Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

valavan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by valavan

  1. சர்வதேச சட்டப்படி எந்த ஒரு நாட்டுக்கும் கரையிலிருந்து 12 கடல்மைல்கள் அவற்றின் சொந்த கடல்பகுதியாகவே கருதப்படும் என்கிறார்கள், ஆதலால் அனைத்துநாட்டிற்கும் கடல் எல்லைகள் உண்டு. பாக்குநீரிணை மன்னார் வளைகுடாபகுதி மிக குறுகலானது என்பதால்தான் எல்லைகள் மீறுவதில் ஏகப்பட்ட புடுங்கல்கள், ஆனால் நெடுந்தீவுக்கும், பருத்துறைகடற்கரைக்கும் முல்லைதீவுக்கும் இந்திய மீனவர்கள் வந்து மீன் பிடிப்பது எந்த வகையிலும் தவறாக எல்லையை புரிந்து கொண்டது அல்ல.அது அப்பட்டமான இன்னொருநாட்டின் கடல்வள கொள்ளை . கச்சதீவு என்ற ஒரு பிரச்சனை இலங்கை இந்தியாவிற்குள் இல்லை, இந்திராகாந்தி ஸ்ரீமா ஒப்பந்தபடி கச்ச தீவு என்பது இலங்கைக்கு சொந்தமாகிவிட்டது, கச்சதீவு திருவிழாவில் கலந்து கொள்ளவும் , மீன் வலைகளை உலர்த்தவும் ஓய்வெடுக்கவும் மட்டுமே இந்திய மீனவர்களுக்கு உரிமையுள்ளது, ஆனால் மீன் பிடிக்க உரிமையில்லை என்பதே ஒப்பந்தம் என்கிறார்கள். அதனால்தான் இலங்கை கடற்படையிடம் மாட்டும்போதெல்லாம் கச்சதீவில் மீன்பிடிக்கும்போது என்று அவர்கள் சொல்வதில்லை கச்சதீவுக்கு ‘’அருகில்’’ மீன் பிடிக்கும்போது இலங்கை கடற்படை அட்டூழியம் என்று கப்சா விடுவார்கள். 1976 ஆம் ஆண்டு இருநாட்டு ஒப்பந்தங்களின்படி கச்சதீவை ஒருபோதும் இலங்கையிடமிருந்து மீளபெற முடியாது என்று பல தடவை மத்திய அரசு அறிவித்துவிட்டது. ஆனால் ஒவ்வொரு தேர்தல் வரும்போதும் கச்சதீவை மீட்போம் என்று பிரச்ச்சாரம் செய்யும் மாறி மாறி ஆட்சிக்கு வரும் தமிழக கட்சிகள் ஆட்சிக்கு வந்ததும் அதுபற்றி பேசுவதில்லை, ஏனென்றால் அவர்களுக்கும் தெரியும் அது சாத்தியமில்லையென்று , மீனவ சமுதாயத்தின் வாக்குகளுக்காக ரீல் விடுவார்கள். இதில் அதியுச்ச நகைச்சுவை எந்த காங்கிரஸ் கச்சதீவை இலங்கைக்கு தாரை வார்த்ததோ அதே காங்கிரசும் கூட்டுகட்சியான திமுகவும் தேர்தல் நேரங்களில் கச்சதீவை மீட்போம் என்று குரல் கொடுப்பது.
  2. இந்திய மத்திய அரசும் இலங்கையும் சீமானுக்கு எதிரிகள்தான் இதில் யார் யாரிடம் மண்டியிட்டால்தான் சீமானுக்கு என்ன? எனக்கு பிடிக்காத ஒருவன் நான் நினைத்தபடி நடப்பான் என்றோ நடக்கவில்லையென்று யாரும் எதிர்பார்க்ககூடாது. உண்மை நிலவரம் யாதெனில் தமிழகத்தின் முதலாவது மிக பெரிய மீன்பிடி துறைமுக நகரமான தூத்துக்குடியில் வைத்து இந்திய மீனவர்கள் பற்றி கேள்வி கேட்டால் அவர்களுக்கு எதிராகவும் கருத்து சொல்ல முடியாது, இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும் கருத்து சொல்ல முடியாது அதனால்தான் ஒரேவரியில் பதில் சொல்ல முடியாமல் மத்திய அரசின் பக்கம் காயை நகர்த்தி விழி பிதுங்கினார் சீமான். இது வாழ்க்கையில் குடிப்பழக்கமே இல்லாத ஒருவனை பார்த்து , நீ குடிப்பதை நிறுத்திவிட்டாயா ஆம்/இல்லை என்று மட்டுமே பதில் சொல்லவேண்டும் என்பதைபோல, ஆம் என்று சொன்னால் முன்பு நீ குடித்திருக்கிறாய் என்று அர்த்தம், இல்லையென்று சொன்னால் அப்போ நீ குடிகாரன் என்று அர்த்தம். ஆனால் வெளிப்படையாக தெரிந்த விஷயம், நட்பு என்று ஒருவரை வரிந்து கொண்டால் விமர்சனங்களை கடந்து அவர்களுக்கு நேர்மையாக விசுவாசமாக இருக்க வேண்டும் எனும் குணம் பையனில் தெரிகிறது. கண்டிப்பா அது ஒரு உயர்ந்த குணம்தான்.
  3. பையா கடைசிவரை எல்லை தாண்டி மீன் பிடிக்கும் விஷயத்தில் சீமான் சொன்ன கருத்து சரியா பிழையா என்று சொல்லவே இல்லையே, உளவு விமானம்போல ஊரெல்லாம் சுத்தி வர்றீங்க. எனக்கு தெரிந்து நேரடியாக சீமான் பதில் சொல்ல திணறிய தருணங்களில் இதுவும் ஒன்று, சரி அவராவது நேரடியாக சொல்லவில்லை நீங்களாவது ஒரே வரியில் சொல்லுங்க பையா , அண்ணன் இலங்கை மீனவர்களுக்கு சாதகமாக பேசுகிறாரா இந்திய மீனவர்களுக்கு சாதகமா பேசுகிறாரா?
  4. ஒருகாலம் யாழ்தளம் சீமான் ஆதரவாளர்களால் நிரம்பி வழிந்தது இன்று ஒருசிலர் தவிர சீமானின் பேச்சை அரசியலை நகைச்சுவைகளின் உச்சம் என்றே பலர் கருதுவதுண்டு சட்டவிரோதமாக நுழையும் இந்திய கடற்தொழிலாளர்களை இலங்கை கைது செய்தால் பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்கிறாரே. அந்த சட்டவிரோத இந்திய மீனவர்கள் யார் பகுதியில் உள் நுழைகிறார்கள், யார் வயிற்றில் அடிக்கிறார்கள் என்று சிந்திப்பதேயில்லையா? இலங்கை தமிழனை அழித்தவன் மத்தியிலிருக்கும் வட இந்தியன் என்று கட்சி கூட்டங்களில் பொங்கும் சீமான், அதே இலங்கை தமிழனை பொருளாதார ரீதியில் அழிக்க வட இந்தியனின் உதவியை நாடுவது எந்த ஊரு கொடூரம்? இது ஒரு முஸ்லீம் ஊடகத்தில் வந்த செய்தியென்பதால் உருட்டிவிடவும் வாய்ப்புண்டு என்பதால் இப்படி சொன்னாரா என்று கூகுளில் உறுதிபடுத்தி பார்த்தால் ஆம், சொல்லியிருக்கிறார்.
  5. அவர்கள் ஏரிமீன்கள் அல்ல எங்கும் நகரமுடியாதபடி ஒடுக்கமான இடத்தில் விரும்பியோ விரும்பாமலோ தமக்கு கிடைக்கும் முடிவுகளை உண்டு பெரிய மீன்களின் ஆதிக்கத்திலிருந்து தப்பிக்க முடியாமல் வாழும் கிணற்று மீன்கள். ஏரிமீன்கள் நாம்தான் பரந்த நீர் பரப்பில் பரவலாக நீந்தியபடி கிணற்றுக்குள் சிக்கிய மீன்கள்பற்றி சுதந்திரமாக கருத்து சொல்ல முடிகிறது. வெள்ளை சுறாக்கள் திரும்பி போகும்போது பெரிய மீன்களுடன் சேர்ந்து வாழ சம்மதித்தது சிறிய மீன்கள்தான் என்ற கறை எப்போதும் எம் பக்கமிருக்கும்.
  6. அட இதை கவனிக்காமல் நானும் வாக்களித்தவர் பெயரை சொல்லிவிட்டேன், ஆனால் ஒன்று புலம்பெயர்ந்தவர்களின் கருத்துக்கணிப்பு கூட்டு சேர்ந்து செயல்படுவதால் எந்தவிதத்திலும் ஒரு புண்ணியமும் கிடைக்காது அதனால் பொதுவெளியில் தெரிவிப்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன். ஏனெனில் எமது தெரிவுகள் எந்த விதத்திலும் தாயக தேர்தலில் செல்வாக்கு செலுத்த போவதில்லை, இது உண்மையான தேர்தலில் வாக்களிக்காத வெறும் தனிமனித அபிப்பிராயங்கள்.
  7. அரச பக்கமும் இல்லாமல்,. தமிழர் பாரம்பரிய கட்சிகளும் இல்லாமல் சுயேட்சை பக்கம் சார்ந்து மருத்துவர் அர்ச்சுனாவுக்கு வாக்களித்துள்ளேன், இது விரும்பி போட்டதல்ல வேறு தெரிவுகள் இல்லாமல் போட்டது.
  8. மனது வைத்து எந்த தேர்தல் கட்சிகளிலும் துளிகூட நாட்டமில்லை. தமிழ்சிறியின் அழைப்புக்காகவும் கோஷானின் கருத்துக்கணிப்புக்காகவும் மதிப்பு கொடுத்து ஒரு வாக்கை தட்டிவிடலாம் என்றிருக்கிறேன். இந்த வாக்களிப்பு தெரிவில் தேர்தலை புறக்கணிக்கிறோம் அல்லது இந்த தேர்தலில் வாக்களிக்க விரும்பவில்லை என்றொரு தெரிவை ஏன் நீங்கள் வைக்கவில்லை கோஷான்? ஏனெனில் எந்த தேர்தலிலும் அந்த முடிவை எடுக்கும் கணிசமான பிரிவினர் உண்டு.
  9. ஆம் ஈழப்பிரியன் அண்ணா, அதிலும் நம்மவர் படத்தில் ஒரு நடிப்பு நடிச்சிருப்பார், சிவாஜியையே தூக்கி சாப்பிடும் நடிப்பு. பல பத்து ஆண்டுகள் திரையில் ஜீவனாகவே வாழ்ந்த அந்த மகா கலைஞனுக்கு நம்மவருக்கு மாத்திரமே ஒரேயொரு தேசிய விருது கிடைத்தது அதுவும் துணை நடிகருக்காக.
  10. ஆம் ரசோ, அதுபோல் அசைக்கமுடியாத உச்சத்தில் இருக்கவேண்டியவர்கள், குடியாலும் பவுடராலும் தம் வாழ்வை கெடுத்துக்கொண்டவர்கள் என்று நான் இன்றும் நினைப்பது இரண்டுபேர் ஒன்று ரகுவரன்: ஹொலிவூட் தரம் என்று சொல்லி சொல்லி படம் எடுப்பார்கள் பின்பு பார்த்தால் கோமாளிதனமாக இருக்கும், ஆனால் தமிழ்சினிமாவில் எந்தவித கோமாளிதனமான நடிப்புமின்றி ஹொலிவூட் தரத்தில் இருந்த ஒரேயொரு நடிகன் ரகுவரன். இரண்டு கார்த்திக். படத்துக்கு படம் எந்தவித கெட்டப்பும் மாத்திக்கொள்ளாமல் எல்லோராலும் விரும்பப்பட்ட பன்முக கலைஞன் . கார்த்திக் ரஜனி படங்களுக்கு மட்டுமே நகைச்சுவைக்கென்று தனியே ஆள் தேவையில்லை அவர்களே ஹீரோவாகவும் நகைச்சுவை நடிகர்களாகவும் மனசை அள்ளுவார்கள். அதேபோல் தமிழ்சினிமாவால் இன்னும் முழுசாக பயன்படுத்தப்படாத கலைஞர்கள் இருவர் என்று எண்ணிக்கொள்வதுண்டு. ஒன்று ராஜ்கிரண் இரண்டு எம்.எஸ்.பாஸ்கர் ராஜ்கிரணுக்கு ஒரு தவமாய் தவமிருந்தும்,எம்.எஸ்.பாஸ்கருக்கு ஒரு மொழியும் இன்னும் இவர்களிடம் நிறைய இருக்கு என்று எண்ண தோன்றும்படங்கள். என்ன இருந்தாலும் நாகேஷ் நடிப்பு நம்ம தமிழ்கட்சிகள் ரேஞ்சுக்கு வராது சுவியண்ணா 😏
  11. கமல் அடிக்கடி தனது பேட்டிகளில் நாகேஷை புகழோ புகழ் என்று புகழ்ந்து தள்ளுவார், அது கொஞ்சம் மிகையோ என்று தோன்றுமளவிற்கு ஐயம் வரும், ஒரு கதிரையில் இருந்தபடி கணப்பொழுதில் எம்மையறியாமல் எங்கே அழுதுவிடுவோமோ என்ற அளவில் அச்சுறுத்தி அவரால் நெகிழ வைக்க முடியும் என்பதற்கு சாட்சியாக அவர் நடிப்பு இந்த காணொலியில் இருக்கிறது
  12. நான் கேட்டது அதுவல்ல புத்தன், இந்த தேர்தலில் போட்டியிடும் அருட்தந்தை சொல்லும் எம் தேச விடுதலைக்காக தீரமுடன் செயல்படுவோர்க்கு வாக்களித்து தேசம் காக்குமாறும் வேண்டுகோள் விடுகின்றோம் எங்கிறாரே அவர் வாக்களிக்க சொல்லும் எம் தேச விடுதலைக்காக தீரமுடன் போட்டியிடும் அந்த அமைப்பு எது என்று மக்களுக்கு அடையாளம் காட்ட ஏன் தயங்குகிறார். சரி நீங்களாவது சொல்லுங்கள் புத்தன், இந்த தேர்தலில் எம் தேச விடுதலைக்காக தீரமுடன் செயல்படும் மக்கள் வாக்களிக்ககூடிய அந்த அமைப்பு/கட்சி எது?
  13. ஏறக்குறைய 100% தமிழர்கள் கொண்ட யாழ்ப்பாணத்தில் சிங்களவன் தெற்கிலிருந்து நேரடியாக வந்து பிரச்சாரம் செய்கிறான். தமிழர் தேசியம் விடுதலை என்பவர்கள் யாழ்ப்பாணத்துக்குள் இருந்துகொண்டே அறிக்கை போர் நடத்துகிறார்கள், இதன் அர்த்தம் நேரடியாக மக்கள்முன் போய் நிற்கமுடியாத நிலை என்று எடுத்துக்கொள்ளலாமா? எம் தேச விடுதலைக்காக தீரமுடன் இப்போது அங்கு செயல்படுவோர் யார் எந்த அமைப்பு என்று உரக்க சொல்வதில் அருட் தந்தைக்கு என்ன தயக்கம் இருக்கிறது? கஞ்சிக்கு வழி இல்லாவிட்டாலும் அண்ணளவாக 96% எழுத படிக்க தெரிந்த மக்களை கொண்டது யாழ்மாவட்டம். அவர்களை எழுத்துக்களால் இலகுவாக ஏமாற்ற முடியுமா குருவானவரே? இதுக்குள்ள மாவீரர்களை வேற இழுத்து விடுறீங்க
  14. உருத்திரகுமார் மிக நீண்டகாலமாக எம் தாயகபோராட்ட அமைப்பின் ஓர் அங்கமாக இருந்து இன்று புலிகளின் நினைவாய் எஞ்சியிருக்கும் மிச்சங்களிலொன்று. எம் தாயக போராட்ட அமைப்புக்கு நெடுங்காலம் சட்டரீதியாக தன் போராட்ட பங்களிப்பய் செய்த நன்றிக்குரிய போராளி. ஆளுமைமிக்க நீங்கள் இந்த நாடுகடந்த அரசை கலைத்துவிட்டு, புலம்பெயர் தேச எமதுமக்கள் அமைப்புக்கள் தொழிலதிபர்களை இணைத்து எம் தாயக மக்களுக்கான அரசியல் பொருளாதார கல்வி ஆலோசனை நடவடிக்கைகளில் மறைமுக சக்தியாய் ஈடுபடலாம். நாடுகடந்த எம்பிக்கள் என்று இருந்தார்கள், அவர்களில் ஒரு சிலர் என்ன செய்கிறார்கள் என்று நன்கறிதிருக்கிறேன். கியூபா போய் மூக்குமுட்ட குடித்து அழகிகளுடன் ஹில்மா பண்ணி கழுதையில் ஏறி சவாரி போன ஒருவரையும் நானறிவேன்.. இவர்கள் தராதரத்திற்கும் புலிகள் அமைப்பின் மறுவடிவ உங்கள் அமைப்புக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா? தற்போதைய தாயக நிலவரம் பார்த்தால் கண்முன்னே கூட்டம் கூட்டமாக எம் மக்கள் மீண்டுமொருமுறை சிங்களவனிடம் சரணடவது தெரிகிறது. முள்ளிவாய்க்கால் முடிவில் சரணடந்தது ஆபத்தானதல்ல, ஏனென்றால் அது விரும்பாமலே சரணடைந்தார்கள், இன்று விரும்பி சரணடைகிறார்கள் எமது பிரதிநிதிகள் எனப்படுகிறவர்களிடம் தொடர்ந்து ஏமாந்து போனதால் தமிழருக்கென்றொரு தனித்துவபகுதி அரசியல் என்பதையெல்லாம் தள்ளி வைக்க தயாராகிவிட்டார்களென்பது பொருள். இலங்கை தமிழ்மக்கள் தமிழகம் போன்று சினிமா செம்பு குத்துவிளக்கு குவாட்டர் பிரியாணிக்கான வாக்காளர்களல்ல, அடுத்துவரும் ஐந்து வருடங்களில் அநுர தமிழர்கட்சிகள்போலவே ஏமாற்றிக்கொண்டிருந்தால் அடுத்த தேர்தலில் மறுபடியும் தமிழர் தலைமைகளை நோக்கி வருவார்கள், அப்போதிருக்கபோகும் தமிழ் தலைமைகள் இப்போதிருந்தவர்களாக இருக்க கூடாது என்பதே அவா. அதற்கான எத்தனங்களின் பின்னால் மறைமுகமாக உங்களின் பங்களிப்பு இருக்க வேண்டுமென்பதே அபிப்பிராயம்.
  15. அவர் தற்போது யாழ் மூளாயில்தான் பணியாற்றுகிறார். 13:25 இல் இருந்து மருத்துவரின் பேட்டி இடம்பெறுகிறது வடபகுதியில் அநுரவின் வேட்பாளர்கள் யாரென்றே யாழில் உள்ள பலருக்கே தெரியவில்லை அதனை செய்த பெருமை யூடியூப் தளங்களுக்கே சேரும். அவர்களை பொறுத்தவரை அநுர என்ற பெயரே தெரிந்திருக்கிறது. அநுர வடக்கில் இருவரிகளில் தனது அரசியல் கொள்கையை வைத்துள்ளார் அது: அடிப்படை பிரச்சனைகளை தீர்த்தால் அரசியல் கோஷங்கள் தானாக அடங்கிவிடும். என்பதே, யாழில் கருத்து தெரிவிக்கும் மக்களில் பலரின் கருத்தும் அதுவாகவே இருக்கிறது, யாழில் சிங்கள அரசியல்கட்சிக்கான ஆதரவு அலை வீசுகின்றது என்பதைவிட்டு தமிழ் அரசியல்கட்சிகளுக்கெதிரான வெறுப்பே களை கட்டுகிறது என்று சொல்லலாம். அரசின் வெற்றி வடபகுதியில் உறுதியானால் தமிழர் அரசியல் அபிலாஷைகளுக்கு சாவுமணிதான், அதற்கு முழுகாரணமுமே தமிழர்கள் முதுகில் இதுவரைகாலம் குதிரை ஓட்ட கால இழுத்தடிப்பு செய்த தமிழ்கட்சிகள்தான்.
  16. எது யாயினி என்னோடதா? நானெல்லாம் வைச்சா ஒரு நக காளான்கூட முளைக்காது அவ்வளவு ராசி. அந்த யூடியூப் தளக்காரர் ஏராளமான பதிய முறை மற்றும் ஒட்டுமுறையை தரவேற்றியிருக்கிறார். பிரமிப்பாகவும் அனைத்தையும் பார்வையிடவேண்டுமென்ற ஆவலையும் தூண்டியது. அமெரிக்காவிலா யசோதரன்? ஆச்சரியமாக உள்ளது.
  17. எப்படியாவது அநுர ஆட்சியில் இடம்பிடித்துவிட முடியாதா என்று அலைந்தவர்கள் இரண்டுபேர் ஒன்று சுமந்து இரண்டு டக்ளஸ் உங்களால் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு பதவி இல்லையென்று அநுர சொல்லிட்டாரு, சுமந்துக்கு புரியும். அடுத்து இன்று யாழ்ப்பாணத்தில் நடந்த அநுர கூட்டத்தில் இனிமேல் நீங்கள் மணல் லொறிகளுக்கு காசு கொடுக்க தேவையில்லை என்று சொல்லிவிட்டு, உள்ளர்த்தம் புரிகிறதா எண்டும் கேட்டிருக்கிறார் அதன் அர்த்தம் யாருக்கு புரியாவிட்டாலும் அண்ணன் டக்ளசுக்கு புரியும். யாழில் மக்களிடம் என்ன மனநிலை நிலவுகிறது என்பதை துல்லியமாக அறிந்து வைத்திருக்கிறது அநுர குரூப்
  18. எனக்கு மிகவும்பிடித்த குணசித்திர & நகைச்சுவை நடிகர் டெல்லிகணேஷ். மரணம் எவருக்கும் சலுகை தரபோவதில்லை. காலங்கள் ஓடினால் காலமாக்கிவிடும் ஐயாவுக்கு அஞ்சலிகள்.
  19. நான் கபிதன்கிட்ட மாட்ட மாட்டேனே satan, இனி இந்த பக்கம் வந்தாதானே, நீங்கள் எடுகோள் காட்டியதால் மட்டும் வந்தேன், ஆனால் கபிதன் சர்சைகளும் வரவேற்கதக்கது, ஒரு கருத்து களத்தை தொடர் இயங்கு நிலையில் வைத்திருப்பதற்கு அவர்களின் பங்களிப்பும் இன்றியமையாதது.
  20. விஜய் இப்போதுதான் அரசியலில் காலடி எடுத்து வைக்கிறார், தமிழக அரசியலில் 60 வீத வாக்கு வங்கி திராவிட கட்சிகளிடமே உள்ளன, விஜய் எனும் நடிகனுக்கு அனைத்து கட்சிகளிலுமே ரசிகர்கள் உண்டு, ஆனால் அவர்களெல்லாம் விஜய் எனும் அரசியல்வாதிக்கு ரசிகனாக இருக்கபோவதில்லை. எடுத்த எடுப்பில் திராவிடத்தை தூக்கியெறிந்து பேசினால், நிச்சயமாக திராவிட கட்சிகளில் இருக்கும் அவர் ரசிகர்கள் அதை ரசிக்கபோவதில்லை. சீமான் நிலை அவ்வாறு இல்லை அதனால் அவர் எதையும் உணர்ச்சிவசப்பட்டு பேசலாம், ஒரு கட்சி வளர்ச்சி என்பது எத்தனை கட்டங்களை கொண்டது ஆரம்பத்தில் எத்தனையோ தில்லாலங்கடி செய்துதான் மேலே வருவார்கள் விஜய்யும் அதற்கு விதிவிலக்கல்ல, அவர் ஆரம்பத்திலேயே தன்னோட வாக்கு வங்கியை சிதைக்காமலிருக்கும் பணியை கச்சிதமாய் செய்கிறார் சீமான் வழமைபோல் புறசூழல் எதுபற்றியும் யோசிக்காமல் கொந்தளிக்கிறார். பகுத்தறிவு பெரியாரிசம் பேசிய திமுககூட ஒருகாலம் பாஜகவுடன் கூட்டு வைத்தது என்பது அரசியலின் தேவை கருதிய செயற்பாடுகள் என்பது சீமானுக்கு தெரியாமலா இருக்கும், அது என்னமோ அவர்கள் விருப்பம் Island, முயன்றுபார்த்து பேரழிவை சந்தித்தோம் என்பதை நான் கூற வேண்டியதில்லை, முள்ளிவாய்க்கால் நினைவின்போதும், மாவீரர்நாட்களின்போதும் தாயகத்தில்கூட புலிகளை எந்த குற்றம் சொல்லாமல் நினைவுகூரும் லட்சக்கணக்கான எம் மக்களே அதற்கு சாட்சி. இன்றும்கூட ''அவர்கள் இருந்திருந்தால் இதுவெல்லாம் நடக்குமா'' என்று மனசுக்குள் புழுங்கும் எம் மக்களே சாட்சி.
  21. நீங்கள் சொல்லவருவது உண்மையாகவே எனக்கு புரியவில்லை கோஷான்,2011 சட்டமன்ற தேர்தலில் ஜெயுடன் கூட்டு சேர்ந்தபோது ஜெ ஒதுக்கிய 41 தொகுதிகளில் 29 தொகுதிகளில் வென்று திமுகவை ஓரம்கட்டி எதிர்கட்சி தலைவரானார் விஜயகாந்த். தலைவரானதும் கூட்டணி முறியவில்லை சட்டசபையில் ஏற்பட்ட வாக்குவாதங்களின்போது ஜெ முன்னிலையில் விஜயகாந்த் நாக்கை கடிச்சுக்கொண்டு அவர் கட்சிக்காரர்களை மிரட்டியதால் பகை ஆரம்பமானது, குடிகாரன் என்று அவ சொல்ல, இவதான் எனக்கு ஊத்தி கொடுத்தாவா என்று வியஜயகாந்த் சொல்ல பெரும் மோதல் வெடிக்க சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விஜயகாந்த் கட்சி சந்திரகுமார், அருண்பாண்டியன் உட்பட்ட எம் எல் ஏக்கள் ஜெயை தனிப்பட்ட ரீதியில் சந்தித்து ஒரு கட்டத்தில் கட்சியிலிருந்து பிரிந்து சென்று விஜயகாந்த் கட்சியை பலவீன படுத்தினார்கள், பின்னாட்களில் திமுகவில் சேர்ந்து பதவியும் பெற்றார்கள் அது ஒருபக்கமிருக்க, நான் சீமான் விஷயத்தில் இதை குறிப்பிட்டதுக்கு காரணம், முதலில் சட்டசபையில் ஒருசில உறுப்பினர்களையாவது கொண்டிருந்தாலே கட்சியின் பேச்சுக்கள் மாநிலத்தில் சபையேறும், எப்போதும் எந்த அங்கீகாரமும் பெறாமல் மேடைக்கு மேடையும், பத்திரிகையாளர் முன்னாடியும் எதிர்ப்பு விமர்சனம் பண்ணி ஏதும் ஆகபோவதில்லை, அதனால் முதலில் அங்கீகாரத்துக்காக சீமான் கொஞ்சம் சிந்தித்து செயற்படலாம் என்பதே.
  22. நீங்கள் குறிப்பிடுவது புலிகளை என்றிருந்தால்.... பேச்சு பேச்சு என்று அழைத்து சென்று சர்வதேச நாடுகள் முன்னிலையில் புலிகளுடன் மேசைக்கு வந்து தனக்கிருக்கும் சர்வதேச ஆதரவை வைத்து புலிகளின் ஆயுத களைவையே முதலில் முன்னிறுத்தியும், மறுபக்கம் மறைவில் புலிகளின் சர்வதேச வலைபின்னலையும், ஆயுத கடத்தலையும் நிதி சேகரிப்பையும் முடக்கும் கைங்கரியங்களிலும், புலிகளை இரண்டாய் பிரிக்கும் ஒரு பொறியை வைத்தது இலங்கை அரசாங்கம், அதாவது உயிருக்கும்போதே உள்ளுக்குள் கைவிட்டு குடல்தொகுதியையே வெளியே பிடுங்கி எடுக்கும் நடவடிக்கை அது. அதிலிருந்து ஒவ்வொருமுறையும் விலகி சென்றார்கள் புலிகள் அதுவே உங்கள் கண்ணில் சர்வதேசத்தை புறக்கணித்ததாய் தோன்றியிருக்கலாம். ஆனால் புலிகளை நேசித்த மக்களுக்கு அன்றும் இன்றும் அது தவறானதாக இல்லை. அது தவறென்றால் முள்ளிவாய்க்காலில் இறுதிநாள்வரை நின்ற மக்களும் போராளிகளு,உறவுகளை இழந்த எம் பல லட்சம் மக்களும் ம் இன்றுவரை எம் தலைமை எமக்கு செய்தது தவறென்று சொன்னதில்லை, சொல்லும் ஒருசிலர் யாரென்பது யாவரும் அறிந்தவர்களே. முள்ளிவாய்க்கால் முடிவென்பது தமிழர் மட்டுமல்ல சிங்களவர்களும்,சிங்களவர்களுக்கு ஒத்தூதிய டக்ளஸ்,கருணா,ஆனந்தசங்கரி உட்பட அனைவருமே எதிர்பார்த்திராதது. கடைசிவரை சிங்களவன் எம்மை வெல்லமுடியாது என்று நாம் நம்பினோம், கடைசிவரை சிங்களவனுடன் ஒட்டியிருந்து வண்டி ஓட்டிவிடலாம் என்று அவர்கள் நம்பினார்கள், இறுதியில் இருபகுதி நம்பிக்கையும் தோற்றுபோனது, அவர்களின் நம்பிக்கையில் ஈனம் இருந்தது, எம் நம்பிக்கையில் மானம் இருந்தது அவ்வளவுதான் வித்தியாசம். நாம் மொக்குதனமாய் தோத்தவர்களல்ல, இனவிடுதலைக்காய் முயன்று பார்த்து தோத்தவர்கள், முயற்சி செய்து தோற்பது பாவமும் அல்ல கேவலமும் அல்ல.
  23. எந்த தலைப்பில் இணைப்பதென்று தெரியாது இந்த பகுதியில் இணைக்கிறேன் அதிவேகமுறையில் பயன் தரகூடிய பதிய முறைகள் என்று கரட், கற்றாழை, வாழைப்பழம், மஞ்சள்,உருளைகிழங்கு ஆகியவற்றை பயன்படுத்தி ... எலுமிச்சை, மா, கொய்யா, பப்பாசி போன்றவைபற்றி காணொலி இட்டிருக்கிறார்கள், இவை முழு சாத்தியமா என்பதற்கான ஆதாரங்களில்லை.இருந்தாலும் தகவலுக்காக பகிர்கிறேன் பெரும்பாலும் தேங்காய்நார் உரமே பதியத்திற்கு மிக சிறந்தது என்கிறார்கள். மா எலுமிச்சை அவகாடோ தக்காளி & கத்தரி ஒட்டுமுறை பப்பாசி கொய்யா
  24. ஒருகாலம் விஜயை வைத்து பகலவன் என்று ஒரு திரைப்படம் இயக்கும் முனைப்புவரை அது பின்னர் கைகூடாமல் போனாலும் சீமானும் விஜையும் நெருக்கமாக இருந்தார்கள். விஜய்யின் கட்சிமாநாடுக்கு ஓரிருவாரங்கள் முன்புவரை , அவரின் கட்சிக்கொடி, மாநாடு, அவருடனான கூட்டணி திட்டம்வரை, அனைத்துக்கும் ஆதரவாய் குரல் கொடுத்தார் சீமான் விஜய் என்ன பண்ணினாலும் என் தம்பி என்ன கொள்கை வைத்திருந்தாலும் என் தம்பி , என்னை எதிர்த்து வேலை செய்தாலும் என் தம்பி என்று விஜய் புகழ் பாடினார் சீமான், என்ன பண்ணினாலும் அவரை ஆதரிப்பேன் என்றார் சீமான் மாநாடு முடிந்ததும் அப்படியே எதிர்மறையாகி விஜய்யை திட்டி தீர்க்கிறார். ஒருவேளை கூட்டணிக்கு விஜய் மறுத்தாரோ தெரியவில்லை. சீமான். எதுக்கெடுத்தாலும் எதிர்ப்பு அரசியல் விமர்சனம் செய்வது அரசியல் சாணக்கியமல்ல. விஜயகாந்த் பின்னாளில் தன்னுடைய பரம எதிரியாக கருதிய ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்ந்து தேர்தலை சந்தித்திருக்காவிட்டால் எதிர்கட்சி தலைவர் என்ற அந்தஸ்துவரை பல தொகுதிகளில் வென்றிருக்க முடியாது, கட்சிக்கு பெரும் அடித்தளமும் இட்டிருக்க முடியாது. பின்னர் வைக்கோவின் பேச்சைகேட்டு முதல்வர் ஆசையில் பிரிந்துபோய் பின்னாளில் கட்சியில் இருந்தவர்களெல்லாம் கழண்டுபோக கட்சி தேய்ந்துபோனது. காலத்தின் தேவையறிந்து நட்பு வளர்ப்பதே கட்சிபணிகளுக்கு அழகு. விஜய்கட்சி அமைக்கும்வரை சீமான் தமிழக அரசியலில் நான்காம் இடத்திலிருந்தார், விஜய்யின் வருகையின் பின்னர் ஐந்தாமிடத்துக்கு போவார், இதுவரை எந்த தொகுதியிலும் வென்றிராத நாம் தமிழர் கட்சி எப்போபாரு எதிர்மறை அரசியல் செய்து எதுவும் ஆகபோவதில்லை, முதலில் எமக்கென்றொரு அடையாளத்தை நிரூபிக்க உறுதியாக சட்டசபையில் பதிக்காதவரை எந்த ஒரு அங்கீகாரமும் தேர்தல் ஆணையத்தில் கிடைக்கபோவதில்லை, காலத்தின் தேவை கருதி விஜய்யுடன் இணக்க அரசியல் செய்வதே சிறப்பு. எதிரிகள் மலிந்துபோனால் தமது பலத்தை நிரூபிக்க தவறிய கட்சிகள் என்று சொல்லி கட்சிக்கான அங்கீகாரம்கூட இல்லாமல் போகலாம். இது அவர்கள் நாட்டு அரசியல், இருந்தாலும் இனத்தாலும் மொழியாலும் ஒன்றென்பதால் நாமும் மனதுக்கெட்டியதை நமக்குள் பேசலாம் தப்பில்லை.
  25. அதைதான் முன்னெச்சரிக்கையாக ஆன்மீக வழிபாடு சம்பந்தமான விளக்கங்களை ஏற்பதும் மறுப்பதும் அவரவர் நம்பிக்கையை பொறுத்த விஷயம் என்று என்னை சுற்றி நானே சென்றி போட்டேன். கிருபனின் கருத்து கிருபனின் நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயம் என்று பெருமையோடு ஏற்றுக்கொள்வேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.