Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Maruthankerny

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Maruthankerny

  1. புலிகள் தற்கொலை தாக்குதல் செய்ததுக்கு பதிலடியாக சிங்கள நன்பர்கள் செய்த படுகொலை மற்றும்படி அவர்கள் கொலை கொள்ளை என்று எதையும் அறிந்ததே இல்லை 1. 1958 தமிழினப் படுகொலையின் ஆரம்ப நாள் (22-05-1958) தமிழினத்திற்கு எதிராக சிங்கள அரசுகள் செய்துவந்த திட்டமிட்ட நடவடிக்கைகள், இனப்படுகொலை என்ற கட்டத்திற்க்கு வந்தது 1958 ஆம் ஆண்டாகும். நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் சிங்கள காடையர்களாலும் அரசின் குண்டர்களாலும் சாகடிக்கப்பட்டபோது அப்போதைய சிறிலங்காப் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா அதை மௌனமாக அங்கீகரித்திருந்தார். இலங்கை இனக்கலவரம், 1958 என்பது இலங்கையில் சிறுபான்மையாக வாழும் தமிழருக்கு எதிராக நாடு 1948 இல் விடுதலை பெற்ற பின்னர் நடத்தப்பட்ட முதலாவது நாடு தழுவிய வன்முறை இனக்கலவரம் ஆகும்.
  2. நேற்று வரை இங்கு பூத்து இருந்தீர் கரும் நெருப்பென போகவோ காத்திருந்தீர்? விதியினை மாற்றிய புலி ஒன்று இங்கு வீசிடும் காற்றிலும் உந்தனின் பெயர் உண்டு 05-21-****
  3. யாழ் மாவட்ட தளபதியும், மத்திய குழு உறுப்பினருமான லெப்.கேணல் ராதா அண்ணர்,20/05/1987 இல் கட்டுவான் பகுதியில் ஸ்ரீலங்கா இராணுவத்துடனான நேரடி மோதலில் வீரகாவியமானார்.
  4. எது எதுவோ அதை அதுவாகவே விட்டு விடுங்கள் ... தயவு செய்து தமிழில் மட்டும் மாற்றி வாசித்து விடாதீர்கள்
  5. 11.05.2006 அன்று வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலிலெப் கேணல் அன்பு ... 15 வது வருட நினைவு தினம். வீரவணக்கம்
  6. இணைப்புக்கு நன்றி உடையாரண்ணா இவரின் குரலில் சில இஸ்லாமிய பாடல்கள் மனதையே கொள்ளை கொண்டுவிடும் சில வருடங்கள் முன்பு ஒரு யூஸ்பி யில் பதிந்து வைத்திருந்தேன் எங்கோ தவற விட்டுவிட்ட்டேன் ... முன்பு அடிக்கடி கேட்பதுண்டு அனேமாக வேலைக்கு செல்லும்போது இவருடைய பாடல்களையே கேட்டுக்கொண்டு செல்வேன். ரெஹ்மா வின் குரலில் ஒரு காந்த சக்தி இருக்கிறது கண்ணைமூடி கொண்டு கேட்டு பாருங்கள்
  7. மாஸ்க் போடாம வந்தா போலீஸ்கார் அடிக்கிறாங்க. ஆனா, டிரஸ் போடாம வந்தா கார்ல் விழுறானுக... என்ன கொடுமைடா ச்சைய்ய்ய்.. மோசடீஜீ: வட இந்தியர்களை பார்த்து ஒலகமே பெருமை கொள்கிறது..
  8. 04.05.1991 அன்று யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் அபித கட்டளைக் கப்பல் மீதான கரும்புலித் தாக்குதலின்போது வீரச்சாவு
  9. ஹிலாரி கிளிண்டன் அவர்களே! தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சரையும் சந்தித்து நீங்கள் உலக அரசியல் பேச வேண்டும்.
  10. TELO தேசத் துரோகிகளால் கைது செய்யப்பட்ட இரண்டு விடுதலைப் புலி உறுப்பினரை விடுவிக்க சமதானம் பேசச் சென்ற வேளையில் முகாமினுள் அழைத்து நயவஞ்சகமாக கொல்லப்பட்ட மூத்த உறுப்பினரும், தேசிய தலைவரின் தனிப்பட்ட மெய்பாதுகாப்பாளரான. கப்டன் லிங்கண்ணா
  11. "கருணாவோடு சயந்தினி என்னும் ஒரு கட்டளையாளர் இருந்தவர், இவரின் முடிவு என்ன?" இவர் பின்பு புலிகளிடம் வந்து சரணடைய உறவினர்கள் மூலம் தூது அனுப்பியதாக அறிந்தேன் அதற்கு முன்பே கொழும்புவரை கருணாவோடு சென்ற சில பெண் போராளிகள் சரணடைந்து இருந்தார்கள் .. அவர்கள் கொடுத்திருந்த தகவலின் அடிப்படையில் இவர் மிக பெருத்த குற்றங்களில் ஈடுபட்டுக்கொண்டு இருந்ததால் ........ ரமணன் அவர்கள் இவரை சரணடைய விரும்பவில்லை என்றும் நிராகரிக்கப்பட்டு இருந்ததாகவும் அறிந்தேன். எல்லாம் கேள்வி பட்ட்துகளே நாம் முன்பு கேள்விபட்டவைகள் பல பொய்கள் என்று பின்பு அறிந்தேன் ஒருவர் மீது சும்மா வீண் பழி சுமத்துவது தேவையற்றது ஆதலால் நான் அறிந்ததை எழுதவில்லை. (பல பின்பு பொய் என்பதையும் தெரிந்துகொண்டேன்)
  12. பல் இருக்கிறவன் பகோடா சாப்பிடுறான் ..... இதில் குமாரசாமி அவர்களுக்கு என்ன வருத்தம்?
  13. தேடுக தமிழரின் தொன்மையும், மேன்மையும் போர்களம் என்பது ஆணுக்கானது மட்டுமல்ல ஆளுமைகளுக்கானது நம் பெரும்பாட்டியின் வரலாறு. #வேலுநாச்சியார் #பெண்மையின்_பேராண்மை பக்கம் : 503 விலை : 570 (தூதஞ்சல் சேர்த்து) நூல் தொடர்புக்கு : 9514472207, 8344459293
  14. சட்டி சுட்டதும் கையை விடுவது மனித மூளை முடிவெடுக்க முன்னரே கண் இமைத்ததை போல தானாக நடப்பது. சூடான சட்டி சுடும் என்பதை இரண்டாம் முறையும் ஞாபகத்தில் வைத்திருக்க வலப்பக்க மூளை செயல்பாட்டில் இருக்கவேண்டும். அது பற்றாக்குறையான இடங்களில் பரிதாபப்படுவதை விடுத்து வேறு வழி ஏதும் இல்லை
  15. எல்லா மண்டையில் வலப்பக்க மூளை இருக்க வாய்ப்பிருக்கு ஆனால் செயல்படும் என்பதுக்கு உத்திரவாதம் இல்லை. அதுக்கான உதாரணங்கள் உங்களை சுற்றி இருக்கும்போது அதுபற்றிய தேடலுக்கு தேவையும் இல்லை
  16. எல்லா விந்தணுவும் பிள்ளைகளை உருவாக்குவதில்லை அப்படியாக்கினாலும் எல்லாம்மும் பிள்ளையாகி பிறப்பதும் இல்லை அப்படி பிறந்தது எல்லாம் பிள்ளையாக வளர்வதும் இல்லை வளர்ந்தது எல்லாம் வாழ்க்கையை புரிவதும் இல்லை அதுக்காக நாம் விந்தணுவையா நோக வேண்டும்? அந்த அளவு அடிமட்ட அறிவு உள்ள மனிதர்கள் இருக்கிறார்கள் என்று பூமியைத்தான் நோக வேண்டுமா?
  17. லெப் கேணல் கிறேசி மருதம், முல்லை, பாலை, நெய்தல், குறிஞ்சி எனப்படுகின்ற ஐவகை நிலங்களிலே மருத நிலம் மிக நிறைந்த பூமி கிளிநொச்சி. கிளிநொச்சியின் தலைசிறந்த வேளாண்மை ஊர்களில் ஒன்றுதான் வட்டக்கச்சி. வட்டக்கச்சி மண்ணில் கணபதிப்பிள்ளை மணஇணையருக்கு 19.08.1960ல் ஆண்மகவு ஒன்று பிறந்தது. கோபாலபிள்ளை என்ற இயற்பெயரோடு பிறந்த குழந்தையே கிறேசி என்ற பெயரோடு வல்வளைப்பு படைகளுக்கு எதிராக, தனது தாய் நிலத்தின் விடியலுக்காக செங்களமாடியது. லெப்.கேணல் கிறேசி, தமிழீழ தேசத்தில் எங்கெல்லாம் வல்வளைப்பு படைகள் நிலைகொண்டிருந்தனவோ அங்கெல்லாம் அவரது சுடுகலனும் கனன்றிருக்கும். கள.முனைகளில் தொடர்ச்சியாக ஓய்வுளச்சல் இன்றி சுழன்றடித்த வீரன் அவர். செய்வோம் அல்லது செத்து மடிவோம் என்ற வசனத்தை அடிக்கடி சொல்பவர், அதனைச் செயலிலும் செய்து காட்டியவர். எந்த நேரமும் இயக்கத்தின் நலனையே சிந்தித்து செயலாற்றிய மண்ணின் மகன் அவர். கிளிநொச்சி பகுதியில் எண்பதுகளின் நடுப்பகுதி தொடங்கி, தொண்ணூறுகளின் தொடக்கம் வரைக்கும் சிறீலங்கா படைகளிற்கு எதிரான அனைத்துத் தாக்குதல்களிலும் காத்திரமான பங்கை லெப்.கேணல் கிறேசி வகித்துள்ளார். 1987ஆம் ஆண்டு யூலை மாதம் வடமராட்சியில் நெல்லியடி முகாம் தகர்ப்பில் அணியொன்றின் பொறுப்பாளனாகக் கலந்து கொண்டார். அதன் பின்னர் லெப்.கேணல் கிறேசி அவர்கள் கிளிநொச்சி மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்திய வல்வளைப்புக் காலத்தில் கிளிநொச்சி நகரில் கூடாரமிட்டிருந்த இந்தியப்படைகளுக்கும் அவர்களின் அடிவருடிகளுக்கும் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தார். கிளிநொச்சியின் எல்லா மூலையிலும் இந்திய படைகள்தாக்கப்பட்டது. கூலிகள் அடித்து விரட்டப்பட்டனர். களமுனைகளில் நேருக்குநேர் கிறேசியினதும் அவரது அணியினரதும் தாக்குதலுக்கு முகங்கொடுக்க முடியாத ஈ.பி.ஆர்.எல்.எவ் துரோகிகள் இவரது தந்தையாரான கணபதிபிள்ளை அவர்களை சுட்டுக்கொன்றனர். தந்தையாரின் இறுதிச்சடங்கிற்கு தனயன் வருவான் அப்போது வேட்டையாடுவோம் என ராஜீவின் படையினரும் துரோகக் கும்பலும் காத்திருந்ததாம். தனது விடுதலைப் பயணத்தில் எண்ணிறைந்த இடர்களையும், இழப்புக்களையும் சந்தித்த வேளையிலும் சலியாது கொண்ட கொள்கையில் உறுதி தளராத உரம் படைத்த நெஞ்சம் லெப்.கேணல் கிறேசியினுடையது. இரண்டாம் கட்ட ஈழப் போர் தொடங்கிய வேளையில் மண்டைதீவுப் பகுதியூடாக முன்னேறி வந்த சிறிலங்கா படையினர் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட எதிர்ச்சமரின் போது விழுப்புண்ணடைந்தார். அவ்வேளையில் தான் விழுப்புண்ணடைந்து துடித்ததை விட இச்சம்பவத்தில் வீரச்சாவடைந்த சக போராளிகளின் நினைவில் துடித்தார். 19.04.1991 அன்று மன்னர்பரப்புக்கடந்தான் பகுதியூடாக சிறிலங்கா படையினர் முன்னேற முற்பட்டனர் சிங்களத்தின் அம்முன்னேற்ற முயற்சியை முறியடிக்கும் நோக்கில் சென்ற விடுதலைப் புலிகளின் அணிகளுக்கு கட்டளைத் தளபதியாக களமுனையில் பணியாற்றிக் கொண்டிருந்தார் கிறேசி. எதிரியிடம் ஒரு அங்குல நிலம் போய்தானும் பவிடக்கூடாதுஎன்ற உறுதியோடு தனது அணியினரை வழிநடத்தி சமராடிக் கொண்டிருந்த வேளையில் எதிரி ஏவிய குண்டொன்றினால் கிறேசி இந்த மண்ணைவிட்டுப் பிரிந்தார். 1990.05.25 அன்ற லெப்.கேணல் கிறேசி அவர்களுக்கு திருமணம் நடந்தது. திருமணம் நடைபெற்று ஓர் ஆண்டு கூட நிறைவடையாத நிலையில் களமுனையின் முன்னிலையில் நின்று களமாடி தனது குடும்பம் என்ற சிறுவட்டத்தில் நில்லாது, தமிழீழத் தாயகம் என்ற பெரும் குடும்பத்தின் விடியலுக்காய் விழுதாகிப் போனார் லெப்.கேணல் கிறேசி
  18. எதையும் சரியாக கணக்கிட முடியாது ... இன்னும் ஒரு 10-15 வருடத்தில் பல வேலைகள் வீட்டில் இருந்தே செய்ய கூடியதாகாக இருக்கும் 50 வருடம் முன்பு சிட்டி கட்டி சிட்டியில் உயர உயர பில்டிங் கட்டி ... வேலைக்கு போகிறோம் என்று காலையும் மாலையும் ட்ராபிக்கை உருவாக்கி சிட்டிக்கு அநியாய வரி கட்டி பல கொம்பனிகள் நொந்து நூல்ட்டிஸ் ஆகி இருக்கிறார்கள். இப்போ தொழிநுட்பம் வளர்ந்து பல வேலைகளை வீட்டில் இருந்தே செய்ய கூடியதாக இருக்கிறது பலர் சிட்டி நெரிசலில் இருந்து வெளியேறிக்கொண்டு இருக்கிறார்கள். எதிர்காலத்தில் சிரியண்ணரின் மகள் ஒருவர் வீட்டில் இருந்து வேலை செய்யும் வாய்ப்பு கிட்டினால் ஜெர்மனியில் குளிருக்குள் பூட்டிய வீட்டினுள் இருப்பதிலும்விட குளிர்காலத்தில் யாழ்பாணம் சென்று அங்கிருந்து வேலை செய்யவே விரும்புவார்கள் நாங்கள் போகாமல் இருக்க பல காரணம் இருக்கிறது எமது பிள்ளைகளுக்கு அதெல்லாம் இருக்காது.
  19. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  20. கொஞ்சம் நிதானமாக பொறுமையாக ஆட தொடங்கினால் நல்ல எதிர்காலம் உண்டு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.