வழமை. இவர்களும் தவறானவர்களை தெரிந்தெடுக்க மக்களை தூண்டியிருக்கிறார்களல்லவா? இந்த முறை மட்டுமே மக்கள் இவர்களின் தெரிவுக்கு செவிசாய்க்கவில்லை, மற்றைய தெரிவுகளுக்கு இவர்களும் பொறுப்பே. இவற்றின்மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தன்னை தெரிந்தெடுத்த மக்களுக்கு இவர் சாதித்தது என்ன? ஒன்றாக இருந்த கட்சியை சிதைத்ததை தவிர. இருந்த இடத்திலிருந்து, இன்று தையிட்டிவரை முன்னேறியிருக்கிறது இவரின் சட்டத்துறை நிபுணத்துவம் சாதித்தது என்ன?
  23. அர்ச்சுனா போல் ஒருவர் பாராளுமன்றத்திற்கு தேவை என ஒரு அரசியல்வாதி குறிப்பிட்டதாக அறிந்தேன், உண்மை தெரியவில்லை. கூத்துக்கு ஒரு கோமாளி பாத்திரம் வைப்பது உண்டு. அவ்வாறு இப்போது எல்லா இடங்களையும் கோமாளிகள் நிரப்புகிறார்கள். ஆனால் இவர் பொது வெளியில் பேசும் பேச்சுக்கள் முகம் சுழிக்க வைக்கின்றன.
  24. சுமந்திரன் தமிழரசுக்கட்சியிலிருந்து துரத்தப்படவேண்டியவர். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இதற்குள் வலிந்து மதத்தை இழுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. தமிழரசுக்கட்சியை இழுத்து மூடவேண்டுமென அடம்பிடிக்கிறார் அவர். இவரோ பகிடி விடுகிறார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.