Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Maruthankerny

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Maruthankerny

  1. இது சமூகத்துக்கு மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும் இதை எமது சமூகம் சரியான முறையில் பயன்படுத்துமா என்றுதான் தெரியவில்லை தவிர சிங்கள அரசின் அடாவடித்தனம் இல்லாமல் இருக்கவும் வேண்டும் ஒரு வழி பாதை என்று இருக்கும் சமூகத்துக்கு பல வழிகளை திறப்பது மிகவும் பயன் தர கூடியதே
  2. நான் காலேஜ் படிக்கும் காலத்தில் இங்கிருக்கும் பாட்டிகள் போதாது என்று அயோவா Iowa என்ற அடுத்த மாநில யூனிவெர்சிட்டிக்கு வெள்ளிபோய் செடில் குத்தி ஞாயிறு காலை காவடி இறக்கி வைத்தும் வந்திருக்கிறோம் .... இந்தியா கம்போடியா வியடனாம் தமிழ் பெண்களும் எங்களுடன் கூடி வந்து பார்டி செய்து திரும்பி இருக்கிறோம் இப்போது காசு தந்து யாராவது வா என்றாலும் போகும் எண்ணமும் இல்லை அந்த வயதும் இல்லை இரண்டு வருடம் முன்பு ஒரு திருமணத்திற்கு ( இங்கிருந்து சில வெள்ளைகாரிகளும் வந்தார்கள்) திருமணம் யாழ்ப்பாணம் ரெசெப்சன் திருகோணமலையில் நடந்தது திருகோணமலையில் இங்கு போலத்தான் டி ஜே வந்து பாட்டு போட்டு ஆடி கோடடலில் இருந்த மற்ற ரசியன் ஆட்களையும் இழுத்துவந்து ஆடி பின்பு கோட்டல் காரர்கள் 12 மணிக்கு மேல் தங்களுக்கு அனுமதி இல்லை இனி போலீஸ் வரும் என்று எங்களுடன் சண்டை போட்டு வலு கட்டாயமாகவே நிறுத்தினார்கள். எனக்கு தனிப்பட இதில் எந்த ஆடசேபனையும் இல்லை ஆனால் சமூகம் ...... பாதுகாப்பு ........ என்று வரும்போது இது தனியாக பாட்டு போட்டு ஆடுவதுடன் முடிவதில்லை என்பது இங்கு இருக்கும் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே ........ மது ...... போதைவஸ்து ........ செக்ஸ் ...... விபச்சாரம் எல்லாவற்றுக்கும் நிழலாக பிடிக்கும் குடை இதுதான்! அதுவும் மூன்றாம் உலகில் இதுதான் என்று நான் கண் ஊடாகவே காண்கிறேன் தற்காலத்தில் நீங்கள் தரமான கோக்கையின் ( Cocaine) வாங்கவேண்டும் என்றால் நீங்கள் நிற்கவேண்டிய இடம் பெங்களூர் இங்கு கூட பலரால் வாங்குவதற்கு போதுமான பணம் இல்லை. கை நிறைய பணம் வாலிப வயது ஆட்களை ஆட்கள் தெரியாத காஸ்மோபாலிதான் நகரம் என்பதால் பெங்களூர் முதன்மையில் இருப்பதில் எனக்கு ஆச்சரியம் ஏதும் இல்லை. எனக்கு இருக்கும் கேள்வி நாம் செய்ததால் அது சரியானதுதான் அதை எல்லோரும் செய்யலாம் என்று ஆதரிப்பதா? அல்லது எமது சமூக கட்டமைப்பு மிகவும் பிற்போக்குத்தனமானது (One night stand ) என்று சொல்ல கூடிய ஒரு இரவுக்கு ஒரு பெண்ணுடன் படுத்து செக்ஸ் வைத்துவிட்டு காலையில் எழுந்து தன் தன் பாட்டில் செல்லும் வசதி யாழ்ப்பாணத்தில் இல்லாதிருப்பது மிகவும் பிற்போக்குத்தனமானது என்ற அடிப்படையில் ஆதரிப்பதா ?? அல்லது ஒரு சமூகத்தில் ஆண்கள் பெண்கள் சேர்ந்து குடித்து டான்ஸ் ஆடினால்தான் அந்த சமூகம் உயர்ந்தது எனும் ஏதாவது மறைமுக உந்துதல் இருப்பதால் அதை ஆதரிப்பதா? இதனால் சமூகத்தில் வரவிருக்கும் நன்மை தீமை பற்றி நான் ஆய்வுசெய்திருக்கிறேன் எனும் ஒரு குருட்டு பார்வையில் ஆதரிப்பதா? இந்த இடத்தில இருந்து இதை ஆதரிப்பது எதிர்ப்பது நல்லது ஒரு சமூகத்துக்கு ஆரோக்கியம் ஆனது என்று நீங்கள் உங்கள் தனிப்பட்ட பார்வையில் பார்க்கிறீர்கள் ?
  3. 12 பேர் தோசையும் (வடையும் ப்ரோட்டவும்) சாப்பிட்டு இருக்கிறார்கள் எல்லோரும் டீ கோப்பி யும் 3 தண்ணீர் போத்தலும் வாங்கி இருக்கிறார்கள் ஏன் 12 சுடுதண்ணி என்று எனக்கு புரியவில்லை? நீங்கள் யாரவது உணவகம் சென்று சுடுநீர் வாங்கி குடித்து இருக்கிறீர்களா?
  4. இனத்தை எப்படி அழித்தொழிப்பது என்று நன்கு திடடமிட்டு செயல்படுபவன் பொருளாதார சிக்கல் சொந்த சிக்கல் வரும்போது அதை இடை இடையே மறந்துவிடுவான் நாங்கள்தான் அடிக்கடி போய் அவனுக்கு நினைவுபடுத்தவேண்டும் அப்பத்தான் ஓ இதை வேற நான் மறந்துவிட்டேன் என்று தொடர்வதுக்கு ஏதாவது செய்துகொண்டு இருப்பான்
  5. என்ன அவசரம் தைப்பொங்கலுக்கு நல்ல செய்தியை எதிர்பார்கிறார்களா?
  6. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் !
  7. அந்தாள் தலைப்புக்கு தலைப்பு என்னை தாளித்து வைச்சிருக்கு நான் எதோ எழுதினால் .... பதில் இப்படி எழுதுகிறாரே? யார் இவர் என்று நானே குழம்பி அவருக்கு பதில் எழுத நேரம் இல்லாமல் விட்டுவிட்டேன் என்னக்கு அவர் எழுதியதற்கு இன்னமும் சில இடத்தில நான் பதிலே இன்னும் எழுதவில்லை. முன்பு இப்படித்தான் இன்னும் ஒருவர் ஈசன் என்று இருந்தார் மிக நல்ல கருத்தாளர் ஆனால் இந்துமதம் மீது அதீத பற்றுக்கொண்டு ஒரு திரியில் என்னோடு சண்டை பிடித்து கோவித்துக்கொண்டு சென்றவர் இன்னறுவரை யாழிற்கு வரவில்லை இவருடைய மனதை புண்படுத்தி எனக்கு என்ன லாபம்? எதோ அது அவருடைய நம்பிக்கை குறைந்தபட்ஷம் கருத்துக்களை எழுதுகிறார் யாழில் தொடர்ந்து எழுதட்டும் என்றே கடந்து சென்றேன் ஆனாலும் வெருண்டவன் கண்ணுக்கு எல்லாமே பேயாகவே தெரியுது கோஸான் சொன்ன யானையையும் காணவில்லை கிறிஸதவமே வெறும் மூட நம்பிக்கையில் பிறந்தது அதில் எப்படி மூட நம்பிக்கை என்பது இல்லாமல் இருக்கும் ஆனாலும் மேரி இறுதிவரை அந்த இரவோ பகலோ நடந்தை யாருக்கும் சொல்லவில்லை who is that black sheep ? என்பது இன்றுவரை யாருக்கும் தெரியவில்லை
  8. காஸாவில் வாழும் அப்பாவிகள் முதல் கருத்து எழுதும் கருத்தாளர்களையும் பாரபட்ஷம் இல்லமால் போட்டு தாக்குகிறீர்கள் ஐ லைக் யூ வெரி மச் நீங்கள் நல்லவரா? கெட்டவரா? என்பதுதான் புரியவில்லை
  9. மேற்கு என்று நீங்கள் எதை குறிப்பிடுகிறீர்கள் எதை எதிர்க்கிறார்கள்? என்று நீங்கள் விளங்கி கொள்கிறீர்கள் என்பதை பொறுத்தே மற்றவர்கள் சொல்வதும் எழுதுவதும் புரிந்துகொள்ளப்படும். அமெரிக்காவை பொறுத்தவரை அமெரிக்க அரசிலவாதிகள் முதல் பொருளாதாரம்வரை தமது கட்டுபாட்டுக்குள் வைத்திருப்பவர்கள் சொந்த மக்களுக்கே பாதுகாப்பு இல்லாதவர்கள் இங்கு உணவு எனும் பெயரில் நஞ்சு விற்கப்படுகிறது உடனடியாக கொல்லாது கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும். இங்கு விற்கும் உணவுக்கு உங்கள் நாட்டில் கூட தடை ஐரோப்பிய யூனியனில் கூட தடை. பணம் எப்படி பெறுவது என்று பார்ப்பார்கள் தவிர நீங்கள் நோய் கொண்டாலும் அதில் எப்படி லாபம் பெறுவது? எனும் சிந்தனைதான் இங்கு உண்டு. புடின் சென்ற வருடம் அனைத்து ஜி எம் ஓ GMO பயிர் செய்கைக்கும் ரஷியாவில் தடை விதித்து இருக்கிறார். ஏற்கனவே உணவு தட்டுப்பாடு இருக்கும் சீனா இதில் எந்த நிலை எடுக்கும் என்று தெரியவில்லை பல மெட்ரிக் டோன்ஸ் பசளைகளை சீனா ஏற்றுமதி செய்கிறது அதன் இரசாயன கலவைகள் இப்போது மிக மிக குறைவு ஆனால் பின்னாளில் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. பெண்களின் கைஜெனிக் தயரிப்புகள் அனைத்தும் டயோக்சின் ப்ளீச் Dioxin, Bleach, போன்ற கெமிக்கல் கொண்டிருக்கின்றன இதில் குறிப்பாக தம்பான் என்பதை பெண்கள் தங்கள் பெண் உறுப்புக்குள் செருகிறார்கள் அது இலகுவாகவே இரத்தத்தோடு கலக்கிறது கேன்சருக்கு அடித்தளமாகவே மைகிறது. இவர்கள் உக்ரைன் இஸ்திரேலிகள்க்கு அழுதால்? அதற்குள் எவ்வளவு பண லாபம் இருக்கும் இம்முறை எப்பபோதும் இல்லாததுபோல் ஆயிரக்கணக்கான யூதர்கள் ஜூடிஷ்கள் பலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் சியோனிஸ்ட்டுக்களுக்கு எதிராகவும் ஆர்ப்படடம் செய்கிறார்கள் பார்த்திருப்பேர்கள் என்று நம்புகிறேன். காரணம் சியோனிஸ்ட்டுக்களின் போர் வெறி உலக மக்களிடம் இருந்து யூதர்களை பிரித்துக்கொண்டு இருக்கிறது ...... மற்றவர்கள்போல அவர்களால் சுதந்திரமாக எல்லா நாடுகளிலும் திரிய முடியவில்லை. தவிர சியோனிஸ்ட்டுகளின் கொலைவெறி அவர்களுக்கே வெறுப்பை கொண்டுவரும் அளவுக்கு இருக்கிறது
  10. வெறும் வாய் மட்டும்தான் ! கண்ணுக்கு முன் நடக்கும் ஒரு இன அழிப்பு போரை ஒரு இன அழிப்பில் இருந்து தப்பியவர்களுக்கு கருத்து எழுதி புரியவைக்க என்ன இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்? நீங்கள் பணத்தை பின் தொடர்ந்தால் எல்லாமும் புரியக்கூடியயதாக இருக்கும் இராணுவம் என்பதே பொருளாதார பாதுகாவலர்கள்தான் ஏழை நாடுகள் கூட ஏன் பாதுகாப்பு செலவுக்கு கோடி கோடியாக கொட்டுகிறார்கள் என்று பலரும் சிந்திப்பதில்லை உண்மையில் ஏழைநாடுகள் கொட்டுகிறார்களா? வற்புறுத்த படுகிறார்களா என்பதுகூட பலருக்கு தெரியாது. மத்தியவங்கி என்றால் என்ன? தேசியவங்கி என்றால் என்ன? உலகவங்கி என்றால்? எங்கள் அன்றாட வாழ்வை பாதிக்கும் கேள்விகள்கூட பலருக்கு இல்லை. அனால் புட்டினுக்கும் உக்ரைனுக்கும் அரசியல் பாடம் எடுத்தால் அதில் போய் எழுதி அதை ஏன் உயிர்ப்புடன் வைத்திருக்கவேண்டும். அங்கு நடக்கும் செய்திகளை இணைக்க வேண்டும்தான் யாரவது படிப்பார்கள் அதை நான் செய்வதில்லை சுய ஆக்கம் என்று கூட யாழில் எதையும் எழுதுவதில்லை காரணம் நேரம் இல்லை ஏழு நாளும் வேலை செய்கிறேன். அப்படி ஒன்றை செய்துவந்தால் எனக்கும் அது ஒரு மோட்டிவேஷனாக இருக்கும் ஆனால் இந்த போர் பற்றிய செய்திகளை செய்ய முடியாது. நான் இப்போ மெயின் ஸ்ட்ரீம் மீடியா செய்திகள் பார்ப்பதே இல்லை தேவையற்ற இரத்த அழுத்தம். இன்டெலிஜென்ஸ் தளம் ஒன்றில் பணம் செலுத்தி பலவருடமாக அங்கத்தவராக இருக்கிறேன் அவர்கள் ஒரு வாரம் 5 கட்டுரைகள் அனுப்புவார்கள் அதை வாசிப்பதோடு சரி. இங்கு ஓரளவு நடுநிலையான என் பி ஆர் NPR என்று ஒரு ரேடியோ உண்டு அதுதான் இவ்வளவுகாலமும் தொடர்ந்து கேட்பேன் காரில் வேலையில் கூட கேட்பது உண்டு. ரஷ்ய உக்கரைன் காஸா போர் தொடங்கியதில் இருந்து அதுவும் கேட்பதில்லை தமிழ் பாட்டு மட்டுமே கேட்க்கிறேன். எனது நேரத்தை செலவழித்து எனக்கு இரத்த அழுத்தம் கூடுவதைத்தானே ...... சொந்த செலவில் சூனியம் என்று சொல்வோம். அதை ஏன் தெரிந்துகொண்டும் செய்ய வேண்டும். அப்படி ஒன்றை செய்யத்தான் வேண்டும் என்றால் கிரிப்டோ/ வர்த்தகம் என்ற திரியில் பொருளாதார சந்தை செய்திகளை நீங்கள் வரும்வரை இணைக்கிறேன். அங்கு பெரிதாக குழுவாதம் இல்லை அடுத்தவரை சொறிய முடியாது என்பதால் பலருக்கும் புளிக்கும் ........ உயிர்ப்புடன் இருக்குமா தெரியாது .... செய்திகளை இணைக்கிறேன். வேண்டுமானால் நான் இப்போ ஸ்விங் டிரேட் தான் செய்வதுண்டு நான் வாங்கி விற்கும் பங்குகளையும் இணைத்து விடுகிறேன்.
  11. வடிவேலுவின் காமெடிமாதிரி ........... வடிவேலு நடிப்பதை குறைக்க போகிறேன் என்றதும் அவருக்கு பின்னல் இழுபடும் நான்கு ஐந்துபேர் பொருளாதார பிரச்சனையால் ஓடித்திரிவதுபோல சில கருத்துக்களை வாசித்ததும் சிரிப்பை அடக்க முடியவில்லை இதிலே தத்துவம் என்றால் உலகிற்கே நகைச்சுவையை அறிமுகப்படுத்தியது நாம்தான் என்ற தோணி
  12. எதோ ஒரு மூடத்தனம் மாயைக்குள் நானும் அடங்குகிறேன் எல்லோரும் அடங்குகிறோம் இதில் ஒருவரை ஒருவர் சாட என்ன இருக்கு? என்றே எழுதினேன் அதுக்கும் பதில் இப்படி எழுதுகிறீர்கள் மற்றும்படி யாழ்களம் உலகின் மிக முக்கிய ஒரு தளம் இங்கு marketing territory ரொம்ப முக்கியம்...... எதிர்கால சேமிப்பே இங்குதானே? தீயாய் வேலை செய்யணும் குமாரு
  13. உண்மையில் நான் கருத்துக்களை இப்போ அதிகம் வாசிப்பதில்லை ஏதும் புது தகவல் செய்தி இருப்பின் வாசிப்பேன் அல்லது கடந்து போய்விடுவேன் "ஆதிக்கத்தனமான" கருத்துக்களை கருத்தாளர்களை பார்க்கும்போது மட்டும் அதற்கு ஏற்ற பதில் கொடுக்கவேண்டும் என்று எண்ணி அதற்கும் நேரம் இருந்தால் மட்டும் எழுதுவேன். மற்றும்படி இப்போ நல்ல நகைசுவை கருத்துக்களாகவே ஒரு இனஅழிப்பு திரியே போய்க்கொண்டு இருக்கிறது அதில் எழுத என்ன இருக்கிறது? யார் எழுதி ... யார் மாற போகிறார்கள்? எதோ ஒரு மாயையில் எல்லோரும் லயித்து இருக்கிறோம். விலைகொடுத்து வாங்கி மூளையை சிந்திக்கும் திறன் அற்ற நிலையில் வைத்திருக்க எல்லோரும் கொஞ்சமாவது குடிக்கிறோம் நான்கு நண்பர்களுடன் சேர்ந்து செய்யும்போது அது நன்றாகவும் இருக்கிறது. சிலர் இல்லாத கடவுளை முழுமையாக நம்பி அதில் லயித்து வாழ்கிறார்கள். மூடத்தனமாக வாழ்தல் என்பதில் ஒருவரை ஒருவர் சாட முடியாமலும் இருக்கிறது அளவுகள் விடயங்கள்தான் வேறு வேறாக இருக்கிறதே தவிர எல்லோரும் எதோ ஒன்றை செய்கிறோம்.
  14. பாட்டும் நானே பாவமும் நானே என்று நீங்கள் பார்த்த வீடியோவுக்கு நீங்களே பதில் எழுதுகிறீர்கள் ஆனாலும் மற்றவர்களை சாடுகிறீர்கள். நல்ல தெளிவாகவும் அறிவாகவும் எழுதுவீர்கள் பின்பு இப்படி எழுந்ததனமாக ஏதும் பிதற்றலாகவும் எழுதுகிறீர்கள். எல்லோருக்கும் பதில் எழுதவேண்டும் எல்லா திரியிலும் எழுதவேண்டும் எல்லா விடயமும் எல்லோரைவிட எனக்கு அதிகம் தெரியும் அப்படியான ஏதும் எண்ணம் நிலைப்பாடு இருப்பின் அதை தலைக்கணம் என்று தமிழில் சொல்லுவார்கள் அது கூடாதது என்பது உங்களுக்கும் நன்றாகவே தெரியும். எந்த உந்துதலில் இப்படி எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள் என்பது புரிவதில்லை ......... கொஞ்சம் வேக கவனம் பலவிதத்தில் பாதுகாப்பு என்று முளுமையாக நம்புகிறேன். நீங்கள் தெளிவாக எழுதினாலும் ..... வாசிப்பவரிடம் தெளிவு இல்லை என்றால் அது ஒரு வீண் வேலை என்றே எண்ணுகிறேன். குறித்த தலைப்பு .......... குறித்த கருத்துக்கள் என்று மட்டும் எழுதினால் யாழ்களமும் சிறப்புறும் என்று எண்ணுகிறேன்.
  15. உண்மையில் நான் அதை பார்க்கவில்லை பார்த்திருப்பின் சுட்டிருக்கும் என்றே எண்ணுகிறேன்
  16. என்னதான் இருந்தாலும் ஜஸ்டின் போல நீங்களும் அவருக்கு ஒரு அன்பு மடல் எழுதி இருக்கலாம் என்றுதான் எனக்கு தோன்றுகிறது. கசாவை அழிக்க வேண்டும் அங்கிருக்கும் அப்பாவிகள் மேல் மேற்கு உலகம் பக்குவமாகவே குண்டுகளை போட்டு கொல்கிறது என்று எமக்கு ஆதரவாக எழுதிவருகிறார் முன் பின் யோசிக்காமல் திடீரென பைபிளை தூக்கி போட்டுவிட்டார் பைபிளை வேண்டுமானால் உக்ரைன் ரஷ்ய போருக்கு பயன்படுத்தி இருக்கலாம் என்ற அறிவுரைதான் அவருக்கு இப்போதைக்கு தேவை. புடினை சாத்தன் அப்படி இப்படி என்று அடைமொழி சொற்களுக்கு பைபிளை பாவிக்கலாம். அமெரிக்கா பிரிட்டன் இஸ்திரேலி கூட்டுக்குழுவாக சேர்ந்து குண்டுபோடும் நேரம் அந்த திரிக்குள் பைபிளை எடுத்து சிறிய தப்பை செய்துவிட்டார். மற்றும்படி மிக நன்றாக உலக வரலாறுகள் இஸ்திரேலி _ பலஸ்தீன பிரச்சனை பற்றி எல்லாம் மற்றவர்கள்போல தெளிவாக எழுதுகிறார்
  17. யாயினி அக்கா குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்
  18. அதுக்கும் பலஸ்தீனியர்கள் மேல் நடக்கும் இனஅழிப்பு போரை நிறுத்து அப்பாவி சிறுவர்களை கொல்வதை நிறுத்து எண்பதுக்கும் என்ன தொடர்ப்பு என்று எனக்கு புரியவில்லை ஆனால் அதில் உங்களுக்கு எதோ வில்லங்கம் இருக்கு என்பது புரிகிறது
  19. ஆம் அவர்கள் பயங்கரவத்திற்கு எதிராக போர் செய்துகொண்டு இருக்கும் இந்த இக்கட்டான சூழலில் யாழ் கள தளபதிகள் தலைமையில் நாம் எமது ஆதரவை இஸ்திரேலி ஜனநாயக இராணுவத்துக்கு கொடுப்பது என்பது இன்றி அமையாத ஒரு கடமை
  20. புரிந்தால் நன்று !! எல்லா வினைக்கும் ஓர் எதிர் வினை உண்டு. கா கூ என்று கத்தி வாவ் வாவ் என்று குலைகிற நாய்கள் சென்று படுத்துவிடும் பாய்கிற புலிகள் தக்க தருணத்திற்கு மெதுவாகவே நகரும்
  21. ஜவ்னாவும் சீரும் சிறப்புமா செழிப்பாதானே இருக்கு ?
  22. அகண்ட இஸ்திரேல் என்றால் ? குறுகிய சிரியாவுக்கு .... குறுகிய லெபனானுமா?
  23. ரவுடிஸ்யம் இனியும் கைகொடுக்கும் என்ற மனப்பிராந்தியில் மிதந்துகொண்டு இருக்கும்போதுதான் சீனா ட்ராகோன் எழும்பி நிற்கிறது இன்னமும் திருந்தவில்லை இனி திருந்த இடம் இருப்பதாகவும் எனக்கு தோன்றவில்லை
  24. அவனை முதலில் நிற்பாட்ட சொல்லுங்கள் நானும் நிற்பாடுகிறேன்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.