Jump to content

Maruthankerny

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    10574
  • Joined

  • Last visited

  • Days Won

    30

Everything posted by Maruthankerny

  1. உண்மைதான் ! துரதிஷ்ட்டமாக எமக்கு முதல் 3-4 எட்டும் எங்கள் கையில் இருக்கவில்லை உயிர் இருந்தால் போதும் மீதியை பின்பு பார்க்கலாம் என்று ஓடி திரிந்தவர்கள் அதிகம் அப்போ பின் எட்டுக்களும் சீராக இருக்காது வாழ்க்கையை எங்கே நாம் பிளான் பண்ணினோம் அதுதான் வளைச்சு வளைச்சு எங்களை பிளான் பண்ணிச்சு
  2. 35 மணித்தியாலம்/ கிழமையா? நான் மூன்று நாளிலேயே 36 மணித்தியாலம் செய்துவிடுகிறேன் எழுநாளும் வேலைதான் வேறு வேறு வேலைகள் உடல் ஆரோக்கியத்தை பாராது பணம் பணம் என்று ஓடுவது போல ஒரு லூசுத்தனம் ஒன்றும் இல்லை உலகிலேயே சிறந்த செல்வம் ஆரோக்கியம்தான். ஆஸ்பத்திரியில் படுத்திருக்கும்போது பணம் குணமாக்காது. குறைந்த பட்ஷம் 40 நிமிடம் உடற்பயிற்சி செய்யவேண்டும் என்று ஒவ்வொரு கிழமையும் யோசிப்பேன் முடியாமல் போய் விடுகிறது. பாலபத்ர ஓணாண்டி சொல்வதை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன் ஐரோப்பிய நாடுகளில் கொஞ்சம் ரிலாக்ஸாக வாழ்ந்துகொள்ளலம் மாத சம்பளம் மற்றும் மைண்ட் செட் அப்படிதான் இங்கு அமெரிக்காவில் நுகர்வோராகவே மூளை சலவை செய்து வைத்திருக்கிறார்கள் வருடம் $30 ஆயிரம் சம்பளம் பெறுபவனும் $3 லட்ஷம் சம்பளம் பெறுபவனும் ஒரே மாதிரியே ஓடி திரிகிறார்கள். விலை உயர்ந்த சாப்பாடு ... வீடு ... கார் .... என்று கணக்கு பார்க்க முடிவு ஒரே மாதிரிதான் இருக்கும். ஓரளவுக்கு மேல் சம்பளமாக பெறுவது வரியில் போய் நிற்கும் என்பதால் பலரும் ஓய்வூதிய சேமிப்பிப்புக்கு என்று ( வரி இல்லை என்பதால்) பெரும் தொகையை போட்டு கொள்கிறார்கள் அதுக்கும் பின்னாளில் வரிதான் ............ அமெரிக்க கனடாவை பொறுத்தவரை ஒரு இயந்திரத்தனம் இங்கு இருக்கிறது அப்படிதான் அரசுகள் ( கொபிரட்டிடம் விலைபோன அரசியல்வாதிகள்) பிரஜைகளை வைத்திருக்கிறது. சுவிஸ் ஜேர்மன் பிரான்ஸ் மைண்ட் செட் கொஞ்சம் ரிலாக்ஸானது
  3. இப்படியேதான் இருக்கும் இன விடுதலை என்னும் மகத்தான போருக்குள் என் வீட்டு பிரச்னை சொந்த பிரச்சனையை புகுத்தி புலிவாந்தி எடுக்கும் கீழான நிலைக்கு ஒருநாளும் போயிருக்க மாட்டேன்
  4. எங்கிருந்து பகிடி விடுகிறீர்கள் என்று தெரிந்துகொள்ளலாமா? பக்கத்துக்கு வீட்டுகாரர் போல இருக்கு
  5. உண்மையில் அப்படி இருந்ததா ? அப்போ ஏன் எங்கட லூசுகள் போகாமல் இருந்தார்களோ தெரியவில்லை 86-87 இல் ஜெர்மனிக்கு 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு படிப்புக்கு என்று சும்மா விட்டார்கள் எனது மாமா ஒருவர் என்னை அனுப்ப முயற்சி செய்தார் அம்மா அழுது ஒப்பாரி வைத்து விடவில்லை நல்லவேளை அப்போ வராதது அப்போ வந்திருந்தால் ஜேர்மன் பிள்ளைகளுடன் ஐக்கியமாகி தமிழே மறந்திருப்பேன் 87- 88 என்று எண்ணுகிறேன் 86 இல்லை
  6. உண்மையாகவா? நான் இவ்வளவு நாளும் புலிகள் செய்த ஆடடூழியத்தால்தான் நாங்கள் நொந்து கறுப்பு ஆனோம் என்று எண்ணிக்கொண்டு இருந்தேன் அப்போ முன்பும் இப்படித்தான் இருந்து இருக்கிறோம் 😂
  7. அக்கா வணக்கம்! கன நாள் கடந்து காண்பதில் மகிழ்ச்சி நலமாக இருக்கிறீர்களா? வந்த அவசரத்தில் எதையாவது கொட்டிவிட்டு போகலாம் என்று கொட்டியமாதிரி இருக்கு கொஞ்சம் வாசித்துவிட்டு பதில் எழுத முடியாதா? ஏதும் நேரமினமை அல்லது வேறு பிரச்சனைகள் ஏதும் இருப்பின் ... அவைகள் முடிந்த பின்பு எழுதும் கருத்தை வாசித்துவிட்டு பதில் எழுதினால் கொஞ்சம் சம்மந்தமாக இருக்கும் அல்லவா? அவ சாகவேண்டும் என்று எங்கு எழுதி இருக்கு? முதலில் உண்மைகளை அறிந்துகொள்ளுங்கள் பின்பு உங்கள் வார்த்தைகளை கொட்டுங்கள் அல்லது எழுதிய கருத்துக்கு பதில் எழுதுங்கள். ரஜனியே புலிகளின் ஆதரவாளர்தான் ...ரஜனி இறந்தது என்பது புலிகளுக்குதான் பெரும் இழப்பு முக்கியமாக ராஜதந்திர ரீதியில் புலிகள் எமது விடுதலை போராட்டம் சந்தித்த எவ்ளவோ இழப்புகளை சீர் செய்திருக்க கூடிய ஒருவர் ரஜனி. அதற்கு காரணம் எதற்காகவும் உண்மைக்கு புறம்பாக வளையதாவர் ரஜனி.முறிந்த பனை எழுதிக்கொண்டு இருக்கும்போது அதில் இந்திய இராணுவ அடடூழியங்களை எழுத்துவத்துக்கு மற்றவர்கள் மறுத்து இருந்தார்கள் ( இதை நான் சொல்லவில்லை அவர்களே சொல்லி இருக்கிறார்கள்) அவர்கள் அதை எழுதியதன் நோக்கம் வேறு ரஜனி எழுதிய நோக்கம் வேறு ரஜனி மற்றவர்கள்போல இந்திய ராவுக்கு விலை போக கூடியவராக இருக்கவில்லை தவிர அப்போது யாழ் பல்கலைக்கழக UTHR தலைமைத்துவம் வேறு ரஜனியிடமே இருந்தது. ரஜனியை போட்டுத்தள்ளுவதன் மூலம் இந்தியா ஒரு கல்லில் இரு மாங்காய் வீழ்த்தியது. ஒன்று புலிகள் சார்பான ஒருவரை அதில் இருந்து நீக்குவது இரண்டாவது செல்வி போன்ற எந்த துரோகத்துக்கும் துணைபோக கூடிய புலி எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்து செல்ல கூடியவர்களிடம் UTHR தலைமையத்தை கொடுப்பது. இந்திய இராணுவம் வெளியேறு முன்னர் அவசரமாக செய்ய வேண்டிய காரியமாக ராவின் குறியாக அது இருந்தது. மற்றைய UTHR கும்பல் கொழும்பில் இருந்துகொண்டு பின்னாளில் என்ன செய்தது என்பது எல்லோருக்கும் (ஈழ தமிழர்களுக்கு) தெரிந்தது. அவர்களால் மண்டை கழுவிய கொஞ்ச கூட்டம் இப்போது இங்கு அமெரிக்காவில்தான் வாழ்கிறது. அவர்களை நொந்து பயன் இல்லை படித்தவர்கள் என்ற மமதை தவிர்த்து தாம் மூளைச்சலவை செய்யப்படடோம் என்பது தெரியாமல் வாழுகிறார்கள் ஒரு சிலர் பின்னாளில் கொஞ்சம் புரிய தொடங்கி இருந்தாலும் அவர்கள் ஈகோ வெளிவர விடுவதில்லை என்று எண்ணுகிறேன் இருவர் இங்கு அரசியலிலும் ஈடுபடுகிறார்கள் .... ஈழத்தமிழனுக்கு ஒரு சல்லி லாபம் இல்லை. ( இன்னொரு தகவல் நீங்கள் காரசாரமாக எழுதியதால் எழுதுகிறேன்.... இங்கு கருத்து எழுதுபவர்களில் புலிகளால் ஆயுதமுனையில் கொண்டுசெல்ல பட்டது நான் ஒருவன்தான். தாஸ் குரூப் என்பதால் தப்பி வந்தோம் இல்லை என்றால் எப்போ மண்ணாகி இருப்போம். எனது மாமா இருவருவரை புலிகள்தான் கொன்றார்கள் ஒருவரை சூசையே நேரடியாக செய்திருந்தார். அவரே பின்பு வந்து மன்னிப்பு கேட்டுவிட்டு போனார் விசாரணைக்குத்தான் அடித்தோம் அடி தவறுதலாக மண்டையில் பட்டு இறந்துவிட்டார் என்று சொன்னார். அவரின் மகள் பெருசாகி இருந்தபோது சூசை அதுக்குதான் முதன் முதலில் 90இல் தன மனைவியுடன் வந்திருந்தார் 20 ஆயிரம் ரூபா காசும் கொடுத்தார் அவர்கள் வாங்கவில்லை. அவர்களும் உங்களைபோலதான் இடைக்கிடை புலிவாந்தி எடுப்பதும் ( நான் நினைக்கிறன் அது ஒரு ட்ரெண்ட் என்று) பின்பு எல்லோரும் எங்கள் பெடியள்தானே என்பதுமாக வாழ்கிறார்கள்)
  8. என்னய்யா நான் எழுதினதையே எனக்கு திருப்பி எழுதுறீங்கள் வாசிச்சுதான் எழுதுறீங்களா? நீதி விசாரணை வேண்டும் அனால் அதை செய்வதுக்கு சிங்களவன் தமிழனை போல சுயநலவாதி இல்லை என்று நானே எழுதி இருக்கிறேனே. யாருக்கும் உரிமை இல்லை என்று கொஞ்சம் கனதியா எழுதுறீங்கள் நீங்கள் ஏதும் நீதிமன்று கட்டி விசாரிக்க போறீங்களா? எனது முன் கூட்டிய வாழ்த்துக்கள். நீங்கள் விசாரித்தால் நீதியும் நேர்மையும் ஏன் உண்மையும் எந்த கலப்படமும் இல்லாது இருக்கும் என்பது எனது நம்பிக்கை
  9. பி பி சியின் தலைப்புதான் ரொம்ப பிரமாதம் உலகை மூளை சலவை செய்வது என்றால் கொஞ்ச இடைவெளி விட்டு விட்டு ஒரு சாக் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் அடுத்த தலைமுறை இதை அப்படியே நம்பிவிடும்
  10. நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களோ தெரியவில்லை நாம் வெளியேறிய நேரம் பணம் + உயிர் உத்தரவாதமும் முக்கிய காரணம் இப்போ ஓரளவு உயிர் உத்தரவாத பிரச்சனை இல்லை என்று சொல்லலாம் தவிர பணம் பொருளாதார சிக்கல் இருக்கிறதுதான் அதே நேரம் நிறைய சந்தர்ப்பங்களும் குவிந்து கிடக்கிறது யாரும் பயன்படுத்துகிறார்கள் இல்லை பணத்தை எப்படி கையாள்வது எனும் அறிவு மிகவும் குறைவு படித்தவர்கள் ஐடி துறையில் அங்கிருந்தே இங்கு உள்ள வருமானத்தில் வேலை பார்க்கலாம் நோ மோர்ட்கேஜ் நோ மெடிக்கல் எவ்வளவு வசதி? ஆனால் மைண்ட் செட் வெளிநாடு என்றே செட்டாகி போனதால் அங்கிருக்கும் வளங்கள் மண்ணாகி போகிறது இனி ஓரளவுக்கு உலகில் எங்கு இருந்தாலும் ஒன்றுதான் மதம் $3000 - 4000 வருமானத்தை உருவாக்கி கொண்டால் எங்கு செலவு குறைவோ ஆரோக்கியமான உணவு கிடைக்கிறதோ இயற்கையான சூழல் இருக்கிறதோ அங்கு நகர்வதே புத்திசாலித்தனம் என்றே நான் நம்புகிறேன். நான் துபாய் அல்லது இலங்கை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்துகொண்டு இருக்கிறேன் முக்கிய காரணம் வரி வரி என்று இங்கு எம்மை உயிருடன் தின்கிறார்கள். அரசாங்க ஊழியர்கள் மெத்தன போக்கு ஒத்து வருவதில்லை என்பதால் இலங்கை செல்ல அதிக இஷடம் இல்லை ஆனால் நிறைய வசதி வாய்ப்பு அங்குதான் இருக்கிறது
  11. இந்த ஒரு பெரும் குறை ஒன்று யாழ்களத்தில் இருக்கத்தான் செய்கிறது நீங்கள் ஏன் பேஸ்புக் இன்ஸ்டகிராமில் முயற்சி செய்ய கூடாது? அல்லது மோகன் அவர்களுடன் பேசி இந்திய ரா அமரிக்க சி ஐ ஏ இஸ்திரேல் மொசாட் உறுப்பினர்களை யாழில் உறுப்பினர்களாக சேர்க்க சொல்லவேண்டும். அவர்களிடம் இருக்கும் தகவல்களை பெற்று யாழ் அறிவாந்தவர்களிடம் காட்டினால் யார் குற்றவாளி என்பதை இலகுவாக கண்டு பிடிக்கலாம். இப்பவும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை ஓரளவுக்கு முயற்சி வெற்றிதான் இப்பதானே 34 வருட ஆண்டு நினைவு வந்திருக்கு பழைய அமேரிக்க அதிபர் டிராம் போல அதே உண்மையை அடிக்கடி அழுத்தி சொல்லிகொண்டுவர 50 வருட நினைவாண்டு வரும்போது 100% வெற்றி கிடைக்க நிறைய சாத்தியம் உண்டு
  12. யார் சுடடார்கள் என்பதை நீங்கள் இங்கு கருத்தெழுதி கண்டுபிடிக்க யாழ்களம் என்ன இன்டர்போல் தலமையகமா? இனி ரஜனியே உயிர்த்தெழும்பி வந்தாலும் அவருக்கு தெரிந்தவர்கள் சுட்டிருந்தால் தவிர யார் சுட்டார்கள் என்பது அவருக்கே தெரியாது உங்கள் இந்த கருத்து உங்களுக்கே கேலிக்கூத்தாக தெரியவில்லையா? ஒரு அமைப்பும் அதை சார்ந்தவர்களும் தாம்தான் சுட்டொம் என்கிறார்கள் ஏன் நீங்கள் ஒற்றைக்காலில் மறுத்து காவடி ஆடுகிறீர்கள் ? 9 வருடம் முன்பு எழுதிய கட்டுரைகளை வருடா வருடம் ஏன் காவுகிறீர்கள்? நீங்கள் யார் சுட்டார்கள் என்பதை யாழ்களத்தில் கருத்தெழுதி எப்படி கண்டு பிடிப்பீர்கள் என்பதை கொஞ்சம் விரிவா எழுதினீர்கள் என்றால் நாங்களும் வாசிக்க ஆவலோடு இருக்கிறோம். உங்களின் பசி என்ன என்பது எங்களுக்கு தெரியாமலா இருக்கும்? அல்லது மேலே ஒருவர் எழுதிய கொன்பிரசி போல எதையாவது அடித்துவிடுங்கள் ஏன் புலிகள் தான் சுடடார்கள் என்றால் .......... சிட்டுவிடம் ஒரு 16 வயது மாணவன் எழுந்து ஏன் சுடடீர்கள் என்று கேட்டார் (யார் சுட்ட்து என்பதே தெரியாது) அவர் பதில் கூறவில்லை மறுக்கவும் இல்லை அகவே அவர்கள்தான் சுட்டார்கள். ரஜனி இறந்தநேரம் சிட்டு தீபன் மாத்தையாவுடன் கிளிநொச்சி காட்டில் இருக்கிறார் 92-93 கலைபண்பாட்டு கழகத்தில் இணைந்த பின்புதான் யாழ் வருகிறார் புலிகள் சுட்டிருந்தால் கூட அவருக்கு இதுபற்றி தெரிய வாய்ப்பில்லை அவர் ஒரு அறிவார்ந்த மாணவன் நோபல் பரிசுகளை வாங்கி நிரைக்கு அடுக்கிவிட்டு அறிவுபூர்வமான கேள்வி கேட்டுவிட்டார் ...... உடனேயே அவருக்கு உட்க்கார்ந்து இருந்து பதில் கொடுத்து இருக்கவேண்டும். சிட்டு உடனேயே முன்னணி காவலரண்களில் நின்றுகொண்டு இருந்த தளபதிகள் பொ ட்டு அம்மான் தலைவரை கூப்பிட்டு அந்த அறிவாளிக்கு பதில் கொடுத்து இருக்கத்தான் வேண்டும் என்ன செய்ய வரலாற்று தவறு நடந்து விட்டது. இப்படி ஒன்றா இரண்டா ? புலிகள் செய்த தவறுகளை எழுதிக்கொண்டே போகலாம் ......... மட்டுக்கள் திரியை பூட்டி விடுவார்கள்.
  13. முகமதுவை எல்லாம் தெரிந்த வல்லவர் கடவுள் என்று கும்பிடுகிறோம் பெறாமகனின் மனைவியை தெரியவில்லை என்றால் சிக்கல் ஆகாதா? இது அடிப்படைக்கே ஆப்படிக்கும் கதையாக இருக்கிறது உலகம் இயக்கத்தில் இருக்க வேண்டும் என்றால் காமம் இருக்கவேண்டும் காமம் இல்லாத உலகம் அழிந்துவிடும் எல்லா உயிர்களும் காமத்தில்தான் பிறப்பெடுக்கின்றன பாவம் புண்ணியம் எல்லாம் நாம் இடையில் சேர்த்தது அதிலும் குறிப்பாக "பாவம்" என்ற சொல்லே 6-7ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தம் உருவாக்கியது பெண்களை அடக்குமுறைக்குள் முதன் முதலில் தள்ளியவர்கள் கிறிஸ்தவர்கள்தான் அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்ட இஸ்லாமியர்கள் பின்பு குருவை மிஞ்சிய சிஷ்யர் ஆக்கிவிட்டார்கள் இப்போதும் மற்ற மத பெண்கள் தான் சினிமா மற்றும் அரைகுறை ஆடை கவர்ச்சி போன்றவற்றால் முஸ்லீம் சமூகத்து ஆண்களுக்கு காமத்தை தூண்டி அவர்கள் அவர்களை ஒரு இயங்கு நிலையில் வைத்திருக்கிறார்கள். உலகில் எல்லா பெண்களும் மூடி கொண்டு எந்த விதியையும் மீறாது திரிந்தால் முக்கால்வாசி ஆண்கள் முனிவராகத்தான் இருப்பார்கள்
  14. இது ஒரு குளிர் நாட்டில் எப்படி சாத்தியம் ஆகும் ? குளிர்காலத்தில் எல்லோருமே முகத்தை மூடிக்கொண்டுதானே திரிவார்கள் ? இனி குளிருக்கு முகத்தை மூடினவனும் வெளிநாட்டு காரனாக இருந்து துவேசம் பிடித்த போலீஸ் இடம் மாட்டினால் அபாரதம்தான் போல
  15. "வரலாம் பிரேயர்ல பங்குபற்றலாம் வணங்கலாம் ஆனால் வேற எதிலும் பங்குபற்ற முடியாது.." களைகளை பிடுங்க கூடாது மகா பாவம் தண்ணி ஊற்றி வளர்க்கணும் அப்பத்தான் ஜனநாயகம் வளரும் (குறித்த) சமூகம் வளரும் கடந்த 30 வருடமாக புலிகளின் அராஜகத்துக்கள் அகப்பட்டு துன்பத்தை அனுபவித்த மக்கள் 2009இல் விடுதலை பெற்று சீரும் சிறப்புமா வாழ்கிறார்கள் ஜேசுவின் பெயரில் அன்பை பொழிகிறார்கள் படித்த அறிவாளிகள் மனித உரிமை நேயர்கள் வந்து ஏழைகள் என்று யாரும் இல்லாது பார்த்து மிகவும் மனிதத்துடனும் கருணையுடனும் பார்த்துக்கொள்கிறார்கள்.
  16. 9 வருஷம் முன்னம் எழுதினதை இன்னமும் யாழ் களத்தில் உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும் என்பது எந்த உள்நோக்கமும் இல்லாமல்தான் நடக்கிறதா? ரஜனி இறந்துவிட்டார் புலிகள் இல்லை புலிகள் செய்தார்கள்/ புலிகள் செய்யவில்லை இதில் தீர்வுகண்டு எங்களுக்கு வர கூடிய ஒரே ஒரு நன்மையை தயவு செய்து கூறுங்கள்? "விட்ட பிழைகளை திருத்துகிறோம்" ஏன் பிரபாகரனிலேயே தங்கி நிற்கிறீர்கள் ? கொஞ்சம் பின்னுக்கு போய் சங்கிலியன் பண்டாரவன்னியன் எல்லாளன் பற்றி ஆராயலாமே? ஏன் அவைகள் ஈழத்தமிழரின் கடந்த காலம் இல்லையா? அல்லது உங்கள் அஜெண்டாவுக்குள் இல்லையா? எல்லா பிழைகளையும் திருத்திய பின்பு இந்த கூடத்தில் யாரும் போய் போராட போகிறார்களா? புலிகள் போல ஒரு ஆயுத புரடசி செய்யபோகிறார்களா? விட்ட பிழைகளை திருத்திறம் .... திருத்திட்டு? புலிவாந்தி எடுக்கிறோம் என்று சொல்லிட்டு எடுங்கள் அல்லது போய் எதையாவது புடுங்கிவிட்டு பினாத்துங்கள் இதைத்தான் நாங்கள் சொல்கிறோம். நாடுக்குக்காக ரோட்டில் இருக்கும் ஒரு கல்லை என்றாலும் அரக்கியவனுக்குத்தான் அதன் வலி உழைப்பு ... சமூகத்தில் இருக்கும் சுயநல கூட்டம் பற்றி தெரியும்
  17. மன்னிக்கவும் ! திரிக்கு சம்மந்தமாக எழுதியது உங்கள் கருத்துக்கு சம்மந்தம் இல்லை ரஜனியை சுடும்போது நீங்கள் பார்க்கவில்லை பார்த்தவர்கள் உங்களை பார்க்கிறார்கள்
  18. இணைப்புக்கு நன்றி புரடசி நேரம் கிடைக்கும்போது வாசித்து கொள்கிறேன் முன்பு ஆடியோ வடிவில் சிலதை கேட்டிருக்கிறேன் இப்படி எழுத்தில் இருப்பது வாசிக்க சுலபம்
  19. ஏன் விசாரிக்க முடியாது? சிங்களவனுக்கு ஈழத்தமிழன் போல சுயநலபுத்தி இல்லை அதுதான் விசாரிக்க முடியாது அவன் தானே தன மக்களுக்கு குண்டு வைத்து கொன்று அந்த பழியை புலிமீது போட்டு வெற்றிகரமாக சாதித்து வாழ்கிறான் இது ஈழ தமிழ் அறிவாளிகளே சக்கரை போட்டு பொங்கி ஊத்துற நேரம் பானையை உடைக்க அவன் என்ன படித்த யாழ்கள அறிவாளிகளா?
  20. இந்திய இராணுவம் வெளியேறியபோது ........... புலிகளின் கதையை இந்தியா முடித்துவிடும் இனி எல்லாம் சுகமே என்று வாழ்ந்த இந்திய ரா வால் கட்டி எழுப்பப்பட்ட பலரும்தான் ஓடினார்கள் எங்கள் வடக்கு கிழக்கு முதல்வர் கூட ஏன் ஓடினார் என்பது புரியவில்லை தனி இராணுவ படை எல்லாம் கூட வைத்திருந்தார் மடியில் கனம் இருந்தவர்கள் எல்லாம் ஓடிவிட்டார்கள் இதில் அவன் ஏன் ஓடினான் இவன் ஏன் ஓடினான் என்பது தெரியாத பேபிகள் இப்போ 30 வருஷம் கழித்து தெளிந்த உண்மைகளை அப்படியே அள்ளி கொட்டுகிறார்கள் நாங்கள் வாசித்து சிலிர்க்கிறோம் இப்ப இந்தUTHR க்கு என்ன வில்லங்கம்? ஏன் வாய் திறப்பதில்லை? செய்யவேண்டிய பணி எல்லாம் செவ்வனவே முடிந்து விட்டதா? எங்கும் சமாதானம் எல்லாம் சமாதானம் ஆயுதங்களை தாருங்கள் நாங்கள் பாதுகாப்பு தருகிறோம் என்று ஈழத்தில் மட்டும் இந்த அழிப்பை அரங்கேற்றி இருந்தால் பரவாயில்லை ருவாண்டாவிலும் அதே வடிவம் அதே பணியில் அப்பாவி உயிர்களை பலியெடுத்தபோது ஐநா வும் ஆட்டுக்குட்டிகளும் எங்கள் வாகனங்களில் அப்பாவிகள் யாரும் நீங்கள் கொல்லும்படி இல்லை என்று திறந்து காட்டிவிட்டு வெளியேறினார்கள் இந்த லட்ஷணத்தில் அவர்கள் மணித் உரிமை பேசி கிழித்துதான் ஈழத்தமிழன் வாழவேண்டும்.
  21. இனத்தை தக்க வைத்து என்ன செய்வது? 2009இல் இருந்து எல்லோரும் தங்கித்தானே இருக்கிறார்கள்? புலிகள் செய்த தவறுகளை அப்படியே கண்கூடாக கண்டு தெரிந்தவர்கள் இங்கு யாழில் சும்மா குப்பைதானே கொட்டுகொண்டு இருக்கிறாரக்ள் அவர்களையும் கூட்டிக்கொண்டு சென்று நீங்கள் முன்னெடுக்கலாமே? எந்த தவறும் செய்யாது முன்னெடுக்க கூடிய அறிவும் தெளிவும் யாழ் கள அறிவாளிகளை தவிர வேறு எங்கு இருக்க போகிறார்கள்? சென்று புடுங்கிப்பார்த்தால் மீதி உண்மைகளும் தெளிவும் இன்னமும் வரலாம் அல்லவா?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.