Everything posted by Eppothum Thamizhan
-
”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
எதிர் அறிக்கைகளை மேற்கோள் காட்டும்போதுதானே ஆதரவான அறிக்கைகளும் பதியப்படுகின்றன! இது எனது அனுமானம் அல்லது எதிர்வுகூறல் என்றுசொல்லிவிட்டு செல்லவேண்டியதுதானே. நான்சொல்வதுதான் சரி மற்றவனெல்லாம் பிழை, முட்டாள் என்று சொல்வதால்தானே பிரச்சனையே!!
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
அதுசரி, 3% பிராமணர்களுக்கு எப்படி அடுத்தடுத்த தேர்தல்களிலும் ஆட்சி அதிகாரம் கிடைத்தது?
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
ஈ.வே. ராமசாமி நாயக்கர் வரலாற்றை எழுதிய சாமி சிதம்பரனாரின், ”தமிழர் தலைவர்” என்றநூலை வாசித்துப்பாருங்கள். ஏனென்றால் இந்நூல் பெரியார் வாழ்ந்த காலத்திலேயே அவரின் அனுமதியுடன் எழுதப்பட்ட நூல்.
-
”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
யார் இவர்? புலிகளின் பொறுப்பாளர் என்ற பதவியை இவருக்கு யார் கொடுத்தது. புலிகள் ஆயுதங்களை மௌனித்தபின் இவர் தலைமையில் என்ன அரசியல் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன என்பதை இதை இணைத்தவர் தருவாரா??
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
பெரியார் எதற்காகவெல்லாம் போராடினார்,யாருக்காக, யாருக்கு எதிராக போராடினார் என்பதை சற்று விபரமாக எழுதுங்கள் விவாதிக்கலாம். ஏனென்றால் எமக்கு சுதந்திரமே வேண்டாம், தாய்மொழிக்கும் தாய்நாட்டிற்குமாக உயிரையும் கொடுப்பேன் என்றுசொல்பவன் முட்டாள், இந்தியா சுதந்திரம் அடைந்தநாள் கரிநாள் என்று கூறியவர் அவர். அண்ணா திகாவில் இருந்து பிரிந்து திமுக தொடங்கியபோது பெரியாரைப்பற்றிய எதையும் சொல்லி அவர் அரசியல் செய்யவில்லை. இருவரும் எலியும் பூனையும் போலவே இருந்தனர். MGR எப்போ ADMKஐ தொடங்கினாரோ அன்றிலிருந்துதான் பெரியார் DMK ஆல் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
நான் சொல்லுவது இணையத்தளத்தில் பதிவேற்றுவது பற்றியது( digitization). அப்போது எல்லோரும் நேரடியாக வாசித்து பெரியார் பற்றி அறிந்துகொள்ளலாம். இப்படி புடுங்குப்படத்தேவை இல்லையே. பெரியார் இப்படித்தான் சொன்னார் அது இந்த இதழில் வந்திருக்கிறது என்றுவிட்டு எம்வேலையை பார்க்கலாம். copyright இற்கும் digitization இற்கும் வித்தியாசம் தெரியாவிட்டால் நான் ஒன்றும் செய்யமுடியாது. இதுக்குள்ள நக்கல் வேற.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
பெரியார் ஒரு பகுத்தறிவுவாதி, அவரது கருத்துக்கள் முற்போக்கானவை என்றால் பெரியாரின் நாளிதழ்களான குடிஅரசு, விடுதலை போன்றவற்றை அரசுடைமையாக்கி எல்லோருக்கும் சென்றடையக்கூடியதாக செய்தால் பெரியாரைப்பற்றி எல்லோரும் அறிந்து கொள்வார்களே! ஏன் திராவிட கட்சிகள் செய்யவில்லை?
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
தான் தட்டச்சில் ஏற்றவேண்டும் என்பதற்காக எழுத்துக்களை இலகுவாக்கினாரே ஒழிய உச்சரிப்பு, மொழியை மாற்றவில்லையே. அதற்கு ஏன் காட்டுமிராண்டி மொழி என்று கூற வேண்டும். இத்தனைக்கும் எழுத்து உருமாற்றத்தை முதலில் அறிமுகப்படுத்தியது, கொண்டுவந்தது குருசாமி என்பவர். வரலாறு தெரியாவிட்டால் படித்துவிட்டு வந்து எழுதுங்கள். நாம் இங்கு மனிதர் பேசும் பாஷையை பற்றி விவாதிக்கிறோம் மிருக பாஷையை அல்ல, நீங்கள் எங்களுக்கு பாடம் எடுக்க .
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
எதைப்பற்றி? தமிழ்த்தேசியத்தை தானே!!
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
என்ன கிருபன், இப்போதுதான் நித்திரையால் எழும்பி வருகிறீர்களா? சந்தோஷின் காணாளியை பார்க்கவில்லையா? சீமான் ஆவணப்படமெடுக்க வரவில்லை என்று அவரே சொல்லியிருக்கிறார்? அப்போ ஏன் சீமான் தலைவரை சந்திக்கப்போனார்? குசலம் விசாரிக்கவா?
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்
ஆழ்ந்த இரங்கல்கள் 🙏
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
திராவிடதேசம் மொழிவாரியாக பிரிந்து கன்னடர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள் என்று மாறியபோது தமிழ் பேசியவர்கள் மட்டும் எப்படி திராவிடர் ஆனார்கள். அங்கே தொடங்கியதுதான் தமிழ் தேசியத்திற்கான எதிர்ப்பு. திராவிட கழகம் என்று அதை தொடக்கிவைத்தது ஈவேரா. தமிழ்நாட்டு மாநில அரசால் உணர்வுபூர்வமான ஆதரவுகளை மட்டுமே ஈழத்தமிழர்களுக்கு கொடுக்கமுடியும் என்று முதலே ஏழுதியுள்ளேன். மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநரை மீறியே எதுவும் செய்யமுடியாதுள்ளபோது எமக்கு என்னதான் அவர்களால் செய்யமுடியும் ! என்ன, தமிழ் நாட்டிலுள்ள ஈழ அகதிகளுக்காவது கொஞ்சம் முன்னேற்றமான நடவடிக்கைகளை எடுக்கமுடியும் என்ற நப்பாசைதான்.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
நல்லா முட்டு கொடுக்கிறீர்கள். நம்மிலும் கீழோர் என்பது பகுத்தறிவு பற்றியதா? விளங்கீடும்! எது பகுத்தறிவு? கள்ளுக்கடைகளை மூடும் போராட்டத்திற்காக தனது தோப்பில் 500 தென்னை மரங்களை வெட்டிச்சாய்த்தவராம் பெரியார். பெண்விடுதலைக்கு தலைமயிரை ஆண்கள் போலவெட்டிக்கொள்ளுங்கள், ஆண்கள் போல உடையணியுங்கள், திருமண பந்தத்திற்குள் செல்லாதீர்கள், கர்ப்பப்பையை அகற்றுங்கள் என்பதெல்லாம் முற்போக்கு சிந்தனை. நான் வீரமணி மனதுவைத்தால் என்று சொன்னது பெரியாரின் பத்திரிகைகள், புத்தகங்களை அரசுடமையாக்குவது பற்றியது. அதைத்தான் சந்தோசே சொல்லிவிட்டாரே. சீமான் வந்தது உண்மை, தலைவரை சந்தித்தது உண்மை, அவர் படம் எடுப்பதற்காக அங்கு அழைக்கப்படவில்லை, பாலாமைக்கறி பரிமாறப்பட்டது உண்மை என்றெல்லாம் தனது காணாளியிலேயே சொல்லிவிட்டார். பிறகு இவர் ஏன் அதற்கு விளக்கம் கொடுக்கிறார்.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
புலிகள் தமிழக அரசியலில் தலையிடுவதில்லை. இலங்கையில் தமிழர்களின் வருங்கால அரசியல் மாற்றங்களுக்கு தமிழ் நாட்டில் தமிழ் தேசியத்தின் எழுச்சி அவசியம் என்று உணர்ந்திருப்பார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது! திராவிடம் இனி ஒன்றும் செய்யாது என்று அவர்களுக்கு நன்கே தெரிந்திருந்தது!!
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
இது ஒன்றும் விடுதலைப்புலிகளின் பத்திரிகையில் வந்தவையல்ல. ஈவேராவின் சொந்த பத்திரிகையான விடுதலையில் வந்தவையே!
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
என்னது பெரியார் பிராமணர்களை மாத்திரம்தான் திட்டினாரா? பார்ப்பனர்கள், துலுக்கர்கள், கிறீஸ்தவர்கள், எம்மைவிட கீழ்மட்டத்தில் இருப்பவர்களால் தமிழ்நாட்டிற்கு எப்போதுமே ஆபத்து. இவர்கள் இந்நாட்டவர்கள் இல்லை. இவர்களை துரத்தவேண்டும் என்று பேசிய ஈவேராவிற்கு இப்படி முட்டுக்கொடுக்கிறீர்கள். ஈவேராவின் பகுத்தறிவு, பெண்ணிய மேம்பாடு, பெண்ணடிமைத்தனத்திற்கெதிரான குரல், தமிழ் மொழியின் தந்தை என்று திராவிட கட்சிகள் கட்டியமைத்த பிம்பமெல்லாம் இப்போ கிழிந்து தொங்கத்தொடங்கியுள்ளது. ஈவேராவின் எல்லா சொத்துக்களையும் தனதாக்கிக்கொண்ட வீரமணி ஐயா மனம்வைத்தால் இன்னும் வரும்..
-
முதல்வர் ஆசை… அந்த கட்சி பெயரை சொல்ல மாட்டேன்.. சீமானை விளாசிய ஸ்டாலின்
சீமான் ஒன்றும் பேத்திவயது பெண்ணை காதலிக்கவோ மணமுடிக்கவோ இல்லையே!
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
எதோ நீங்கள் Albert Einstein என்ற நினைப்புபோல இருக்கு.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
யாருக்கு கருத்தெழுதுகிறோம் என்றுகூடவா தெரியவில்லை.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
நீண்ட காலத்தின் பின் தூயவனை காண்பதில் மகிழ்ச்சி!
-
இந்தியா - இங்கிலாந்து ரி20, ஒருநாள் கிரிக்கெட் தொடர்
ஆட்டத்தை மாற்றியது வாஷிங்க்டன் சுந்தர் இல்லை Adil Rashid . பரதேசி லட்டு கேட்ச் ஒன்றை விட்டதன் விளைவே இங்கிலாந்தின் தோல்விக்கு காரணம்!
-
``பெரியாரைப் பற்றி முதலில் பேசியது நான்தான்; சீமான் பேசுவதையும் ஆதரிக்கிறேன்..'' - -ஹெச்.ராஜா
அப்ப சாமி சிதம்பரனார் எழுதியது பொய்யா கோபாலு?? புத்தகத்தில் வேற எழுதியிருக்கிறாராம்! அதே!
-
Pickering வாகன விபத்தில் தமிழர்கள் இருவர் பலி
ஆழ்ந்த இரங்கல்கள் 🙏
-
முதல்வர் ஆசை… அந்த கட்சி பெயரை சொல்ல மாட்டேன்.. சீமானை விளாசிய ஸ்டாலின்
அதற்காக செக்ஸ் தந்தை பெரியாரின் சிலையையா கொடுப்பார்கள்? திமுகவில் இருந்தது யாரும் வெளியேறியதே இல்லையா?
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
நீங்கள் இந்த திரியை இணைக்கும் போதே உங்கள் நோக்கம் நன்றாக தெரிகிறது. இதில உங்கட ப்ரோபைலை வேற தேடவா வேண்டும்.