Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. அன்று திருகோணமலையில் அடாத்தாக வைக்கப்பட்ட புத்தர் சிலையை பாதுகாப்புக்காக போலீசார் எடுத்துச்சென்றதாக அரசாங்கம் ஒரு கதையை சொல்லி தப்பியது. அதையே இன்று திஸ்ஸ விகாரை விகாராதிபதி பிடித்து கொண்டு, திஸ்ஸ விகாரைக்கு பாதுகாப்பு தரும்படி தொங்கிக்கொண்டிருக்கிறார். ஒரு தடவை தப்புக்கு துணைபோனால், தொடர்ந்து துணைபோகவேண்டியது கட்டாயம். எது வந்தாலும் தலைகுனியாமல் சரியான வழியில் நடந்திருந்தால், தொடர்ந்து நீதியாக செல்ல முடியும். சந்தர்பத்திற்கேற்ப, நிர்பந்தத்திற்கேற்ப சொல்லவும் செய்யவும் முயன்றால் பாதியிலேயே பயணம் முடிந்துவிடும்.
  2. வெட்ட வெளி, பட்ட மரம், தகிக்கும் வெயில், ஒதுங்க இடமுமில்லை, நிழலுமில்லை, வயிற்றை நிரப்ப ஏதுமில்லை, கூடுகட்டி வாழ வசதியில்லை, என்ன செய்யலாமென கூடி ஆலோசிக்கின்றனவா? இருந்தாலும் கூடி சவாலை சமாளிக்க முயலும் பறவைகள்.
  3. அன்றைய ஜெ. வி. பி. நீதிமன்றம் சென்று சாதித்தது. அந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி சில்வா கூறியிருந்தார், நீதிமன்றம் சென்று இதற்கு எதிராக வாதாடி தீர்ப்பை மாற்றலாமென்று.ஆனால் நம்மவர் யாரும் முன்வரவில்லை. வேண்டுமென்றே இருபகுதியும் நடந்து கொண்டன. சட்ட மேதையும் தூங்கிவிட்டார் பாருங்கோ. நாம்தான் பேரம் பேசும் சக்தி, ஏகோபித்த கட்சி என்று கூறி வாக்கு மட்டும் சேகரித்தார்கள்.
  4. கொலிடே தேடி போகும் உங்களுக்கு வேண்டியதுதான் கண்ணுக்கு தெரியும். ஏன் அங்கே நிரந்தரமாக இருக்க முடியவில்லை உங்களால்? கொலிடே போகிறவர்கள் சாதாரண மக்களின் வாழ்க்கையை ஆராய்ந்து தமது கொலிடேயை பாழாக்க விரும்பமாட்டார்கள். சரி, யாராவது வந்தால், வாழ வழியை காட்டுங்கள். எந்தத் தமிழனும் யாழ்ப்பாணம் வரமாட்டான் என்று நீங்களே சொல்லி விட்டு யாரை குடியேற்றப்போகிறீர்கள்?
  5. இராணுவத்தின் அடாவடிகளால் தமது நிலங்களை பறி கொடுத்தவர்கள், விகாரைக்கு பறித்து எடுக்கப்பட்ட காணிகள், பிள்ளைகளை கையால் கொடுத்துவிட்டு அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாது கதிகலங்கி நிற்கும் உறவுகள், இயற்கை அனத்தங்களால் பாதிக்கப்பட்டு தவிப்பவர்கள் அவரது தேர்தல் பகுதியில் இருக்கும்போது, அவர்களை கை விட்டு கண்டியில் போய் நின்று கூவி அழைத்து அரசியல் செய்தால் யார் இவரை அறிவாளி, சுய புத்தியுள்ளவன் என்று என்று நம்புவார்கள்? இது தெரியாமலா இவ்வளவு நேரம் பக்கம் பக்கமாய் பாடம் எடுத்தீர்கள்? கேலி பண்ணினீர்கள்? இதற்குத்தான் சொன்னேன் அவர்களுக்கு என்ன தேவை என கேளாமல், அறியாமல் மேதாவித்தனம் காட்டக்கூடாது, அது கோமாளித்தனம். இனி என்ன? சீசீ இந்தப்பழம் புளிக்கும். தானே சொந்த நிலத்தை விட்டு ஓடி விட்டு மற்றவர்களை குடியேற அழைக்கிறாராம். நீங்களே மீண்டும் வந்து குடியேறுங்கள்!
  6. உங்களுக்கு தாயகத்தின் நிலை புரியவில்லை, அவர்கள் தமது சொந்தநிலம் இருந்தும் குடியிருக்க முடியாத நிலையில் போராட்டமே வாழ்வாக போய்க்கொண்டிருக்கிறது, மலையக மக்களையும் இழுத்து வந்து அவர்களது உரிமை அதிகாரத்தையும் கேள்விக்குள்ளாக்க நினைத்து சகட்டுமேனிக்கு கருத்தெழுதி வெறுப்பேற்றுகிறீர்கள். உண்மையை ஜதார்த்தத்தை புரிந்துகொள்ளாமல் மேட்டுக்கு கருத்தெழுதும் உங்களுக்கு மடைமாற்றம், காவடி தான் தெரியும். சரி, எங்களால் முடியவில்லை, தெரியவில்லை. நீங்கள் செய்து காட்டுங்கள், நீங்கள்தான் துணித்தவராயிற்றே! அதன்பின் ஏற்றுக்கொள்கிறோம். திருப்பியும் புளிச்சுப்போன மடைமாற்று என்று வராதீர்கள், திருப்பிக்காட்டுங்கள்.
  7. ஆமா, கைச்சாத்திட்டார்கள். அதற்கு என்ன நடந்தது? முப்பத்தைந்து ஆண்டுகள் உருண்டோடி விட்டன. கைச்சாத்திட்டவர்களும் உயிரோடு இல்லை, அவர்களும் தங்கள் காலத்திலேயே கிடப்பில் போட்டு மூடி விட்டார்கள். வடக்கும் கிழக்கும் உத்தியோகபூர்வமாக நீதிமன்றத்தினால் பிரித்தாயிற்று, ஒவ்வொரு தடவையும் இந்திய அரசியல் முக்கியஸ்தர்கள் இலங்கைக்கு வந்த போதெல்லாம் பேச்சுக்கு அதை நினைவூட்டி சொன்னதையே திரும்ப திரும்ப சொன்னார்கள், வாய் வலித்து விட்டது சொல்வதையே நிறுத்தி ரொம்ப நாளாகிவிட்டது. இந்திய அரசும் சேர்ந்து உருவாக்கிய சட்டமூலம் செத்துப்போய்விட்டது, இனி இதை செய்யப்போகிறார்கள்? தமிழர் வகை தொகையின்றி கொல்லப்பட்டுக்கொண்டிருக்கும் போது, அதை தடுத்து நிறுத்த முடியாத உலக தமிழர்களின் தலைவர், அவரின் மைந்தர் செய்து போடுவார்? இனி அமெரிக்காவுக்கு விஜயம் செய்ய தயாராகுங்கள். இந்தியாவின் பிடி இலங்கையில் தளர்ந்து வருகிறது, இந்த நிலையில் இந்தியா சொல்லி இலங்கை கேக்குமாம். அதற்கு ஈமைக்கிரியை செய்யச்சென்றிருக்கிறார்கள்.
  8. அதற்கு முன், தனியார் காணிகளில் இருக்கும் இராணுவம் வெளியேறட்டும், ஆக்கிரமித்திருக்கும் விகாரைகள் அகற்றப்படட்டும், சொந்த ஊரிலேயே அகதிகளாக வாழும் மக்கள் தங்கள் சொந்தக்காணிகளில் குடியேறி சுதந்திரமாக நிம்மதியாக வாழட்டும், பின்னர் நடக்கலாம். "மூஞ்சசூறு தான் போக வழியில்லையாம் விளக்குமாத்தையும் தூக்கிக்கொண்டு ஓடிச்சாம்." தனக்குக்கண்டுதான் பிறற்குத்தானம். தனக்கே இல்லையாம் பிறருக்கு எப்படி? உண்மையை ஏற்றுக்கொள்ளாமல் மற்றவரை குற்றம் சாட்டி தாங்கள் ஏதோ பெரு வள்ளல்கள், சாதனையாளர்கள் போல் பாவனை.
  9. அநேகமாக தமிழ் அரசியல் வியாதிகள் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டு, வடக்கில் மக்கள் இந்திய தூதுவராலயத்திற்கு எதிராக செய்த ஆர்ப்பாடத்திற்கு, அமெரிக்காவின் நகர்விற்கு மன்னிப்பு கேட்டு ஆறுதல் சொல்வார்கள். அவர்களால் வேறு என்ன செய்ய முடியும்? எடுத்ததற்கெல்லாம் இந்தியாவுக்கு பயணம் செய்து மந்திராலோசனை செய்வது தடுபடும். இனி இவர்களுக்கு அரசியல் கையை மீறிப்போன ஒன்று. ஜதார்த்ததை புரியாமல் ஆடியதால் இல்லையில்லை ஏமாற்றியதால் வந்த வினை. தமிழர் இனி வேறொரு வல்லரசின் அடிமைகள் அவ்வளவே.
  10. உண்மையை சொன்னால்; மடைமாற்று, காவடி, தூக்குகாவடி என்பீர்கள். சுமந்திரனை சொன்னால் ஓடி வந்து காப்பாற்றுவீர்கள். பாவம் ஐயா நீங்கள்! அவர் செய்யும் அரசியலை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை உங்களால், அவரை விட்டுகொடுக்கவும் முடியவில்லை. உங்கள் பாடு திண்டாட்டந்தான். ஒருவற்கு உதவி செய்யும்போது, அவர்களுக்கு எது தேவை என்பதை கேட்டறிந்து செய்யவேண்டும். நான் விரும்பியதை எல்லாம் சொல்லிவிட்டு, அதுதான் அவர்களது தேவையென வாய் வம்பம் பேசக்கூடாது. இப்போவாவது அவர்களுக்கு என்ன தேவை என பாதிக்கப்பட்ட மக்களைகேட்டு செய்யுங்கள். அடுத்தவேளை தூங்க இடமில்லை, சாப்பிட ஏதுமில்லை, அவர்களை பாசத்துடன் அழைக்கிறோம் வாருங்கள் என்றால் எப்படி? ஏதாவது ஆயத்தங்கள் உண்டா? மலையகம் அவர்களது தாயகம். அங்கு அவர்கள் சுதந்திரமாக நிம்மதியாக வாழவேண்டிய சூழலை உருவாக்குவது அவர்களது பிரதிநிதிகளின் கடமை. தனது மக்களுக்கு செய்ய வேண்டிய கடமையை சரிவர செய்யாமல் அந்த மக்களாலேயே நிராகரிக்கப்பட்டவர், மலையக மக்களுக்கு ஏதோ செய்யபோகிறாராம். இதைச்சொன்னால் மடைமாற்று, காவடி என்று தூக்கிக்கொண்டு, நிதர்சனத்தை ஏற்க மறுத்து ஏதோ ஜாம்பவானாக கயிறு திரிப்பு.
  11. ம், தனியார் காணிகளில் இராணுவ முகாம்கள், விகாரைகள். அதன் உரிமையாளர் சொந்தங்கள், வாடகை வீட்டில். எத்தனை ஆர்ப்பாட்டம், மீட்க முடிந்ததா? நீதிமன்றங்களினாலேயே முடியவில்லை. இதில மலையக மக்களை பாசத்தோடு அழைக்கிறார்களாம். என் காணியில் நான் குறித்த அனுமதி பெறாமல் எந்த கட்டுமானப்பணிகளும் செய்ய முடியாது. ஆனால் தனியார் காணியில் விகாரை, வியாபார நிலையம் அமைக்க எந்த அனுமதியும் தேவையில்லை. தாங்கள் காவடி தூக்கலாம் சுமந்திரனுக்கு, மற்றவர் உண்மையை சொன்னால் அது காவடி என்று தூக்கிக்கொண்டு வருவார். சொல்லாடல் வறுமை. தானே பகிடி விட்டு சிரித்து ரசிப்பார்.
  12. கிறிஸ்தவ மதம் பிரித்தானியாவில் புகுத்தப்பட்டதாக இருக்கலாம். அது உண்மையா இல்லையா என்பது வேறு. ஆனால், பிரித்தானியா முஸ்லீம் நாடு அல்ல. அதை புகுத்தி சொந்தம் கொண்டாட விழைகிறார்கள். அகதிக்குழந்தைக்கு ஆசிரியர் சொன்னது தெளிவாக விளங்கியதோ அல்லது இட்டுக்கட்டியதோ தெரியவில்லை. வேறொரு நாட்டில் ஆசிரியர், எல்லோரும் ஒரு மதமாக இருந்தால் உலகில் பிரச்சனையே இல்லை என்றாராம். அதற்கு ஒரு முஸ்லீம் மாணவி அந்த ஆசிரியருக்கெதிராக முறைப்பாடளித்து, அந்த ஆசிரியர் வேறு வகுப்பிற்கு மாற்றப்பட்டார். சிறுவர்களுக்கு முதலிடம் அளிக்கிறார்கள். அவர்களின் கருத்துக்களுக்கும் முறைப்பாடுகளுக்கும்முன்னுரிமை அளிக்கும் சட்டங்கள் உள்ளன. மத, இந, மொழி பாகுபாட்டை வன்மையாக எதிர்க்கிறார்கள் மேலை நாடுகளில். இதனால் தங்களுக்கு பிடிக்காத ஆசிரியர்கள் மேல் இவ்விதமான முறைப்பாடுகளை கொடுத்து தங்கள் தவறுகளை மறைத்து விடுகிறார்கள். அவர்கள் நாட்டு, குடும்ப பின்னணியது. இதுவே அவர்கள் நாட்டில் நடந்திருந்தால் என்ன தண்டனை? கொடுத்திருப்பார்கள்
  13. வடக்கு கிழக்கில் வேலையில்லாத்திண்டாட்டம். சிகை அலங்காரம் முதல் பெரிய வியாபாரதலம், கடற்தொழில் சிங்களம் செய்கிறது. இந்தியா சூறையாடுகிறது. அயலவனை தன் காணி வீடு சுத்தமாகும் வரை குடியிருக்க விடுவார்கள் புலம்பெயர்ந்தோர், பின் அவர்கள் தங்கள் நிலத்தை, காணியை உரிமையாக்கி விடுவார்கள் என்று பலாத்காரமாக வெளியேற்றுவார்கள். மொத்தத்தில் தம் காணி துப்பரவாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் வரை பேச்சு பெரிய வள்ளல்கள் போலிருக்கும், அவர்கள் வெளிநாடுகளில் உழைப்பு, கொலிடே வீடு இங்கே சுகமாக கழிப்பதற்கு. இதற்குத்தான் மிகையாக மக்கள் மேல் முதலைக்கண்ணீர். அவர்களையும் வெளிநாடுகளுக்கு எடுத்து வாழ வழி காட்டுங்கள், அல்லது ஓரிரண்டு குடும்பத்தை பொறுப்பெடுத்து கல்வி வசதி தொழில் வசதியை ஏற்படுத்தி முன்னுதாரணமாக செய்து காட்டுங்கள். அதன் பின் மற்றையோர் தொடர்வர். வடக்கிலேயே எத்தனையோ குடும்பங்கள் அயலில் ஏழ்மையிலும் குடிலிலும் வெள்ளத்திலும் வாழ்கிறார்கள், அவர்களை கவனிக்க யாருமில்லை. சுமந்திரன் ஏதோ உணர்ச்சியை வைத்து அரசியல் செய்ய உளறியவுடன் அவரின் அபிமானிகள் வந்து விடுவர். அவர் சொல்வது சரியாயின் நீங்கள் அதை செயற்படுத்தி காட்டலாமே? மற்றவரை குறை சொல்லிக்கொண்டு. மலையக மக்களின் வாக்குகளிலேயே சுகபோகம் அனுபவிப்பவர்கள் அந்த மக்களின் வாழ்க்கையை மாற்ற என்ன செய்தார்கள்? இப்போ வடக்கு கிழக்கில் குடியேற்றப்போகிறார்களாம். அதை சொல்வதற்கு இவர்கள் தேவையா? இதற்கா அவர்கள் இவரை தமது பிரதிநிதியாக தெரிந்தெடுத்தார்கள்? யார் அதை செய்வது? அவர்களே வந்து குடியேறுவதா? அதற்கான ஆயத்தங்களை செய்தபின் அவர்களை அழைக்கவேண்டும் இல்லையேல் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்க வேண்டும். இல்லை, கிழக்கில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
  14. பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து மக்களை மீட்ப்பதற்காக மனிதாபிமானப்போர் புரிந்து மக்களை மீட்டோம் என்று மார் தட்டி விழா எடுத்தார்கள். அந்தமக்களுக்கு மாற்றுத்துணி இல்லை, அடுத்தவேளை உணவு இல்லை, கழிப்பிட வசதியில்லை, உறங்க கூரையில்லை, மந்தைகள் போல் வெளியில் அடைத்தார்கள், அந்த மக்கள் அனுபவித்த சுதந்திரம் கூட இல்லை. அவர்களை அவர்கள் சொந்த இடத்தில வாழ விடாமல் துரத்துவதற்கு அவர்களது வாழ்விடங்களை சூறையாடுவதற்கும் அடுத்த வேளைக்கு அடுத்தவர் கையை எதிர்பாத்து அடிமையாக்கியதே இவர்கள் செய்த சாதனை. அவர்களை அவர்கள் இடத்தில வாழுவதற்கு வழிவகை செய்வதே அவர்களுக்கு செய்யும் உதவியாக இருந்திருக்கும். தங்களது இரத்தம் வியர்வை சிந்தி காட்டை மேடாக்கி வளமாக்கியவர்கள் அவர்கள். அவர்கள், எங்களை இந்த இடத்திலிருந்து வேறொரு இடத்தில குடியிருத்துங்கள் என்று கோரவில்லை. அந்த மண் அவர்களுக்குரியது. அதை அவர்களது உரிமையாக்குவதற்கு என்ன செய்யலாமென ஆராய்ந்து அதற்கான செயற்பாடுகளை செய்ய வேண்டும். அவர்களது அவலங்களில் அரசியல் செய்ய முயலக்கூடாது. வெளிநாட்டில் குடும்பம், உறவுகள் யாரும் நம் நாட்டில் இல்லை, போர்க்காலத்தில் தமது வீட்டை இழந்த அயலவரை குடியிருக்கும்படி சொன்னார்கள் அந்த புலம்பெயர்ந்த தமிழர். பற்றைக்காடாக கிடந்த காணியை, பாம்புப்புற்று நிறைந்திருந்த வீட்டை சுத்தம் பண்ணி, சோலையாக வைத்திருந்தார்கள். எல்லாம் நிறைவானபின், அவர்கள் இன்னொரு இல்லிடத்தை தேடவும் அவகாசம் கொடுக்காமல் அவர்களை தெருவில் விரட்டியது இந்த புலம் பெயர் கூட்டம். இன்னும், வெளிநாடுகளிலிருந்து அதிகாரம் பண்ணுவோர், கண்காணித்து கேள்வி கேட்போர் இருக்கிறார்கள். இதில மலையக மக்களை வரவழைத்து வாழவைக்கப்போகிறார்களாம். ஒரு சில குடும்பத்தையே பொறுப்பெடுக்க பல யோசனை, உறவுகளை சகோதரர்களை வாழவைப்பதற்கே எத்தனையோ காரணங்கள் கூறுகிறார்கள். மலையக மக்கள் ஒன்று இரண்டு குடும்பமா இவர்கள் பெருந்தன்மையாக குடியேற்றி வாழ வைப்பதற்கு? அவர்களுக்கு இங்கு அநிஞாயம் நடந்தால், கேட்பதற்கு நாதியில்லை. தெருவிற்தான் அவர்கள் விடப்படுவார்கள். அவனவன் காணியையே எல்லையை கூட்டுவதும், அடாவடி பண்ணி பறிப்பதும், இடிப்பதும் தெரியாததா என்ன? ஜதார்த்ததை சிந்தியுங்கள். அவலங்களில் அரசியல் செய்வதும், உண்மையை பேசுபவர்களை குற்றம் காண்பதும், ஏதோ சுமந்திரன் சொன்னால் செய்பவர் போலவும் சுமந்திரனின் அபிமானிகள் கூச்சல் போடுவதும் தான் மிச்சம். எங்கே, சுமந்திரன் தன் வீட்டின் பக்கத்தில் ஒரு அறையை ஒரு பாதிக்கப்பட்டவருக்கு உறங்க கொடுக்கட்டும் பாப்போம்?
  15. நீரிழிவு நோய் வந்து விடும் என்றா அல்லது தலை பிளந்து விடுமென்றா என்றா அப்படி நினைக்கிறீர்கள்?
  16. அது, சும்மா சொன்னால் மட்டும் போதாது செய்தும் காட்டும் தில் இருக்க வேண்டும். அதுதான் உண்மையான அரசியல்வாதிக்கு அழகு. மக்களின் அவலநிலையை சாதகமாக்கி அவர்கள் அரசியல் செய்வது. சுமந்திரன் ஏதேதோ சொல்லி, சரிந்துபோன தனது அரசியல் செல்வாக்கை உயர்த்தவும், அனுராவை பயமுறுத்தவும் பார்க்கிறார். ஆனால் அவையெல்லாம் அவருக்கு எதிராகவே திரும்புகிறது. ஒருவரின் ஜனாதிபதி கனவு, இருவரின் முதலமைச்சர் கனவு எல்லாம் வெறும் கனவாகவே போகப்போகிறது. காலத்தே பயிர் செய்யவில்லை, காலம் கொடுத்ததும் பயன்படுத்தவில்லை, இப்போ என்னதான் செய்தாலும் இவர்களது வீரப்பேச்சுகள் கள விஜயங்கள் எல்லாம் கிளப்புலி தருப்பை காப்பை வைத்து உபதேசம் செய்வது போன்றதே. அரசியல்வாதிகள் சொல்வதெல்லாம் சும்மா பேச்சுதான். அதை ஒப்புக்கொண்டீர்களே அது போதும். இந்த நேரத்தில் சும்மா பேசும் பேச்சா இதெல்லாம்? பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதும் உருப்படியா செய்யாமல் விமர்ச்சிப்பதும், சும்மா பேசுவதும் இவர்களது பொழுது போக்கு அரசியல்!
  17. ஏற்கெனவே சோம்பேறிகள், அவர்களை அழைத்து வந்து மலை அட்டை உறிஞ்சியது போக மிஞ்சியதை உறிஞ்சி தாம் சுகமாக வாழ நினைக்கின்றனர். அவர்களும் வாழ வேண்டுமென்று நினைத்தால்; அவர்கள் வாழ்விடங்களிலேயே நிம்மதியாக, நிரந்தரமாக வாழ வழிசெய்ய வேண்டும். அதுதான் அவர்கள் விரும்பும் வாழ்க்கை. அதை விடுத்து அவர்களுக்கு என்ன தேவை, விருப்பம் என்று கேளாமல், நாம் நினைத்ததை திணிக்க முடியாது. மலையகத்தில் உள்ள அனைவரையும் வடக்கு கிழக்கில் குடியமர்த்தி வேலை வாய்ப்பு, வாழ்க்கை, வசதியளிக்க முடியுமா? வடக்கு கிழக்கிலே எத்தனையோ பேர் வேலையில்லாமல் அலைகிறார்கள். சும்மா ஜதார்த்ததை உணராமல் ஜாம்பவான் பேச்சு.
  18. "அன்பிலார் எல்லாம் தமக்குரியர், அன்புடையோர் என்பும் உரியர் பிறர்க்கு." ராஜ்கிரணின் ஆன்மா அமைதியில் இளைப்பாறுவதாக!
  19. அவர் மலையக மக்களை வாருங்கள் என்று அழைத்தார், அவர்களது வாழ்க்கைக்கு, அடுத்தவேளை சோற்றுக்கு வழியேதும் சொல்லவில்லை. வடக்கிலேயே பல மக்கள் இடம்பெயர்ந்து உறவினர் வீடுகளில், வாடகை வீடுகளில் வாழ்கிறார்கள். அவர்களுக்கு ஏதும் செய்ய சுமந்திரன் முன்வரவில்லை. அவருக்கு இப்போ அரசியல் செய்ய வேண்டும், அதற்காக ஏதோ சொல்கிறார் என்றால், கேட்பவர்களுக்கு விளங்க வேண்டும். தன் தொகுதியில் அநாதரவாக நிற்கும் மக்களுக்கு இவர் என்ன செய்தார்? தனக்கு வாக்குப்போட்டு மக்களுக்கு என்ன நன்மை செய்தார் என்பது. அப்படி செய்திருந்தால் இப்படி கோமாளி போல விமர்சனங்கள் வைப்பதும், ஓடியோடி குற்றம் தேடுவதும் நடந்திருக்காதே. மக்களை ஏமாற்றும்போது அவருக்கு எதிர் விளைவுகள் விளங்கவில்லை. இப்போ வாயால் தூற்றிக்கொண்டு திரிகிறார்.
  20. எத்தனை வேற்றுமைகள், கசப்பான அனுபங்கள், இருந்தபோதிலும் அத்தனையையும் தாங்கி சுமந்திரனின் எதேச்சாதிகாரமான அதட்டல்களையும் எச்சரிக்கைகளையும் ஏளனங்களையும் தாங்கி கூட்டமைப்பாக இயங்கிய போதிலும், அவர்களை விரட்டியடித்தவர் சுமந்திரன். பின்னர் தேர்தலின் பின் ஒன்று கூடுவோம் என்று பசப்பினார். இப்போ தனது கனவை நனவாக்க மீண்டும் தேசியம், ஒற்றுமை, சிநேகம் என்றெல்லாம் வகுப்பெடுப்பார். தேர்தலின் பின் மீண்டும் அதிகாரம் என்னும் முருங்கை மரத்தில் ஏறி நின்று சவால் விடுவார். எங்களைவிட இவரோடு பயணித்தவர்களுக்கு தெரியும் இவரைப்பற்றி. ஆனாலும் அவர்களுக்கு வேறு வழியில்லை, நான் அழைத்தேன் அவர்கள் என்னோடு கூத்தாடவில்லை என்று குற்றம் சாட்டுவார் என்று அவர்களும் இழுபடுகின்றனர். இவர்கள் ஒன்றும் மக்களின் நலன் கருதி ஒன்றிணையவில்லை, தங்களை தற்காத்துக்கொள்வதற்காக, நிலை நிறுத்துவதற்காக மக்களை ஏமாற்றுவதற்காக முயற்சிக்கிறார்கள் அவ்வளவே. இவர்கள் என்ன கூத்தாடினாலும் மக்கள் விழிப்பாக உள்ளனர்.
  21. தமிழரசுக்கட்சிக்கு விழுந்த பலமான அடி, அது இனி எழுந்திருப்பதற்கு பல காலம் எடுக்கும். தாமே தமிழரின் ஏகபோக கட்சி என்று சொல்லிக்கொண்டு எக்காளமாக தேர்தல் காலங்களில் வீரப்பேச்சு பேசி வாக்கு அறுவடை செய்த காலம் மலையேறி விட்டது. உணர்ச்சி வசப்பட்ட கருத்துக்களில் மக்கள் இனிமேல் மயங்கப்போவதில்லை. அவர்களுக்கு இப்போ இருப்பது வாழ்வியல் பிரச்சனை. அவர்களின் தேவைகளில், அழிவுகளில் அவர்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்பவர் யாரும் முன்னிற்பதில்லை அவர்களுக்காக. இனிமேல் மக்களுக்காக உழைக்க வேண்டும், அது நமது அரசியல்வாதிகளுக்கு ஒத்துவராத ஒன்று. அனுரா கட்சியை இழுத்து விட்டதே இவர்களது எதேச்சாதிகாரமே. அதற்காக அந்த அரசை குற்றம் சாட்டி தாம் தப்பிக்க முயற்சித்தனர், முடியாமற் போகவே மலையக மக்கள்மேல் பாசம் பிறந்தது, அதுவும் கைமீறிய நிலையில் ஒன்று படுகிறார்களாம். இது மக்களை ஏமாற்றுகிறோம் என்று நினைத்து தம்மைத்தாமே ஏமாற்றும் செயலது. வருமுன் காத்திருந்திருக்கலாம், ஆனால் அனுரா பக்கம் போனவர்களை திரும்ப அழைப்பது கடினமான ஒன்று. அதற்காக இவர்கள் கொடுக்க வேண்டியது அதிகம். அதற்கு இவர்கள் தயாரா? இந்த மாய வித்தைகள் இனி வருங்காலத்தில் எடுபடாது. தன் பக்கம் சாய்ந்த இந்த மக்களை இனிமேல் அனுரா இவர்கள் பக்கம் திரும்ப விடமாட்டார். ஆடித்தான் பார்க்கட்டுமேன்.
  22. இது அவர்களது உணர்வுகளை மதிக்கும் சரியான கருத்து. எடுத்தோம் கவிட்டோம் எனும் உணர்ச்சி மிக்க கருத்துக்களை வெளியிட்டு அவர்களை நிரந்தர அனாதைகளாக்கும் செயலாகும். அவர்களுக்கு சேர வேண்டிய நிவரணங்களையும் நஷ்ட ஈடுகளையும் தடுத்து நிரந்தரமாக கையேந்தி வாழும் நிலையை ஏற்படுத்தும். தூரநோக்கோடு அவர்களது எதிர்காலத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். சரிந்துபோன எமது அரசியல் செல்வாக்கை தடுத்து நிறுத்தி உயர்த்துவதற்காக அவர்களது வாழ்வை பணயம் வைத்து விளையாடக்கூடாது. அதற்கு எவருக்கும் அதிகாரமில்லை.
  23. இந்தியாவும் வேண்டாம், சீனாவும் வேண்டாம், மெரிக்காவும் வேண்டாம். எல்லோரும் எங்களை சுரண்டி வளமாக வாழ்பவர்களே. நம்மை நாமே பாதுகாப்போம். தொப்புள் கொடி உறவென்று சொல்லிக்கொண்டு வயிற்றில் அடிப்பது, வளத்தையும் உயிரையும் சூறையாடிக்கொண்டு நிவாரணம் அனுப்புவது ஏற்றுக்கொள்ள முடியாது. எம்மை அழிப்பதும் நிவாரணம் அனுப்புவதும் எம்மை தமது அடிமைகளாக வைத்திருப்பதற்கே. அரசியல் வாதிகள் இனிவருங்காலங்களில் பார்வையாளர்கள் மட்டுமே, அவர்களை நம்பி எதுவும் ஆகப்போவதில்லை. இதனால் மலையக மக்களை வைத்து தமது பிழைப்பு நடத்த ஆரம்பித்துள்ளார்கள்.
  24. அவர்களைப்போல் சில்லறைத்தனமாக நடந்துகொள்ளாமல், பெருந்தன்மையோடு நடந்துகொள்ளும் கொள்கைத்திட்டம். அதனால் மதத்தை தவிர்த்திருக்கலாம். அது பாரபட்ஷம் (துவேசம்) காட்டுதல் என்று தீர்ப்பாகலாம். அவர்கள் எல்லோரையும் சமமாக நடத்துவதாலேயே இன்று பல மொழி, மத, கலாச்சார மக்கள் அங்கு வாழ முடிகிறது. இரண்டு மொழி உள்ள நாட்டிலேயே எத்தனை பாகுபாடுகள். இவர்கள் எந்தப்பிரச்னையுமில்லாமல் எல்லோரையும் வாழ விடுகிறார்கள். இவர்கள் வந்து அந்தபொதுப்பண்பை மாற்ற விளைவதே பிரச்சனை. இனிமேல் யாரும் எங்கேயும் எதையும் கழுவலாம் என்கிற சட்டம் வருமா அங்கே? பிறகு குத்துது குடையுது என்பார்கள். அடைக்கலம் கொடுத்த நாட்டிலேயே தங்கள் மதத்தின் பெயரால் தாராளமான கொலைகள், பாதிக்கப்படுவது அடைக்கல பெருந்தன்மையை எதிர்க்காத சாதாரண மக்களே
  25. அன்று இனக்கலவரத்தினால் அடியுண்டு சிதறுண்ட மக்களை காந்தீயம் என்கிற அமைப்பு வரவேற்று அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து குடியமர்த்தினர். ஆனாலும் கணிசமான மக்கள் மீண்டும் தமது பழைய இடங்களுக்கு சென்றனர். ஒரு இடத்தில வாழ்ந்து பழக்கப்பட்டவர்களை திடீரென வேறொரு இடத்திற்கு மாற்றுவது அவர்களின் இயல்பான வாழ்வை பாதிக்கும், அதோடு ஆண்டாண்டு காலமாக நாட்டுக்காக உழைத்து ஓடாகிப்போன அவர்களுக்கு வேண்டிய நிவாரணத்தை கொடுத்து வாழ்க்கைத்தரத்தை உயர்த்த வேண்டியது அரசின் கடமை. இவர்களை நாம் வரவேற்பது பிரச்சனையல்ல, அவர்கள் எமது தயவில் வாழ வேண்டிய நிலையிலும் சங்கடத்திலும் வாழ்வதிலும் பார்க்க அவர்களுக்குரிய நஷ்ட ஈடு கொடுக்கப்படவேண்டும், வாழ்வாதாரம் உயர்த்தப்படவேண்டும், அதற்கு அவர்கள் உரித்துடையவர்கள். அவர்களுக்கு சேரவேண்டிய உரிமைகளை தடுத்து, தடங்கல்களை ஏற்படுத்தி அரசின் கடமைப்பாட்டிலிருந்து வலிய விலக்கிக்கொள்வதாக அமையும். அவர்கள் பெற வேண்டிய நிவாரணங்களை நஷ்ட ஈட்டைப்பெற முழு உரித்துமுடையவர்கள் அது அவர்களது உரிமை. அதை தடுத்து பரோபஹாரம் செய்கிறோம் எனும் பெயரில் ஏதிலிகளாக்காமல் இருந்தால் சரி. அதன் பின் அரசும் தனது கடமையிலிருந்து அவர்களை கைகழுவி விடும். பிறகு அவர்களுக்கு எந்த ஆதரவுமில்லாமல் போய்விடும். தமிழரசியல் வாதிகள் தமது மக்களையே அவர்களின் தேவைகளையே கவனிப்பதில்லை இதில் இவர்களை அழைத்து வாழ வைத்து விடுவார்கள். மனோ கணேசன் தனது கடமையிலிருந்து இலகுவாக தப்பித்துக்கொள்ள முயற்சிக்கிறார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.