Jump to content

valavan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1242
  • Joined

  • Days Won

    14

Everything posted by valavan

  1. மதம் என்ற ரீதியில் அடையாளமிட்டு டக்ளசை சாத்தானின் பிள்ளையென்று கூற தேவையில்லை, ஏனென்றால் அதே மதத்திலிருந்து வந்துதான் சீலனும் விக்டரும் இன்னும் பல போராளிகளும் மண்ணையும் எம் மனதையும் ஆண்டுவிட்டு போனார்கள். மதரீதியில் குறிப்பிடபோனால் அவர்களும் அந்த பொருளினுள் அடங்கிவிடுவார்களே. இனம் என்ற ரீதியில் சாத்தானின் பிள்ளைகளுக்குள் டக்ளசை சேருங்கள், இனத்துக்குள் சாத்தானுகளுக்கு எந்த அனுமதியும் அளிக்க தேவையில்லை.
  2. சீமானே ஒரு கிறிஸ்தவர்தான் அவர் உண்மையான பெயர் சைமன் என்று தமிழகத்தில் ஒரு பிரிவினர் கூவிக்கொண்டு இருக்கிறார்கள். அதுபோக விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் அவரை நோக்கி நெருங்கலாம் என்ற ரீதியிலேயே அடிக்கடி விஜய் புராணம் பாடுகிறார் சீமான். அப்போ கிறிஸ்தவரான விஜய் சாத்தானின் பிள்ளையென்றால் அவர்கூட கூட்டு சேரமாட்டாரா சீமான்? ஆனால் இஸ்லாமியர்கள் விடயத்தில் சீமான் கூறியதில் எந்த தவறுமேயில்லை, அவர்கள் எந்த பிரச்சனையையும் தமது மதத்தை முன்னிறுத்தியே அணுகுவார்கள். பாஜக தமது மதத்திற்கு எதிரான நடவடிக்கைகளிலீடுபடுவதால் அவர்களுக்கு எதிர்ப்பை காண்பிக்கவும் தமக்கு ஆதரவான கட்சியை மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி அமைப்பதை விரும்புகிறார்கள், அதற்கு அவர்கள் சப்பைக்கட்டு கட்டும் காரணம் மத சார்பின்மை இந்தியாவில் வேண்டும் அதனால் காங்கிரஸ் திமுகவை ஆதரிக்கிறோம் என்று........... என்று....மதத்தின்மேல் வெறித்தனமான கொள்கை கொண்ட இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள்,. இவர்களின் இந்த கருத்தில் எந்த கோணத்திலிருந்து பார்த்தாலும் ஏதாவது ஒரு அளவையியல் தெரிகிறதா? இப்படி உண்மையாகவே சீமான் பேசியிருந்தால் இலங்கையில் நமக்கு நடக்கும் கொடுமைகள் பற்றி பேசவும் தகுதியை இழந்துவிடுகிறார். மணிப்பூரில் இரண்டு பெண்களை நிர்வாணமாக தெருவில் இழுத்து செல்லும் காட்சியை பார்த்த உலகின் எந்த மூலையில் இருக்கும் ஒரு மனிதனும் அதனை எங்கோ ஒரு மூலையில் நடந்த சம்பவம் என்று எடுத்துக்கொள்ள மாட்டான், அதும் ஆதிக்கவெறிகளால் அதே துயரத்தை பலதடவை அனுபவித்துவிட்ட நாம் அது இந்தியாவில் எங்கோ ஒரு மூலையில் நடந்த சம்பவம் என்று பார்க்க மாட்டோம். அண்ணா என்னை விட்டுவிடுங்கள் என்று அலறிக்கொண்டு சென்ற அந்த பெண்கள் மீதான கொடூரம் மனிதநேயமுள்ள எவருக்கும் அது மணிப்பூர் சம்பவமல்ல மனிதர்களுக்கு ஏற்பட்ட துயரம். அது நீங்கலாக இஸ்லாமியர்கள் விடயத்தில் சீமானின் கருத்தின்மீது எந்தவிதமான தவறும் கண்டுபிடிக்க முடியவில்லை. இஸ்லாமியர்கள் இந்தியாவில் பிறந்து வாழ்ந்து இறந்தும் போகிறார்கள்,, ஆனால் தமது மதம் சாராத இந்தியர்கள் பல லட்சம் இறந்தாலும் கண்டுகொள்ள மாட்டார்கள், கவலையும் பெரிதாக கொள்ளமாட்டார்கள், ஆனால் சிரியாவில் அவர்கள் மதம் சார்ந்தவர்கள் பாதிக்கப்பட்டால் இந்தியாவில் இருந்து கண்ணீர் வடிப்பார்கள், ஊர்வலம் போவார்கள் ஊடகங்கள் அதுபற்றி செய்தி போடவில்லையென்று விபச்சார ஊடகங்கள் என்று திட்டுவார்கள். ஆனால் தாமும் இந்தியர்கள் என்று பிறருடன் சண்டைக்கு போவார்கள், ஆனால் இந்திய தேசிய கீதம் பாடமாட்டார்கள், இந்திய கொடியை தாங்கி பிடிக்க மாட்டார்கள் இந்திய போர்வீரன் ஒருவன் இறந்தால் அஞ்சலி செய்ய மாட்டார்கள். இந்தியாவில் அவர்கள் ஆட்கள் நடத்தும் குண்டுவெடிப்புகளுக்கு சிறு கண்டனம்கூட தெரிவிக்க மாட்டார்கள் ஆனால் ஐஎஸ் ஐஎஸ் கொடியுடன் போஸ் கொடுத்து பலர் அகப்பட்டும் இருக்கிறார்கள். மதவாத பாஜகவை எதிர்க்க திமுகவை ஆதரிக்கிறோம் அவர்கள் ஆட்சிதான் வேண்டும் என்றார்கள், பின்பு அதே திமுக ஆட்சியில் கோயம்புதூரில் சிலிண்டர் குண்டு வைக்க பார்த்தார்கள். இவர்கள் எதற்க்குத்தான் விசுவாசம்? தற்கால அரசியலில் எம்மை பொறுத்தவரை இந்தியா என்பது எமக்கு தேவையே இல்லாத ஆணிதான். ஆனால் சொந்த மண்ணை நேசிக்காத எவரும் சாத்தானின் பிள்ளைகளே அது இந்தியாவில் இருந்தாலும் சரி தமிழ் ஈழத்தில் இருந்தாலும் சரி . சீமான் கருத்தில் பாதி எந்த விதத்திலும் தவறேயில்லை
  3. எந்த பரா துருப்புக்களை இறக்கி சிங்கள ஆட்சியாளர்களை வழிக்கு கொண்டுவர இந்தியா முயற்சித்ததோ அதே பரா துருப்புக்களை இறக்கி தமிழர்களுடன் மோதவிட்ட ஜே.ஆர் எனப்படும் மனிதன் தமிழர்களை பொறுத்தவரை கொடூரன் குள்ளநரியாக இருந்தாலும் சிங்களவர்களை பொறுத்தமட்டில் ஐயத்திற்கு இடமின்றி அவர்களுக்கு அவன் ஒரு ராஜ(தந்திர)குமாரன் தான் . என்னதான் எம் போராட்டவலு முற்று முழுதாக அழிந்து போனாலும், ஜே.ஆர் தலைமையில் தமிழர்களை ஒரு வழி பண்ண புறப்பட்ட ஜே.ஆர் உட்பட்ட ஏறக்குறைய அத்தனை அமைச்சர்களும் தம் வாழ்நாளில் சிங்களதேசமும் அவர்களின் ஏவல் படை தரப்பும் அடிவாங்கி அழிந்தத்தை தம் கண்முன்னால் பார்த்துவிட்டே இயற்கையாகவும் தாம் செய்த வினைகளை தாமே அறுத்து செயற்கையாகவும் அழிந்து போனார்கள். 13 ராணுவத்தினர் கொல்லப்பட்டதற்கு தமிழர்கள்மேல் காடைதனத்தை கட்டவிழ்த்து ருத்ர தாண்டவமாடியவர்கள் அவர்கள் கொல்லப்படுவதை பார்த்து ரசித்து சிரித்து கேலி செய்தவர்கள் , பின்னாட்களில் அவர்களின் பல ஆயிரம் படையினர் கொல்லப்பட்டு காயப்பட்டு அவர்களை காவியபடி கொழும்பு நகர வீதிகளில் அம்புலன்சுகள் அலறியபடி செல்லும்போது இறைச்சி போகுது என்று தமது படையினரை தாமே கிண்டல் செய்தார்கள். எம் போராட்ட சக்தி முற்றாக அழிந்து போனதுதான் இருந்தாலும் கேட்க எவனும் இல்லையென்று தூக்கி போட்டு பந்தாடியவர்களை திருப்பி மிதி மிதியென்று மிதித்து மரண பயம் என்றால் என்னவென்று அவர்களுக்கும் காண்பித்துவிட்டே மறைந்தார்கள். அதில் ஒரு சிறு நிம்மதி
  4. பலபத்து ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவுடன் சேர்ந்து தமிழர்கள் சிங்களவர்களையும் இலங்கையையும் ஆக்கிரமித்துவிடுவார்கள் என்ற சந்தேகமே சிங்களவர் தமிழர்களிடையேயான மன கசப்பின் ஆரம்பபுள்ளி என்கிறார்கள். பல காலமாக இலங்கை தமிழர்களுக்கென்று ஒரு நாடு கிடைத்தால் தமிழகமும் தனிநாடு கேட்டு இந்தியாவிலிருந்து பிரிந்துவிடும் என்ற இந்திய மத்திய ஆட்சியாளர்களின் அச்சமே இலங்கையில் தமிழருக்கென்று ஒரு நாடு கிடைக்கவிடாமல் இந்தியா தலது பலத்தை பிரயோகித்து எம் போராட்ட சக்திகளை அடியோடு அழித்தது என்பது வரலாறு. இப்படி இருநாட்டு அரசுகளும் சந்தேகப்பட்டபடி எதுவும் நடக்கவில்லை ஆனால் இந்த சந்தேகங்களினால் சில லட்சம் உயிர்களை நாம் இழந்ததுதான் மிச்சம். இது யாருக்கு தெரியுதோ இல்லையோ செல்வம் போன்ற பல தசாப்தங்களாய் ஆயுத அரசியல் போராட்ட அமைப்பில் இருப்பவர்களுக்கு நன்கு தெரியும், அப்படியிருந்தும் நடைமுறை சாத்தியமில்லாத உசுப்பேத்தல் கருத்துக்களை கூறுவது, சிங்களவன் இன்னும் எந்தவித தடுப்பாயுதங்களும் இல்லாது வெறும் கைகளுடன் நிற்கும் எம்மீது கொலைவெறி கொள்ள மட்டுமே வழிவகுக்கும். இந்தியாவுடன் இணைக்கவேண்டி கோரிக்கை வைப்போம் என்கிறாரே இந்தியாவுடன் ஒருவேளை வடகிழக்கு இணைந்துவிட்டால் ஹிந்திய ஆட்சியாளர்கள் எம்மை தங்க தாம்பாளத்தில் வைத்து தாங்குவார்களா? ஏற்கனவே வடக்கு கிழக்கை சிங்களவன் ஆக்கிரமிப்பதுபோல, இந்திய மாநிலங்களில் ஒன்றாக இருக்கும் தமிழகத்தில் இந்தி திணிப்பு, வங்கி ரயில்வே துறையிலிருந்து கூலி தொழிலாளர்கள்வரை வட இந்தியர்கள் ஆக்கிரமித்துவிட்டார்கள், போதாகுறைக்கு அங்கிருந்து வந்து கொலை கொள்ளை என்று தமிழகத்திலேயே பல எதிர்ப்பு குரல்கள் எழுவதை இவர் கவனித்ததே இல்லையா? தமிழக மீனவர்கள் பலநூறுபேர் இலங்கை கடற்படையால் கொன்று குவிக்கப்பட்டும் இன்றுவரை பெரிதாக அலட்டி கொள்ளாமல் இருக்கும் மத்திய அரசு சிங்களவன் நமக்கு பண்ணுவதுபோல் தமிழகத்தை மாற்றாந்தாய் மனபான்மையுடன் வைத்து இருப்பதை இவர் கவனித்ததே இல்லையா? வட இந்தியர்களை இலங்கை கடற்படை கொன்றதுபோல் நூற்றுக்கணக்கில் யாரும் கொன்றிருந்தால் ஹிந்தி ஆட்சியாளர்கள் அமைதியாக இருந்திருப்பார்களா? இவர்களுடன் எம் வடக்கு கிழக்கு சேர்ந்தால் சிங்களவனைவிட சுதந்திரம் அதிகம் கிடைக்கும் என்ற சிந்தனையை என்ன சொல்ல? தற்கால உலகில் தமக்கென அரசியல் எல்லைகளை வரைந்துகொண்டு இயங்கும் நாடுகளில் ஒன்றை பிரித்து இன்னொன்றுடன் சேர கேட்போம் என்பது நடைமுறை சாத்தியமில்லாத நகைச்சுவை கருத்துக்கள் மட்டுமே.
  5. ஈழம் என்னும் இலங்கையின் தமிழர் பெரு நிலப்பரப்பில் சாதிய வேறுபாடுகள் ஒதுக்கல்கள் ஒன்றோ இரண்டு இடங்களில்தான் நடந்திருக்கலாம் என்று நீங்கள் கூறினால் உண்மையை மறைப்பது பிபிசி அல்ல சாட்சாத் நீங்களே தான். இந்த நிமிடம்வரை வடக்குகிழக்கில் உயர் சாதியினர் என்று தம்மை கருதிக்கொள்ளும் தமிழர்கள் வாழும் மைய பகுதிகளில் ஒதுக்கப்பட்ட சமூகமாக கருதப்படும் எந்த தமிழரும் காணி வீடு சொத்துக்கள் என்று வாங்க முடியுமா? சாதி மாறி காதல் கல்யாணம் நிகழ்ந்தால் பரந்த மனப்பான்மையோடு ஏற்கும் மக்கள் கூட்டம் உண்டா? அவ்வளவு ஏன் சாதி குறைந்தவர் என்று அறியப்பட்டால் உடனடியாகவே அவர் என்ன தரத்திலிருந்தாலும் சக மனிதனை ஒருமையில் அழைக்கும் பழக்கம் எங்களது மக்கள் சமூகத்தில் ஓரிரு இடங்களில் மட்டுமா நடக்கிறது? சாதியத்தின் பெயரால் சக மனிதர்களை அசிங்கப்படுத்தும்போது வரும் வலியை உணர வேண்டுமானால் முற்பிறப்பினை ஞாபகம் வைத்துக்கொள்ளும் ஒரு பிறப்பெடுத்து உயர்ந்த வகுப்பினராய் இறுமாப்படையும் தமிழர்கள் இன்று அவர்களால் ஏளனம் செய்யப்படும் சாதியில் மீண்டும் பிறக்கவேண்டும் அப்போதுதான் முற்பிறப்பில் அவர்கள் செய்த தவறின் வலியை இப்பிறப்பில் உணர்ந்து கொள்ள முடியும். தத்ரூபமாக ஓவியம் வரைந்து காண்பிக்கும் நீங்கள் நிகழ்காலத்தை தத்ரூபமாக காண்பிக்காமல் மறைக்க பார்க்கிறீர்கள் என்றே தங்களின் பதிவின் மூலம் பொருள் கொள்ளலாம்.
  6. வெகுவிரைவில் வடகுதியை நகரங்களை சுற்றியுள்ள மக்கள் வெளியேறிய கிராமங்களில் முஸ்லீம்களும் சிங்களவர்களும் குடியேற வாய்புண்டு. நகரத்தின் நடுவே தமிழர் எல்லைபுறமெங்கும் சிங்களவர் முஸ்லிம், கிழக்கு மாகாணம் ஏற்கனவே அப்படி ஆகி வெகுகாலம், அடுத்தது வடக்குத்தான் என்று நினைக்கிறேன். தமிழர்கள் நகரங்களநோக்கி குடிபெயர்வது,புலம்பெயர்வது, இந்த இரண்டு விசயத்திலும் எந்தவிதத்திலும் விமர்சனம் வைக்க தகுதியில்லை, தமிழ் விளங்காதமாதிரி அந்த இரண்டு வரிகளையும் கண்டுக்காமல் போக வேண்டியதுதான். அதை தவறு என்று அழுத்தி சொல்லபோனால் அப்புறம் குப்புறகிடந்தபடி வாய் கொப்பளிச்சமாதிரி ஆயிடும்.
  7. கடந்த தேர்தலில் கோட்டபாய ஜனாதிபதி ஆனதற்கு தமிழ் முஸ்லீம் வாக்குகள் துணை நின்றனவா?
  8. அது அவரின் தனிப்பட்ட விருப்பிலான சாதனை அதற்கு வாழ்த்துக்கள். ஆனால் இதுபோன்ற ‘சாண்டோ’ சாதனை முயற்சிகளில் ஈடுபட்டவர்கள் பலர் பின்னாட்களில் மீளமுடியாத முள்ளந்தண்டு ,கழுத்துவலி போன்ற பிரச்சனைகளினால் நீண்டகாலம் படுத்த படுக்கைவரை போய் அவதியுற்றதை அறிந்திருக்கிறோம், கூடியவரை இதுபோன்ற முயற்சிகளை பிறர் தவிர்ப்பது நல்லதென்பது எனது தனிப்பட்ட கருத்து ஆலோசனை அல்ல.
  9. எமது புலம் பெயர் உறவுகள் சார்பிலான முதலீடுகள், பிரச்சனைகளுக்கு இவருக்கு பேச அனுமதி தந்தது யார்?
  10. மிக கொடூரமான மண், மத ஆக்கிரமிப்பு நிகழ்ந்த காலங்களில்கூட புலம்பெயர்ந்த நாடுகளின் அகதி விசாரணையின்போது இனிமேல் சிங்கள மண்ணில் வாழமுடியாது பாதுகாப்பே இல்லையென்று கதறி கண்ணீர்விடுவது, நிரந்தர வதிவிட உரிமை கிடைத்த மறுவாரமே கொழும்புக்கு டிக்கெட் போடுவது, கூலிங்கிளாசும் கட்டை கழிசானும் அணிந்தபடி கொழும்பு நகர வீதிகளில் ஜாலியாக வலம் வருவது, ஓடி ஓடி வெள்ளைக்காரன் நாட்டில் சம்பாதிச்சதை கொடூரங்கள் புரியும் இலங்கை அரசு தேசத்தின் தென்பகுதியில் சொத்து பத்துக்கள் வாங்கி முதலிடுவது, சிங்கள தேச வங்கிகளில் பல பில்லியன் ரூபாய்களில் நிரந்தர வைப்பிலிட்டு புலம்பெயர் நாடுகளில் அதன் வட்டியை எடுத்து செலவிடுவது, அதுபோதாதென்று சிங்கள தூரதரகங்களுடனே தாம் வாழும் நாட்டில் இருந்தபடி சுமூக உறவில் இருப்பது, போதாகுறைக்கு தமிழர்களால் தமிழர் பிரதேசத்தில் தேர்வு செய்யப்பட்ட அரசியல் தலைவர்கள் அரச கார்கள், பங்களாக்கள் என்ற வசதிகளுடன் அரசுடனேயே கொழும்பில் மிக அன்னியோன்னியமாக செயல்படுவது, அந்த தமிழர் பிரதிநிதிகளையே அடுத்த தேர்தலிலும் வாக்குபோட்டு வெற்றிபெற வைப்பது வெறும் பிரச்சாரங்கள் அற்ப சலுகைகளுக்காக இருக்கும் மதத்திலிருந்து இன்னொரு மதத்துக்கு தாவுவது, எமது நிலப்பரப்பை நம்மவர்களே ஆக்கிரமிப்பு மதக்காரர்களுக்கு அதிக விலைக்கு விற்று லாபம் பார்ப்பது என்று நம்மவர்கள் புரிவது அத்தனையும் புலம்பெயர்நாடுகளின் அரசுகளுக்கு நன்றாகவே தெரியும், இத்தனையும் செய்துவிட்டு ஆக்கிரமிப்பில் இருக்கிறோம் காப்பாற்றுங்கள் என்றால் எவன் ஏத்துக்குவான்? மாறாக அவர்கள் தம்மீது மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பை துளிகூட சமரசமின்றி எவ்வாறு எதிர்த்தார்களென்று உலகம் அவதானித்து அறிந்து வைத்திருக்கிறது நம்மை அவதானித்ததுபோலவே.
  11. ஈஸ்டர் குண்டுவெடிப்புடன் துண்டிக்கப்பட்ட சிங்கள முஸ்லீம் உறவை மீண்டும் புதுப்பிக்க பகீரத பிரயத்தனங்கள் எடுக்கிறார்கள். ஒருபக்கம் கனடா பிரதமரின் தமிழர் ஆதரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம், மறுபக்கம் தாங்கள் செய்த தவறை சொல்லாமல் இஸ்லாமியர்கள் படுகொலையை மீண்டும் மீண்டும் பேசும் வன்மம், இப்போது தியாகிகள் தூபி .தாய்மண்மேல் அவ்வளவு பாசம் என்றால் எதற்கு இலங்கையிலிருந்து அரபுநாடுகளுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள் என்பதையும்,, முஸ்லீம்களை பாதுகாத்த சிங்களவர்களுக்கே எதுக்கு குண்டு வைத்தார்கள் என்பதற்கும் இந்த தூபிக்கு முன்னால் நின்று ஒரு கொள்கை விளக்கம் தந்தால் இன்னும் சிறப்பாக நினைவுகூரல் அமையும்.
  12. இந்தியாவுடன் சேர்ந்து தமிழர்கள் சிங்கள தேசத்தை ஆக்கிரமித்துவிடுவார்களோ என்ற அந்தக்கால அச்சம்தான் இன சிக்கல்களுக்கான ஆரம்பபுள்ளியென்று கூறுகிறார்கள். இன்று எந்தவிதமான பலமும் எம் பக்கம் இல்லாத காலகட்டத்தில் உசுப்பேத்தும் அந்தக்கால பேச்சை இவர் ஆரம்பிக்கிறார். எந்த காலத்திலும் இந்தியாவாலோ அல்லது இந்திய அமைப்புகளாலோ நமக்கு எதுவித நன்மையும் கிடைக்கபோவதில்லை என்பது கருங்கல்லில் செதுக்கிய முடிவு. மத ஆக்கிரமிப்பு விகாரை மயமாக்குதலை கண்டித்து அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பதவியை ராஜினாமா பண்ணலாமே? அது உலகத்தின் கவனத்தை ஈர்க்க பெரிய உதவியாய் இருக்கும். பாராளுமன்ற அங்கத்தவர் பதவியை ராஜினாமா செய்தால் எமது மக்கள் பிரச்சனைகளுக்காக போராட முடியாது போய்விடும் என்று சப்பை கட்டு கட்டுவீர்கள். பதவியை வைத்துக்கொண்டு இப்போ மட்டும் என்ன பண்ணுகிறீர்கள்?
  13. இதே வாயினால்தானே தமிழ்படங்கள்தான் இலங்கையில் வன்முறையை தூண்டுகின்றன என்று அதுவும் ஒரு அரசின் ராஜாங்க அமைச்ச்சர் தெரிவித்திருந்தார், அதனை எந்த ஒரு அரச தரப்பும் கண்டிக்கவில்லை. இப்போ அதே தரப்பு வன்முறைகளை வளர்த்துவிடும் தமிழ்படங்களின் உச்ச நடிகர் ஒருவரை தமதுநாட்டின் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு உதவிகேட்டு நிக்கிறதே இது எந்த வகையான பொழைப்பு?
  14. அந்த அமைதியையும் சமாதானத்தையும் வலுப்படுத்துவதற்காகவா உங்கடையாக்கள் ஈஸ்டர்நாளில் தேவாலயம் தேவாலயமா தேடிபோய் குண்டு வைத்தார்கள்? இன விடியலுக்கான எங்களின் தீவிரவாதம் அழிந்தது என்னவோ உண்மைதான், ஆனால் மதவெறிக்கான உங்கள் பயங்கரவாதம் ஒருபோதும் ஒழியபோவதில்லை, அதுவரை உங்களையும் இந்த உலகம் நிம்மதியா இருக்கவிடபோவதில்லை, எங்களின் அழிவில் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சி. உலகம் முழுவதும் தொடரும் உங்களின் அழிவில் எனக்கும் எப்போதும் மகிழ்ச்சி.
  15. ஒரு புள்ளியிலிருந்து ஆரம்பித்து உலகம் முழுவதும் பரவி புலிகள் என்றால் தமிழர்கள் என்ற காலத்தை கடந்து தமிழர் என்றால் புலிகள் என்ற மாபெரும் மாற்றத்தை தொட்டு பெரும் உயரத்தை அடைய போகிறோம் என்று எத்தனை ஆனந்த கனவு கண்டுகொண்டிருதோம், எல்லாமே கருகி புறப்பட்ட புள்ளியிலேயே மீண்டும் வந்து முடிந்ததை 13 வருடங்கள் கடந்தாலும் இன்றுவரை நம்பவே முடியவில்லை, மனதால் ஏற்கவும் முடியவில்லை. கைகால்கள் நலமாக இயங்கி சுயநினைவுடன் இந்த பூமியில் வாழும் கடைசி நாள்வரை கெளரவ வாழ்வு வாழ நினைத்த ஒவ்வொரு தமிழனும் அந்த வரலாற்று பேரழிவை நினைத்து நேற்று நடந்ததுபோன்றதொரு உணர்வில் தலையில் அடித்து அழுவான். அனைவருக்கும் அஞ்சலி. அவருக்கு மட்டும் அஞ்சலிகள் இல்லை. சராசரி மனிதர்களுக்குத்தான் அஞ்சலிகள் பொருந்தும், அவதாரங்களுக்கு அஞ்சலிகள் பொருந்தாது.. அவதாரங்களுக்கு அஞ்சலி செலுத்த முடியாது செலுத்தினால் அதன் மகிமை கேலிக்குரியதாகிடும். இனி உள்ள பிரச்சனை ஒன்றேதான் கி.பி ,கி.முபோல பிரபாகரன் காலம் பிரபாகரனுக்கு அப்புறமான காலம். பிரபாகரன் காலம் சிங்களவனிடமிருந்து தமிழர்களை காப்பாற்ற போராடிய காலம். பிரபாகரன் காலத்தின் பின்னரான காலம் தமிழர்களிடமிருந்து தமிழர்களை காப்பாற்ற வழி தெரியாத காலம். ஆம் எதிர்கால சந்ததிகள் தமிழர்களிடமிருந்து தமிழர்களை காப்பாற்றவே மிகவும் கஷ்டபடபோகிறது. மீண்டும் அனைவருக்கும் அஞ்சலிகள் அவரை தவிர.
  16. இனப்பிரச்சனை தொடர்பாக குரலெழுப்பும் தமிழர்களை மிக சாதுரியமாக மத பிரச்சனைகள் பக்கம் இழுத்து விட்டார்கள் என்று தோன்றுகிறது. வெள்ளைக்காரன் நாடுகளிலேயே பெரிய பெரிய கோவில்களை கட்டும் நம்மவர்கள் எமது தாயகத்தில் மத ஆக்கிரமிப்பு என்று சர்வதேசத்துக்கு இந்த பிரச்சனையை கொண்டுபோய் நீதியும் கேட்க முடியாது.
  17. விடை தெரிந்தும் இப்படி ஒரு கேள்வியை நீங்கள் கேக்கலாமா? இங்கே சீனா இந்தியா ரஷ்யா உடைந்து போவதை பற்றியே கருத்து பரிமாறல்கள் நிகழுது அதையொட்டித்தான் என் கருத்தையும் சொன்னேன். அதிலேதும் பெரும் தவறிழைத்ததாய் நான் கருதவில்லை.
  18. இந்தியா சீனா ரஷ்யா துண்டு துண்டாக பிரிந்து செல்லும் நிலை வந்தால் பிரிய எத்தனிக்கும் தனது நாட்டு குuடிமக்களையே லட்சக்கணக்கில் அல்ல கோடிக்கணக்கில்கூட கொன்று குவிக்கும் அந்தநாட்டின் அரசுகள். வெளி பூச்சுக்கு உலக அமைதி ஒத்துழைப்பு என்று பேசிக்கொண்டாலும் படுகொலைகளில் தயவு தாட்சண்யம் காட்டவே மாட்டாத நாடுகள் அவை.
  19. எனக்கு பழக்கமான ஒரு முன்னாள் போராளி இருக்கிறார். நீண்டகாலத்தின் முன்னர் துணிகரமான காவலரண்கள் ஊடறுப்பு தாக்குதலில் ஒரு குழுவாக சென்று அனைவரும் மாண்டுபோக காயத்துடன் தப்பி வந்த ஓரிரு போராளிகளில் அவரும் ஒருவர். முதுகில் ஏழு தழும்புகள், இன்றும் உணவருந்தி முடிந்தால் கண்ணை மூடிக்கொண்டு ஓரிரு நிமிடங்கள் மெளனமாக இருப்பார் உணவு இறங்கும்போது உள்ளே வலி என்கிறார். அவர்போன்ற போராளிகளின் அர்ப்பணிப்பை நினைத்தால் உள்ளூர நடுங்கும். ஒருநாள் பேசிகொண்டிருந்தார் உடம்பும் அவ்வளவா ஏலாது ஊரில உள்ள வீடு காணியை வித்து இங்க ஏதாவது செய்யவேணும் எண்டார், ஏனண்ணை சொல்லிக்கொண்டிருக்கிறியள் விக்க வேண்டியதுதானே, எண்டால்... கனபேர் கேட்டு வந்து கொண்டிருக்கினம், ஆனால் வாறது எல்லாம் அதுகள், இதுகள் நல்ல ஆக்களா எம்பிடுது இல்லையென்றார், நான் சிங்களவனோ முஸ்லீமோ என்று நினைத்து கேட்டால் இல்லை வேற சாதி ஆக்கள் அதுகளை கொண்டுவந்து நடுவில இருத்தினால் பிறகு அயல், சொந்தங்களுக்குள்ள பிரச்சனை என்றார். பொறுக்காமல் கேட்டே விட்டேன் நீங்களே இதெல்லாம் பாக்கலாமோ அண்ணை? அவர் சொன்னார் நான் பாக்கல்ல ஆனால் அங்கிருக்கும் உறவினர்களை மீறி இருத்தினால் இருதரப்பு நிம்மதியும் போய்விடும், காணி வாங்கினவர்களையும் காலம் எல்லாம் நிம்மதியா இருக்க விடமாட்டார்கள் என்றார், அவர் கருத்தும் ஒருவகையில் தற்கால போக்கில் புரிந்து கொள்ள கூடியதுதான், நிச்சயமாக இவர்போன்ற நிலையில் உள்ளவர்கள் நல்ல காசு கிடைத்தால் சிங்களவர்களுக்கோ முஸ்லீம்களுக்கோ சொத்துக்களை விற்பனை செய்யும் அனைத்து வாய்ப்புக்களும் உண்டு. நிகழ்காலத்தில் சமூகம் சமூகமாக பிரிந்து கிடக்கிறது தாயகம், உங்களிடம் நூற்றுக்கணக்கான கோடி பணம் இருந்தாலும் நீங்கள் வேறு சமூகமாக இருந்தால் விரும்பிய இடத்தில் நிலபுலன்களோ சொத்துக்களோ வாங்க முடியாது. என்னால் புரிந்து கொள்ள முடிந்தது ஒன்றுதான், தற்போது இனம் என்பது வேறு சமூகம் என்பது வேறு. இனத்திற்குள் சமூகம் வருகிறது ஆனால் சமூகத்திற்குள் இனம் வரவில்லை அதனால்தான் சொந்த அலுவல்களை பார்க்கும்போது இனம்பற்றி அங்குள்ள சமூகம் சிந்திப்பதே இல்லை. ஆயுதம் ஏந்திவிட்டால் அனைத்து போராளிகளும் மக்களும் இந்த இழிநிலையிலிருந்து வெளிவந்தவர்கள் என்று சொல்லிவிட முடியாது ஒட்டுமொத்த இயக்கத்தையும் இனத்தையும் வழி நடத்தி இருந்தவனின் கொள்கைகளால்தான் பலர் கட்டுண்டு கிடந்தார்கள் மீதம் எல்லாம் நீறுபூத்த நெருப்புபோல் கிடந்தது என்பதே யதார்த்தம். ஒரு கட்டத்தில் தமிழர்களாலேயே ஒடுக்கப்பட்டு அவமானபடுத்தப்படும் சக தமிழர்கள் இந்த இனத்துடன் வாழ்வதைவிட சிங்களவர்களுடன் வாழலாம் என்ற நிலைக்கு வருவார்கள், மறுபக்கம் இதுகளுக்கு சொத்துக்களை விக்கிறதவிட சிங்களவர்களுக்கு வித்தால் கெளரவமாக அயலுக்க இருக்கலாம் என்று சிங்களவர்களை நோக்கி போவார்கள், ஆக மொத்தம் தமிழர்களின் இருபகுதியுமே காலம் முழுவதும் எந்த இனங்களுடன் எமது வாழ்வாதார உரிமைக்காக போராடினோமோ அவர்களையே பாய்விரித்து பந்தி வைத்து கொல்லைபுறத்தில் குடியேற்றும் நிகழ்வுகள் அரங்கேறும் அரசாங்கம் திட்டமிட்டு சிங்கள முஸ்லீம் மக்களை யாழில் குடியேற்ற வேண்டியதில்லை அந்த வேலையை தமிழர்களே. சீக்கிரம் செய்வார்கள் . உங்களுக்கென்று தனித்துவமான பிரதேசம் என்று ஒன்றுமில்லை என்பதே சிங்களவர்களின் வாதம், எங்களுக்கென்று தனித்துவமான பிரதேசம் தேவையில்லை என்பதே இன்றைய எம் சமூகத்தின் இழிநிலை.
  20. ஒரு சமூக குற்றம் இடம்பெறும்போது அவசரப்பட்டு வெறும் ஊகங்களின் அடிப்படையில் நாமே அடுத்தவர்கள் மீது பழிபோடுவது உண்மையான குற்றவாளிகளை நாமே காப்பாற்ற உதவுவது போலாகும். சமூக ஊடகங்களிலும் கருத்து பரிமாற்றங்களிலும் இவ்வகையான ஊகங்கள் பலதடவை இவ்வாறு நடந்திருக்கிறது ஆதாரங்களே இல்லாமல் அவர்தான் செய்திருக்கவேண்டும், இவர்தான் செய்திருக்கவேண்டும் என்று சொல்லிபோக குற்றங்களே புரியாத அளவிற்கு எம் இனம் யோக்கியமா என்ன? இது கும்பல் கும்பலாய் பலபேரை படுகொலை செய்துவிட்டு இஸ்ரேல் அமெரிக்க சதி என்று அடுத்தவர்மேல் பழிபோடும் மத பயங்கரவாதிகளின் செயலை ஒத்தது.
  21. பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராம் மறைவு பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராம் சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 78. அண்மையில் அவருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. https://lm.facebook.com/l.php?u=https%3A%2F%2Fwww.hindutamil.in%2Fnews%2Fcinema%2Ftamil-cinema%2F938753-popular-playback-singer-vani-jayaram-passed-away-in-chennai.html&h=AT0cPSRmS7dnkid1YHHKg48k5wB58oNDtl-dlGiADSXupngr9iG9YVj0VYUNWbXgy868DybFfaL-0FK1hIpnn1CqSblDHl0sWwcBKlsXpLZRSPAvbAIYRI7wf1hLC4dIiGw
  22. பாகுபாடின்றி அணைத்துபோக அவர்கள் ஆரம்பிக்கபோவது அரசியல் கட்சியோ அல்லது மிக பெரும் பொருளாதார நிறுவனமோ அல்ல, மாறாக நலிந்துபோன முன்னாள் போராளிகளின் நலன்களை கவனிக்கும் ஒரு அமைப்பாகவே நினைக்கின்றேன். இறுதி யுத்தம்வரை இந்த போராளிகளையும் அவர்கள் சார்ந்த அமைப்பையும் தலைமையையும் அழிப்பதையே முழுமூச்சாக கொண்ட அரச இயந்திரங்களுடன் சேர்ந்து இயங்கியவர்கள், இன்று அதே போராளிகளின் நலன் சார்ந்த கட்டமைப்புக்குள் உள் வாங்கபட வேண்டும் எனும் கருத்தில் என்ன வலுவான நியாயம் இருக்கிறது? ஒருவேளை மாற்று கொள்கைகளில் இயங்கியவர்கள் இன்று நலிந்து போயிருந்தால் அவர்கள் அன்று பின்னால் நின்ற அரசும் அரசியலும் நன்றிக்கடனுக்காக இன்று இவர்களை அணைத்து போகவேண்டியது அவர்களின் தார்ப்பரிய கடமை. அது போராளிகளின் நலன் சார்ந்த அமைப்புக்களின் கடமைகளில் ஒன்றல்ல, அனைவரையும் அணைத்துபோவது காலத்தின் கடமையென்றால், அன்று மாற்று கொள்கைகளுடன் இயங்கி அரச சுகபோகமும் அமைச்சர் பதவியும் பெற்று இன்றும் இயங்கும் பணபலம் அரசியல் பலம் கொண்ட மாற்று அரசியல் தலைவர்கள், போராளிகள் நலன்களை கவனித்து அவர்களை அணைத்து போயிருக்கலாமே? ஒன்று சேரும் கொள்கை என்பது ஒருபக்கத்திலிருந்து மட்டுமா சிந்திக்கபடவேண்டும்? இது இஸ்லாமியர்கள் காலம் முழுவதும் அரசுடன் சேர்ந்து இயங்குவதும், தமிழர்களுக்கு ஏதாவது தீர்வு பேச்சுக்கள் ஆரம்பித்தால் அதற்குள் தம்மையும் சேர்க்கவேண்டும் என்று திடீர் குரல் எழுப்பும் சபை குழப்பு கோட்பாடு. அதிலிருந்து நிறைய வேறுபாடு ஏதுமில்லை.
  23. தியாகி அறக்கட்டளை சார்பாக அவரின் பிறந்தநாளின்போது பெருமளவிலான உதவிகள் வழங்கப்பட்டிருக்கிறது. யாழில் பல நலதிட்டங்களை ஏற்கனவே செய்திருக்கிறார், செய்துகொண்டும் வருகிறார் என்று பகிரபட்டிருக்கிறது. பலர் முதலே அறிந்திருக்கலாம் இதுநாள்வரை நான் இந்த நிறுவனம் அதன் செயல்பாடுபற்றி அறிந்ததில்லை அதனால் பகிர்கிறேன்.
  24. உலகத்துலயே செக்ஸ் அனுபவிச்சது செத்தது வெள்ளைக்காரன் என்றால்... உலகத்துலயே செக்ஸ்பத்தி பேசி செத்தவன் தமிழன். தென்னிலங்கையில் மேற்குலகுபோல் பள்ளிநாட்களிலேயே சாதாரணமாக ஆண் பெண்கள் ஜோடியாகிவிடுகிறார்கள், அதனால் அவர்களுக்கு செஸ் பற்றிய தேடலும்,பேச்சும் பெரிதாக அவசியபடாது , ஆனால் தமிழர் பகுதிகளில் இன்றும் ஒரு பெண் ஆணோடு பேசினாலே கற்பையிழந்தவள் ரேஞ்சில் இன்னும் இருப்பதால் , காலம் காலமாக தொடரும் பேச்சுவார்த்தை இன்னும் தொடர்கிறதுபோல, தொடர்பாடல்கள் வளராத காலங்களிலேயே பருவம் அரும்பும் ஓ/எல் காலங்களிலும், பள்ளி காலம் முடிந்து சந்திகளில் நின்று சம வயதினருடன் குழுவாய் அரட்டையடிக்கும் இளையவர்களினது நேரங்களில் 80வீதம் பாலியல் பேச்சுக்கள் பற்றியே இருக்கும். நீல பட கசட்டுகளுக்கு ஓடி ஓடி அலைந்ததுதும், ரிவி டெக் வாடகைக்கு எடுத்து திருட்டுதனமாய் சூடான படங்கள் பார்த்ததும் நம்மில் 99 வீதத்தினர் கடந்து வந்த பாதைதான். காலங்கள் ஓடி தொழிட்நுட்ப அசுர வளர்ச்சியால் இன்று யார் யார் தேடுகிறார்கள், எந்த ஏரியாவில் என்ன பார்க்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடிகிறது, அன்று யாரும் கண்டுபிடிக்க முடியாது அவ்வளவுதான் வித்தியாசம். மற்றும்படி குணாதிசயங்கள் மாற்றமில்லாமலே நகர்கிறது. இங்கு புலம்பெயர்ந்த நாடுகளில் ஐம்பதுகளை கடந்து பேரன் பேத்தி கண்டவர்களில் ஒரு சிலர் நம்மவர்கூட யாருக்கும் தெரியாமல், ஆபாசபடம் இன்றும் பார்ப்பதும், அந்தகாலத்தில் தாங்கள் பண்ணீய லீலைகளை இன்றும் சிலாகித்து பேசுவதும் உண்டு. ஆக, நான் புனிதம் என்று சொல்லி இந்த குளத்தில் கல் எறிந்துபோக எவருக்கும் துணிவு வராது.
  25. அதுதான் மிக தெளிவாக குடிபோதையில் வந்தவர்கள் தவறுதலாக கண்ணாடி குவளையை இந்திய தூதரகம் பக்கமாக வீசிவிட்டனர் என்று சிங்கள நிர்வாகமே சொன்ன பின்னரும், என்னமோ இந்திய தூதரகம்மீது யாழ்ப்பாண தமிழர்கள் திட்டமிட்டு பெற்றோல் குண்டு வீசிவிட்டனர் என்பது போன்ற தோற்றப்பாட்டை கொடுக்கும் தமிழர் நிர்வாக பகுதி சிவஞானம் சிங்களவனைவிட தமிழர்கள் கெட்டவர்கள் என்று இந்தியாவுக்கு காட்ட முனைகிறாரா? இலங்கை வரலாற்றில் தமிழர்களின் எதிரிகள் எப்போதுமே எமக்கு வெளியில் இல்லை.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.