Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kadancha

கருத்துக்கள உறவுகள்

Everything posted by Kadancha

  1. இந்திய பற்று இருக்கலாம். இல்லாமல் விடலாம் அனால், நான் சொல்வது உணர்வுகளுக்கு அப்பாற்றப்பட்ட யதார்த்தம். நீங்கள் சொல்வது உணர்ச்சி கதை, அரசு என்பதன் பரிமாணப் புலங்கள் (இவற்றில் பல இது தான் தொட்டு காட்ட முடியாது, சிந்தனை அளவிலேயே இருப்பது, புரியப்படுவது, விளங்கப்படுவது ..) புரியாமல். முதலில், அரசகலை என்ற தமிழ் சொல்லால் வரும், புரியப்படும், உருவாகும் விளக்கம் என்ன என்பதை அறிந்து கொள்ளவும்.
  2. இது பொதுவானது. சொல்லப்பட வேண்டும் என்பதால். (பாகிஸ்தான் பிரிவு - தும்பை விட்டு வாலை பிடிப்பது.)) எங்களுக்கு இவளவு அழிவு நடந்தும், இங்கு பாகிஸ்தானின் பிரிவை, அதுவு இந்திய அரசு விரும்பும் என்பது. பாக்கிஸ்தான் பிரிவதை இந்திய அரசு, மற்றும் படை விரும்பாது (இவற்றில் நான் சொல்லிய அதிகார பீட கொள்கை தலையீடு, தீர்மானம். மறுப்பது அவரவரின் பிரச்சனை.). (இந்தியா, பாகிஸ்தான் மிகவும் ஒற்றுமையானா ஒரேயொரு விடயம், இலங்கை 2 அரசுகளாக உடையக்கூடாது என்பதில், மிகுதி எல்லாமே 2ம் - 3ம் பட்சம், ராஜீவ கொலை 1 ம் பட்சமாக பார்க்கப்பட்டது ஒரு சில குறிப்பிட்ட வட்டத்தில் அரசக்குள்ளும், வெளியேயும், ஆத்திரம் இருந்தாலும், முழு அரச அளவில் அல்ல. அனால், புலிகளுக்கு மேல் முழு அரசுக்கும் ஆத்திரம்) இதில் (பாகிஸ்தான் உடைவது) மிக கூர்மையான, நீண்ட, நிரந்தர தாக்கம் இந்திய அரசுக்கே என்பதை இன்னும் இங்குள்ள சிலருக்கு புரியவில்லை. (ஏனெனில் ஏதாவது ஒரு அரசு உடைந்து புதிய அரசு ஏதோ ஒரு பெருமான்மை இனத்தின் அரசாக வரும், அப்படி புதிய அரசு உருவாகி, பிரிய முதல் இருந்த அரசும், புதிய அரசும் சுமுகமாக இருந்தால், , இந்தியாவில் பல கூர்மையான வேறுபாடு பிரச்சனைகளுக்கு அப்படி ஏன் தீர்வு தேடக்கூடாது என்ற நிலை உருவாகும் - மொத்தத்தில் இந்தியாவை Balkanisation ஆக்குவதில் முடியும். இது ஒரு scenario) பங்களாதேஷ் கூட, (முதலில் சுதந்திரத்தில் பாக்கித்தான், இந்தியா பிரிவு இருந்தும்), இந்தியா பிரிக்க முற்படவில்லை. பாகிஸ்தான் படை பங்களாதேஷ் ழு மக்களையும் தாக்காது விட்டு இருந்தால், பங்களாதேஷ் பிரிக்கப்பட்டு இருக்காது. பங்களாதேஷ் பிரிப்பு விதிவிலக்கு. அதாவது, பங்களாதேஷ் இல் பாகிஸ்தானின் இராணுவ நடவடிக்கை, அரசியல்வாதிகளினதும் மேற்பார்வையில் இருந்து இருந்தால், பங்களாதேஷ் பிரிந்து இருப்பதன் சாத்திய கூறு மிக குறைவு. isi முழுதாக முடிவெடுத்து தான் பங்களாதேஷ் நிலை உருவாகிய. பங்களாதேஷ் பிரிந்த பின் அதில் தவறு இழைத்து விட்டமோ (அதாவது இந்திராகாந்திக்கு கடிவாளம் போடவில்லை என்று) என்று கொள்கை தீர்மானம் எடுக்ககூடிய பீடங்கள் அவர்களே தம்மை சந்தேகித்த நிலை இருக்கிறது. அயலக மற்றும் தூர அயலக அரசுகளும் விரும்பாது. மறு வளமாக இந்திய அரசு விரும்புகிறது என்றால், மற்ற அரசுகள் இந்தியா பிரிவதை ஓர் தெரிவாக எடுத்துக்கொள்ளும், எந்த (இந்திய) அரசும் இந்த நிலையை உருவாக்காது. (இப்படித்தான் சீனாவில் இருந்து ஒருவர் இந்தியா பிரிவது / பிரிப்பதை பற்றி எழுதி இருந்தார். அவருக்கு பின் எந்த பகிரங்க ஊடகத்தில் இருந்து ஒதுக்கப்பட்டார். இப்பொது (அநேகமாக) அவர் எந்த துறைசார் துறையிலும் இல்லை.) ஆழ்ந்து பார்த்தால், ஒரு அரசு, இன்னொரு அரசின் நிலத்தை கைப்பற்றுவதை (பாதிக்கப்படும் அரசுக்கு பெரிய மானப் பிரச்சனை என்றாலும்) ஒப்பீட்டளவில் பெரியது அல்ல, ஒரு அரசுக்கு உள்ளேயிருந்து அரசு தரப்பு அல்லாத ஒரு தரப்பு அரச தரப்பு ஆகுவது உடன் ஒப்பிடும் போது என்பதே எல்லா அரசுகளின் பார்வையும். இதை பற்றி ஓரளவு விடயம் தெரிந்த சிங்களவர்களுடன் கதைக்க முடியுமாயின், கதைத்து அவர்களின் உடனடி பதில் என்ன என்பதை இங்கு சொன்னால் நல்லது. (தமிழரில் பொதுவான பிரச்சனை , அரசு நெடுங்காலம் இல்லாமல், அரசு (கொண்டுள்ள இனங்களின்) சிந்தனை புலத்துக்குள் இருந்த்து விலத்தி விட்டோம்). (இந்தியாவில் உள்ள தனி அமைப்புகள் பாகிஸ்தான் பிரிவு விரும்புவது வேறு, பிஜேபி, ரஸ்ஸ் உள்ளடக்கம்) (ஈழத்தமிழரை பொறுத்தவரை இந்திய அரசு அமைப்பு, மற்றும் பிராந்திய நிலைமை, பார்வை ஒரு சாபம். அப்படி , இன ஒடுக்கல், அழிவில், இந்தியாவால் பிரிக்கப்பட்ட பங்களாதேஷ் எமது பிரிவை எதிர்க்கிறது, பாக்கிஸ்தான் பிரிவை விரும்பவில்லை, ஏனெனில் தங்களுக்கும் அந்த நிலை வரலாம் என்று)
  3. பகிஸ்தாகனிடம் அமெரிக்கா f-16 இருக்கிறது. அவை 80 களில் வாங்கப்பட்டது. அனால், பாவிப்பு ஒப்பந்தம் (EULA) தடுக்கிறது, இன்ஹியாவுக்கு எதிராக பாவிப்பதை. இதனால் தான் பாகிஸ்தான் 4-5 தலைமுறைவிமானங்களை சண்டை விமானங்களை சீனாவிடம் இருந்த்து கொள்வனவு செய்தது. சீன நிபந்தனைகள் போடுவதிலை, விற்கும் தொழில்நுட்பத்தை பாவிப்பது, வாங்கும் அரசின் நியாயாதிக்கத்துக்கு உட்பட்டவை என்பது சீனாவின் நிலைப்பாடு. ஆனால், பொதுவாக பாகிஸ்தான் அமெரிக்கா செல்வாக்கு கோளத்தில் இருந்து விடுபட்டு விட்டது. cpec (china pakistan economic corridor ) , BRI, பரந்த பொருளாதார, சீனாவே பாகிஸ்தானின் மிகப் பெரிய வர்த்தக பங்காளி, ஆயுத, உளவு போன்ற உறவுகளை வளர்த்து. இதை குழப்பும் / மாற்றும் ஒரு நோக்கத்திலும் (முன்பு சொல்லியது) மற்றும் சீன தொழிநுட்பத்தை கேலிக்கு உரியதாக்கவும் (சீனா தொழில் நுட்பம் வேலை செய்யாது என்ற எதிர்பார்ப்பில் ), தாம் (மேற்கு, அமெரிக்கா) நல்ல பிள்ளைகள் போல வெளிப்படையாக ஒன்றும் சொல்லாமல், தலையிடாமல் இருந்தது, தெளிவான வெற்றி தோல்வி இல்லாவிட்டாலும், இந்தியா பாகிஸ்தானின் பெருமளவு ஆயுத வளங்களை அளித்து விடும் என்ற நம்பிக்கையில். உண்மையில், அவை இந்தியாவை ஆதரித்தன. (சர்வதேச, அரசுகள் விடயங்களில் எதிர்கா விட்டால் ஆதரிப்பது என்பது ராஜதந்திர நிலைப்பாடு / பொருள்) அது பிழைத்து, புளித்து போயிவிட்டது. இதில் அமெரிக்கா அதுவாக தலையிட்டது என்பதன் ஒரேயொரு சூழ்நிலை ஆதாரம், இந்யா பகிரங்க அறிவுப்பு எதையும் வெளியிடவில்லை, அமெரிக்கா அனுசரணையை, உதவியை வேண்டி. (அனால், இந்தியாவுக்கு ராஜதந்திரமாக சொல்லி இருக்கலாம் உங்களால் பாகிஸ்தானை சமாளிக்க முடியாது, தொடர்ந்தால் கோவணமும் போகவேண்டிய நிலை வரலாம் என்று. அதனால் அமெரிக்காவின் மோதலை தணிக்கும், நிறுத்தும் அனுசரணை, உதவிக்கு அனுமதிக்கும் படி) பொதுவாக, இப்படியான நிலைமைகளில் அமெரிக்கா வலியுறுத்துவது அனுசரணை, உதவி வேண்ய அரசு பகிரங்க அறிவுப்பு விட வேண்டும் என்று . குறிப்பாக தலையிட மாட்டோம் என்று முன்பு சொல்லிய விடயங்களில். ஏனெனில், அமெரிக்கா இந்திய இழப்பை, அதுவும் போர்விமானங்கள் (ஆகாய மேலாண்மை இழப்பு) இழப்பை எதிர்பார்க்கவில்லை, இந்தியா இழந்தது அமெரிக்காவுக்கு முகம் கறுத்து விட்டது.
  4. எதை சொன்னாலும் அவர்கள் ஒரு அரசு. அதற்கான கெளரவம் எங்கும் இருக்கிறது. பாகிஸ்தான் கூட இந்தியா மீது அப்படியான மரியாதை வைத்து இருக்கிறது. அப்படியே அதன் தலைமைகளுக்கும் கெளரவம் எங்கும் இருக்கிறது. இவை இரண்டும் அடிபடும், ஒன்றுக்கு ஒன்று சம நிலையில் அரசுக்களாக. (அனால் எமை அவர்கள் அரசாக, ஏன் மக்களாக கூட ஏற்றுக்கொள்ளவில்லை.) அதை மறந்து விடாதீர்கள்.
  5. cruise missile பயணிக்கும் முறை, நிலம் அல்லது நீர்மட்டத்தோடு ஒற்றி. எந்த மின்காந்த அலைகளும் (ரேடார், laser ..) அப்படி நிலம் அல்லது நீர்மட்டத்தோடு ஒற்றி, சக்தி இழக்காது பிரயாணிக்க முடியாது. (ஒப்பீடு, இடி, மின்னலையே, அதாவது அவ்வளவு சக்தியை நிலம், நீர் உறுஞ்சி விடுகிறது ) அது தான் மிக கடினம் cruise missile ஐ அடையாளம் காண்பது அப்படி, நில, நீர்பரப்பை தன்மையை (உ.ம். மலைப்பாங்கில் கடினம்) பொறுத்து, போர்விமானகளும் பயணிக்க முடியும். மிகச் சிறந்த வரலாற்று உதாரணம், இஸ்ரேல் போர்விமானங்கள் , அப்படி சினாய் (எகிப்து) இல் இருந்து தாழ்ந்து நிலத்தோடு ஒற்றி பறந்து , எகிப்த்தின் ரேடார் இல் விழாமல் , எகிப்து போர்விமான தரிப்பு இடத்தை அடைந்து, எகிப்தின் விமான படையின் எல்லா போர் வினங்களையும் ஒரே தடவையில் அழித்தது. (அனால், எகிப்தின் சிந்திக்காத விமானப்படைக்கு, ஏன் போர் விமானங்களை?, எந்த படையாவது எல்லா போர் விமானங்களையும் ஓர் இடத்தில திறந்த வெளியில் தரித்து வைக்குமா?, சிந்தித்து இருந்தால்) பாகிஸ்தான் விமானப்படையில் தெரிவது இஸ்ரேல் இன் சிந்தித்து, நிதானித்து, திட்டம் தீட்டி, பொறிவைத்து அடிக்கும் போக்கு.
  6. இவை தென்சீன கடல், தாய்வானில் தாக்கத்தை ஏற்படுத்தும். முன்பு சொன்னது போல சீனாவின் அணுகுமுறை 2 வழிகளில் - ஒன்று மேற்கிட்ம் இருக்கும் தொழில்நுட்பத்துக்கு ஒத்தது, மற்றது எதிரானது , 2 ஐயும் விருத்தி செய்கிறது. அத்துடன் , அது எண்ணிக்கை / தரம் என்ற சமன்பாட்டையும் முழு துறைகளுக்கும் பிரயோகிக்கறது. (இதை பல அமெரிக்கா தளபதிகளே உத்தியோக பற்றற்ற முறையில் ஏற்றுக்கொள்கிறார்கள்) அனால், எல்லாவற்றையும் விட, மேற்கு முன்பு தொழில்நுட்பத்தை எதிராக பாவித்த தரப்புகள் சமச்சீர் இல்லை - ஒன்று தொழில் நுட்பத்தில் குன்றியவை, அதை அடைவதில் விருப்பம் இருந்தாலும், பண, வள வசதி இல்லாதவை. இப்பொது தான் மேற்கு அரசுக்கள் - அவற்றை தொழில்நுட்பத்தில் விஞ்ச வேண்டும் என்ற அவாவும் , அதுக்கு வேண்டிய மதி, மன, பணம், மற்றும் வளங்கள் கொண்ட அல்லது பெறக்கூடிய பெரிய மக்கள் கூட்டத்தை கொண்ட அரசை வரலாற்றில் காண்கிறது. அதன் இயற்கையான ஆரம்ப தாக்கங்களே இவை. (முன் சொல்லிய தென்சனா கடலில் நடந்தது - அமெரிக்கா அணி முடக்கப்பட்டது , Nancy Pelosi தைவான் வந்ததை சீனா தடுக்க முடியாமல் போனதன் விளைவாக, சீன தொழில்நுட்பம சார்ந்த தடுக்கும் முறைகளை ஆராய்ந்ததில் வந்த ஒரு வவிளைவு) .
  7. எதுவாயினும்,இந்தியா செய்த / செய்யாத அரசியலோடு இந்த இழப்பு / தோல்வி தொடர்பு படவில்லை. இநதியாவின் கொள்கையான ஒரு பகுதியில் / தரப்பில் மட்டும் ஆயுதத்துக்கு தங்கி இருக்க கூடாது எனும் கொள்கை அப்படியே இருக்கிறது. இநதியா அரசாங்கங்கள் அவ்வப்போது supplier ஐ தெரிந்து எடுப்பது போல, பல்வேறு காரணிகளின் அடிப்படையில் ஆயுத கொள்வனவு நாடுகளை மாற்றுவது. இதன் அடிப்படை சீனாவின் இராணுவ துறைசார் சிறப்பு தேர்ச்சி, தொழில் நுட்ப வளர்த்தி, அதை இந்தியாவும் , மேற்கு எள்ளிநகையாடி புறக்கணித்தது. குறிப்பாக பாகிஸ்தானை கொசு போல அடித்து சப்பள்ளிக்கலாம் என்ற நம்பிக்கை. தவிர இந்தியாவுக்கு மேற்கின் வரவேட்ப்பு எப்போதும், எதிலும் இருக்கிறது. மாறாக எந்த மேற்கு தொழில்நுட்பம் கிடைத்து இருந்தாலும், இந்தியாவுக்கு இதுவே முடிவாக இருந்து இருக்கும், பாகிஸ்தான் செய்தது போல (வேறு எந்த நாடு இந்தியாவை எதிர்த்து இருந்தாலும், சீனாவின் பின்னணியுடன்). அது போல சீன ஆயுத, தொழ்ல்நுட்ப, சிறப்பு தேர்ச்சி வழங்குதல் / விற்பனை, இந்தியாவின் அரசியலில் தங்கவில்லை . உண்மையில் சீன, சர்தேச வாடிக்கையாளரை பிடிப்பதில் முயற்சி எடுக்கிறது, ஏனெனில் இதுவரை மேட்ற்கு தொழில்நுட்பம் பலவேறு யதார்த்த நிலைமைகளில் பாவிக்கப்பட்டு, அதன் நம்பகத்தன்மை யதார்த்தம் வழியாக என்பதால். பாகிஸ்தானுக்கு சீன பயிற்றுவித்து இருக்கிறது இந்த துறைகளில், தொழில்நுட்பங்களில் . ஆனால் , பாகிஸ்தான் அதை அப்படியே உள்வாங்கி கொண்டு வேலை செய்யும் என்று இல்லாமல், எப்படி பாவித்தால் வினைத்திறன் கூடியது என்பதை சோதித்து அதுவாக தீட்டிய திட்டம். (அநேகமாக சீனாவவுக்கே விபரங்கள் தெரியாது இருக்கும் - உறவும் அப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சீனாவிடம்) தொடர்பாடல் ஐ இப்போதைய நிலையில் ஊடறுப்பது சில நாட்கள் , வார வேலை அல்ல, அதுவும் சண்டையில் ஊடறுக்கப்படும் என்ற நம்பகத்தன்மை உருவாகுவதற்கு. அதாவது, இந்தியாவின் மிக நலிந்த பகுதியை பாகிஸ்தான் ஆய்ந்து அறிந்து உள்ளது. லாவகமாக பாவித்து உள்ளது. (தொடர்பாடல் இல்லாவிட்டால் அடுத்தது என்ன என்பதற்கும் பாகிஸ்தான் வைத்து இருக்கும்) இப்படியான திட்டமிடல் இந்தியாவிடம் இல்லை என்பது வெளிப்படை. இந்தியாவின் நம்பிக்கை பலத்தால் பாகிஸ்தானை (அடித்து) வீழ்த்தலாம் என்று. அமெரிக்காவும் / மேற்கும் அதை நம்பி இருந்த / இருக்கும் தோற்றமே இருக்கிறது. பாகிஸ்தானை இந்தியா வழி அடித்து, சீன விமானப்படை தேர்ச்சி / தொழில்நுட்பம் கைகொடுக்காது என்ற நிலையை உருவாக்கி, மேற்கின் / அமெரிக்காவின் செல்வாக்குக்கு கீழ் கொண்டு வருவது. (மற்றது, இன்னொரு மிக முக்கியமான காரணி, இதுவரை மேற்கு / ருசியா தொழிலநுட்பம் பாவிக்கப்பட்டது (ருசியா - உக்கிரைன் தவிர) சமச்சீர் இல்லாத, தொழில்நுட்பத்தில் மிகவும் குன்றிய தரப்புக்கு எதிராக . அப்படி சமச்சீர்அல்லாத Houthi உடன் அமெரிக்கா சமாதானம் பேச வேண்டிய நிலை. தொழில்நுட்பம் கணிசமான அளவு சனநாயாக மயப்பட்டு விட்டது (இதில் பாகிஸ்தானின் தொடர்பாடல் ஊடறுப்பது இருப்பது போல) )
  8. இந்தியாவ்வின் அந்த பரப்புக்குள் வைத்து பாகிஸ்தான் இந்திய விமானங்களை அழித்தது, எவர் கை ஓங்கி இருக்கிறது என்பது வெளிப்படை. வீடியோ இல் இருப்பது உண்மை என்றால் பாக்கிஸ்தான், தொடர்பாடலையும் ஊடறுத்து இருக்கிறது போல இருக்கிறது. அது பெரிய தோல்வி இந்தியாவுக்கு. ஏனெனில் இப்போதைய தொடர்பாடல் எல்லாம் encrypted. இதனால் தான் பாகிஸ்தான் அத்தனை இந்திய விமானங்களை அழிக்க முடிந்ததாக இருக்கலாம். (ஏனெனில் , தொடர்பாடலை ஊடறுத்தால் பொறிவைக்கலாம். அதுவும் ஒலியின் வேகத்திலும் கூடிய விமானங்களில், இருட்டை தவிர வேறு எதுவுமே தெரியாத நிலையில். தொடர்பாடல் ஒரு கண்.) (இந்தியவின் பாக்கித்தான் மீதான தாக்குதல் நிலையான இலக்குகள் மீது, பாகிஸ்தான் ஏவுகணைகளை தடுத்தது ஆகவும். பாகிஸ்தானும் இந்திய ஏவுகணைகளை தடுத்தது ஆகவும்) அனால், மனித வினைத்திறனை இயக்கப்படும் விமானம் இந்தியாவ்வின் அந்த பரப்புக்குள் வைத்து அழிக்கப்பட்டது என்பது, வான் மேலாண்மையை இந்தியா அந்த சந்தர்ப்பத்தில் இழந்துவிட்டது. அதுவும் 1 க்கு மேற்பட்ட (dropping like flies என்று துறை சார் பேச்சு மொழியில் அழைப்பது) இது காட்டுவது, இந்தியா விமான படை அமைப்பில் பிரச்சனைகள் இருக்கிறது என்பது. முதல் சொன்னது போல, இது ஒரு அம்சம் அல்ல, மனித திறன், பயிற்சி, தொழில்நுட்பம், உளவு, tactics, திட்டங்கள் போன்றவை எல்லாம் ஒருங்கமையும் போது ஏற்படுவது விமான வான் தாக்குதல் அழிவுகள் எதிரிக்கு. (இதனாலேயே, மேற்கு (ஆய்வாளர்) இதுவரை சீனாவின் போர்விமான வான் பலத்தை எள்ளி நகையாடுவது , எந்த தொழில் நுடம் என்றாலும் சீனாவுக்கு யுத்தக கள யதார்த்த அனுபவம் இல்லை என்று). (இந்தியா நிரந்தரமாகவும் மேலாண்மையை இழந்து இருக்கிறதோ தெரியாது, அதுக்கு முதல் அமெரிக்கா புகுந்து நிறுத்திவிட்டது, அமெரிக்கா இந்திய விமான அழிவை எதிர்பார்க்கவில்லை என்பதும்) தொடங்கும் பொது இந்திய-பாகிஸ்தான் என்று தொடங்கி முடியும் போது அமெரிக்கா / மேற்கு - சீனா என்று முடிந்து இருக்கிறது. பாகிஸ்தானின் விமானம் ஏதாவதை இந்தியா வானில் தாக்கி அழித்து இருக்கிறதா? (அப்படி என்று சில செய்திகள் முதலில் வந்தது.) மறு வளமாக, இந்திய பாக்கிஸ்தான் தொடர்பாடலை ஊடறுத்து உள்ளது என்பதற்கு ஏதவாது வெளியிட்டு இருக்கிறதா?
  9. இதில் அமெரிக்கா, இந்தியாவுக்கு உளவில் உதவி இருப்பதன் சாத்திய கூறு மிக அதிகம் (ஏனெனில், இரு தரப்பு, பல் தரப்பு பயிற்சிகளும், அடிப்படை புரிந்துணர்வு ஒப்பந்தங்களும். Trump பதவிக்கு வந்த கையுடன் இருப்பதை சற்று விரிவுபடுத்தி, ஆழப்படுத்தி செய்து இருந்தார் ). பாகிஸ்தான் எதிர்பார்த்து இருந்ததும் என்றதும் யதார்த்தம். ஆனல், பாகிஸ்தானுக்கு எவ்வாறு தெரிந்தது, இந்திய போர்விமான்கள் குறிப்பிட்ட நேரத்தில் கிளம்புவது, குறிப்பிட்ட ஆகாய பிரதேசத்துக்கு வருவது? (இவற்றின் கடுமையை, முக்கியதுவத்தை, அதுவும் ஒலியின் வேகத்திலும் கூடாவாக உள்ள போர்விமானகளை இயக்கும் போது - அனுபவம் உள்ளவர்களோடு கதைத்தால் தெரியும். ஏனெனில் ஒன்றை ஓன்று நேரடியாக பொதுவாக காண்பது இல்லை வான் நாய்ச் சண்டையில், குறிவைப்பது அடிப்படையாக ரேடார் பூட்டினால் , radar locking, கிட்டத்தட்ட இருட்டில் டார்ச் அடித்து தேடுவது போல). மேற்கின் stealth தொழில்நுட்பம் என்பதும் வரும் ரேடார், லேசர் (ஒளி) சமிக்ஞையை தவிர்ப்பது, சிதறடிப்பது, உறுஞ்சுவது , மற்றும் வேகத்தினால் சமிக்ஞை புலக்கோளத்தில் இருந்து அகலுவது போன்றவை. அனால், இப்போது சீன செய்வது, அதுக்கேற்ற (மேற்கில் உள்ளது போன்ற ) தொழில்நுட்பத்தை விருத்தி செய்வது, மற்றது எதிரான தொழிநுட்பத்தையும் விருத்தி செய்வது. அதே போல, இந்தியா தரை வழி ஏவுகணை (இந்தியாவிடம் அதன் உற்பதி இருக்கிறது, Brahmos , cruise missile மூன்று ஊடகத்திலும் இயங்க கூடியது, இந்தியா அறிவுப்பு படி), அது பாவிக்கப்படவில்லை என்பதும். தடுப்பது போர்விமானதை விட கடுமையானது, ஏனெனில் தரையை (அல்லது நீர்மட்டத்தை) ஒற்றி பயணிப்பதால். (இந்தியாவின் (எந்த நாடகிலும்) தெரிவுக்கும் காரணம் - பிழைத்தால் வேறு நாட்டின் தொழில்நுட்பம், இந்தியாவில் தொழில் நுட்பம் பாதுகாக்கப்படும், வேறு கைகளுக்கும் கிடைக்காது.) இவை எல்லாம் சுட்டுவது, சீன பாகிஸ்தானுக்கு உளவில் உதவி இருப்பதன் சாத்திய கூறும் அதிகம். இதன் யதார்த்தம், மேற்கை போல, சீனாவும் இலத்திரனியல், மற்றும் செய்ம்மதி உளவில் வளர்ந்துள்ளது என்பது. வேறுபாடுகளும் இருக்கலாம். இதன உடனடி விளைவுகள் - சீன பங்கு சந்தையில் இராணுவ, பாதுகாப்பு துறை பங்குகள் உச்சமாக 30% கடந்து கூடியது. நீண்ட, மத்திம கால பொருளாதார, இராணுவ, அரசியல் விளைவுகளும். ஏனெனில், மேற்கு, வேறு வேறு நாடுகளின் தொழில்நுற்பம் என்றாலும், களத்தில் தொழிநுட்ப படைத்துறை ஒருங்கமைவு, ஒருங்கிணைப்பு என்பதில் மிகவும் செலவழித்து கட்டி எழுப்புவது, பயிற்சி அனுபவத்தினால்.
  10. இந்தியா, பாக்கிஸ்தான் நிறுத்தியது (அமெரிக்காவால் நிறுத்தவைக்கப்பட்டது), சீன தொழில்நுட்பம் உண்மையில் விஞ்சியது மட்டும் காரணம் இல்லை. (பாரிய பொருளாதார, போர்விமான / ஏவுகணை தொழில்நுட்பம் பொருளாதாரத்தையம் கடந்து, மறுவளமாக, இந்தியா ஓங்கி இருந்தால், அமெரிக்கா, மேற்கும் பெரிய முயற்சி எடுத்து இருக்காது) இந்த விடயத்தில், மேற்கு மற்றும் இந்திய ஆய்வாளராது, சளப்பும் கதையான, tactics ஆல் நடத்து இருக்கலாம் என்பது. சீன பாகிஸ்தானுக்கு tactics இல் மேற்கு அளவு போர்விமான வான் (நாய்ச்)சண்டையில் (dog fighting) அனுபவம், புடம் போடப்பட்டது இல்லை. இந்தியாவின் போர்விமான வான் (நாய்ச்)சண்டை (dog fighting) பயிற்சி, tactics மேற்கில் இருந்து; இந்தியா மேலும் களத்துக்கு ஏற்ப மாற்றங்கள், அதன் பார்வையில் மெருகூட்டுதல் செய்து இருக்கலாம். எனவே, சீனா, பாகிஸ்தானுக்கு பயிற்றுவித்த போர்விமான வான் (நாய்ச்)சண்டை (dog fighting) கோட்பாடுகள், tactics இல் புதுமைத்துவதை சீன செய்து இருக்கிறது, தொழிநுட்ப புதுமைத்துவதுடன். இதில், முக்கிய அம்சம், பாகிஸ்தானிடம் இருக்கும் போர்விமானம், ஆகாய-ஆகாய ஏவுகணைகள், tactics சீன அதுக்கு வைத்து இருபதின் மட்டுப்படுத்தப்பட்ட வினைத்திறனும், தொழில்நுட்ப மெருகும். (சரவதே ஆயுத, தொழில்நுட்ப வர்தகத்தில் விற்கும் நாடுகள் சாதாரணமாக செய்வது). ஆயினும், பாகிஸ்தான், இந்தியா களம் சிறிது. இது பாரிய சண்டையில், சீன, மற்றும் அது பயிற்றுவிக்கும் அணிகளுக்கு, systemic risk அல்லது advantage ஆக இருக்குமா என்பது தெரியாது. இதில் அலட்டாமல் இருக்கும் தரப்பு (சீன) எதுவென்று பார்த்தல் புரியும், ஒப்பீட்டளவில் எவரின் மேலாண்மை ஓங்கி இருக்கிறது என்று. பொதுவாக சர்வதேச ராஜதந்திரத்தில் செய்யப்படுவதும், தரப்பின் மேலாண்மை ஓங்கினால் அது அமைதியாக இருக்கும். அதாவது, காரியத்தில் கண்ணாய் இருப்பது. இதில் இன்னொன்று இந்தியா தன்னை அணியாக கருதுவது, சொல்வதுக்கும், அதன யதார்த்தத்தை மற்றவர்கள் அங்கீகரிப்பதும். தனி அணியானதன் மிக குறைந்த தகுதி, சொந்த இராணுவ தொழில் நுட்பம். (இதே போலவே, மேற்கு சொல்கிறது சீனாவுக்கு கடல் சண்டையில் அனுபவம் இல்லை என்று. அனால், மேற்கின் 80 - 90 வருட அணு சக்தி அல்லாத விமானந்தாங்கி இயக்கும் அனுபவத்தை, சீன 20 வருடங்களில் அடைந்துள்ளது என்பதும். ஆயினும் 2024 ஆடியில் வெளியில் தெரிந்தது ( நடந்தது 2023 கடைசி / 2024 தொடக்கம்). தென்சீன கடலில் சீன - அமெரிக்கா கடல் அணிகள் (carrier fleet) ஒன்றோடு ஒன்று எதிர்கொண்டு, அமெரிக்கா இயலாமல் அதுவாக விலத்த வேண்டி வந்ததும். அதில் நடந்தது, இலத்திரனியல் போர்முறை ஊடக, கொலை வலையில் சிக்குண்டு, ஏறத்தாழ அமெரிக்கா அணி முடக்கப்பட்டது. அமெரிக்கா அணியின் தளபதி உடனடியாக பணி நிறுத்தப்பட்டதும் (https://interestingengineering.com/military/china-ai-radar-defeat-us-growlers) ஆனால், ஒவ்வொரு அம்சமாக அல்லாமல், சீன முழு (போர் கள) விளையாட்டையும் மாற்றி வைத்து இருப்பதும். இவைகள், இப்போதும் சீன கடற்படையை ஆழ்சமுத்திர கடற்படை (Blue Water Navy) தன்மையை உடைய கடற்படையாக உருவாக்கவில்லை என்பதும். ஆனால், சீன Brown Water Navy (ஒப்பீட்டளவில் மிக குறைந்த ஆழம் கடலில் இயங்கும் கடற் படை) தன்மையை கடந்து, Blue water navy தன்மையை நோக்கி வளர்ந்து கொண்டு இருக்கிறது என்பதும். இதில் மிக முக்கியம், சீனாவின் Blue water navy க்கான வளர்த்தி பாதை மேற்கை ஒத்ததாக இருக்க வேண்டியது என்பது கட்டாயம் இல்லை. இதை சொல்வட்டன் காரணம்,சீனாவின் வளர்த்தி, அதனுடன் கேந்திர, தந்திரோபாய அடிப்படையில் (சீனாவுக்கு allies இல்லை, அப்படி இருக்க கூடாது என்பதே இதுவரையில் கொள்கை) ஒத்தியங்கும் விமான, கடற் படைகளுக்கு தொற்றும், பல விடயங்களில் மேற்கு, மற்றும் அதன் சார்பு, ஒற்றிய விமானப்படைக்கு என்றும் எதிர்பாராத, பயிற்றுவிக்கப்படாத, புதிய நிலைகள் உருவாகும் சந்தர்ப்பங்கள் கூட; சண்டை, யுத்தத்தில் அழிவும் கூடவாக இருக்கும் சந்தர்ப்பங்கள் கூட).
  11. இது தான் உண்மையில் நடந்து இருந்தால், (rss இல் உள்ளவர்கள் தேர்தலில் ஈடுபடாத அரசியல்வாதிகள் என்பது உங்கலின் வசதி, இதன் மூலம் RSS பற்றியும் உஙளுக்கு புரியவில்லை என்றே எடுக்க வேண்டி இருக்கிறது). (rss இன் கொள்கை, போக்கு அது அரசியலுக்கு அப்பால், நியாதிக்கமும், அதிகாரமும். -சீனாவில் Confucius தத்துவ அமைப்பு போல (ஒரு முக்கிய காரணம் cpc அரசியலுக்கு அப்பால் என்பதற்கு) . அதே போல rss இந்துத்துவா தத்துவ அமைப்பு, இரண்டிலும் ஒற்றுமை, தத்துவம், அமைப்பு அரசியலுக்கு அப்பால். RSS அதன் ஆரம்ப இரகசிய போக்கையும் முற்றாக கைவிடவில்லை என்பதும்). சுப்பிரமான சாமி சொன்னது சரி என்று வருகிறது (நான் முதலில் சொ என்பதும்ன்னது அரச அதிகாரிகள் / அதிகார பீடம் தான். அனால், சுப்பிரமணிய சாமி சொன்னதில் சொன்னது வேறு ஏதும் அதிகார பீடம் இருக்கிறதா என்று கேள்வியும் எழுதி இருந்தேன்). சுப்பிரமான சாமி சொன்னது - அதாவது, அரசியல்வாதிகள், முக்கியமாக மக்கள் பிரதிதியாக அதிகாரத்தில் உள்ள அரசியல் வாதிகளை மேவி கொள்கை, முடிவுகளை தீர்மானிக்கலாம். ஆனால், கொள்கைகள் நீங்கள் சொலவ்து போல மாற்றப்படுவது இல்லை. அப்படி செய்ய செய்ய முடியாது, அதுவும் வரலாற்று கொள்கையை. (இதை பதிய பந்திகள் தேவை) வெளியே காண்பது, இறுதி படிகள், பரந்த ஆதரவு, அதிகார தளத்தில் ஆமோதிப்பும், ஆதரவையும் திரட்டுவது. RSS ம் கொள்கை முடிவில் , மாற்றத்தில் பங்கு வகித்து இருக்கலாம். சிந்திக்கவும் என்று சொல்லி இருந்தேன்.
  12. என்ன எதை விட்டாலும் சிந்திக்க தெரியவில்லையா? இணையத்தை மட்டும், சிந்தனை இலலாமல், நம்பி இருந்தால் இது தான் நிலை. தனியே அரசியல்வாதிகள் தான் என்றாலும் (அதற்ககா நான் அப்படி சொல்லலை) எந்த திசையில் நகர்வது? குறிப்பாக கட்சி பதவியில் இருக்கும் போது. அதிகாரத்தில் இருந்து (முடிவுகளை எடுத்து விட்டு) அரசியலை நோக்கியா, அரசியலில் இருந்து அதிகாரத்தை நோக்கியா? சாதாரணமகா கட்சிக்கு உள்ளேயும், கொள்கையை (முடிவுகளை) வகுத்து விட்டு அரசியல் ஆக்குவதா, அரசியல் ஆக்கி விட்டு முடிவு எடுப்பதா? சொந்தமாக சிந்திக்க தெரியாத ...
  13. எதிர்பார்த்தது தான். சொல்லுவதே புரியாமல், இணையத்தை நாடிய விற்பன்னர். இணையத்தை நாடாமல் சொல்லி இருந்தால், ஊகம் என்றாலும், சொந்த அறிவில் சொந்த சிந்தனை சொல்வது எனலாம். இருந்த கொஞ்ச சொந்த அறிவையும் (அதும் இப்போது சந்தேகம், இணையத்தை பாவித்து) பாவிக்க தெரியாத, ஏனெனில் அந்த அறிவை கேள்விக்கு உள்ளாக்க, அல்லது அல்லது பாவிக்க தயங்கும் , மதி, மன கோழைத்தனம். இணையம் இல்லாவிட்டால், சொந்த அறிவில், சிந்தனையில் உங்களிடம் இதில் ஒன்றும் இல்லை என்றதை நீங்களே நிரூபித்த ... கோமாளித்தனத்துக்கும் தகுதி இல்லாத ... (கோமாளிகள் அவர்களே உடனடியாக சிந்தித்து நகைசுவை உருபாக்குபவர்கள்) முதலில் சுயமாக சிந்திக்க பழகவும். நீங்கள் விட்டு இருக்கும் கோமாளித்தனத்துக்கும் தகுதி இல்லாத கீழே ஒவ்வொன்றும். உங்களுக்கு தெரியவில்லை என்றால் பொய், அவியல் அல்லது இருக்க முடியாது. இது உங்களின் வழமையான போக்கு . எனது நம்பிக்கைக்கும் தமிழ் தான் விளக்கம், நம்பிக்கையான அச்சு ஊடகம் என்பதால். (அனால், BBC சொல்கிறது, மில்லியன் கணக்கானோர் அவர்களின் அரச தொடர்பு தெரியாமல் இருக்கிறார்கள் என்று. தேடுவதில் வல்லவர் தானே தேடி பார்க்கவும்) முன்பே சொன்னது, அறிந்ததுக்கு அப்பால் சிந்திக்க முடியவில்லை. கோமாளித்தனத்தை போடு உடைத்து காட்டிவிட்டு ... மற்றவருக்கு ஒன்றும் தெரியாது என்ப முதலே சொல்லியாகிவிட்டது. அனால், எனது பதிவு உங்களின் (தேடிய) பதிவுக்கு கணிசமான நேரத்துக்கு முதல். எனது பதிவை ஒன்றும் தெரியாத பரிகாச மேற்கோளாக நீங்கள் சொல்வதும் (விடயம் புரியாமல்) . அச்சு, இணையத்தில் 10 -16 வருடங்களுக்கு முதல் அறிந்தும், ஜுஸ்டின் கேட்ட போது, எந்த தேடுதல் இல்லாமலும், இருக்கும் அனுபவம், அறிவை கொண்டு சுயமாக சிந்தித்து சாத்திய கூறுகள் பற்றி பதில் சொல்வது. ஆனல், அதில் எப்போது வழங்கப்பட்டது என்பதே நான் சொல்லியத்துக்கு (பதவிக்கு வரும்போது இல்லை என்பது) முக்கியம். சும்மா இன்டர்நெட் தேடி எடுத்து ஒப்பிப்பது அல்ல. முதலில் சொன்னது போல சுயமாக சிந்திப்பதை வளர்க்கவும். அதுக்கு அறிந்ததை (இதில் 10 -16 வருடங்களுக்கு முதல் அச்சு, இணையம் வழி அறிந்தது) சுய கேள்விக்கு, புரிவு சரியா, யாதார்தத்துடன் ஒத்து வருகிறதா, முரண்பாடுகள், விதிவிலக்குகள் ஏன் போன்றவற்றுக்கு உள்ளாக்கும் தன்மை, விருப்பு வேண்டும்.) ,இது அவரை பற்றிய திரி. உங்களுக்கு வேண்டாம் என்றால், இல்லை அறியவில்லை என்றால். நான் அப்படி சொன்னதாக கற்னை , திரிப்பு, அல்லது புரியாமை? எது? உங்கள் வழமையான பாணி, சொல்வதில் வசதியானதை எடுத்து போர்த்துவது (அப்படி சொல்லப்பட்டு இருக்கிறதா என்பாதை கூட பார்க்காமல்) மொத்தத்தில் நான் சொல்ல முனைவது / சொல்வது / சொன்னது எது என்று தமிழிலும் புரியாத மேதை. சொந்த சிந்தனை இல்லை. புல்லெது, புதரெது என்பதை சொல்லியும் விளங்காமல், சிந்திக்கவும் தெரியாத ... (இதில் விதிவிலக்காக சொல்வது) ஆங்கில சொல்லிணக்கத்தை புரியாமல் / தெரியாமல் அதன் வழி கருத்து பெறுவதை தவிர்த்து, ஆங்கில அகராதியில் வசதியானதை எடுத்து, மிகுதியை தவிர்த்து கருத்து கடைந்த ... மற்றவர்களின் ஆங்கில அறிவை மதிப்பிடும் அறிவாளி. ஆனால் எல்லாவற்றிலும் உங்கள் எடுகோள் மற்றவருக்கு தெரியாது, தேடி பார்க்கும் அறிவு கிடையாது. இதிலும் நடந்து இருப்பது அது தான். அது கேள்விக்கு உட்பட்டால், சதிக்தை, வசதியானதை எடுத்து, வசதி இல்லாததை தவிர்த்து ... அதையும் யதார்த்தம் உதாரணம் கொண்டு முரண்பாடுகளை வைத்தால் பரிகாசம். இது உங்கள் வழமையான பாணி.
  14. இது ஈரானுக்கு எதிராக சவூதியை திருப்பம், சீனாவை சவூதியில் இருந்து வெட்டும் நகர்வுகளில் ஒன்று. கடந்த 2-3 மாதங்களாக பேர்ச்வார்த்தை, பேரம் நடந்து கொண்டு இருக்கிறது.
  15. எதிர் கட்சிகள் வலியுறுத்தி, ஆளும் கட்சி அமைசரவை (மட்டும் தோற்றத்தில்) முடிவு. (உண்மையில் மாறி அல்லவா நடந்து இருக்க வேண்டும்). (பிஜேபி சாதி வரி கனளக்கெடுப்புக்கு அதன் வரலாற்றில் எதிர்ப்பு, காந்தியை குற்றம் சொல்லி.) (மற்ற திரியில் சொன்னதின், இந்தியாவை பொறுத்தவரை, இன்னொரு ஓரளவு வெளிப்படை உதாரணம்.) அதாவது அதிகாரிகள் / அதிகார பீடம் கொள்கை, முடிவுகளில் செல்வாக்கு செலுத்தலாம் சிறு மாற்றத்தில் இருந்து நிராகரிப்பு வரை. ஆனால் , ஒரு கேள்வி இருக்கிறது, அமைச்சரவை ஆலோசனையை (இது அமைச்சர் / மந்திரியால் நிராகரிக்கப்படலாம்) ஏற்றுக்கொண்டதா? இல்லை, முடிவு உதவியாக வழங்கப்பட்டதா என்று? (அதாவது அமைச்சரவை உதவியை நிகராரிக முடியாது). அப்படி ஆலோசனையை ஏற்றுக்கொண்டு இருந்தால், ஏன் பிஜேபி அப்படி நிலைப்பாட்டை (தலைகீழாக) மாற்றியது என்ற கேள்வி வருகிறது? (ஆனல், பிஜேபி சாதி வரி கனளக்கெடுப்புக்கு அதன் வரலாற்றில் எதிர்ப்பு, காந்தியை குற்றம் சொல்லி.) அதே போல, எல்லா கொள்கைகை, முடிவுகளில் மந்திரிகள், அதிகாரிகள் / அதிகார பீடம் முரண்பாடுகள், கருத்து வேறுபாடு இருக்காது. (ஆயினும், பிஜேபி அறிவித இந்த முடிவின் அடிப்படை சாதியால் பின்தங்கி இருப்போரின் தொகை கூட, அவர்களும் பொருளாதார வளர்த்திக்குள் உல் வாங்கப்பட்ட வேண்டும் என்பது. இதை அரசியல் ஆக கூடாது என்று. இதை வெளியில் ஆங்காங்கே சொல்வதை முதலே தொடங்கி விட்டது. அதாவது தேசிய நலன். கட்சி கொள்கை, அரசாங்கத்தில் கைவிடப்பட்டு, தேசிய நலன் சார்ந்த முடிவு.) இந்த முடிவை, அதிகார பீடம் செல்வாக்கு செலுத்தாமல், பிஜேபி அதுவாகவே முடிவு எடுத்து இருக்கும் என்று சிலர் சொன்னால், அவ்வளவு மட்டுந்தான் அவர்களின் புரிதல் ஆழம், பொத்தம் பொதுவான புரிதல். அனால் இவர்கள் இதை தவிர்ப்பதற்கு சொல்லுவது, சதிக்கத்தை, அரைகுறை. வேறு சில அடைமொழிகளும் கொண்டு சொல்லுவது.
  16. கானி சிறுவயதில் எடுத்து இருக்கலாம் (ஏனெனில் அறிந்த தாய், தந்தை பற்றி தெரியாது), அந்த நேரத்தில் எனக்கு தெரியாமல் இருந்து இருக்கலாம். அன்று நன் அறிந்தது தொட்டம், தொட்டமான அச்சு, இணையம் செய்தியின் வழியாக. அன்றைய செய்துகளும் எவ்வளவு துல்லியம் என்று தெரியாது. எப்போது என்று கேட்டும் இருக்கிறேன். அதை நான் நீகவில்லை (அவ்வப்போது நீங்கள் செய்வது). நான் தேடியதில் ... 2018 என்று நான் சொன்னது, அப்படி கொடுக்கப்பட்டு இருப்பது ஊகம். கானி விபரங்கலையா உங்களை போல நான் தேடவில்லை. தேவை இல்லை. ஏனெனில், நான் சொல்ல வந்தது கானி பதவிக்கு வரும் போது வெளிநாட்டவர், பிரித்தானிய பிரஷை இல்லை. அது போதும். எப்போது என்பதே மிக முக்கியானது, எப்படி கொடுக்கப்பட்டு இருந்தாலும் உங்களின் சிந்தனை 2018 இல் கிடைத்தது என்பதை , அதுவும் தேடி, மட்டும் வைத்து கொண்டு தான். இப்போதும் சொல்கிறேன் உங்களின் சிந்தனை உங்களுக்கு தெரிந்ததில், அதுக்கு அப்பால் உங்களால் செல்வது மிக கடினமாக இருக்கிறது. தில் தமிழ் புரிவு பிரச்சனையா, அல்லது விடய புரிவு பிரச்சனையா, அல்லது இரண்டுமா? முதலில் சொல்ல வந்த , சொல்லி இருக்கும் விடயத்தை புரிய தெண்டிக்கவும். (எதோ தனக்கு தான் citizenship by registration பற்றி தெரியும் என்பது, அதில் என்னடைய நேரடி அனுபவத்தை அறியாமல், அதுவும் பிரச்சனை இல்லை.)
  17. இதை முன்பு இங்கு சொல்லி இருந்தேன் உடனையாக அல்ல, மற்ற நாடுகளின் வாழ்க்கை தரம் உயரும். மேற்றுகின் ஒப்பிட்டளவு பொருளாதர தரம், உயர்வு,பேரத்துக்கு பலம், பிடி, வாழ்க்கைத்தரம் போன்றவை பல நாடுகளிடம் இருந்து போட்டி, சவாலுக்கு உள்ளாகும்.
  18. நான் முதலே உஙங்களை போன்றவவர்கள் மீது உருவாகும் இதன் பிரதிபலிப்பை எதிர்வு கூறி உள்ளேன். நீங்களும், கோசானும் இதை சர்வ சாதாரணமாக எடுக்கிறீர்கள், உங்களையே பொறுத்தவரை இது பொருட்டே இல்லை. சுரப்பிரமணிய சாமி சொன்னது, அதுவும் சுப்பிரமணிய சாமி நிலைக்கு, முன்னாள் அமைச்சர், மக்கள் பிரதிநித்துவ அதிகார அமைப்பு (அதாவது மந்திரிக்கு அப்படி முழு அதிக்ரமம் இருந்தால்) அரசாங்கத்துக்கு சவால். எந்தவொரு அரசு / அரசாங்கத்துக்கு சவாலே மிகவும் கூடிய அச்சுறுத்தல் (சட்ட மீறலோ அல்லது முறை கேடுகளோ அல்ல). எந்தவொரு (உண்மையான சனநாயகம் என்றால்) அரசாங்கமும் ஆக குறைந்தது மறுத்து இருக்கும். ஆக கூடியது, (இந்திய சட்டங்களின் இறுக்கத்தை வைத்து நோக்கினால்), சுப்பிரமணிய சாமி சிறை சென்று இருக்க வேண்டும். சுப்பிரமணிய சாமி சொல்லும் வேறு எதுவும் (The Royal We) மக்கள் பிரதிநிதித்துவ அரசாங்கத்துக்கு சவாலாக இருக்கிறதா ? இல்லை. இப்படி, மேற்கில் உள்ள சனநாயக அரசாங்கத்துக்கு முன்னாள் அமைச்சர் சொல்கிறார் என்றால், என்ன நடக்கும்? மேற்கில் கூட சிறை தான். அனால், அதை விட (பொதுமக்களுக்கு) இறுக்கமான இந்திய அரசாங்கத்தில், ஒன்றும் இல்லை.
  19. சாதரண தமிழே புரியவில்லை, பின்பு என் வேறு மொழிக்கு? எனவே, உங்களக்கு தான் நீங்கள் சொல்லும் புரிதல், கோமாளித்தனம் எல்லாம், செய்வது கூட தெரியாமல், Citizenship by registration நான் நேரடியாக பார்த்து இருக்கிறேன் (சிறுவயதினருக்கு, இந்த விடயத்தில் அப்படி நடந்து இருக்க கூடிய சாத்திய கூறுகள் இருப்பதும்). மற்றத்துக்கும் சொன்ன தமிழை விளங்காமல் ... முதலில் தமிழில் சொன்னதை விளங்கினால் தானே, நிறுவுவதோ, எதுவோ முதலில் தமிழை கற்கவும். (மற்றது இந்த விடயம் 2011 - 2015/6 செய்தி, ஆய்வு, நேரடி உரையாடல் நினைவுகள், உங்களை போல இப்பொது தேடி சொல்லுது அல்ல.) உங்களிடம் உள்ள பிரச்சனை மற்றவருக்கு ஒன்று தெரியாது என்ற மனப்போக்கு, அதுவே உங்களின் பாதாளம், உங்களுக்கு தெரியாமல். (நான் மார்க் கானி பற்றி சொல்லியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தேடி பார்க்கவும், இப்போதும் ஆங்காங்கே இருக்கலாம்.) உதாரணத்துக்கு, மார்க் கானி Oxford PhD in Economics, MSc உம் அங்கு செய்ததாக, அதிலே தன மனைவியுடன் பழக்கம் வந்ததாக இதை போன்ற விபரங்களை நன் சொல்லவில்லை ஏனெனில் அத கதைக்கு தேவை இல்லை
  20. கோரஸ் எதிர்பார்த்தவர்கள், விடயம் இல்லாமல், குயிலாக மாறிவிட்டனர். முதல் இருந்தே அது தானே. காலை எழும்பி பொதுவாக கூவுவது, முதலில் வேறு தொனி. இப்போது உரிய குயில் தொனி.
  21. என்னுடைய பெயர் இருப்பதால் மாத்திரம். உறுதி செய்யாத தமிழ் மொழியாடலும் புரியாத பொத்தாம் பொது விற்பன்னர். விடயங்கள் தெரியாவிட்டால் தள்ளி நிற்க வேண்டும்.
  22. டிரம்ப் - புட்டின் தனிஉறவை (அப்படி இருந்தால்), அரச / அரசாங்க நலன்கள் விஞ்சி விட்டது? உண்மையில் அவை அரிது அல்ல. அவற்ட்ரை இயற்கை வளத்தில் இருந்து நேரடியாக பிரித்து எடுக்கப்பட கூடிய செறிவு குறைவு, அதனால், அவை பிரித்து எடுக்கப்பட கூடிய நிலையில் இருப்பது, மற்ற பொதுவான உலோகங்கள் கனிம வலமாக இருப்பதை, அந்த குறிப்பிட்ட உலோக core ஆக மாற்றம் செய்யப்படும் படிமுறையில் உருவாகும் பக்க விளைவு பொருட்களில். ஆகவே, இந்த அரிதான உலோகங்களை உற்பத்தி செய்யம் முறை எங்கு செய்தாலும் ஒரே முறை தான். அநேகமான உலோகங்களை சீன உடற்பதி செய்வதால், பக்கவிளைவு பொருட்களும் சீனாவுக்கு கிடைக்கிறது, அதனால் அவற்றை பகுத்து 'அரிதான உலோகத்தை' எடுக்கும் முறையை சீன வளர்த்து வைத்து இருக்கிறது. மறுவளமாக, இந்த அரிதான உலோகங்களை பிரித்து எடுப்பது மிகவும் சூழலை மாசுபடுத்த கூடியது. அத விலையாக சீனா விலையை செலுத்துகிறது. அனால், இதில் அடிப்படை பிரச்சனை சீன அல்ல, மேற்கு, அதாவது சீன தன சொல்லுக்கு ஆட கூடிய நிலையில் வைத்து இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு. சீன எந்த தொழில் நுட்பத்தை ஐய்வு செய்தலும், வளர்த்தாலும் மேட்ற்கு சொல்வது அச்சுறுத்தல்.
  23. சோழர் இங்குள்ளவர்களை விட மாதாக்கள் தமது வம்சத்துக்கு வரும் போது. இதுவரை கிடைத்த 'சோழ வம்ச' குறிப்புக்கள், உலோக ஏடுக்களில் மாத்திரம்.
  24. (முதலில் நான் சொன்னது சுருக்கமாக.) மார்க் கானி 2012 பதவியில் வரும் போது பிரித்தானிய பிரச உரிமை இல்லை. இதுவே உண்மை, அன்றைய யதார்த்தம். ஒரு பத்திரிகை சொன்னது 300 வருடம் அளவில் மீண்டும் வெளிநாட்டவர். மற்றவை முதல் முறை வெளிநாட்டவர் மார்க் கானி பதவியில் வருகிறார் என்று. (ஆயினும் (பிரித்தானிய பிரஷை ஆகும் தகமை) இருந்து இருக்கலாம் என்று நான் சொன்னது (மார்க் கானி அதை பற்றி பொருட்படுத்தாமல், மற்றது (உத்தியோகபூர்வமாக) எடுக்காமலும், ஏனெனில் மார்க் கானியின் தாய் வழி பற்றி அன்றும், இன்றும் தெரியாது)). (சிலருக்கு எல்லா பிரவுரிமையும், தகமையும், பெறும் காலம் ஒன்றாக, பிரித்தானியா பிரசா உரிமையாக தெரிகிறது போல இருக்கிறது.) மற்றது, மார்க் கானி London இல் கணிசமான காலம் வேலை செய்தவர், Goldman Sachs இல் (அவரின் அயர்லாந்து குடிஉரிமையினால்), வேறு நிறுவனங்களும் இருக்கலாம். (மார்க் கானியின் இங்கிலாந்து அரச தொடர்பு அவருக்கே தெரியாமல் , ஏனெனில் அவர்களை பொறுத்தவரையில் அயர்லாந்தில் இருந்தே அவர்களின் மூதாதையர் கனடாவில் குடியேறிதாக) (இப்படியான ஐரிஸ் - பிரித்தானிய இரத்த உறவு உள்ளோர் இப்போதும் இருக்கிறார்கள். இப்படியானவர்கள் பிரெக்ஸிற் இல் ஐரிஷ் பிரசவுரிமை எடுத்தது, eu வசதிக்காக) அன்று, உண்மையில், மார்க் கானி, முதல் தெரிவுசெய்யப்பட்ட தொகுதியில் bank of england governor பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை. பின், அன்றைய UK நிதி அமைச்சர் (இதை Chancellor of the Exchequer என்று UK அரசாங்க மொழியில் சொல்வது), George Osborne, மார்க் கானியை பல சந்திப்புகள் வழியாக விண்ணப்பிக்க சம்மதிக்க வைத்ததாக. அன்று சொல்லப்பட்டது, கானி விண்ணப்பிக்கும் போது விண்ணப்ப கோரல் காலம் முடிந்து விட்டதாக. இதை bank of england க்குள் இருந்து விண்ணப்பித்தோர் எதிர்த்ததாக. இதை bank of england க்குள் இருந்து விண்ணப்பித்தோர் எதிர்த்ததாக, முக்கியமாக Paul Tucker, அன்று bookmakers இன் முதல் தெரிவு bank of england governor யாருக்கு கொடுக்கப்படும் என்பதில், இயற்கையாகவே ஒரேயொரு கேள்வி எழுகிறது , ஒரு அரசாங்கம், அந்த நேரத்தில் பிரசை அல்லாதவருக்கு, இவ்வளவு இறங்கி, ஏன் மார்க் கானியை உள்ளுக்கு கொண்டு வந்தது என்று? (அனால், மார்க் கானி அரச தொடர்பு முன்பே தெரிந்ததா அல்லது பின்பு தெரிந்ததா, முக்கியமாக வெளியில், என்பது தெரியாது.) (அன்றைய பிரதமர் david cameron உம் பல சந்ததிகள் கடந்த அரச குடும்ப நீட்சி, உறவு ) சொல்ல மறந்து விட்டேன் - மார்க் கானி மனைவி பிறப்பிலேயே பிரித்தானியர் தான், Oxford பல்கலைக்கழகத்தில் இணைந்தார்கள். குறிப்பு: நான் காலை எழும்பி, சும்மா பொத்தாம் பொதுவாக சொல்லுவதில்லை.
  25. இருந்து இருக்கலாம், (அனால், அவர் ஒரு கனேடியர் பிறப்பில்.) ஏனெனில் பிரிதானிய அப்படி ஒரு பிரசாவுரிமை வைத்து இருந்தது. அதாவது, தாய் வழி தொடர்பு இருந்தால், வேறு எங்கு பிறந்து இருந்தாலும். எப்போது எடுக்கப்பட்டது என்று இருக்கிறதா? அந்த பிரசவுரிமை registration (என்றார் நினைக்கிறன்) மூலம் வழங்கப்படும். (தேடியதில் 2018 என்று இருக்கிறது, சிலவேளைகளில் honorary ஆக வழங்கப்பட்டு இருக்கலாம்.) அப்பை அயர்லாந்த்ம் ஐந்து இருக்கிறது, பிரக்ஸிட் வந்த பொது, ஒன்றில் இரத்த அயர்லாந்து தொடர்பு அல்லது திருமண அலியாக அந்த தொடர்பு வழியாக பலர் அயர்லாந்து பிரசாவுரிமை எடுத்தனர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.