-
Posts
1534 -
Joined
-
Days Won
16
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by valavan
-
ஆம் கோசான் ஏறக்குறைய ஒரு மாதம் முன்னாடி இது சம்பந்தமாக பலதடவை எழுதிவிட்டேன், அதிலொன்று காலம் காலமாக தமிழ்கட்சிகளாலும் ஒரு புண்ணியமில்லை சிங்கள கட்சிகளாலும் ஒரு புண்ணியமில்லை எனும்போது மக்கள் வேறு திசை நோக்கி நகர்வார்கள் அதில் மாற்றமில்லை. உங்கள் பயண கட்டுரையை படிக்க வேண்டும் ஊர் புதினம் பக்கமே அதிகமாக குப்பை கொட்டிவிட்டு போவதால் அதை படிக்க தவறிவிட்டேன்.
-
அவர் ஆரம்பகால யாழ்ப்பாண யூடியூப்பர் , இவருக்குத்தான் அதிகமான சப்ஸ்கிரைப்பர்ஸ், இவர் எதேச்சையாக ஒருதடவை அநுரவீட்டுக்குபோய் பிஸ்கட் தேத்தண்ணி எல்லாம் குடிச்சு வந்தார் , , அப்போது இவருக்கு தெரிந்திருக்கவில்லை இலங்கை முழுவதும் இவர் பிரபல்யமாகபோறார் எண்டு, சிங்கள செய்திதாள்கள், தொலைகாட்சியிலெல்லாம் இவர் அநுர வீட்டுக்கு போனதுபற்றி செய்தி வந்தது, வீடியோ போட்டு அண்ணன் விடிய எழும்பி பார்த்தால் அவர் கண்களையே அவரால் நம்ப முடியவில்லை, யாழ் யூடியூப்பர்ஸுக்கு 50 பேர் பார்வையிடுவதே பெரிய விஷயம், இவரின் அந்த வீடியோவை ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டனர் , 6000 பேருக்குமேல் கருத்துக்கள் இட்டனர், அதில் முக்கால்வாசிபேர் சிங்களவர் ஒரேநாளில் மேலதிகமாக 100k சப்ஸ்கிரைப்பர்ஸ் அவருக்கு கிடைத்தனர், அத்தோடு அவர் அகில இலங்கை சிங்கள விசிறியானார், உடல் மண்ணுக்கு உயிர் அநுரவுக்கு என்ற ரேஞ்சுக்கு போனார். வெளிநாட்டிலிருந்து எம்மவர் சிலர் இப்படி பண்ணாதீங்கோ எண்டுசொல்லியும் மிரட்டியும் பார்த்தார்கள், தன்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்று அவருக்கு போன் பண்ணினவர்களின் நம்பரையும் பொதுவெளியில் பகிர்ந்தார். இவர்போல இன்னுமொருத்தர் இருக்கார் அவருக்கு கடந்த ஒரு மாசமா அநுரவை தவிர வேற எதுவும் தெரியாது அவர் : பிரச்சனை என்னவென்றால் பல இளைஞர்கள் இப்போது வேலை வெட்டியைவிட்டு யூடியூப்பே முழுநேர வேலையாக செய்கிறார்கள், பார்வையாளர்களின் எண்ணிக்கையை எப்படி அதிகரிப்பது என்று தெரியாமல் தடுமாறுகிறார்கள், மாசம் முடிய காசு வேணுமே. அதனால் பரபரப்புக்காக என்ன என்னமோ எல்லாம் செய்து பார்த்தார்கள், என் உயிருக்கு ஆபத்து , இதுதான் எனது கடைசி காணொலி என்றெல்லாம் போட்டு எவராவது பாப்பாங்களா என்று அலைவார்கள், எத்தனைநாளுக்குத்தான் யாழ்ப்பாணத்தை சுற்றிக்காட்டுவது? அவர்களுக்கு இப்போ கிடைத்த வரம் அநுர அலை அதைவைத்து பிழைப்பு ஓட்டுகிறார்கள், அவர்களுக்கு தேவை வருமானம். நிரந்தரவேலை, கல்வி, தொழில் முயற்சி என்று எதுவுமில்லாமல் விடிய எழுந்தால் கமராவும் கையுமாக அலைகிறார்கள், திடீரென்று யூடியூப் வருமானம் ஒருநாள் நின்றுபோனால் வருஷங்களையும் வாழ்க்கையையும் தொலைத்துவிட்டு முகட்டை பார்த்துக்கொண்டு முதுகை சொறிய வேண்டியதுதான்.
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள் 2 நாள்ல திறக்கபோறாங்கள் எண்டு தெரிஞ்சுதான் பயபுள்ள அறிக்கை விட்டிருக்காரு போல, இனிமே என்ன அச்சுவேலி வயாவிளான் வீதியை நான் சொல்லியே ஜனாதிபதி திறந்து வைத்தார் என்று தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு ஆயுதமா பயன்படுத்தலாம்.
-
பட்டபகலில் ஒன்பதுபேர் கொண்ட கும்பல் அனைத்தையும் அடித்து நொருக்கி நகைகளை மூட்டை கட்டி எடுத்து போகிறார்கள். இலங்கை இந்தியாவில்கூட ஒரு நகைகடைக்கு இவ்வளவு பலவீனமான பாதுகாப்பு இருக்குமா தெரியவில்லை. பார்ப்பவர்களுக்கு கண்டிப்பாக இந்த சம்பவத்தின் பின்னால் நம்மவர்களின் கைகளும் இருக்கும் என்றே எண்ண தோன்றும்.
-
அவசர வெள்ள நிவாரணமாக சீனாவிடமிருந்து இலங்கைக்கு 30 மில்லியன் ரூபா உதவி
valavan replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
யாரோ பேசி போட்டாங்கள்போல, ஏண்டா உலக வல்லரசுகளில் ஒண்டா இருந்துகொண்டு இதெல்லாம் ஒரு உதவியா எண்டு அதனாலதான் மான பிரச்சனையில மல்டி மில்லியன் ரூபா கொடுக்குறான்போல -
அவசர வெள்ள நிவாரணமாக சீனாவிடமிருந்து இலங்கைக்கு 30 மில்லியன் ரூபா உதவி
valavan replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
இலங்கை காசுக்கு மூண்டு கோடி, மூண்டு கோடியில் இலங்கையில் இப்போ மூண்டுபரப்பு காணிகூட வாங்க முடியாது, இதை வைச்சு எப்படி இலங்கை முழுவதும் நிவாரணம் வழங்குறது? எனக்கு தெரிந்து சர்வதேச அளவில் ஒருநாடு இன்னொருநாட்டுக்கு செய்த ஆககுறைந்த நிதி உதவி இதுவாதானிருக்கும். பரவாயில்ல, எதுவா இருந்தாலும் உதவி உதவிதான், ஆனாலும் எது குடுத்தாலும் வாங்குவாங்கள் எண்டு தெரிஞ்சு கொடுப்பது எகத்தாளம். -
சரிவிடுங்க பெரிசு, பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம் என்று சொன்ன லெனினின் நாட்டுடன் நெருங்கிய பொருளாதார ராணுவ தொடர்பெல்லாம் வைச்சிருந்திருக்கிறீங்க, அடிக்கடி கை குலுக்கி இருக்கிறீங்க அந்த பன்றி தொழுவத்தில் ஜனாதிபதி பிரதமர், அமைச்சர் என்றெல்லாம் பதவி வகிச்சிருக்கீங்க, அப்போ வராத அசிங்கமா இப்போ வந்துட போகுது?
-
வடக்கு முஸ்லிம்களின் இனச்சுத்திகரிப்பு 34 ஆவது வருட நினைவு
valavan replied to colomban's topic in நிகழ்தல் அறிதல்
அதாவது தமிழர்களுக்கு நடுவிலே வாழ்ந்து வியாபாரம் கல்வி வேலை வாய்ப்பு என்று மீண்டும் தமது இருத்தலை உறுதிபடுத்திக்கொண்டாலும் போர்க்கால நிலைகளில் அனைத்து இனத்திற்கும் கசப்பான அனுபவங்கள் தவிர்க்க முடியாமலே உண்டு, ஆனால் முஸ்லீம்கள் மட்டும் பழசை கிளறி கிளறி தமிழர்களுடன் வன்மம் வளர்க்க சொல்லி தமது அடுத்த தலைமுறைகளுக்கு சொல்லி கொடுக்கிறார்களாம். நாலாயிரம் ராஜநாகங்களுக்கு இடையிலும் மனிதன் வாழ்க்கை நடத்திட்டு போகலாம் நானூறு இஸ்லாமியர்களுடன் ஒன்று சேர்ந்து பிற இனம் வாழ்வதென்பது கையால விசுக்கி காட்டு தீயை அணைப்பதுபோலத்தான் சாத்தியமே இல்லாதது. முன்பெல்லாம் முஸ்லிம்கள் வெளியேற்றம்பற்றி புத்தளம் மட்டக்களப்பில்தான் கிளறி கிளறி வன்மம் வளர்த்தார்கள், இப்போ அவர்களுக்கு எல்லாமே சுமுகத்திற்கு வந்த பின்னரும், 90%க்கு மேற்பட்ட தமிழர்களுடன் அனைத்துவழியிலும் படிப்படியாக வளர்ச்சியின் உச்சம் தொடும் யாழைப்பார்த்து வயித்தெரிச்சலில் யாழ்ப்பாணத்திலும் வன்மம் ஆரம்பிக்கிறார்கள். வன்மம் வளர்க்க தமது தலைமுறைக்கு சொல்லி கொடுக்கிறார்கள். இதே கூட்டத்தில் கடந்த கால கசப்பான அனுபவங்களை மறந்து தமிழர்களுடன் எப்படி சகோதரத்துவத்துடன் வாழவேண்டுமென்று தமது இந்த தலைமுறைக்கு சொல்லி கொடுத்திருந்தால் நாமும் சேர்ந்து இவர்களுக்கு தலை தடவிவிட தயங்கவே போவதில்லை. என்னமோ தமிழர்பகுதிக்குள் இவர்கள் இனி ஒருகாலமும் உள் நுழையமுடியாதபடி நிலமை இப்போதும் இருக்கு என்பதுபோல் இவர்களுக்காக அனுதாபப்பட்டு அச்சச்சோ முஸ்லிம்களை வெளியேற்றினது தவறு என்று பூனைக்கு தலையை தடவிவிடுவதுபோல் தடவிவிட்டு பரிதாபப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு சில தமிழ் தலை தடவிவிடல் திலகங்களுக்காக ஆவது சரி சரி பழசை மறந்து சுமுகமா வாழ்வோம் என்று இஸ்லாமியர்கள் நினைக்கலாம் . ஒருபோது அதை செய்ய மாட்டார்கள். கிழக்கில் காத்தான்குடி உட்பட்ட சில பிரதேசங்களில் ஏறக்குறைய தனி இஸ்லாமியநாடுபோல் ஆக்கி வைத்திருப்பதையும் கல்முனை பிரதேசசபை விவகாரத்தில் இவர்கள் வளர்க்கும் தமிழர்களுக்கெதிரான விசமத்துக்கும் காரணம் இவர்கள்மீது தமிழர்கள் மேற்கொண்ட இன சுத்திகரிப்பா? 70% வீத தமிழர்கள் வாழும் பிரதேசத்தில் 30% வீத இஸ்லாமியர்கள் சுதந்திரமாக வாழலாம் , 70% இஸ்லாமியர்களுக்கு நடுவில் 30% தமிழர்கள் சுதந்திரமா செயற்பட முடியுமா? முடிந்தவரை 100% முஸ்லிம் பிரதேசமாக்கவே துடிப்பார்கள். இன சுத்திகரிப்பில் முன்னணியில் நிற்பவர்கள் யாரென்ற கேள்வியை இவர்களுக்காக பரிதாப படுகிறவர்களிடமே விட்டுவிடலாம். -
பையனின் வயசு கொந்தளிக்க வைக்குது , கொந்தளிக்கணும் அப்போதானே பையன், ஆனா பையா யதார்த்தம்னு ஒண்ணு இருக்கு அது நாம் விரும்பாவிட்டாலும் எம்மை ஏற்றுக்கொள்ள வைக்கும். இது பையனுக்கு அறிவுரை சொல்ல இல்லை பொதுவாக மனசில் பட்டதை சொல்கிறேன், உக்ரேனுக்கான உதவிகள் என்று நேட்டோ இதுவரை செய்தது யானை பசிக்கு சோளம் பொரிதான், ஐரோப்பாவின் ஆயுத தொழிற்சாலைகள் உக்ரேனுக்காக இரவுபகல் வேலை செய்தால் உக்ரேனுக்கு ஆயிரக்கணக்கில் செய்மதியால் வழிநடத்தப்படும் ஏவுகணைகள், மல்டி பரல்கள் ஆட்லறிகள், டாங்கிகள், வெடிபொருட்கள் என்று கொடுத்திருக்கலாம், நூற்றுக்கணக்கில் F-16,F-35 கொடுத்திருக்கலாம், கொடுத்திருந்தால் உக்ரேன் படைகள் மொஸ்கோ வரை சென்றிருக்கும், ஆக குறைந்தது ரஷ்யாவின் எல்லைவரை உக்ரேனிலிருந்து விரட்டியடிக்கப்பட்டிருக்கும், .ஆனா அவர்கள் கொடுப்பதோ நூற்றுக்கணக்கில்தான் அதுவும் உக்ரேன் கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்சிய பின்புதான், உலகின் பெரும் வலிமையான விமானபடைகளில் ஒன்றான ரஷ்ய விமானபடையை எதிர்க்க நேட்டோ கொடுத்தது ஆக 16 விமானங்கள், அதுவும் பூரண பயிற்சி பெறாத உக்ரேன் விமானிகளுடன், அதனால்தான் ஆரம்பத்திலேயே ஓரிரு F 16 விமானங்கள் உக்ரேன் விமானபடையின் தவறான இயக்கத்தால் அழிந்தது. ஆனாலும் நேட்டோவின் சிறு உதவியை கொண்டு போரிடும் உக்ரேனையே ரஷ்யாவால் இரண்டு வருடங்களாக முழுமையாக கைப்பற்ற முடியவில்லை . இறந்தவர்கள் காயப்பட்டவர்கள் புலம்பெயர்ந்தவர்களென உக்ரேனின் மக்கள் தொகை இரு வருடத்தில் ஒருகோடியால் வீழ்ச்சியடைந்துள்ளது என்று ஐநா அறிவித்துள்ளது, காசா போரில் ஆயிரம் தலைவர்கள் மீண்டும் மீண்டும் வரலாம், ஆனால் பலமடங்கு வலிமைமிக்க எதிரியால் அவர்களும் அழிக்கப்படுவார்கள் அதுதான் அங்கு நடந்து கொண்டிருக்கிறது. இஸ்ரேல் அழிவுநிலைக்கு வருகிறதென்றால் அமெரிக்கா நேரடியாக களத்தில் குதிக்கும் என்பதற்கு இப்போதே அவர்கள் இஸ்ரேல் அருகே நிறுத்தி வைத்துள்ள விமானம்தாங்கி கப்பல்கள் சாட்சி, அமெரிக்கா நேரடியாக குதித்த எந்த போரிலும் ஐரோப்பியநாடுகள் அவுஸ்திரேலியா கண்ணை மூடிக்கொண்டு குதிக்கும் என்பதற்கு வியட்நாம் போரிலிருந்து,ஈராக், ஆப்கான் போர்கள் சாட்சி. அவர்களை பொறுத்தவரை தமது மேலாதிக்கத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் எவரும் சவாலாயிருக்க கூடாது, இருந்தால் அழித்தொழிக்கப்படவேண்டுமென்ற கொள்கையிலிருப்பவர்கள். இப்போது காசா நிலவரம் ஏறக்குறைய முடிவுக்கு வருகிறது, வடக்கு காசாவில் கதவு போட்டு பூட்டியமாதிரி சில லட்சம் மக்களை முற்றுகைக்குள்ளாக்கி அந்த கதவினூடாக மக்கள் அனைவரையும் பத்துநாட்களுக்குள் வெளியே வர சொல்லி ஒவ்வொருவராக பரிசோதித்து வெளியே எடுக்கபோறான், அதற்குள் வெளியேறாதவர்கள் கமாஸ் இயக்கத்தினர் என்று முடிவு செய்து அந்தபகுதி முழுவதும் பெரும் அழித்தொழிப்பு போரை ஆரம்பிக்கபோறான் என்று செய்திகள் தெரிவிக்கின்றன, இது அச்சுஅசல் முள்ளிவாய்க்கால் முடிவுதான். எனக்கு தினமலரின் பிற செய்திகளுடன் உடன்பாடு இல்லையென்றாலும், இந்த செய்தியில் எந்த பொய்களும் இல்லையென்பதால் இணைக்கிறேன். இந்த ஒரு வருடத்தில் இறந்தவர்கள் காணாமல் போனவர்கள் காயப்பட்டவர்களென ஏறக்குறைய இரண்டரை லட்சம் காசா மக்கள் கதை முடிந்தது ,இறுதி முற்றுகையுடன் அது இரட்டிப்பாகலாம் அப்போது இழந்த மக்கள் தொகை மொத்த காசா மக்கள் தொகையில் கால் பங்கு ஆகலாம். வெறும் பூச்சாண்டி காண்பிக்கும் ஈரானை நம்பி அழிந்துபோகும் கமாஸ் தனது நிலத்தையும் மக்களையும் சேர்த்தே அழித்துவிட்டு செல்கிறது. தனது இனத்திற்காக போர் புரிவது மட்டும் போராட்டமல்ல புறநிலைகள், எதிரியின் பலம் அனைத்தும் கணக்கிட்டு புத்திசாலிதனமா செயற்படுவதும் இனத்துக்கான போராட்டம்தான். ஒருவருடமாக எகிப்து கத்தாரில் ஏற்பாடு செய்யப்பட்ட பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டாமல் வீம்பு பிடித்து இப்போ அழிவின் நிலைக்கு சென்றுள்ள கமாஸ் தனது மக்களுக்காக எதை விட்டு செல்ல போகிறது என்பதற்கு கீழே சில காணொலிகள். இங்கு சிறியவர்களின் படங்களை மட்டும் ஏன் இணைக்கிறேன் என்றால் பெரியவர்களில் ஏறக்குறைய அனைவருமே ஈரானின் உசுப்பேத்தலை நம்பி கமாசின் பின்னால் நின்று அவர்கள் செய்யும் அனைத்தையும்ஆதரித்து அல்லாஹு அக்பர் என்று கொடி பிடித்தவர்களே.
-
இஸ்ரேலை அழிப்பதோ அல்லது இஸ்ரேலை தோற்கடிப்பதோ எந்த காலமும் சாத்தியமில்லாத காரியம். ஏனெனில் இஸ்ரேல் தோற்கும் என்றொரு கட்டம் வந்தால் அமெரிக்காவும் ஐரோப்பாவும் நேரடியாகவே இஸ்ரேலுக்காக களம் இறங்கும். வசதிபடைத்த அரபுநாடுகள் புத்திசாலிதனமாக இந்த போரை தூரத்திலிருந்து வேடிக்கை பார்த்தபடி ஒதுங்கிகொண்டன அவர்களுக்கு தெரியும் மேற்குலகின் சக்திபற்றி, அதனால் இவ்வளவு காலமாக அவர்கள் பாலைவன பூமியில் கட்டியெழுப்பிய தமது சொர்க்க வாழ்வை இந்த பிரச்சனைக்குள் மூக்கை நீட்டி இழக்க தயாரில்லை. ஈரான் என்ற கலவர பூமியின் பேச்சை கேட்டு இன்று காசாவிலும் லெபனானிலும் ஏமனிலும் சிரியாவிலும் வளர்ச்சி பல ஆண்டுகள் வாழ்க்கை பின்னோக்கி போயும் பல தலைமுறைகள் அங்கவீனமாகியும் , கட்டியெழுப்பப்பட்ட பூமி சுடுகாடாகியும் எந்த ஈரான் பேச்சைகேட்டு இஸ்ரேலுடன் போர் என்று முழங்கியதோ அத்தனை ஆயுத குழுக்களும் முக்கால் பங்கு அழிந்து எலும்பு கூடாகியும் வெடிகுண்டாலும் ஏவுகணைகளாலும் இன்னொரு பாலைவனம் உருவாக்கப்பட்டுவிட்டது. போராடி பார்த்தோம் முடியவில்லை, எம்மைவிட எம் எதிரி சக்தி வாய்ந்தவனாக இருக்கும்போது எமக்கு இழைக்கப்பட்டது அநியாயமாக இருந்தாலும் வேறு வழி இல்லை போராட்ட பாதையை மாற்றியே ஆகவேண்டும். இல்லையெனில் எஞ்சியிருக்கும் சந்ததியையும் முழுவதுமாக அங்கவீனர்களாகவும் குண்டுகளுக்கும் பலி கொடுத்து அனைத்தையுமே பறிகொடுத்து அடையாளத்தையே இழக்கவேண்டும். நமது போராட்டமும் வாழ்வும் காசா போலவே அமைந்தது ஆனால் எம்மை மீறிய சக்தி எம்மை வென்றபோது எஞ்சியிருந்த போராளிகளும் மக்களூம் ஆயுதமோதல்தான் தீர்வென்று அணிவகுக்கவில்லை, எமது மக்களின் இருப்பை உறுதி செய்ய வேறு வழியின்றி வேறு பாதையை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொண்டோம். எப்படி இந்தியாவை நம்பி எமது போராட்டம் அம்மணமானதோ அதேபோல ஈரானை நம்பி காசா ,லெபனான், ஏமன் கதை முடிகிறது. ஈரான் பாலஸ்தீன லெபனான் மக்கள்மீது உண்மையான அக்கறை கொண்டிருந்தால், அவர்களை இஸ்ரேலிடமிருந்து பாதுகாக்க வேண்டுமென்ற புனித எண்ணம் கொண்டிருந்தால், இஸ்ரேல் காசாவின்மீது போர் பிரகடனம் தொடுத்த அடுத்தவாரமே பெய்ரூட் வழியாக தெற்கு லெபனானுக்கு தமது படைகளை நகர்த்தி இஸ்ரேலுக்குள் நுழைந்து போர் தொடுத்து காசா மக்களின் பாதுகாப்பை உறுதி படுத்தியிருக்கவேண்டும். இன்றுவரை அப்பப்போ சிலநூறு ஏவுகணைகளை இஸ்ரேல்நோக்கி ஏவிவிட்டு தன்னை மறைத்துக்கொண்டது, இரண்டுமுறை இஸ்ரேல்மீது ஈரான் ஏவிய ஏவுகணைகளும் பாலஸ்தீன மக்களுக்கானதல்ல, முதல்தடவை சிரியாவின் தனது ராணூவ தளபதிகளை இஸ்ரேல் கொன்றதுக்காக , இரண்டாவதாக நசருல்லாவை இஸ்ரேல் கொன்றதுக்காக, தமது ஏவலாளிகள் இறந்த கோபத்தில் வந்த கோபம் அது, ஏதிலியான பாலஸ்தீன மக்கள்மீது கொண்ட அக்கறை அல்ல.
-
இந்தியர்களின் தற்கால நடவடிக்கைகள் அருவெருக்கதக்கதாகவும் அந்நாட்டு அரசுகள் மக்களை வெறுப்பேத்துவதுமாகவும் உள்ளது சந்தேகமேயில்லை. நீண்ட காலத்தின் முன்னர் இதற்கெல்லாம் முன்னோடிகள் இருந்திருக்கிறார்கள், அவர்கள் யாரென்று கடைசியில் சொல்லிவிடுகிறேன்: பொதுவெளியில் ஒண்ணுக்கடிப்பார்கள். ஹொலண்டிலிருந்து எல்லைவழியாக பிற ஐரோப்பிய நாடுகளுக்கு கஞ்சா கடத்துவார்கள். பொது தொலைபேசி பூத்துக்களில் நாணயத்தில் நூலைகட்டி உள்ளேவிட்டு விட்டு பல மணிநேரம் ஊருக்கு பேசுவார்கள். சிகரெட் மெஷினுகளுக்கு உள்ளே கள்ள காசு குத்தியை போட்டு பெட்டிபெட்டியாக எடுப்பார்கள். ஆட்டை திருடி அதனை டெலிபோன் பூத்துக்களில் வைத்து உரித்து பொலிசில் மாட்டுப்பட்டு அது பொது செய்தியாகி பெருமை தேடி தருவார்கள். வேலை செய்யும் பாமில் ஆட்டுடன் உடலுறவு கொண்டு அகில உலகமும் பெருமைபட அமர்க்கள படுத்துவார்கள். பிரான்சில் போதைபொருள் கடத்தலில் கொடிகட்டி பறந்து அதை சுந்தரலிங்கம் எனும் தமிழ் பொலிஸ் அதிகாரியை வரவழைத்தே அந்நாட்டு அரசு அடக்கும் அளவிற்கு நடந்து கொள்வார்கள். வேலை செய்யும் பெரிய உணவகங்கள் ஹோட்டல்களிலிருந்து மது போத்தல்கள், பியர் கேசுகள், உரிச்ச முழு ஆடுகள் ,ஐஸ்ஸினால் இறுக்கப்பட்ட இறால் பெட்டிகளை குப்பை போடும் இடத்திற்கு கடத்தி சென்று பின்பு வீட்டுக்கு கடத்துவார்கள். சீட்டு பிடிக்கிறேன் என்று சொல்லி சொந்த இனம் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசை ஆட்டையை போட்டுக்கொண்டு அமெரிக்காவரை ஓடுவார்கள். வெள்ளைக்காரன் உடல் வேர்வை சிந்தி பயிரிட்ட வெங்காயம் உருளைகிழங்கை சாக்கை கொண்டுபோய் இரவிரவாய் மூட்டையில் அள்ளிக்கொண்டு ஓடுவார்கள். பல பெயர்களில் பதிந்து சமூக உதவிபணம் எடுத்து வாழ்வு தந்த அந்நாட்டு வரி செலுத்தும் மக்களின் பணத்தை இரக்கமின்றி சுவை பார்ப்பார்கள். கோவில் விழாக்கள், வாகன தரிப்பிடங்கள், திரையரங்குகளில் கோடாலி கொத்து துப்பாக்கி சூடு கத்தி சொருவல் என்று அந்நாடு மக்களே நடுங்கும்படி நடந்து கொள்வார்கள். இன்னும் இருக்கு ரொம்ப நீளமாக எழுதவேண்டிவரும் , எழுதிக்கொண்டுபோனால் எனக்கும் போரடிக்கும் யாராவது இதை படித்தால் அவர்களுக்கும் போரடிக்கும் . அவர்கள் யாரென்றால் சாட்சாத் ஈழதமிழர்களாகிய நாங்களேதான். இந்தியர்கள் இப்போது யோக்கியமில்லை, நாங்கள் அக்காலத்தில் யோக்கியமில்லை. ஆக இந்த சேற்றில் கல்லெறிந்தால் அது என்மீதும் தெறிக்க வாய்ப்பிருக்கு.
-
பொது தேர்தலின் பின்னர் என்னாகபோகுதோ எம் வாழ்வு என்று அனைவருக்கும் மனசு படபடப்பது புரியுது, அந்த வரிசையில் கீழே உள்ள ஐயா அநுரவை இன்று சந்தித்திருக்கிறார், சுமந்திரன் ஏற்கனவே சந்தித்திருப்பதாக தகவல் , எல்லோரும் அடிச்சு பிடிச்சு அநுரவை சந்திப்பது தமிழ்மக்களின் அபிலாஷைகள் பற்றி பேசவாம், நம்பித்தானே ஆகணும் 'புதிய கடவுச்சீட்டுகளில் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளமையும்' ஏதாவது புதுமையா தமிழ் விசுவாசத்தை காண்பிக்கவேண்டுமென்று பார்க்கிறார் ஆனால் சரிப்பட்டு வரவில்லை, ஆங்கிலத்தை முதல் இடத்தில் வைத்தால் ஆட்டோமெட்டிக்கா தமிழ் மூன்றாம் இடத்துக்குதானே போகும் அதிலென்ன ஆச்சரியம்? அப்படி என்றால் முதலில் குழம்பவேண்டியது சிங்களவர் ஏனென்றால் அடிக்கடி அவர்கள் சொல்லிக்கொள்ளூம் ஒரு பெளத்த சிங்கள நாட்டில் சிங்களம் இரண்டாமிடத்துக்கு போய்விட்டதே.
-
அதிகம் கோபபடாமல் இருந்தாலே மனவலிமை தானாக வந்துவிடும். கோபம் அதிகம் இருந்தால் அதிக நட்பு வட்டம் இருக்காது, இருக்கும் கொஞ்சமும் புட்டுக்கிட்டு போகும். உடலாலும் மனதாலும் எதிரிகள் அதிகமாகும் , எதிரிகள் அதிகமானால் எந்த மனவலிமை இருந்தாலும் அம்மஞ்சல்லிக்கு பிரயோசனம் இல்லை என்பதே அடியேனின் எண்ணம். எதிரிகள் அதிகம் இல்லையென்றால் எந்த சபைக்கும் கெளரவமாய் போய் வரலாம், நம்முடன் அதிக நட்பு கொண்டிராதவன்கூட நமக்கொரு பிரச்சனையென்றால் பரிந்து பேச வருவான். எடுத்ததுக்கெல்லாம் கோபம் கொண்டு தகராறு வளர்ப்பவர்களின் நண்பர்கள்கூட பொறுத்த நேரத்தில் காய் வெட்டிவிடுவார்கள்.
- 1 reply
-
- 1
-
இதில் கிண்டலுக்கும் கேலிக்கும் எதுவுமில்லை, வளர்த்த நாயை காணாவிட்டாலே அழுது புலம்பும் மனிதம் பெற்று வளர்த்தவர்களுக்கு என்னானதோ என்று இதுவரை எந்த செய்தியும் இல்லையென்றபோது அவர்களை பொறுத்தவரை இந்த உலகம் அன்றோடு நின்றுவிட்டது, எந்தவகையிலும் இது சாத்தியப்பாடானது அல்ல என்று நமக்கு தெரிந்ததுபோல் அவர்களுக்கும் தெரிந்திருக்கும், அப்படியாவது தாம் வளர்த்தவர்கள் வீடு வந்து சேரமாட்டார்களா என்ற விசும்பல்தான் அது. புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாட்டில் எதிர்கால ஆளும் கட்சி தேர்வில் ஓரளவாவது செல்வாக்கு செலுத்தகூடிய தமிழர் வாக்குவங்கி கொண்டது கனடா மட்டுமே, அவர்களே ஆட்சிக்கு வந்ததும் தமிழர் தெருவிழாக்கள், பொங்கல், புக்கையென்று கலந்துகொள்வதோடு ஒப்புக்கு ஒருசில அறிக்கைகள் அவ்வப்போது விடுவதுடன் தம் எல்லையை வரைந்து கொள்கிறார்கள். இறுதி யுத்தத்தின் பின்னர் யுத்தம் என்ற அங்கு நடந்ததையே அங்குள்ள எம் மக்களே மறக்கும் நிலைக்கு வந்ததுபோல் வாழ்வை பெரும் எடுப்பில் மாற்றி கொண்டுள்ளார்கள் , ஆனால் இன்றுவரை வாழ்க்கையை 15 வருடங்களுக்கு மேலாக உறங்குவதும் அழுவதும் அழுதுவிட்டு உறங்குவதுமாக இருக்கும் அவர்கள் வலி அனுபவித்து பார்க்க தேவையில்லை நினைத்து பார்த்தாலே எவருக்கும் வரகூடாத கொடூரம்தான்.
-
அவர்கள் நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை சொத்துக்களை வாங்குவதன்மூலம் பிரதேசத்தை ஆக்கிரமிக்கிறார்கள். வெளிநாட்டு பிரஜைகள் இலங்கையில் காணிகளை வாங்குவதோ தம் பெயருக்கு மாற்றுவதோ முடியாது ஆனால் குத்தகையின் அடிப்படையில் 99 வருஷங்கள் பெற முடியும். வெளிநாட்டவர்கள் இலங்கையில் முதலீட்டு நிறுவனங்களில் 50%மான பங்குகளை கொண்டிருந்தால் அப்பார்ட்மெண்ட் ஹோட்டல் போன்ற சொத்துக்களை வாங்கலாம் என்று சொல்லப்படுகிறது. அந்த சிங்களவர் முஸ்லீம் வாக்குகளுக்காக பொங்குகிறார் என்று நினைக்கிறேன், இலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் வெளிநாட்டவர்கள் சகலவிதமான இலங்கை அரச அனுமதியுடனேயே சட்டரீதியாக உள் நுழைகிறார்கள் முதலீடுகளில் ஈடுபடுகிறார்கள். சுற்றுலாதலங்களை அண்டிய பகுதிகளில் அப்பாட்மெண்ட், ஹோட்டல்களை வாங்கி தமது பிரஜைகளுக்கு மட்டுமானதாக படிப்படியாக ஆக்குகிறார்கள். இலங்கை மட்டுமல்ல மேற்கத்தையநாடுகள் அனைத்திலுமே பெரும் சொத்துக்களுக்கு சொந்தக்காரர்கள் யூதர்கள், அவர்களுக்கு இலங்கையில் சொத்து வாங்குவது தேத்தண்ணி குடிக்குற காசு. இதை சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தினாலன்றி வேறு எந்த அரசாங்கத்தினால் எந்த வழியில் தடுக்க முடியும் என்பது கடவுளுக்கே வெளிச்சம். விரிவான தகவல்கள் இங்கே: https://www.lankapropertyweb.com/features/property-buying-for-foreigners.php?__cf_chl_tk=MmJCunvYVOIovCM289Vxd4I8sRSt2VJV8ow6yet1vb4-1729761863-1.0.1.1-v2leVM.RZqcpHHjiGHMYm_tJT9Si.yD2lJBGH.TUgK4 இலங்கையில் இஸ்ரேலியர்களின் பரம்பல் எவ்வாறுள்ளது என்பது பற்றி சந்துரு காட்சிபடுத்தியுள்ளார்
-
இந்திய இராணுவத்தினரால் படுகொலையானவர்களின் நினைவேந்தல்
valavan replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
முதலில் தனியொருவனாக புலிகளை மலினபடுத்தாமல் உயர்வாய் வைத்திருக்கும் உங்களுக்கு வணக்கங்கள். ஒரு பொது கருத்து தளத்தில் தனிமனித தாக்குதலின்றி கருத்துக்கு கருத்து எழுதும்போது கீழ்தரம் மேல்தரம் எல்லாம் இல்லை, உங்களுக்கு தெரிந்ததை நீங்கள் எழுதுகிறீர்கள் எனக்கு புரிந்ததை நான் எழுதுகிறேன். புலிகளால் அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது எப்போது? தேசிய கூட்டமைப்பு தோற்றத்திற்கு முன்னா பின்னா? அறிந்துகொள்ள ஆவல். -
இந்திய இராணுவத்தினரால் படுகொலையானவர்களின் நினைவேந்தல்
valavan replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு அப்புறம் உலகின் அனைத்து அரச அடக்குமுறைக்கு எதிரான போராட்ட இயக்கங்களிற்கும் பயங்கரவாத இயக்கங்கள் என்றும் அவை அழிக்கப்படவேண்டியவை என்றும் முத்திரை குத்தி அமெரிக்கா வாள் தூக்கியதால் உலகின் அரச பயங்கரவாதத்துக்கு எதிராக போர் புரிந்த அனைத்து இயக்கங்களும் பேரழிவின் விளிம்புக்கு அப்போது வந்தன. போராட்ட சக்திகளுக்கெதிரான உலகின் அக்கால போக்கை சமாளிக்க உருவாக்கப்பட்டதே தேசிய கூட்டமைப்பு. அதில் புலிகளாலும் மக்களாலும் வெறுக்கப்பட்ட / ஒதுக்கப்பட்ட முன்னாள் ஆயுத அரசியல் குழுக்கள் இயக்கங்கள் இருந்தன. அவர்கள் எவரையும் மனதார எமது போராட்ட சக்திகள் என்று மக்களோ புலிகளோ ஏற்றுக்கொண்டதில்லை, அப்படி ஏற்றுக்கொண்டிருந்தால் புலிகள் அரசு பேச்சு வார்த்தையில் சர்வதேச மட்டத்திலிருந்து உள்நாடுவரை அவர்களும் அடக்கப்பட்டிருப்பார்கள். ஒருதடவை புலிகள் தேசிய கூட்டமைப்பு சந்திப்பு கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபோது கஜேந்திரன் தலைவர் முன்னாடியே பிரேமச்சந்திரனின் பிரசன்னத்தை விமர்சித்திருந்தார் , அதற்கு அனைவரையும் அணைத்துபோவது காலத்தின் கட்டாயம் என்ற பாணியில் தலைவர் அவரை அமைதி படுத்தியிருந்தார். ஆம் அது உலகத்துக்கு ஒப்புக்கு காண்பிக்கப்பட்ட ஒரு ஒருங்கிணைப்பு, ஒரு காலபகுதியில் தமிழர்களுக்கும் புலிகளுக்கும் எதிராக நின்றவர்களை தலைவர் மறந்திருப்பாரென்று நாம் எண்ணிக்கொண்டால் அது ஒரு தவறான வரலாற்று தொகுப்பு. -
மாவைக்கு வயது 81 , ஒரு சராசரி மனிதனின் ஆயுட்காலத்தைவிட அதிகம். வயதின் மூப்பால் எலும்புகளும் திசுக்களும் தேய்வடைய முதுமையும் நோயும் இயற்கை எய்துவதும் கட்டில் படுத்திருக்கும் மாவையும் கருத்து சொல்லும் நானும் எதிர்நோக்க வேண்டியதும் தப்பிக்க முடியாததும் ஒன்றுதான். மக்களில் ஒருவனாகிய நான் செத்தால் ஏன் செத்தான் என்று மட்டும் கேட்பார்கள், மக்கள் பிரதிநிதிகள் என்று தம்மை சொல்லிக்கொண்டவர்கள் போய்விட்டால் என்ன செய்துவிட்டு போனார் என்று கேப்பார்கள். தள்ளாத வயது என்பதற்காக இவர்கள் செய்தவைபற்றி கேள்வி கேக்காமல் எவரும் தள்ளி வைத்துவிட்டு போகமாட்டார்கள். ஐயா குணமடையட்டும்.
-
அரசியல் போராட்டகாலத்திலும் ஆயுத போராட்ட காலத்திலும் பின்னி பிணைந்தும் பின்புலத்தில் நின்றதும் யாழ்பல்கலைகழக சமூகமே. அவ்வாறான எம் அறிவார்ந்த போர்கூடம் கடந்தகால எம் சுத்துமாத்து தமிழ்கட்சிகளை இனம் காணவும் துடைத்தெறியவும் புதியவர்களை எம் மண்ணுக்காக மாற்றீடான தலைமைகளாக இனம் காட்ட வேண்டியதும் அவர்களை தேர்தலின்போது ஒன்றிணைப்பதும் எம் இனத்திற்கான தமது வரலாற்று கடமையாக கொள்ளவேண்டும். தெருவுக்கு தெரு எம் மக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட காலத்திலேயே பொங்குதமிழ், மாவீரர் நினைவேந்தல் என்று நெஞ்சுறுதியுடன் சிங்களத்தை எதிர்கொண்டு சிங்கள படைகளின் நடுவில் வாழ்ந்த எம் மக்களை தேசிய நலனுக்காய் ஒன்றுதிரட்டிய எம்மின பொக்கிஷ பல்கலைகழக சமூகம் இக்கால கட்டத்தில் பழைய தமிழ்கட்சிகள்போல் வெறும் அறிக்கைகளுடன் மட்டும் நின்று கொள்வது ஜீரணிக்க முடியாத ஒன்றாகவே உள்ளது. தன்னலமற்ற எம் புதிய அரசியல் தலைமை ஒன்றின் உருவாக்கத்திற்கும் அடையாளபடுத்துதலுக்கும்,ஒன்றிணைப்பதற்கும் பழையனவற்றின் அகற்றலுக்கும் நீங்கள் சாட்டை எடுத்து சுழற்றலாம் யாரும் தவறென்று சொல்ல போவதில்லை.
-
வடக்கு - கிழக்கில் 15ஆசனங்கள் உறுதி- சுமந்திரன் தெரிவிப்பு!
valavan replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
அதாலதான் நான் இவருக்கு இப்படி ஒரு பதாதை உருவாக்கினேன் இப்படியாச்சும் இந்த ஈழத்து கருணாநிதி எங்கையெண்டாலும் ஓடி போகட்டுமெண்டு -
நீங்கள் சொல்வது உண்மைதான் யானைகள் நடமாடும் இடத்தில் மிக குறைந்த வேகத்தில் செல்லவேண்டுமென்று சட்டம் சமிஞ்ஞை எல்லாம் இருந்திருக்கும், ஆனால் இலங்கையில் அதையெல்லாம் யார் மதிக்கிறார்கள். பல யானைகள் படுகாயம் இறப்பு என்று ஆகுமளவிற்கு கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் சென்றிருக்கிறார், அல்லது தூக்க கலக்கம். அதுவும் எரிபொருளுடன் , நல்லவேளை வெடிக்கல. ஆபத்தான மலையக ரயில் பாதைகளில் பயணிகள் பெட்டிகளுடன் எரிபொருள் தாங்கிகளையும் இணைத்து ரயிலை ஓட்டி செல்வதை கவனித்திருக்கிறேன். ரயில்களுக்கு வக்காலத்து வாங்கியே ஆகவேண்டும் ஓட்டுறவன் சரியில்லையென்றால் அது என்ன செய்யும் பாவம்? நான் குறிப்பிட்டது யாதெனில் சட்டென தன் பாதையை மாற்றிக்கொள்ள முடியாத வாகனங்களுடன் மோதினால் ந்ம்மை மோதியதல்ல நாம் மோதியது என்ற சொற்றொடர்தான் சரியானது என்பதே. விமானங்களும் பறவைகளும் முட்டிக்கொண்டால் விமானத்துடன் மோதிய பறவைகள் என்றே சொல்வார்கள், பறவைகளை மோதிய விமானம் என்று யாரும் சொல்வதில்லை.
-
வடக்கு - கிழக்கில் 15ஆசனங்கள் உறுதி- சுமந்திரன் தெரிவிப்பு!
valavan replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
யார் தருவார் இந்த 15 ஆசனம்? -
அப்படி தென் கிழக்காசியர்கள்தான் சொல்லுவோம், வெள்ளைக்காரர்கள் அப்படி சொல்வதில்லை. I hurt myself என்று தன்னோட தவறை ஒப்புக்கொள்வார்கள் ஈழபிரியன் அண்ணாவுக்கு தெரியாததா என்ன, நாம் எம்மோட தவறை ஒப்புக்கொள்வது குறைவு அல்லது அடுத்தவன் தலைமேல் போடுவது அதிகம் என்பதால் அப்படி சொல்கிறோம் போலும்,
-
கல்லு காலில் அடித்ததா இல்லை கல்லை கால் அடித்ததா என்று சிந்தித்து பாருங்கள் உங்களிடமே விட கைவசம் இருக்கும்