Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

valavan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by valavan

  1. என் கேள்வியெல்லாம் ரசோதரன், என்ன ரீதியான தண்டனை இவர்களுக்கு தரப்பட போகிறது, எப்படி இவர்களின் எதிர்காலம் அஸ்தமனபடுத்தப்படும், எவ்வளவு விரைவில் தரப்படும் என்பதே . சட்டரீதியாக பலநூறு மதுபானசாலகளை திறந்தால் அது சமுதாயத்துக்கு கேடு இல்லையா? சட்டவிரோதமாக மதுபான சாலை அனுமதி பெற்றவர்கள் எப்படி சமுதாயத்துக்கு விரோதமானவர்களோ, அதேபோலதான் சட்டரீதியா சாராய கடைகளை திறப்பவர்களும், இருபகுதிக்குமிடையில் அதிக வித்தியாசம் இல்லையென்பதே என்னோட ஒண்ணரையணா அறிவுக்கெட்டின வாதம்.
  2. அதென்னண்டா தமிழ்சிறி, அநுர சிங்கள ஏரியாவெல்லாம் படிப்படியா நல்லா கூட்டி மொப் அடிச்சுக்கொண்டு வாறான், அடுத்தது இவர் போன்ற அல்லகைகள்தான். அப்படி கோர்ட் கேஸ் எண்டு வந்தா நீதிபதிகிட்ட ஐயா நாங்க ரொம்ப நேர்மையானவங்க நீங்க வேணுமெண்டால் பொலிஸ்கிட்ட கேட்டு பாருங்க, லஞ்சம் ஊழல் பண்றது எல்லாம் தப்பு எண்டு போன கிழமைகூட நாங்கள் முறைப்பாடு கொடுத்து ஜனநாயகத்தை காப்பாத்தியிருக்கோம் எண்டு சொல்லத்தான். என்ன இருந்தாலும் அநுர மொப் அடி சூப்பர்.
  3. அப்போ சட்டரீதியாக அனுமதி வாங்கினால் பிரச்சனை இல்லையா? குடும்பத்தையும் தனிமனித வாழ்வையும் அழிக்கும் மதுவிற்கு சட்டரீதியாக அனுமதி வாங்கினால் தண்டனைக்குரிய குற்றம் இல்லை என்கிறார்களா? ஒருவேளை சட்டவிரோதமாக அனுமதி பெற்றவர்களின் பெயர் விபரங்கள் வெளியானால் அவர்களின் உரிமம் ரத்தாவதை தவிர வேறு என்ன தண்டனை தரபோகிறார்கள்? ஏற்கனவே பகிரங்கமாக , ஆம் நான் மதுபானசாலை அனுமதிக்கு சிபாரிசு செய்தேன் என்று பகிரங்கமாக சொன்ன விக்னேஸ்வரனுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? என்ன தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது? தண்டனை தந்தாலும் உரிமம் பெற்றவர்கள் இப்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தால் அவர்களை பாராளுமன்றத்தை விட்டு வெளியே அனுப்ப அரசினாலோ அல்லது அவர்களுக்கு வாக்களித்த மக்களாலோ முடியுமா? ஒருவேளை அவர்கள் சிக்கி கொண்டாலும் கள்ள லைசன்ஸ் பார்ட்டி எண்டு கடைசிவரை கத்திக்கொண்டு திரிய வேண்டியதுதான். இது ஒரு பாமரனின் சந்தேகங்கள்தான், முன்னாள் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வக்காலத்து வாங்கும் செயல் அல்ல.
  4. அது சும்மா பெயருக்கு சொல்லிக்கொள்வது, நீண்டகாலமாக கடலுணவுகளிலிருந்து காய்கறி கருவேப்பிலைவரை இலங்கை என்று சொல்லி விற்பார்கள் ஆனால் அவை 95% இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதில்லை
  5. அது ஏன் திமிங்கிலம் கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களுக்கு கடந்த காலத்திலேயே தீர்வு காணாமல் அநுர காலத்தில் அவசரமா திருந்துறீங்க? சிங்களவரையே நம்பியிருக்கும் நாமலின் கட்சிக்கு சிங்களவர்களிட்டையே 3% வாக்குகூட கிடைக்கவில்லை, நீங்கள் எதுக்கு யாரும் இல்லாத கடையில யாழ்ப்பாணத்தில போண்டா சுடுறீங்க?
  6. Pure cream+ ரின் பால், வேணுமெண்டால் கொஞ்சம் வனிலா ஒரே நிமிடத்தில் ஐஸ்கிறீம் கொத்துரொட்டி கொத்து ரொட்டி தயாரிப்புக்கு ரொட்டி தயாரிக்கவே பாதிநாள் போய்விடும், ஆனால் இங்கு அதிவேக மென்மையான ரொட்டி தயாரிப்பு . அப்புறம் என்ன மொத்த வேண்டியதுதான். இது எல்லாருக்கும் தெரிஞ்ச ரோஸ்ட் பாண்தான் , இருந்தாலும் சும்மா ஒரு இணைப்பு இது கொஞ்சம் நேரம் எடுக்கும், இருந்தாலும் நம்ம அச்சு பாண். உழுந்து தேவையில்லை, ஊற வைக்க தேவையில்ல அரைக்க தேவையில்லை அதிவேக அரிசி மா தோசை.
  7. இலங்கையின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடும்போது தமிழர் பகுதிக்கு அதிக தவறணைகள். இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் தமிழர் பகுதிக்கு அதிக சலுகைகள் தந்தது இதுவே முதல் தடவை. தமிழர் பகுதிகளுக்கு அதிக அதிகாரங்கள் தரப்படவில்லையென்று சொல்லப்படுவது தவறான பிரச்சாரம். ரணில் தமிழருக்கு அதிக உரிமைகள் தந்த ஒரு தெய்வ திருமகன்.
  8. உப்பு தட்டுப்பாடு ஏற்படுவது ஓரளவு ஆர்ரோக்கியம்தான், எவரை பார்த்தாலும் சுகர் பிறசர் எண்டு கொண்டு குளிசையோட திரியுறாங்க. பிளட் பிறசர் எகிறுறதுக்கு உப்பும் பிரதான காரணம், அதை கெளரவமாக சோத்தில் உப்புபோட்டு திண்டால் ரோஷம் வரும் எண்டு உல்டாவா அடிச்சுவிடுவாங்க .ரத்த கொதிப்பு அதிகமாகி கத்தினா அதுக்கு ரோஷம் எண்டு பெயர் வைக்குறது. மூண்டுமாசம் உப்பு தட்டுப்பாடு இருந்தா யாழ்ப்பாணத்தில் வேலி சண்டை காணி சண்டை குறைய வாய்ப்பிருக்கு. தட்டுப்பாட்டில் ஒரு ஆரோக்கியம்.
  9. இந்திய அரசியல்வாதிகளில் ஆரம்பம்முதல் இறுதிவரை விசுவாசமாக புலிகள் பக்கம் நின்ற அரசியல்வாதிகள் இரண்டுபேர் மட்டுமே ஒன்று எம்ஜிஆர் , மற்றையது திரு.பழநெடுமாறன் அவர்கள் மீதமுள்ள ராமதாஸ் , திருமாவளவன், வைகோ போன்றவரெல்லாம் புலிகளுக்கும் பாடிவிட்டு பின்பு கருணாநிதியுடனும் சேர்ந்து கூத்தடிச்சவர்களே. பாண்டிபஜார் கைதிலிருந்து ,ஆயுதங்கள் தொலைதொடர்பு சாதனங்கள் பறிமுதல், கிட்டண்ணா பயணித்த கப்பல் மீதான இந்திய கடற்படை தாக்குதல், ஜூலை கலவரத்தின்போது தமிழக எழுச்சி, தமிழீழத்திற்கு சிலமுறை உயிரை பணயம் வைத்து பயணம் என்று முள்ளிவாய்க்கால்வரை அவர் காட்டிய புலிகள்மீதான பற்று சந்தேகத்திற்கப்பாற்ப்பட்டது. பின்னாளில் அவர் வயது முதுமை காரணமாக யாரோ அடிச்சுவிட்டதையெல்லாம் நம்பி தலைவர் உயிருடன் இருக்கிறார் என்று பேசபோனது அவர் தள்ளாமையின் பிரதிபலிப்பு ஆனாலும் தமிழீழம் உருவாக இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது என்பது இந்தியாவிடம் பயிற்சிபெற்ற இயக்கங்களுக்கும் தெரியும், இலங்கைக்கும் தெரியும் இலங்கை தமிழருக்கும் தெரியும், இந்திய வெளியுறவு கொள்கை வகுப்பாளர்களுக்கும் தெரியும். இந்திய உதவியுடன் தமிழர்கள் கை ஓங்கியிருந்த அக்காலத்திலேயே தமிழீழத்தை நினைத்தும் பார்க்க அனுமதிக்காத இந்தியா இனிமேல் அது உருவாக அனுமதிக்கும் உதவி செய்யும் என்று ஐயா எதிர்பார்ப்பது இதுவும் அவர் தள்ளாத வயதின் பிரதிபலிப்பே. இந்தியாவின் நோக்கமெல்லாம்அன்றும் இன்றும் இலங்கை தமிழருக்கு நாடு பெற்று தருவதல்ல, சிங்கள அரசை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே என்பது ஐயாவுக்கு நன்றாக தெரியும், ஆனாலும் பேசுகிறார் என்றால் அதுவும் தள்ளாமையின் ஒரு அம்சமே.
  10. அப்படி நாங்கள் நினைக்கிறோம், ஆனால் சிங்களவர்கள் நினைப்பதில்லை. ஜேவிபி, புலிகள் அழிப்பில் முன்னணியில் நின்ற பிரேமதாச ,ரஞ்சன் விஜேரட்ண கொல்லப்பட்டபோது பெரும்பாலான சிங்களவர்கள் புலிகளை குற்றம் சொல்லவில்லை, அந்த இருவரும் செய்த பாவத்திற்கு உரிய தண்டனை பெற்றார்கள் என்று மகிழ்ச்சியடைகிறார்கள். அவர்களை இப்போதும் திட்டி தீர்க்கிறார்கள். மொழிபெயர்ப்பின்மூலம் அவர்கள் பின்னூட்டங்களைகொஞ்சம் படியுங்கள், அப்படியே பிரேமதாச கொலையையும் எப்படி கொண்டாடுகிறார்கள் என்று படியுங்கள் அவர்கள் இறப்பில் சிங்களவார்கள் மகிழ்ச்சியடைவதற்கு காரணம் ஜேவிபியை அழித்தார்கள் என்பதற்காகவே. அதுவே புலிகளையும் தமிழர்களையும் அவர்கள் அழித்ததுக்கு யுத்த கதாநாயகர்களாக போற்றப்படுவார்கள். அதே பிரேமதாசதான் தென் தமிழீழத்தில் கொத்து கொத்தாக எம் மக்கள விஷேட அதிரடிபடைமூலம் கொன்று குவித்தான் அதுபற்றி ஒருவரிகூட சிங்களவர்கள் மனம் வருந்தவில்லை ஆக சிங்கள இனம் புலிகளையும் ஜேவிபியையும் ஒன்றாக ஒருபோதும் நோக்காது. தமிழர்கள்மீது அவர்கள் மேலாதிக்கத்தை திணிப்பதே கொள்கையாக வைத்திருக்கிறார்கள். புலிகள் அழிவை கொண்டாடும் சிங்கள இனம் புலிகளால் கொல்லப்பட்ட தமது தலைவர்களின் மரணத்தை மகிழ்ச்சியாக கொண்டாடுகிறதென்றால் காரணம் இனவெறி என்ற ஒன்றேதான், அவர்களது இளைஞர்கள் அரசபடையினால் கொல்லப்பட்டால் அவர்கள் வீரர்கள், அதுவே தமிழ் இளைஞர்கள் அதே அரசபடையினால் கொல்லப்பட்டால் அவர்கள் பயங்கரவாதிகள். பிற இனம்மீது மேலாதிக்கத்தை திணிக்க துடிக்கும் ஒரு இனத்தின் மனது அந்த மேலாதிக்கத்தை எதிர்த்து இறந்தவர்களை ஹீரோக்கள் என்று கொண்டாட மனதார ஒருபோதும் அனுமதிக்காது.
  11. அது என்ன பிரமாதம் கந்தையா அண்ணை, ஏற்கனவே நீங்கள் அறிந்திருக்ககூடிய ஒன்றுதான் இருந்தாலும் சொல்றேன், அமெரிக்காவுக்கு அதிக கடன் வழங்கிய நாடு சீனா.
  12. ஐயோ சுவியண்ணா எனக்கு ஒரே வெக்க வெக்கமா வருது😝. அடுத்தவன் உழைப்பை இணைப்பு என்ற பெயரில் பகிரும் நாங்கள் கலைஞன் என்றால் சுயமாக கதை கவிதை என்று கலக்கும் சுவியண்ணா எனும் உண்மையான கலைஞனை என்னவென்று சொல்வது?🙏
  13. நீங்கள் சொல்லவில்லையென்றாலும் இந்தியாவை இலங்கை ஒருபோதும் பகைத்துக்கொள்ளாது என்பதல்ல பகைத்துக்கொள்ளவே முடியாது. ஒருதடவை ஜேஆர் இந்தியாவை பகைத்துக்கொள்ளபோய் உள்நாடும் உயிர்களும் சிதைந்தது வரலாறு, பின்னர் இந்தியாவையே மிரட்டி பார்க்க ஆசைப்பட்ட ஜேஆரை பவ்வியமா ஒரு கதிரையில் இருக்கப்பண்ணி ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கி ஜேஆருக்கு சுளுக்கெடுத்தது வடக்கத்தைய தேசம். பின்பு அதே ஜேஆர் இந்தியாவுடன் சேர்ந்து தமிழர்களை சுளுக்கெடுத்தான் என்றாலும், சிங்கள தேசத்தின் அரசியலை இனி எக்காலமும் இந்திய பிராந்தியத்துக்கு அச்சுறுத்தலாக மேற்குலகம் சார்ந்து இயங்காதபடி தன் கட்டுப்பாட்டுக்குள் இந்தியா கொண்டு வந்தது என்பதே வரலாறு. சிங்களவர்களில் 100%மானவர்களுக்கு இந்திய படங்கள் பிடிக்கும், உடைகள் பிடிக்கும், உணவுகள் பிடிக்கும் ஆனால் இந்தியாவின் இலங்கைமீதான அரசியல் அழுத்தம் பிடிக்காது பிடிக்காது, அப்படியிருந்தும் சிங்களவர்களும் பிக்குகளும் தம்மால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தை இந்திய அரசை புறக்கணிக்கும்படி பகிரங்கமாக கோருவதில்லை, அது நடைமுறை சாத்தியமற்றதொன்று என்பது அவர்களுக்கு தெரியும், அப்படி முயற்சித்தால் மறுபடியும் இந்திய றோவால் இலங்கையில் குண்டுகள் வைக்க முடியும், இலங்கை பொருளாதாரத்தை முடக்க முடியும், கடன்களை வைத்தே இலங்கையை இறுக்க முடியும், மறுபடியும் தமிழர்களுக்காக கவலைப்பட்டு ஐநாவில் சிக்க வைக்க முடியும் அடைக்கலநாதன் அறியவேண்டியது இந்தியாவை இலங்கை பகைத்துக்கொள்ளாது, அது எப்போதும் சீனாவையும் இந்தியாவையும் ஒரே தராசில்தான் வைக்கும், இந்தியாவும் இலங்கைகூட இருக்கும், ஆனால் அது ஒருபோதும் தமிழர்கள்கூட துணை நிக்காது, சிங்களவர்களை பகைத்துக்கொண்டு தமிழர்களுக்கு எதுவும் செய்து தராது. பெயருக்குத்தான் இலங்கை சுதந்திரநாடு ஆனால் , துறைமுகங்கள், விமான போக்குவரத்துக்கள், பாதுகாப்பு எல்லைகோடுகள், தண்டவாளங்களிலிருந்து சாலைகள் அமைப்பு, உணவிலிருந்து ஓடும் பஸ் ஆட்டோ இறக்குமதியிலிருந்து உள்நாட்டு கட்டுமானங்கள்,பங்கு சந்தைகள், தொலை தொடர்பு நிறுவனங்கள், போக்குவரத்து, பொருளாதாரம் சந்தைப்படுத்தல் என்று இந்தியாவின் மறைமுக கட்டுப்பாட்டில் இயங்கும் நாடுதான் இலங்கை, அதனால்தான் இலங்கையில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் முதல் பயணம் இந்தியாவுக்கே. உலகில் எந்தநாட்டுக்கும் இல்லாத வரம் ஒன்று இலங்கைக்கு உண்டு, அது , இலங்கையின் அனைத்து நட்புநாடுகளும் ஒன்றுக்கொன்று பரம எதிரிகள், ஆனால் அத்தனை நாடுகளும் இலங்கைக்கு நண்பர்கள். ஆக அடைக்கலநாதன் செய்ய வேண்டியது இலங்கை இந்தியாவுடன் நிக்கவேண்டும் என்று கூறுவதல்ல, இந்தியா சிங்களவனை மீறி தமிழர்கள்கூட நிக்குமா என்பதை அடைக்கலநாதனுக்கு வாக்களித்த மக்களுக்கு உறுதிப்படுத்தவேண்டும், முடியுமா? இலங்கை இந்தியாவை பகைக்ககூடாது என்று சொல்லும் இவர் இந்தியா தமிழர்களை பகைக்காது இருக்கிறது என்பதை உறுதிப்படுத்த முடியுமா? காலம் காலமாக சிங்களவனுக்கு அட்வைஸ் பண்ணூவதுபோல் பாவனை காட்டி தமிழனை ஏமாற்றும் அரசியல் தொழிலை இவர்கள் ஒருபோதும் கைவிடபோவதில்லை என்பதே தொடர்கதை.
  14. அது என்ன ஒரு மனிசன் கருத்து சொல்லலாம்னு வந்தா நீங்களே அத முதல்ல சொல்லிடுறது?😝 கந்தையா அண்ணை அறிந்த தகவல் தவறானது, சீனா முதலில் ஒரு அபிவிருத்தியடைந்த நாடல்ல, பிரமாண்ட நகர வளர்ச்சியை கொண்டிருந்தாலும், கிராமப்புறங்கள் இன்னும் சுகாதாரம் வறுமை மிக குறைந்த ஊதியம், வேலையில்லா திண்டாட்டம் , சேரிப்புற மக்கள் என மிகவும் தாழ்ந்த நிலையிலேயே உள்ளன. விளங்க நினைப்பவன் சொன்னதுபோல் உள்நாட்டு விவகாரங்களில் கம்யூனிச கொள்கையை கடைப்பிடிக்கும் சீனா பொருளாதார விஷயத்தில் முற்று முழுதாக மேற்குலகம் சார்ந்தே செயல்படுகிறது. உலகின் புகழ்பெற்ற அனைத்து வியாபார நிறுவனங்களும் சீனாவிற்குள் நிலைகொண்டு சீனர்களின் உழைப்பு பணத்தை முதலீடு என்ற பெயரில் அள்ளி செல்கின்றன, சீனாவில் நிலைகொண்டுள்ள மேற்குலக சில உலக புகழ்பெற்ற நிறுவனங்கள் https://msadvisory.com/list-of-foreign-companies-operating-in-china/ சீனா எப்படி உலக பொருளாதாரத்தை சுரண்டுகிறதோ அதேபோல் சீன பொருளாதாரத்தையும் உலகம் சுரண்டுகிறது
  15. அங்கொன்றும் இங்கொன்றுமாக ரசித்த REELS களை தொடர்ச்சியாக இணைக்கபோகிறேன். தம்பி கொஞ்சம் நில்லுங்க என் பொண்ணு சொல்றா நீங்க ரொம்ப அழகாம். காதலியை வெறுப்பேத்துவதும் ஒரு அழகுதான் எப்போபார் போனையா கிண்டிக்கொண்டிருக்கிற? இரு வாறன் ஏய் டக்கெண்டு பாக்காத பின்னால ஒரு வடிவானவ பொடியன் இருக்கிறான். அடிபாவி மானத்த வாங்கிட்டியே யூ ஆர் அண்டர் அரெஸ்ட் ஆ ..அப்படித்தான் ஒரு ஞானத்தோட பீப்பி வாசிக்கணும் ஒரு யானையையே மதிக்கலைனா யாருக்குத்தான் கோவம் வராது எப்போதும் உன் கூடவே பொறக்கணும்
  16. என் நினைவு சரியாக இருந்தால் மைத்திரி ஆட்சிகாலத்தில் யாழ்ப்பாணத்தையே தன் வாள்வெட்டினால் மிரட்டியவர் ,அனைத்து உள்ளூர்/இணைய ஊடகங்களிலும் பெயர் அடிபட்ட பிரசன்னா பின்னர் காணாமல் போனார். அவர் இந்தியா சென்று அங்கிருந்து பிரான்ஸ்போய் தனது முழுநேர தொழிலான வாள்வெட்டை தொடர்ந்து பின்பு அங்கிருந்து கனடா போய் சிக்கிக்கொண்டார். பிரான்ஸ் பொலிசிடம் ஒப்படைக்கப்படவுள்ள பிரசன்னா கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டு உட்பட பல சட்டவிரோத செயல்களுக்காக பல வருடங்கள் சிறையில் கழித்தபின்னர் தற்போது 32 வயதான பிரசன்னா 60 வயதை நெருங்கும் காலத்தில் இலங்கை நோக்கி திருப்பபடுவார் என்று நம்பலாம். அங்கு யாழ்ப்பாணத்தில் புரியப்பட்ட குற்றங்கள் தேடப்பட்டதற்கான தலைமறைவானதற்கான தண்டனை தொடரும். அது எப்படியும் ஒரு 5 வருஷம் கிடைக்கலாம். இப்படி பிரசன்னா வாழ்க்கை நயாபைசா பிரயோசனம் இல்லாம போச்சு.
  17. பையன் அண்ணன்கிட்ட ஆசைப்பட்டு கேட்டதால அது என்ன காமெடி என்று யூடியூப்பில் தேடி பார்த்தால், அது எம்ஜிஆர் படம் ஆனா அந்த காமெடி பண்ணினது நாகேஷ் அல்ல சந்திரபாபு.
  18. சரி ஆசைப்பட்டபடி இப்போ அதே ஜேவிபியிடம் நாடு போய்விட்டது இன்னும் எத்தன வருஷத்தில் இலங்கை சிங்கப்பூராகும் என்று உங்க தீர்க்க தரிசனத்தால் சொல்லிவிடுங்க கம்யூனிச ஆட்சியால் சிங்கப்பூராக மாறிய உலகின் ஒருநாட்டை சொல்லுங்கள் ரதி அறிந்துகொண்டால் அண்டா அளவு மகிழ்ச்சி. அதவிட முக்கியம் சிங்கப்பூரே முதலாளித்துவநாடாச்சே அப்போ கம்யூனிஸ்ட்டுக்களிடம் நாட்டை கொடுத்தால் சிங்கப்பூர்போல முதலாளித்துவ நாடு ஆக்கிடுவார்களா? அப்புறம் எதுக்கு கம்யூனிச கொள்கை அவர்களுக்கு? அப்பப்போ பாட்ஷா ரஜனிமாதிரி வந்து உருட்டிபோட்டு ஓடிறீங்கள் அதுதான் தமிழ் மக்கள் மனசில் உள்ள கவலை. அதாவது இலங்கைக்குள் புலிகள் தனிநாடு உருவாக்க நினைத்தது ஜேவிபியைவிட ஆபத்தான செயலா? அப்போ கொழும்பில் இருந்தவனையெல்லாம் 58/77/83ல் அடிச்சு மட்டக்களப்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் சிங்களவன் விரட்டிவிட்டு அது உங்கள் இடம் ஓடுங்கோடா என்று கலைச்சுவிட்டது உங்கநாடு இதுதான் என்று சிங்களவன் சொன்னது மாதிரி இல்லையா? தனிநாட்டை முதலில் கோடு போட்டு காட்டியது சிங்களவனா தமிழனா?
  19. ஸ்ரேரிங் வீல் பிரச்சனைகள் திடீர் என்று கார் இயங்காதுவிட்டால் ரிவர்சில் கார் பார் பண்ணும் முறை, இது முக்கியமாக எங்கட பொம்பிளையளுக்கு தேவைப்படும். உலகத்திலேயே மிக கேவலமான டிரைவர்கள் இரண்டுபேர் முதலாவது சீனர்கள் இரண்டாவது எங்க ஊரு அம்மணிகள் உண்மைதான் விளங்க நினைப்பவன், அதேநேரம் மிக விலை உயர்ந்த கார் வைத்துக்கொண்டு ஒரு கோப்பி வாங்கவே நூறுமுறை யோசிக்குறதும், எவனாச்சும் ஓசி கோப்பி வாங்கி தருவானா என்று பம்முற மான தமிழர்களும் உண்டு.
  20. கார்களில் ஏற்படும் நம்மால் சரி செய்யப்படக்கூடிய கோளாறுகளை இவர் விளக்குகிறார். இதனை ஏற்பதும் விடுவதும் நமது இஷ்டமே. ஆனால் ஒன்று மெக்கானிக்கிட்ட போனால் உங்களுக்கு 3000 டொலர் செலவாகியிருக்கும் என்று அடிச்சு விடுறார் அதுதான் நெருடல். ஏனென்றால் நம்மவர்களில் சிலர் வைத்திருக்கும் காரே 3000 டொலர்தான் வரும். .................................................................. இயந்திரம் குலுங்குவது ஏன் அதை எப்படி சரி செய்யலாம் என்று சொல்கிறார் கார் கதவு , Fan belt எழுப்பும் சத்தங்களை சவர்க்காரத்தின் உதவியுடன் எப்படி சரி செய்யலாம் என்று சொல்கிறார். எஞ்சின் லைட் எரிந்தால் அதனை சரி செய்வதுபற்றி உருளைக்கிழங்கால் தேய்த்தால் எவ்வளவு மழை அடித்தாலும் கார் கண்ணாடி இருளாகாது என்கிறார் கார் டயர் பற்றிய தகவல் கார் திறப்பு காருக்குள் சிக்கிக்கொண்டால் பிரேக் திடீரென பிடிக்காவிட்டால், ஆனால் எல்லா காருக்குமிது பொருந்தாது காருக்குள் லொகேற்றர் பொருத்தியிருந்தால் கண்டுபிடிப்பது எப்படி மேலும் சில
  21. அண்டபுளுகு புளுகுவதில் ரஷ்ய ராணுவமும் இலங்கை ராணுவம்போல்தான், சில மாதங்களின் முன்னர் முகவர்களால் ரஷ்யா கொண்டு செல்லப்பட்டு பின்னர் பெலாரசில் கைவிடப்பட்டு ரஷ்ய ராணுவத்திடம் கையளிக்கப்பட்டஇந்திய இளைஞர்களை 10 வருஷம் ஜெயிலுக்கு போகிறாயா அல்லது ராணுவத்தில் சாரதி போன்ற சாதாரண வேலைகளில் சேர்கிறாயா என்று எழுத்துமூலமான ஒப்பந்ததில் கையெழுத்து வாங்கி ரஷ்ய ராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்த்ததாக செய்தி ஆதாரத்துடன் வந்தது, அப்போது ரஷ்யா அது அப்பட்டமான பொய் என்று அதை மறுத்தது. பின்னர் மோடியின் ரஷ்ய பயணத்தின் பின்னர் அந்த செய்தி காணாமலே போனது . இப்போது அதே பாணியில் முகவரால் ஏமாற்றப்பட்டு ரஷ்ய ராணுவத்திடம் சிக்கிய இலங்கை இளைஞர்கள், உலக வல்லரசு நாடு ஒன்றில் அவர்கள் ராணுவநாட்டின் உடையுடன் அவர்களுக்கு தெரியாமலே இந்த இளைஞர்கள் நடமாடுகிறார்களா? இந்தாபாரு ரஷ்யா தம்பி ஒரு மனிசன் பொய் பேசலாம் இப்படி ஏக்கர் கணக்கில புளுக கூடாது.
  22. இலங்கை பிரஜாவுரிமையும் இருக்கும் நாட்டு பிரஜாவுரிமையும் வைத்துக்கொண்டு, பல லட்சம் டாலர்களில் சிங்கள நகரங்களிலே சொகுசு பங்களாக்கள், வியாபாரங்கள், வாகனங்கள் வைத்துக்கொண்டு இலங்கைக்கு எந்த சீசனில் பிளட் டிக்கெட் மலிவாக கிடைக்கும் என்று அடிக்கடி ஒன் லைலில் செக் பண்ணிக்கொண்டு, சிங்கள அரசு அனுமதியை சிரித்தபடி பெற்று அங்கிருந்து இங்கும் இங்கிருந்து அங்கும் ஏற்றுமதி இறக்குமதி செய்து , ஐயா அம்மா யாழ்ப்பாண நண்டு, பருத்துறை வடை, ஆனைக்கோட்டை நல்லெண்ணெய், தோலகட்டி நெல்லிரசம் வாங்கலியோ என்று மேற்குலத்திலேயே பகிரங்க விளம்பரம் செய்துகொண்டு இன வரிசையில்தான் இலங்கையில் இரண்டாமிடம் ஆனால் இலங்கை திறைசேரிக்கு அந்நிய செலாவணியை அள்ளிக்கொடுக்கும் இலங்கையின் முதலாவது இனமாக இருந்துகொண்டு திருமணங்களும், சொகுசு பங்களாக்களும் பார்ட்டிகளும் ஒன்று கூடல்களுக்கும் , கோவில் திருவிழாக்களுக்கும் இலங்கையிலேயே அதிகமாக செலவிடும் இனமாக இருந்துகொண்டு தமிழர்களிடம் வாக்கு வாங்கி சிங்கள அரசின் சொகுசு மகிழூந்து, தங்குமிடம்,ஒப்பந்தங்கள், வியாபாரத்திலிருந்து சாராய அனுமதிபத்திரம்வரை வாங்கி கொழுத்துக்கொண்டு கடலுணவிலிருந்து லிருந்து விவசாய உற்பத்தி பொருட்கள் வரை சிங்கள தேசத்திலேயே சந்தை படுத்திக்கொண்டு அதி சொகுசு பேரூந்துக்களில் இலங்கை முழுவதும் சுற்றுலா செய்துகொண்டு அதை ஆயிரக்கணக்கில் காணொலிகளாக இணையத்தில் தரவேற்றிக்கொண்டு இலங்கை தமிழரும் பாலஸ்தீனமும் ஒன்று எங்களின் சுய நிர்ணய உரிமையை ஏன் அங்கீகரிக்கவில்லையென்று கேட்டால், உலக தலைமை நாடுகள் கண்டிப்பாக தரும் வரிசையில் நில்லுங்க வாங்கிக்கலாம்.
  23. இளைஞர்கள் அடிப்படை புரிதலின்றி உணர்ச்சிவசப்படும் செயல்பாடுகளில் இறங்குவது அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்துக்கும் துன்பத்தையே தரும். இலங்கையில் விடுதலைபுலிகளுக்கான தடை தொடர்ந்து நீடிக்கிறது, அப்படியிருக்க புலிகள் சம்பந்தமான பதிவுகளை தனி மனிதர்கள் சமூக ஊடகங்களில் பதிவது நிச்சயமா சிங்கள நாட்டு சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமே. ஏன் மனித உரிமைகளின் உச்சமென்று கருதப்படும் மேற்குநாடுகளில்கூட தடைசெய்யப்பட்ட அமைப்பு என்ற ரீதியில் புலிகளுக்காக நிதி சேர்ப்பது, ஆயுத போராட்டத்தை மீள் கட்டமைக்க முனைவது என்று யாரும் ஈடுபட்டால் அது தண்டனைக்குரிய குற்றமே. ஒவ்வொரு மாவீரர்நாள் தினத்திற்கும் இதுபோன்ற முகநூல் பதிவுகளால் இளைஞர்கள் சிங்கள புலனாய்வு பிரிவிடம் சிக்கி கொள்வது வாடிக்கையாகிவிட்டது. மைத்திரி கோத்தபாய ஆட்சியில்கூட தலைவர் பிறந்தநாள் வாழ்த்து, மாவீரர்தின பதிவுக்காக கொழும்புக்கு நாலாம் மாடிக்கு விசாரணக்கு அழைத்ததும் நினைவில் உண்டு, அவர்கள் என்ன ஆனார்கள் தொடர்ந்து சிறையிலா அல்லது விடுதலை செய்யப்பட்டார்களா தெரியவில்லை, விடுதலை செய்யப்பட்டிருந்தாலும் சிங்கள புலனாய்வின் பூரண கண்காணிப்பில் தொடர்ந்தும் இருப்பார்கள் என்பது உறுதி. மாவீரர்களை நினைவுகூர கட்டுப்பாடின்றி பொதுவெளியில் அனுமதி தந்தால் அனைவரும் அங்கே ஒன்று கூடுங்கள் அதைவிடுத்து அதை தனியான முறையில் பதிவுகளிட்டு சிங்கள சட்டத்தில் சிக்கி கொள்ளாதீர்கள். தனிமனித ரீதியில் ஆவேசப்பதிவுகளீட்டால் ஒரு அரசாங்கம் சட்டத்திற்கு பதில் சொல்ல வேண்டும், தென்னிலங்கை சிங்கள இனவாதிகளுக்கு பதில் சொல்லவேண்டும், ஏன் அவர்கள் கட்சிக்குள்ளேயே குழப்ப,ம் வர வாய்ப்புண்டு. என்னதான் அநுர வந்தான் இனவாதம் இனி இல்லையென்று நாம் பேசிக்கொண்டாலும், இனவெறி சிங்களவனுக்கு நம்மை பிடிக்காது என்பதை எப்போதும் தெளிவாக மனதில் வைக்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் இம்முறை சிங்கள கட்சி வென்றதால் யாழ் சகோதரர்களே என்று சமூக ஊடகங்களில் திடீர் பாசம் காட்டும் சிங்களவர் ஒருவேளை யாழில் என்பிபி ஒரு சீட் கூட வென்றிருக்காவிட்டால் நாம் எப்போதும் கொட்டிதான் அவனுக்கு.
  24. எல்லாம் சரி விஜித ஹேரத் ஐயா தெற்கில் உங்காளுங்கள நினைவேந்தும்போது வடக்கில் உள்ளவர்கள் எங்கே எப்போது இனவாதம் கக்கினார்கள்? ரணில் ஆட்சியின்போதும் கிளிநொச்சியிலும் யாழ்ப்பாணத்திலும் பிரமாண்டமாக மாவீரர்நாள் அனுஷ்டிக்கப்பட்டது அப்போமட்டும் ஏன் சரத் வீர சேகர எல்லாரையும் பிடிச்சு உள்ள போட சொல்லவில்லை? உங்களுக்கு பிரச்சனை அநுரவா இல்லை தமிழ்மக்களா? இல்லை இனவாதமா? மூன்றுமேதான் போல படுகிறது. ஒவ்வொரு மே’யிலும் பலபத்து ஆயிரம் தமிழரை கொன்ற நாளை காலிமுகதிடலில் யுத்த வெற்றிவிழா என்ற பேரில் நீங்கள் கொண்டாடியபோது அது பயங்கரவாதமாக தெரியவில்லை, ஆனால் உங்கள் கொலைவெறிக்கு பல ஆயிரம்பேரை பறி கொடுத்ததை நாங்கள் நினைவு கூர்ந்தால் அது பயங்கரவாதமாக தெரிகிறது. மாவீரர்நாளில் பங்குகொண்ட அத்தனை பேரையும் தூக்கி உள்ளேபோட அவ்வளவு பிரமாண்ட சிறைச்சாலைகள் எல்லாம் உங்களிடம் உள்ளதா என்ன? ஆனால் ஒன்று மஹிந்த ஆட்சியிலிருந்தபோதும் மறைமுகமாக கோயில்மணி ஒலித்து மாவீரர்நாள் கொண்டாடியதாக செய்தி வந்ததுண்டு, மைத்திரி ஆட்சியின்போதும், கோத்தபாய ஆட்சியிலும் தடைகள் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் மாவீரர்நாள் நினைவு கூரப்பட்டதுண்டு ரணில் ஆட்சியின்போதும் அது நடந்தது, அநுர ஆட்சியிலும் நடக்கிறது, அடுத்து வரும் ஆட்சிக்காலங்களிலும் ஏதோ ஒரு வழியில் நடக்கும். ஏனென்றால், எப்படி சிங்களவர்களுக்கு மாத்தறை கண்டி, குருநாகல் சிங்கள திமிர் பிடித்த நகரங்களோ அதுபோல யாழ்மண்ணும் இனம் என்று வரும்போது தமிழ் திமிர் பிடித்த மண் , அது இனத்துக்காய் இறந்தவர்கள் நினைவென்று வரும்போது எவர் தடுத்தாலும் சொன்னாலும் அவர்கள் சொல் கேளாது, அந்த தமிழ் திமிர் பிடித்த மண்ணில் பிறந்துக்கு பெருமை படும் பலரில் நானும் ஒருவன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.