Jump to content

valavan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1534
  • Joined

  • Days Won

    16

Everything posted by valavan

  1. தபால் மூலமான வாக்கு என்று சொல்கிறார்களே 2:12
  2. நல்லகாலம் சஜித் பதவியை ஏற்காமல் விட்டது, உலகம் முழுவதும் ஊடகங்களில் இலங்கை வங்குரோத்து அடைந்துவிட்டது என்று செய்தி வந்தது. குறைந்தது ஐந்து வருடங்களுக்காவது இலங்கையில் அனைத்துக்கும் வரிசை யுகம், எரிபொருள் இல்லை, டொலர் கையிருப்பு இல்லை, தாறுமாறு விலைவாசி ஏறும் மக்கள் வாழ்வு இனி அதோ கதிதான் என்று உலகமே நினைத்தது, ரணில் தனது அனுபவத்தால் உலகவங்கி சர்வதேச நாணையநிதியம், இந்தியா சீனா என்று அனைவருடனும் பேசி ஒரு சில மாதங்களுக்குள்ளேயே கடன் மறுசீரமைப்பு, அந்நியசெலாவணி இருப்பு உயர்த்தல்,படிப்படியாக இறக்குமதிகளை அனுமதித்தது என்று இலங்கையை மீட்டெடுத்தார். என்னதான் ரணில் என்ற சிங்களவனை பிடிக்காவிட்டாலும், அரசியலோ பொருளாதாரமோ எந்த அனுபவமும் இல்லாத சஜித்தைவிட மிக பெரும் திறமைசாலி என்பதை ஒப்புக்கொண்டே ஆகணும். தொடர்ச்சியாக வங்குரோத்து நிலையில் இலங்கை ஓரிரு வருடங்கள் நீடித்திருந்தால் கண்டிப்பா பட்டினி சாவில் பல ஆயிரம் பேரையாவது இழந்திருக்க நேரிடும்.
  3. பல தசாப்தங்கள் அரசியலிலிருந்து பல பதவிகளை ஆண்டு அனுபவித்து முடித்த இவர், உண்மையாகவே நாட்டின்மீது அக்கறையிருந்தால் புதிதாக வந்தவர் நாட்டுக்கு என்ன செய்கிறார் என்று பார்க்க ஒரு வாய்ப்பை அளிக்கவேண்டும். ஆலோசனைகளை வழங்கவேண்டும். அதவிட்டு எப்போபார் இரண்டாம் வகுப்பு பிள்ளைகள்போல குற்றம் சொல்லி கொண்டிருப்பதும் கேலி பண்ணூவதும், நாட்டு பிரச்சனையைவிட பதவியை இழந்த துயர் அவரை வாட்டுது என்றே மக்கள் மனதில் தோன்றும்.
  4. நீங்கள் ஆற்றும் சமூக தொண்டு பல படித்தவர்களே செய்யாத ஒன்று.
  5. அப்போ அகில இங்கையில்திருமலையும் மன்னாரும் யாழ்ப்பாணமுமென தமிழர் பகுதிகளில்தான் அதிக சதவீத வாக்களிப்பு நடந்திருக்கிறது போலும். முன்னைய காலங்களில் சிங்கள தேச தேர்தல்களீல் அதிக ஆர்வம் காட்டாத தமிழர் பகுதி இம்முறை ஏதோ முடிவோடு ஆவேசமாக வாக்களித்திருக்கிறார்கள் போலும், பார்க்கலாம் என்ன முடிவெடுத்திருக்கிறார்களென்று
  6. ராணுவ தடைகள், காவல்நிலைகள் அப்புறப்படுத்துவதால் கடத்தல் காரர்கள், திருடர்கள், அதிவேக வாகன ஓட்டிகள்,வழிப்பறி கேசுகளின் ஆதிக்கம் அதிகரிக்கலாம் என்றும் மக்கள் பேசிக்கொள்கிறார்களாம். அப்போ சிங்களவனிடமிருந்து தப்பினா தமிழனிடம் மாட்டிக்கொள்ளணுமா?
  7. நான் அறிந்து யாரையும்மட்டம் தட்டியோ எகத்தாளம் பண்ணியோ காயப்படுத்தியோ கருத்திட நினைத்ததில்லை., அடுத்தவரை மட்டம் தட்ட என்னிடம் எந்த தராதரமும் இல்லை. நீண்ட காலத்தின் பின்னர் சிறிதுகாலம் விடுமுறையில் உள்ளேன் அதனால் கொஞ்சம் அதிகமாக பேசி அதிகமாக பதிவுகளிட்டதால் உங்களுக்கு அப்படி தோன்றியிருக்கலாம், இயல்பில் அதிகம் பேசுவதில்லை, அதனால்தான் ஏறக்குறைய யாழில் இணைந்து 9 வருடங்களாகியும் 1500 கருத்துக்களைகூட என்னால் தொட முடியவில்லை. எனினும் உங்கள் கருத்து பெறுமதி மிக்கது, முடிந்தவரை எகத்தாளமின்றி என்னை அமைதிப்படுத்த இனி கூடுதல் முயற்சி செய்கிறேன் நன்றி 🙏
  8. உண்மைதான், சிலர் இறந்தும் இருக்கிறார்கள், போலீஸ் பிடிச்சு லாடம் கட்டினா பிறகு இப்போ அடுத்தவர்களை நோகடிக்காமல் பிராங் பண்ணுகிறார்கள் கீழே இருப்பது தென்னிந்திய சிறுமிகளின் பிராங், அடுத்தவரை நோகடிக்காமல் ஒரு அழகிய கவிதைபோல
  9. இவர்களுடைய வீடியோக்களை விரும்பி பார்ப்பேன், அதிகமான பார்வையாளர்களை கொண்டிருந்தார்கள், ஆனால் வேறொருவரின் சனலில் செய்து கொண்டிருந்ததால் சனல் வளர்ந்ததும் இவர்களை கழட்டிவிட்டார்கள். இப்போது வேறு சனல் செய்கிறார்களா அல்லது அவர்கள் திறமை உழைப்பு வீணடிக்கப்பட்டதா தெரியவில்லை.
  10. அது சும்மா ஒரு வேடிக்கைக்கு சொன்னது பையன் பச்சைபுள்ளி வந்தாலும், சதோஷமில்லை சிவத்த புள்ளி வந்தாலும் கவலையில்லை, ஏற்கனவே வந்த பச்சைபுள்ளிகளை ஒட்டுமொத்தமா யாரும் நீக்கிவிட்டாலும் கவலையில்லை. நீங்க ஊரிலேயே படித்தவர் என்பது எனக்கு எப்போதோ தெரியும் ஈழபிரியன் அண்ணா. 😌
  11. வட்டம் என்றுதானே சொல்லிருக்கேன் ஈழப்பிரியன் அண்ணா கண்டிப்பா அந்த வட்டத்திற்குள் நீங்களும் வருவீர்கள்.
  12. யாழில் வந்ததுக்கு முதல் தடவையா சிவப்பு வாங்கிட்டன் , ஏன் குமாரசுவாமியண்ணா இப்படி பண்ணினீங்க? படிக்காதவர் வட்டத்திலிருப்பது நான் ஒருவன் மட்டுமே.
  13. பையா கடல் கடந்த அரசியலை தூர நின்று பார்க்கலாம் பேசலாம் தொட்டு பார்க்கலாம் ஆனால் உள்ளே இறங்ககூடாது, இசை அதனை தவிர்த்திருக்கலாம் என்பதே என் அபிபிராயம். பையனும் அதுபோல்தான் நல்ல பொடியன் ஆனால் கடல் கடந்த அரசியலுக்காக யார் கூடவும் அளவுக்கதிகமாக சண்டை போடுவதை தவிர்க்கணும். அந்த அரசியல்வாதிகளுக்கு எங்களை தெரியாது அவர்களுக்காக எங்களுக்கு தெரிந்தவர்களை பகைக்க கூடாது.
  14. ஓ இதுவேற நடந்திருக்கா? யாழ்களத்தில் நான் கருதும் படித்தவர்கள் வட்டத்தில் இசையும் கோஷானும் உள்ளடக்கம் எதுக்கு உங்க இரண்டுபேருக்கும் இந்த வேண்டாத வேலை? இசை ஒரு இனிமையான கருத்தாளர்.
  15. ஒருகாலம் எங்குபோனாலும் 150 பேர் தனிப்பட்ட பாதுகாவலர்கள், மேலதிகமாக அதிரடிப்படை, பொலிஸ்,ராணுவம் பாதுகாப்புயாழ்ப்பாண நகரத்துக்கே ராஜா,ஸ்ரீதர் தியேட்டர் இவர் கோட்டை, இவர் வைச்சது சட்டம் கேக்காவிட்டால் வாய்க்குள்ளையே பிஸ்டலை வைச்சு சுடும் கொடூரம், ஊர்காவற்துறை அவர் வட்டகை அவரை மீறி யாரும் தேர்தலில் ஜெயிக்க கூடாது என்ன ஆட்டமெல்லாம் ஆடினார், ஒரு வருடம் முன்பு என்னை யாரும் தொடோணூம் எண்டால் அதிரடிப்படையினரை தாண்டித்தான் வரவேண்டும்,முள்ளீவாய்க்கால் நினைவேந்தல் என்ற பெயரில் புலிகளை நினைவு கூருகிறார்கள் எண்டு ஒரு சிங்களவனாகவே மாறி எகத்தாளமா வேறு பேட்டி கொடுத்தார். இன்று பதவியும் புடுங்கப்பட்டு பாதுகாப்பும் புடுங்கப்பட்டு, ஒரு கை துப்பாக்கிகூட வைத்திருக்க அனுமதி இலாமல், எவர் வேண்டுமென்றாலும் இவரை சீண்டலாம் வெற்றி வாய்ப்பை இல்லாமல் பண்ணலாம் என்று அவரே சொல்லி அழும் நிலைக்கு வந்துவிட்டார். உங்கள் வாழ்நாளிலும் எங்கள் வாழ்நாளிலும் உங்களைபோன்றவர்களின் கும்பலின் அஸ்தமனத்தை பார்ப்பதே ஒவ்வொரு மனிதனினதும் வேண்டுதல். அதிகாரத்திலும் பதவியிலும் இருக்கும்போதே இயற்கை மரணம் எய்தினால் நீங்கள் வென்றதாகவே ஆகிவிடும் ஊரில் உள்ள இவரின் எடுபிடி ஒன்றின் கருத்துப்படி இந்த தேர்தலில் தோல்வியடைந்தால் லண்டனுக்குபோய் இவர் செட்டில் ஆகும் வாய்ப்பிருக்கிறது என்று சொன்னார், லண்டனில் இவருக்கு பெரிய வியாபாரங்கள் இருக்கு என்றும் சொன்னார் உண்மை பொய் தெரியவில்லை.
  16. சர்வதேச சட்டப்படி எந்த ஒரு நாட்டுக்கும் கரையிலிருந்து 12 கடல்மைல்கள் அவற்றின் சொந்த கடல்பகுதியாகவே கருதப்படும் என்கிறார்கள், ஆதலால் அனைத்துநாட்டிற்கும் கடல் எல்லைகள் உண்டு. பாக்குநீரிணை மன்னார் வளைகுடாபகுதி மிக குறுகலானது என்பதால்தான் எல்லைகள் மீறுவதில் ஏகப்பட்ட புடுங்கல்கள், ஆனால் நெடுந்தீவுக்கும், பருத்துறைகடற்கரைக்கும் முல்லைதீவுக்கும் இந்திய மீனவர்கள் வந்து மீன் பிடிப்பது எந்த வகையிலும் தவறாக எல்லையை புரிந்து கொண்டது அல்ல.அது அப்பட்டமான இன்னொருநாட்டின் கடல்வள கொள்ளை . கச்சதீவு என்ற ஒரு பிரச்சனை இலங்கை இந்தியாவிற்குள் இல்லை, இந்திராகாந்தி ஸ்ரீமா ஒப்பந்தபடி கச்ச தீவு என்பது இலங்கைக்கு சொந்தமாகிவிட்டது, கச்சதீவு திருவிழாவில் கலந்து கொள்ளவும் , மீன் வலைகளை உலர்த்தவும் ஓய்வெடுக்கவும் மட்டுமே இந்திய மீனவர்களுக்கு உரிமையுள்ளது, ஆனால் மீன் பிடிக்க உரிமையில்லை என்பதே ஒப்பந்தம் என்கிறார்கள். அதனால்தான் இலங்கை கடற்படையிடம் மாட்டும்போதெல்லாம் கச்சதீவில் மீன்பிடிக்கும்போது என்று அவர்கள் சொல்வதில்லை கச்சதீவுக்கு ‘’அருகில்’’ மீன் பிடிக்கும்போது இலங்கை கடற்படை அட்டூழியம் என்று கப்சா விடுவார்கள். 1976 ஆம் ஆண்டு இருநாட்டு ஒப்பந்தங்களின்படி கச்சதீவை ஒருபோதும் இலங்கையிடமிருந்து மீளபெற முடியாது என்று பல தடவை மத்திய அரசு அறிவித்துவிட்டது. ஆனால் ஒவ்வொரு தேர்தல் வரும்போதும் கச்சதீவை மீட்போம் என்று பிரச்ச்சாரம் செய்யும் மாறி மாறி ஆட்சிக்கு வரும் தமிழக கட்சிகள் ஆட்சிக்கு வந்ததும் அதுபற்றி பேசுவதில்லை, ஏனென்றால் அவர்களுக்கும் தெரியும் அது சாத்தியமில்லையென்று , மீனவ சமுதாயத்தின் வாக்குகளுக்காக ரீல் விடுவார்கள். இதில் அதியுச்ச நகைச்சுவை எந்த காங்கிரஸ் கச்சதீவை இலங்கைக்கு தாரை வார்த்ததோ அதே காங்கிரசும் கூட்டுகட்சியான திமுகவும் தேர்தல் நேரங்களில் கச்சதீவை மீட்போம் என்று குரல் கொடுப்பது.
  17. இந்திய மத்திய அரசும் இலங்கையும் சீமானுக்கு எதிரிகள்தான் இதில் யார் யாரிடம் மண்டியிட்டால்தான் சீமானுக்கு என்ன? எனக்கு பிடிக்காத ஒருவன் நான் நினைத்தபடி நடப்பான் என்றோ நடக்கவில்லையென்று யாரும் எதிர்பார்க்ககூடாது. உண்மை நிலவரம் யாதெனில் தமிழகத்தின் முதலாவது மிக பெரிய மீன்பிடி துறைமுக நகரமான தூத்துக்குடியில் வைத்து இந்திய மீனவர்கள் பற்றி கேள்வி கேட்டால் அவர்களுக்கு எதிராகவும் கருத்து சொல்ல முடியாது, இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும் கருத்து சொல்ல முடியாது அதனால்தான் ஒரேவரியில் பதில் சொல்ல முடியாமல் மத்திய அரசின் பக்கம் காயை நகர்த்தி விழி பிதுங்கினார் சீமான். இது வாழ்க்கையில் குடிப்பழக்கமே இல்லாத ஒருவனை பார்த்து , நீ குடிப்பதை நிறுத்திவிட்டாயா ஆம்/இல்லை என்று மட்டுமே பதில் சொல்லவேண்டும் என்பதைபோல, ஆம் என்று சொன்னால் முன்பு நீ குடித்திருக்கிறாய் என்று அர்த்தம், இல்லையென்று சொன்னால் அப்போ நீ குடிகாரன் என்று அர்த்தம். ஆனால் வெளிப்படையாக தெரிந்த விஷயம், நட்பு என்று ஒருவரை வரிந்து கொண்டால் விமர்சனங்களை கடந்து அவர்களுக்கு நேர்மையாக விசுவாசமாக இருக்க வேண்டும் எனும் குணம் பையனில் தெரிகிறது. கண்டிப்பா அது ஒரு உயர்ந்த குணம்தான்.
  18. பையா கடைசிவரை எல்லை தாண்டி மீன் பிடிக்கும் விஷயத்தில் சீமான் சொன்ன கருத்து சரியா பிழையா என்று சொல்லவே இல்லையே, உளவு விமானம்போல ஊரெல்லாம் சுத்தி வர்றீங்க. எனக்கு தெரிந்து நேரடியாக சீமான் பதில் சொல்ல திணறிய தருணங்களில் இதுவும் ஒன்று, சரி அவராவது நேரடியாக சொல்லவில்லை நீங்களாவது ஒரே வரியில் சொல்லுங்க பையா , அண்ணன் இலங்கை மீனவர்களுக்கு சாதகமாக பேசுகிறாரா இந்திய மீனவர்களுக்கு சாதகமா பேசுகிறாரா?
  19. ஒருகாலம் யாழ்தளம் சீமான் ஆதரவாளர்களால் நிரம்பி வழிந்தது இன்று ஒருசிலர் தவிர சீமானின் பேச்சை அரசியலை நகைச்சுவைகளின் உச்சம் என்றே பலர் கருதுவதுண்டு சட்டவிரோதமாக நுழையும் இந்திய கடற்தொழிலாளர்களை இலங்கை கைது செய்தால் பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்கிறாரே. அந்த சட்டவிரோத இந்திய மீனவர்கள் யார் பகுதியில் உள் நுழைகிறார்கள், யார் வயிற்றில் அடிக்கிறார்கள் என்று சிந்திப்பதேயில்லையா? இலங்கை தமிழனை அழித்தவன் மத்தியிலிருக்கும் வட இந்தியன் என்று கட்சி கூட்டங்களில் பொங்கும் சீமான், அதே இலங்கை தமிழனை பொருளாதார ரீதியில் அழிக்க வட இந்தியனின் உதவியை நாடுவது எந்த ஊரு கொடூரம்? இது ஒரு முஸ்லீம் ஊடகத்தில் வந்த செய்தியென்பதால் உருட்டிவிடவும் வாய்ப்புண்டு என்பதால் இப்படி சொன்னாரா என்று கூகுளில் உறுதிபடுத்தி பார்த்தால் ஆம், சொல்லியிருக்கிறார்.
  20. அவர்கள் ஏரிமீன்கள் அல்ல எங்கும் நகரமுடியாதபடி ஒடுக்கமான இடத்தில் விரும்பியோ விரும்பாமலோ தமக்கு கிடைக்கும் முடிவுகளை உண்டு பெரிய மீன்களின் ஆதிக்கத்திலிருந்து தப்பிக்க முடியாமல் வாழும் கிணற்று மீன்கள். ஏரிமீன்கள் நாம்தான் பரந்த நீர் பரப்பில் பரவலாக நீந்தியபடி கிணற்றுக்குள் சிக்கிய மீன்கள்பற்றி சுதந்திரமாக கருத்து சொல்ல முடிகிறது. வெள்ளை சுறாக்கள் திரும்பி போகும்போது பெரிய மீன்களுடன் சேர்ந்து வாழ சம்மதித்தது சிறிய மீன்கள்தான் என்ற கறை எப்போதும் எம் பக்கமிருக்கும்.
  21. அட இதை கவனிக்காமல் நானும் வாக்களித்தவர் பெயரை சொல்லிவிட்டேன், ஆனால் ஒன்று புலம்பெயர்ந்தவர்களின் கருத்துக்கணிப்பு கூட்டு சேர்ந்து செயல்படுவதால் எந்தவிதத்திலும் ஒரு புண்ணியமும் கிடைக்காது அதனால் பொதுவெளியில் தெரிவிப்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன். ஏனெனில் எமது தெரிவுகள் எந்த விதத்திலும் தாயக தேர்தலில் செல்வாக்கு செலுத்த போவதில்லை, இது உண்மையான தேர்தலில் வாக்களிக்காத வெறும் தனிமனித அபிப்பிராயங்கள்.
  22. அரச பக்கமும் இல்லாமல்,. தமிழர் பாரம்பரிய கட்சிகளும் இல்லாமல் சுயேட்சை பக்கம் சார்ந்து மருத்துவர் அர்ச்சுனாவுக்கு வாக்களித்துள்ளேன், இது விரும்பி போட்டதல்ல வேறு தெரிவுகள் இல்லாமல் போட்டது.
  23. மனது வைத்து எந்த தேர்தல் கட்சிகளிலும் துளிகூட நாட்டமில்லை. தமிழ்சிறியின் அழைப்புக்காகவும் கோஷானின் கருத்துக்கணிப்புக்காகவும் மதிப்பு கொடுத்து ஒரு வாக்கை தட்டிவிடலாம் என்றிருக்கிறேன். இந்த வாக்களிப்பு தெரிவில் தேர்தலை புறக்கணிக்கிறோம் அல்லது இந்த தேர்தலில் வாக்களிக்க விரும்பவில்லை என்றொரு தெரிவை ஏன் நீங்கள் வைக்கவில்லை கோஷான்? ஏனெனில் எந்த தேர்தலிலும் அந்த முடிவை எடுக்கும் கணிசமான பிரிவினர் உண்டு.
  24. ஆம் ஈழப்பிரியன் அண்ணா, அதிலும் நம்மவர் படத்தில் ஒரு நடிப்பு நடிச்சிருப்பார், சிவாஜியையே தூக்கி சாப்பிடும் நடிப்பு. பல பத்து ஆண்டுகள் திரையில் ஜீவனாகவே வாழ்ந்த அந்த மகா கலைஞனுக்கு நம்மவருக்கு மாத்திரமே ஒரேயொரு தேசிய விருது கிடைத்தது அதுவும் துணை நடிகருக்காக.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.