Everything posted by Maruthankerny
-
'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
குமாரசாமி அண்ணர் தமிழசிறி அண்ணர் ஆகியோர் அண்ணளவாக இதே கருத்தைத்தான் ஆரம்பத்தில் இருந்து எழுதி இருகிறார்கள் ஆனால் தங்களை அறிவாளிகளாக காட்ட வேண்டும் என்றால் இன்னொருவனை மூடன் ஆக்க வேண்டும் என்பதால். ஊரில் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று சொல்வதுக்கு இன்னொரு எளியவனை பிடித்து நீ தாழ்ந்த சாதி என்று கொடுமை செய்யும் அதே மனநிலைதான் அப்படி செய்தவர்கள் எங்கோ ஒரு மூலையில் இருக்கத்தானே வேண்டும்?. அதுபோல ஒருவனை பிடித்து புட்டின் ஆதரவாளன் என்று மொடடை அடித்து விடுவது இன்னொருவனை பிடித்து உக்ரைன் எதிர்பாளன் என்று பச்சை குத்தி விடடால்தான் தாங்கள் நீதிமான்கள் கதிரைகளில் இருந்துகொண்டு ஒரு ஜால்ரா அடிக்கிற குழுவையும் வைத்துக்கொண்டு எழுதி தள்ளலாம். அப்படிதான் எந்த திரியை எடுத்தாலும் இந்த யாழ்களம் ஓடிக்கொண்டு இருக்கிறது. உக்கரைன் போர் தொடங்கி 3 வருடத்தில் என்றாலும் பழியை ட்ரம்மில் தூக்கி போடும் மனநிலைக்கு பலர் வந்திருப்பதே அதிசயம். முள்ளிவாய்க்காலில் வைத்து எங்கள் மக்களுக்கு அடித்தவனும் உக்கரைன் மக்களுக்கு அடித்தவனும் ஒரே ஆட்கள்தான் எங்களுக்குத்தான் ஞாபக மறதி. அடித்தவனையே மறந்துவிடுகிறோம் ....... எனக்கும் உங்களுக்கும் இலக்கு ஒன்றுதானே நாங்கள் சேர்ந்துதான் இருந்தாக வேண்டும்
-
'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
Because Nothing Surprise me anymore நான் ஆரம்பத்திலேயே எழுதி இருக்கிறேன் சென்று வாசியுங்கள் .... சேலன்ஸ்கி ஒரு கோமாளி சொந்த நாடடை அழிக்கபோகிறான் (உக்ரைன் அவனது சொந்த நாடுகூட கிடையாது அது வேறு) அமெரிக்காவின் இலக்கு உக்ரைன் கனிமவளம் மற்றது உலகத்தில் உணவு பஞ்சத்தை உருவாக்கி தனது தானியங்களை விற்பது ( அவர்களது ஜிஎம்பொ GMO விவசாயத்தை உலகம் பூராக பரப்புவது) அப்போது இதை அமெரிக்கவா தொடங்கியது? ரசியாதானே தொடங்கியது? என்று காவடி ஆடினார்கள் .... சேலன்ஸ்கி அதிபர் ஆனதுமே உக்ரைன் ரசிய போர்பற்றி உக்ரைன் பத்திரிகைகளே எழுதியிருப்பதை பதிந்தேன் ரசியா இராணுவத்தை எல்லைக்கு கொண்டுவர முன்பே அமெரிக்க பிரித்தானிய இராணுவ அதிகாரிகள் உக்காரைனில் முகம் இட்டு இருந்தார்கள் எல்லாவற்றையும் உக்ரைன் உள்ளூர் பத்திரிகைகள் எழுதிக்கொண்டு இருந்தன இப்போது 13 மில்லியன் உக்ரைனியர்கள் அகதிகளாகி இருக்கிறார்கள் பாதிக்கு மேற்படட உக்கரைன் போரால் அழிந்து கிடக்கிறது கனிமவளங்களை அமேரிக்கா கையாட போகிறது இதைவிட 1994 (Budapest) புடாபெஸ்ட் ஒப்பத்ததின் அடிப்படையிலேயே இருந்திருக்கலாமே? அமெரிக்க ஊடங்கள் மூடி மூடி மறைகிறது அதனால் ஆதாரத்துடன் நிறுவ முடியாது அமெரிக்க ஊடகங்களின் அடிப்படையில் பார்த்தால்கூட போர் தொடங்கிய பின்பு செலென்ஸ்கியின் வருமானம் பல மில்லியனாக உயர்வடைந்துதான் இருக்கிறது ( உக்ரைன் செய்திகளின்படி பில்லியன் என்கிறார்கள் அப்படி இருக்க வாய்ப்பில்லை என்றுதான் நான் எண்ணுகிறேன்) உக்ரைன் நாட்டில் ரசிய மக்கள் காலம் காலமாக வாழ்கிறார்கள் இவர்கள் மீது இன அழிப்பு வேலையையும் கொலையையும் உக்ரைன் செய்துகொண்டுதான் இருந்தது அதுபற்றி எந்த ஜனநாயக விண்ணர்களும் இங்கே எழுதுவதில்லை .... அது சர்வதேச மன்னிப்பு சபையில் கூட பதிவாகி இருக்கிறது ஒரு எல்லைக்கு பின்புதான் அவர்கள் ஆயுதம் எடுத்து போராட தொடங்கினார்கள். உக்கரைன் மீதான உங்கள் முதலை கண்ணீர் கூட வெறும் வேசம்தான் ... நீதி உண்மையை தாண்டி பிடித்த கொப்பில் நின்று ஆடியே தீரவேண்டும் என்ற அக்கறையே தவிர ... அவர்கள் மீதான அக்கறை அல்ல சிரியா சோமாலிய லிபிய ஈராக் கொசோவா செச்செனியாவில் ஆப்கனிஸ்தானில் என்ன நடந்ததோ அதுதான் உக்ரைனிலும் நடந்தது அடுத்து ஜோர்டான் லெபனானில் நடக்கும்போது கைதட்டும் எகிப்திற்கு அதுதான் நடக்கும்
-
சாவகச்சேரியில் காடையர்கள் அடாவடி; முன்னாள் அதிபர் அடித்துக் கொலை
பழைய சிநேகிதத்தில்...... சும்மா கண்ட கசிப்பை குடித்து சாக்கிரங்களே என்று ஒரு போத்திலை கொடுத்ததால் ....... குடிச்சிட்டு அதிபரையே போட்டு தள்ளுவார்கள் என்று அவனுக்கு எப்படி தெரியும்?
-
லண்டனில் இன்று யொகானியின் இசைநிகழ்ச்சிக்கு புலம்பெயர் தமிழர்கள் கடும் எதிர்ப்பு - போர்க்குற்றவாளிகளைபாராட்டியவர் என குற்றச்சாட்டு
இசையையும் இனப்படுகொலையையும் ஒன்றாகத்தான் பார்க்க வேண்டுமா? வேறு வேறாக பார்க்க முடியாதா?
-
ஹலால் முறையில் விலங்குகள் எப்படி வெட்டப்படும்? அதன் இறைச்சி ஆரோக்கியமானதா? 6 கேள்வி-பதில்கள்
மீன்களை எப்படி காலால் முறைப்படி பிடிப்பது? இஸ்லாமியர்கள் மீன் நண்டு இறால் சாப்பிடுகிறார்கள் ...... ஆனால் அவைகள் வலை போட்டுத்தானே பிடிக்க படுகிறது? இஸ்லாமியர்கள் வட்டி கட்டுவது காராம் ஆதலால் இவர்கள் வங்கிகளில் கடன் பெற முடியாது ....... அதனால் ஒரு அரபு வங்கிதான் இவர்களுக்கு வட்டியையும் முதலையும் கூட்டி அதை காலத்தால் பிரித்து கடன் கொடுக்கிறது அந்த அரபு வங்கியின் கல்லா களை கட்டுகிறது.
-
'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
அண்னே உங்கள் மனசாட்ச்சிக்கு உட்பட்டு நீங்கள் இதற்குமட்டும் பதில் சொல்லுங்கள் காசாவில் எந்த ஈவிரக்கமும் அற்று 40 ஆயிரம் அப்பாவி மக்களையும் சிறுவர்களையும் குண்டு போட்டு கொன்ற அமெரிக்க ஜனாதிபதி பைடன் உண்மையிலேயே உக்ரைன் மக்களில் கரிசனை கொண்டுதான் உக்ரைனுக்கு உதவி இருப்பானா? "White House Insists Ukraine Hand Over $500 Billion in Mineral Wealth and Stop Criticizing Trump" ட்ரம்பை ஏன் அடாவடி என்று சொல்கிறீர்கள்? அமேரிக்கா கொடுத்ததைதானே அவர் திருப்பி கேட்க்கிறார்? யாழ்களம் ஆறலை பேர்ந்தவர்கள் அறம் பற்றி பேசும் களமாகவும் ரசியாவை உலகப்படத்தில் பார்க்காதவன் ரசிய இராணுவ பலத்தை பற்றி பேசும் குப்பையாக போய்விட்ட்து. இங்கே ஒரு நேர்த்தியான விவாத்தை இனி முன்னிறுத்த முடியாது குழுவாதம் மட்டுமே இங்கே செய்யலாம் என்றாகி விடடது. எனக்கு சரி / பிழைதான் உண்டு குழுக்கள் இல்லை ஆதலால் இங்கே விவாதம் செய்ய முடியாது. உங்களிடம் கேள்விக்கான பதிலை மட்டும் எதிர்பார்க்கிறேன்
-
கோவையில் 17 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது
உங்களின் கேவலமான புத்தி அவ்வாறு சிந்திக்காது போனால்தான் ஆச்ரயம்! நவீன தொலைபேசி எத்தனை சிறுவர்க்ளின் வாழ்வை சீரழிகிறது? என்பதையே நான் மேலே சுட்டி காட்டியிருந்தேன். மறுமுனையில் யார் இருக்கிறார்? எங்கே போகிறோம்? ஏன் போகிறோம்? என்ற எழக்கூடிய அடிப்படை அறிவை கூட மழுங்கடிக்க வைத்திருக்கிறது. நீங்கள் உத்தமன்கள் என்று அட்டை படம் போட்டு வலம் வாருங்கள் அடுத்தவுனுக்கு சிறுமிகளை பற்றி பாடம் எடுத்து நிரூபிக்க தேவை இல்லை இந்த கேவலாமான வேலைக்கு சின்சக்குகள் வேறு இன்னொருத்தரம் மேலே இருக்கும் கருத்தை வாசிக்கவும் இனி அவர்களை போஸ்க்கோவில் போடடாள் என்ன சிஸ்கோவில் போட்டால் என்ன? அந்த பெண் இதற்குள் இருந்து இனி மீளவே முடியாது.
-
மேலும் 116 இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா!
வசி உங்களுக்கு நான் இதை சொல்லி தெரியவேண்டிய அவசியம் இல்லை (Direct income) சம்பளத்திற்க்காக வேலை செய்யும் மனநிலையை முதலில் துடைக்கவேண்டும் ( நாங்கள் புலம்பெயர்ந்த முதலாவது தலைமுறை எனக்கு அது கொஞ்சம் கஸ்ட்ரம்) அடுத்த தலைமுறைக்கு மிக எளிது ..... Passive Income முதலீடுகள் மூலம் வரும் வருமானத்தை உருவாக்கி கொள்ள வேண்டும் இப்போ அண்ணளவாக உலகம் பூராக செலவு ஒரே அளவாகவே இருக்கிறது மத்திய கிழக்கு நாடுகளில் ரியல் ஸ்டாட்ட்டில் ( Real estate) முதலீடு செய்வது என்பது இன்றைய சூழலில் ஒவ்வரு புலம்பெயர் தமிழனும் செய்யவேண்டிய விடயம் எதனை பேர் செய்கிறார்கள் என்று தெரியவில்லை இப்போதும் சம்மதியவீடு கலியாணவீடு செய்வதில் பெருமை காண்கிறார்கள் பலர். கொழும்பில் சராசரி புது அப்பார்ட்மெண்ட் மாத வாடகை $1000 - $2௦௦௦ வரை இருக்கு ....... இரண்டு வீடை சொந்தமாக வைத்திருப்பவன் வருமானம் என்ன? சுலபமாகவே ௪௩௦௦ பார்க்கலாம். நிறைய இந்தியர்கள் துபாய் அபுதாவியில் வீடு வாங்கி வாடகைக்கு விடுகிறார்கள் https://www.lankapropertyweb.com/rentals/lease-all-Apartment.html
-
'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
மேற்கு ஜனநாயகவாதிகள் ஜனநாயகத்திற்க்கா புடுங்கிக்கொண்டு இருக்கிறார்கள் என்று இங்கு யாழ்களத்தில் புளங்காகிதம் அடைத்துக்கொண்டு இருந்த அரசியல் விற்பன்னர்கள் ...... இப்போ தடுமாறி நிற்கிறார்கள் ......... இங்கிருக்கும் கருத்துக்களை வாசிக்க எனக்கு ஒரே சிரிப்பாக இருக்கிறது. உண்மையில் விழுந்து விழுந்து சிரிக்கிறேன் மீசையில் மண் ஓட்ட போகிறது என்றதும் ....... இப்போ ட்ரம்பை சர்வாதிகாரி ஆக்கிவிடால் மண் ஒட்டிடாது என்று கிளம்பி இருகிறார்கள் என்று எண்ணுகிறேன். சூப்பர் ! பாலஸ்தீனத்தில் ௪௦ஆயிரம் அப்பாவிகளை கொன்று குவித்த நிதன்யாகுவிற்கு யாழ்களத்தில் சிலை வைக்காத குறையாக விக்கிக்கொண்டு இருந்தார்கள் ......... கொக்குவில் தவடியில் சாதியை ஒழிக்க சித்தார்த்தன் என்று ஒரு கோமாளி பெரியாருக்கு சிலை வைக்க போகிறதாம். அது சீமானுக்கு எதிரான செயலக இருக்கும்போது ஏன் அந்த அரிய சந்தர்ப்பத்தை நீங்கள் நழுவ விட வேண்டும்? அவருடன் கூடி நித்தன் யாகுவிற்கும் சேர்த்து சிலை வையுங்கள் புட்டினையும் பழிவாங்கியதாகவும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் வீழ்த்திய புகழும் இருக்கும்
-
ஈழத்தில் பெரியார் சிலை நிறுவ இயக்குநர் ராஜ்குமார் நன்கொடை.
இவனை அவன் சொறிந்தால் ...... அந்த சொறியன் என் நண்பன் பகுத்தறிவு பட்டொளி வீசி ...... சாதியை ஒழிக்க வேண்டும் குமாரு !
-
சீமான் முதல் மனைவியா நடிகை விஜயலட்சுமி? சென்னை ஹைகோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி
அதற்காக அடிப்பது என்று முடிவெடுத்தால் எதை எடுத்தும் அடிக்கலாம் என்று இருக்க கூடாது அவர்கள் கொண்டுவரும் பொல்லை வாங்கி அதனாலேயே போட வேண்டும் இப்படி
-
கோவையில் 17 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது
கோவையில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை கடந்த 16-ம் தேதி இரவு சிறுமி மாயமானார் மறுநாள் அதிகாலை சிறுமி வீட்டுக்கு வந்தார். நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்ததாக கூறினார் சமூக வலைதளம் மூலம் பழக்கமான கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த அறைக்கு சென்றிருந்தாகவும், அங்கு கல்லூரி மாணவர்கள் 7 பேர் தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். சிறுமிக்கு ஸ்னாப்சாட் எனப்படும் சமூக வலைதள செயலி பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. அதன் மூலம் கோவையில் உள்ள கோவைப்புதூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் ஜெபின் (20), ரக்ஷித் (19) ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர். அதன்படி, கடந்த 16-ம் தேதி சிறுமி, மேற்கண்ட இருவருடன் சேர்ந்து அவர்கள் தங்கியுள்ள அறைக்குச் சென்றுள்ளார். அந்த அறையில் அபினேஷ்வரன்(19), தீபக் (20), யாதவ்ராஜ் (19), முத்து நாகராஜ் (19), நித்தீஷ் (19) ஆகிய மேலும் 5 மாணவர்கள் இருந்துள்ளனர். தொடர்ந்து மேற்கண்ட 7 பேரும் சேர்ந்து சிறுமியை கூட்டாகவும், தனித்தனியாகவும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் இதையடுத்து சிறுமி மாயம் என்ற பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கை போக்சோ பிரிவுக்கு மாற்றி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த ஜெபின், ரக்ஷித், அபினேஷ்வரன், தீபக், யாதவ்ராஜ், முத்து நாகராஜ், நித்தீஷ் ஆகியோர் இன்று (பிப்.18) கைது செய்யப்பட்டனர்.
-
ஈழத்தில் பெரியார் சிலை நிறுவ இயக்குநர் ராஜ்குமார் நன்கொடை.
மூலைக்கு மூலை பெரியார் சிலை வைத்ததால் தமிழகத்தில் சாதி அடியோடு பிடுங்கி எறியப்பட்டு உள்ளது .......... இனி ஈழம் சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் சாதிகளை அழிக்கும் நேரம் வந்து விட்டது பெரியார் சிலைக்கு கம்யூனிசிய காரர்கள் சிவப்பு வர்ணம் தீட்டினால் சிவப்பு வர்ணத்தை கடந்து அதற்குள் ஒழிந்திருக்கும் பெரியாரை பாருங்கள்.
-
டொராண்டோ பியர்சன் விமான நிலையம் அனைத்து ஓடுபாதைகளையும் தற்காலிகமாக மூடியது
இருக்கிற பொருளாதார வசதியை வைத்துக்கொண்டு தங்களால் முடிந்ததை செய்கிறார்கள் ........ டெல்டா போல அவர்காளால் பணத்தை இறைக்க முடியுமா? இந்த பிளேன் வாங்கியபோது இது நோர்த்வெஸ்ட் ஏர்லிங்காக ( Northwest Airlink) இருந்தது ... அப்போது அவர்களிடம் CRJ200 ரக விமானங்கள்தான் இருந்தது இந்த CRJ 900 வாங்குவது பெரிய மைல் கல்லாக இருந்தது .. அதுதான் எனக்கும் இப்போதும் மிகுந்த ஞாபகமாக இருக்கிறது
-
டொராண்டோ பியர்சன் விமான நிலையம் அனைத்து ஓடுபாதைகளையும் தற்காலிகமாக மூடியது
ஆம் 25 MPH இல் கிளியரன்ஸ் கொடுத்து இருக்கிறார்கள் பிளேன் ஒடுபாதையை தொடும்போது 35 MPH Crosswind (குறுக்கு) காற்று வீசியிருக்கிறது
-
டொராண்டோ பியர்சன் விமான நிலையம் அனைத்து ஓடுபாதைகளையும் தற்காலிகமாக மூடியது
932XJ ( Mesaba Airlines) இந்த பிளேன் புத்தம் புதிதாக சேர்விசுக்கு வந்தது இப்போதும் ஞாபகமிருக்கிறது. இந்த பிளேனில் 2008- 2016 வரை பல நாட்கள் வேலை செய்து இருக்கிறேன். இப்போது நான் டெல்ட்டாவுக்கு DELTA மாறிவிட்ட்டேன் இவற்றை காண்பது அரிது .... இப்படி கவுண்டு கிடப்பதை பார்க்க சகிக்கவில்லை.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
அதை எப்படி காளியம்மாள் சொல்ல முடியும்? தான் எந்த கடசியில் சேரப்போகிறேன் தொடரப்போகிறேன் என்று அவரே சொல்ல முடியும் என்றால் இங்கே யாழ்களத்தில் விஞ்ஞானிகளாகவும் தொல்பொருள் ஆய்வாளர்களாகவும் உலக அரசியல் ஆய்வாளர்கள் ஆகவும் நாங்கள் என்ன குழை பிடுங்கவா இருக்கிறோம்? எந்த பலமும் இலலாமல் செத்த பாம்பாக கிடக்கும் புட்டினை பிடித்து உக்கரைனில் சிறை வைப்பதில் கொஞ்சம் பிசியாக நாங்கள் இருந்த காப்பில் வந்து இவர் யாரை கேட்டு தன்னை பற்றி பேட்டி கொடுக்கிறார்? அவர் எங்கு சேருவார் எப்போ சேருவார் போன்றவற்றை பற்றி நாங்கள் இங்கே விரிவாகவும் விளக்கமாகவும் இவளவு நாளும் எழுதும் எங்களுக்கு என்ன மதிப்பு?
-
விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு… உள்துறை அமைச்சகம் உத்தரவு!
டிரம்ப் 2015இல் எதற்காக அரசியலுக்கு வந்து தேர்தலில் நின்றாரோ அதே கரணுத்துக்காவே விஜய்யும் கடசி தொடங்கி இருக்கிறார். டிரம்ப் வரி மோசடி செய்யவே வந்தார் அப்போது அவரே தனக்கு வாக்கு போட ஒரு கூடடம் இருக்கும் என்று நம்பி இருக்கவில்லை. விஜய் தொடங்கியது கருப்பு பணத்தை வெள்ளையடிக்க இவர்களிடம் நிறைய பணம் சுவிஸ் வங்கியில் எந்த வட்டி கூட இல்லாமல் கிடக்கிறது அதை நகர்த்துவது என்றால் முதலில் வெள்ளையாக்க வேண்டும் ... அதற்க்கு அரசியல் கடசி சிறப்பான வழி. தேர்தலில் வென்றாலும் வெற்றி தோற்றாலும் வெற்றி ........ அதை புரிந்துகொண்டுதான் அவரை கண்காணிக்கவே இந்த பாதுகாப்பு நாடகத்தை இந்திய அரசு ஆடுகிறது என்று எண்ணுகிறேன்
-
யாழில் பெரும் சோகம் - பெண் அரச அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
பள்ளியறை எங்கும் பாலியல் கறைகள்; வேடிக்கை பார்க்கும் தி.மு.க. அரசு – சீமான் கண்டனம்
- காஸா: அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியது ஏன்? பாலத்தீனர்களை வெளியேறச் சொல்கிறாரா?
இந்த சுரங்க பாதைகள் அனைத்தும் கிண்டியதே இஸ்ரேல்தான் 2005 இல் காசாவில் இருந்து வெளியேறும்போது வாசல்களை மண் சீமெந்து போட்டு மூடி விட்டு சென்றார்கள். கட்டிடம் கட்டுவதற்கு தோண்டிய போதுதான் பலஸ்தீனியர்கள் காமாஸ் அதை கண்டு கொண்டார்கள். காசாவை அவர்கள் கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும்போது அவர்கள் இராணுவ நகர்வுகள் இந்த சுரங்க பாதையால் யாருக்கும் தெரியாமல் நடந்துகொண்டு இருந்தது- காஸா: அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியது ஏன்? பாலத்தீனர்களை வெளியேறச் சொல்கிறாரா?
இந்த செய்தி யாழில் வருமா? மேற்கு உலகுக்கு முட்டுக்கொடுத்த ஜீவராசிகள் இதுக்கு எப்படி முட்டு கொடுப்பார்கள் என்று எனக்குள் யோசித்தேன்...... இந்த திரியில் இருக்கும் கருத்துக்களை வாசிக்கும்போது புரண்டு புரண்டு சிரிக்க தோண்றுகிறது மிக முக்கியமாக இது எதோ ட்ரம்பின் திடடம்போல சிலர் கை கூசாது எழுதுவதுதான். காசாவை குண்டுபோட்டு சுடுகாடு ஆகியதே பைடனின் அரசுதான். குண்டு பட்டு காயம் ஆனவர்கள் காயமே இன்னமும் மாறவில்லை ....... இவர்கள் தலைகீழாக மாறி நிற்கிறார்கள்- மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று
அப்படி நீங்கள் பலடி அடிக்காது வாழ்ந்தால்தான் அதிசயம். இங்கிலீஸ் காரன் அதை ஒரு மொழியாகத்தான் பார்க்கிறான் அரைகுறைகள்தான் அதை அறிவாக பார்க்கிறார்கள். இந்த திரி முழுதுமே நீங்கள் செய்தது தனிமனித தாக்குதலதான் ஒரு உருப்படியான கருத்துகூட இல்லை. இந்த லட்ஷணத்தில்தான் தகுதி அறிவு பற்றியெல்லாம் பேசி இருக்கிறீர்கள்.- அமெரிக்கா: சட்டவிரோத குடியேறிகளை இந்தியா கொண்டு வரும் ராணுவ விமானம் - நிலவரம் என்ன?
Colombia sends air force planes to pick up migrants deported from US https://a2news.com/english/rajoni-bota/bota/kolumbia-dergon-avione-te-forcave-ajrore-per-te-marre-emigrante-i1139000 Gustavo Petro said Colombian migrants will travel "without handcuffs," on Colombian Air Force planes. "This provision, dignity for deportees, will apply to all countries that deport them," he said.- கனடா மீதான வரி விதிப்பு நிறுத்தி வைப்பு: டிரம்பின் இந்த திடீர் மன மாற்றத்துக்கு என்ன காரணம்?
இது சொந்த செலவில் வைக்கும் சூனியம் என்று தலீவருக்கு யாரோ வடிவாக எடுத்து கூறி இருக்கிறார்கள் என்று எண்ணுகிறேன். ட்ரம்பை பொறுத்தவரை அவருடைய ஆதரவாளர்களுக்கு வெற்றி மேல் வெற்றி பெற்றுக்கொண்டு இருக்கிறோம் என்று ஒரு மாய தோற்றத்தை பொய்யை கூறி வந்தாலே போதும் அதைத்தான் அவர் செய்து வருகிறார் Lumber பலகை 70-75 வீதம் கனடாவில் இருந்தே வருகிறது ஏற்கனவே வீட்டு விலை ம்உச்சியில் இருக்கிறது எண்ணையும் அதே போலவே எண்ணெய் விலை ஏறினால் தலைவர் முக்காடு போட்டு கொண்டுதான் திரிய வேண்டு 25 வீதம் பலகைக்கு எண்ணெய்க்கும் வரி விதித்தால் அதன் தாக்கம் எல்லா பொருடங்களிலும் இருக்கும் (Transport + storage ) மெக்ஸிகோ நிலைமை அதைவிட மோசம் அடிப்படை உணவு அங்கிருந்துதான் வருகிறது அதைவிட பல தொழில்நுட்ப பொருட்கள் ( Technology Hardwares + Cars Parts) வாகன உரிதிகள் இரண்டு மூன்று முறை எல்லையால் வந்து வந்து போகிறது. காருக்கான என்ஜின் இங்கே செய்யப்படுகிறது இறுதி அசெம்ப்ளி மெக்சிகோவில் நடக்கிறது மெக்சிகோவும் 25 வீதம் வரி விதித்தால் அண்ணளவாக 50 வீதம் வரி ஏறும். இப்போது 50 ஆயிரத்துக்கு வாங்க கூடிய காரின் விலை 75 ஆயிரம் ஆகும் நடைமுறை சாத்தியமில்லாத விடயம் இதுவும் இன்னொரு Mexico pay for the Wall தான் ஆனால் மற்ற நாடுகள் நேரடியாக முகம் முறித்து சீன போல மாறினால் அன்று அமெரிக்க உற்பத்தியை தவிர்ப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. ஏனெனில் 65-70 வீதமான அமெரிக்க ஏற்றுமதி என்பது பொருட்களே அல்ல தொழிநுட்பம் வங்கி வர்த்தகம் சோஃவார் ( Tecnology, Finacial; trading, software) ஆகும். நீங்கள் விசா மாஸ்டர் கார்ட் பவித்தாலே ஒரு குறிப்பிடட வீதம் இங்கே வருகிறது Medicine + Pharma products - காஸா: அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியது ஏன்? பாலத்தீனர்களை வெளியேறச் சொல்கிறாரா?
Important Information
By using this site, you agree to our Terms of Use.