Jump to content

valavan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1536
  • Joined

  • Days Won

    16

Everything posted by valavan

  1. மனது வைத்து எந்த தேர்தல் கட்சிகளிலும் துளிகூட நாட்டமில்லை. தமிழ்சிறியின் அழைப்புக்காகவும் கோஷானின் கருத்துக்கணிப்புக்காகவும் மதிப்பு கொடுத்து ஒரு வாக்கை தட்டிவிடலாம் என்றிருக்கிறேன். இந்த வாக்களிப்பு தெரிவில் தேர்தலை புறக்கணிக்கிறோம் அல்லது இந்த தேர்தலில் வாக்களிக்க விரும்பவில்லை என்றொரு தெரிவை ஏன் நீங்கள் வைக்கவில்லை கோஷான்? ஏனெனில் எந்த தேர்தலிலும் அந்த முடிவை எடுக்கும் கணிசமான பிரிவினர் உண்டு.
  2. ஆம் ஈழப்பிரியன் அண்ணா, அதிலும் நம்மவர் படத்தில் ஒரு நடிப்பு நடிச்சிருப்பார், சிவாஜியையே தூக்கி சாப்பிடும் நடிப்பு. பல பத்து ஆண்டுகள் திரையில் ஜீவனாகவே வாழ்ந்த அந்த மகா கலைஞனுக்கு நம்மவருக்கு மாத்திரமே ஒரேயொரு தேசிய விருது கிடைத்தது அதுவும் துணை நடிகருக்காக.
  3. ஆம் ரசோ, அதுபோல் அசைக்கமுடியாத உச்சத்தில் இருக்கவேண்டியவர்கள், குடியாலும் பவுடராலும் தம் வாழ்வை கெடுத்துக்கொண்டவர்கள் என்று நான் இன்றும் நினைப்பது இரண்டுபேர் ஒன்று ரகுவரன்: ஹொலிவூட் தரம் என்று சொல்லி சொல்லி படம் எடுப்பார்கள் பின்பு பார்த்தால் கோமாளிதனமாக இருக்கும், ஆனால் தமிழ்சினிமாவில் எந்தவித கோமாளிதனமான நடிப்புமின்றி ஹொலிவூட் தரத்தில் இருந்த ஒரேயொரு நடிகன் ரகுவரன். இரண்டு கார்த்திக். படத்துக்கு படம் எந்தவித கெட்டப்பும் மாத்திக்கொள்ளாமல் எல்லோராலும் விரும்பப்பட்ட பன்முக கலைஞன் . கார்த்திக் ரஜனி படங்களுக்கு மட்டுமே நகைச்சுவைக்கென்று தனியே ஆள் தேவையில்லை அவர்களே ஹீரோவாகவும் நகைச்சுவை நடிகர்களாகவும் மனசை அள்ளுவார்கள். அதேபோல் தமிழ்சினிமாவால் இன்னும் முழுசாக பயன்படுத்தப்படாத கலைஞர்கள் இருவர் என்று எண்ணிக்கொள்வதுண்டு. ஒன்று ராஜ்கிரண் இரண்டு எம்.எஸ்.பாஸ்கர் ராஜ்கிரணுக்கு ஒரு தவமாய் தவமிருந்தும்,எம்.எஸ்.பாஸ்கருக்கு ஒரு மொழியும் இன்னும் இவர்களிடம் நிறைய இருக்கு என்று எண்ண தோன்றும்படங்கள். என்ன இருந்தாலும் நாகேஷ் நடிப்பு நம்ம தமிழ்கட்சிகள் ரேஞ்சுக்கு வராது சுவியண்ணா 😏
  4. கமல் அடிக்கடி தனது பேட்டிகளில் நாகேஷை புகழோ புகழ் என்று புகழ்ந்து தள்ளுவார், அது கொஞ்சம் மிகையோ என்று தோன்றுமளவிற்கு ஐயம் வரும், ஒரு கதிரையில் இருந்தபடி கணப்பொழுதில் எம்மையறியாமல் எங்கே அழுதுவிடுவோமோ என்ற அளவில் அச்சுறுத்தி அவரால் நெகிழ வைக்க முடியும் என்பதற்கு சாட்சியாக அவர் நடிப்பு இந்த காணொலியில் இருக்கிறது
  5. நான் கேட்டது அதுவல்ல புத்தன், இந்த தேர்தலில் போட்டியிடும் அருட்தந்தை சொல்லும் எம் தேச விடுதலைக்காக தீரமுடன் செயல்படுவோர்க்கு வாக்களித்து தேசம் காக்குமாறும் வேண்டுகோள் விடுகின்றோம் எங்கிறாரே அவர் வாக்களிக்க சொல்லும் எம் தேச விடுதலைக்காக தீரமுடன் போட்டியிடும் அந்த அமைப்பு எது என்று மக்களுக்கு அடையாளம் காட்ட ஏன் தயங்குகிறார். சரி நீங்களாவது சொல்லுங்கள் புத்தன், இந்த தேர்தலில் எம் தேச விடுதலைக்காக தீரமுடன் செயல்படும் மக்கள் வாக்களிக்ககூடிய அந்த அமைப்பு/கட்சி எது?
  6. ஏறக்குறைய 100% தமிழர்கள் கொண்ட யாழ்ப்பாணத்தில் சிங்களவன் தெற்கிலிருந்து நேரடியாக வந்து பிரச்சாரம் செய்கிறான். தமிழர் தேசியம் விடுதலை என்பவர்கள் யாழ்ப்பாணத்துக்குள் இருந்துகொண்டே அறிக்கை போர் நடத்துகிறார்கள், இதன் அர்த்தம் நேரடியாக மக்கள்முன் போய் நிற்கமுடியாத நிலை என்று எடுத்துக்கொள்ளலாமா? எம் தேச விடுதலைக்காக தீரமுடன் இப்போது அங்கு செயல்படுவோர் யார் எந்த அமைப்பு என்று உரக்க சொல்வதில் அருட் தந்தைக்கு என்ன தயக்கம் இருக்கிறது? கஞ்சிக்கு வழி இல்லாவிட்டாலும் அண்ணளவாக 96% எழுத படிக்க தெரிந்த மக்களை கொண்டது யாழ்மாவட்டம். அவர்களை எழுத்துக்களால் இலகுவாக ஏமாற்ற முடியுமா குருவானவரே? இதுக்குள்ள மாவீரர்களை வேற இழுத்து விடுறீங்க
  7. உருத்திரகுமார் மிக நீண்டகாலமாக எம் தாயகபோராட்ட அமைப்பின் ஓர் அங்கமாக இருந்து இன்று புலிகளின் நினைவாய் எஞ்சியிருக்கும் மிச்சங்களிலொன்று. எம் தாயக போராட்ட அமைப்புக்கு நெடுங்காலம் சட்டரீதியாக தன் போராட்ட பங்களிப்பய் செய்த நன்றிக்குரிய போராளி. ஆளுமைமிக்க நீங்கள் இந்த நாடுகடந்த அரசை கலைத்துவிட்டு, புலம்பெயர் தேச எமதுமக்கள் அமைப்புக்கள் தொழிலதிபர்களை இணைத்து எம் தாயக மக்களுக்கான அரசியல் பொருளாதார கல்வி ஆலோசனை நடவடிக்கைகளில் மறைமுக சக்தியாய் ஈடுபடலாம். நாடுகடந்த எம்பிக்கள் என்று இருந்தார்கள், அவர்களில் ஒரு சிலர் என்ன செய்கிறார்கள் என்று நன்கறிதிருக்கிறேன். கியூபா போய் மூக்குமுட்ட குடித்து அழகிகளுடன் ஹில்மா பண்ணி கழுதையில் ஏறி சவாரி போன ஒருவரையும் நானறிவேன்.. இவர்கள் தராதரத்திற்கும் புலிகள் அமைப்பின் மறுவடிவ உங்கள் அமைப்புக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா? தற்போதைய தாயக நிலவரம் பார்த்தால் கண்முன்னே கூட்டம் கூட்டமாக எம் மக்கள் மீண்டுமொருமுறை சிங்களவனிடம் சரணடவது தெரிகிறது. முள்ளிவாய்க்கால் முடிவில் சரணடந்தது ஆபத்தானதல்ல, ஏனென்றால் அது விரும்பாமலே சரணடைந்தார்கள், இன்று விரும்பி சரணடைகிறார்கள் எமது பிரதிநிதிகள் எனப்படுகிறவர்களிடம் தொடர்ந்து ஏமாந்து போனதால் தமிழருக்கென்றொரு தனித்துவபகுதி அரசியல் என்பதையெல்லாம் தள்ளி வைக்க தயாராகிவிட்டார்களென்பது பொருள். இலங்கை தமிழ்மக்கள் தமிழகம் போன்று சினிமா செம்பு குத்துவிளக்கு குவாட்டர் பிரியாணிக்கான வாக்காளர்களல்ல, அடுத்துவரும் ஐந்து வருடங்களில் அநுர தமிழர்கட்சிகள்போலவே ஏமாற்றிக்கொண்டிருந்தால் அடுத்த தேர்தலில் மறுபடியும் தமிழர் தலைமைகளை நோக்கி வருவார்கள், அப்போதிருக்கபோகும் தமிழ் தலைமைகள் இப்போதிருந்தவர்களாக இருக்க கூடாது என்பதே அவா. அதற்கான எத்தனங்களின் பின்னால் மறைமுகமாக உங்களின் பங்களிப்பு இருக்க வேண்டுமென்பதே அபிப்பிராயம்.
  8. அவர் தற்போது யாழ் மூளாயில்தான் பணியாற்றுகிறார். 13:25 இல் இருந்து மருத்துவரின் பேட்டி இடம்பெறுகிறது வடபகுதியில் அநுரவின் வேட்பாளர்கள் யாரென்றே யாழில் உள்ள பலருக்கே தெரியவில்லை அதனை செய்த பெருமை யூடியூப் தளங்களுக்கே சேரும். அவர்களை பொறுத்தவரை அநுர என்ற பெயரே தெரிந்திருக்கிறது. அநுர வடக்கில் இருவரிகளில் தனது அரசியல் கொள்கையை வைத்துள்ளார் அது: அடிப்படை பிரச்சனைகளை தீர்த்தால் அரசியல் கோஷங்கள் தானாக அடங்கிவிடும். என்பதே, யாழில் கருத்து தெரிவிக்கும் மக்களில் பலரின் கருத்தும் அதுவாகவே இருக்கிறது, யாழில் சிங்கள அரசியல்கட்சிக்கான ஆதரவு அலை வீசுகின்றது என்பதைவிட்டு தமிழ் அரசியல்கட்சிகளுக்கெதிரான வெறுப்பே களை கட்டுகிறது என்று சொல்லலாம். அரசின் வெற்றி வடபகுதியில் உறுதியானால் தமிழர் அரசியல் அபிலாஷைகளுக்கு சாவுமணிதான், அதற்கு முழுகாரணமுமே தமிழர்கள் முதுகில் இதுவரைகாலம் குதிரை ஓட்ட கால இழுத்தடிப்பு செய்த தமிழ்கட்சிகள்தான்.
  9. எது யாயினி என்னோடதா? நானெல்லாம் வைச்சா ஒரு நக காளான்கூட முளைக்காது அவ்வளவு ராசி. அந்த யூடியூப் தளக்காரர் ஏராளமான பதிய முறை மற்றும் ஒட்டுமுறையை தரவேற்றியிருக்கிறார். பிரமிப்பாகவும் அனைத்தையும் பார்வையிடவேண்டுமென்ற ஆவலையும் தூண்டியது. அமெரிக்காவிலா யசோதரன்? ஆச்சரியமாக உள்ளது.
  10. எப்படியாவது அநுர ஆட்சியில் இடம்பிடித்துவிட முடியாதா என்று அலைந்தவர்கள் இரண்டுபேர் ஒன்று சுமந்து இரண்டு டக்ளஸ் உங்களால் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு பதவி இல்லையென்று அநுர சொல்லிட்டாரு, சுமந்துக்கு புரியும். அடுத்து இன்று யாழ்ப்பாணத்தில் நடந்த அநுர கூட்டத்தில் இனிமேல் நீங்கள் மணல் லொறிகளுக்கு காசு கொடுக்க தேவையில்லை என்று சொல்லிவிட்டு, உள்ளர்த்தம் புரிகிறதா எண்டும் கேட்டிருக்கிறார் அதன் அர்த்தம் யாருக்கு புரியாவிட்டாலும் அண்ணன் டக்ளசுக்கு புரியும். யாழில் மக்களிடம் என்ன மனநிலை நிலவுகிறது என்பதை துல்லியமாக அறிந்து வைத்திருக்கிறது அநுர குரூப்
  11. எனக்கு மிகவும்பிடித்த குணசித்திர & நகைச்சுவை நடிகர் டெல்லிகணேஷ். மரணம் எவருக்கும் சலுகை தரபோவதில்லை. காலங்கள் ஓடினால் காலமாக்கிவிடும் ஐயாவுக்கு அஞ்சலிகள்.
  12. நான் கபிதன்கிட்ட மாட்ட மாட்டேனே satan, இனி இந்த பக்கம் வந்தாதானே, நீங்கள் எடுகோள் காட்டியதால் மட்டும் வந்தேன், ஆனால் கபிதன் சர்சைகளும் வரவேற்கதக்கது, ஒரு கருத்து களத்தை தொடர் இயங்கு நிலையில் வைத்திருப்பதற்கு அவர்களின் பங்களிப்பும் இன்றியமையாதது.
  13. விஜய் இப்போதுதான் அரசியலில் காலடி எடுத்து வைக்கிறார், தமிழக அரசியலில் 60 வீத வாக்கு வங்கி திராவிட கட்சிகளிடமே உள்ளன, விஜய் எனும் நடிகனுக்கு அனைத்து கட்சிகளிலுமே ரசிகர்கள் உண்டு, ஆனால் அவர்களெல்லாம் விஜய் எனும் அரசியல்வாதிக்கு ரசிகனாக இருக்கபோவதில்லை. எடுத்த எடுப்பில் திராவிடத்தை தூக்கியெறிந்து பேசினால், நிச்சயமாக திராவிட கட்சிகளில் இருக்கும் அவர் ரசிகர்கள் அதை ரசிக்கபோவதில்லை. சீமான் நிலை அவ்வாறு இல்லை அதனால் அவர் எதையும் உணர்ச்சிவசப்பட்டு பேசலாம், ஒரு கட்சி வளர்ச்சி என்பது எத்தனை கட்டங்களை கொண்டது ஆரம்பத்தில் எத்தனையோ தில்லாலங்கடி செய்துதான் மேலே வருவார்கள் விஜய்யும் அதற்கு விதிவிலக்கல்ல, அவர் ஆரம்பத்திலேயே தன்னோட வாக்கு வங்கியை சிதைக்காமலிருக்கும் பணியை கச்சிதமாய் செய்கிறார் சீமான் வழமைபோல் புறசூழல் எதுபற்றியும் யோசிக்காமல் கொந்தளிக்கிறார். பகுத்தறிவு பெரியாரிசம் பேசிய திமுககூட ஒருகாலம் பாஜகவுடன் கூட்டு வைத்தது என்பது அரசியலின் தேவை கருதிய செயற்பாடுகள் என்பது சீமானுக்கு தெரியாமலா இருக்கும், அது என்னமோ அவர்கள் விருப்பம் Island, முயன்றுபார்த்து பேரழிவை சந்தித்தோம் என்பதை நான் கூற வேண்டியதில்லை, முள்ளிவாய்க்கால் நினைவின்போதும், மாவீரர்நாட்களின்போதும் தாயகத்தில்கூட புலிகளை எந்த குற்றம் சொல்லாமல் நினைவுகூரும் லட்சக்கணக்கான எம் மக்களே அதற்கு சாட்சி. இன்றும்கூட ''அவர்கள் இருந்திருந்தால் இதுவெல்லாம் நடக்குமா'' என்று மனசுக்குள் புழுங்கும் எம் மக்களே சாட்சி.
  14. நீங்கள் சொல்லவருவது உண்மையாகவே எனக்கு புரியவில்லை கோஷான்,2011 சட்டமன்ற தேர்தலில் ஜெயுடன் கூட்டு சேர்ந்தபோது ஜெ ஒதுக்கிய 41 தொகுதிகளில் 29 தொகுதிகளில் வென்று திமுகவை ஓரம்கட்டி எதிர்கட்சி தலைவரானார் விஜயகாந்த். தலைவரானதும் கூட்டணி முறியவில்லை சட்டசபையில் ஏற்பட்ட வாக்குவாதங்களின்போது ஜெ முன்னிலையில் விஜயகாந்த் நாக்கை கடிச்சுக்கொண்டு அவர் கட்சிக்காரர்களை மிரட்டியதால் பகை ஆரம்பமானது, குடிகாரன் என்று அவ சொல்ல, இவதான் எனக்கு ஊத்தி கொடுத்தாவா என்று வியஜயகாந்த் சொல்ல பெரும் மோதல் வெடிக்க சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விஜயகாந்த் கட்சி சந்திரகுமார், அருண்பாண்டியன் உட்பட்ட எம் எல் ஏக்கள் ஜெயை தனிப்பட்ட ரீதியில் சந்தித்து ஒரு கட்டத்தில் கட்சியிலிருந்து பிரிந்து சென்று விஜயகாந்த் கட்சியை பலவீன படுத்தினார்கள், பின்னாட்களில் திமுகவில் சேர்ந்து பதவியும் பெற்றார்கள் அது ஒருபக்கமிருக்க, நான் சீமான் விஷயத்தில் இதை குறிப்பிட்டதுக்கு காரணம், முதலில் சட்டசபையில் ஒருசில உறுப்பினர்களையாவது கொண்டிருந்தாலே கட்சியின் பேச்சுக்கள் மாநிலத்தில் சபையேறும், எப்போதும் எந்த அங்கீகாரமும் பெறாமல் மேடைக்கு மேடையும், பத்திரிகையாளர் முன்னாடியும் எதிர்ப்பு விமர்சனம் பண்ணி ஏதும் ஆகபோவதில்லை, அதனால் முதலில் அங்கீகாரத்துக்காக சீமான் கொஞ்சம் சிந்தித்து செயற்படலாம் என்பதே.
  15. நீங்கள் குறிப்பிடுவது புலிகளை என்றிருந்தால்.... பேச்சு பேச்சு என்று அழைத்து சென்று சர்வதேச நாடுகள் முன்னிலையில் புலிகளுடன் மேசைக்கு வந்து தனக்கிருக்கும் சர்வதேச ஆதரவை வைத்து புலிகளின் ஆயுத களைவையே முதலில் முன்னிறுத்தியும், மறுபக்கம் மறைவில் புலிகளின் சர்வதேச வலைபின்னலையும், ஆயுத கடத்தலையும் நிதி சேகரிப்பையும் முடக்கும் கைங்கரியங்களிலும், புலிகளை இரண்டாய் பிரிக்கும் ஒரு பொறியை வைத்தது இலங்கை அரசாங்கம், அதாவது உயிருக்கும்போதே உள்ளுக்குள் கைவிட்டு குடல்தொகுதியையே வெளியே பிடுங்கி எடுக்கும் நடவடிக்கை அது. அதிலிருந்து ஒவ்வொருமுறையும் விலகி சென்றார்கள் புலிகள் அதுவே உங்கள் கண்ணில் சர்வதேசத்தை புறக்கணித்ததாய் தோன்றியிருக்கலாம். ஆனால் புலிகளை நேசித்த மக்களுக்கு அன்றும் இன்றும் அது தவறானதாக இல்லை. அது தவறென்றால் முள்ளிவாய்க்காலில் இறுதிநாள்வரை நின்ற மக்களும் போராளிகளு,உறவுகளை இழந்த எம் பல லட்சம் மக்களும் ம் இன்றுவரை எம் தலைமை எமக்கு செய்தது தவறென்று சொன்னதில்லை, சொல்லும் ஒருசிலர் யாரென்பது யாவரும் அறிந்தவர்களே. முள்ளிவாய்க்கால் முடிவென்பது தமிழர் மட்டுமல்ல சிங்களவர்களும்,சிங்களவர்களுக்கு ஒத்தூதிய டக்ளஸ்,கருணா,ஆனந்தசங்கரி உட்பட அனைவருமே எதிர்பார்த்திராதது. கடைசிவரை சிங்களவன் எம்மை வெல்லமுடியாது என்று நாம் நம்பினோம், கடைசிவரை சிங்களவனுடன் ஒட்டியிருந்து வண்டி ஓட்டிவிடலாம் என்று அவர்கள் நம்பினார்கள், இறுதியில் இருபகுதி நம்பிக்கையும் தோற்றுபோனது, அவர்களின் நம்பிக்கையில் ஈனம் இருந்தது, எம் நம்பிக்கையில் மானம் இருந்தது அவ்வளவுதான் வித்தியாசம். நாம் மொக்குதனமாய் தோத்தவர்களல்ல, இனவிடுதலைக்காய் முயன்று பார்த்து தோத்தவர்கள், முயற்சி செய்து தோற்பது பாவமும் அல்ல கேவலமும் அல்ல.
  16. எந்த தலைப்பில் இணைப்பதென்று தெரியாது இந்த பகுதியில் இணைக்கிறேன் அதிவேகமுறையில் பயன் தரகூடிய பதிய முறைகள் என்று கரட், கற்றாழை, வாழைப்பழம், மஞ்சள்,உருளைகிழங்கு ஆகியவற்றை பயன்படுத்தி ... எலுமிச்சை, மா, கொய்யா, பப்பாசி போன்றவைபற்றி காணொலி இட்டிருக்கிறார்கள், இவை முழு சாத்தியமா என்பதற்கான ஆதாரங்களில்லை.இருந்தாலும் தகவலுக்காக பகிர்கிறேன் பெரும்பாலும் தேங்காய்நார் உரமே பதியத்திற்கு மிக சிறந்தது என்கிறார்கள். மா எலுமிச்சை அவகாடோ தக்காளி & கத்தரி ஒட்டுமுறை பப்பாசி கொய்யா
  17. ஒருகாலம் விஜயை வைத்து பகலவன் என்று ஒரு திரைப்படம் இயக்கும் முனைப்புவரை அது பின்னர் கைகூடாமல் போனாலும் சீமானும் விஜையும் நெருக்கமாக இருந்தார்கள். விஜய்யின் கட்சிமாநாடுக்கு ஓரிருவாரங்கள் முன்புவரை , அவரின் கட்சிக்கொடி, மாநாடு, அவருடனான கூட்டணி திட்டம்வரை, அனைத்துக்கும் ஆதரவாய் குரல் கொடுத்தார் சீமான் விஜய் என்ன பண்ணினாலும் என் தம்பி என்ன கொள்கை வைத்திருந்தாலும் என் தம்பி , என்னை எதிர்த்து வேலை செய்தாலும் என் தம்பி என்று விஜய் புகழ் பாடினார் சீமான், என்ன பண்ணினாலும் அவரை ஆதரிப்பேன் என்றார் சீமான் மாநாடு முடிந்ததும் அப்படியே எதிர்மறையாகி விஜய்யை திட்டி தீர்க்கிறார். ஒருவேளை கூட்டணிக்கு விஜய் மறுத்தாரோ தெரியவில்லை. சீமான். எதுக்கெடுத்தாலும் எதிர்ப்பு அரசியல் விமர்சனம் செய்வது அரசியல் சாணக்கியமல்ல. விஜயகாந்த் பின்னாளில் தன்னுடைய பரம எதிரியாக கருதிய ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்ந்து தேர்தலை சந்தித்திருக்காவிட்டால் எதிர்கட்சி தலைவர் என்ற அந்தஸ்துவரை பல தொகுதிகளில் வென்றிருக்க முடியாது, கட்சிக்கு பெரும் அடித்தளமும் இட்டிருக்க முடியாது. பின்னர் வைக்கோவின் பேச்சைகேட்டு முதல்வர் ஆசையில் பிரிந்துபோய் பின்னாளில் கட்சியில் இருந்தவர்களெல்லாம் கழண்டுபோக கட்சி தேய்ந்துபோனது. காலத்தின் தேவையறிந்து நட்பு வளர்ப்பதே கட்சிபணிகளுக்கு அழகு. விஜய்கட்சி அமைக்கும்வரை சீமான் தமிழக அரசியலில் நான்காம் இடத்திலிருந்தார், விஜய்யின் வருகையின் பின்னர் ஐந்தாமிடத்துக்கு போவார், இதுவரை எந்த தொகுதியிலும் வென்றிராத நாம் தமிழர் கட்சி எப்போபாரு எதிர்மறை அரசியல் செய்து எதுவும் ஆகபோவதில்லை, முதலில் எமக்கென்றொரு அடையாளத்தை நிரூபிக்க உறுதியாக சட்டசபையில் பதிக்காதவரை எந்த ஒரு அங்கீகாரமும் தேர்தல் ஆணையத்தில் கிடைக்கபோவதில்லை, காலத்தின் தேவை கருதி விஜய்யுடன் இணக்க அரசியல் செய்வதே சிறப்பு. எதிரிகள் மலிந்துபோனால் தமது பலத்தை நிரூபிக்க தவறிய கட்சிகள் என்று சொல்லி கட்சிக்கான அங்கீகாரம்கூட இல்லாமல் போகலாம். இது அவர்கள் நாட்டு அரசியல், இருந்தாலும் இனத்தாலும் மொழியாலும் ஒன்றென்பதால் நாமும் மனதுக்கெட்டியதை நமக்குள் பேசலாம் தப்பில்லை.
  18. அதைதான் முன்னெச்சரிக்கையாக ஆன்மீக வழிபாடு சம்பந்தமான விளக்கங்களை ஏற்பதும் மறுப்பதும் அவரவர் நம்பிக்கையை பொறுத்த விஷயம் என்று என்னை சுற்றி நானே சென்றி போட்டேன். கிருபனின் கருத்து கிருபனின் நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயம் என்று பெருமையோடு ஏற்றுக்கொள்வேன்.
  19. மேலங்கி அணியாமல் ஏன் செல்லவேண்டுமென்று கீழே உள்ள இணைப்பில் விளக்கம் தந்துள்ளார்கள், ஆன்மீக வழிபாடு சம்பந்தமான விளக்கங்களை ஏற்பதும் மறுப்பதும் அவரவர் நம்பிக்கையை பொறுத்த விஷயம். ===================================================== கோவிலுக்குள் சட்டை அணியாமல் ஏன் செல்ல வேண்டும்..?கோவிலுக்கு செல்வதால் உடல் ரீதியாக ஏற்படும் நல்ல மாற்றங்கள் என்ன..? கோயில் என்பது தெய்வத்தின் இருப்பிடம் மட்டுமில்லை. கோயில் என்பது விஞ்ஞானபூர்வமாக மனிதனுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல நன்மைகள் செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு கிளினிக் என்று சொல்லலாம் சாஸ்திரப்படி அமைக்கப்படும் கோயில்கள், பூமியின் காந்த அலைகள் அடர்த்தியாகப் பாயும் இடத்தில் அமைகின்றன. ஊர்க்கோடியிலோ, ஊர் நடுவிலோ, மலையுச்சியிலோ எங்காயினும் கோயிலுக்கென்று இடம் அந்தக் காலத்தில் அமைக்கப்பட்டது இந்த அடிப்படையில்தான்! இந்த உயர் காந்த அலைகள் (ஹை மேக்னடிக் வேவ்ஸ்) அடர்ந்திருக்கும் இடத்தின் மையப்பகுதியில் கர்ப்பக்கிருகம் (மூலஸ்தானம்) அமைக்கப்படுகிறது. அதனால்தான் கர்ப்பக்கிருகத்தில் மூல விக்கிரகத்தின் அடியில், யந்திரங்கள் பதித்தார்கள். சில உயரிய மந்திரங்கள் பொறிக்கப்பட்ட செப்புத்தகடுகளே யந்திரங்கள்! பூமியின் காந்த அலைகளை செப்புத்தகடுகள் உள்வாங்கி சுற்றுப்புறத்துக்கு அதைப் பாய்ச்சுகிறது. இந்த விஞ்ஞான அடிப்படையில்தான் மின்சாரத்தைக் கொண்டுசெல்ல செப்புக்கம்பிகளை உபயோகப்படுத்துகின்றனர். கர்ப்பக்கிருகத்தைப் பிரதட்சணமாக (க்ளாக்வைஸ்) சுற்றும் பக்தர்களின் உடலில், தானாகவே இந்த காந்த சக்தி மென்மையாகப் பாய்கிறது. அடிக்கடி கோயிலுக்கு வந்து பிரதட்சணம் செய்யச் செய்ய இந்த காந்த சக்தி உடலில் கணிசமாக ஏறுகிறது. இதனால் உடலில் பாஸிடிவ் எனர்ஜி உண்டாகிறது. இந்தச் சக்தி பூரணமாக பக்தர்களைச் சென்றடைவதற்காகவே, மூலஸ்தானம் மூன்று பக்கமும் பெரிய ஜன்னல்கள் இல்லாமல் அடைக்கப்படுகிறது. இதனால் கர்ப்பக்கிருகத்துக்கு வெளியில் நின்று தரிசிக்கும் பக்தர்களின் மேல் யந்திரத்தின் காந்த சக்தி முழுதாகப் பாய முடிகிறது. மூலஸ்தானத்தில் ஏற்றப்படும் விளக்குகள், உஷ்ண சக்தியையும் வெளிச்ச சக்தியையும் பாய்ச்சுகிறது. கோயிலில் ஒலிக்கும் மணிச் சத்தமும் பூஜை மந்திரச் சப்தங்களும் சவுண்ட் எனர்ஜி-யைத் தருகின்றன. பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு வழங்கப்படும் தீர்த்தத்தில் ஏலக்காய், துளசி, கிராம்பு போன்றவை கலக்கப்படுகின்றன. இந்தப் பண்டங்கள் எல்லாமே மனித ஆரோக்கியத்துக்கு உதவுவதால், தீர்த்தம் புனிதமானதாக மட்டுமில்லாமல் உடல் வளத்துக்கு உபயோகமானதாகவும் ஆகிறது. பெருமாள் கோயிலில் மஞ்சளும், குருவாயூரப்பன் கோயிலில் சந்தனமும், சிவன் கோயிலில் திருநீறும், பொதுவாகக் குங்குமமும் பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றன. இவை எல்லாமே மருத்துவ குணமுடைய வஸ்துக்களை உள்ளடக்கியது. பெருமாள் கோயிலில் தீர்த்தத்தில் கலக்கப்படும் பச்சைக் கற்பூரம், வாசனையாகவும் வித்தியாசமான சுவையுடையதாகவும் இருக்கும். உடலில் ரத்தக்காயம் ஏற்பட்டால், நாம் உடனே காயம் செப்டிக் ஆகாமல் இருக்க தடவுகிறோமே பென்சாயின் ! அது வேறொன்றுமில்லை, பச்சைக் கற்பூரக் கலவையில் உருவாவதுதான். கர்ப்பக்கிருகத்தில் நம்மேல் பாயக்கூடிய பாஸிடிவ் காந்த அலைகளைப் பெற்றுக் கொள்வதற்காகத்தான் பல கோயில்களில் ஆண்கள் சட்டை அணியாமல் வர வேண்டும் என்று சொல்கிறார்கள். பொதுவாகப் பெண்கள் அணியும் தங்க நகைகளில் கலந்திருக்கும் செம்பின் மூலம் அவர்களுக்கும் இதே எனர்ஜி பாய்கிறது. கோயில் பிராகாரத்தை 11 முறை, 108 முறை என்று பிரதட்சணம் செய்யும்போது, நமது உடலின் கொழுப்பு தானாக எரிந்து ஆரோக்கியம் கூடுகிறது. அந்தக் காலத்தில் கோயிலுக்குச் சென்று பிரதட்சணம் செய்ததாலேயே சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் தவிர்க்கப்பட்டன. இதோடு வேத கோஷமும், பிரார்த்தனை சுலோகங்களும் சொல்லும்போது, உடலுடன் சேர்ந்து உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகிறது. நம்முடைய முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல என்பதை நாம் உணர வேண்டும் https://www.facebook.com/sunderesasharma/videos/கோவிலுக்குள்-சட்டை-அணியாமல்-ஏன்-செல்ல-வேண்டும்கோவிலுக்கு-செல்வதால்-உடல்-ரீதியாக-/1964023683853672/
  20. உலகில் ஒவ்வொரு இனத்துக்கும் உடைகள், உணவு பழக்கங்கள், மதங்கள்,வழிபாட்டு முறைகள், கலாச்சாரங்கள் உண்டு. அடுத்தவனையும் சட்டத்தையும் இயல்பு வாழ்க்கையையும் பாதிக்காதவரை அவரவர் வாழ்க்கைமுறையில் வாழ்ந்திட்டு போகலாம், நமக்கு அது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றாலோ விமர்சனத்துக்குரியது ஒன்று என்றாலோ அதிலிருந்து விலகியிருக்கலாம் யாரும் எதுவும் சொல்ல போவதில்லை. சீனாக்காரனிடம்போய் நீங்கள் எதுக்கு பாம்பு திங்கிறீர்கள் என்றோ, இஸ்லாமியர்களிடம்போய் எதுக்கு சுன்னத் பண்ணுகிறீர்களென்றோ யாரும் கேட்கமுடியாது கேட்பதை பிற மதங்களை பின்பற்றும் அரசுகள்கூட சட்டப்படி சரியென்று அங்கீகரிக்காது.
  21. இது மிக பெரும் ஒன்றிணைந்த கல்வி சமூகத்தை கட்டியமைக்கும் திட்டம் , எவ்வளவு தூரம் சாத்தியமாக்குவீர்களோ தெரியாது. ஆனால் முடிந்தவரை இப்போதிலிருந்தே படிப்படியாக ஆங்கில கல்வி முறைமையை இலங்கை முழுவதும் அறிமுகபடுத்துங்கள், அவரவர் தாய்மொழி கட்டாய பாடமாக இருக்கட்டும். சிங்களவனுக்கும் தமிழனுக்கும் பொதுவான ஒரு மொழி இருந்தால் இளம் தலைமுறையாவது மேற்குலக சிறுவர்கள்போல் தமக்குள்ளேயே ஒரு நட்புறவை உருவாக்கி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாக்குக்காக வன்மம் வளர்க்கும் அரசியலையும் அரசியல் வாதிகளையும் ஓரளவாவது ஓரம் கட்டலாம். ஆக குறைந்தது உயர்தரம்வரை படித்தால் கூட ஆங்கில அறிவின்மூலம் இணையவழி கல்வியின் மூலமாகவாவது சர்வதேச கல்விதரத்தை அடையலாம் வேலை வாய்ப்புகள் பெறலாம். சொந்த மொழியில் பாடத்திட்டங்களை கற்றுவிட்டு பல்கலைகழகம் கிடைக்கவில்லையென்றால் அப்பன் தொழிலையோ அல்லது அகப்பட்ட தொழிலையோ செய்துகொண்டு குண்டு சட்டிக்குள் குதிரை ஓடியபடி மறுபடியும் படிக்காத ஒரு சமூகம் போலவே வறுமையுடன் இளைஞர்களின் எதிர்காலம் தொடரும். இன்று மேற்குலகம் முழுவதும் இந்தியர்கள் பரந்து விரிவதற்கு அவர்களின் ஆங்கிலவழி கல்வியே 70% மான காரணம் மீதி அவர்கள் தேர்ந்தெடுக்கும் பாடத்திட்டங்கள்.
  22. இல்லை நுணாவிலான் வீடியோவில் 4:40 லிருந்து, போதியளவு பொலிஸ் இல்லையாம் மூன்றே மூன்று கார்கள் மட்டும்தான் நின்றிருக்கின்றன, இல்லையென்றால் எல்லோரையுமே விலங்கடிச்சு ஏத்தியிருப்பான். இதில் உலகின் பெரும் நகரமொன்றின் பாதுகாப்பு குறைபாடும் வெளிச்சத்துக்கு வந்திருக்கு. நான் நினைக்கிறேன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை சத்தமில்லாமல் அடையாளம் காணும் வேலையில் பொலிஸ் இப்போது இறங்கியிருக்கலாம். அப்படியே விடமாட்டாங்கள். குமாரசாமியண்ணை, ஜேர்மனி மட்டுமல்ல ஐரோப்பா அமெரிக்கா கனடா அவுஸ்திரேலியா உட்பட உலகின் அனைத்து பகுதிகளிலும் வேலைவாய்ப்பு விசா, மாணவர்கள் விசா ,அகதி அந்தஸ்து கோருவோர் அனைவருக்கும் பெரும் நெருக்கடி நெருங்கி வந்துவிட்டது, இனிவரும் காலங்கள் இவர்களுக்கு அவ்வளவு இலகுவானதாக இருக்காது என்றே நினைக்கிறேன்.
  23. குற்றம் புரியாதவர்களை பொலிஸ் ஏன் தேடி வரபோறான் கோஷான், சுவிசிலும் பொலிஸ் அடியில் பிரபலமான அரோ, செங்காலன் என்று ஒரு சில கன்ரோனுகள் உண்டு அடி வெளியில் தெரியாது. பிரான்சில் பொலிஸ் போகமுடியாத அடையார் கறுவல் ஏரியாவுகளுமுண்டு என்று சொல்வார்கள். அடி பின்ன்னி எடுப்பதில் GIGN எனப்படும் பிரெஞ்ச் பொலிஸ் பிரிவு பெயர் போனது என்றும் சொல்வார்கள், எதுக்கும் GIGN கிட்ட அந்தகாலத்தில் தவணை முறையில் கேட்டு வாங்கின நம்ம @விசுகு அண்ணா வந்து விளக்கம் தருவார் என்று நம்புகிறேன், சும்மா கலாய்க்கிறேன் டென்ஷன் ஆகுறாரோ தெரியல. இஸ்லாமியர்களுக்கு எதிராக உலகம் முழுவதும் வெறுப்புணர்வு தோன்றியதோ அதேபோல இந்தியர்களுக்கெதிராக மேற்குலகில் தோன்றிக்கொண்டிருக்கிறது. இந்த இரு சமூகமும் ஓரிடத்தில் தமது எண்ணிக்கை அதிகமானால் புறசூழல்பற்றி எதுவும் சிந்திக்காது ஒரு நாட்டிற்குள் தமக்கென்று ஒரு தனிநாடு உருவாக்குவார்கள். அமெரிக்கா கனடாவில் எப்போதோ தோன்றிவிட்டது. இந்தியர்கள் பெரும்பான்மையான இடத்தில் இஸ்லாமியர்களைபோலவே அவர்கள் ஆட்களை தவிர வேறு எவருக்கும் வேலை கொடுக்கமாட்டார்கள் பகுதிநேர வேலைக்குகூட எடுக்க மாட்டார்கள், அதனால் வெள்ளைக்காரர்கள்கூட வேலை வாய்ப்பு பெறமுடியாமல் நடுத்தெருவுக்கு வந்துவிட்டதுதான் சோகம். இந்த சம்பவங்கள் மட்டுமல்ல இந்தியாவில் புளூ பிலிமைபார்த்துவிட்டு இங்கு வந்து வெள்ளைக்காரிகள் என்றால் எல்லோருமே படுக்கைக்கு உரியவர்கள் என்பதுபோல் நடந்து கொள்வது அவர்களை பார்த்து ஹிந்தி பாட்டு பாடுவது, சில வருடங்களின் முன்பு பாதாள ரயிலில்பயணம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது, எதிரே ஒரு வெள்ளைக்காரி அமைதியாக புத்தகம் படித்துக்கொண்டிருந்தார் பார்த்தாலே ஏதோபெரிய உத்தியோகத்திலிருப்பதுபோல் தெரிந்தது, சைட் சீட்டில் இருந்த இந்தியர் அவளையே பார்த்துக்கொண்டிருந்தார் அவ கவனிக்கவே இல்லை , திடீரென்று எழுந்து நேரம் என்னமேடம் என்று கேட்டார் அவரும் சிரித்தபடியே சொன்னார் ,இத்தனைக்கும் அவனிடமும் போன் இருந்திருக்கும், ரயில் ஒரு ஸ்டேஷனில் நின்றபோது தேங்க்யூ மேடம் என்று சொல்லிட்டு அந்த பெண்ணின் தலையை பிடித்து உதட்டில் அழுத்தி கிஸ் பண்ணிட்டு இறங்கி போனான். கதவை பூட்டிட்டு ரயில் கிளம்பிவிட்டது அந்தபெண் அப்படியே நிலை குலைந்து போனார் இயல்புக்கு வரவில்லை , ரிசு எடுத்து வாயை துடைத்துக்கொண்டே இருந்தார். அடுத்த ஸ்டேஷன் வந்ததும் நான் ஜம்ப் பண்ணி அடுத்த பெட்டியில ஏறிட்டன், அவனில உள்ள கோபத்தில் எனக்கு ஒரு காட்டு காட்டிவிட்டால் என்னாகும் மானம்?
  24. அதை எப்படி என் வாயால சொல்றது ஈழப்பிரியன் அண்ணா எதுக்கு வெளிநாடு வந்தோம் ஏன் உயிரோட வாழ்றோம் என்ற காலகட்டம் எல்லாம் இருந்தது அதனாலதான் மேலதிக தகவல்கள் கேக்ககூடது எண்டு எஸ்கேப் ஆனேன் 😃
  25. ஜேர்மனியில் 7 வருஷம் குப்பை கொட்டியிருக்கிறேன், மேலதிக தகவல்கள் கேக்க கூடாது வளவன் மனசு ரொம்ப கஷ்டப்படுமல்லோ தமிழ்சிறி🤪 அதவிட சுவிஸ் பொலிஸ்தான் மிகவும் சிறந்தது, இரவிரவா பிடிச்சு ஏத்தி அவர்கள் சட்ட உதவி பெறாதபடி விடியும் நேரம் பிளைட் கடலுக்கு மேல பறந்து கொண்டிருக்கும்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.